உ – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்கு 1
உக 4
உகங்கள் 1
உகளவே 1
உகிரி 1
உகிரில் 1
உகிரை 1
உகு 1
உகுப்ப 1
உகுமாறு 1
உகைத்த 1
உகைத்தே 1
உகைப்பான் 1
உங்கள் 2
உச்சியில் 1
உட்கியோ 1
உட்கொண்டு 1
உடம்பில் 1
உடம்பின் 1
உடம்பு 11
உடம்பும் 2
உடல் 4
உடலம் 1
உடலில் 1
உடலும் 1
உடன் 14
உடன்வர 1
உடன்ற 1
உடன்று 3
உடனே 1
உடு 7
உடுத்த 1
உடுத்தும் 1
உடுப்பவே 1
உடுவாம் 1
உடுவும் 1
உடுவுமே 1
உடுவொடும் 1
உடை 5
உடைக்கினும் 1
உடைக்கும் 2
உடைத்து 3
உடைந்தது 1
உடைந்தில 1
உடைய 15
உடையரே 1
உடையவும் 1
உடையவே 1
உடையள் 1
உடையன 1
உடையார் 2
உடையாரையும் 2
உடையாள் 1
உண்ட 4
உண்டது 1
உண்டபடி 1
உண்டவனே 1
உண்டன 2
உண்டார் 1
உண்டி 1
உண்டியும் 1
உண்டிலாத 1
உண்டு 16
உண்டும் 1
உண்டே 1
உண்ண 1
உண்ணலாம் 1
உண்ணவோ 1
உண்ணஉண்ண 1
உண்ணும் 1
உண்ணோம் 2
உண்பதற்குமே 1
உண்பது 1
உண்பர் 1
உண்பன 1
உண 1
உணர்த்தி 1
உணர்ந்தனள் 1
உணர்ந்தே 1
உணர்வு 1
உணரா 1
உதக 1
உததி 1
உதய 1
உதயமும் 1
உதர 2
உதரத்து 1
உதரமொடு 1
உதவவே 1
உதவியொடு 1
உதவும் 1
உதிர்த்து 1
உதிர்ந்தன 1
உதிர்ந்து 1
உதிர்வன 1
உதிர 3
உதிரம் 1
உதை 1
உதைக்கும் 1
உதைத்து 1
உந்தி 3
உந்திய 1
உந்தியில் 1
உப்பு 1
உபாதிகள் 1
உம்பர் 10
உம்பர்கள் 1
உம்பர்கோன் 1
உம்பரும் 3
உம்பரை 1
உம்மது 1
உமது 1
உமிழ் 3
உமிழும் 1
உமை 1
உய்ந்து 3
உய்ந்தேன் 1
உய்ய 2
உய்யலாம் 1
உய்யா 1
உய்வது 1
உயப்பெறுதுமே 1
உயர் 4
உயர்த்தது 1
உயரும் 1
உயிர் 19
உயிர்த்த 1
உயிர்த்தது 1
உயிர்ப்ப 1
உயிர்ப்பது 1
உயிர்ப்பில் 1
உயிர்ப்பு 2
உயிர்விடார் 1
உயிராது 1
உயிரும் 3
உரக 5
உரகம் 1
உரகர் 3
உரகன் 1
உரகேசரை 1
உரத்து 2
உரம் 2
உரல்களாக 1
உரி 1
உரித்து 1
உரிப்பர் 1
உரிமை 2
உரிய 2
உரியவானை 1
உரிவை 1
உரு 7
உருக்கவே 1
உருக்கி 3
உருக்குண்ண 2
உருக்கும் 2
உருக்குவன 1
உருக 4
உருகா 2
உருகு 1
உருகும் 2
உருகுவார் 1
உருத்திரரை 1
உருத்து 1
உருப்பு 1
உரும் 1
உருமு 2
உருமேறு 2
உருமொடு 1
உருவ 4
உருவத்தில் 1
உருவி 1
உருவு 2
உருவுமே 1
உரைசெய்க 1
உரைத்ததோ 1
உரைத்தனையேல் 1
உரைத்தாம் 1
உரைத்து 1
உரைத்துமே 1
உரைத்தே 1
உரையாய் 1
உரோணி-தன் 1
உலக்கை 1
உலக 1
உலகங்கள் 3
உலகங்களும் 1
உலகம் 2
உலகமும் 2
உலகில் 2
உலகின் 2
உலகு 22
உலகுக்கும் 1
உலகும் 2
உலகுமே 1
உலகை 1
உலகையும் 1
உலர் 1
உலரும் 1
உலவி 1
உலறி 1
உலாம் 1
உலாவருவதே 1
உலாவுவன 1
உலைகள் 1
உவண 2
உவணத்து 1
உவணமே 2
உவந்து 2
உவப்பன 1
உவமை 1
உவமை_இல் 1
உவரி 1
உழந்த 1
உழப்பது 1
உழல் 1
உழறுமேல் 1
உழுவை 2
உழைக்கும் 1
உழைப்ப 1
உள் 3
உள்-வயின் 1
உள்ள 9
உள்ளது 2
உள்ளவா 1
உள்ளன 2
உள்ளியோ 2
உள்ளே 1
உள்ளோர் 1
உள 11
உளது 1
உளதோ 1
உளர் 3
உளரே 3
உளவோ 1
உளைத்து 1
உளைத்தே 1
உளைய 1
உளையவே 1
உற்பத்தியது 1
உற 2
உறங்கும் 1
உறவு 2
உறவும் 1
உறவே 3
உறழ 1
உறி 1
உறு 1
உறுதி 1
உறுதியின் 1
உறும் 2
உறுமுறும் 1
உறுமோ 1
உறுவது 1
உறை 4
உறையாதன 1
உறையும் 1
உன் 1
உனது 1

உக்கு (1)

உக்கு நின்றனர் உம்பர் உடம்பு தாம் – தக்கயாகப்பரணி:8 668/1

மேல்

உக (4)

நில நேமி பொலன் நேமி அளவாக உக கோடி நெடிது ஆளவே – தக்கயாகப்பரணி:1 2/2
உக கோடி பல கோடி குலதீபன் எழு தீவும் உடன் ஆளவே – தக்கயாகப்பரணி:1 4/2
ஓதம் உக இறுதி போத நடுநடுவு முழுகும் எழு கிரியும் ஒக்குமே – தக்கயாகப்பரணி:3 59/2
வேலை-நின்று எழா உக கனல் என வேக நஞ்சு அறா மதி பிளவு என – தக்கயாகப்பரணி:6 155/1

மேல்

உகங்கள் (1)

மழை என உகங்கள் ஏழ் எழிலி வரவர விசும்பின் மாறுவது – தக்கயாகப்பரணி:6 145/1

மேல்

உகளவே (1)

ஒப்பு அரும் பழைய சேல் வடிவுகொள்ள இறையோன் ஒரு சுறா வடிவுகொண்டு எதிர் உடன்று உகளவே – தக்கயாகப்பரணி:8 722/2

மேல்

உகிரி (1)

ஒருவர் உரம் இரு பிளவுபட நடும் உகிரி தனது ஒரு திகிரியே – தக்கயாகப்பரணி:6 165/2

மேல்

உகிரில் (1)

கிள்ளி சிறை பாரம் உகிரில் கிடப்ப கிளர்ந்து உம்பர் கோமானை மானம் கெடுத்தே – தக்கயாகப்பரணி:8 537/2

மேல்

உகிரை (1)

திறத்து அவுண கணத்து உருவ செறித்து உகிரை பறித்தே – தக்கயாகப்பரணி:8 477/1

மேல்

உகு (1)

உகு நச்சு தலை நெட்டு எட்டு உரக கச்சினரே – தக்கயாகப்பரணி:3 99/1

மேல்

உகுப்ப (1)

கலக்கல முத்து உகுப்ப அடல் கடல் சுறவை கடித்தே – தக்கயாகப்பரணி:8 491/2

மேல்

உகுமாறு (1)

தம் தடி தின்றனர் தம் தலை மூளை விழுங்கினர் தத்தம் உரத்து உகுமாறு தடுத்து மடுத்தனர் – தக்கயாகப்பரணி:8 561/1

மேல்

உகைத்த (1)

வாரும் சடாடவி முடி தேவர்-தம் தேவி வன் மான் உகைத்த கொடி பொன் மாதவி கொடிகள் – தக்கயாகப்பரணி:3 76/1

மேல்

உகைத்தே (1)

உடு தொடை அற்று அழைத்து நிலத்து உழைப்ப உதைத்து உகைத்தே – தக்கயாகப்பரணி:8 484/2

மேல்

உகைப்பான் (1)

நுதி கோடு கூர் கலை உகைப்பான் விடா முல்லை நூறாயிரம் கிளை கொடு ஏறா விசும்பு இவர் – தக்கயாகப்பரணி:3 75/1

மேல்

உங்கள் (2)

விடுவீர் விடுவீர் இனி என் எதிர் நீர் வெம் கோபமும் உங்கள் விவாதமுமே – தக்கயாகப்பரணி:6 199/2
ஐயம் உண்ணோம் கடல் நஞ்சு குடியோம் உங்கள் அடியோமே – தக்கயாகப்பரணி:7 227/2

மேல்

உச்சியில் (1)

உச்சியில் பனி வீசு கண்ணியின் வெண்ணிலாவை ஒதுக்கவே – தக்கயாகப்பரணி:8 625/2

மேல்

உட்கியோ (1)

உழைக்கும் பண்டை உதை நினைந்து உட்கியோ
இழைக்கும் கூற்றம் எதிராது இரிவதே – தக்கயாகப்பரணி:8 677/1,2

மேல்

உட்கொண்டு (1)

சதுரானனன் வெள்ளம் சூழ தான் முற்றும் தந்த்ரங்களும் எல்லா யந்த்ரங்களும் உட்கொண்டு
எதிராய் அவிய கண்டு ஈரைவரையும் கொண்டு இறையோன் எதிர்சென்றான் மறையோர் இறையோனே – தக்கயாகப்பரணி:8 695/1,2

மேல்

உடம்பில் (1)

தேன் இணர் அலங்கல் மெளலி தேவர் தானவர் உடம்பில்
தூ நிண வெள்ளை கோவை எடுத்தெடுத்து அரையில் சுற்றீர் – தக்கயாகப்பரணி:9 741/1,2

மேல்

உடம்பின் (1)

முளிபடும் உடம்பின் முன்னை பொரிவற மூழ்கி ஏறீர் – தக்கயாகப்பரணி:9 740/2

மேல்

உடம்பு (11)

வெப்பு தடைபட்டது பட்டளவே வேவாத உடம்பு உடை மீனவனே – தக்கயாகப்பரணி:6 195/2
வேதிக்க உடம்பு ஒரு பொன்மயமா ஒளிவிட்டு விளங்கினன் மீனவனே – தக்கயாகப்பரணி:6 217/2
வேத பகைவர்-தம் உடம்பு வீங்க தூங்கும் வெம் கழுவிற்கு – தக்கயாகப்பரணி:6 218/1
மண்ணா உடம்பு தம் குருதி மண்ண கழுவின் மிசை வைத்தார் – தக்கயாகப்பரணி:6 219/1
வற்றியே உடம்பு இழந்தோம் மற்றொரு மானிட உடம்பு – தக்கயாகப்பரணி:7 235/1
வற்றியே உடம்பு இழந்தோம் மற்றொரு மானிட உடம்பு
பற்றியே நின்று அடியோம் பணிசெய்ய பணி வாழி – தக்கயாகப்பரணி:7 235/1,2
துற்று எழுந்த பேய் நிரை துளங்கு தம் உடம்பு விட்டு – தக்கயாகப்பரணி:8 369/1
ஒருவரே அகில லோகமும் புதைய வேறுவேறு உடம்பு உடையரே – தக்கயாகப்பரணி:8 423/1
தம்பம் அமைந்து உடம்பு சலியாது நின்ற தனி மன்னன் யாவர் தமரே – தக்கயாகப்பரணி:8 441/2
உக்கு நின்றனர் உம்பர் உடம்பு தாம் – தக்கயாகப்பரணி:8 668/1
சுடர் முடி கடக சூத்ரம் உடம்பு எலாம் தொடக்கிக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 743/2

