சி – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிகர 3
சிகரத்தில் 1
சிகரத்துடன் 1
சிகரம்-தொறும் 1
சிகாமணி 1
சிகாமணியே 1
சிகை 1
சிகையவும் 1
சிங்க 3
சிங்கம் 2
சிங்கமும் 1
சித்தர் 1
சித்ரகூடம் 1
சிதர 1
சிதற 1
சிதைத்தே 1
சிதைப்பவே 1
சிதைய 1
சிதைவது 1
சிந்த 3
சிந்தடி 1
சிந்தாகுல 1
சிந்தூர 1
சிரங்களால் 1
சிரத்தவே 1
சிரத்தில் 1
சிரம் 5
சிரமும் 2
சிரித்து 1
சிரித்தே 1
சிரிப்பரே 1
சில 16
சிலப்பு 1
சிலம்பி 2
சிலம்பு 1
சிலம்புமே 1
சிலர் 3
சிலவே 1
சிலாதல 1
சிலாவருடம் 1
சிலை 7
சிலை-கொல் 1
சிலைப்பவே 1
சிலையால் 1
சிலையில் 1
சிலையும் 2
சிலையை 1
சிவக்க 1
சிவனே 1
சிவாகம 2
சிவிகை 1
சிற்சில 1
சிற்றுரிவை 1
சிறக்கவே 1
சிறகின் 1
சிறகு 2
சிறப்பு 1
சிறிது 6
சிறு 6
சிறுமை 1
சிறை 5
சின்னம் 1
சின 2
சினத்தொடு 1
சினம் 1
சினமும் 2

சிகர (3)

சிகர சீகர அருவி நீர்அரமகளிர் நீர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 30/2
சிகர குல கிரிகள் சிதர தகர்க்கும் எறி திரையால் ஒரோர் – தக்கயாகப்பரணி:8 456/1
சென்று எட்டு வெற்பும் பணிப்ப துணிப்ப செயிர்த்து எண்மர் கணநாதர் இனம் மிண்டு சிகர
குன்று எட்டும் இட்டு எண் திசாதேவர் ஏறும் கொல் யானை எட்டும் விழ குத்துவித்தே – தக்கயாகப்பரணி:8 546/1,2

மேல்

சிகரத்தில் (1)

இயங்கும் மேரு கிரி சிகரத்தில் ஓர் இந்த்ர நீலகிரி போன்று இருப்பவே – தக்கயாகப்பரணி:8 286/2

மேல்

சிகரத்துடன் (1)

வெற்பு அநேக சிகரத்துடன் மிடைந்தன என – தக்கயாகப்பரணி:3 66/1

மேல்

சிகரம்-தொறும் (1)

பொலங்கல் மேரு கிரி சிகரம்-தொறும் போக விட்ட சிந்தூர பொடியன – தக்கயாகப்பரணி:8 272/2

மேல்

சிகாமணி (1)

ஆயிரம் பணாமித பரவையது ஆயிரம் சிகாமணி ப்ரபையதே – தக்கயாகப்பரணி:6 154/2

மேல்

சிகாமணியே (1)

சேயே வர சைவ சிகாமணியே திருநீறு இனி இட்டு அருள்செய்க எனவே – தக்கயாகப்பரணி:6 194/2

மேல்

சிகை (1)

செயிர்த்து உதரத்து எரி சுரர் பொன் சிகை கதுவ சிரித்தே – தக்கயாகப்பரணி:8 476/1

மேல்

சிகையவும் (1)

அலகு_இல் மரகத முறிகளும் வயிரமும் அபரிமிதம் எரி தமனியம் அடையவும் அரிய தரளமும் அழகிய பவளமும் அரச அரவின சிகையவும் மலை கொடு – தக்கயாகப்பரணி:2 41/1

மேல்

சிங்க (3)

பெய்த சிங்க சின்னம் பிடிக்கவே – தக்கயாகப்பரணி:8 344/2
சிங்க பசுந்தோல் கொடு ஏகாசம் இட்டும் செய்யப்பெறா வல்லபம் செய்து சென்றே – தக்கயாகப்பரணி:8 551/2
சிங்க வாளி ஒன்றினால் இருவரும் சிதைப்பவே – தக்கயாகப்பரணி:8 617/2

