மே – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மேக 4
மேகங்கள் 1
மேகத்து 2
மேகம் 4
மேகமும் 2
மேகமே 2
மேகலாபார 1
மேகலாபாரம் 1
மேகலாரவம் 1
மேதினி 1
மேய் 3
மேய 1
மேயவே 2
மேயாது 1
மேயும் 1
மேரு 14
மேருதரன் 1
மேருவில் 1
மேருவின் 1
மேருவும் 2
மேருவே 2
மேருவை 1
மேருவொடு 1
மேல் 29
மேலாய 2
மேலினும் 1
மேலும் 7
மேலே 1
மேலை 3
மேவு 1
மேற்கொண்டு 2
மேன்மேல் 1
மேனியில் 2
மேனியையே 1

மேக (4)

வாரி உண்டு மேக இந்த்ர வாகனங்கள் வாய்விடும் – தக்கயாகப்பரணி:5 134/1
புரண்டு மின்னும் நெடுநாள் நுடங்குவன மேக ராசி பொழிய புறத்து – தக்கயாகப்பரணி:8 643/1
மேக வெள்ள நதி வெள்ளம் நூறுக என உம்பர் நாயகன் விளம்பினான் – தக்கயாகப்பரணி:8 652/1
வேறு அநேக வித தாரகை அநேகம் இடையே வீசு மாருதம் அநேகம் மினல் மேக குலமே – தக்கயாகப்பரணி:8 708/1

மேல்

மேகங்கள் (1)

பொருந்து மேகங்கள் போர்விட போவதே – தக்கயாகப்பரணி:8 680/2

மேல்

மேகத்து (2)

மேகத்து ஒரு பந்தர் எடுத்து உடுவாம் வெண் முத்தம் ஒழுக்கி மினல் கொடியால் – தக்கயாகப்பரணி:6 182/1
ஏறும் மேகத்து உருமேறு எறியவே – தக்கயாகப்பரணி:8 682/2

மேல்

மேகம் (4)

மேகம் உருமொடு அற வெற்பும் இறகொடு அற மேலை எயிறு கொடு வெட்டுமே – தக்கயாகப்பரணி:3 56/2
தொக்க மேகம் மாக வெளி சுற்றும் ஓடி மூடி வன துர்க்கம் யாவும் வேவ எரி துற்று வேறும் ஏறு கொடு – தக்கயாகப்பரணி:8 466/1
மாலை நாக மார்பர் மேகம் ஆகி நின்று இடிப்ப வான் – தக்கயாகப்பரணி:8 510/1
ஆறு தூக்கும் அ மேகம் அடங்கவே – தக்கயாகப்பரணி:8 583/2

மேல்

மேகமும் (2)

சூல் வறந்துபோய் மாக மேகமும் சுண்ட ஈம எரி மண்டவே – தக்கயாகப்பரணி:3 49/2
சங்கு நேமியொடு உறங்கும் மேகமும் இறங்கும் ஏகமும் தப்புமே – தக்கயாகப்பரணி:8 415/1

மேல்

மேகமே (2)

மேகமே அனையர் ஆகமே கடவுள் மேருவே அனையர் ஊருவே – தக்கயாகப்பரணி:8 421/2
இடி இட்டு வெட்டுவன எரியிட்டு உருக்குவன இன மேகமே – தக்கயாகப்பரணி:8 464/2

மேல்

மேகலாபார (1)

அலையும் மேகலாபார கடி தடாக மா நாக அமளி ஏறினாராக அழகு கூர நேர்வாளே – தக்கயாகப்பரணி:4 111/2

மேல்

மேகலாபாரம் (1)

மாய மேகலாபாரம் வாரியே – தக்கயாகப்பரணி:8 502/2

மேல்

மேகலாரவம் (1)

சிந்த மேல் வரு மேகலாரவம் உடைய நீர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 33/2

மேல்

மேதினி (1)