மேல்

உடம்பும் (2)

ஈர் உடம்பும் மிசைந்து இரண்டு உதிர பரப்பும் இறைத்தனம் – தக்கயாகப்பரணி:7 231/2
ஒழிந்த வானவர்கட்கு எல்லாம் உயிரும் தம் உடம்பும் நல்கி – தக்கயாகப்பரணி:10 798/1

மேல்

உடல் (4)

கார் உடல் சமண் குழாம் அநேக கோடி கட்டியே – தக்கயாகப்பரணி:8 373/2
சாதமும் கழுது எனும் பெயர் தவிர்ந்தன நிண தசை மிசைந்து உடல் விசும்பு புதைய தணியவே – தக்கயாகப்பரணி:8 406/2
பூதம் ஐந்தும் இரு கோளும் இயமானனும் என புகலும் எங்களை விழுங்குக புகுந்து உனது உடல்
பேதம் ஐந்து அமளியும் தெளியும் ஓதமும் உடன் பின்னும் மன் உயிரும் உண்டு உயிர் உயப்பெறுதுமே – தக்கயாகப்பரணி:8 723/1,2
தனித்தனி வயிறு வீங்க குடித்து உடல் தடித்தீர் நீரும் – தக்கயாகப்பரணி:9 738/1

மேல்

உடலம் (1)

கொள்ளைகொண்டு உடலம் கிளர்ந்து கொதிப்ப வந்து கொளுந்தவே – தக்கயாகப்பரணி:6 174/2

மேல்

உடலில் (1)

உலர் எலும்பொடு ஒசி நரம்பின் உடலில் நின்ற குடலை போன்று – தக்கயாகப்பரணி:5 127/1

மேல்

உடலும் (1)

மிடைய போய் நரம்பு உடலும் வெறும் தலையே தலை ஆகி – தக்கயாகப்பரணி:7 234/1

மேல்

உடன் (14)

உக கோடி பல கோடி குலதீபன் எழு தீவும் உடன் ஆளவே – தக்கயாகப்பரணி:1 4/2
ஒரு தோகை மிசை ஏறி உழல் சூரும் மலை மார்பும் உடன் ஊடுற – தக்கயாகப்பரணி:1 5/1
கை வைக்கவும் அடி தோயவும் உடன் நின்று கவிக்கும் – தக்கயாகப்பரணி:2 11/1
எமது மலை இறை இகல் பொரு சிலை மலை ரவியும் மதியமும் உடன் வலம்வரு மலை இருளும் இருள் கெட எரி தமனிய மலை ரசத மலை இ மலையில் ஓர் சிறு குவடு – தக்கயாகப்பரணி:2 43/1
பூவகம் விடாதவர்கள் ஓத உடன் ஓதுவர் பரம்பரம் புரந்தரமே – தக்கயாகப்பரணி:3 79/2
எஞ்சல் இன்றி உடன் நின்று அவிந்தபடி எம் படைக்கு உரைசெய்க என்னவே – தக்கயாகப்பரணி:7 244/2
இரண்டு பாலும் உடன் செல திருமலை வலம்செய்து இறைஞ்சியே – தக்கயாகப்பரணி:8 336/2
கார் கிழித்து அமரர் நாடு கண்டு உடன்
பார் கிழித்து உரகர் பூமி பற்றியே – தக்கயாகப்பரணி:8 361/1,2
த்ரிசூலம் இட்டு உடன் கலந்து போதவே – தக்கயாகப்பரணி:8 367/2
உலக கவிப்பு அடைய உருக கடை கனலும் உடன் ஏறவே – தக்கயாகப்பரணி:8 457/2
தக்கன் யாகசாலை வினை தப்ப மாடு சாமரைகள் தைப்ப வீசி மீது விரி சத்ரசாயை தோய உடன்
மக்கள் யானை சூழ வர மற்றை நாலு கோடு உடைய மத்த யானை ஏறி வரும் வச்ரபாணி வாசவனே – தக்கயாகப்பரணி:8 470/1,2
மகர போசனமாய் உடன் மாயவே – தக்கயாகப்பரணி:8 686/2
நின்ற வில்லி கொடியில் கருடன் ஆர்த்த பொழுதே நிமிர் சிறை கருட லோகம் உடன் ஆர்த்தது எழவே – தக்கயாகப்பரணி:8 704/1
பேதம் ஐந்து அமளியும் தெளியும் ஓதமும் உடன் பின்னும் மன் உயிரும் உண்டு உயிர் உயப்பெறுதுமே – தக்கயாகப்பரணி:8 723/2

மேல்

உடன்வர (1)

எம் இன்னுயிர் அனையீர் படை எல்லாம் உடன்வர நீர் – தக்கயாகப்பரணி:8 455/1

மேல்

உடன்ற (1)

பூமி கம்பமும் எதிர்ந்தன உதிர்ந்தன உடு பொரு புராரியும் முராரியும் உடன்ற பொழுதே – தக்கயாகப்பரணி:8 705/2

மேல்

உடன்று (3)

உம்பரும் பெரும் படையும் இப்படி உடன்று நிற்க மற்றவரை ஊடறுத்து – தக்கயாகப்பரணி:8 473/1
பொய் யானையும் ஆளும் உடன்று பொரா – தக்கயாகப்பரணி:8 597/1
ஒப்பு அரும் பழைய சேல் வடிவுகொள்ள இறையோன் ஒரு சுறா வடிவுகொண்டு எதிர் உடன்று உகளவே – தக்கயாகப்பரணி:8 722/2

மேல்

உடனே (1)

ஊழி ஏறு கடல் நீர் அண்டகோளகை உடைத்து உம்பர் நீரொடு கலந்தனையது ஒக்கும் உடனே
பாழி ஏறு திணி தோள் வீரபத்ர கணமும் பத்ரகாளி கணமும் படை எழுந்தபடியே – தக்கயாகப்பரணி:8 428/1,2

மேல்

உடு (7)

தங்கள் வெம் கதிர் நடு எறித்தனர் உடு எறிப்பு ஒளி தவிரவே – தக்கயாகப்பரணி:8 250/2
உடு வேய்தரு ககனாகரர் ஊர் ஒத்துள ஒளியே – தக்கயாகப்பரணி:8 314/2
மண்ணில் செந்தீ அடுப்ப உடு பல மாய்ந்தன – தக்கயாகப்பரணி:8 389/1
இடம் பெறா வெளி இழந்து நடு உடு எழப்பெறா ககனம் எங்குமே – தக்கயாகப்பரணி:8 412/2
எயிறு இரண்டு அருகு வெண்பிறைக்கு இவை இரண்டு உடு தொடை-கொல் என்னலாய் – தக்கயாகப்பரணி:8 420/1
உடு தொடை அற்று அழைத்து நிலத்து உழைப்ப உதைத்து உகைத்தே – தக்கயாகப்பரணி:8 484/2
பூமி கம்பமும் எதிர்ந்தன உதிர்ந்தன உடு பொரு புராரியும் முராரியும் உடன்ற பொழுதே – தக்கயாகப்பரணி:8 705/2

மேல்

உடுத்த (1)

உடுத்த நேமிகிரி நெரிய ஒருவர் நகம் உருவுமே உலகு வெருவுமே – தக்கயாகப்பரணி:8 422/1

மேல்

உடுத்தும் (1)

பொங்க களிற்று ஈர் உரி போர்வை கொண்டும் புலித்தோல் உடுத்தும் படுத்தும் புயத்தே – தக்கயாகப்பரணி:8 551/1

மேல்

உடுப்பவே (1)

ஓதியில் செவி துளை திளைக்கும் முத்து உடுப்பவே – தக்கயாகப்பரணி:5 123/2

மேல்

உடுவாம் (1)

மேகத்து ஒரு பந்தர் எடுத்து உடுவாம் வெண் முத்தம் ஒழுக்கி மினல் கொடியால் – தக்கயாகப்பரணி:6 182/1

மேல்

உடுவும் (1)

போதுமே இரவி புரவி உடுவும் நடு புகுதுமேல் நகுதும் நகுதுமே – தக்கயாகப்பரணி:3 55/2

மேல்

உடுவுமே (1)

உதிர்வன எழிலியும் உடுவுமே
அதிர்வன புடவிகள் அடையவே – தக்கயாகப்பரணி:8 523/1,2

மேல்

உடுவொடும் (1)

மலைகள் வாரியன ஏழும் முக்கி அவை விக்கி உடுவொடும் அடுத்து எடுத்து – தக்கயாகப்பரணி:8 410/1

மேல்

உடை (5)

உரக கங்கணம் தருவன பண மணி உலகு அடங்கலும் துயில் எழ வெயில் எழ உடை தவிர்ந்த தன் திரு அரை உடை மணி உலவி ஒன்றோடொன்று அலமர விலகிய – தக்கயாகப்பரணி:1/1
உரக கங்கணம் தருவன பண மணி உலகு அடங்கலும் துயில் எழ வெயில் எழ உடை தவிர்ந்த தன் திரு அரை உடை மணி உலவி ஒன்றோடொன்று அலமர விலகிய – தக்கயாகப்பரணி:1/1
உமது மலை என உயர் கயிலையை இகழ் உரிமை உடை வடவரை அரமகளிரை உலகு வெயில் கெட இளநிலவு எழ நகும் உதய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 43/2
வெப்பு தடைபட்டது பட்டளவே வேவாத உடம்பு உடை மீனவனே – தக்கயாகப்பரணி:6 195/2
கொங்கு உடை சரோருக கிழங்கு அகழ்ந்து கொண்டுமே – தக்கயாகப்பரணி:8 381/2

மேல்

உடைக்கினும் (1)

அ கரத்து உலகு உடைக்கினும் உடைக்கும் இதில் ஓர் அலகையே என விரிஞ்சன் அலம்வந்து அலறவே – தக்கயாகப்பரணி:8 398/2

மேல்

உடைக்கும் (2)

உடைக்கும் பெரு வெள்ளங்களின் உற்பத்தியது ஈதே – தக்கயாகப்பரணி:8 316/2
அ கரத்து உலகு உடைக்கினும் உடைக்கும் இதில் ஓர் அலகையே என விரிஞ்சன் அலம்வந்து அலறவே – தக்கயாகப்பரணி:8 398/2

மேல்

உடைத்து (3)

உடைய புடைபெயர் வெள்ளம் உடைத்து இ குளிர் தடமே – தக்கயாகப்பரணி:8 311/2
சங்கு எடுத்து உடைத்து அயின்று தன் துணை தனிப்பெரும் – தக்கயாகப்பரணி:8 381/1
ஊழி ஏறு கடல் நீர் அண்டகோளகை உடைத்து உம்பர் நீரொடு கலந்தனையது ஒக்கும் உடனே – தக்கயாகப்பரணி:8 428/1

மேல்

உடைந்தது (1)

தேர்த்தட்டாய் அன்று உடைந்தது தேர்ந்து-கொல் – தக்கயாகப்பரணி:8 671/1

மேல்

உடைந்தில (1)

மேல் எழுந்த பொழுதும் பிரமர் அண்ட கடகம் விண்டு உடைந்தில பெரும் திகிரி வெற்பு உடையவே – தக்கயாகப்பரணி:8 403/2

மேல்

உடைய (15)

