மு – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முக்க 1
முக்கண் 1
முக்கணினர் 1
முக்கணும் 1
முக்கப்பினரே 1
முக்கால் 1
முக்கி 2
முக்குடுமி 2
முக 6
முகக்கும் 3
முகடு 5
முகடுபடும் 1
முகத்தன 1
முகத்தின 1
முகத்து 2
முகந்த 1
முகந்து 2
முகம் 3
முகம்கொடாது 1
முகர 1
முகில் 8
முகில்களை 1
முகிலூர்தி 1
முகிழ்த்த 1
முகிழ்த்து 1
முகுந்தன் 5
முகை 2
முச்சிர 1
முச்சுடர் 1
முசலமே 1
முசி 1
முட்ட 5
முட்டவே 1
முட்டியே 1
முட்டுவன 1
முடப்படுத்தே 1
முடம்செய்தே 1
முடி 17
முடிக்-கண் 1
முடிதும் 1
முடிந்த 1
முடிய 3
முடியால் 1
முடியில் 1
முடிவின் 1
முடுக்கும் 1
முடுக 1
முடுகி 1
முடுகிய 1
முடுகினர் 1
முடை 3
முத்தம் 2
முத்தர் 1
முத்தழல் 2
முத்தன் 1
முத்தாரம் 1
முத்தாரமும் 1
முத்து 7
முத்தொகையும் 1
முதல் 12
முதல்காறும் 1
முதல்வராய் 1
முதல்வன்-தன்னை 1
முதல 1
முதலா 1
முதலாக 2
முதலாயின 1
முதலிய 1
முதிய 3
முதியவன் 1
முதிர் 1
முதிர்ந்த 1
முது 2
முதுகல் 1
முதுகும் 2
முதுமரம் 1
முப்பத்திரண்டையும் 1
முப்பத்துநால் 1
முப்பத்துமுத்தேவராயவர்-தம் 1
முப்புரத்தில் 1
முப்புரம் 2
முப்போர் 1
மும்மத 1
முயலகன் 1
முயன்றிலமோ 1
முரசமே 1
முரசு 1
முராரி 1
முராரிகள் 2
முராரியும் 1
முரி 2
முரிந்தது 1
முருகன் 1
முருட்டு 1
முல்லை 2
முல்லையே 1
முல்லையோ 1
முலை 7
முழங்கின 1
முழங்குவனவே 1
முழவின் 1
முழு 1
முழுகி 1
முழுகும் 1
முழுதும் 1
முழுதுமே 1
முழுவதும் 2
முள்கோல் 1
முளரி 7
முளி 2
முளிபடும் 1
முளியுமால் 1
முற்பட 1
முற்ற 1
முற்று 1
முற்றும் 9
முறிகளும் 1
முறித்து 1
முறிதும் 3
முறிய 1
முறை 1
முறையால் 1
முன் 14
முன்பு 7
முன்றில் 2
முன்னம் 1
முன்னமுன்ன 1
முன்னர் 1
முன்னை 5
முன்னையின் 1
முனி 3
முனிந்தனள் 1
முனிந்திடுவான் 1
முனிந்து 1
முனிபுங்கவர் 1
முனிவர் 2
முனிவரன் 1
முனிவரில் 1
முனிவரும் 1
முனிவு 3
முனிவுண்டு 1

முக்க (1)

முற்று மேரு ஆதிகளை முக்க வாரி ஊழி எரி முத்தன் நீல மோலி என முட்ட ஓதம் மீது எரிய – தக்கயாகப்பரணி:8 469/1

மேல்

முக்கண் (1)

தன் கண்ணினில் முக்கண் இனி யார் கண்ணது தாழ்வே – தக்கயாகப்பரணி:8 454/2

மேல்

முக்கணினர் (1)

எரி கக்கும் முக்கணினர் இடி ஒக்கும் முக்குடுமி எறி வேலினோர் – தக்கயாகப்பரணி:8 461/1

மேல்

முக்கணும் (1)

அந்தி சே ஒளி முச்சுடர் முக்கணும் ஆதி காதல் கூர் ஆயிரம் பேரிதழ் – தக்கயாகப்பரணி:8 281/1

மேல்

முக்கப்பினரே (1)

பகை குத்தி பயில் சத்தி பரு முக்கப்பினரே – தக்கயாகப்பரணி:3 98/2

மேல்

முக்கால் (1)

முக்கால் இழந்த கதை பாட மூரி கபாடம் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 46/2

மேல்

முக்கி (2)

முதிய வான மீன் வாரி முக்கி வான் – தக்கயாகப்பரணி:8 358/1
மலைகள் வாரியன ஏழும் முக்கி அவை விக்கி உடுவொடும் அடுத்து எடுத்து – தக்கயாகப்பரணி:8 410/1

மேல்

முக்குடுமி (2)

எரி கக்கும் முக்கணினர் இடி ஒக்கும் முக்குடுமி எறி வேலினோர் – தக்கயாகப்பரணி:8 461/1
சாதி தழலாம் முத்தொகையும் முக்குடுமி சத்தி பிழையாமே குத்தி தனி நெற்றி – தக்கயாகப்பரணி:8 696/1

மேல்

முக (6)

சத கோடி இ தாள சதி பாய முக பாகை குதி பாய் கடாம் – தக்கயாகப்பரணி:1 3/1
தார் மார்பமும் முக விம்பமும் நும் காதலர் தர நீர் – தக்கயாகப்பரணி:2 10/1
மகர வாரிதி மறுக வாசுகி வளைய மேருவில் வட முக
சிகர சீகர அருவி நீர்அரமகளிர் நீர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 30/1,2
அக வனசம் முக வனசம் அவை மலர அரிவார் – தக்கயாகப்பரணி:3 92/1
பார் முகக்கும் உருமு கழு நிரைத்த படையார் பல முக குமுத வாய் இறைவி பைரவர்களே – தக்கயாகப்பரணி:8 429/2
விரி முக கடல் ஏழ் பெரு வெள்ளமும் – தக்கயாகப்பரணி:8 587/1

மேல்

முகக்கும் (3)

கார் முகக்கும் இரவு என்ன இருள் குஞ்சி விரிவார் கடல் முகக்கும் அகல் வாயன கபாலம் உடையார் – தக்கயாகப்பரணி:8 429/1
கார் முகக்கும் இரவு என்ன இருள் குஞ்சி விரிவார் கடல் முகக்கும் அகல் வாயன கபாலம் உடையார் – தக்கயாகப்பரணி:8 429/1
பார் முகக்கும் உருமு கழு நிரைத்த படையார் பல முக குமுத வாய் இறைவி பைரவர்களே – தக்கயாகப்பரணி:8 429/2

மேல்

முகடு (5)

