பொ – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொக்கம் 1
பொங்க 1
பொங்கின 1
பொங்கு 7
பொங்கும் 1
பொட்டினரே 1
பொடி 3
பொடிசெய்ய 1
பொடித்து 1
பொடிபட 2
பொடியன 1
பொடியாக 1
பொடியாய் 3
பொடியால் 2
பொடியானபடி 1
பொடியும் 1
பொதி 5
பொதியில் 2
பொதிவன 1
பொதும்பில் 1
பொய் 10
பொய்கை 1
பொய்யே 1
பொர 2
பொரா 1
பொரித்து 1
பொரித்தே 1
பொரிய 1
பொரியவே 1
பொரிவற 1
பொரு 5
பொருத 1
பொருது 5
பொருந்து 1
பொருநர் 1
பொருநன் 1
பொருப்பர்களை 1
பொருப்பில் 2
பொருப்பின் 1
பொருப்பு 4
பொருப்பும் 4
பொருப்புமே 1
பொருப்பை 2
பொருப்பொருப்பவே 1
பொருபொரியுமே 1
பொரும் 2
பொருவது 1
பொருவாத 1
பொருள் 1
பொருளதிகாரம் 1
பொருளோ 1
பொலங்கல் 1
பொலம் 2
பொலன் 3
பொலி 1
பொலிந்தே 1
பொழிய 1
பொழில் 1
பொழில்கள் 1
பொழிலும் 2
பொழுது 3
பொழுதும் 1
பொழுதே 4
பொழுதோ 3
பொற்பு 2
பொறா 1
பொறாமல் 3
பொறாமை-கொல் 2
பொறாமையால் 1
பொறி 2
பொறித்தே 1
பொறுத்தருளுக 1
பொறை 1
பொறையது 1
பொன் 27
பொன்மயமா 1
பொன்றி 1
பொன்னி 1
பொன்னிக்கு 1
பொன்னும் 1

பொக்கம் (1)

பொக்கம் தவிர் வியாழன் சுக்ரன் போல் வீழ பூகண்டகர்கோவோடு ஆகண்டலன் மாய – தக்கயாகப்பரணி:8 693/1

மேல்

பொங்க (1)

பொங்க களிற்று ஈர் உரி போர்வை கொண்டும் புலித்தோல் உடுத்தும் படுத்தும் புயத்தே – தக்கயாகப்பரணி:8 551/1

மேல்

பொங்கின (1)

இருந்து அலை உலைகள் எல்லாம் பொங்கின துங்க யானை – தக்கயாகப்பரணி:9 747/1

மேல்

பொங்கு (7)

பூதம் அலகிலன பொங்கு கழுதிரதம் எங்கும் எழ நடுவு புதைய வந்து – தக்கயாகப்பரணி:3 59/1
பொங்கு அமளி புணரி துயில் வல்லி புறங்கடையில் – தக்கயாகப்பரணி:3 73/1
பொங்கு திரிபுரம் வெந்து பொடிபட வந்து பொரும் ஒரு பொருநர் கை – தக்கயாகப்பரணி:6 161/1
பொங்கு அலங்கல் வருணன் உரம் புக பொருப்பு மத்தம் திரித்த பொழுது எழும் – தக்கயாகப்பரணி:8 277/1
பொங்கு நேமியுடன் வேவ வெந்து பொருபொரியுமே சகல கிரியுமே – தக்கயாகப்பரணி:8 415/2
பொய் ஆயுத வாய் உமிழ் பொங்கு அழலால் – தக்கயாகப்பரணி:8 602/1
பொங்கு கண்ண இவை ஐம்படையும் எங்களுடனே போதும் எங்ஙனம் இனி பொருவது என்ற பொழுதே – தக்கயாகப்பரணி:8 714/2

மேல்

பொங்கும் (1)

பொங்கும் கடற்கே புகப்போக வீசும் பூதம் தபோவாரி கோதம் புரைத்தே – தக்கயாகப்பரணி:8 552/2

மேல்

பொட்டினரே (1)

குடர் அட்டத்து ஒரு செக்கர் குருதி பொட்டினரே
படர் பொன் கை செறி அக்கு சரி பப்பத்தினரே – தக்கயாகப்பரணி:3 100/1,2