மேல்

சிங்கம் (2)

என்று போய் அதிகாரி வைதிக ராச சிங்கம் இருந்துழி – தக்கயாகப்பரணி:6 179/1
ஏனம் எய்தன சிங்கம் எய்தன கற்கி எய்தன வெண்ணிலா – தக்கயாகப்பரணி:8 630/1

மேல்

சிங்கமும் (1)

சிங்கமும் கற்கியும் பன்றியும் செற்றவன் திரிய நீர் செல்க என சென்று மால் சின எரி – தக்கயாகப்பரணி:8 719/1

மேல்

சித்தர் (1)

கருடர் இயக்கர் சித்தர் கடி பூதநாதர் நிசிசரர் தானவர்கள் கிம்புருடர் – தக்கயாகப்பரணி:8 445/1

மேல்

சித்ரகூடம் (1)

ஏமகூடமொடு சித்ரகூடம் எரி கனக கூடம் என எரியவே – தக்கயாகப்பரணி:8 419/2

மேல்

சிதர (1)

சிகர குல கிரிகள் சிதர தகர்க்கும் எறி திரையால் ஒரோர் – தக்கயாகப்பரணி:8 456/1

மேல்

சிதற (1)

திரண்டு வந்த வராமிர்த சீகரம் சிதற வீசி திரு பாற்கடல் திரை – தக்கயாகப்பரணி:8 284/1

மேல்

சிதைத்தே (1)

செஞ்சூடிகா கோடி சிந்த பறித்து சிறை புள் குலம் காவலன் சீர் சிதைத்தே – தக்கயாகப்பரணி:8 554/2

மேல்

சிதைப்பவே (1)

சிங்க வாளி ஒன்றினால் இருவரும் சிதைப்பவே – தக்கயாகப்பரணி:8 617/2

மேல்

சிதைய (1)

சிலப்பு அரசை திருப்பரசுக்களின் சிதைய துடைத்தே – தக்கயாகப்பரணி:8 493/2

மேல்

சிதைவது (1)

சிதைவது சூழ்வரு திகிரியே – தக்கயாகப்பரணி:8 526/1

மேல்

சிந்த (3)

சிந்த மேல் வரு மேகலாரவம் உடைய நீர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 33/2
முகடு தகர்ந்து சிந்த முரி சக்ரவாளகிரியே பிடித்து முகில் எண் – தக்கயாகப்பரணி:8 437/1
செஞ்சூடிகா கோடி சிந்த பறித்து சிறை புள் குலம் காவலன் சீர் சிதைத்தே – தக்கயாகப்பரணி:8 554/2

மேல்

சிந்தடி (1)

சிந்தடி வன் குறளால் அலகை குலம் ஆகிய தேவர் பிறப்பும் இறப்பும் இலாதவர் செத்தே – தக்கயாகப்பரணி:8 561/2

மேல்

சிந்தாகுல (1)

ஏ ஏய் இமவான் மகளார் மகனே எந்தாய் சிந்தாகுல வேர் அரியும் – தக்கயாகப்பரணி:6 194/1

மேல்

சிந்தூர (1)

பொலங்கல் மேரு கிரி சிகரம்-தொறும் போக விட்ட சிந்தூர பொடியன – தக்கயாகப்பரணி:8 272/2

மேல்

சிரங்களால் (1)

சிரங்களால் அரசு பணியும் ஆகி முதல் பூதநாதர் பலர் செல்லவே – தக்கயாகப்பரணி:8 417/2

மேல்

சிரத்தவே (1)

எழ கொளுந்தி அன்ன குஞ்சி வெம் சிரத்தவே – தக்கயாகப்பரணி:5 121/2

மேல்

சிரத்தில் (1)

அழிந்தன கற்பம்-தோறும் தொடுத்தன நகு சிரத்தில்
கழிந்தன கபால மாலை குருதியில் கழுவிக்கொள்ளீர் – தக்கயாகப்பரணி:9 731/1,2