முறிய மோதி வான் யாறு முழுதும் மாறி ஆகாய முடிய ஏறி மேலாய முகடு சாடு தாளாளே – தக்கயாகப்பரணி:4 108/2
கடை பயின்ற பவனம் அண்ட முகடு கொண்ட கனவொடும் – தக்கயாகப்பரணி:7 240/1
முகடு விண்ட பழ அண்ட கோளமும் முன்னை மேருவும் இட்டு உருக்கி பெரும் – தக்கயாகப்பரணி:8 276/1
எழவிடும் கிரிகள் சூழும் அண்ட முகடு ஏழும் ஊடுருவ ஏறவே – தக்கயாகப்பரணி:8 418/2
முகடு தகர்ந்து சிந்த முரி சக்ரவாளகிரியே பிடித்து முகில் எண் – தக்கயாகப்பரணி:8 437/1

மேல்

முகடுபடும் (1)

முடுகிய புறம்பு நீர் நலிய முகடுபடும் அண்டகோளகையை – தக்கயாகப்பரணி:6 140/1

மேல்

முகத்தன (1)

மாண் என் எண்மரும் நால் முகத்தன மூகை சூழ அமைந்தது ஓர் – தக்கயாகப்பரணி:8 621/1

மேல்

முகத்தின (1)

கோடு நான்கின செக்கர் முகத்தின குஞ்சரம் பதினாயிர கோடியே – தக்கயாகப்பரணி:8 274/2

மேல்

முகத்து (2)

பரி முகத்து ஒரு செந்தீ பருகவே – தக்கயாகப்பரணி:8 587/2
நின்று அலைப்பன நால் முகத்து ஒரு பேய் மடுப்ப நிணம் பெய் கூழ் – தக்கயாகப்பரணி:9 763/1

மேல்

முகந்த (1)

அடல் முகந்த திகிரி மொய்ம்பன் அமளி மண்டி அறிதுமே – தக்கயாகப்பரணி:7 239/2

மேல்

முகந்து (2)

கடல் முகந்து தனி எழுந்த முகில் விழுந்த கனவுகண்டு – தக்கயாகப்பரணி:7 239/1
குண்டர் பொன் எயில் வட்டம் முட்ட முகந்து அளந்து கொடுக்கவே – தக்கயாகப்பரணி:9 760/2

மேல்

முகம் (3)

கொம்பு இரண்டு முகம் ஒன்று நடை நாலு முதுகும் கூறு இரண்டுபட வீழ் புடவி நீறுபட ஓர் – தக்கயாகப்பரணி:8 716/1
பொன் முகம் ஒன்று பண்டு போனது புகுத பொன்றி – தக்கயாகப்பரணி:10 781/1
தன் முகம் ஐந்தும் பெற்ற சதுமுக பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 781/2

மேல்

முகம்கொடாது (1)

தாதை முகம்கொடாது விடுவான் நமக்கும் உலகுக்கும் என்-கொல் தவறே – தக்கயாகப்பரணி:8 436/2

மேல்

முகர (1)

முகர வாயன் வருணன் முதியவன் – தக்கயாகப்பரணி:8 686/1

மேல்

முகில் (8)

அளக முகில் இரு புடையினும் அதிரவும் அகரு மணம் மிர்கமதமொடு கமழவும் அதிகம் இடை இடை சில கொடி அசையவும் அமிர்து பொதிவன சில குவடு அசையவும் – தக்கயாகப்பரணி:2 42/1
கால இறுதி எரி போல முகில் வயிறு காய வரும் உருமு கக்குமே – தக்கயாகப்பரணி:3 57/2
கொக்கு ஒழுங்குபட ஓடி முகில் கூடி அனையார் – தக்கயாகப்பரணி:3 93/1
கடல் முகந்து தனி எழுந்த முகில் விழுந்த கனவுகண்டு – தக்கயாகப்பரணி:7 239/1
விட்ட கார் முகில் யாவை யாவர் சுரேசர் என்று வியக்கவே – தக்கயாகப்பரணி:8 258/1
முகடு தகர்ந்து சிந்த முரி சக்ரவாளகிரியே பிடித்து முகில் எண் – தக்கயாகப்பரணி:8 437/1
முழங்கின முகில் என முரசமே – தக்கயாகப்பரணி:8 530/1
நீலம் உண்ட முகில் குழாம் என நின்ற பேய் இது நிற்பது ஓர் – தக்கயாகப்பரணி:9 762/1

மேல்

முகில்களை (1)

அற்றை நாள் குருதி பெய்த முகில்களை அழைத்துக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 737/2

மேல்

முகிலூர்தி (1)

காணீர் இவர் தம் திருநீறு இடவே முகிலூர்தி பெறாத கவின் பெறவே – தக்கயாகப்பரணி:6 193/2

மேல்

முகிழ்த்த (1)

என்றலும் முகிழ்த்த குறுமுறுவலொடும் ரசதக்குன்றவர் – தக்கயாகப்பரணி:8 291/1

மேல்

முகிழ்த்து (1)

வெளி படப்பட முகிழ்த்து எயிறு எறிக்கும் நிலவார் விழி பட குழை சுட சுடர் எறிக்கும் வெயிலார் – தக்கயாகப்பரணி:8 431/1

மேல்

முகுந்தன் (5)

சூலமோ புவனங்களுக்கும் முகுந்தன் ஆதி சுரர்க்கும் மாய் – தக்கயாகப்பரணி:8 632/1
சக்கரப்படை முகுந்தன் ஏவ அதுதானும் எங்கள் இரைதான் எனா – தக்கயாகப்பரணி:8 649/1
அனலன் மேனியில் முகுந்தன் விடும் அம்பு அடைய வேம் ஆதலால் அவர் வலம் தெரிவது அம்ம அரிதே – தக்கயாகப்பரணி:8 710/2
முரசு உள முகுந்தன் மூங்கில் சார்ங்கம் உண்டு அவற்றின் மூட்டீர் – தக்கயாகப்பரணி:9 745/2
உந்தியில் முகுந்தன் முன் நாள் உயிர்த்த தாமரையும் ஈரைந்து – தக்கயாகப்பரணி:9 757/1

மேல்

முகை (2)

ஊரும் பகல் தேரை முட்டுவன கட்டுவன உருகா கொழுந்து முகை கருகா செழும் துணரே – தக்கயாகப்பரணி:3 76/2
கூர புறவ முல்லை முகை நகையினும் கொல்லுகை தவிரா இறைவி சாகினிகளே – தக்கயாகப்பரணி:8 430/2

மேல்

முச்சிர (1)

முச்சிர படையும் வேறு செய்திலது நீறு செய்தது எதிர் முட்டியே – தக்கயாகப்பரணி:8 657/2

மேல்

முச்சுடர் (1)