பொரு தரங்கம் வீங்கு சிலம்பு அடை சேவடி புரை அடங்க ஊன்ற விழுந்தது மேதினி
இரு விசும்பு தூர்ந்து அற உந்திய மோலியின் இடை கழிந்து கூம்பினது அண்ட கபாலமே – தக்கயாகப்பரணி:8 699/1,2

மேல்

மேய் (3)

வட பகீரதி குமரி காவிரி யமுனை கெளதமை மகரம் மேய்
தட மகோததி இவை விடாது உறை தருண மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 31/1,2
மகர ஏறும் ஈர் ஆளி மதுகை ஏறு மாறாடி வதன பாக மேய் வாகுவலையம் மோது காதாளே – தக்கயாகப்பரணி:4 106/2
மாகமே அனையர் தம் மகோதரமும் எம்மகோததியும் மாய மேய்
மேகமே அனையர் ஆகமே கடவுள் மேருவே அனையர் ஊருவே – தக்கயாகப்பரணி:8 421/1,2

மேல்

மேய (1)

கனகலோகம் ஏழ் ஆழி கஞல வீதி போதாத கலக பூத வேதாள கடகம் மேய மாயோளே – தக்கயாகப்பரணி:4 104/2

மேல்

மேயவே (2)

மேல் நிலாவும் சகோரங்கள் மேயவே – தக்கயாகப்பரணி:8 605/2
வேறுவேறு கபோதங்கள் மேயவே – தக்கயாகப்பரணி:8 607/2

மேல்

மேயாது (1)

மதி கோடு தைவர எழும் தண் கொழுந்துகளை வாயா என கொண்டு மேயாது மான் மதியே – தக்கயாகப்பரணி:3 75/2

மேல்

மேயும் (1)

கைந்நாகமே மேயும் மா நாக நாக கணம்கூட வாரி கவுள் கொண்ட பூதம் – தக்கயாகப்பரணி:8 543/1

மேல்

மேரு (14)

எறியல் ஓவி மா வாதம் இரிய வீசி ஊடாடும் எழிலி பீறி மா மேரு இடையை நூறி ஓர் ஆழி – தக்கயாகப்பரணி:4 108/1
பொறை சூழ் வரையில் புலி ஏறு எழுதும் பொன் மேரு வரை பெருமான் மகளார் – தக்கயாகப்பரணி:6 185/1
யாது கற்பகம் யாது மேரு என தெளிந்திலர் யாதுமே – தக்கயாகப்பரணி:8 254/2
பொலங்கல் மேரு கிரி சிகரம்-தொறும் போக விட்ட சிந்தூர பொடியன – தக்கயாகப்பரணி:8 272/2
மாலை சூழ் முடி சூழ் வருதற்கு ஒளி மழுங்கி மேரு கிரி சூழ் வருவதே – தக்கயாகப்பரணி:8 279/2
இயங்கும் மேரு கிரி சிகரத்தில் ஓர் இந்த்ர நீலகிரி போன்று இருப்பவே – தக்கயாகப்பரணி:8 286/2
வில் சாரும் மேரு பொருப்பின் – தக்கயாகப்பரணி:8 306/1
வேலை-வாய் அரக்கர்-தம்மை மேரு வில்லி மஞ்சன – தக்கயாகப்பரணி:8 379/1
சாய்வது இன்மையின் நெருக்கி மேரு முதல் தாமும் நின்ற அவர் தாள் நிலம் – தக்கயாகப்பரணி:8 426/1
தரையை அகழ்ந்து தின்று கடல் ஏழும் நக்கி வட மேரு ஆதி தட மால் – தக்கயாகப்பரணி:8 438/1
முற்று மேரு ஆதிகளை முக்க வாரி ஊழி எரி முத்தன் நீல மோலி என முட்ட ஓதம் மீது எரிய – தக்கயாகப்பரணி:8 469/1
நேமியங்கிரி நெரிந்தது முரிந்தது இடையே நின்ற மேரு கிரி எக்கிரியும் எக்கடலும் நேர் – தக்கயாகப்பரணி:8 705/1
கார் எழும் மினல் எழும் என வரும் கனல் எழ கண்டு மேரு வரையில் கடவுள் கங்கை விடவே – தக்கயாகப்பரணி:8 720/2
நீடிய எண் திசை நீழல் வாய்ப்ப நேரிய தெக்கிண மேரு என்ன – தக்கயாகப்பரணி:9 773/1