மேல்

சிரம் (5)

புக்கு ஆவுதிகள் பல ஏற்றும் போரில் ஏற்றும் சிரம் ஒருவர் – தக்கயாகப்பரணி:2 46/1
சிரம் தெரிந்தன அறிந்து அறிந்து குவைசெய்து பைரவர்கள் செந்நிலம் – தக்கயாகப்பரணி:3 51/1
எறிப்ப எறி படை நிசிசரன் சிரம் ஒரு பதும் கரம் இருபதும் – தக்கயாகப்பரணி:6 163/1
செய்த வேள்வி-வாய் யஞ்ஞர்-தம் சிரம்
பெய்த சிங்க சின்னம் பிடிக்கவே – தக்கயாகப்பரணி:8 344/1,2
சிரம் கொல் அம்பு-கொல் என்-கொல் ஒன்று வல திருக்கை திரிக்கவே – தக்கயாகப்பரணி:8 629/2

மேல்

சிரமும் (2)

சிரமும் சிரமும் செறிந்தன – தக்கயாகப்பரணி:8 512/1
சிரமும் சிரமும் செறிந்தன – தக்கயாகப்பரணி:8 512/1

மேல்

சிரித்து (1)

தீயை ஏவ சிரித்து ஒரு கொள்ளிவாய் – தக்கயாகப்பரணி:8 660/1

மேல்

சிரித்தே (1)

செயிர்த்து உதரத்து எரி சுரர் பொன் சிகை கதுவ சிரித்தே
உயிர்ப்பில் இணை குருக்களை இட்டு உருக்கி நகத்து உரைத்தே – தக்கயாகப்பரணி:8 476/1,2

மேல்

சிரிப்பரே (1)

பரந்து எரிந்து பொடிசெய்ய மற்று அவை பரிக்க வந்தவர் சிரிப்பரே – தக்கயாகப்பரணி:3 51/2

மேல்

சில (16)

சேல் போல் கடை பிறழும் சில கண்ணீர் கடை திற-மின் – தக்கயாகப்பரணி:2 14/2
மையவாய் அருகு வெளிய ஆய சில கெண்டை புண்டரிக மலரினும் – தக்கயாகப்பரணி:2 24/1
மந்தமே சில நூபுராரவம் மகிழ்நர் சேகர மதுகரம் – தக்கயாகப்பரணி:2 33/1
அளக முகில் இரு புடையினும் அதிரவும் அகரு மணம் மிர்கமதமொடு கமழவும் அதிகம் இடை இடை சில கொடி அசையவும் அமிர்து பொதிவன சில குவடு அசையவும் – தக்கயாகப்பரணி:2 42/1
அளக முகில் இரு புடையினும் அதிரவும் அகரு மணம் மிர்கமதமொடு கமழவும் அதிகம் இடை இடை சில கொடி அசையவும் அமிர்து பொதிவன சில குவடு அசையவும் – தக்கயாகப்பரணி:2 42/1
பிண பறை குரல் உவந்து வந்து சில பேய் துணங்கை இடு-தொறும் இடும் – தக்கயாகப்பரணி:3 53/1
தாமும் எரிவன போல எரிவன தாபம் இல சில தீபமே – தக்கயாகப்பரணி:3 60/2
குறிக்கும் இரு பாலும் உள தீபம் என வேறு சில கூற உளவோ – தக்கயாகப்பரணி:6 158/1
யானை ஆன சில பாய் புரவி ஆன சில வாள் அடவி ஆன சில தேர் அசலம் ஆன சில நேர் – தக்கயாகப்பரணி:8 401/1
யானை ஆன சில பாய் புரவி ஆன சில வாள் அடவி ஆன சில தேர் அசலம் ஆன சில நேர் – தக்கயாகப்பரணி:8 401/1
யானை ஆன சில பாய் புரவி ஆன சில வாள் அடவி ஆன சில தேர் அசலம் ஆன சில நேர் – தக்கயாகப்பரணி:8 401/1
யானை ஆன சில பாய் புரவி ஆன சில வாள் அடவி ஆன சில தேர் அசலம் ஆன சில நேர் – தக்கயாகப்பரணி:8 401/1
சேனை ஆன சில நிற்ப எவன் நிற்பது என இ செல்லும் நால் அணியிலும் தலைவர் ஆன சிலவே – தக்கயாகப்பரணி:8 401/2
பார பணை முலை கொலையினும் சில புரூஉ பங்கத்தினும் அடுப்பன வடு பகவினும் – தக்கயாகப்பரணி:8 430/1
பாவ மனம் கவற்ற அறிவின்மை கொண்டு சில வச்ரபாணி பகர்வான் – தக்கயாகப்பரணி:8 435/2
செருவிற்கு உருத்து எதிர்வர் சில முத்து எருத்தர் பதினொரு தேவரே – தக்கயாகப்பரணி:8 461/2

