சொ – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொரிந்த 1
சொரிந்து 1
சொரியினும் 1
சொல் 47
சொல்ல 2
சொல்லல் 4
சொல்லலும் 1
சொல்லற்க 3
சொல்லன் 2
சொல்லா 2
சொல்லாட 2
சொல்லாடார் 1
சொல்லாதார் 2
சொல்லாது 1
சொல்லாமை 1
சொல்லாயோ 1
சொல்லார் 3
சொல்லான் 1
சொல்லி 11
சொல்லிய 1
சொல்லில் 2
சொல்லின் 4
சொல்லின்-கண் 1
சொல்லினான் 1
சொல்லினும் 4
சொல்லுக 6
சொல்லுதல் 2
சொல்லும் 6
சொல்லுவ 1
சொல்லுவார் 2
சொல்லுவான் 1
சொல்லை 3
சொல்வன்மை 1
சொலல் 4
சொலவர்க்கு 1
சொலன் 2
சொலால் 2
சொலின் 2
சொலினதே 1
சொலினும் 1
சொலும் 1
சொற்கள் 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சொரிந்த (1)

உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்த அற்று – குறள் 72:8

TOP


சொரிந்து (1)

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று – குறள் 26:9

TOP


சொரியினும் (1)

பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து
சொரியினும் போகா தம – குறள் 38:6

TOP


சொல் (47)

அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் – குறள் 4:5
தன் காத்து தன் கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் – குறள் 6:6
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு – குறள் 7:5
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர் – குறள் 7:6
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல் – குறள் 7:10
இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
செம் பொருள் கண்டார் வாய் சொல் – குறள் 10:1
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரிய சொல் – குறள் 10:7
சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் – குறள் 10:8
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன் சொல் வழங்குவது – குறள் 10:9
சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள் கோட்டம் இன்மை பெறின் – குறள் 12:9
யா காவார்-ஆயினும் நா காக்க காவா-கால்
சோகாப்பர் சொல் இழுக்கு பட்டு – குறள் 13:7
ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின்
நன்று ஆகாது ஆகிவிடும் – குறள் 13:8
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
இன்னா சொல் நோற்கிற்பவர் – குறள் 16:9
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னா சொல் நோற்பாரின் பின் – குறள் 16:10
கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின் நோக்கா சொல் – குறள் 19:4
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
புன் சொல் உரைப்பான் பொறை – குறள் 19:9
நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா
பண்பு இல் சொல் பல்லார் அகத்து – குறள் 20:4
பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல் – குறள் 20:6
அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும் பயன் இல்லாத சொல் – குறள் 20:8
சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலா சொல் – குறள் 20:10
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவி கை கீழ் தங்கும் உலகு – குறள் 39:9
கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று – குறள் 41:2
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய் சொல் – குறள் 42:5
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் – குறள் 46:3
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லை கெடும் – குறள் 57:4
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும் – குறள் 59:9
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து
மாண்ட உஞற்று இலர் – குறள் 61:7
கேட்டார் பிணிக்கும் தகை அவாய் கேளாரும்
வேட்ப மொழிவது ஆம் சொல் – குறள் 65:3
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து – குறள் 65:5
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசு அற்றார் கோள் – குறள் 65:6
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
சொல் தெரிதல் வல்லார் அகத்து – குறள் 72:7
கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு
சொல் வேறு பட்டார் தொடர்பு – குறள் 82:9
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
ஒல்லை உணரப்படும் – குறள் 83:6
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம்
தீங்கு குறித்தமையான் – குறள் 83:7
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை – குறள் 88:2
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
இன் சொல் இழுக்கு தரும் – குறள் 92:1
நகை ஈகை இன் சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மை குடிக்கு – குறள் 96:3
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் – குறள் 96:9
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும் – குறள் 105:4
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும் – குறள் 105:6
உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல்
ஒல்லை உணரப்படும் – குறள் 110:6
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல்
நீர் ஆக நீளும் இ நோய் – குறள் 115:7
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேறியாக்கு உண்டோ தவறு – குறள் 116:4
வீழ்வாரின் இன் சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள் 120:8

TOP


சொல்ல (2)

பல சொல்ல காமுறுவர் மன்ற மாசு அற்ற
சில சொல்லல் தேற்றாதவர் – குறள் 65:9
சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்ல பயன்படும் கீழ் – குறள் 108:8

TOP


சொல்லல் (4)

பயன் இல பல்லார் முன் சொல்லல் நயன் இல
நட்டார்-கண் செய்தலின் தீது – குறள் 20:2
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசு அற்ற
சில சொல்லல் தேற்றாதவர் – குறள் 65:9
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல் – குறள் 72:3
உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்த அற்று – குறள் 72:8

TOP


சொல்லலும் (1)

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா
சொல்லலும் வல்லது அமைச்சு – குறள் 64:4

TOP


சொல்லற்க (3)

கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின் நோக்கா சொல் – குறள் 19:4
சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலா சொல் – குறள் 20:10
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள்
நன்கு செல சொல்லுவார் – குறள் 72:9

TOP


சொல்லன் (2)

காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் – குறள் 39:6
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் – குறள் 57:6

TOP


சொல்லா (2)

வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல் – குறள் 70:7
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
சொல்லா நலத்தது சால்பு – குறள் 99:4

TOP


சொல்லாட (2)

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாட சோர்வுபடும் – குறள் 41:5
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர்
சொல்லாட போஒம் உயிர் – குறள் 107:10