அந்தி சே ஒளி முச்சுடர் முக்கணும் ஆதி காதல் கூர் ஆயிரம் பேரிதழ் – தக்கயாகப்பரணி:8 281/1

மேல்

முசலமே (1)

முசலமே ஆக முப்பத்திரண்டையும் முறித்து குத்தீர் – தக்கயாகப்பரணி:9 735/2

மேல்

முசி (1)

திருகு வார் முசி விசி விடாதவர் திற-மினோ கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 32/2

மேல்

முட்ட (5)

முடி இட்டு முட்ட வரும் முதுகல் குவட்டு மலை முதல்காறும் வீழ் – தக்கயாகப்பரணி:8 464/1
முற்று மேரு ஆதிகளை முக்க வாரி ஊழி எரி முத்தன் நீல மோலி என முட்ட ஓதம் மீது எரிய – தக்கயாகப்பரணி:8 469/1
பொய் தேர் அணி முட்ட வெறும் பொடியாய் – தக்கயாகப்பரணி:8 599/1
அண்டர் பொன் எயில் வட்டம் முட்ட நெருங்கு பேய் பெற அட்ட கூழ் – தக்கயாகப்பரணி:9 760/1
குண்டர் பொன் எயில் வட்டம் முட்ட முகந்து அளந்து கொடுக்கவே – தக்கயாகப்பரணி:9 760/2

மேல்

முட்டவே (1)

முன் வரும் சுரரோடும் இந்திரன் வந்து தோமரம் முட்டவே – தக்கயாகப்பரணி:8 642/2

மேல்

முட்டியே (1)

முச்சிர படையும் வேறு செய்திலது நீறு செய்தது எதிர் முட்டியே – தக்கயாகப்பரணி:8 657/2

மேல்

முட்டுவன (1)

ஊரும் பகல் தேரை முட்டுவன கட்டுவன உருகா கொழுந்து முகை கருகா செழும் துணரே – தக்கயாகப்பரணி:3 76/2

மேல்

முடப்படுத்தே (1)

பகட்டின் ஒடித்து உருத்திரரை திருக்கை முடப்படுத்தே – தக்கயாகப்பரணி:8 483/2

மேல்

முடம்செய்தே (1)

முடம்செய்தே அவர் முத்து எருத்து எற்றியே – தக்கயாகப்பரணி:8 580/2

மேல்

முடி (17)

ஈரும் மதியம் என முதிய மதி வெருவி ராசராச நாயகர் முடி
சேரும் மதியம் என இளையமதியொடு உறவு உடைய மகளிர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 21/1,2
வாரும் சடாடவி முடி தேவர்-தம் தேவி வன் மான் உகைத்த கொடி பொன் மாதவி கொடிகள் – தக்கயாகப்பரணி:3 76/1
முடி சூட்டு முல்லையோ முதல் கற்பு முல்லையே – தக்கயாகப்பரணி:4 119/2
கவனத்தால் எழு வாரிதி கழிய பாய் பரி மாவின கமலத்தோன் முடி தாழ்வன கனக தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 269/2
மாலை சூழ் முடி சூழ் வருதற்கு ஒளி மழுங்கி மேரு கிரி சூழ் வருவதே – தக்கயாகப்பரணி:8 279/2
முடி இட்டு முட்ட வரும் முதுகல் குவட்டு மலை முதல்காறும் வீழ் – தக்கயாகப்பரணி:8 464/1
கதித்து உரக கழுத்தின் முடி கவர்ப்பு அடைய கழித்தே – தக்கயாகப்பரணி:8 478/2
தகட்டு முடி பசுக்கள் வசுக்களை தழுவி சமைத்தே – தக்கயாகப்பரணி:8 483/1
தடுத்த குல பொருப்பை முடி தடத்து உடைய தகர்த்தே – தக்கயாகப்பரணி:8 484/1
வாடா மிஞிறு இமிரா முடி மாலை துகைப்பன வல் வாய் எருவைகள் வானோர் பெருமிதம் வாழியே – தக்கயாகப்பரணி:8 562/2
சூலம் ஒன்று தனி சென்று மற்றவன் மணி துழாய் முடி துணித்ததே – தக்கயாகப்பரணி:8 650/2
விண்தலம் முடி இட நேர் விண்ணவரே இனி நேர் – தக்கயாகப்பரணி:8 692/2
கொண்டுவா பொர இறப்பன பிறப்பின் இனி விடாய் கொய்தகொய்த நின் முடி பழைய கோவை குறியாய் – தக்கயாகப்பரணி:8 724/1
செரு முடி சுரேசரோடு த்ரிவிக்ரமன் வீழ வீழ்ந்த – தக்கயாகப்பரணி:9 734/1
பெரு முடி உரல்களாக பிறங்கிய அரிசி பெய்யீர் – தக்கயாகப்பரணி:9 734/2
குடர் முடி செறிய கட்டி கோவையா சேர்த்து தேவர் – தக்கயாகப்பரணி:9 743/1
சுடர் முடி கடக சூத்ரம் உடம்பு எலாம் தொடக்கிக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 743/2

மேல்

முடிக்-கண் (1)

குளிப்பார் இலர் அஞ்சாது இது கொண்டு ஓதி முடிக்-கண்
தெளிப்பார் கலைமகள் பார்மகள் திரு என்பவர் இவரே – தக்கயாகப்பரணி:8 320/1,2

மேல்

முடிதும் (1)

முடிதும் என மறை முதலிய பரவவும் முறிதும் என நிசிசரர் குலம் இரியவும் முறிதும் என எழு குலகிரி குலையவும் முறிதும் என எழு புணரிகள் மறுகவும் – தக்கயாகப்பரணி:2 40/1

மேல்

முடிந்த (1)

சதுமுகன் முடிந்த ஊழி ஒரு சருகு இலை உதிர்ந்து தூர் புனலின் – தக்கயாகப்பரணி:6 142/1

மேல்

முடிய (3)

முறிய மோதி வான் யாறு முழுதும் மாறி ஆகாய முடிய ஏறி மேலாய முகடு சாடு தாளாளே – தக்கயாகப்பரணி:4 108/2
என்றார் அவர் என்றலுமே கெடுவீர் எரியால் அரவால் இடியால் முடிய
சென்றார் பவம் ஏழினும் இப்படியே செல்வார் இவர் முன்பு செயிர்த்தவரே – தக்கயாகப்பரணி:6 192/1,2
கண் நுதல் கடவுள் வென்ற களம் என்று முடிய கட்டுரைப்பது என நின்று இறைவி கண்டருளியே – தக்கயாகப்பரணி:9 728/2

மேல்

முடியால் (1)

விதைக்கும் அ பகழி வில் பொருநன் வைத்த முடியால் மிக வளைந்து குதைபோய் நெகிழ விண்ணுற நிமிர்ந்து – தக்கயாகப்பரணி:8 726/1