மேல்

சிலப்பு (1)

சிலப்பு அரசை திருப்பரசுக்களின் சிதைய துடைத்தே – தக்கயாகப்பரணி:8 493/2

மேல்

சிலம்பி (2)

கள்ளி வேலிகளின் மீது எழ பல சிலம்பி நூல் கொடு கவிக்குமே – தக்கயாகப்பரணி:3 54/2
அலர் சிலம்பி இழை சுழன்று வெளி அடங்க அணிவவே – தக்கயாகப்பரணி:5 127/2

மேல்

சிலம்பு (1)

பொரு தரங்கம் வீங்கு சிலம்பு அடை சேவடி புரை அடங்க ஊன்ற விழுந்தது மேதினி – தக்கயாகப்பரணி:8 699/1

மேல்

சிலம்புமே (1)

திரிய வீழ்ந்தன எல்லா சிலம்புமே – தக்கயாகப்பரணி:8 679/2

மேல்

சிலர் (3)

கார் அடங்கியன தாரகை அடங்கியன கோள் கதி அடங்கியன மூவர் சிலர் தேவர் ககனத்து – தக்கயாகப்பரணி:8 407/1
பல வெண் பணி அவையும் சிலர் விடுதந்தன பண்டே – தக்கயாகப்பரணி:8 449/2
மெய் அடங்க வெந்தார் சிலர் விண்ணவர் – தக்கயாகப்பரணி:8 576/1

மேல்

சிலவே (1)

சேனை ஆன சில நிற்ப எவன் நிற்பது என இ செல்லும் நால் அணியிலும் தலைவர் ஆன சிலவே – தக்கயாகப்பரணி:8 401/2

மேல்

சிலாதல (1)

விழும் விழும் சிலாதல நிலம் பகிர்ந்து உரகர் விடர் நடுவு வீழவே – தக்கயாகப்பரணி:8 416/1

மேல்

சிலாவருடம் (1)

மலை கொண்டு எழுவார் கடல் கொண்டு எழுவார் மிசை வந்து சிலாவருடம் சொரிவார் – தக்கயாகப்பரணி:6 205/1

மேல்

சிலை (7)

எருதோடு கலையோடு சிலை ஓட மலை ஓட இபம் ஓடவே – தக்கயாகப்பரணி:1 8/1
எமது மலை இறை இகல் பொரு சிலை மலை ரவியும் மதியமும் உடன் வலம்வரு மலை இருளும் இருள் கெட எரி தமனிய மலை ரசத மலை இ மலையில் ஓர் சிறு குவடு – தக்கயாகப்பரணி:2 43/1
தங்கு மலை சிலை கொண்ட பொழுது உலகங்கள் தகைவது தண்டமே – தக்கயாகப்பரணி:6 161/2
நின்ற வீரனை மாமன் வேள்வி தகர்க்க என்று நெடும் சிலை
குன்ற வீரர் பணித்தலும் பணியாமல் வந்தன கூளியே – தக்கயாகப்பரணி:8 335/1,2
அம்ம்பாய் வருகிலீர் சிலை புகுந்து பிடியீர் அஃது போலும் இனி எம்மொடு உறும் உம்மது உறவே – தக்கயாகப்பரணி:8 709/2
பொரும் அம்பு சிலை கொள்வதில்லை இவ் உலகையும் பொரு பினாகத்தையும் ஒரு பெரும் பன்றியாய் – தக்கயாகப்பரணி:8 715/1
குலம்கொண்ட அமரர் எல்லாம் குனி சிலை வீரன்-தன்னை – தக்கயாகப்பரணி:10 799/1

