சே – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


சே (2)

தே மரு பசும் கிள்ளை வைத்து முத்தாடியும் திரள் பொன் கழங்கு ஆடியும் செயற்கையான் அன்றியும் இயற்கை சிவப்பு ஊறு சே இதழ் விரிந்த தெய்வ – மீனாட்சிபிள்ளை:4 35/3
கள் ஊறு கஞ்ச கரத்து ஊறு சே ஒளி கலப்ப சிவப்பு ஊறியும் கருணை பெருக்கு ஊற அமுது ஊறு பார்வை கடைக்கண் கறுப்பு ஊறியும் – மீனாட்சிபிள்ளை:8 75/1

மேல்

சேக்கையில் (1)

தெள்ளு சுவை அமுதம் கனிந்த ஆனந்த திரை கடல் மடுத்து உழக்கும் செல்வ செருக்கர்கள் மன கமலம் நெக்க பூம் சேக்கையில் பழைய பாடல் – மீனாட்சிபிள்ளை:10 93/3

மேல்

சேடியர்கள் (1)

துங்க முலை பொன் குடம் கொண்டு தூ நீர் நீந்தி விளையாடும் துணை சேடியர்கள் மேல் பசும்பொன் சுண்ணம் எறிய அற சேந்த – மீனாட்சிபிள்ளை:9 88/1

மேல்

சேடியரில் (2)

தமரான நின் துணை சேடியரில் ஒருசிலர் தட கையின் எடுத்து ஆடும் நின் தரள அம்மனை பிடித்து எதிர் வீசிவீசி இடசாரி வலசாரி திரியா – மீனாட்சிபிள்ளை:8 77/1
உயிராய் இருக்கின்ற சேடியரில் மலர் மீது உதித்தவள் எதிர்த்து நின்னோடு ஒட்டி எட்டி பிடித்திட்ட அம்மனை தேடி ஓடி ஆடி திரிய நீ – மீனாட்சிபிள்ளை:8 78/1

மேல்

சேதாம்பல் (1)

வரு குங்கும குன்று இரண்டு ஏந்து மலர் பூம் கொம்பே தீம் குழலின் மதுரம் கனிந்த பசுங்குதலை மழலை அரும்ப சேதாம்பல்
முருகு விரியும் செம் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 44/3,4

மேல்

சேந்த (1)

துங்க முலை பொன் குடம் கொண்டு தூ நீர் நீந்தி விளையாடும் துணை சேடியர்கள் மேல் பசும்பொன் சுண்ணம் எறிய அற சேந்த
அம் கண் விசும்பில் நின் குழல் காட்டு அறுகால் சுரும்பர் எழுந்து ஆர்ப்பது ஐயன் திருமேனியில் அம்மை அருள் கண் சுரும்பு ஆர்த்து எழல் மான – மீனாட்சிபிள்ளை:9 88/1,2

மேல்

சேம (1)

கங்குல் மதம் கயம் மங்குல் அடங்க விடும் காமன் சேம கயல் குடிபுகும் ஒரு துகிலிகை என நின கண் போலும் சாயல் – மீனாட்சிபிள்ளை:2 22/3

மேல்

சேயிழைக்கும் (1)

மீன் ஒழுகு மா இரு விசும்பில் செலும் கடவுள் வேழத்தின் மத்தகத்து வீற்றிருக்கும் சேயிழைக்கும் பசும் கமுகு வெண் கவரி வீசும் வாச – மீனாட்சிபிள்ளை:6 57/3

மேல்

சேயை (1)

கழுமல மதலை வயிற்றை நிரப்பி மயில் சேயை களிறொடும் வளர வளர்த்த அருள் செவிலித்தாயே – மீனாட்சிபிள்ளை:4 42/2

மேல்

சேர் (1)

இல்_கொடியோடு கயல் கொடி வீரன் எடுத்த கருப்பு விலும் இந்திர தனுவும் வணங்க வணங்கும் இணை புருவ கொடி சேர்
பொன்_கொடி இமய மட கொடி வைகை புது நீர் ஆடுகவே பொருநை துறையொடு குமரி துறையவள் புது நீர் ஆடுகவே – மீனாட்சிபிள்ளை:9 91/3,4

மேல்

சேர்க்கும் (1)

சேர்க்கும் சுவை பாடல் அமுது ஒழுக ஒழுகு பொன் திரு ஊசல் பாடி ஆட சிவபிரான் திருமுடி அசைப்ப முடி மேல் பொங்கு செம் கண் அரவு அரசு அகிலம் வைத்து – மீனாட்சிபிள்ளை:10 97/1