மேல்

முடியில் (1)

கொச்சை பெருமான் அடி தன் முடியில் கொண்டான் அதிகாரி குலச்சிறையே – தக்கயாகப்பரணி:6 180/2

மேல்

முடிவின் (1)

கடல் குடித்து அவனி தின்று உலகும் அண்டமும் எழ கதுவும் ஊழி முடிவின் கனல் என கடுகவே – தக்கயாகப்பரணி:8 400/2

மேல்

முடுக்கும் (1)

குறுகு முடுக்கும் இலங்கு பொலன் கொடி – தக்கயாகப்பரணி:11 802/1

மேல்

முடுக (1)

கால நேமி ரத நேமி இரு காலும் முடுக கடவுள் வீதியில் விசும்பிடை பட கடுகியே – தக்கயாகப்பரணி:8 707/2

மேல்

முடுகி (1)

முன்னையின் எழு மடி முடுகி மூளவே – தக்கயாகப்பரணி:8 567/2

மேல்

முடுகிய (1)

முடுகிய புறம்பு நீர் நலிய முகடுபடும் அண்டகோளகையை – தக்கயாகப்பரணி:6 140/1

மேல்

முடுகினர் (1)

கூறுபடு பிறை ஆறு சுழல் சடையோடு முடுகினர் கூடவே – தக்கயாகப்பரணி:8 251/2

மேல்

முடை (3)

மழவில் பாற்கடல் மாந்தி வளர்ந்தன மதத்தில் அ கடல் பால் முடை மாற்றின – தக்கயாகப்பரணி:8 273/1
முடை கமழ்ந்து தசை இழந்து முது நரம்பொடு என்புமாய் – தக்கயாகப்பரணி:8 565/1
முடை அழுங்கி அமிர்தம் நாறி அழகு அமைந்த மொய்ம்பினால் – தக்கயாகப்பரணி:8 566/1

மேல்

முத்தம் (2)

உவரி பரு முத்தம் நிரைத்த திருப்பள்ளி சிவிகை புடை உம்பர் வர – தக்கயாகப்பரணி:6 181/1
மேகத்து ஒரு பந்தர் எடுத்து உடுவாம் வெண் முத்தம் ஒழுக்கி மினல் கொடியால் – தக்கயாகப்பரணி:6 182/1

மேல்

முத்தர் (1)

முன் நரம்பினும் முத்தர் மிடற்றினும் – தக்கயாகப்பரணி:8 610/1

மேல்

முத்தழல் (2)

விவித முத்தழல் மீது வெய்ய நெய் – தக்கயாகப்பரணி:8 506/1
முனி கணத்தர்-தம் முத்தழல் மூழ்கவே – தக்கயாகப்பரணி:8 586/2

மேல்

முத்தன் (1)

முற்று மேரு ஆதிகளை முக்க வாரி ஊழி எரி முத்தன் நீல மோலி என முட்ட ஓதம் மீது எரிய – தக்கயாகப்பரணி:8 469/1

மேல்

முத்தாரம் (1)

வெள் எயிற்று முத்தாரம் மின்னவே – தக்கயாகப்பரணி:8 340/2

மேல்

முத்தாரமும் (1)

நதிக்கு போத ஒழுகும் முத்தாரமும் நகைசெய் வச்சிர நாயக மாலையும் – தக்கயாகப்பரணி:8 280/1

மேல்

முத்து (7)

கழை முத்து பொதி கக்க கிழி கண் கட்சியரே – தக்கயாகப்பரணி:3 102/2
ஓதியில் செவி துளை திளைக்கும் முத்து உடுப்பவே – தக்கயாகப்பரணி:5 123/2
செருவிற்கு உருத்து எதிர்வர் சில முத்து எருத்தர் பதினொரு தேவரே – தக்கயாகப்பரணி:8 461/2
கலக்கல முத்து உகுப்ப அடல் கடல் சுறவை கடித்தே – தக்கயாகப்பரணி:8 491/2
முடம்செய்தே அவர் முத்து எருத்து எற்றியே – தக்கயாகப்பரணி:8 580/2
மத புது தயிலம் தோய்ந்த மணி முத்து பிளவும் கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 756/2
கருத்து பேய் ஏற ஏறும் கழி பசி உழப்பது ஓர் முத்து
எருத்து பேய் ஏறி நின்ற இ பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 789/1,2

மேல்

முத்தொகையும் (1)

சாதி தழலாம் முத்தொகையும் முக்குடுமி சத்தி பிழையாமே குத்தி தனி நெற்றி – தக்கயாகப்பரணி:8 696/1

மேல்

முதல் (12)

புயல் வாழ நெடிது ஊழி புவி வாழ முதல் ஈறு புகல் வேதநூல் – தக்கயாகப்பரணி:1 1/1
யோக முதல் இறைவி கோயில் மிசை நிருதர் யூதம் வர அலகை ஓட்டுமே – தக்கயாகப்பரணி:3 56/1
விரவுவன பூதமோ விண் முதல் ஐம்பூதமே – தக்கயாகப்பரணி:4 113/2
முடி சூட்டு முல்லையோ முதல் கற்பு முல்லையே – தக்கயாகப்பரணி:4 119/2
கண் நுதல் முதல் கடவுளும் கருணைவைத்தே – தக்கயாகப்பரணி:8 289/2
நதிகள் ஏழினும் முதல் கிரிகள் ஏழினும் அறா நளினி ஏழினும் வலம்புரிய நல்லன மகோததிகள் – தக்கயாகப்பரணி:8 397/1
எயிறு வெட்டுவன சக்ரவாளம் முதல் ஏழ் பொருப்பும் எட்டு எண் பணி – தக்கயாகப்பரணி:8 411/1
சிரங்களால் அரசு பணியும் ஆகி முதல் பூதநாதர் பலர் செல்லவே – தக்கயாகப்பரணி:8 417/2
சாய்வது இன்மையின் நெருக்கி மேரு முதல் தாமும் நின்ற அவர் தாள் நிலம் – தக்கயாகப்பரணி:8 426/1
முதல் குலத்த பதினெண் பதாதி புடையே பரந்த படையே – தக்கயாகப்பரணி:8 445/2
எண் கூறு அவன் ஒரு பேருரு அதனில் கனல் முதல் ஏழ் – தக்கயாகப்பரணி:8 452/1
சுமக்கும் நாகம் நமது ஆதலின் அதற்கு இனி முதல் சுரர் பிண தொகை சுமப்பது அரிதாகும் அவை கொண்டு – தக்கயாகப்பரணி:9 729/1

மேல்

முதல்காறும் (1)

முடி இட்டு முட்ட வரும் முதுகல் குவட்டு மலை முதல்காறும் வீழ் – தக்கயாகப்பரணி:8 464/1

மேல்

முதல்வராய் (1)