சேரும் மதியம் என இளையமதியொடு உறவு உடைய மகளிர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 21/2
உலகு அபாடம் மனு என உலாவுவன ஒழுகு நீள் நயனம் உடைய நீர் – தக்கயாகப்பரணி:2 27/1
திசை அகன்றளவும் அகல் நிதம்பதடம் உடைய மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 29/2
சிந்த மேல் வரு மேகலாரவம் உடைய நீர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 33/2
உடைய கவிர் இதழ் உமிழ் நகை அமிழ்து உயிர் உதவும் உதவியொடு உவமை_இல் இளமையொடு உரக குல பதி வர அவனுடன் வரும் உரிமை அரிவையர் உயர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 39/2
உடைய மோகினியை ஒக்க உளர் யோகினிகளே – தக்கயாகப்பரணி:3 87/2
ஒழியும் ஓரொரோர் கூறும் ஒருவர் ஆகி நேர் ஆகி உடைய கேள்வர் ஓர் பாதி உருகு காதல் கூர் வாளே – தக்கயாகப்பரணி:4 109/2
திசை பெறாது தடியாத பாரிடமும் உடையள் உலகு உடைய செல்வியே – தக்கயாகப்பரணி:5 135/2
அலம் கையில் படை உடைய நம்பியொடு அதிர் பயோததி அனையது ஓர் – தக்கயாகப்பரணி:8 259/1
உடைய புடைபெயர் வெள்ளம் உடைத்து இ குளிர் தடமே – தக்கயாகப்பரணி:8 311/2
அண்ட கோடிகள் அநேக கோடிகளும் உடைய நீர் சுவறும் அடையவே – தக்கயாகப்பரணி:8 409/2
மக்கள் யானை சூழ வர மற்றை நாலு கோடு உடைய மத்த யானை ஏறி வரும் வச்ரபாணி வாசவனே – தக்கயாகப்பரணி:8 470/2
தடுத்த குல பொருப்பை முடி தடத்து உடைய தகர்த்தே – தக்கயாகப்பரணி:8 484/1
உடைய வெங்கதிர் தம்மை உருக்கவே – தக்கயாகப்பரணி:8 579/2
ஒரு மருங்கு உடைய மூலநாயகியொடு ஒற்றை வெள்ளை விடை ஊர்தி மேல் – தக்கயாகப்பரணி:10 778/1

மேல்

உடையரே (1)

ஒருவரே அகில லோகமும் புதைய வேறுவேறு உடம்பு உடையரே
இருவரே தெரிய அரியர்தாம் இவரை எங்ஙனே தருவர் என்னவே – தக்கயாகப்பரணி:8 423/1,2

மேல்

உடையவும் (1)

மேல் விசும்பு உடையவும் கீழ் நிலம் கரையவும் மிடை விலங்கல் இறவும் குல விலங்கல் எவையும் – தக்கயாகப்பரணி:8 721/1

மேல்

உடையவே (1)

மேல் எழுந்த பொழுதும் பிரமர் அண்ட கடகம் விண்டு உடைந்தில பெரும் திகிரி வெற்பு உடையவே – தக்கயாகப்பரணி:8 403/2

மேல்

உடையள் (1)

திசை பெறாது தடியாத பாரிடமும் உடையள் உலகு உடைய செல்வியே – தக்கயாகப்பரணி:5 135/2

மேல்

உடையன (1)

ஓடும் நான்கு பரூஉ தாள் உடையன உரு தனித்தனி பாற்கடல் ஒப்பன – தக்கயாகப்பரணி:8 274/1

மேல்

உடையார் (2)

சரியாதன ஏடு உடையார் தவமே தவமாவது மேல் இது சாதனமே – தக்கயாகப்பரணி:6 202/2
கார் முகக்கும் இரவு என்ன இருள் குஞ்சி விரிவார் கடல் முகக்கும் அகல் வாயன கபாலம் உடையார்
பார் முகக்கும் உருமு கழு நிரைத்த படையார் பல முக குமுத வாய் இறைவி பைரவர்களே – தக்கயாகப்பரணி:8 429/1,2

மேல்

உடையாரையும் (2)

வேம் ஏடு உடையாரையும் வைகையிலே விட்டால் அதன் மீது மிதந்து ஒழுகி – தக்கயாகப்பரணி:6 203/1
போம் ஏடு உடையாரையும் நீ கழுவில் புகுவிப்பது தெக்கண பூபதியே – தக்கயாகப்பரணி:6 203/2

மேல்

உடையாள் (1)

உடையாள் திரு அகம் படியில் யோகினிகளே – தக்கயாகப்பரணி:3 95/2

மேல்

உண்ட (4)

அமையோம் என்னும் அலகை இனம் தின்று விடாய் பண்டு அமிர்து உண்ட
இமையோர் இமையா பேய் ஆகி இந்த்ர லோகத்து ஈண்டுவரால் – தக்கயாகப்பரணி:8 564/1,2
உண்ட ஆரமுதோடும் ஒருங்கவே – தக்கயாகப்பரணி:8 663/2
நீலம் உண்ட முகில் குழாம் என நின்ற பேய் இது நிற்பது ஓர் – தக்கயாகப்பரணி:9 762/1
ஞாலம் உண்ட வயிற்று இரைப்பை அடக்கும்-மின்கள் நடக்கவே – தக்கயாகப்பரணி:9 762/2

மேல்

உண்டது (1)

ஒற்றை தலை வெட்டு உண்டது கொண்டு ஓடி சென்றான் சென்றால் என் – தக்கயாகப்பரணி:7 223/1

மேல்

உண்டபடி (1)

இன்னவாறு அமரர் யாகபலம் உண்டபடி என்று இறைவியை தொழுதிருந்து அழுத பேய்க்கு இதனை நீ – தக்கயாகப்பரணி:8 727/1

மேல்

உண்டவனே (1)

மன் காதலில் உய்வது இவ் வையம் எலாம் மலையாள் முலை ஆரமுது உண்டவனே
என் காதலன் எம் பெருமான் இவனுக்கு இதுவோ தகவு என்றனள் என்றலுமே – தக்கயாகப்பரணி:6 186/1,2

மேல்

உண்டன (2)

உருகும் சுரர் உயிர் உண்டன உணர்வு உண்டன ஒழுக – தக்கயாகப்பரணி:2 13/1
உருகும் சுரர் உயிர் உண்டன உணர்வு உண்டன ஒழுக – தக்கயாகப்பரணி:2 13/1

மேல்

உண்டார் (1)

அருந்தும் ஆழியில் ஆலம் உண்டார் என்றோ – தக்கயாகப்பரணி:8 680/1

மேல்

உண்டி (1)

பெரு விலங்கல் அன புயங்க பிசித உண்டி பெறுபவே – தக்கயாகப்பரணி:5 133/2

மேல்

உண்டியும் (1)

பைத்த பூணும் உயிர்ப்பு அழன்றன பண்டை உண்டியும் அவ்வழி – தக்கயாகப்பரணி:8 330/1

மேல்

உண்டிலாத (1)

இரண்டு போதும் உண்டும் உண்டிலாத போல் இருப்பவே – தக்கயாகப்பரணி:5 122/2

மேல்

உண்டு (16)

விழும் கடல் பகை பிணத்தும் ஓடி உண்டு மீள்பவே – தக்கயாகப்பரணி:5 124/2
வாரி உண்டு மேக இந்த்ர வாகனங்கள் வாய்விடும் – தக்கயாகப்பரணி:5 134/1
சோரி உண்டு சூல் முதிர்ந்த போல் மிதந்த தோலவே – தக்கயாகப்பரணி:5 134/2
ஒப்பு அரும் கடவுள் ஆலம் உண்டு அதனை உள்ளவா சிறிது உரைத்துமே – தக்கயாகப்பரணி:6 139/2
உயிர் பெரும் பசி தீர்ந்த-கொல் இல்லை-கொல் உண்டு வெண் – தக்கயாகப்பரணி:8 390/1
நெய் கடல் பசை அற்றது எங்கு உண்டு இனி நெய்யே – தக்கயாகப்பரணி:8 392/2
நீர் இன்றியே செல் நெருப்பு உண்டு அறுத்தும் நெருப்பு இன்றியே நீரை நேரே குடித்தும் – தக்கயாகப்பரணி:8 553/1
புக்காள் முலை கண்களால் ஆவி உண்டு அ பொய் மாயனார் செய்தி போக புணர்த்தே – தக்கயாகப்பரணி:8 556/2
அரிது இன்று போர் என்று கோன் அஞ்ச அமிர்தோடும் அமிர்து உண்டு எழும் – தக்கயாகப்பரணி:8 558/1
சடை-கொல் வெம் மழு வாய்-கொல் உண்டு புனல் பெருந்தகை சாயவே – தக்கயாகப்பரணி:8 636/1
வையம் உண்டு தனி துஞ்சும் ஆலை வர மாயனார் விலக நாயனார் – தக்கயாகப்பரணி:8 646/1
ஐயம் உண்டு தருமம் பணித்தருளும் ஆதி ஆல் பொருது அழித்ததால் – தக்கயாகப்பரணி:8 646/2
நக்கர் அப்பு அடை சடாடவி புடையில் உண்டு அறுத்தது ஒரு நாகமே – தக்கயாகப்பரணி:8 649/2
பங்கு பெறுக இங்குதான் இது பண்டு மறையில் உண்டு பார்-மினே – தக்கயாகப்பரணி:8 701/2
பேதம் ஐந்து அமளியும் தெளியும் ஓதமும் உடன் பின்னும் மன் உயிரும் உண்டு உயிர் உயப்பெறுதுமே – தக்கயாகப்பரணி:8 723/2
முரசு உள முகுந்தன் மூங்கில் சார்ங்கம் உண்டு அவற்றின் மூட்டீர் – தக்கயாகப்பரணி:9 745/2

மேல்

உண்டும் (1)

இரண்டு போதும் உண்டும் உண்டிலாத போல் இருப்பவே – தக்கயாகப்பரணி:5 122/2

மேல்

உண்டே (1)

கைப்பிடி பெறும் பேயோடு கலந்து ஒரு கலத்தில் உண்டே – தக்கயாகப்பரணி:9 771/2

மேல்

உண்ண (1)

சீறிய சின தீ உண்ண திரிபுரம் எரித்த நாளில் – தக்கயாகப்பரணி:8 620/1

மேல்

உண்ணலாம் (1)

இழைத்த யாக விபாகம் முற்பட உண்ணலாம் என எண்ணியே – தக்கயாகப்பரணி:8 248/2

மேல்

உண்ணவோ (1)

விண் மருங்கு அமரர்-தம்முடன் பழகி வேள்வி ஆவுதி உண்ணவோ
புண் மருந்திட எண்ணியோ கடிது ஆயுள் வேதியர் போதவே – தக்கயாகப்பரணி:8 252/1,2

மேல்

உண்ணஉண்ண (1)

ஐந்து பூதமும் உண்ணஉண்ண அடும் கள்ளோடும் இடுங்களே – தக்கயாகப்பரணி:9 761/2

மேல்

உண்ணும் (1)

யாம் இனி உண்ணும் கூழிற்கு ஈரலை இட்டுவைத்து – தக்கயாகப்பரணி:9 744/1

மேல்

உண்ணோம் (2)

வையம் உண்ணோம் கடல் மடோம் மற்றும் புவனம் முற்றும் போய் – தக்கயாகப்பரணி:7 227/1
ஐயம் உண்ணோம் கடல் நஞ்சு குடியோம் உங்கள் அடியோமே – தக்கயாகப்பரணி:7 227/2

மேல்

உண்பதற்குமே (1)

விரைந்து இருந்து தின்பதற்கும் உண்பதற்குமே மிக – தக்கயாகப்பரணி:7 238/1

மேல்

உண்பது (1)

வேல் போல் நிறை பொருது உண்பது மெய்யே உயிர் பொய்யே – தக்கயாகப்பரணி:2 14/1

மேல்

உண்பர் (1)

அரனும் ஏனை இமையவரும் உண்பர் என அஞ்சி நஞ்சம் அமுதமும் உன் – தக்கயாகப்பரணி:2 28/1

மேல்

உண்பன (1)

யோகினி கணமும் பக்கத்து உண்பன ஊட்ட வாரீர் – தக்கயாகப்பரணி:9 753/2

மேல்

உண (1)

நெரிந்தன மாசு உண நெற்றியே – தக்கயாகப்பரணி:8 524/1

மேல்

உணர்த்தி (1)

ஆக நாயகி-தனக்கு உணர்த்தி வர அன்னை முன்னை முனிவு ஆறியே – தக்கயாகப்பரணி:10 779/2

மேல்

உணர்ந்தனள் (1)

ஒப்பு அரிய நாயகி உணர்ந்தனள் உணர்ந்தே – தக்கயாகப்பரணி:8 287/2

மேல்

உணர்ந்தே (1)

ஒப்பு அரிய நாயகி உணர்ந்தனள் உணர்ந்தே – தக்கயாகப்பரணி:8 287/2

மேல்

உணர்வு (1)