மேல்

பொடி (3)

புகலிடம் பொடி செய்து போகியே – தக்கயாகப்பரணி:8 354/2
விளைந்து வந்தன வெறும் பொடி தனது கை பொடி சிறிது வீசவே – தக்கயாகப்பரணி:8 654/2
விளைந்து வந்தன வெறும் பொடி தனது கை பொடி சிறிது வீசவே – தக்கயாகப்பரணி:8 654/2

மேல்

பொடிசெய்ய (1)

பரந்து எரிந்து பொடிசெய்ய மற்று அவை பரிக்க வந்தவர் சிரிப்பரே – தக்கயாகப்பரணி:3 51/2

மேல்

பொடித்து (1)

புர ககன பொருப்பர்களை பொடித்து எரி கண் பொரித்தே – தக்கயாகப்பரணி:8 480/2

மேல்

பொடிபட (2)

பொங்கு திரிபுரம் வெந்து பொடிபட வந்து பொரும் ஒரு பொருநர் கை – தக்கயாகப்பரணி:6 161/1
சங்கமும் சக்ரமும் தண்டமும் கட்கமும் சாபமும் பொடிபட தகனமே ககனமே – தக்கயாகப்பரணி:8 719/2

மேல்

பொடியன (1)

பொலங்கல் மேரு கிரி சிகரம்-தொறும் போக விட்ட சிந்தூர பொடியன – தக்கயாகப்பரணி:8 272/2

மேல்

பொடியாக (1)

படப்பட பொடியாக எங்கு உள பாதவாதிகள் ஆதவம் – தக்கயாகப்பரணி:3 64/1

மேல்

பொடியாய் (3)

சுடச்சுட பொடியாய் எழ சுழல் சூறை புகுவன பாறையே – தக்கயாகப்பரணி:3 64/2
பொய் தேர் அணி முட்ட வெறும் பொடியாய்
மெய் தேர் அணி அற்றனர் விண்ணவரே – தக்கயாகப்பரணி:8 599/1,2
மாயோன் விடும்விடும் பகழி செய்ய எரி மேல் வந்துவந்து அடைய வெந்து பொடியாய் மடியவே – தக்கயாகப்பரணி:8 711/1

மேல்

பொடியால் (2)

விடுகின்ற வெதுப்பை வெறும் பொடியால் விடுவித்தனனாம் இவன் வேதியனே – தக்கயாகப்பரணி:6 197/2
ஒரு நீ ஒரு மாணி இடும் பொடியால் உய்ந்தேன் உயிர் என்பது உரைத்தனையேல் – தக்கயாகப்பரணி:6 201/1

மேல்

பொடியானபடி (1)

உறுமுறும் பகழி வெந்து பொடியானபடி கண்டு உள்ள பஞ்ச ஆயுதங்களையும் ஒக்க விடவே – தக்கயாகப்பரணி:8 712/2

மேல்

பொடியும் (1)

மண்ணில் வந்த மணலும் பொடியும் வீரன் அவன் ஓர் வடிவின் வந்த கழுதும் குறளும் ஆன பரிசே – தக்கயாகப்பரணி:8 405/2

மேல்

பொதி (5)

கரதலம் தரும் தமருக சதி பொதி கழல் புனைந்த செம் பரிபுர ஒலியொடு கலகலன் கலன்கலன் என வரும் ஒரு கரிய கஞ்சுகன் கழல் இணை கருதுவாம் – தக்கயாகப்பரணி:1/2
கழை முத்து பொதி கக்க கிழி கண் கட்சியரே – தக்கயாகப்பரணி:3 102/2
மேல் நிற்பன உலகம் பொதி வெள்ளம் பொதி கள்ள – தக்கயாகப்பரணி:8 310/1
மேல் நிற்பன உலகம் பொதி வெள்ளம் பொதி கள்ள – தக்கயாகப்பரணி:8 310/1
எங்ஙனே இறைவர் உலகு பொதி வடிவம் எவ்வுடம்பினும் அடங்குமாறு – தக்கயாகப்பரணி:8 425/1

மேல்

பொதியில் (2)