மூவராய் அவரின் முதல்வராய் அதிதி புதல்வராய முப்பத்துமுத்தேவராயவர்-தம் – தக்கயாகப்பரணி:2 16/1

மேல்

முதல்வன்-தன்னை (1)

தானும் இன்றி அற நின்ற தனி மூல முதல்வன்-தன்னை ஒத்தது இனி என்னை இது தானை நிலையே – தக்கயாகப்பரணி:8 408/2

மேல்

முதல (1)

இது முதல ஐந்து பூதம் என இரு நிலம் வழங்கு சோபையது – தக்கயாகப்பரணி:6 142/2

மேல்

முதலா (1)

நின் முதலாக தோன்றும் நெடிய மால் முதலா உள்ளோர் – தக்கயாகப்பரணி:10 795/1

மேல்

முதலாக (2)

நின் முதலாக தோன்றும் நெடிய மால் முதலா உள்ளோர் – தக்கயாகப்பரணி:10 795/1
என் முதலாக மாய்தற்கு உறுவது என் இறைவ என்றே – தக்கயாகப்பரணி:10 795/2

மேல்

முதலாயின (1)

காலை சூழ் செங்கதிர் முதலாயின கமல காடு அன்ன கண்ணன் கமழ் துழாய் – தக்கயாகப்பரணி:8 279/1

மேல்

முதலிய (1)

முடிதும் என மறை முதலிய பரவவும் முறிதும் என நிசிசரர் குலம் இரியவும் முறிதும் என எழு குலகிரி குலையவும் முறிதும் என எழு புணரிகள் மறுகவும் – தக்கயாகப்பரணி:2 40/1

மேல்

முதிய (3)

ஈரும் மதியம் என முதிய மதி வெருவி ராசராச நாயகர் முடி – தக்கயாகப்பரணி:2 21/1
முதிய வான மீன் வாரி முக்கி வான் – தக்கயாகப்பரணி:8 358/1
தக்கனை முதிய மோத்தை தலை பெற அருளிச்செய்தே – தக்கயாகப்பரணி:10 797/2

மேல்

முதியவன் (1)

முகர வாயன் வருணன் முதியவன்
மகர போசனமாய் உடன் மாயவே – தக்கயாகப்பரணி:8 686/1,2

மேல்

முதிர் (1)

வரையை பாய்வன சூல் முதிர் மழையை கீள்வன கால் கொடு மதியை காய்வன பேரொளி வயிர தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 268/2

மேல்

முதிர்ந்த (1)

சோரி உண்டு சூல் முதிர்ந்த போல் மிதந்த தோலவே – தக்கயாகப்பரணி:5 134/2

மேல்

முது (2)

முடை கமழ்ந்து தசை இழந்து முது நரம்பொடு என்புமாய் – தக்கயாகப்பரணி:8 565/1
எமக்கு நீர் கடிது கூழ் அடு-மின் என்றலும் மகிழ்ந்து யாளியூர்தி முது கூளிகள் எனை பலவுமே – தக்கயாகப்பரணி:9 729/2

மேல்

முதுகல் (1)

முடி இட்டு முட்ட வரும் முதுகல் குவட்டு மலை முதல்காறும் வீழ் – தக்கயாகப்பரணி:8 464/1

மேல்

முதுகும் (2)

இரு கூனும் நிமிர்த்தன தென்னவர்கோன் முதுகும் தட மார்பும் இடம்பெறவே – தக்கயாகப்பரணி:6 216/2
கொம்பு இரண்டு முகம் ஒன்று நடை நாலு முதுகும் கூறு இரண்டுபட வீழ் புடவி நீறுபட ஓர் – தக்கயாகப்பரணி:8 716/1

மேல்

முதுமரம் (1)

உலரும் முதுமரம் இளமையும் வளமையும் உயிரும் நிலைபெற ஒளிவிடும் இவர் உரு உறுதி அமுதினும் இவர் இவர் பிறவியும் உததி இவர்களில் ஒரு மகள் திருமகள் – தக்கயாகப்பரணி:2 38/1

மேல்

முப்பத்திரண்டையும் (1)

முசலமே ஆக முப்பத்திரண்டையும் முறித்து குத்தீர் – தக்கயாகப்பரணி:9 735/2

மேல்

முப்பத்துநால் (1)

இந்திராதிகள் விமானம் ஒரு முப்பத்துநால் இருவர் தேரினும் மடிந்தன-கொல் எங்கும் இலவே – தக்கயாகப்பரணி:8 706/2

மேல்

முப்பத்துமுத்தேவராயவர்-தம் (1)

மூவராய் அவரின் முதல்வராய் அதிதி புதல்வராய முப்பத்துமுத்தேவராயவர்-தம்
ராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 16/1,2

மேல்

முப்புரத்தில் (1)

நீறாக்குவது என் முப்புரத்தில் உள்ள வெள்ள நிருதரையே – தக்கயாகப்பரணி:7 225/2

மேல்

முப்புரம் (2)

பொன் வெள்ளி எஃகு என்ன வானத்து உலாம் முப்புரம் சுட்ட வீரர்க்கு மேலே பொலிந்தே – தக்கயாகப்பரணி:8 550/2
சோதி தழலில் பண்டு எரி முப்புரம் ஒப்ப சுட்டு ககனத்தே விட்டு துகள்செய்தே – தக்கயாகப்பரணி:8 696/2

மேல்

முப்போர் (1)

மின் வெள்ளி பொன் கொல் என சொல்லும் முப்போர் விலங்கல் குழாம் ஓர் விழி சுட்ட பூதம் – தக்கயாகப்பரணி:8 550/1

மேல்

மும்மத (1)

ஆன் நிரை தந்து அதில் ஐம்மடி மும்மத
மான் நிரை தந்த பிரான்மகன் வாழியே – தக்கயாகப்பரணி:11 806/1,2

மேல்

முயலகன் (1)

வேல் எடுத்திலர் அம்பு தொட்டிலர் முயலகன் பெரு வெரிந் மிசை – தக்கயாகப்பரணி:8 325/1

மேல்

முயன்றிலமோ (1)

யாம் யாதும் இதற்கு முயன்றிலமோ எ மந்த்ரமும் யந்த்ரமும் இல்லை-கொலோ – தக்கயாகப்பரணி:6 198/1

மேல்

முரசமே (1)

முழங்கின முகில் என முரசமே
தழங்கின எதிரெதிர் சங்கமே – தக்கயாகப்பரணி:8 530/1,2

மேல்

முரசு (1)

முரசு உள முகுந்தன் மூங்கில் சார்ங்கம் உண்டு அவற்றின் மூட்டீர் – தக்கயாகப்பரணி:9 745/2

மேல்

முராரி (1)

