சொ – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


சொக்கப்பெருமான் (1)

சுழியும் கரும் கண் குண்டு அகழி சுவற்றும் சுடர் வேல் கிரி திரித்த தோன்றற்கு அளித்து சுறவு உயர்த்த சொக்கப்பெருமான் செக்கர் முடி – மீனாட்சிபிள்ளை:1 7/1

மேல்

சொக்கர் (10)

புள் ஒலி எழ குடிபுகுந்த சுந்தரவல்லி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 93/4
பொன் புரிசை மதுராபுரி பொலி திருப்பாவை பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 94/4
புரிவது கடுக்கும் மதுராபுரி மட கிள்ளை பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 95/4
பொங்கி வரு பொழில் மதுர மதுரைநாயகி திரு பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 96/4
போர்க்கின்றது ஒக்கும் மதுராபுரி மட கிள்ளை பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 97/4
போர்க்கோலமே திருமணக்கோலம் ஆன பெண் பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 98/4
பொழியும் திறத்தினை நிகர்க்கும் மதுரை தலைவி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 99/4
புல்கும் தடம் பணை உடுத்து மதுரை தலைவி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 100/4
பொன் செய்த மாடம் மலி கூடல் பெரும் செல்வி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 101/4
பொரு கயலும் வடிவழகு பூத்த சுந்தரவல்லி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 102/4

மேல்

சொக்கற்கு (1)

அமுது செய்வித்திட்ட போனகத்தால் சுடர் அடரும் இருட்டு கிரீவம் மட்டு ஆக்கிய அழகிய சொக்கற்கு மால்செய தோட்டு இகல் அமர்செய் கயல் கண் குமாரியை காக்கவே – மீனாட்சிபிள்ளை:1 5/4

மேல்

சொரிய (1)

சோனை கணை மழை சொரிய பெருகிய குருதி கடலிடையே தொந்தமிடும் பல் கவந்தம் நிவந்து ஒரு சுழியில் பவுரிகொள – மீனாட்சிபிள்ளை:3 29/2

மேல்

சொரியும் (1)

ஆடும் பெரும் தண் துறை பொருநை ஆற்றில் படு தெள் நிலா முத்தும் அம் தண் பொதிய தடம் சாரல் அருவி சொரியும் குளிர் முத்தும் – மீனாட்சிபிள்ளை:5 47/2

மேல்

சொரிவது (1)

திருமுன் உருவம் கரந்து எந்தையார் நிற்பது தெரிந்திட நமக்கு இது எனா செம் சிலை கள்வன் ஒருவன் தொடை மடக்காது தெரி கணைகள் சொரிவது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:10 95/2

மேல்

சொருபம் (2)

தண் நாறும் மல்லல் துறை சிறை அனம் களி தழைக்கும் கலா மஞ்ஞையாய் சகலமும் நின் திரு சொருபம் என்று ஓலிடும் சதுர்மறை பொருள் வெளியிட – மீனாட்சிபிள்ளை:9 85/2
சொல் பொலி பழம் பாடல் சொல்லுகின்றவளும் நின் சொருபம் என்பதும் இளநிலா தூற்று மதி மண்டலத்து அமுதமாய் அம்மை நீ தோன்றுகின்றதும் விரிப்ப – மீனாட்சிபிள்ளை:10 94/2

மேல்

சொல் (8)

வார் கொண்டு அணிந்த முலை மலைவல்லி கர்ப்பூரவல்லி அபிராமவல்லி மாணிக்கவல்லி மரகதவல்லி அபிடேகவல்லி சொல் தமிழ் தழையவே – மீனாட்சிபிள்ளை:0 1/4
சிகர வடவரை குனிய நிமிர்தரு செருவில் ஒரு பொரு வில் என கோட்டினர் செடி கொள் பறி தலை அமணர் எதிரெதிர் செல ஒர் மதலை சொல் வைகையில் கூட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/1
திருவும் இமையவர் தருவும் அர ஒலி செய வலவர் கொள நல்குகை தீட்டினர் சிறிய எனது புன்மொழியும் வடி தமிழ் தெரியும் அவர் முது சொல் என சூட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/2
மழலையின் அமுது உகு சொல் கிளி கொட்டுக சப்பாணி மதுரையில் வளரும் மட பிடி கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 42/4
பதுமமொடு ஒழுகு ஒளி வளையும் நின் நளின முகத்தும் மிடற்றும் உற பனி மதியொடு சுவை அமுதமும் நுதலொடு சொல் குதலைக்-கண் நிறீஇ – மீனாட்சிபிள்ளை:5 52/3
கஞ்சமும் செம் சொல் தமிழ் கூடலும் கொண்ட காமர் பூங்கொடி வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 53/4
சொல்_கொடியோடு மலர்_கொடி கொய்து தொடுத்த விரை தொடையும் சுந்தரி தீட்டிய சிந்துரமும் இரு துங்க கொங்கைகளின் – மீனாட்சிபிள்ளை:9 91/1
சொல் பொலி பழம் பாடல் சொல்லுகின்றவளும் நின் சொருபம் என்பதும் இளநிலா தூற்று மதி மண்டலத்து அமுதமாய் அம்மை நீ தோன்றுகின்றதும் விரிப்ப – மீனாட்சிபிள்ளை:10 94/2

மேல்

சொல்_கொடியோடு (1)

சொல்_கொடியோடு மலர்_கொடி கொய்து தொடுத்த விரை தொடையும் சுந்தரி தீட்டிய சிந்துரமும் இரு துங்க கொங்கைகளின் – மீனாட்சிபிள்ளை:9 91/1

மேல்

சொல்லவும் (1)

பசைந்திடு ஞாலம் மலர்ந்தமை வெளிறி ஒர் பச்சுடல் சொல்லவும் ஒர் பைம் கொடி ஒல்கவும் ஒல்கி நுடங்கிய பண்டி சரிந்து ஆட – மீனாட்சிபிள்ளை:2 19/2

மேல்

சொல்லுகின்றவளும் (1)

சொல் பொலி பழம் பாடல் சொல்லுகின்றவளும் நின் சொருபம் என்பதும் இளநிலா தூற்று மதி மண்டலத்து அமுதமாய் அம்மை நீ தோன்றுகின்றதும் விரிப்ப – மீனாட்சிபிள்ளை:10 94/2

மேல்

சொற்றிட (1)

மாற்றவளொடும் கேள்வர் மௌலியில் உறைந்ததும் மறந்து உனை அழைத்த பொழுதே மற்று இவள் பெரும் கருணை சொற்றிட கடவதோ மண் முழுதும் விம்மு புயம் வைத்து – மீனாட்சிபிள்ளை:7 65/3

மேல்