மேல்

சிலை-கொல் (1)

புதைவது சிலை-கொல் பொருப்புமே – தக்கயாகப்பரணி:8 526/2

மேல்

சிலைப்பவே (1)

சிலையும் சிலையும் சிலைப்பவே – தக்கயாகப்பரணி:8 519/2

மேல்

சிலையால் (1)

மாகத்து நிரைத்து மழை சிலையால் வழி தோரணம் இட்டனன் வாசவனே – தக்கயாகப்பரணி:6 182/2

மேல்

சிலையில் (1)

ஒன்றுமே அவை அனைத்தையும் ஒருக்க நெடியோன் உள் அழிந்து தலையை சிலையில் வைத்து உளையவே – தக்கயாகப்பரணி:8 725/2

மேல்

சிலையும் (2)

சிலையும் சிலையும் சிலைப்பவே – தக்கயாகப்பரணி:8 519/2
சிலையும் சிலையும் சிலைப்பவே – தக்கயாகப்பரணி:8 519/2

மேல்

சிலையை (1)

திரையை தோய்வன நாலிரு திசையை சூழ்வன சூழ்வரு சிலையை போல்வன தானவர் திரளை போழ்வன ஏழ் குல – தக்கயாகப்பரணி:8 268/1

மேல்

சிவக்க (1)

இந்தனாடவி முன் சிவக்க எரிந்தது ஒத்தது இருண்ட தண் – தக்கயாகப்பரணி:8 329/1

மேல்

சிவனே (1)

சிறுமை எவன்-கொல் என்னை மதியாது சேனை விடுவான் எவன்-கொல் சிவனே – தக்கயாகப்பரணி:8 447/2

மேல்

சிவாகம (2)

சேவக முராரிகள் புராரிகள் தெரித்தன சிவாகம விதம் தெரிவரே – தக்கயாகப்பரணி:3 79/1
வாராய் இவர் ஆகம துல்லபமும் வரும் எங்கள் சிவாகம வல்லபமும் – தக்கயாகப்பரணி:6 215/1

மேல்

சிவிகை (1)

உவரி பரு முத்தம் நிரைத்த திருப்பள்ளி சிவிகை புடை உம்பர் வர – தக்கயாகப்பரணி:6 181/1

மேல்

சிற்சில (1)

சீறி சமண் மூகர் குலச்சிறையார் செவி வேவன சிற்சில செப்புவரே – தக்கயாகப்பரணி:6 189/2

மேல்

சிற்றுரிவை (1)

உழுவை சிற்றுரிவை பச்சு உதிர பட்டினரே – தக்கயாகப்பரணி:3 97/2

மேல்

சிறக்கவே (1)

சினமும் சினமும் சிறக்கவே – தக்கயாகப்பரணி:8 513/2

மேல்

சிறகின் (1)

ஆழி மாயன் விட ஆதி வானவன் முன் ஆடக சிறகின் அருகு புக்கு – தக்கயாகப்பரணி:8 647/1

மேல்

சிறகு (2)

பள்ளி குன்றும் வில் குன்றும் ஒழிய சிறகு அறுப்புண்டு பாழ் – தக்கயாகப்பரணி:8 536/1
மாறின மடுத்த செந்தீ மலை சிறகு அடுத்து பற்றி – தக்கயாகப்பரணி:9 749/1

மேல்

சிறப்பு (1)

வேய்க்கு சிறப்பு என்-கொல் வேறே – தக்கயாகப்பரணி:8 304/2

மேல்

சிறிது (6)