சேய கண் கனல் முராரி தங்கள் கடல் செல்க என்ன அது சென்றதால் – தக்கயாகப்பரணி:8 644/1

மேல்

முராரிகள் (2)

சேவக முராரிகள் புராரிகள் தெரித்தன சிவாகம விதம் தெரிவரே – தக்கயாகப்பரணி:3 79/1
இந்த்ர முராரிகள் நேர் யம வருணாதிகள் நேர் – தக்கயாகப்பரணி:8 691/1

மேல்

முராரியும் (1)

பூமி கம்பமும் எதிர்ந்தன உதிர்ந்தன உடு பொரு புராரியும் முராரியும் உடன்ற பொழுதே – தக்கயாகப்பரணி:8 705/2

மேல்

முரி (2)

முகடு தகர்ந்து சிந்த முரி சக்ரவாளகிரியே பிடித்து முகில் எண் – தக்கயாகப்பரணி:8 437/1
குத்திய அரிசி எல்லாம் முரி அற கொழிக்க வாரீர் – தக்கயாகப்பரணி:9 736/2

மேல்

முரிந்தது (1)

நேமியங்கிரி நெரிந்தது முரிந்தது இடையே நின்ற மேரு கிரி எக்கிரியும் எக்கடலும் நேர் – தக்கயாகப்பரணி:8 705/1

மேல்

முருகன் (1)

வரு கதை தெய்வ மகள் என் மருமகள் வள்ளி வதுவை மனம் மகிழ் பிள்ளை முருகன் மதுரையில் வெல்லும் இனியது – தக்கயாகப்பரணி:6 169/1

மேல்

முருட்டு (1)

ஊத்தை தலை நீத்து உய்ந்து ஒழிந்த ஒரு மாமடிகள் ஒரு முருட்டு
மோத்தை தலை பெற்றமை பாட மூரி கபாடம் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 47/1,2

மேல்

முல்லை (2)

நுதி கோடு கூர் கலை உகைப்பான் விடா முல்லை நூறாயிரம் கிளை கொடு ஏறா விசும்பு இவர் – தக்கயாகப்பரணி:3 75/1
கூர புறவ முல்லை முகை நகையினும் கொல்லுகை தவிரா இறைவி சாகினிகளே – தக்கயாகப்பரணி:8 430/2

மேல்

முல்லையே (1)

முடி சூட்டு முல்லையோ முதல் கற்பு முல்லையே – தக்கயாகப்பரணி:4 119/2

மேல்

முல்லையோ (1)

முடி சூட்டு முல்லையோ முதல் கற்பு முல்லையே – தக்கயாகப்பரணி:4 119/2

மேல்

முலை (7)

உருகுவார் உயிர் படு படா முலை உழறுமேல் உலகு இறும் என – தக்கயாகப்பரணி:2 32/1
நச்சு கண் முலை மேல் இடுது நிற்கும் நகு பொன் – தக்கயாகப்பரணி:3 83/1
மன் காதலில் உய்வது இவ் வையம் எலாம் மலையாள் முலை ஆரமுது உண்டவனே – தக்கயாகப்பரணி:6 186/1
கொம்மை முலை மருங்கு எழுவர் குமரிமார் – தக்கயாகப்பரணி:8 351/1
பார பணை முலை கொலையினும் சில புரூஉ பங்கத்தினும் அடுப்பன வடு பகவினும் – தக்கயாகப்பரணி:8 430/1
புக்காள் முலை கண்களால் ஆவி உண்டு அ பொய் மாயனார் செய்தி போக புணர்த்தே – தக்கயாகப்பரணி:8 556/2
மோக மோகினிகள் யோக யோகினிகள் யாக சம்மினிகள் முலை விடா – தக்கயாகப்பரணி:8 593/1

மேல்

முழங்கின (1)

முழங்கின முகில் என முரசமே – தக்கயாகப்பரணி:8 530/1

மேல்

முழங்குவனவே (1)

மொகுமொகு என்று அகில லோகமும் முழங்குவனவே – தக்கயாகப்பரணி:3 90/2

மேல்

முழவின் (1)

முழவின் பூரித்த கும்ப குடம்-தொறும் மூரி ஏழ் கடலும் தரு மூக்கின – தக்கயாகப்பரணி:8 273/2

மேல்

முழு (1)

அற்று எழுந்த தோல் முழு சளம்பம் மீது அலம்பவே – தக்கயாகப்பரணி:8 369/2

மேல்

முழுகி (1)

நதிய ஆன மீன் முழுகி நாடியே – தக்கயாகப்பரணி:8 358/2

மேல்

முழுகும் (1)

ஓதம் உக இறுதி போத நடுநடுவு முழுகும் எழு கிரியும் ஒக்குமே – தக்கயாகப்பரணி:3 59/2

மேல்

முழுதும் (1)

முறிய மோதி வான் யாறு முழுதும் மாறி ஆகாய முடிய ஏறி மேலாய முகடு சாடு தாளாளே – தக்கயாகப்பரணி:4 108/2

மேல்

முழுதுமே (1)

காதுமே இறைவி திகிரி பூதமும் கழுதுமே ககனம் முழுதுமே
போதுமே இரவி புரவி உடுவும் நடு புகுதுமேல் நகுதும் நகுதுமே – தக்கயாகப்பரணி:3 55/1,2

மேல்

முழுவதும் (2)

மண் முழுவதும் மேல் வான் முழுவதும் கொண்டது போல – தக்கயாகப்பரணி:8 313/1
மண் முழுவதும் மேல் வான் முழுவதும் கொண்டது போல – தக்கயாகப்பரணி:8 313/1

மேல்

முள்கோல் (1)

கால்பிடித்து நிவந்த தேர் தம காணியாய் வழி வந்து முள்கோல்
பிடித்து வலம்செய்து ஏறி விரிஞ்சனே குசை கொள்ளவே – தக்கயாகப்பரணி:8 627/1,2

மேல்

முளரி (7)

தெளியும் நிலவு பகலினும் முளரி கெட மலர் திலக வதன சுரமகளிர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 36/2
அங்ங்கண் முளரி மலர் அன்மையது திங்கள் அறிய – தக்கயாகப்பரணி:3 86/1
அடையாள முளரி தலைவி ஆதி மடவார் – தக்கயாகப்பரணி:3 95/1
எறி படை வல்ல விசயை இசை கெழு தெய்வ மகளிர் எழுவரும் வெள்ளை முளரி இனிது உறை செல்வ மகளும் – தக்கயாகப்பரணி:6 168/1
ஒரு கதை சொல்லு தவள ஒளி விரி செவ்வி முளரி ஒளி திகழ் அல்லி கமழும் ஒரு மனை வல்லி எனவே – தக்கயாகப்பரணி:6 169/2
நம் முன் தவள முளரி மிசை இருக்க பெறுதி நாமகளே – தக்கயாகப்பரணி:6 221/2
புடைபெயர்ந்து தனி விரிஞ்சன் முளரி சென்று புகுதுமே – தக்கயாகப்பரணி:7 240/2

