வே – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேட்ட 2
வேட்டலின் 1
வேட்டுவன் 1
வேட்ப 3
வேட்பன 1
வேண்ட 2
வேண்டல்-பாற்று 2
வேண்டற்க 2
வேண்டா 9
வேண்டாதார் 2
வேண்டாதான் 2
வேண்டாது 2
வேண்டாமை 4
வேண்டாரை 1
வேண்டாவாம் 1
வேண்டி 4
வேண்டிய 4
வேண்டியிருப்பர் 1
வேண்டின் 8
வேண்டுக 1
வேண்டுதல் 1
வேண்டுப 1
வேண்டுபவர் 6
வேண்டும் 22
வேண்டும்-கால் 1
வேண்டும்-கொல்லோ 1
வேண்டும்-மன்ற 1
வேண்டுவான் 1
வேத்தோள் 1
வேந்தர் 1
வேந்தர்க்கு 3
வேந்தற்கு 1
வேந்தன் 13
வேந்தன்-கண் 1
வேந்தனும் 1
வேந்து 8
வேபாக்கு 1
வேர்ப்பர் 1
வேரார் 1
வேல் 7
வேலாருள் 1
வேலி 1
வேலை 1
வேலொடு 1
வேள்வி 2
வேளாண்மை 4
வேற்றுமையான் 1
வேறு 13
வேறுபடும் 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வேட்ட (2)

வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள் – குறள் 111:5
களி-தொறும் கள் உண்டல் வேட்ட அற்றால் காமம்
வெளிப்படும்-தோறும் இனிது – குறள் 115:5

TOP


வேட்டலின் (1)

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று – குறள் 26:9

TOP


வேட்டுவன் (1)

தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்த அற்று – குறள் 28:4

TOP


வேட்ப (3)

கேட்டார் பிணிக்கும் தகை அவாய் கேளாரும்
வேட்ப மொழிவது ஆம் சொல் – குறள் 65:3
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசு அற்றார் கோள் – குறள் 65:6
குறிப்பு அறிந்து காலம் கருதி வெறுப்பு இல
வேண்டுப வேட்ப சொலல் – குறள் 70:6

TOP


வேட்பன (1)

வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல் – குறள் 70:7

TOP


வேண்ட (2)

வேண்டும்-கால் வேண்டும் பிறவாமை மற்று அது
வேண்டாமை வேண்ட வரும் – குறள் 37:2
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது
வாஅய்மை வேண்ட வரும் – குறள் 37:4

TOP


வேண்டல்-பாற்று (2)

விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா
மருந்து எனினும் வேண்டல்-பாற்று அன்று – குறள் 9:2
பகை என்னும் பண்பு இலதனை ஒருவன்
நகையேயும் வேண்டல்-பாற்று அன்று – குறள் 88:1

TOP


வேண்டற்க (2)

வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
மாண்டற்கு அரிது ஆம் பயன் – குறள் 18:7
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று – குறள் 94:1

TOP


வேண்டா (9)

அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான்-இடை – குறள் 4:7
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு
என் ஆற்றும்-கொல்லோ உலகு – குறள் 22:1
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் – குறள் 28:10
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு – குறள் 36:7
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தான் செயின் – குறள் 50:7
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
கழல் யாப்பு காரிகை நீர்த்து – குறள் 78:7
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
நட்பு ஆம் கிழமை தரும் – குறள் 79:5
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்
வேண்டா பொருளும் அது – குறள் 91:1
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்கு பொறை – குறள் 101:3

TOP


வேண்டாதார் (2)

வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று – குறள் 59:4
உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார் – குறள் 93:2

TOP


வேண்டாதான் (2)

அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப்பான் – குறள் 17:3
தீ பால தான் பிறர்-கண் செய்யற்க நோய் பால
தன்னை அடல் வேண்டாதான் – குறள் 21:6

TOP


வேண்டாது (2)

எனை திட்பம் எய்திய-கண்ணும் வினை திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு – குறள் 67:10
தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சால படும் – குறள் 104:7

TOP


வேண்டாமை (4)

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல – குறள் 1:4
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு – குறள் 18:10
வேண்டும்-கால் வேண்டும் பிறவாமை மற்று அது
வேண்டாமை வேண்ட வரும் – குறள் 37:2
வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை
யாண்டும் அஃது ஒப்பது இல் – குறள் 37:3

TOP


வேண்டாரை (1)

எனை திட்பம் எய்திய-கண்ணும் வினை திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு – குறள் 67:10

