தீ – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


தீ (14)

பவன போர் விரவாதன பருவ தீ உறையாதன பரவை கால் குளியாதன பறிய பேரிடி போல்வன – தக்கயாகப்பரணி:8 269/1
மதியும் அன்று ஒரு தீ விளைந்து வளைந்துகொண்டது கங்கை மா – தக்கயாகப்பரணி:8 331/1
தீ வாய்-வயின் திண் பொருப்பு இட்டு உருக்கி செவ் வாய்-தொறும் கொண்டுகொண்டு உம்பர் சென்மார் – தக்கயாகப்பரணி:8 548/1
எயிறு ஆர வாய் ஆர மிடறு ஆர ஒருகாலும் எரி தீ அறா – தக்கயாகப்பரணி:8 557/1
இட்ட பேர் உதர தீ எரிவதே – தக்கயாகப்பரணி:8 570/2
விரிந்த தீ அடைய சென்று விம்மவே – தக்கயாகப்பரணி:8 572/2
வேட்டு தீ வர விட்டன காட்டு வெம் – தக்கயாகப்பரணி:8 588/1
காட்டு தீ இனம் மூண்டு கதுவவே – தக்கயாகப்பரணி:8 588/2
சீறிய சின தீ உண்ண திரிபுரம் எரித்த நாளில் – தக்கயாகப்பரணி:8 620/1
கடை-கொல் தீ கொள் கரம்-கொல் வவ்வி இருந்த அத்தி கரிந்தவே – தக்கயாகப்பரணி:8 636/2
பிறகு தீ என எழுந்து வீழ்ந்திட உயிர்த்தது ஐயர் விடு பெற்றமே – தக்கயாகப்பரணி:8 648/2
ஊழி தீ உவந்து ஆடுவது ஓர்ந்ததோ – தக்கயாகப்பரணி:8 673/1
பாழி தீ நடு என்-கொல் பனிப்பதே – தக்கயாகப்பரணி:8 673/2
எங்கும் உலகு நுங்கு தீ என இன்று கனல நின்ற நீர் ஒரு – தக்கயாகப்பரணி:8 701/1

மேல்

தீக்கு (1)

தீக்கு பிறந்த இல் என்னும் – தக்கயாகப்பரணி:8 304/1

மேல்

தீட்டி (1)

தானவர் பல்லும் தீட்டி அரிசியா சமைத்துக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 733/2

மேல்

தீட்டீர் (1)

பூத்தன மலைகள் வாங்கி புண்டரம் புடையில் தீட்டீர் – தக்கயாகப்பரணி:9 750/2

மேல்

தீந்து (1)

ஏறு தூக்கும் இடி எரி தீந்து அவர் – தக்கயாகப்பரணி:8 583/1

மேல்

தீபம் (1)

குறிக்கும் இரு பாலும் உள தீபம் என வேறு சில கூற உளவோ – தக்கயாகப்பரணி:6 158/1

மேல்

தீபமே (1)

தாமும் எரிவன போல எரிவன தாபம் இல சில தீபமே – தக்கயாகப்பரணி:3 60/2

மேல்

தீம் (1)

போர்ப்பன தீம் புகையோ புராதனர் ஓம புகையே – தக்கயாகப்பரணி:4 112/1

மேல்

தீய (2)

இறகு தீய உயிர் தீய வீயும் அதன் வெற்றுடம்பு உலகின் எல்லையில் – தக்கயாகப்பரணி:8 648/1
இறகு தீய உயிர் தீய வீயும் அதன் வெற்றுடம்பு உலகின் எல்லையில் – தக்கயாகப்பரணி:8 648/1

மேல்

தீயவே (1)

திங்கள் மண்டிலம் ஏற வெந்து களங்கம் அல்லது தீயவே
வெங்கண் மண்டிலம் ராகு முற்ற விழுங்கி ஒத்து மழுங்கவே – தக்கயாகப்பரணி:8 637/1,2

மேல்

தீயாக (1)

தன் அகத்து அங்கி இங்கு வயிற்று தீயாக தாங்கும் – தக்கயாகப்பரணி:10 786/1

மேல்

தீயில் (4)

எரியாதன தீயில் இடின் கொடுபோய் எறி வைகையிலே இடில் வைகையுடன் – தக்கயாகப்பரணி:6 202/1
சால தீயில் அரக்கர் உபாதிகள் – தக்கயாகப்பரணி:8 578/1
ஆல தீயில் அற வெந்து அவியவே – தக்கயாகப்பரணி:8 578/2
வெப்பு தீயில் விரவி எரியவே – தக்கயாகப்பரணி:8 585/2

மேல்

தீயும் (1)

அரக்கர் வெள்ளமும் உள்ள தீயும் நிகர்ப்ப யாரும் அயர்ப்பவே – தக்கயாகப்பரணி:8 256/2

மேல்

தீயை (1)

தீயை ஏவ சிரித்து ஒரு கொள்ளிவாய் – தக்கயாகப்பரணி:8 660/1

மேல்

தீயொடு (1)

சடையில் பாய் புனல் வானவர் தறுகண் தீயொடு மூள்வன தமர சேனை அறாதன தரள தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 270/2

மேல்

தீர் (1)

புனலன் மேனியில் நிசிந்தன் விடும் அம்பு அடையவும் புரை அடங்கும் இனி அ பரசுபாணி புரை தீர்
அனலன் மேனியில் முகுந்தன் விடும் அம்பு அடைய வேம் ஆதலால் அவர் வலம் தெரிவது அம்ம அரிதே – தக்கயாகப்பரணி:8 710/1,2

மேல்

தீர்ந்த (1)

கிளர் ஒளி வனப்பு தீர்ந்த கெடு மதி பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 788/2

மேல்

தீர்ந்த-கொல் (1)

உயிர் பெரும் பசி தீர்ந்த-கொல் இல்லை-கொல் உண்டு வெண் – தக்கயாகப்பரணி:8 390/1

மேல்

தீர்ந்து (1)

அவ்வகை இறைவர் காட்ட அமரர் மேல் முனிவு தீர்ந்து
மை வகை நெறிந்த கூந்தல் மலைமகள் அருளி செய்வாள் – தக்கயாகப்பரணி:10 794/1,2

மேல்

தீர்ப்பன (1)

சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய சேடன் தெவ்வை தனித்தனி தீர்ப்பன – தக்கயாகப்பரணி:8 271/2

மேல்

தீர (1)

ஆயிரம் கண் இழந்த பேயை அருத்தி தீர இருத்தியே – தக்கயாகப்பரணி:9 764/2

மேல்

தீருமோ (1)

நெய் இழந்தது பால் இழந்தது நீள் பெரும் பசி தீருமோ
கை இழந்து பிறந்த பேய் இது கோடி சாடி கவிழ்க்கவே – தக்கயாகப்பரணி:9 767/1,2

மேல்

தீவும் (3)

உக கோடி பல கோடி குலதீபன் எழு தீவும் உடன் ஆளவே – தக்கயாகப்பரணி:1 4/2
அனக பூமி கோலோகம் அருகு நேமி பாதாளம் அயன் நிவாசம் ஏழ் தீவும் அசலம் ஏழும் ஏழ் காவும் – தக்கயாகப்பரணி:4 104/1
சுட்ட விழியில் எழு கடலும் வற்றி எழு தீவும் ஒக்க நிலை சுவறவே – தக்கயாகப்பரணி:8 414/2

மேல்