உருகும் சுரர் உயிர் உண்டன உணர்வு உண்டன ஒழுக – தக்கயாகப்பரணி:2 13/1

மேல்

உணரா (1)

உய்யா உணரா விழியா அருகே சரியா ஒரு கேசரி ஆசனம் மேல் – தக்கயாகப்பரணி:6 196/1

மேல்

உதக (1)

சேயோன் விடும்விடும் பகழி மாயன் உதக திருவுடம்பு புக மூழ்கி உருவ செருகவே – தக்கயாகப்பரணி:8 711/2

மேல்

உததி (1)

உலரும் முதுமரம் இளமையும் வளமையும் உயிரும் நிலைபெற ஒளிவிடும் இவர் உரு உறுதி அமுதினும் இவர் இவர் பிறவியும் உததி இவர்களில் ஒரு மகள் திருமகள் – தக்கயாகப்பரணி:2 38/1

மேல்

உதய (1)

உமது மலை என உயர் கயிலையை இகழ் உரிமை உடை வடவரை அரமகளிரை உலகு வெயில் கெட இளநிலவு எழ நகும் உதய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 43/2

மேல்

உதயமும் (1)

இருவர் உதயமும் இருள ஒளிவிடும் எனைய பலர் இரணியர் எனும் – தக்கயாகப்பரணி:6 165/1

மேல்

உதர (2)

உதர சோபிதா நாபி கமல வாயினால் மீள உமிழும் நீலி மேலாய உவண ஊர்தி ஊர்வாளே – தக்கயாகப்பரணி:4 110/2
இட்ட பேர் உதர தீ எரிவதே – தக்கயாகப்பரணி:8 570/2

மேல்

உதரத்து (1)

செயிர்த்து உதரத்து எரி சுரர் பொன் சிகை கதுவ சிரித்தே – தக்கயாகப்பரணி:8 476/1

மேல்

உதரமொடு (1)

உரிய பல அண்ட கோடி புகும் உதரமொடு அனந்த கோடி யுகம் – தக்கயாகப்பரணி:6 148/1

மேல்

உதவவே (1)

ஒக்க வந்து ஒரு வாளிக்கு உதவவே – தக்கயாகப்பரணி:8 614/2

மேல்

உதவியொடு (1)

உடைய கவிர் இதழ் உமிழ் நகை அமிழ்து உயிர் உதவும் உதவியொடு உவமை_இல் இளமையொடு உரக குல பதி வர அவனுடன் வரும் உரிமை அரிவையர் உயர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 39/2

மேல்

உதவும் (1)

உடைய கவிர் இதழ் உமிழ் நகை அமிழ்து உயிர் உதவும் உதவியொடு உவமை_இல் இளமையொடு உரக குல பதி வர அவனுடன் வரும் உரிமை அரிவையர் உயர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 39/2

மேல்

உதிர்த்து (1)

நாம ராசியை உதிர்த்து உரோணி-தன் – தக்கயாகப்பரணி:8 501/1

மேல்

உதிர்ந்தன (1)

பூமி கம்பமும் எதிர்ந்தன உதிர்ந்தன உடு பொரு புராரியும் முராரியும் உடன்ற பொழுதே – தக்கயாகப்பரணி:8 705/2

மேல்

உதிர்ந்து (1)

சதுமுகன் முடிந்த ஊழி ஒரு சருகு இலை உதிர்ந்து தூர் புனலின் – தக்கயாகப்பரணி:6 142/1

மேல்

உதிர்வன (1)

உதிர்வன எழிலியும் உடுவுமே – தக்கயாகப்பரணி:8 523/1

மேல்

உதிர (3)

உழுவை சிற்றுரிவை பச்சு உதிர பட்டினரே – தக்கயாகப்பரணி:3 97/2
ஈர் உடம்பும் மிசைந்து இரண்டு உதிர பரப்பும் இறைத்தனம் – தக்கயாகப்பரணி:7 231/2
பிலத்து உருவ பிளப்பு இடிய பிடித்து உதிர பிதிர்த்தே – தக்கயாகப்பரணி:8 479/2

மேல்

உதிரம் (1)

உலகில் பெரிய கபாலத்தே ஒருவர் உதிரம் ஏற்று ஊற்றி – தக்கயாகப்பரணி:7 224/1

மேல்

உதை (1)

உழைக்கும் பண்டை உதை நினைந்து உட்கியோ – தக்கயாகப்பரணி:8 677/1

மேல்

உதைக்கும் (1)

உதைக்கும் அ தலை எழுந்து குதை கவ்வியது வானுற்ற சந்த்ரனையும் ராகுவையும் ஒக்கும் எனவே – தக்கயாகப்பரணி:8 726/2

மேல்

உதைத்து (1)

உடு தொடை அற்று அழைத்து நிலத்து உழைப்ப உதைத்து உகைத்தே – தக்கயாகப்பரணி:8 484/2

மேல்

உந்தி (3)

உந்தி செம் தனி தாமரை நாள்_மலரூடு இருந்த குருசிலோடு ஓங்கவே – தக்கயாகப்பரணி:8 281/2
உந்தி போது இவ் வாவியின் ஊடே ஒரு மலரே – தக்கயாகப்பரணி:8 315/2
தம் தாமரை உந்தி புதல்வன் கொலையுண்ண தரியார் இவர் என்ன கரியார் எதிர்சென்றே – தக்கயாகப்பரணி:8 698/2

மேல்

உந்திய (1)

இரு விசும்பு தூர்ந்து அற உந்திய மோலியின் இடை கழிந்து கூம்பினது அண்ட கபாலமே – தக்கயாகப்பரணி:8 699/2

மேல்

உந்தியில் (1)

உந்தியில் முகுந்தன் முன் நாள் உயிர்த்த தாமரையும் ஈரைந்து – தக்கயாகப்பரணி:9 757/1

மேல்

உப்பு (1)

அ புளி தயிர் கடலின் உப்பு கடல் அடையவே – தக்கயாகப்பரணி:8 391/1

மேல்

உபாதிகள் (1)

சால தீயில் அரக்கர் உபாதிகள்
ஆல தீயில் அற வெந்து அவியவே – தக்கயாகப்பரணி:8 578/1,2

மேல்

உம்பர் (10)

உம்பர் ஆளும் அமராபுரம் தவிர லோகபாலர் எயில் காவல் கூர் – தக்கயாகப்பரணி:2 17/1
கரு நிறம் கொடு உருவு கொம்பு வெருவும் உம்பர் கழிவிடும் – தக்கயாகப்பரணி:5 132/1
உவரி பரு முத்தம் நிரைத்த திருப்பள்ளி சிவிகை புடை உம்பர் வர – தக்கயாகப்பரணி:6 181/1
விட்ட குல கிரிகள் எட்டும் உம்பர் திசை யானை எட்டும் விழ வீழவே – தக்கயாகப்பரணி:8 414/1
ஊழி ஏறு கடல் நீர் அண்டகோளகை உடைத்து உம்பர் நீரொடு கலந்தனையது ஒக்கும் உடனே – தக்கயாகப்பரணி:8 428/1
கிள்ளி சிறை பாரம் உகிரில் கிடப்ப கிளர்ந்து உம்பர் கோமானை மானம் கெடுத்தே – தக்கயாகப்பரணி:8 537/2
தீ வாய்-வயின் திண் பொருப்பு இட்டு உருக்கி செவ் வாய்-தொறும் கொண்டுகொண்டு உம்பர் சென்மார் – தக்கயாகப்பரணி:8 548/1
மேக வெள்ள நதி வெள்ளம் நூறுக என உம்பர் நாயகன் விளம்பினான் – தக்கயாகப்பரணி:8 652/1
உக்கு நின்றனர் உம்பர் உடம்பு தாம் – தக்கயாகப்பரணி:8 668/1
உய்யலாம் என உம்பர் பிதாமகன் – தக்கயாகப்பரணி:8 669/1

மேல்

உம்பர்கள் (1)

புரந்தரனார் படை வந்து படும்படும் உம்பர்கள் பூதமும் வேதாளங்களுமாயே புகுதவே – தக்கயாகப்பரணி:8 560/2

மேல்

உம்பர்கோன் (1)

பொற்பு ஊடற கற்பக காடு சாடி புகுந்து உம்பர்கோன் முன்பு பூதப்பிரான்மார் – தக்கயாகப்பரணி:8 538/1

மேல்

உம்பரும் (3)

அஞ்சல் என்று திருவாய்மலர்ந்து அயனும் அம்பரத்தவனும் உம்பரும்
எஞ்சல் இன்றி உடன் நின்று அவிந்தபடி எம் படைக்கு உரைசெய்க என்னவே – தக்கயாகப்பரணி:7 244/1,2
உம்பரும் ஏனையோரும் மலை மத்தில் இட்ட உரகம் பிடிக்கும் அமுத – தக்கயாகப்பரணி:8 441/1
உம்பரும் பெரும் படையும் இப்படி உடன்று நிற்க மற்றவரை ஊடறுத்து – தக்கயாகப்பரணி:8 473/1

மேல்

உம்பரை (1)

விட்ட ஊர்தி அனைத்தும் உம்பரை வீசி வந்தன விம்மவே – தக்கயாகப்பரணி:8 640/1

மேல்

உம்மது (1)

அம்ம்பாய் வருகிலீர் சிலை புகுந்து பிடியீர் அஃது போலும் இனி எம்மொடு உறும் உம்மது உறவே – தக்கயாகப்பரணி:8 709/2

மேல்

உமது (1)

உமது மலை என உயர் கயிலையை இகழ் உரிமை உடை வடவரை அரமகளிரை உலகு வெயில் கெட இளநிலவு எழ நகும் உதய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 43/2

மேல்

உமிழ் (3)

உடைய கவிர் இதழ் உமிழ் நகை அமிழ்து உயிர் உதவும் உதவியொடு உவமை_இல் இளமையொடு உரக குல பதி வர அவனுடன் வரும் உரிமை அரிவையர் உயர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 39/2
பொய் ஆயுத வாய் உமிழ் பொங்கு அழலால் – தக்கயாகப்பரணி:8 602/1
குமுத வாய் உமிழ் நஞ்சில் குளிப்பவே – தக்கயாகப்பரணி:8 664/2

மேல்

உமிழும் (1)

உதர சோபிதா நாபி கமல வாயினால் மீள உமிழும் நீலி மேலாய உவண ஊர்தி ஊர்வாளே – தக்கயாகப்பரணி:4 110/2

மேல்

உமை (1)

இயல் வாழ உமை வாழ்வது ஒரு பாகர் இரு தாளின் இசை பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 1/2

மேல்

உய்ந்து (3)

ஊத்தை தலை நீத்து உய்ந்து ஒழிந்த ஒரு மாமடிகள் ஒரு முருட்டு – தக்கயாகப்பரணி:2 47/1
கார் வந்து தொடத்தொட உய்ந்து இளகும் காடு ஒத்தனென் யான் இவர் கைப்படவே – தக்கயாகப்பரணி:6 200/2
திருடன் இந்திரன் உய்ந்து திரியுமோ – தக்கயாகப்பரணி:8 612/1

மேல்

உய்ந்தேன் (1)

ஒரு நீ ஒரு மாணி இடும் பொடியால் உய்ந்தேன் உயிர் என்பது உரைத்தனையேல் – தக்கயாகப்பரணி:6 201/1

மேல்

உய்ய (2)

கழுமலம் உய்ய விரவு கலியுக எல்லை பொருத கதைகளில் உள்ளது அமணர் கழு மிசை கொள்வது இதுவே – தக்கயாகப்பரணி:6 170/2
அன்று வானவர் உய்ய ஐயர் மிடற்று அடக்கிய ஆலமே – தக்கயாகப்பரணி:8 333/1

மேல்

உய்யலாம் (1)

உய்யலாம் என உம்பர் பிதாமகன் – தக்கயாகப்பரணி:8 669/1

மேல்

உய்யா (1)

உய்யா உணரா விழியா அருகே சரியா ஒரு கேசரி ஆசனம் மேல் – தக்கயாகப்பரணி:6 196/1

மேல்

உய்வது (1)