மேல்

சேர்த்தவள் (1)

கட களிறு உதவு கபாய் மிசை போர்த்தவள் கவி குவி துறுகலின் வாரியை தூர்த்தவள் கடல் வயிறு எரிய ஒள் வேலினை பார்த்தவள் கடி கமழ் தரு மலர் தார் முடி சேர்த்தவள்
இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள் எயிறு கொடு உழுது எழு பாரினை பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடி சூட்டுதும் – மீனாட்சிபிள்ளை:1 11/1,2

மேல்

சேரில் (1)

களம் நிறை சேரில் குளம் நிறை புனலில் பொரு கயலில் பொழிலில் சுருள் புரி குழலில் கணிகையர் குழையில் பொரு கயல் போய் – மீனாட்சிபிள்ளை:3 28/2

மேல்

சேல் (5)

சிகர பொதிய மிசை தவழும் சிறுதேர் மேலே போய் ஓர் சிவனை பொருத சமர்த்தன் உகந்து அருள் சேல் போல் மாயாமே – மீனாட்சிபிள்ளை:3 32/3
சேல் ஆட்டு வாள் கண் கரும் கடல் கடைமடை திறந்து அமுதம் ஊற்று கருணை தெள் திரை கொழித்து எறிய வெண் திரை நெருப்பூட்டு தெய்வ குழந்தையை செம் – மீனாட்சிபிள்ளை:4 37/1
தெய்வ தமிழ் கூடல் தழைய தழைத்தவள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே – மீனாட்சிபிள்ளை:5 48/4
செந்நெல் படப்பை மதுரை பதி புரப்பவள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே – மீனாட்சிபிள்ளை:5 49/4
செங்கோல் திருத்திய முடி செழியர் கோமகள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே – மீனாட்சிபிள்ளை:5 50/4

மேல்

சேறதாய் (1)

கரை பொங்கு மறி திரை கையால் தடம் பணை கழனியில் கன்னியர் முலை களப குழம்பை கரைத்துவிட்டு அள்ளல் கரும் சேறு செம் சேறதாய்
விரை பொங்கிட துங்க வேகவதி பொங்கு புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 84/3,4

மேல்

சேறு (5)

தண் உலாம் மழலை பசுங்குதலை அமுது இனிய தாய் வயிறு குளிர ஊட்டி தட மார்பம் நிறை குங்கும சேறு அளைந்து பொன் தாள் தோய் தட கை பற்றி – மீனாட்சிபிள்ளை:2 14/2
சேறு வழுக்கி ஓட்டு அறுக்கும் திரு மா மறுகில் அரசர் பெரும் திண் தேர் ஒதுங்க கொடுஞ்சி நெடும் சிறுதேர் உருட்டும் செம் கண் மழ – மீனாட்சிபிள்ளை:3 26/2
கரை பொங்கு மறி திரை கையால் தடம் பணை கழனியில் கன்னியர் முலை களப குழம்பை கரைத்துவிட்டு அள்ளல் கரும் சேறு செம் சேறதாய் – மீனாட்சிபிள்ளை:9 84/3
வெறி குங்கும சேறு எக்கரிடும் விரை பூம் துறை மண் பெறின் ஒருத்தி வெண் பிட்டு இடவும் அடித்து ஒருவன் வேலை கொளவும் வேண்டும் என – மீனாட்சிபிள்ளை:9 90/2
மின் செய்த சாயலவர் மேல் தலத்து ஆடிய விரை புனலின் அருவி குடையும் வெள் ஆனை குங்கும செம் சேறு நாற மட மென் பிடியை அஞ்சி நிற்கும் – மீனாட்சிபிள்ளை:10 101/3

மேல்

சேன (1)

சேன பந்தரின் அலகை திரள் பல குரவை பிணைத்து ஆட திசையில் தலைவர்கள் பெரு நாண் எய்த சிறு நாண் ஒலிசெய்யா – மீனாட்சிபிள்ளை:4 38/3

மேல்

சேனாபராகம் (1)

இமிரா வரி சுரும்பு ஆர்த்து எழ பொழிலூடு எழுந்த பைம் தாது உலகு எலாம் இருள்செயச்செய்து நின் சேனாபராகம் எனும் ஏக்கம் அளகாபுரிக்கும் – மீனாட்சிபிள்ளை:8 77/3

மேல்

சேனை (1)

சேனை தலைவர்கள் திசையில் தலைவர்கள் செருவில் தலைவர்களால் சிலையில் தட முடி தேரில் கொடியொடு சிந்த சிந்தியிடும் – மீனாட்சிபிள்ளை:3 29/1

மேல்