சீ – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


சீகர (1)

சிகர சீகர அருவி நீர்அரமகளிர் நீர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 30/2

மேல்

சீகரங்களின் (1)

நதியும் வீசிய சீகரங்களின் வந்துவந்து நலிந்ததே – தக்கயாகப்பரணி:8 331/2

மேல்

சீகரம் (1)

திரண்டு வந்த வராமிர்த சீகரம் சிதற வீசி திரு பாற்கடல் திரை – தக்கயாகப்பரணி:8 284/1

மேல்

சீத (1)

கடையில் காய் எரி போல் விரி கனலிக்கே குளிர் கூர்வன கதுவி சீத கலா மதி கருக காயும் நிலாவின – தக்கயாகப்பரணி:8 270/1

மேல்

சீதள (1)

கச்சியில் சுரசூத சீதள பல்லவம் கனலில் கலித்து – தக்கயாகப்பரணி:8 625/1

மேல்

சீய (1)

மலை பிடித்த சீய ஏறுடன் பிணைத்து வாரி நீர் – தக்கயாகப்பரணி:8 370/1

மேல்

சீர் (2)

செஞ்சூடிகா கோடி சிந்த பறித்து சிறை புள் குலம் காவலன் சீர் சிதைத்தே – தக்கயாகப்பரணி:8 554/2
தின்ற சீர் தம் திருவுள்ளம் சேர்த்தியே – தக்கயாகப்பரணி:8 616/2

மேல்

சீராசராசீச்சரம் (1)

சீராசராசீச்சரம் சமைத்த தெய்வ பெருமாளை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 772/2

மேல்

சீலம் (1)

சுட்டு கொல் கூசி கொல் விட்டும் பிடித்தும் தொடர்ந்து இராகு கேதுக்கள் சீலம் தொலைத்தே – தக்கயாகப்பரணி:8 555/2

மேல்

சீறி (1)

சீறி சமண் மூகர் குலச்சிறையார் செவி வேவன சிற்சில செப்புவரே – தக்கயாகப்பரணி:6 189/2

மேல்

சீறிய (2)

சீறிய சின தீ உண்ண திரிபுரம் எரித்த நாளில் – தக்கயாகப்பரணி:8 620/1
தென்னவர் தென் மதுராபுரி சீறிய
மன்னவர் மன்னன் வரோதயன் வாழியே – தக்கயாகப்பரணி:11 803/1,2

மேல்

சீறினும் (1)

எளியராம் மிர்த மதனன் ஆள் படை இறைவர் சீறினும் இனி எனா – தக்கயாகப்பரணி:2 35/1

மேல்