வீ – முதல் சொற்கள், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தொடரடைவு

கட்டுருபன்கள்


வீக்கியே (1)

ஒள் ஒளிய பவள கொழும் கால் மிசை பொங்கும் ஒழுகு ஒளிய வயிர விட்டத்து ஊற்றும் செழும் தண் நிலா கால் விழுந்து அனைய ஒண் தரள வடம் வீக்கியே
அள்ளிட வழிந்து செற்று ஒளி துளும்பும் கிரண அருண ரத்ன பலகை புக்கு ஆடும் நின் தோற்றம் அ பரிதி மண்டலம் வளர் அரும் பெரும் சுடரை ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:10 93/1,2

மேல்

வீக்கும் (3)

வீக்கும் சிறு பைம் துகில் தோகை விரியும் கலாபம் மருங்கு அலைப்ப விளையாட்டு அயரும் மணல் சிற்றில் வீட்டு குடிபுக்கு ஓட்டி இருள் – மீனாட்சிபிள்ளை:3 24/1
தண் அம் கமல கோயில் பல சமைத்த மருத தச்சன் முழு தாற்று கமுகு நாற்றியிடும் தடம் கா வண பந்தரில் வீக்கும்
விண்ணம் பொதிந்த மேக படாம் மிசை தூக்கிய பல் மணி கொத்து விரிந்தால் என கால் நிமிர்ந்து தலை விரியும் குலை நெல் கற்றை பல – மீனாட்சிபிள்ளை:6 59/2,3
இரு பதமும் மென் குரல் கிண்கிணியும் முறையிட்டு இரைத்திடும் அரி சிலம்பும் இறும் இறும் மருங்கு என்று இரங்குமே கலையும் பொன் எழுது செம்பட்டு வீக்கும்
திரு இடையும் உடைதாரமும் ஒட்டியாணமும் செம் கை பசும் கிள்ளையும் திரு முலை தரள உத்தரியமும் மங்கல திருநாணும் அழகு ஒழுக நின்று – மீனாட்சிபிள்ளை:10 102/1,2

மேல்

வீங்க (1)

வடிபட்ட மு குடுமி வடி வேல் திரித்திட்டு வளை கரும் கோட்டு மோட்டு மகிடம் கவிழ்த்து கடாம் கவிழ்க்கும் சிறு கண் மால் யானை வீங்க வாங்கும் – மீனாட்சிபிள்ளை:1 10/1

மேல்

வீங்கு (1)

வீங்கு புனல் வைகை தடம் துறை குடைந்து புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 86/4

மேல்

வீங்கும் (1)

மெய்வந்த நாணினொடு நுதல் வந்து எழும் குறுவெயர்ப்பினொடு உயிர்ப்பு வீங்கும் விம்மிதமுமாய் நின்ற உயிர் ஓவம் என ஊன்று வில் கடை விரல் கடை தழீஇ – மீனாட்சிபிள்ளை:4 34/3

மேல்

வீச (3)

வெயரா மனம் புழுங்கிடும் அமரர் தச்சனும் வியப்ப செயும் தவள மா மேடையும் தண் தரள மாடமும் தெள் நிலா வீச திசைக்களிறு எலாம் – மீனாட்சிபிள்ளை:8 78/3
தூங்கு சிறை அறுகால் உறங்கு குழல் நின் துணை தோழியர்கள் மேல் குங்குமம் தோயும் பனி துறை சிவிறி வீச குறும் துளி எம்மருங்கும் ஓடி – மீனாட்சிபிள்ளை:9 86/1
கிழியும் கலை திங்கள் அமுது அருவி தூங்குவ கிளைத்த வண்டு உழு பைம் துழாய் கேசவன் கால் வீச அண்ட கோளகை முகடு கீண்டு வெள் அருவி பொங்கி – மீனாட்சிபிள்ளை:10 99/3

மேல்

வீசிய (1)

விளரி மிழற்று அளி குமிறு குழல் கொடி வீசிய அம்மனை போய் விண்ணில் நிரைத்து எழுவது ககனம் திருமேனியது ஆனவருக்கு – மீனாட்சிபிள்ளை:8 80/1

மேல்

வீசிவீசி (1)

தமரான நின் துணை சேடியரில் ஒருசிலர் தட கையின் எடுத்து ஆடும் நின் தரள அம்மனை பிடித்து எதிர் வீசிவீசி இடசாரி வலசாரி திரியா – மீனாட்சிபிள்ளை:8 77/1

மேல்

வீசு (1)

உருகிய பசும்பொன் அசும்ப வெயில் வீசு பொன் ஊசலை உதைந்து ஆடலும் ஒண் தளிர் அடிச்சுவடு உற பெறும் அசோகு நறவு ஒழுகு மலர் பூத்து உதிர்வது உன் – மீனாட்சிபிள்ளை:10 95/1

மேல்

வீசும் (2)