மன் காதலில் உய்வது இவ் வையம் எலாம் மலையாள் முலை ஆரமுது உண்டவனே – தக்கயாகப்பரணி:6 186/1

மேல்

உயப்பெறுதுமே (1)

பேதம் ஐந்து அமளியும் தெளியும் ஓதமும் உடன் பின்னும் மன் உயிரும் உண்டு உயிர் உயப்பெறுதுமே – தக்கயாகப்பரணி:8 723/2

மேல்

உயர் (4)

செங்கோல் வர வருவீர் உயர் செம்பொன் கடை திற-மின் – தக்கயாகப்பரணி:2 15/2
உடைய கவிர் இதழ் உமிழ் நகை அமிழ்து உயிர் உதவும் உதவியொடு உவமை_இல் இளமையொடு உரக குல பதி வர அவனுடன் வரும் உரிமை அரிவையர் உயர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 39/2
உமது மலை என உயர் கயிலையை இகழ் உரிமை உடை வடவரை அரமகளிரை உலகு வெயில் கெட இளநிலவு எழ நகும் உதய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 43/2
சலத்தினும் கனகலத்தினும் புடை அடங்கி நின்றது உயர் தானையே – தக்கயாகப்பரணி:8 427/2

மேல்

உயர்த்தது (1)

உயர்த்தது ஓர் வெள்ளி அண்ட கபாலம் ஒத்து ஒரு தனி கொற்ற வெண்குடை ஓங்கவே – தக்கயாகப்பரணி:8 283/2

மேல்

உயரும் (1)

மிசை அகன்று உயரும் நகில் மருங்குல் குடி அடி பறிந்தது அழவிடும் என – தக்கயாகப்பரணி:2 29/1

மேல்

உயிர் (19)

உருகும் சுரர் உயிர் உண்டன உணர்வு உண்டன ஒழுக – தக்கயாகப்பரணி:2 13/1
வேல் போல் நிறை பொருது உண்பது மெய்யே உயிர் பொய்யே – தக்கயாகப்பரணி:2 14/1
உருகுவார் உயிர் படு படா முலை உழறுமேல் உலகு இறும் என – தக்கயாகப்பரணி:2 32/1
உடைய கவிர் இதழ் உமிழ் நகை அமிழ்து உயிர் உதவும் உதவியொடு உவமை_இல் இளமையொடு உரக குல பதி வர அவனுடன் வரும் உரிமை அரிவையர் உயர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 39/2
புரக்கும் அற்புதத்து உயிர் கிழத்தி புக்குழி தமக்கு – தக்கயாகப்பரணி:5 130/1
பிள்ளை கொண்ட சினத்தொடு அ கனல் சென்று தென்னர்பிரான் உயிர்
கொள்ளைகொண்டு உடலம் கிளர்ந்து கொதிப்ப வந்து கொளுந்தவே – தக்கயாகப்பரணி:6 174/1,2
ஒரு நீ ஒரு மாணி இடும் பொடியால் உய்ந்தேன் உயிர் என்பது உரைத்தனையேல் – தக்கயாகப்பரணி:6 201/1
சென்று வானவர் உயிர் கொள திருவுள்ளம்வைத்தமை தெரியவே – தக்கயாகப்பரணி:8 333/2
தடவி முற்றும் உயிர் தொலைச்சி வயிறு வேட்கை தணியவே – தக்கயாகப்பரணி:8 385/2
உயிர் பெரும் பசி தீர்ந்த-கொல் இல்லை-கொல் உண்டு வெண் – தக்கயாகப்பரணி:8 390/1
சொல் பல சொல்லி என்-கொல் உயிர் வீசு பாசம் விடு காலன் யாவர் துணையே – தக்கயாகப்பரணி:8 444/1
கரியை தொகுத்து உழுவை கஞல பெருக்கி உயிர் கவர் யாளியோடு – தக்கயாகப்பரணி:8 465/1
இறகு தீய உயிர் தீய வீயும் அதன் வெற்றுடம்பு உலகின் எல்லையில் – தக்கயாகப்பரணி:8 648/1
ஏற்று கோட்டின் உயிர் கழுவேற்றவே – தக்கயாகப்பரணி:8 667/2
நிருதி ஊற்றம் இழந்து உயிர் நீங்கவே – தக்கயாகப்பரணி:8 685/2
பத்து தலையோடும் பதின்மர்க்கும் தத்தம் பறியா உயிர் போக பதுமத்து இறைவற்கும் – தக்கயாகப்பரணி:8 697/1
செந்தாமரையோனை கிளையோடு உயிர் வவ்வி திருமால் வருக என்று எம் பெருமான் அறைகூவ – தக்கயாகப்பரணி:8 698/1
பேதம் ஐந்து அமளியும் தெளியும் ஓதமும் உடன் பின்னும் மன் உயிரும் உண்டு உயிர் உயப்பெறுதுமே – தக்கயாகப்பரணி:8 723/2
விசும்பினும் நிலத்தும் உள்ள உயிர் பண்டு விழுங்கி இன்று – தக்கயாகப்பரணி:10 784/1

மேல்

உயிர்த்த (1)

உந்தியில் முகுந்தன் முன் நாள் உயிர்த்த தாமரையும் ஈரைந்து – தக்கயாகப்பரணி:9 757/1

மேல்

உயிர்த்தது (1)

பிறகு தீ என எழுந்து வீழ்ந்திட உயிர்த்தது ஐயர் விடு பெற்றமே – தக்கயாகப்பரணி:8 648/2

மேல்

உயிர்ப்ப (1)

விடு புகை உயிராது ஏங்கி வெம் கனல் உயிர்ப்ப என்றும் – தக்கயாகப்பரணி:10 783/1

மேல்

உயிர்ப்பது (1)

காற்றை ஏவ உயிர்ப்பது ஒர் கட்செவி – தக்கயாகப்பரணி:8 661/1

மேல்

உயிர்ப்பில் (1)

உயிர்ப்பில் இணை குருக்களை இட்டு உருக்கி நகத்து உரைத்தே – தக்கயாகப்பரணி:8 476/2

மேல்

உயிர்ப்பு (2)

பைத்த பூணும் உயிர்ப்பு அழன்றன பண்டை உண்டியும் அவ்வழி – தக்கயாகப்பரணி:8 330/1
உயிர்ப்பு அவர்க்கு நாம் என்பதை உள்ளியோ – தக்கயாகப்பரணி:8 674/1

மேல்

உயிர்விடார் (1)

தலை அரிந்து விடுவார் உயிர்விடார் தலைவி முன் – தக்கயாகப்பரணி:3 91/1

மேல்

உயிராது (1)

விடு புகை உயிராது ஏங்கி வெம் கனல் உயிர்ப்ப என்றும் – தக்கயாகப்பரணி:10 783/1

மேல்

உயிரும் (3)

உலரும் முதுமரம் இளமையும் வளமையும் உயிரும் நிலைபெற ஒளிவிடும் இவர் உரு உறுதி அமுதினும் இவர் இவர் பிறவியும் உததி இவர்களில் ஒரு மகள் திருமகள் – தக்கயாகப்பரணி:2 38/1
பேதம் ஐந்து அமளியும் தெளியும் ஓதமும் உடன் பின்னும் மன் உயிரும் உண்டு உயிர் உயப்பெறுதுமே – தக்கயாகப்பரணி:8 723/2
ஒழிந்த வானவர்கட்கு எல்லாம் உயிரும் தம் உடம்பும் நல்கி – தக்கயாகப்பரணி:10 798/1

மேல்

உரக (5)

உரக கங்கணம் தருவன பண மணி உலகு அடங்கலும் துயில் எழ வெயில் எழ உடை தவிர்ந்த தன் திரு அரை உடை மணி உலவி ஒன்றோடொன்று அலமர விலகிய – தக்கயாகப்பரணி:1/1
உடைய கவிர் இதழ் உமிழ் நகை அமிழ்து உயிர் உதவும் உதவியொடு உவமை_இல் இளமையொடு உரக குல பதி வர அவனுடன் வரும் உரிமை அரிவையர் உயர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 39/2
உகு நச்சு தலை நெட்டு எட்டு உரக கச்சினரே – தக்கயாகப்பரணி:3 99/1
தடிந்த துரக குலங்கள் உரக பிலங்கள் வயிறு தழங்குமா – தக்கயாகப்பரணி:6 162/1
கதித்து உரக கழுத்தின் முடி கவர்ப்பு அடைய கழித்தே – தக்கயாகப்பரணி:8 478/2

மேல்

உரகம் (1)

உம்பரும் ஏனையோரும் மலை மத்தில் இட்ட உரகம் பிடிக்கும் அமுத – தக்கயாகப்பரணி:8 441/1

மேல்

உரகர் (3)

பார் கிழித்து உரகர் பூமி பற்றியே – தக்கயாகப்பரணி:8 361/2
கடித்து மென்று உரகர் நஞ்சு கருதியோ – தக்கயாகப்பரணி:8 363/1
விழும் விழும் சிலாதல நிலம் பகிர்ந்து உரகர் விடர் நடுவு வீழவே – தக்கயாகப்பரணி:8 416/1

மேல்

உரகன் (1)

மறி கடல் வைய மகளும் மலர் கெழு செய்ய திருவும் வர இரும் மெல்ல உரகன் மணி அணி பள்ளி அருகே – தக்கயாகப்பரணி:6 168/2

மேல்

உரகேசரை (1)

யூத நாயகரோடு உரகேசரை
வேதநாயகி தோகை விழுங்கவே – தக்கயாகப்பரணி:8 609/1,2

மேல்

உரத்து (2)

அரக்கர் உரத்து அரத்தம் மடுத்து அழுக்கை எயிற்று அரைத்தே – தக்கயாகப்பரணி:8 480/1
தம் தடி தின்றனர் தம் தலை மூளை விழுங்கினர் தத்தம் உரத்து உகுமாறு தடுத்து மடுத்தனர் – தக்கயாகப்பரணி:8 561/1

மேல்

உரம் (2)

ஒருவர் உரம் இரு பிளவுபட நடும் உகிரி தனது ஒரு திகிரியே – தக்கயாகப்பரணி:6 165/2
பொங்கு அலங்கல் வருணன் உரம் புக பொருப்பு மத்தம் திரித்த பொழுது எழும் – தக்கயாகப்பரணி:8 277/1

மேல்

உரல்களாக (1)

பெரு முடி உரல்களாக பிறங்கிய அரிசி பெய்யீர் – தக்கயாகப்பரணி:9 734/2

மேல்

உரி (1)

பொங்க களிற்று ஈர் உரி போர்வை கொண்டும் புலித்தோல் உடுத்தும் படுத்தும் புயத்தே – தக்கயாகப்பரணி:8 551/1

மேல்

உரித்து (1)

உரித்து அமைத்த சட்டை மெய் தயங்கவே – தக்கயாகப்பரணி:8 368/2

மேல்

உரிப்பர் (1)

எட்ட நிற்கின் உரிப்பர் என்று எண்ணியோ – தக்கயாகப்பரணி:8 681/1

மேல்

உரிமை (2)

உடைய கவிர் இதழ் உமிழ் நகை அமிழ்து உயிர் உதவும் உதவியொடு உவமை_இல் இளமையொடு உரக குல பதி வர அவனுடன் வரும் உரிமை அரிவையர் உயர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 39/2
உமது மலை என உயர் கயிலையை இகழ் உரிமை உடை வடவரை அரமகளிரை உலகு வெயில் கெட இளநிலவு எழ நகும் உதய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 43/2

மேல்

உரிய (2)

உரிய பல அண்ட கோடி புகும் உதரமொடு அனந்த கோடி யுகம் – தக்கயாகப்பரணி:6 148/1
கரங்களால் ரவிகள் யாவரும் பெரிய கால்களால் உரிய கங்கையும் – தக்கயாகப்பரணி:8 417/1

மேல்

உரியவானை (1)

தாங்குகைக்கு உரியவானை தட வரை அருவி சோரி – தக்கயாகப்பரணி:9 739/1

மேல்

உரிவை (1)

கட நாகத்து ஈர் உரிவை அரன் விரிப்ப கடல் திவலை – தக்கயாகப்பரணி:6 149/1

மேல்

உரு (7)