மேல்

மேருதரன் (1)

என்று மேருதரன் ஐம்படையும் ஈய நெடியோன் எறிய ஊதை விழ மோதி வர வெய்ய மழுவாள் – தக்கயாகப்பரணி:8 725/1

மேல்

மேருவில் (1)

மகர வாரிதி மறுக வாசுகி வளைய மேருவில் வட முக – தக்கயாகப்பரணி:2 30/1

மேல்

மேருவின் (1)

மேருவும் பொறா வய பொறையது மேருவின் பராரையில் பெரியதே – தக்கயாகப்பரணி:6 156/2

மேல்

மேருவும் (2)

மேருவும் பொறா வய பொறையது மேருவின் பராரையில் பெரியதே – தக்கயாகப்பரணி:6 156/2
முகடு விண்ட பழ அண்ட கோளமும் முன்னை மேருவும் இட்டு உருக்கி பெரும் – தக்கயாகப்பரணி:8 276/1

மேல்

மேருவே (2)

வேதநாயகி விமான பீடிகை அநேக கோடி வட மேருவே – தக்கயாகப்பரணி:6 138/2
மேகமே அனையர் ஆகமே கடவுள் மேருவே அனையர் ஊருவே – தக்கயாகப்பரணி:8 421/2

மேல்

மேருவை (1)

மன்றிற்கு இடம் கண்ட கொண்டல் மைந்தன் மரகத மேருவை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 777/2

மேல்

மேருவொடு (1)

படி அடி எறிந்து கால் பொருது பல குல விலங்கல் மேருவொடு
குடி அடி பறிந்த நாளும் ஒரு குழை சலனம் இன்றி நீடுவது – தக்கயாகப்பரணி:6 144/1,2

மேல்

மேல் (29)