அகத்தியனை தமிழ் பொதியில் குகை புகவிட்டு அடைத்தே – தக்கயாகப்பரணி:8 489/1
பொதியில் வாழ் முனி புங்கவன் திருவாய்மலர்ந்த புராணநூல் – தக்கயாகப்பரணி:8 624/1

மேல்

பொதிவன (1)

அளக முகில் இரு புடையினும் அதிரவும் அகரு மணம் மிர்கமதமொடு கமழவும் அதிகம் இடை இடை சில கொடி அசையவும் அமிர்து பொதிவன சில குவடு அசையவும் – தக்கயாகப்பரணி:2 42/1

மேல்

பொதும்பில் (1)

பழையன பொதும்பில் ஏழும் எழு பரவையும் அடங்கு கோளினது – தக்கயாகப்பரணி:6 145/2

மேல்

பொய் (10)

பொய் கடல்புற தெய்வங்களை பொரித்து தினா – தக்கயாகப்பரணி:8 392/1
பொய் பருந்து காலொடு பறந்துபோய் – தக்கயாகப்பரணி:8 507/1
புக்காள் முலை கண்களால் ஆவி உண்டு அ பொய் மாயனார் செய்தி போக புணர்த்தே – தக்கயாகப்பரணி:8 556/2
பொய் யானையும் ஆளும் உடன்று பொரா – தக்கயாகப்பரணி:8 597/1
பொய் யாளியில் ஆள் இடும் எஃகு இடைபோய் – தக்கயாகப்பரணி:8 598/1
பொய் தேர் அணி முட்ட வெறும் பொடியாய் – தக்கயாகப்பரணி:8 599/1
பொய் வாரி பரந்து புக புரளும் – தக்கயாகப்பரணி:8 600/1
பொய் வந்த பதாதியுள் ஆவி புகா – தக்கயாகப்பரணி:8 601/1
பொய் ஆயுத வாய் உமிழ் பொங்கு அழலால் – தக்கயாகப்பரணி:8 602/1
பொய் நின்ற பதாகினி தந்தது போய் – தக்கயாகப்பரணி:8 603/1

மேல்

பொய்கை (1)

பொய்கை சூழ் புகலி பெருந்தகை பொன்னி நாடு கடந்துபோய் – தக்கயாகப்பரணி:6 171/1

மேல்

பொய்யே (1)

வேல் போல் நிறை பொருது உண்பது மெய்யே உயிர் பொய்யே
சேல் போல் கடை பிறழும் சில கண்ணீர் கடை திற-மின் – தக்கயாகப்பரணி:2 14/1,2

மேல்

பொர (2)

சூரொடும் பொர வஞ்சி சூடிய பிள்ளையார் படை தொட்ட நாள் – தக்கயாகப்பரணி:7 231/1
கொண்டுவா பொர இறப்பன பிறப்பின் இனி விடாய் கொய்தகொய்த நின் முடி பழைய கோவை குறியாய் – தக்கயாகப்பரணி:8 724/1

மேல்

பொரா (1)

பொய் யானையும் ஆளும் உடன்று பொரா
மெய் யானையும் ஆளும் விழுங்கினவே – தக்கயாகப்பரணி:8 597/1,2

மேல்

பொரித்து (1)

பொய் கடல்புற தெய்வங்களை பொரித்து தினா – தக்கயாகப்பரணி:8 392/1

மேல்

பொரித்தே (1)

புர ககன பொருப்பர்களை பொடித்து எரி கண் பொரித்தே – தக்கயாகப்பரணி:8 480/2

மேல்

பொரிய (1)

புக்க வேழம் பொரிய புகை புறம் – தக்கயாகப்பரணி:8 571/1

மேல்

பொரியவே (1)

போந்த எல்லா பொருப்பும் பொரியவே – தக்கயாகப்பரணி:8 584/2

மேல்

பொரிவற (1)

முளிபடும் உடம்பின் முன்னை பொரிவற மூழ்கி ஏறீர் – தக்கயாகப்பரணி:9 740/2

மேல்

பொரு (5)