உலரும் முதுமரம் இளமையும் வளமையும் உயிரும் நிலைபெற ஒளிவிடும் இவர் உரு உறுதி அமுதினும் இவர் இவர் பிறவியும் உததி இவர்களில் ஒரு மகள் திருமகள் – தக்கயாகப்பரணி:2 38/1
அடைய மோகினிகள் ஆயினர்-கொல் அவ் உரு நினைந்து – தக்கயாகப்பரணி:3 87/1
ஓடும் நான்கு பரூஉ தாள் உடையன உரு தனித்தனி பாற்கடல் ஒப்பன – தக்கயாகப்பரணி:8 274/1
வயங்கும் ஈர் உரு வண்ண கலுழன் மேல் வளரும் பாற்கடல் பாழ்பட வந்தனன் – தக்கயாகப்பரணி:8 286/1
உரு கொள் நீள் குரல் காளம் ஊதவே – தக்கயாகப்பரணி:8 343/2
அம்பு இரண்டு எயிறும் இன்றி வெறும் ஓர் எயிறு கொண்டு அடைய வெட்டுதலும் ஆதி உரு எய்தி அரியே – தக்கயாகப்பரணி:8 716/2
அ பெரும் புனலில் இவ் அரி வராக உரு விட்டு ஆமையாய் உலகு அளந்த வடிவு ஆயதுவும் விட்டு – தக்கயாகப்பரணி:8 722/1

மேல்

உருக்கவே (1)

உடைய வெங்கதிர் தம்மை உருக்கவே – தக்கயாகப்பரணி:8 579/2

மேல்

உருக்கி (3)

முகடு விண்ட பழ அண்ட கோளமும் முன்னை மேருவும் இட்டு உருக்கி பெரும் – தக்கயாகப்பரணி:8 276/1
உயிர்ப்பில் இணை குருக்களை இட்டு உருக்கி நகத்து உரைத்தே – தக்கயாகப்பரணி:8 476/2
தீ வாய்-வயின் திண் பொருப்பு இட்டு உருக்கி செவ் வாய்-தொறும் கொண்டுகொண்டு உம்பர் சென்மார் – தக்கயாகப்பரணி:8 548/1

மேல்

உருக்குண்ண (2)

புடைக்காலம் மற்று ஒத்து உருக்குண்ண ஏழ் பொன் பொருப்பும் கனல் கண் கடை சுட்ட பூதம் – தக்கயாகப்பரணி:8 542/1
மேல் ஆழியார் வெள்ளி வேதண்ட லோகம் விழிக்கே உருக்குண்ண வெள்ளம் செய் பூதம் – தக்கயாகப்பரணி:8 545/1

மேல்

உருக்கும் (2)

உருக்கும் எரி பிழப்பு ஒளி புக்குழி புகவிட்டு உளைத்தே – தக்கயாகப்பரணி:8 474/2
கடைக்காலம் எக்குன்றமும் சுட்டு உருக்கும் கடும் கோள்கள் ஈராறு நாண கலித்தே – தக்கயாகப்பரணி:8 542/2

மேல்

உருக்குவன (1)

இடி இட்டு வெட்டுவன எரியிட்டு உருக்குவன இன மேகமே – தக்கயாகப்பரணி:8 464/2

மேல்

உருக (4)

நிணம் கரைந்து உருக நெய்யை நீர் என நினைத்து நாவினை நனைக்குமே – தக்கயாகப்பரணி:3 50/2
இறுதியின் எரிந்து பார் உருக எழு கனல் கரிந்துபோய் அவிய – தக்கயாகப்பரணி:6 143/1
உலக கவிப்பு அடைய உருக கடை கனலும் உடன் ஏறவே – தக்கயாகப்பரணி:8 457/2
உருக வெந்தன தாரகா லோகமே – தக்கயாகப்பரணி:8 589/2

மேல்

உருகா (2)

ஊரும் பகல் தேரை முட்டுவன கட்டுவன உருகா கொழுந்து முகை கருகா செழும் துணரே – தக்கயாகப்பரணி:3 76/2
நீர் வந்து தொடத்தொட வெந்து உருகா நெடு வேனில் சுடச்சுட நின்று உலறி – தக்கயாகப்பரணி:6 200/1

மேல்

உருகு (1)

ஒழியும் ஓரொரோர் கூறும் ஒருவர் ஆகி நேர் ஆகி உடைய கேள்வர் ஓர் பாதி உருகு காதல் கூர் வாளே – தக்கயாகப்பரணி:4 109/2

மேல்

உருகும் (2)

உருகும் சுரர் உயிர் உண்டன உணர்வு உண்டன ஒழுக – தக்கயாகப்பரணி:2 13/1
ஓல கடல் நெருப்பின் உலகு ஏழும் உருகும்
கால கடையினும் கொடிய கண் கடைகளே – தக்கயாகப்பரணி:3 81/1,2

மேல்

உருகுவார் (1)

உருகுவார் உயிர் படு படா முலை உழறுமேல் உலகு இறும் என – தக்கயாகப்பரணி:2 32/1

மேல்

உருத்திரரை (1)

பகட்டின் ஒடித்து உருத்திரரை திருக்கை முடப்படுத்தே – தக்கயாகப்பரணி:8 483/2

மேல்

உருத்து (1)

செருவிற்கு உருத்து எதிர்வர் சில முத்து எருத்தர் பதினொரு தேவரே – தக்கயாகப்பரணி:8 461/2

மேல்

உருப்பு (1)

அழித்த மதி கதிர் குளிர் இட்டு அருக்கர் உருப்பு அவித்தே – தக்கயாகப்பரணி:8 482/1

மேல்

உரும் (1)

வான் ஏறு உரும் எனது ஆயுதம் அவன் ஆயுதம் மழுவாள் – தக்கயாகப்பரணி:8 453/1

மேல்

உருமு (2)

கால இறுதி எரி போல முகில் வயிறு காய வரும் உருமு கக்குமே – தக்கயாகப்பரணி:3 57/2
பார் முகக்கும் உருமு கழு நிரைத்த படையார் பல முக குமுத வாய் இறைவி பைரவர்களே – தக்கயாகப்பரணி:8 429/2

மேல்

உருமேறு (2)

ஏறும் மேகத்து உருமேறு எறியவே – தக்கயாகப்பரணி:8 682/2
இஞ்சியின் வல் உருமேறு கிடந்த – தக்கயாகப்பரணி:11 800/1

மேல்

உருமொடு (1)

மேகம் உருமொடு அற வெற்பும் இறகொடு அற மேலை எயிறு கொடு வெட்டுமே – தக்கயாகப்பரணி:3 56/2

மேல்

உருவ (4)

பாராய் வழுதீ இது பார் உருவ திரு விக்ரமம் இன்று படும்படியே – தக்கயாகப்பரணி:6 215/2
திறத்து அவுண கணத்து உருவ செறித்து உகிரை பறித்தே – தக்கயாகப்பரணி:8 477/1
பிலத்து உருவ பிளப்பு இடிய பிடித்து உதிர பிதிர்த்தே – தக்கயாகப்பரணி:8 479/2
சேயோன் விடும்விடும் பகழி மாயன் உதக திருவுடம்பு புக மூழ்கி உருவ செருகவே – தக்கயாகப்பரணி:8 711/2

மேல்

உருவத்தில் (1)

பண்டு நீர் அமுது அருத்தும் உருவத்தில் இவையே பஞ்ச ஆயுதமும் அல்லது இவை என்ன படையே – தக்கயாகப்பரணி:8 713/2

மேல்

உருவி (1)

ஓமகூட கிரி நின்று எடுத்து எறிய அண்டகூடம் உருவி புறத்து – தக்கயாகப்பரணி:8 419/1

மேல்

உருவு (2)

காடு படு சடையூடும் உருவு கரந்து வருவது கங்கையே – தக்கயாகப்பரணி:3 61/2
கரு நிறம் கொடு உருவு கொம்பு வெருவும் உம்பர் கழிவிடும் – தக்கயாகப்பரணி:5 132/1

மேல்

உருவுமே (1)

உடுத்த நேமிகிரி நெரிய ஒருவர் நகம் உருவுமே உலகு வெருவுமே – தக்கயாகப்பரணி:8 422/1

மேல்

உரைசெய்க (1)

எஞ்சல் இன்றி உடன் நின்று அவிந்தபடி எம் படைக்கு உரைசெய்க என்னவே – தக்கயாகப்பரணி:7 244/2

மேல்

உரைத்ததோ (1)

உரைத்ததோ அதுவும் இல்லையோ திரிய யாகசாலை புக ஓடவே – தக்கயாகப்பரணி:7 242/2

மேல்

உரைத்தனையேல் (1)

ஒரு நீ ஒரு மாணி இடும் பொடியால் உய்ந்தேன் உயிர் என்பது உரைத்தனையேல்
வரும் நீரினும் இட்டு நெருப்பினும் இட்டு அறிவோம் இரு மந்த்ரமும் யந்த்ரமுமே – தக்கயாகப்பரணி:6 201/1,2

மேல்

உரைத்தாம் (1)

எல்லை நான்மறை பரவும் இறைமகளை சிறிது உரைத்தாம்
தொல்லை நாயகியுடைய பேய் கணங்கள் சொல்லுவாம் – தக்கயாகப்பரணி:5 120/1,2

மேல்

உரைத்து (1)

இவ்வாறு உரைத்து இங்கு நின்றும் – தக்கயாகப்பரணி:8 305/1

மேல்

உரைத்துமே (1)

ஒப்பு அரும் கடவுள் ஆலம் உண்டு அதனை உள்ளவா சிறிது உரைத்துமே – தக்கயாகப்பரணி:6 139/2

மேல்

உரைத்தே (1)

உயிர்ப்பில் இணை குருக்களை இட்டு உருக்கி நகத்து உரைத்தே – தக்கயாகப்பரணி:8 476/2

மேல்

உரையாய் (1)

உரையாய் உறுமோ நின் ஊணே – தக்கயாகப்பரணி:8 302/2

மேல்

உரோணி-தன் (1)

நாம ராசியை உதிர்த்து உரோணி-தன்
சோம ராசி அளகம் சுலாவியே – தக்கயாகப்பரணி:8 501/1,2

மேல்

உலக்கை (1)

அடுத்த குல பொருப்பை இருப்பு உலக்கை பிடித்து அடித்தே – தக்கயாகப்பரணி:8 492/1

மேல்

உலக (1)

உலக கவிப்பு அடைய உருக கடை கனலும் உடன் ஏறவே – தக்கயாகப்பரணி:8 457/2

மேல்

உலகங்கள் (3)

தங்கு மலை சிலை கொண்ட பொழுது உலகங்கள் தகைவது தண்டமே – தக்கயாகப்பரணி:6 161/2
பருதி பட பரந்து புகை கண் கடப்ப உலகங்கள் மூடு பகு வாய் – தக்கயாகப்பரணி:8 442/1
பதினொரு தேவர் ஏறு பதினொன்றும் ஏறின் உலகங்கள் யாவர் பரமே – தக்கயாகப்பரணி:8 443/2

மேல்

உலகங்களும் (1)

பால் நின்ற சராசரம் ஆர்த்தனவே பதினால் உலகங்களும் ஆர்த்தனவே – தக்கயாகப்பரணி:6 214/2

மேல்

உலகம் (2)

செய்யவாய் உலகம் உறவு கோள் அழிய நறவு கொள் மகளிர் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 24/2
மேல் நிற்பன உலகம் பொதி வெள்ளம் பொதி கள்ள – தக்கயாகப்பரணி:8 310/1

மேல்

உலகமும் (2)

சென்றுசென்று பதினால் உலகமும் புக விழ செய்ய வாயும் மிடறும் புரை அற செருகவே – தக்கயாகப்பரணி:8 718/2
கால் பரிந்து இளகவும் கடல் சுரந்து ஒழுகவும் கடவுள் யாறு பதினால் உலகமும் கவ்வவே – தக்கயாகப்பரணி:8 721/2

மேல்

உலகில் (2)