சிந்த மேல் வரு மேகலாரவம் உடைய நீர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 33/2
நச்சு கண் முலை மேல் இடுது நிற்கும் நகு பொன் – தக்கயாகப்பரணி:3 83/1
விலங்கினார் இலர் வெம்மை எம்மையும் மேல் முனிந்திடுவான் மிக – தக்கயாகப்பரணி:6 178/1
மதுராபுரி வாது அறிவாம் என மேல் வர வந்தனன் வைதிக வாரணமே – தக்கயாகப்பரணி:6 183/2
உய்யா உணரா விழியா அருகே சரியா ஒரு கேசரி ஆசனம் மேல்
வையா அதிகாரிகளும் பெருமாள் மகளாரும் வணங்க வணங்கினனே – தக்கயாகப்பரணி:6 196/1,2
சரியாதன ஏடு உடையார் தவமே தவமாவது மேல் இது சாதனமே – தக்கயாகப்பரணி:6 202/2
மேல் நின்ற சுராசுரர் ஆர்த்தனரே திருமாலும் விரிஞ்சனும் ஆர்த்தனரே – தக்கயாகப்பரணி:6 214/1
திங்கள் வெண்குடை மேல் எறிப்ப அருக்கர் பன்னிரு தேரினும் – தக்கயாகப்பரணி:8 250/1
வயங்கும் ஈர் உரு வண்ண கலுழன் மேல் வளரும் பாற்கடல் பாழ்பட வந்தனன் – தக்கயாகப்பரணி:8 286/1
மேல் நிற்பன உலகம் பொதி வெள்ளம் பொதி கள்ள – தக்கயாகப்பரணி:8 310/1
மண் முழுவதும் மேல் வான் முழுவதும் கொண்டது போல – தக்கயாகப்பரணி:8 313/1
நடுவே வரும் நானாவித ரத்னங்களினால் மேல்
உடு வேய்தரு ககனாகரர் ஊர் ஒத்துள ஒளியே – தக்கயாகப்பரணி:8 314/1,2
தாய் தந்தை என தடைசெய்வள் இனி தானே என வேள்வி தகர்ப்பது மேல்
நாதன் திருவுள்ளம் எடுத்திலன் மற்று அது கண்டு முனிந்தனள் நாயகியே – தக்கயாகப்பரணி:8 324/1,2
விழித்தது இல்லை நுதல் திருக்கண் மிடற்றில் ஆலமும் மேல் எழ – தக்கயாகப்பரணி:8 326/1
மேல் எழும்-கொல் என்று தேரர் தே அடங்க வெட்டியே – தக்கயாகப்பரணி:8 377/2
கொண்டல் கோள் அறுத்து வானயாறு கோள் அறுத்து மேல்
அண்டகோளகை புறத்து அறாத நீர் அறுத்துமே – தக்கயாகப்பரணி:8 388/1,2
மேல் எழுந்த பொழுதும் பிரமர் அண்ட கடகம் விண்டு உடைந்தில பெரும் திகிரி வெற்பு உடையவே – தக்கயாகப்பரணி:8 403/2
மிக்க கோடு கோடி பல வெற்பு அநேக பாகைபட வெட்டி வாரி வாரி வர விட்டு வீசி மேல் விழவே – தக்கயாகப்பரணி:8 466/2
மற்றை ஆலகால எரி வர்க்க லோக கோடி சுடும் மத்த சாகரேசனொடு மச்சராசன் மேல் வரவே – தக்கயாகப்பரணி:8 469/2
மேல் ஆழியார் வெள்ளி வேதண்ட லோகம் விழிக்கே உருக்குண்ண வெள்ளம் செய் பூதம் – தக்கயாகப்பரணி:8 545/1
மேல் கொளும் தகர் வீழ்ந்துழி வீழவே – தக்கயாகப்பரணி:8 582/2
மேல் நிலாவும் சகோரங்கள் மேயவே – தக்கயாகப்பரணி:8 605/2
வெடித்த ஓசையில் அப்புறத்வனி போல மேல் எழ விம்மவே – தக்கயாகப்பரணி:8 631/2
குன்று போல்வன விசும்பு கெட மேல் வரு பெரும் கொண்டல் போல்வன புகுந்தன கொடி படையொடே – தக்கயாகப்பரணி:8 702/2
குன்ற வில்லி கொடி மேல் இடபம் ஒன்று குமுற கோவு லோகம் மக லோகம் அடைய குமுறவே – தக்கயாகப்பரணி:8 704/2
மாயோன் விடும்விடும் பகழி செய்ய எரி மேல் வந்துவந்து அடைய வெந்து பொடியாய் மடியவே – தக்கயாகப்பரணி:8 711/1
மேல் விசும்பு உடையவும் கீழ் நிலம் கரையவும் மிடை விலங்கல் இறவும் குல விலங்கல் எவையும் – தக்கயாகப்பரணி:8 721/1
ஒரு மருங்கு உடைய மூலநாயகியொடு ஒற்றை வெள்ளை விடை ஊர்தி மேல்
இரு மருங்கும் மறை தொழ எழுந்தருளி இராசராசபுரி ஈசரே – தக்கயாகப்பரணி:10 778/1,2
அவ்வகை இறைவர் காட்ட அமரர் மேல் முனிவு தீர்ந்து – தக்கயாகப்பரணி:10 794/1

மேல்

மேலாய (2)