பொரு தோகை சுரராசபுரம் ஏற விடு காளை புகழ் பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 5/2
எமது மலை இறை இகல் பொரு சிலை மலை ரவியும் மதியமும் உடன் வலம்வரு மலை இருளும் இருள் கெட எரி தமனிய மலை ரசத மலை இ மலையில் ஓர் சிறு குவடு – தக்கயாகப்பரணி:2 43/1
பொரு தரங்கம் வீங்கு சிலம்பு அடை சேவடி புரை அடங்க ஊன்ற விழுந்தது மேதினி – தக்கயாகப்பரணி:8 699/1
பூமி கம்பமும் எதிர்ந்தன உதிர்ந்தன உடு பொரு புராரியும் முராரியும் உடன்ற பொழுதே – தக்கயாகப்பரணி:8 705/2
பொரும் அம்பு சிலை கொள்வதில்லை இவ் உலகையும் பொரு பினாகத்தையும் ஒரு பெரும் பன்றியாய் – தக்கயாகப்பரணி:8 715/1

மேல்

பொருத (1)

கழுமலம் உய்ய விரவு கலியுக எல்லை பொருத கதைகளில் உள்ளது அமணர் கழு மிசை கொள்வது இதுவே – தக்கயாகப்பரணி:6 170/2

மேல்

பொருது (5)

விருதோடு பொருது ஏறு புலி நேமி கிரி சூழ விளையாடவே – தக்கயாகப்பரணி:1 8/2
வேல் போல் நிறை பொருது உண்பது மெய்யே உயிர் பொய்யே – தக்கயாகப்பரணி:2 14/1
படி அடி எறிந்து கால் பொருது பல குல விலங்கல் மேருவொடு – தக்கயாகப்பரணி:6 144/1
அட பட பொருது அமரர்-தம் படை – தக்கயாகப்பரணி:8 535/1
ஐயம் உண்டு தருமம் பணித்தருளும் ஆதி ஆல் பொருது அழித்ததால் – தக்கயாகப்பரணி:8 646/2

மேல்

பொருந்து (1)

பொருந்து மேகங்கள் போர்விட போவதே – தக்கயாகப்பரணி:8 680/2

மேல்

பொருநர் (1)

பொங்கு திரிபுரம் வெந்து பொடிபட வந்து பொரும் ஒரு பொருநர் கை – தக்கயாகப்பரணி:6 161/1

மேல்

பொருநன் (1)

விதைக்கும் அ பகழி வில் பொருநன் வைத்த முடியால் மிக வளைந்து குதைபோய் நெகிழ விண்ணுற நிமிர்ந்து – தக்கயாகப்பரணி:8 726/1

மேல்

பொருப்பர்களை (1)

புர ககன பொருப்பர்களை பொடித்து எரி கண் பொரித்தே – தக்கயாகப்பரணி:8 480/2

மேல்

பொருப்பில் (2)

வயங்களில் புற பொருப்பில் வேரி வாரி வந்து திக்கயங்களில் – தக்கயாகப்பரணி:5 126/1
அறம் தவா மலய பொருப்பில் அகத்தியற்கு அமுதாக நீர் – தக்கயாகப்பரணி:7 233/1

மேல்

பொருப்பின் (1)

வில் சாரும் மேரு பொருப்பின்
பொன் சாரல் சார புகவே – தக்கயாகப்பரணி:8 306/1,2

மேல்

பொருப்பு (4)

குழம்பு அடியேம் புக விழுந்து பொருப்பு அடியில் கொள்ளாமே – தக்கயாகப்பரணி:7 226/1
பொங்கு அலங்கல் வருணன் உரம் புக பொருப்பு மத்தம் திரித்த பொழுது எழும் – தக்கயாகப்பரணி:8 277/1
கை வழி குல பொருப்பு ஒர் எட்டுடன் கலந்து கொண்டு – தக்கயாகப்பரணி:8 382/1
தீ வாய்-வயின் திண் பொருப்பு இட்டு உருக்கி செவ் வாய்-தொறும் கொண்டுகொண்டு உம்பர் சென்மார் – தக்கயாகப்பரணி:8 548/1

மேல்

பொருப்பும் (4)

ஓதமும் பொருப்பும் மண்ணும் விண்ணும் மற்றும் உள்ள எப்பூதமும் – தக்கயாகப்பரணி:8 367/1
எயிறு வெட்டுவன சக்ரவாளம் முதல் ஏழ் பொருப்பும் எட்டு எண் பணி – தக்கயாகப்பரணி:8 411/1
புடைக்காலம் மற்று ஒத்து உருக்குண்ண ஏழ் பொன் பொருப்பும் கனல் கண் கடை சுட்ட பூதம் – தக்கயாகப்பரணி:8 542/1
போந்த எல்லா பொருப்பும் பொரியவே – தக்கயாகப்பரணி:8 584/2