மேல்

முளி (2)

ஈரல் சுருள முளி பேய்கள் எரி தலையொடு ஏறு சருகுடன் எடுத்து எழும் – தக்கயாகப்பரணி:3 58/1
கரி தின்று பரி தின்று தேர் தின்று முளி கூளி களி கூரவே – தக்கயாகப்பரணி:8 558/2

மேல்

முளிபடும் (1)

முளிபடும் உடம்பின் முன்னை பொரிவற மூழ்கி ஏறீர் – தக்கயாகப்பரணி:9 740/2

மேல்

முளியுமால் (1)

முன்னமுன்ன அடைய முளியுமால்
பின்னை யார் அவர் கையில் பிழைப்பரே – தக்கயாகப்பரணி:8 590/1,2

மேல்

முற்பட (1)

இழைத்த யாக விபாகம் முற்பட உண்ணலாம் என எண்ணியே – தக்கயாகப்பரணி:8 248/2

மேல்

முற்ற (1)

வெங்கண் மண்டிலம் ராகு முற்ற விழுங்கி ஒத்து மழுங்கவே – தக்கயாகப்பரணி:8 637/2

மேல்

முற்று (1)

முற்று மேரு ஆதிகளை முக்க வாரி ஊழி எரி முத்தன் நீல மோலி என முட்ட ஓதம் மீது எரிய – தக்கயாகப்பரணி:8 469/1

மேல்

முற்றும் (9)

வையம் உண்ணோம் கடல் மடோம் மற்றும் புவனம் முற்றும் போய் – தக்கயாகப்பரணி:7 227/1
அடவி முற்றும் அசலம் முற்றும் அவனி முற்றும் அதிர்பட – தக்கயாகப்பரணி:8 385/1
அடவி முற்றும் அசலம் முற்றும் அவனி முற்றும் அதிர்பட – தக்கயாகப்பரணி:8 385/1
அடவி முற்றும் அசலம் முற்றும் அவனி முற்றும் அதிர்பட – தக்கயாகப்பரணி:8 385/1
தடவி முற்றும் உயிர் தொலைச்சி வயிறு வேட்கை தணியவே – தக்கயாகப்பரணி:8 385/2
புரவி வெள்ளம் முற்றும் புரட்டவே – தக்கயாகப்பரணி:8 533/2
தொட்ட ஆயுதம் முற்றும் மற்றவர் கைதுறந்து அடி சூழவே – தக்கயாகப்பரணி:8 640/2
ஏவினன் முற்றும் தகரவே – தக்கயாகப்பரணி:8 658/2
சதுரானனன் வெள்ளம் சூழ தான் முற்றும் தந்த்ரங்களும் எல்லா யந்த்ரங்களும் உட்கொண்டு – தக்கயாகப்பரணி:8 695/1

மேல்

முறிகளும் (1)

அலகு_இல் மரகத முறிகளும் வயிரமும் அபரிமிதம் எரி தமனியம் அடையவும் அரிய தரளமும் அழகிய பவளமும் அரச அரவின சிகையவும் மலை கொடு – தக்கயாகப்பரணி:2 41/1

மேல்

முறித்து (1)

முசலமே ஆக முப்பத்திரண்டையும் முறித்து குத்தீர் – தக்கயாகப்பரணி:9 735/2

மேல்

முறிதும் (3)

முடிதும் என மறை முதலிய பரவவும் முறிதும் என நிசிசரர் குலம் இரியவும் முறிதும் என எழு குலகிரி குலையவும் முறிதும் என எழு புணரிகள் மறுகவும் – தக்கயாகப்பரணி:2 40/1
முடிதும் என மறை முதலிய பரவவும் முறிதும் என நிசிசரர் குலம் இரியவும் முறிதும் என எழு குலகிரி குலையவும் முறிதும் என எழு புணரிகள் மறுகவும் – தக்கயாகப்பரணி:2 40/1
முடிதும் என மறை முதலிய பரவவும் முறிதும் என நிசிசரர் குலம் இரியவும் முறிதும் என எழு குலகிரி குலையவும் முறிதும் என எழு புணரிகள் மறுகவும் – தக்கயாகப்பரணி:2 40/1

மேல்

முறிய (1)

முறிய மோதி வான் யாறு முழுதும் மாறி ஆகாய முடிய ஏறி மேலாய முகடு சாடு தாளாளே – தக்கயாகப்பரணி:4 108/2

மேல்

முறை (1)

பூத நாயகர் மகோதராதிகள் புரக்க வாயில் முறை புகுதுவார் – தக்கயாகப்பரணி:6 138/1

மேல்

முறையால் (1)

திரண்ட கலை கூடி நிறை திங்கள் குடையாக நிழல் செய்ய முறையால்
இரண்டு அருகும் வாடையொடு தென்றல் குளிர் சாமரை இரட்டிவரவே – தக்கயாகப்பரணி:6 157/1,2

மேல்

முன் (14)

தலை அரிந்து விடுவார் உயிர்விடார் தலைவி முன்
விலை அரும் தமது மெய் எரியில் நின்று எரிவரே – தக்கயாகப்பரணி:3 91/1,2
தெவ் முன் சென்று நம் பிள்ளை செய்தது ஒரு போர் செப்பினையால் – தக்கயாகப்பரணி:6 221/1
நம் முன் தவள முளரி மிசை இருக்க பெறுதி நாமகளே – தக்கயாகப்பரணி:6 221/2
மைந்தரான சுரேசரோடு அசுரேசர் முன் வர மதி மருண்டு – தக்கயாகப்பரணி:8 260/1
இந்தனாடவி முன் சிவக்க எரிந்தது ஒத்தது இருண்ட தண் – தக்கயாகப்பரணி:8 329/1
போழும் மின்னின் முன் புகுந்து எழுந்து கீழ் – தக்கயாகப்பரணி:8 355/1
வீழும் முன் பிடித்து இடி விழுங்கியே – தக்கயாகப்பரணி:8 355/2
முனிவரும் ஆழியானும் இமையோரும் யானும் இளையோனும் நிற்க ரவி முன்
பனி வரும் என்ன இங்கு வருகின்றது என்-கொல் ஒரு சூலபாணி படையே – தக்கயாகப்பரணி:8 446/1,2
மா கலக்கம் மூள் வாரணங்கள் முன்
பாகல பசாசுகள் பரக்கவே – தக்கயாகப்பரணி:8 531/1,2
முன் நரம்பினும் முத்தர் மிடற்றினும் – தக்கயாகப்பரணி:8 610/1
முன் வரும் சுரரோடும் இந்திரன் வந்து தோமரம் முட்டவே – தக்கயாகப்பரணி:8 642/2
ஆழி மாயன் விட ஆதி வானவன் முன் ஆடக சிறகின் அருகு புக்கு – தக்கயாகப்பரணி:8 647/1
உந்தியில் முகுந்தன் முன் நாள் உயிர்த்த தாமரையும் ஈரைந்து – தக்கயாகப்பரணி:9 757/1
கோயில் முன் ஏழ்நிலை கொண்டது ஓர் கோபுர – தக்கயாகப்பரணி:11 809/1