முறிய மோதி வான் யாறு முழுதும் மாறி ஆகாய முடிய ஏறி மேலாய முகடு சாடு தாளாளே – தக்கயாகப்பரணி:4 108/2
உதர சோபிதா நாபி கமல வாயினால் மீள உமிழும் நீலி மேலாய உவண ஊர்தி ஊர்வாளே – தக்கயாகப்பரணி:4 110/2

மேல்

மேலினும் (1)

எப்பெரும் களிற்று ஈட்டத்தின் மேலினும் எண்_இல் கோடி நாராயணர் ஏறவே – தக்கயாகப்பரணி:8 275/2

மேல்

மேலும் (7)

கீழும் ஏழு நிலை மேலும் ஏழு நிலை கோயில் வாயில் இரு கிரியுமே – தக்கயாகப்பரணி:6 137/1
அ பெரும் புரவி தொகை மேலும் நீடு ஆடக கொடி ஆடு பொன் தேரினும் – தக்கயாகப்பரணி:8 275/1
விண்ணவர்கள் மேலும் அயன் மேலும் அரி மேலும் – தக்கயாகப்பரணி:8 289/1
விண்ணவர்கள் மேலும் அயன் மேலும் அரி மேலும் – தக்கயாகப்பரணி:8 289/1
விண்ணவர்கள் மேலும் அயன் மேலும் அரி மேலும்
கண் நுதல் முதல் கடவுளும் கருணைவைத்தே – தக்கயாகப்பரணி:8 289/1,2
பைத்த சோதி ஆறிரு பதிற்றுநூறு காய விரை பச்சை வாசி நாலிருபதிற்று மேலும் நால் உறழ – தக்கயாகப்பரணி:8 467/1
மேலும் கீழும் வெளிப்பட வான் விடும் – தக்கயாகப்பரணி:8 569/1

மேல்

மேலே (1)

பொன் வெள்ளி எஃகு என்ன வானத்து உலாம் முப்புரம் சுட்ட வீரர்க்கு மேலே பொலிந்தே – தக்கயாகப்பரணி:8 550/2

மேல்

மேலை (3)

மேகம் உருமொடு அற வெற்பும் இறகொடு அற மேலை எயிறு கொடு வெட்டுமே – தக்கயாகப்பரணி:3 56/2
மேலை நெற்றி விழிக்க வந்து பணிந்து நின்றனன் வீரனே – தக்கயாகப்பரணி:8 334/2
மேலை நாகர் கீழை நாகர் போல் மயங்கி வீழவே – தக்கயாகப்பரணி:8 510/2

மேல்

மேவு (1)

வேலின் மாயன் மாய்வுற விடும் பலி மேவு நாயகன் விடு படை – தக்கயாகப்பரணி:8 396/1

மேல்

மேற்கொண்டு (2)

சாயை மேற்கொண்டு நின்ற சாயையே போல இன்று – தக்கயாகப்பரணி:10 785/1
பேயை மேற்கொண்டு நின்றது ஒரு கரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 785/2

மேல்

மேன்மேல் (1)

அலை கொன்று வரு கங்கை வாராமல் மேன்மேல் அடைக்கின்ற குன்று ஊடறுக்கின்ற பூதம் – தக்கயாகப்பரணி:8 549/1

மேல்

மேனியில் (2)

புனலன் மேனியில் நிசிந்தன் விடும் அம்பு அடையவும் புரை அடங்கும் இனி அ பரசுபாணி புரை தீர் – தக்கயாகப்பரணி:8 710/1
அனலன் மேனியில் முகுந்தன் விடும் அம்பு அடைய வேம் ஆதலால் அவர் வலம் தெரிவது அம்ம அரிதே – தக்கயாகப்பரணி:8 710/2

மேல்

மேனியையே (1)

வெருவாது புகுந்து தொடப்பெறுமோ மீள செழியன் திரு மேனியையே – தக்கயாகப்பரணி:6 190/2

மேல்