மேல்

பொருப்புமே (1)

புதைவது சிலை-கொல் பொருப்புமே – தக்கயாகப்பரணி:8 526/2

மேல்

பொருப்பை (2)

தடுத்த குல பொருப்பை முடி தடத்து உடைய தகர்த்தே – தக்கயாகப்பரணி:8 484/1
அடுத்த குல பொருப்பை இருப்பு உலக்கை பிடித்து அடித்தே – தக்கயாகப்பரணி:8 492/1

மேல்

பொருப்பொருப்பவே (1)

புது பிணத்து இரைப்பு மிக்கு அடி பொருப்பொருப்பவே – தக்கயாகப்பரணி:5 129/2

மேல்

பொருபொரியுமே (1)

பொங்கு நேமியுடன் வேவ வெந்து பொருபொரியுமே சகல கிரியுமே – தக்கயாகப்பரணி:8 415/2

மேல்

பொரும் (2)

பொங்கு திரிபுரம் வெந்து பொடிபட வந்து பொரும் ஒரு பொருநர் கை – தக்கயாகப்பரணி:6 161/1
பொரும் அம்பு சிலை கொள்வதில்லை இவ் உலகையும் பொரு பினாகத்தையும் ஒரு பெரும் பன்றியாய் – தக்கயாகப்பரணி:8 715/1

மேல்

பொருவது (1)

பொங்கு கண்ண இவை ஐம்படையும் எங்களுடனே போதும் எங்ஙனம் இனி பொருவது என்ற பொழுதே – தக்கயாகப்பரணி:8 714/2

மேல்

பொருவாத (1)

ஒருவரும் பொருவாத தென்னன் இரண்டு கண்களும் ஒத்த பேர் – தக்கயாகப்பரணி:6 177/1

மேல்

பொருள் (1)

சொல்லும் பொருள் பகரும் குழல் மடவீர் கடை திற-மின் – தக்கயாகப்பரணி:2 12/2

மேல்

பொருளதிகாரம் (1)

வெல்லும் பொருளதிகாரம் அலங்காரம் விளங்க – தக்கயாகப்பரணி:2 12/1

மேல்

பொருளோ (1)

புத்தர் போதி அருகந்தர்கள் அசோகு திருமால் புகுதும் ஆல் சதமகன் சுர தருக்கள் பொருளோ
எத்தராதலமும் நீழலிடும் ஏழ் பொழிலும் நேர் எழு விலங்கல்களும் நேர் அடி எழுந்து இடறவே – தக்கயாகப்பரணி:8 404/1,2

மேல்

பொலங்கல் (1)

பொலங்கல் மேரு கிரி சிகரம்-தொறும் போக விட்ட சிந்தூர பொடியன – தக்கயாகப்பரணி:8 272/2

மேல்

பொலம் (2)

பூ ஐந்தாலும் புகுதற்கு அரும் பொலம்
கா ஐந்தால் ஐந்து சோலை கவினவே – தக்கயாகப்பரணி:3 71/1,2
புக்கு பெருமான் அடி சேவடியில் பொன் மா மலர் கொண்டு புனைந்து பொலம்
செக்கர் சடையான் எதிர்நின்று அருளிச்செய்தாள் அடைய தமர் செய்தனவே – தக்கயாகப்பரணி:8 323/1,2

மேல்

பொலன் (3)

நில நேமி பொலன் நேமி அளவாக உக கோடி நெடிது ஆளவே – தக்கயாகப்பரணி:1 2/2
சங்கும் பொலன் கற்பக காவும் மாவும் சதுர் தந்தியும் சர்வமும் தேரும் வாரி – தக்கயாகப்பரணி:8 552/1
குறுகு முடுக்கும் இலங்கு பொலன் கொடி – தக்கயாகப்பரணி:11 802/1

மேல்

பொலி (1)