TOP


வேண்டாவாம் (1)

மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் – குறள் 95:2

TOP


வேண்டி (4)

துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
மற்றையவர்கள் தவம் – குறள் 27:3
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
கழல் யாப்பு காரிகை நீர்த்து – குறள் 78:7
உழந்துஉழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து
வேண்டி அவர் கண்ட கண் – குறள் 118:7
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்தரோ
எற்று என்னை உற்ற துயர் – குறள் 126:6

TOP


வேண்டிய (4)

வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம்
ஈண்டு முயலப்படும் – குறள் 27:5
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு – குறள் 35:3
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும் – குறள் 66:1

TOP


வேண்டியிருப்பர் (1)

விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான்
கேளாது நட்டார் செயின் – குறள் 81:4

TOP


வேண்டின் (8)

நிறை உடைமை நீங்காமை வேண்டின் பொறை உடைமை
போற்றி ஒழுகப்படும் – குறள் 16:4
வேண்டின் உண்டாக துறக்க துறந்த பின்
ஈண்டு இயற்பால பல – குறள் 35:2
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்
ஆற்றுபவர்-கண் இழுக்கு – குறள் 90:3
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு – குறள் 96:10
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான் – குறள் 107:2
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
கௌவை எடுக்கும் இ ஊர் – குறள் 115:10

TOP


வேண்டுக (1)

நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு – குறள் 96:10

TOP


வேண்டுதல் (1)

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல – குறள் 1:4

TOP


வேண்டுப (1)

குறிப்பு அறிந்து காலம் கருதி வெறுப்பு இல
வேண்டுப வேட்ப சொலல் – குறள் 70:6

TOP


வேண்டுபவர் (6)

சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்று இன்பம் வேண்டுபவர் – குறள் 18:3
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார்
நோய் இன்மை வேண்டுபவர் – குறள் 32:10
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டுபவர் – குறள் 57:2
பெய கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர் – குறள் 58:10
மடியை மடியா ஒழுகல் குடியை
குடியாக வேண்டுபவர் – குறள் 61:2
சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டுபவர் – குறள் 97:2

TOP


வேண்டும் (22)

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு – குறள் 3:1
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப்பொருள் – குறள் 18:8
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
புண் அது உணர்வார் பெறின் – குறள் 26:7
இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்-கண் செயல் – குறள் 32:6
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு – குறள் 35:3
வேண்டும்-கால் வேண்டும் பிறவாமை மற்று அது
வேண்டாமை வேண்ட வரும் – குறள் 37:2
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான் வேண்டும் ஆற்றான் வரும் – குறள் 37:7
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு – குறள் 47:10
பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது – குறள் 49:1
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் – குறள் 54:8
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் – குறள் 62:1
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை – குறள் 66:2
ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னுமவர் – குறள் 66:3
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சு_ஆணி அன்னார் உடைத்து – குறள் 67:7
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – குறள் 80:4
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு – குறள் 96:10
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு – குறள் 97:3
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி – குறள் 106:10
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
கௌவை எடுக்கும் இ ஊர் – குறள் 115:10
தினை துணையும் ஊடாமை வேண்டும் பனை துணையும்
காமம் நிறைய வரின் – குறள் 129:2

TOP


வேண்டும்-கால் (1)

வேண்டும்-கால் வேண்டும் பிறவாமை மற்று அது
வேண்டாமை வேண்ட வரும் – குறள் 37:2

TOP


வேண்டும்-கொல்லோ (1)

வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்து ஓம்பி
மிச்சில் மிசைவான் புலம் – குறள் 9:5

TOP


வேண்டும்-மன்ற (1)

கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து
மாணாத செய்வான் பகை – குறள் 87:7

TOP


வேண்டுவான் (1)

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு – குறள் 29:1

TOP


வேத்தோள் (1)

முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேத்தோள் அவட்கு – குறள் 112:3

TOP


வேந்தர் (1)

அகலாது அணுகாது தீ காய்வார் போல்க
இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – குறள் 70:1

TOP


வேந்தர்க்கு (3)

கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி – குறள் 39:10
பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது – குறள் 49:1
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
வாய் சோரா வன்கணவன் – குறள் 69:9

TOP


வேந்தற்கு (1)

அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு – குறள் 39:2

TOP


வேந்தன் (13)

செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவி கை கீழ் தங்கும் உலகு – குறள் 39:9
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர் – குறள் 53:8
உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்து இருந்து எண்ணி கொளல் – குறள் 53:10
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
வடு அன்று வேந்தன் தொழில் – குறள் 55:9
துளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
அளி இன்மை வாழும் உயிர்க்கு – குறள் 56:7
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லை கெடும் – குறள் 57:4
கடு மொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடு முரண் தேய்க்கும் அரம் – குறள் 57:7
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
சீறின் சிறுகும் திரு – குறள் 57:8
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும் – குறள் 57:9
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில் – குறள் 59:2
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்
தெறு பொருளும் வேந்தன் பொருள் – குறள் 76:6
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை – குறள் 77:1
வினை கலந்து வென்று ஈக வேந்தன் மனை கலந்து
மாலை அயர்கம் விருந்து – குறள் 127:8

TOP


வேந்தன்-கண் (1)

வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண்
ஊறு எய்தி உள்ளப்படும் – குறள் 67:5

TOP


வேந்தனும் (1)

ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
வேந்தனும் வேந்து கெடும் – குறள் 90:9

TOP


வேந்து (8)

கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ்
களை கட்டதனொடு நேர் – குறள் 55:10
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
அல்லவை செய்து ஒழுகும் வேந்து – குறள் 56:1
தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து – குறள் 57:1
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு – குறள் 69:1
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
கொல் குறும்பும் இல்லது நாடு – குறள் 74:5
ஆங்கு அமைவு எய்திய-கண்ணும் பயம் இன்றே
வேந்து அமைவு இல்லாத நாடு – குறள் 74:10
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
வேந்து செறப்பட்டவர் – குறள் 90:5
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
வேந்தனும் வேந்து கெடும் – குறள் 90:9

TOP


வேபாக்கு (1)

நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து – குறள் 113:8

TOP


வேர்ப்பர் (1)

பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
உள் வேர்ப்பர் ஒள்ளியவர் – குறள் 49:7

TOP


வேரார் (1)

பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
உள் வேர்ப்பர் ஒள்ளியவர் – குறள் 49:7

TOP


வேல் (7)

கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
வேல் ஆள் முகத்த களிறு – குறள் 50:10
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோல் அதூஉம் கோடாது எனின் – குறள் 55:6
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது – குறள் 78:2
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா நகும் – குறள் 78:4
விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்
ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு – குறள் 78:5
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேத்தோள் அவட்கு – குறள் 112:3

TOP


வேலாருள் (1)

நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
வென்றி வினை உரைப்பான் பண்பு – குறள் 69:3

TOP


வேலி (1)

நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியல் ஞாலம்
பேணலர் மேலாயவர் – குறள் 102:6

TOP


வேலை (1)

மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ வாழி பொழுது – குறள் 123:1

TOP


வேலொடு (1)

வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு – குறள் 56:2

TOP


வேள்வி (2)

இனை துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின்
துணை துணை வேள்வி பயன் – குறள் 9:7
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் விருந்து ஓம்பி
வேள்வி தலைப்படாதார் – குறள் 9:8

TOP


வேளாண்மை (4)

இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள் 9:1
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள் 22:2
தாளாண்மை என்னும் தகைமை-கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு – குறள் 62:3
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
வாள் ஆண்மை போல கெடும் – குறள் 62:4

TOP


வேற்றுமையான் (1)

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய் தொழில் வேற்றுமையான் – குறள் 98:2

TOP


வேறு (13)

விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்
தீமை புரிந்து ஒழுகுவார் – குறள் 15:3
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
தெள்ளியர் ஆதலும் வேறு – குறள் 38:4
எனை வகையான் தேறிய-கண்ணும் வினை வகையான்
வேறு ஆகும் மாந்தர் பலர் – குறள் 52:4
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
நினைப்பானை நீங்கும் திரு – குறள் 52:9
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்
மரம் மக்கள் ஆதலே வேறு – குறள் 60:10
குறித்தது கூறாமை கொள்வாரொடு ஏனை
உறுப்பு ஓர் அனையரால் வேறு – குறள் 71:4
கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு
சொல் வேறு பட்டார் தொடர்பு – குறள் 82:9
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர் – குறள் 93:6
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
நாண் உடைமை மாந்தர் சிறப்பு – குறள் 102:2
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
அளி இன்மை ஆற்ற நினைந்து – குறள் 121:9

TOP


வேறுபடும் (1)

இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும் – குறள் 83:2

TOP