உலகில் பெரிய கபாலத்தே ஒருவர் உதிரம் ஏற்று ஊற்றி – தக்கயாகப்பரணி:7 224/1
தேர் தேர் என்ன வரும் பேய் தேர் தேவர் உலகில் திரியுமால் – தக்கயாகப்பரணி:8 563/2

மேல்

உலகின் (2)

அன்னையை முனிந்து உலகின் அன்னை அருள்செய்வாள் – தக்கயாகப்பரணி:8 294/2
இறகு தீய உயிர் தீய வீயும் அதன் வெற்றுடம்பு உலகின் எல்லையில் – தக்கயாகப்பரணி:8 648/1

மேல்

உலகு (22)

உரக கங்கணம் தருவன பண மணி உலகு அடங்கலும் துயில் எழ வெயில் எழ உடை தவிர்ந்த தன் திரு அரை உடை மணி உலவி ஒன்றோடொன்று அலமர விலகிய – தக்கயாகப்பரணி:1/1
மத கோடி உலகு ஏழும் மணம் நாற வரும் யானை வலி பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 3/2
கலக மாரன் வெறும் ஒருவனால் உலகு களவுபோக இரு காலமும் – தக்கயாகப்பரணி:2 25/1
உலகு அபாடம் மனு என உலாவுவன ஒழுகு நீள் நயனம் உடைய நீர் – தக்கயாகப்பரணி:2 27/1
உருகுவார் உயிர் படு படா முலை உழறுமேல் உலகு இறும் என – தக்கயாகப்பரணி:2 32/1
உமது மலை என உயர் கயிலையை இகழ் உரிமை உடை வடவரை அரமகளிரை உலகு வெயில் கெட இளநிலவு எழ நகும் உதய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 43/2
ஓல கடல் நெருப்பின் உலகு ஏழும் உருகும் – தக்கயாகப்பரணி:3 81/1
திசை பெறாது தடியாத பாரிடமும் உடையள் உலகு உடைய செல்வியே – தக்கயாகப்பரணி:5 135/2
மலரோன் உலகு அடைய புடைபெயர் கார்களின் வைப்பே – தக்கயாகப்பரணி:8 312/2
அ கரத்து உலகு உடைக்கினும் உடைக்கும் இதில் ஓர் அலகையே என விரிஞ்சன் அலம்வந்து அலறவே – தக்கயாகப்பரணி:8 398/2
படம் பெறா மணி விசும்பு இழந்து உலகு பகல் பெறா பவனம் அடைய ஓர் – தக்கயாகப்பரணி:8 412/1
உடுத்த நேமிகிரி நெரிய ஒருவர் நகம் உருவுமே உலகு வெருவுமே – தக்கயாகப்பரணி:8 422/1
எங்ஙனே இறைவர் உலகு பொதி வடிவம் எவ்வுடம்பினும் அடங்குமாறு – தக்கயாகப்பரணி:8 425/1
தொழில் மிக்க செக்கர் எரி சுடர் இட்டு எரித்து உலகு சுடுவார்கள் போல் – தக்கயாகப்பரணி:8 459/1
உலகு வகுப்பார் உலகு தொகுப்பார் உலகு படைப்பார் உலகு துடைப்பார் – தக்கயாகப்பரணி:8 596/1

எங்கும் உலகு நுங்கு தீ என இன்று கனல நின்ற நீர் ஒரு – தக்கயாகப்பரணி:8 701/1
அ பெரும் புனலில் இவ் அரி வராக உரு விட்டு ஆமையாய் உலகு அளந்த வடிவு ஆயதுவும் விட்டு – தக்கயாகப்பரணி:8 722/1
இது பகு வாய்த்து வயிற்றினில் இ பேர் உலகு விழங்கு பேய் – தக்கயாகப்பரணி:9 769/1
வருத்தம் தவிர்த்து உலகு ஆண்ட பிரான் மைந்தற்குமைந்தனை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 776/2

மேல்

உலகுக்கும் (1)

தாதை முகம்கொடாது விடுவான் நமக்கும் உலகுக்கும் என்-கொல் தவறே – தக்கயாகப்பரணி:8 436/2

மேல்

உலகும் (2)

உலகும் ஊழியும் கொண்டு அமைந்தது ஓர் – தக்கயாகப்பரணி:8 337/1
கடல் குடித்து அவனி தின்று உலகும் அண்டமும் எழ கதுவும் ஊழி முடிவின் கனல் என கடுகவே – தக்கயாகப்பரணி:8 400/2

மேல்

உலகுமே (1)

ஊர் அடங்கியன பின்னும் எழுகின்ற அனிகத்துள் அடங்கியன உள்ள பதினால் உலகுமே – தக்கயாகப்பரணி:8 407/2

மேல்

உலகை (1)

வாளி ஏவி உலகை வளைப்பவே – தக்கயாகப்பரணி:8 613/2

மேல்

உலகையும் (1)

பொரும் அம்பு சிலை கொள்வதில்லை இவ் உலகையும் பொரு பினாகத்தையும் ஒரு பெரும் பன்றியாய் – தக்கயாகப்பரணி:8 715/1

மேல்

உலர் (1)

உலர் எலும்பொடு ஒசி நரம்பின் உடலில் நின்ற குடலை போன்று – தக்கயாகப்பரணி:5 127/1

மேல்

உலரும் (1)

உலரும் முதுமரம் இளமையும் வளமையும் உயிரும் நிலைபெற ஒளிவிடும் இவர் உரு உறுதி அமுதினும் இவர் இவர் பிறவியும் உததி இவர்களில் ஒரு மகள் திருமகள் – தக்கயாகப்பரணி:2 38/1

மேல்

உலவி (1)

உரக கங்கணம் தருவன பண மணி உலகு அடங்கலும் துயில் எழ வெயில் எழ உடை தவிர்ந்த தன் திரு அரை உடை மணி உலவி ஒன்றோடொன்று அலமர விலகிய – தக்கயாகப்பரணி:1/1

மேல்

உலறி (1)

நீர் வந்து தொடத்தொட வெந்து உருகா நெடு வேனில் சுடச்சுட நின்று உலறி
கார் வந்து தொடத்தொட உய்ந்து இளகும் காடு ஒத்தனென் யான் இவர் கைப்படவே – தக்கயாகப்பரணி:6 200/1,2

மேல்

உலாம் (1)

பொன் வெள்ளி எஃகு என்ன வானத்து உலாம் முப்புரம் சுட்ட வீரர்க்கு மேலே பொலிந்தே – தக்கயாகப்பரணி:8 550/2

மேல்

உலாவருவதே (1)

நேரியர்கள் திகிரியும் திகிரியோ அவை-தொறும் நிலா வர உலாவருவதே – தக்கயாகப்பரணி:3 78/2

மேல்

உலாவுவன (1)

உலகு அபாடம் மனு என உலாவுவன ஒழுகு நீள் நயனம் உடைய நீர் – தக்கயாகப்பரணி:2 27/1

மேல்

உலைகள் (1)

இருந்து அலை உலைகள் எல்லாம் பொங்கின துங்க யானை – தக்கயாகப்பரணி:9 747/1

மேல்

உவண (2)

உதர சோபிதா நாபி கமல வாயினால் மீள உமிழும் நீலி மேலாய உவண ஊர்தி ஊர்வாளே – தக்கயாகப்பரணி:4 110/2
கொதித்து உவண கொழுப்பு அரி பொன் கொடி குமுற குமைத்தே – தக்கயாகப்பரணி:8 478/1

மேல்

உவணத்து (1)

ஆழியான் ஏறுவதும் அதன் உவணத்து உவணமே – தக்கயாகப்பரணி:6 150/2

மேல்

உவணமே (2)

ஆழியான் ஏறுவதும் அதன் உவணத்து உவணமே – தக்கயாகப்பரணி:6 150/2
ஊழி மாருதம் இரண்டு பாடும் வர ஊடு சென்றது அவன் உவணமே – தக்கயாகப்பரணி:8 647/2

மேல்

உவந்து (2)

பிண பறை குரல் உவந்து வந்து சில பேய் துணங்கை இடு-தொறும் இடும் – தக்கயாகப்பரணி:3 53/1
ஊழி தீ உவந்து ஆடுவது ஓர்ந்ததோ – தக்கயாகப்பரணி:8 673/1

மேல்

உவப்பன (1)

கவனம் உவப்பன கரிய வனப்பின – தக்கயாகப்பரணி:8 264/1

மேல்

உவமை (1)

உடைய கவிர் இதழ் உமிழ் நகை அமிழ்து உயிர் உதவும் உதவியொடு உவமை_இல் இளமையொடு உரக குல பதி வர அவனுடன் வரும் உரிமை அரிவையர் உயர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 39/2

மேல்

உவமை_இல் (1)

உடைய கவிர் இதழ் உமிழ் நகை அமிழ்து உயிர் உதவும் உதவியொடு உவமை_இல் இளமையொடு உரக குல பதி வர அவனுடன் வரும் உரிமை அரிவையர் உயர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 39/2

மேல்

உவரி (1)

உவரி பரு முத்தம் நிரைத்த திருப்பள்ளி சிவிகை புடை உம்பர் வர – தக்கயாகப்பரணி:6 181/1

மேல்

உழந்த (1)

இரைத்த கூர் பசி உழந்த பேய்கள் இனி என் பின் வாரும் என முன்பு சென்று – தக்கயாகப்பரணி:7 242/1

மேல்

உழப்பது (1)

கருத்து பேய் ஏற ஏறும் கழி பசி உழப்பது ஓர் முத்து – தக்கயாகப்பரணி:10 789/1

மேல்

உழல் (1)

ஒரு தோகை மிசை ஏறி உழல் சூரும் மலை மார்பும் உடன் ஊடுற – தக்கயாகப்பரணி:1 5/1

மேல்

உழறுமேல் (1)

உருகுவார் உயிர் படு படா முலை உழறுமேல் உலகு இறும் என – தக்கயாகப்பரணி:2 32/1

மேல்

உழுவை (2)

உழுவை சிற்றுரிவை பச்சு உதிர பட்டினரே – தக்கயாகப்பரணி:3 97/2
கரியை தொகுத்து உழுவை கஞல பெருக்கி உயிர் கவர் யாளியோடு – தக்கயாகப்பரணி:8 465/1

மேல்

உழைக்கும் (1)

உழைக்கும் பண்டை உதை நினைந்து உட்கியோ – தக்கயாகப்பரணி:8 677/1

மேல்

உழைப்ப (1)

உடு தொடை அற்று அழைத்து நிலத்து உழைப்ப உதைத்து உகைத்தே – தக்கயாகப்பரணி:8 484/2

மேல்

உள் (3)

ஏழு மானையும் ரவி இழக்க உள்
வாழும் மானையும் மதி இழக்கவே – தக்கயாகப்பரணி:8 495/1,2
பாலாழியும் தாழ அவ் ஆழி வைகும் பரந்தாமனும் தாழ உள் பள்ளிகொண்டே – தக்கயாகப்பரணி:8 545/2
ஒன்றுமே அவை அனைத்தையும் ஒருக்க நெடியோன் உள் அழிந்து தலையை சிலையில் வைத்து உளையவே – தக்கயாகப்பரணி:8 725/2

மேல்

உள்-வயின் (1)

வேவின் உள்-வயின் வேவது ஈது என – தக்கயாகப்பரணி:8 494/1

மேல்

உள்ள (9)

மிசை பெறாது குறளான கூளிகளும் விம்மி உள்ள திசை செம்மியே – தக்கயாகப்பரணி:5 135/1
நீறாக்குவது என் முப்புரத்தில் உள்ள வெள்ள நிருதரையே – தக்கயாகப்பரணி:7 225/2
அரக்கர் வெள்ளமும் உள்ள தீயும் நிகர்ப்ப யாரும் அயர்ப்பவே – தக்கயாகப்பரணி:8 256/2
ஓதமும் பொருப்பும் மண்ணும் விண்ணும் மற்றும் உள்ள எப்பூதமும் – தக்கயாகப்பரணி:8 367/1
ஊர் அடங்கியன பின்னும் எழுகின்ற அனிகத்துள் அடங்கியன உள்ள பதினால் உலகுமே – தக்கயாகப்பரணி:8 407/2
விழவிடும் கிரிகள் கீழும் உள்ள பிலம் ஏழும் ஊடுருவ வீழவே – தக்கயாகப்பரணி:8 418/1
உறுமுறும் பகழி வெந்து பொடியானபடி கண்டு உள்ள பஞ்ச ஆயுதங்களையும் ஒக்க விடவே – தக்கயாகப்பரணி:8 712/2
சாகினி கணமும் உள்ள சம்மினி கணமும் எல்லாம் – தக்கயாகப்பரணி:9 753/1
விசும்பினும் நிலத்தும் உள்ள உயிர் பண்டு விழுங்கி இன்று – தக்கயாகப்பரணி:10 784/1