தன் தலை பொலி மண்டையில் சத கோடி சாடிகள் சாய்-மினே – தக்கயாகப்பரணி:9 763/2

மேல்

பொலிந்தே (1)

பொன் வெள்ளி எஃகு என்ன வானத்து உலாம் முப்புரம் சுட்ட வீரர்க்கு மேலே பொலிந்தே – தக்கயாகப்பரணி:8 550/2

மேல்

பொழிய (1)

புரண்டு மின்னும் நெடுநாள் நுடங்குவன மேக ராசி பொழிய புறத்து – தக்கயாகப்பரணி:8 643/1

மேல்

பொழில் (1)

சுவடு கொண்ட பொழில் ஏழின் ஞிமிறும் துறும் ஒரோர் – தக்கயாகப்பரணி:3 70/1

மேல்

பொழில்கள் (1)

எடுத்தன கற்பக பொழில்கள் கடை கனல் இட்டு எரித்தே – தக்கயாகப்பரணி:8 492/2

மேல்

பொழிலும் (2)

எத்தராதலமும் நீழலிடும் ஏழ் பொழிலும் நேர் எழு விலங்கல்களும் நேர் அடி எழுந்து இடறவே – தக்கயாகப்பரணி:8 404/2
கக்க ஏழு பொழிலும் கதுவவே – தக்கயாகப்பரணி:8 571/2

மேல்

பொழுது (3)

அடைய அரியன கடை இரு புடையினும் அளவு கெட நிமிர் விழி விடம் அடுதலின் அமரர் அனைவரும் முனிவரில் அதிகரும் அவனி தலம் உற விழு பொழுது அயில் எயிறு – தக்கயாகப்பரணி:2 39/1
தங்கு மலை சிலை கொண்ட பொழுது உலகங்கள் தகைவது தண்டமே – தக்கயாகப்பரணி:6 161/2
பொங்கு அலங்கல் வருணன் உரம் புக பொருப்பு மத்தம் திரித்த பொழுது எழும் – தக்கயாகப்பரணி:8 277/1

மேல்

பொழுதும் (1)

மேல் எழுந்த பொழுதும் பிரமர் அண்ட கடகம் விண்டு உடைந்தில பெரும் திகிரி வெற்பு உடையவே – தக்கயாகப்பரணி:8 403/2

மேல்

பொழுதே (4)

அ படையோடு நின்ற சுரர் சென்று தங்கள் அரசற்கு இசைத்த பொழுதே – தக்கயாகப்பரணி:8 434/2
நின்ற வில்லி கொடியில் கருடன் ஆர்த்த பொழுதே நிமிர் சிறை கருட லோகம் உடன் ஆர்த்தது எழவே – தக்கயாகப்பரணி:8 704/1
பூமி கம்பமும் எதிர்ந்தன உதிர்ந்தன உடு பொரு புராரியும் முராரியும் உடன்ற பொழுதே – தக்கயாகப்பரணி:8 705/2
பொங்கு கண்ண இவை ஐம்படையும் எங்களுடனே போதும் எங்ஙனம் இனி பொருவது என்ற பொழுதே – தக்கயாகப்பரணி:8 714/2

மேல்

பொழுதோ (3)

கால் எழுந்த பொழுதோ கடல் எழுந்த பொழுதோ கனல் எழுந்த பொழுதோ கயிலையாளி கடகம் – தக்கயாகப்பரணி:8 403/1
கால் எழுந்த பொழுதோ கடல் எழுந்த பொழுதோ கனல் எழுந்த பொழுதோ கயிலையாளி கடகம் – தக்கயாகப்பரணி:8 403/1
கால் எழுந்த பொழுதோ கடல் எழுந்த பொழுதோ கனல் எழுந்த பொழுதோ கயிலையாளி கடகம் – தக்கயாகப்பரணி:8 403/1

மேல்

பொற்பு (2)

பொற்பு அங்கு அனலில் புகும் ஏடு உறவும் புனலில் புகும் ஏடு எதிர் போகவும் ஏழ் – தக்கயாகப்பரணி:6 213/1
பொற்பு ஊடற கற்பக காடு சாடி புகுந்து உம்பர்கோன் முன்பு பூதப்பிரான்மார் – தக்கயாகப்பரணி:8 538/1

மேல்

பொறா (1)