கண பறை குரல் படப்பட சிறிது செவிடுபடும் அமரர் கன்னமே – தக்கயாகப்பரணி:3 53/2
எல்லை நான்மறை பரவும் இறைமகளை சிறிது உரைத்தாம் – தக்கயாகப்பரணி:5 120/1
பதி துரந்து படை அயின்று சிறிது அவிந்த பசியவே – தக்கயாகப்பரணி:5 131/2
பரி பிளந்து தசை மிசைந்து சிறிது அவிந்த பசியவே – தக்கயாகப்பரணி:5 132/2
ஒப்பு அரும் கடவுள் ஆலம் உண்டு அதனை உள்ளவா சிறிது உரைத்துமே – தக்கயாகப்பரணி:6 139/2
விளைந்து வந்தன வெறும் பொடி தனது கை பொடி சிறிது வீசவே – தக்கயாகப்பரணி:8 654/2

மேல்

சிறு (6)

எமது மலை இறை இகல் பொரு சிலை மலை ரவியும் மதியமும் உடன் வலம்வரு மலை இருளும் இருள் கெட எரி தமனிய மலை ரசத மலை இ மலையில் ஓர் சிறு குவடு – தக்கயாகப்பரணி:2 43/1
புற்றில்-நின்று எழு புயங்க சூடிகை நெருப்பு விட்ட சிறு பொறி என – தக்கயாகப்பரணி:3 52/1
சண்ட எரியினுள் நின்று குளிர்வது தங்கள் ஒரு சிறு திங்களே – தக்கயாகப்பரணி:3 63/2
கவரி சிறு தென்றல் அசைப்ப மிசை கொற்றக்குடை வந்து கவிப்பவுமே – தக்கயாகப்பரணி:6 181/2
பாவியார் சிறு தக்கனார் ஒரு பக்கமாய பரம்பரன் – தக்கயாகப்பரணி:8 245/1
கானாள் குல கிரி தன் மலை கயிலை சிறு கறடே – தக்கயாகப்பரணி:8 448/2

மேல்

சிறுமை (1)

சிறுமை எவன்-கொல் என்னை மதியாது சேனை விடுவான் எவன்-கொல் சிவனே – தக்கயாகப்பரணி:8 447/2

மேல்

சிறை (5)

கிள்ளி சிறை பாரம் உகிரில் கிடப்ப கிளர்ந்து உம்பர் கோமானை மானம் கெடுத்தே – தக்கயாகப்பரணி:8 537/2
கட்டி குறங்கை குறங்காலும் மோதி காதும் சிறை கைகளை கைகளாலே – தக்கயாகப்பரணி:8 540/1
செஞ்சூடிகா கோடி சிந்த பறித்து சிறை புள் குலம் காவலன் சீர் சிதைத்தே – தக்கயாகப்பரணி:8 554/2
அரிய வீழ்ந்த அரும் சிறை உள்ளியோ – தக்கயாகப்பரணி:8 679/1
நின்ற வில்லி கொடியில் கருடன் ஆர்த்த பொழுதே நிமிர் சிறை கருட லோகம் உடன் ஆர்த்தது எழவே – தக்கயாகப்பரணி:8 704/1

மேல்

சின்னம் (1)

பெய்த சிங்க சின்னம் பிடிக்கவே – தக்கயாகப்பரணி:8 344/2

மேல்

சின (2)

சீறிய சின தீ உண்ண திரிபுரம் எரித்த நாளில் – தக்கயாகப்பரணி:8 620/1
சிங்கமும் கற்கியும் பன்றியும் செற்றவன் திரிய நீர் செல்க என சென்று மால் சின எரி – தக்கயாகப்பரணி:8 719/1

மேல்

சினத்தொடு (1)

பிள்ளை கொண்ட சினத்தொடு அ கனல் சென்று தென்னர்பிரான் உயிர் – தக்கயாகப்பரணி:6 174/1

மேல்

சினம் (1)

இளைய வாசவன் விசும்பின்-நின்றும் விழ எரி சினம் திருகி இந்த்ரனே – தக்கயாகப்பரணி:8 651/2

மேல்

சினமும் (2)

சினமும் சினமும் சிறக்கவே – தக்கயாகப்பரணி:8 513/2
சினமும் சினமும் சிறக்கவே – தக்கயாகப்பரணி:8 513/2

மேல்