மேல்

உள்ளது (2)

கழுமலம் உய்ய விரவு கலியுக எல்லை பொருத கதைகளில் உள்ளது அமணர் கழு மிசை கொள்வது இதுவே – தக்கயாகப்பரணி:6 170/2
ஓர் எயிற்றினும் வயிற்றின் ஒரு பாலும் இடவே உள்ளது எவ்வுலகும் அல்லது ஒரு பூதம் ஒரு பேய் – தக்கயாகப்பரணி:8 399/1

மேல்

உள்ளவா (1)

ஒப்பு அரும் கடவுள் ஆலம் உண்டு அதனை உள்ளவா சிறிது உரைத்துமே – தக்கயாகப்பரணி:6 139/2

மேல்

உள்ளன (2)

ஏழினும் எடுத்து அடைய உள்ளன எனும் சங்ககோடிகள் குறித்து அகிலமும் தகரவே – தக்கயாகப்பரணி:8 397/2
அங்கண் நாயகி அங்கியில் உள்ளன
தங்கள் கால் தம் கை தாம் கண்ட வண்ணமே – தக்கயாகப்பரணி:8 666/1,2

மேல்

உள்ளியோ (2)

உயிர்ப்பு அவர்க்கு நாம் என்பதை உள்ளியோ
செயிர்ப்பு மாருதம் பேர்ந்து திரிந்ததே – தக்கயாகப்பரணி:8 674/1,2
அரிய வீழ்ந்த அரும் சிறை உள்ளியோ
திரிய வீழ்ந்தன எல்லா சிலம்புமே – தக்கயாகப்பரணி:8 679/1,2

மேல்

உள்ளே (1)

கால் கடல் சுழி உள்ளே கரப்பவே – தக்கயாகப்பரணி:8 665/2

மேல்

உள்ளோர் (1)

நின் முதலாக தோன்றும் நெடிய மால் முதலா உள்ளோர்
என் முதலாக மாய்தற்கு உறுவது என் இறைவ என்றே – தக்கயாகப்பரணி:10 795/1,2

மேல்

உள (11)

கலக மறி கடல் புக விடுவன கதிர் கவடு விடுவன இவருழையினும் உள ககன தரு வனம் இவர்களும் என வரு கனக வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 41/2
படப்பட பொடியாக எங்கு உள பாதவாதிகள் ஆதவம் – தக்கயாகப்பரணி:3 64/1
பாரிசாதம் உள சாதகர் பராவுவனவே – தக்கயாகப்பரணி:3 67/2
மாலை தாழ்வன அநேகம் உள மந்தாரமே – தக்கயாகப்பரணி:3 68/2
தாது எடுத்தன அநேகம் உள சந்தானமே – தக்கயாகப்பரணி:3 69/2
குறிக்கும் இரு பாலும் உள தீபம் என வேறு சில கூற உளவோ – தக்கயாகப்பரணி:6 158/1
வடிய வாங்கி மடுக்க எங்கே உள வந்து தாம் – தக்கயாகப்பரணி:8 393/1
எங்கு உள தேவரும் நேர் கின்னரர் யாவரும் நேர் – தக்கயாகப்பரணி:8 690/2
அரசு உள அநந்த கோடி அசோகு உள அமரர் இட்ட – தக்கயாகப்பரணி:9 745/1
அரசு உள அநந்த கோடி அசோகு உள அமரர் இட்ட – தக்கயாகப்பரணி:9 745/1
முரசு உள முகுந்தன் மூங்கில் சார்ங்கம் உண்டு அவற்றின் மூட்டீர் – தக்கயாகப்பரணி:9 745/2

மேல்

உளது (1)

அம்புதான் உளது என்றோ அகன்றதே – தக்கயாகப்பரணி:8 678/2

மேல்

உளதோ (1)

எங்கள் நாயகர் திருக்கயிலை வெற்பும் உளதோ இல்லையோ பிற புலங்களை இயம்புகிலமே – தக்கயாகப்பரணி:8 402/2

மேல்

உளர் (3)

உடைய மோகினியை ஒக்க உளர் யோகினிகளே – தக்கயாகப்பரணி:3 87/2
தாழும் மின்மினிகளாக உளர் சர்மினிகளே – தக்கயாகப்பரணி:3 88/2
தர வரும் புடவி குறைய உளர் சாகினிகளே – தக்கயாகப்பரணி:3 89/1

மேல்

உளரே (3)

வானம் நாடியர் வணங்க வரும் மாதர் உளரே – தக்கயாகப்பரணி:3 80/2
அக்கு ஒழுங்குபடு கஞ்சுகம் அலம்ப உளரே – தக்கயாகப்பரணி:3 93/2
நிருதி செரு குறிக்கின் உளரே தெரிக்கின் இனி என் படைக்கு நிகரே – தக்கயாகப்பரணி:8 442/2

மேல்

உளவோ (1)

குறிக்கும் இரு பாலும் உள தீபம் என வேறு சில கூற உளவோ
எறிக்கும் மதியும் பருதியும் சுடர் எடுப்பன இரண்டு அருகுமே – தக்கயாகப்பரணி:6 158/1,2

மேல்

உளைத்து (1)

இரக்கம் அற்றிருப்பதற்கு எடுத்து உளைத்து இளைப்பவே – தக்கயாகப்பரணி:5 130/2

மேல்

உளைத்தே (1)

உருக்கும் எரி பிழப்பு ஒளி புக்குழி புகவிட்டு உளைத்தே – தக்கயாகப்பரணி:8 474/2

மேல்

உளைய (1)

ஓடுகின்றதனை நின்ற பேய் தொடர ஓடியோடி உளைய பிடித்து – தக்கயாகப்பரணி:7 243/1

மேல்

உளையவே (1)

ஒன்றுமே அவை அனைத்தையும் ஒருக்க நெடியோன் உள் அழிந்து தலையை சிலையில் வைத்து உளையவே – தக்கயாகப்பரணி:8 725/2

மேல்

உற்பத்தியது (1)

உடைக்கும் பெரு வெள்ளங்களின் உற்பத்தியது ஈதே – தக்கயாகப்பரணி:8 316/2

மேல்

உற (2)

அடைய அரியன கடை இரு புடையினும் அளவு கெட நிமிர் விழி விடம் அடுதலின் அமரர் அனைவரும் முனிவரில் அதிகரும் அவனி தலம் உற விழு பொழுது அயில் எயிறு – தக்கயாகப்பரணி:2 39/1
அரு ககன பரப்பு அடைய புயத்து உற விட்டு அடைத்தே – தக்கயாகப்பரணி:8 474/1

மேல்

உறங்கும் (1)

சங்கு நேமியொடு உறங்கும் மேகமும் இறங்கும் ஏகமும் தப்புமே – தக்கயாகப்பரணி:8 415/1

மேல்

உறவு (2)

சேரும் மதியம் என இளையமதியொடு உறவு உடைய மகளிர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 21/2
செய்யவாய் உலகம் உறவு கோள் அழிய நறவு கொள் மகளிர் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 24/2

மேல்

உறவும் (1)

பொற்பு அங்கு அனலில் புகும் ஏடு உறவும் புனலில் புகும் ஏடு எதிர் போகவும் ஏழ் – தக்கயாகப்பரணி:6 213/1

மேல்

உறவே (3)

விரை ஏறிய திருவாய் மலர் மீதூர்வன உறவே – தக்கயாகப்பரணி:8 318/2
மெய் வாரி பிறங்கி விசும்பு உறவே – தக்கயாகப்பரணி:8 600/2
அம்ம்பாய் வருகிலீர் சிலை புகுந்து பிடியீர் அஃது போலும் இனி எம்மொடு உறும் உம்மது உறவே – தக்கயாகப்பரணி:8 709/2

மேல்

உறழ (1)

பைத்த சோதி ஆறிரு பதிற்றுநூறு காய விரை பச்சை வாசி நாலிருபதிற்று மேலும் நால் உறழ
அத்த சாலம் ஈர் அருகும் அத்ரசாலம் வீசி வர அர்க்க த்வாத சாதிபர் இரட்டியாறு தேர் விடவே – தக்கயாகப்பரணி:8 467/1,2

மேல்

உறி (1)

நாணீர் அறியீர் உறி வல் அமணீர் மதுரேசனை எம் குல நாயகனை – தக்கயாகப்பரணி:6 193/1

மேல்

உறு (1)

ஒன்று இறையும் கூசாதே உறு பசி நோய் விண்ணப்பம்செய்யலுற்றே – தக்கயாகப்பரணி:7 222/2

மேல்

உறுதி (1)

உலரும் முதுமரம் இளமையும் வளமையும் உயிரும் நிலைபெற ஒளிவிடும் இவர் உரு உறுதி அமுதினும் இவர் இவர் பிறவியும் உததி இவர்களில் ஒரு மகள் திருமகள் – தக்கயாகப்பரணி:2 38/1

மேல்

உறுதியின் (1)

உறுதியின் அனந்த சாகை-தொறும் ஒரு தனி குளிர்ந்த நீர்மையது – தக்கயாகப்பரணி:6 143/2

மேல்

உறும் (2)

அம்ம்பாய் வருகிலீர் சிலை புகுந்து பிடியீர் அஃது போலும் இனி எம்மொடு உறும் உம்மது உறவே – தக்கயாகப்பரணி:8 709/2
பிடிக்கப்பிடிக்க உறும் வயிறு பழம்படியே பெருகுக பெருகுக வாய் பருகுக பருகுகவே – தக்கயாகப்பரணி:9 770/2

மேல்

உறுமுறும் (1)

உறுமுறும் பகழி வெந்து பொடியானபடி கண்டு உள்ள பஞ்ச ஆயுதங்களையும் ஒக்க விடவே – தக்கயாகப்பரணி:8 712/2

மேல்

உறுமோ (1)

உரையாய் உறுமோ நின் ஊணே – தக்கயாகப்பரணி:8 302/2

மேல்

உறுவது (1)

என் முதலாக மாய்தற்கு உறுவது என் இறைவ என்றே – தக்கயாகப்பரணி:10 795/2

மேல்

உறை (4)

தட மகோததி இவை விடாது உறை தருண மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 31/2
ஒடுங்கும் பாகத்து உறை மோடி உறையும் காடு பாடுவாம் – தக்கயாகப்பரணி:3 48/2
எறி படை வல்ல விசயை இசை கெழு தெய்வ மகளிர் எழுவரும் வெள்ளை முளரி இனிது உறை செல்வ மகளும் – தக்கயாகப்பரணி:6 168/1
ஒன்றும் தணிவு இன்றி விரைந்து பிரான் உறை கோ நகர் புக்கனள் ஒள்_நுதலே – தக்கயாகப்பரணி:8 322/2

மேல்

உறையாதன (1)

பவன போர் விரவாதன பருவ தீ உறையாதன பரவை கால் குளியாதன பறிய பேரிடி போல்வன – தக்கயாகப்பரணி:8 269/1

மேல்

உறையும் (1)

ஒடுங்கும் பாகத்து உறை மோடி உறையும் காடு பாடுவாம் – தக்கயாகப்பரணி:3 48/2

மேல்

உன் (1)

அரனும் ஏனை இமையவரும் உண்பர் என அஞ்சி நஞ்சம் அமுதமும் உன்
திரை மகோததியை விட இருந்து அனைய தெய்வ மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 28/1,2

மேல்

உனது (1)

பூதம் ஐந்தும் இரு கோளும் இயமானனும் என புகலும் எங்களை விழுங்குக புகுந்து உனது உடல் – தக்கயாகப்பரணி:8 723/1

மேல்