மேருவும் பொறா வய பொறையது மேருவின் பராரையில் பெரியதே – தக்கயாகப்பரணி:6 156/2

மேல்

பொறாமல் (3)

இடி பொறாமல் ஒருபால் அதிர்வர் சாகினிகளே எரி பொறாமல் ஒருபால் நகுவர் டாகினிகளே – தக்கயாகப்பரணி:8 433/1
இடி பொறாமல் ஒருபால் அதிர்வர் சாகினிகளே எரி பொறாமல் ஒருபால் நகுவர் டாகினிகளே – தக்கயாகப்பரணி:8 433/1
படி பொறாமல் ஒருபால் வருவர் யோகினிகளே பகருமாறு அரியர் நாயகி பதாகினிகளே – தக்கயாகப்பரணி:8 433/2

மேல்

பொறாமை-கொல் (2)

ஈடுபடும் இறைமகள் பொறாமை-கொல் இது பொறாமை-கொல் இறைவர்-தம் – தக்கயாகப்பரணி:3 61/1
ஈடுபடும் இறைமகள் பொறாமை-கொல் இது பொறாமை-கொல் இறைவர்-தம் – தக்கயாகப்பரணி:3 61/1

மேல்

பொறாமையால் (1)

புனைந்து வந்த மதிக்கு முன்பு பயந்த வேலை பொறாமையால்
நினைந்து வந்து அமுதம் சொரிந்து என மாலை வெண்குடை நிற்பவே – தக்கயாகப்பரணி:8 633/1,2

மேல்

பொறி (2)

புற்றில்-நின்று எழு புயங்க சூடிகை நெருப்பு விட்ட சிறு பொறி என – தக்கயாகப்பரணி:3 52/1
கொண்ட சூல வேல் விடு பொறி குழாம் – தக்கயாகப்பரணி:8 346/1

மேல்

பொறித்தே (1)

தழல் கடவுள் தட கைகளை தறித்து மழு பொறித்தே – தக்கயாகப்பரணி:8 487/2

மேல்

பொறுத்தருளுக (1)

பிழைத்தன பொறுத்தருளுக என்றனள் பெயர்த்தே – தக்கயாகப்பரணி:8 290/2

மேல்

பொறை (1)

பொறை சூழ் வரையில் புலி ஏறு எழுதும் பொன் மேரு வரை பெருமான் மகளார் – தக்கயாகப்பரணி:6 185/1

மேல்

பொறையது (1)

மேருவும் பொறா வய பொறையது மேருவின் பராரையில் பெரியதே – தக்கயாகப்பரணி:6 156/2

மேல்

பொன் (27)