TOP


சொல்லாடார் (1)

ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோரவிடல் – குறள் 82:8

TOP


சொல்லாதார் (2)

பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்
நன்கு செல சொல்லாதார் – குறள் 73:8
உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி
கற்ற செல சொல்லாதார் – குறள் 73:10

TOP


சொல்லாது (1)

கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
சொல்லாது இருக்க பெறின் – குறள் 41:3

TOP


சொல்லாமை (1)

நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று – குறள் 20:7

TOP


சொல்லாயோ (1)

நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும்
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து – குறள் 125:1

TOP


சொல்லார் (3)

அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும் பயன் இல்லாத சொல் – குறள் 20:8
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
மாசு அறு காட்சியவர் – குறள் 20:9
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து
ஈண்டிய கேள்வியவர் – குறள் 42:7

TOP


சொல்லான் (1)

அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான் தேர்ச்சி துணை – குறள் 64:5

TOP


சொல்லி (11)

பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி
நட்பு ஆடல் தேற்றாதவர் – குறள் 19:7
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய்
நுண் பொருள் காண்பது அறிவு – குறள் 43:4
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசு அற்றார் கோள் – குறள் 65:6
தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி
நன்றி பயப்பது ஆம் தூது – குறள் 69:5
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
தக்கது அறிவது ஆம் தூது – குறள் 69:6
வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல் – குறள் 70:7
கற்றார் முன் கற்ற செல சொல்லி தாம் கற்ற
மிக்காருள் மிக்க கொளல் – குறள் 73:4
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் – குறள் 80:5
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான்
காம நோய் சொல்லி இரவு – குறள் 128:10

TOP


சொல்லிய (1)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்
சொல்லிய வண்ணம் செயல் – குறள் 67:4

TOP


சொல்லில் (2)

சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலா சொல் – குறள் 20:10

TOP


சொல்லின் (4)

அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 72:1
இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின்
நடை தெரிந்த நன்மையவர் – குறள் 72:2
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல் – குறள் 72:3
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 73:1

TOP


சொல்லின்-கண் (1)

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – குறள் 65:2

TOP


சொல்லினான் (1)

மனத்தின் அமையாதவரை எனைத்து ஒன்றும்
சொல்லினான் தேறற்பாற்று அன்று – குறள் 83:5

TOP


சொல்லினும் (4)

கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின் நோக்கா சொல் – குறள் 19:4
நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று – குறள் 20:7
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
ஒல்லை உணரப்படும் – குறள் 83:6
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும் – குறள் 105:6

TOP


சொல்லுக (6)

நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று – குறள் 20:7
சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலா சொல் – குறள் 20:10
திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின் ஊங்கு இல் – குறள் 65:4
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து – குறள் 65:5
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 72:1
இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின்
நடை தெரிந்த நன்மையவர் – குறள் 72:2

TOP


சொல்லுதல் (2)

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
சொல்லுதல் வல்லார் பெறின் – குறள் 65:8
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்
சொல்லிய வண்ணம் செயல் – குறள் 67:4

TOP


சொல்லும் (6)

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னா சொல் நோற்பாரின் பின் – குறள் 16:10
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
புன்மையால் காணப்படும் – குறள் 19:5
நயன் இலன் என்பது சொல்லும் பயன் இல
பாரித்து உரைக்கும் உரை – குறள் 20:3
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்
ஆன்ற பெரியார் அகத்து – குறள் 70:4
செறாஅ சிறு சொல்லும் செற்றார் போல் நோக்கும்
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு – குறள் 110:7

TOP


சொல்லுவ (1)

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனி வாரும் கண் – குறள் 124:2

TOP


சொல்லுவார் (2)

புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள்
நன்கு செல சொல்லுவார் – குறள் 72:9
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்
கற்ற செல சொல்லுவார் – குறள் 73:2

TOP


சொல்லுவான் (1)

பல்லார் முனிய பயன் இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப்படும் – குறள் 20:1

TOP


சொல்லை (3)

திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின் ஊங்கு இல் – குறள் 65:4
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து – குறள் 65:5

TOP


சொல்வன்மை (1)

அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு
இன்றியமையாத மூன்று – குறள் 69:2

TOP


சொலல் (4)

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல் – குறள் 14:9
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
தீமை இலாத சொலல் – குறள் 30:1
சொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது – குறள் 65:7
குறிப்பு அறிந்து காலம் கருதி வெறுப்பு இல
வேண்டுப வேட்ப சொலல் – குறள் 70:6

TOP


சொலவர்க்கு (1)

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும்
இன்புறூஉம் இன் சொலவர்க்கு – குறள் 10:4

TOP


சொலன் (2)

அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன் சொலன் ஆக பெறின் – குறள் 10:2
பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்று பிற – குறள் 10:5

TOP


சொலால் (2)

இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
தான் கண்டனைத்து இ உலகு – குறள் 39:7

TOP


சொலின் (2)

அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் – குறள் 10:6
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல
நீர்மை உடையார் சொலின் – குறள் 20:5

TOP


சொலினதே (1)

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
இன் சொலினதே அறம் – குறள் 10:3

TOP


சொலினும் (1)

உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல்
ஒல்லை உணரப்படும் – குறள் 110:6

TOP


சொலும் (1)

கொடுத்தலும் இன் சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப்படும் – குறள் 53:5

TOP


சொற்கள் (1)

கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
என்ன பயனும் இல – குறள் 110:10

TOP