மேல்

முன்பு (7)

சென்றார் பவம் ஏழினும் இப்படியே செல்வார் இவர் முன்பு செயிர்த்தவரே – தக்கயாகப்பரணி:6 192/2
காதில் கனக குழை நின்று இலக கமழும் குழல் முன்பு கலந்து அசைய – தக்கயாகப்பரணி:6 208/1
அசும்பு தூர் வயிறு ஆர முன்பு அவர் செற்ற தானவர் அற்ற நாள் – தக்கயாகப்பரணி:7 232/1
இரைத்த கூர் பசி உழந்த பேய்கள் இனி என் பின் வாரும் என முன்பு சென்று – தக்கயாகப்பரணி:7 242/1
பொற்பு ஊடற கற்பக காடு சாடி புகுந்து உம்பர்கோன் முன்பு பூதப்பிரான்மார் – தக்கயாகப்பரணி:8 538/1
அடைத்துவிட்டபடி அன்றியே இறைவர் முன்பு நின்றன பின்பாகவே – தக்கயாகப்பரணி:8 592/2
புனைந்து வந்த மதிக்கு முன்பு பயந்த வேலை பொறாமையால் – தக்கயாகப்பரணி:8 633/1

மேல்

முன்றில் (2)

ஆடுகின்ற கொடி மாட முன்றில் விட ஐயை கண்டருளி அதனையே – தக்கயாகப்பரணி:7 243/2
முன்றில் கிடந்த தடம் கடல் போய் முன்னை கடல் புக பின்னை தில்லை – தக்கயாகப்பரணி:9 777/1

மேல்

முன்னம் (1)

தாம வில்லு வெறும் ஒன்று முன்னம் இவை சாமனார் கொடிகள் காமனார் – தக்கயாகப்பரணி:2 23/1

மேல்

முன்னமுன்ன (1)

முன்னமுன்ன அடைய முளியுமால் – தக்கயாகப்பரணி:8 590/1

மேல்

முன்னர் (1)

சென்று முன்னர் விழுந்து பின்னர் எழுந்து தம் குறை செப்புமே – தக்கயாகப்பரணி:6 179/2

மேல்

முன்னை (5)

முகடு விண்ட பழ அண்ட கோளமும் முன்னை மேருவும் இட்டு உருக்கி பெரும் – தக்கயாகப்பரணி:8 276/1
கொத்து தலை நாலும் கலனாகிய முன்னை குறளை தலையாக கொளை வில் குனிவித்தே – தக்கயாகப்பரணி:8 697/2
முளிபடும் உடம்பின் முன்னை பொரிவற மூழ்கி ஏறீர் – தக்கயாகப்பரணி:9 740/2
முன்றில் கிடந்த தடம் கடல் போய் முன்னை கடல் புக பின்னை தில்லை – தக்கயாகப்பரணி:9 777/1
ஆக நாயகி-தனக்கு உணர்த்தி வர அன்னை முன்னை முனிவு ஆறியே – தக்கயாகப்பரணி:10 779/2

மேல்

முன்னையின் (1)

முன்னையின் எழு மடி முடுகி மூளவே – தக்கயாகப்பரணி:8 567/2

மேல்

முனி (3)

பக்க மா முனி கணத்தர்-தம்மொடும் கூடி நின்றனன் பத்மயோனியே – தக்கயாகப்பரணி:8 472/2
முனி கணத்தர்-தம் முத்தழல் மூழ்கவே – தக்கயாகப்பரணி:8 586/2
பொதியில் வாழ் முனி புங்கவன் திருவாய்மலர்ந்த புராணநூல் – தக்கயாகப்பரணி:8 624/1

மேல்

முனிந்தனள் (1)

நாதன் திருவுள்ளம் எடுத்திலன் மற்று அது கண்டு முனிந்தனள் நாயகியே – தக்கயாகப்பரணி:8 324/2

மேல்

முனிந்திடுவான் (1)

விலங்கினார் இலர் வெம்மை எம்மையும் மேல் முனிந்திடுவான் மிக – தக்கயாகப்பரணி:6 178/1

மேல்

முனிந்து (1)

அன்னையை முனிந்து உலகின் அன்னை அருள்செய்வாள் – தக்கயாகப்பரணி:8 294/2

மேல்

முனிபுங்கவர் (1)

தண் ஆர் மதிய கவிகை செழியன் தனி மந்திரிகாள் முனிபுங்கவர் ஓர் – தக்கயாகப்பரணி:6 191/1

மேல்

முனிவர் (2)

அங்கண் வானவர் வருக என்றனன் முனிவர் தன் படையாகவே – தக்கயாகப்பரணி:8 247/2
அந்தணாளனும் மலரில் வந்தனன் முனிவர் தன் புடையாகவே – தக்கயாகப்பரணி:8 260/2

மேல்

முனிவரன் (1)

மடிதும் என மகிதலம் நிலைதளரவும் மறிதும் என அடி சுர பதி வருடவும் வரதன் ஒரு தமிழ் முனிவரன் வர வரும் மலய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 40/2

மேல்

முனிவரில் (1)

அடைய அரியன கடை இரு புடையினும் அளவு கெட நிமிர் விழி விடம் அடுதலின் அமரர் அனைவரும் முனிவரில் அதிகரும் அவனி தலம் உற விழு பொழுது அயில் எயிறு – தக்கயாகப்பரணி:2 39/1

மேல்

முனிவரும் (1)

முனிவரும் ஆழியானும் இமையோரும் யானும் இளையோனும் நிற்க ரவி முன் – தக்கயாகப்பரணி:8 446/1

மேல்

முனிவு (3)

பதினெண்கணத்து மடவாரும் அன்னை முனிவு ஆறுமாறு பகர்வார் – தக்கயாகப்பரணி:8 307/2
ஆக நாயகி-தனக்கு உணர்த்தி வர அன்னை முன்னை முனிவு ஆறியே – தக்கயாகப்பரணி:10 779/2
அவ்வகை இறைவர் காட்ட அமரர் மேல் முனிவு தீர்ந்து – தக்கயாகப்பரணி:10 794/1

மேல்

முனிவுண்டு (1)

தேவியால் முனிவுண்டு பட்டது கேள்-மின் என்று அது செப்புமே – தக்கயாகப்பரணி:8 245/2

மேல்