போய பேரொளி அடைத்துவைத்த பல புண்டரிகம் இரு பொன் குழை – தக்கயாகப்பரணி:2 22/1
கண்ணில் புகுந்த கதை பாட கன பொன் கபாடம் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 45/2
வாரும் சடாடவி முடி தேவர்-தம் தேவி வன் மான் உகைத்த கொடி பொன் மாதவி கொடிகள் – தக்கயாகப்பரணி:3 76/1
நச்சு கண் முலை மேல் இடுது நிற்கும் நகு பொன்
கச்சுக்கும் அடைய புடவி கையடை-கொலோ – தக்கயாகப்பரணி:3 83/1,2
படர் பொன் கை செறி அக்கு சரி பப்பத்தினரே – தக்கயாகப்பரணி:3 100/2
ஒரு பக்கத்து ஒளி வட்டத்து ஒரு பொன் தட்டினரே – தக்கயாகப்பரணி:3 101/2
பொறை சூழ் வரையில் புலி ஏறு எழுதும் பொன் மேரு வரை பெருமான் மகளார் – தக்கயாகப்பரணி:6 185/1
ஆதி செழியற்கு ஒரு கை மலர் பொன் அடைய புகலிக்கு இறை வெப்பு அழலால் – தக்கயாகப்பரணி:6 217/1
அ பெரும் புரவி தொகை மேலும் நீடு ஆடக கொடி ஆடு பொன் தேரினும் – தக்கயாகப்பரணி:8 275/1
பெயர்த்தது ஓர் அடி தாமரை தாள் விட பெரும் பொன் கோளகை பண்டு பிளந்ததற்கு – தக்கயாகப்பரணி:8 283/1
பொன் சாரல் சார புகவே – தக்கயாகப்பரணி:8 306/2
புக்கு பெருமான் அடி சேவடியில் பொன் மா மலர் கொண்டு புனைந்து பொலம் – தக்கயாகப்பரணி:8 323/1
வால் எடுத்து நாகர் தங்கள் திவ்யபானம் வைத்த பொன்
சால் எடுத்து வாய்மடுத்து வெவ் விடாய் தணித்துமே – தக்கயாகப்பரணி:8 387/1,2
செயிர்த்து உதரத்து எரி சுரர் பொன் சிகை கதுவ சிரித்தே – தக்கயாகப்பரணி:8 476/1
கொதித்து உவண கொழுப்பு அரி பொன் கொடி குமுற குமைத்தே – தக்கயாகப்பரணி:8 478/1
வெள்ளி குன்று பொன் குன்று கல் குன்று அடைய வீழவே – தக்கயாகப்பரணி:8 536/2
வெள்ளி குல குன்று பொன் குன்று கல்லின் விழு குன்று எனப்பட்ட குன்று யாவும் வீழ – தக்கயாகப்பரணி:8 537/1
புடைக்காலம் மற்று ஒத்து உருக்குண்ண ஏழ் பொன் பொருப்பும் கனல் கண் கடை சுட்ட பூதம் – தக்கயாகப்பரணி:8 542/1
மின் வெள்ளி பொன் கொல் என சொல்லும் முப்போர் விலங்கல் குழாம் ஓர் விழி சுட்ட பூதம் – தக்கயாகப்பரணி:8 550/1
பொன் வெள்ளி எஃகு என்ன வானத்து உலாம் முப்புரம் சுட்ட வீரர்க்கு மேலே பொலிந்தே – தக்கயாகப்பரணி:8 550/2
கட்டு கொள் பொன் தேரின் ஞாயிற்றையும் தண் கதிர் கோளையும் பாரிடம் சென்று கெளவி – தக்கயாகப்பரணி:8 555/1
புரம் கொல் அம்பு-கொல் வந்துவந்து இடை போனபோன புராணர் பொன்
சிரம் கொல் அம்பு-கொல் என்-கொல் ஒன்று வல திருக்கை திரிக்கவே – தக்கயாகப்பரணி:8 629/1,2
தம் பொன் மகுடம் அண்டகோளகை சங்கு திகிரி சந்த்ர சூரியர் – தக்கயாகப்பரணி:8 700/1
அசலமே அனைய திக்கில் ஆனை கோடு அனைத்தும் பொன் பூண் – தக்கயாகப்பரணி:9 735/1
அண்டர் பொன் எயில் வட்டம் முட்ட நெருங்கு பேய் பெற அட்ட கூழ் – தக்கயாகப்பரணி:9 760/1
குண்டர் பொன் எயில் வட்டம் முட்ட முகந்து அளந்து கொடுக்கவே – தக்கயாகப்பரணி:9 760/2
பொன் முகம் ஒன்று பண்டு போனது புகுத பொன்றி – தக்கயாகப்பரணி:10 781/1

மேல்

பொன்மயமா (1)

வேதிக்க உடம்பு ஒரு பொன்மயமா ஒளிவிட்டு விளங்கினன் மீனவனே – தக்கயாகப்பரணி:6 217/2

மேல்

பொன்றி (1)

பொன் முகம் ஒன்று பண்டு போனது புகுத பொன்றி
தன் முகம் ஐந்தும் பெற்ற சதுமுக பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 781/1,2

மேல்

பொன்னி (1)

பொய்கை சூழ் புகலி பெருந்தகை பொன்னி நாடு கடந்துபோய் – தக்கயாகப்பரணி:6 171/1

மேல்

பொன்னிக்கு (1)

மலை கொன்று பொன்னிக்கு வழி கண்ட கண்டன் வர ராசராசன் கை வாள் என்ன வந்தே – தக்கயாகப்பரணி:8 549/2

மேல்

பொன்னும் (1)

பொன்னும் பெருநம்பி குலச்சிறையும் போய் வைகையில் வாது களம் புகவே – தக்கயாகப்பரணி:6 211/2

மேல்