பை – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


பை (1)

பை வைத்த துத்தி பரூஉ சுடிகை முன்றில் பசும் கொடி உடுக்கை கிழிய பாய் இருள் படலம் கிழித்து எழு சுடர் பரிதி பரிதி கொடிஞ்சி மான் தேர் – மீனாட்சிபிள்ளை:5 48/1

மேல்

பைங்குழவி (1)

பண் அளிக்கும் குதலை அமுது ஒழுகு குமுத பசும் தேறல் ஊறல் ஆடும் பைங்குழவி பெருவிரல் சுவைத்து நீ பருகிட பைம் தேறல் ஊறு வண் கை – மீனாட்சிபிள்ளை:4 36/3

மேல்

பைங்கோதையும் (1)

குண்டுபடு பேர் அகழி வயிறு உளைந்து ஈன்ற பைங்கோதையும் மதுரம் ஒழுகும் கொழி தமிழ் பனுவல் துறை படியும் மட நடை கூந்தல் அம் பிடியும் அறுகால் – மீனாட்சிபிள்ளை:6 54/1

மேல்

பைத்த (1)

பைத்த சுடிகை பட பாயல் பதுமநாபன் மார்பில் வளர் பரிதி மணியும் எமக்கு அம்மை பணியல் வாழி வேய் ஈன்ற – மீனாட்சிபிள்ளை:5 46/3

மேல்

பைந்தமிழ் (1)

பணி கொண்ட முடவு பட பாய் சுருட்டு பணை தோள் எருத்து அலைப்ப பழ மறைகள் முறையிட பைந்தமிழ் பின் சென்ற பச்சை பசும் கொண்டலே – மீனாட்சிபிள்ளை:1 2/4

மேல்

பைம் (14)

மேக பசுங்குழவி வாய்மடுத்து உண்ணவும் விண்புலம் விருந்து அரவும் வெள் அமுதம் வீசும் கரும் திரை பைம் துகில் விரித்து உடுத்து உத்தி விரியும் – மீனாட்சிபிள்ளை:1 6/1
பஞ்சு ஊட்டு சீறடி பதைத்தும் அதன் வெம் கதிர் படும் இளவெயிற்கு உடைந்தும் பைம் துழாய் காடு விரி தண் நிழல் ஒதுங்கும் ஒர் பசுங்கொடியை அஞ்சலிப்பாம் – மீனாட்சிபிள்ளை:1 8/2
தெள்ளி தெளிக்கும் தமிழ் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல் தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம்
கிள்ளைக்கு மழலை பசும் குதலை ஒழுகு தீம் கிளவியும் களி மயிற்கு கிளர் இளம் சாயலும் நவ்விக்கு நோக்கும் விரி கிஞ்சுக சூட்டு அரசு அன – மீனாட்சிபிள்ளை:1 9/2,3
பண் உலாம் வடி தமிழ் பைம் தாமம் விரியும் பணை தோள் எருத்தம் ஏறி பாசொளிய மரகத திருமேனி பச்சை பசும் கதிர் ததும்ப மணி வாய் – மீனாட்சிபிள்ளை:2 14/3
பசைந்திடு ஞாலம் மலர்ந்தமை வெளிறி ஒர் பச்சுடல் சொல்லவும் ஒர் பைம் கொடி ஒல்கவும் ஒல்கி நுடங்கிய பண்டி சரிந்து ஆட – மீனாட்சிபிள்ளை:2 19/2
வீக்கும் சிறு பைம் துகில் தோகை விரியும் கலாபம் மருங்கு அலைப்ப விளையாட்டு அயரும் மணல் சிற்றில் வீட்டு குடிபுக்கு ஓட்டி இருள் – மீனாட்சிபிள்ளை:3 24/1
பண் அளிக்கும் குதலை அமுது ஒழுகு குமுத பசும் தேறல் ஊறல் ஆடும் பைங்குழவி பெருவிரல் சுவைத்து நீ பருகிட பைம் தேறல் ஊறு வண் கை – மீனாட்சிபிள்ளை:4 36/3
பானல் கணையும் முலை குவடும் பொரு படையில் பட இமையோர் பைம் குடர் மூளையொடும் புதிது உண்டு பசும் தடி சுவை காணா – மீனாட்சிபிள்ளை:4 38/2
கண்டு படும் கன்னல் பைம் காடு படு கூடல் கலாப மா மயில் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 54/4
மண்ணில் ஒண் பைம் கூழ் வளர்ப்பது உன்னிடத்து அம்மை வைத்திடும் சத்தியே காண் மற்று ஒரு சுதந்தரம் நினக்கு என இலை கலை மதி கடவுள் நீயும் உணர்வாய் – மீனாட்சிபிள்ளை:7 67/3
பைம் கண் சுரும்பு என விசும்பில் படர்ந்து எழும் பனி மதி மிசை தாவிடும் பருவ மட மான் என என் அம்மனை நின் அம்மனை படை விழி கயல் பாய்ந்து எழ – மீனாட்சிபிள்ளை:8 74/2
அள் ஊற உள்ளே கசிந்து ஊறு பைம் தேறல் அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 75/4
இமிரா வரி சுரும்பு ஆர்த்து எழ பொழிலூடு எழுந்த பைம் தாது உலகு எலாம் இருள்செயச்செய்து நின் சேனாபராகம் எனும் ஏக்கம் அளகாபுரிக்கும் – மீனாட்சிபிள்ளை:8 77/3
கிழியும் கலை திங்கள் அமுது அருவி தூங்குவ கிளைத்த வண்டு உழு பைம் துழாய் கேசவன் கால் வீச அண்ட கோளகை முகடு கீண்டு வெள் அருவி பொங்கி – மீனாட்சிபிள்ளை:10 99/3

மேல்

பைம்பொன் (2)

பமர தரு மலர் மிலையப்படு முடி தொலைய கொடுமுடி தாழ் பைம்பொன் தட வரை திரிய கடல் வயிறெரிய படை திரியா – மீனாட்சிபிள்ளை:3 30/3
பால் ஆட்டி வாய் இதழ் நெரித்து ஊட்டி உடலில் பசும் சுண்ணமும் திமிர்ந்து பைம்பொன் குறங்கினில் கண்வளர்த்தி சிறு பரூஉ மணி தொட்டில் ஏற்றி – மீனாட்சிபிள்ளை:4 37/3

மேல்