மேக பசுங்குழவி வாய்மடுத்து உண்ணவும் விண்புலம் விருந்து அரவும் வெள் அமுதம் வீசும் கரும் திரை பைம் துகில் விரித்து உடுத்து உத்தி விரியும் – மீனாட்சிபிள்ளை:1 6/1
மீன் ஒழுகு மா இரு விசும்பில் செலும் கடவுள் வேழத்தின் மத்தகத்து வீற்றிருக்கும் சேயிழைக்கும் பசும் கமுகு வெண் கவரி வீசும் வாச – மீனாட்சிபிள்ளை:6 57/3

மேல்

வீசுவ (1)

கள் அவிழ் கோதை விசும்புற வீசுவ கண்_நுதல்-பால் செல நின் கையில் வளர்த்த பசும் கிளியும் வளர் காமர் கரும் குயிலும் – மீனாட்சிபிள்ளை:8 82/2

மேல்

வீட்டத்தனும் (1)

நாள வட்ட தளிம நளினத்தொடும் துத்தி நாகணையும் விட்டு ஒர் எட்டு நாட்டத்தனும் பரம வீட்டத்தனும் துஞ்சும் நள் இருளின் நாப்பண் அண்ட – மீனாட்சிபிள்ளை:4 33/1

மேல்

வீட்டில் (1)

வில் பொலிய நிலவு பொழி வெண் நித்திலம் பூண்டு விழுதுபட மழ கதிர்விடும் வெண் தரள ஊசலின் மிசை பொலிவ புண்டரிக வீட்டில் பொலிந்து மதுர – மீனாட்சிபிள்ளை:10 94/1

மேல்

வீட்டு (2)

வெள்ளி தகட்டு நெட்டு ஏடு அவிழ்த்து இன் இசை விரும்பும் சுரும்பர் பாட விளை நறவு கக்கும் பொலன் பொகுட்டு அலர் கமல வீட்டு கொழித்து எடுத்து – மீனாட்சிபிள்ளை:1 9/1
வீக்கும் சிறு பைம் துகில் தோகை விரியும் கலாபம் மருங்கு அலைப்ப விளையாட்டு அயரும் மணல் சிற்றில் வீட்டு குடிபுக்கு ஓட்டி இருள் – மீனாட்சிபிள்ளை:3 24/1

மேல்

வீடும் (1)

விண் அளிக்கும் சுடர் விமானமும் பரநாத வெளியில் துவாதசாந்த வீடும் கடம்பு பொதி காடும் தடம் பணை விரிந்த தமிழ்நாடும் நெற்றிக்கண் – மீனாட்சிபிள்ளை:4 36/1

மேல்

வீரன் (1)

இல்_கொடியோடு கயல் கொடி வீரன் எடுத்த கருப்பு விலும் இந்திர தனுவும் வணங்க வணங்கும் இணை புருவ கொடி சேர் – மீனாட்சிபிள்ளை:9 91/3

மேல்

வீழவும் (1)

கடவி விண்ணரசு நடவும் வெம் முனைய களிறு கைம்மலை செல் கொப்பத்து வீழவும் கனக மன்னு தட நளினி துன்னி இரு கமல மின்னும் ஒரு பத்மத்துள் மேவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/6

மேல்

வீற்றிருக்கும் (3)

ஆகத்து அமைத்து பின் ஒரு முடி தன் முடி வைத்து அணங்கு அரசு வீற்றிருக்கும் அபிடேகவல்லியை அளி குலம் முழக்கு குழல் அம் கயல் கண் அமுதையே – மீனாட்சிபிள்ளை:1 6/4
நத்தம் வளர அளகையர்_கோன் நகரில் வளரும் வான் மணியும் நளின பொகுட்டில் வீற்றிருக்கும் நங்கை மனைக்கு ஓர் விளக்கம் என – மீனாட்சிபிள்ளை:5 46/2
மீன் ஒழுகு மா இரு விசும்பில் செலும் கடவுள் வேழத்தின் மத்தகத்து வீற்றிருக்கும் சேயிழைக்கும் பசும் கமுகு வெண் கவரி வீசும் வாச – மீனாட்சிபிள்ளை:6 57/3

மேல்

வீற்றிருந்த (1)

அணி கொண்ட பீடிகையின் அம் பொன் முடி முடி வைத்து எம் ஐயனொடு வீற்றிருந்த அம் கயல் கண் அமுதை மங்கையர்க்கு அரசியை எம் அம் அனையை இனிது காக்க – மீனாட்சிபிள்ளை:1 2/2

மேல்

வீறு (1)

தகர கரிய குழல் சிறு பெண்பிள்ளை நீயோ தூயோன் வாழ் சயிலத்து எயிலை வளைப்பவள் என்று எதிர் சீறா வீறு ஓதா – மீனாட்சிபிள்ளை:3 32/1

மேல்