ம – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கட்கு 1
மக்கள் 14
மக்களே 1
மகளிர் 4
மகளிரே 1
மகற்கு 2
மகன் 2
மகனை 1
மகிழ் 2
மகிழ்ச்சியின் 2
மகிழ்தலும் 1
மகிழ்ந்து 1
மங்கலம் 1
மட 2
மடந்தை 2
மடந்தையொடு 1
மடமை 1
மடல் 5
மடலொடு 1
மடவரல் 1
மடவார் 1
மடவார்-கண் 1
மடி 14
மடிந்து 2
மடிமை 1
மடியா 1
மடியும் 1
மடியை 1
மடுத்த 1
மண் 4
மண்ணும் 1
மண்ணோடு 1
மணந்த 1
மணந்தார் 2
மணல் 1
மணி 1
மணியுள் 1
மணை 1
மதலை 1
மதி 7
மதி-கண் 1
மதி_நுட்பம் 1
மதிக்கு 1
மதிப்பின் 1
மதியும் 1
மந்திரியின் 1
மயக்கம் 1
மயங்கி 1
மயல் 1
மயிர் 2
மயில்-கொல்லோ 1
மர 2
மர_பாவை 2
மரத்த 1
மரத்து 1
மரபினார் 1
மரம் 6
மரீஇயவனை 1
மருங்கு 2
மருட்டி 1
மருண்டு 3
மருந்து 10
மருந்தோ 1
மருவுக 1
மருள் 4
மருளான் 2
மல்க 1
மல்லல் 1
மலர் 7
மலர்தலும் 1
மலரினும் 1
மலரும் 1
மலை 1
மலைந்து 1
மலையினும் 1
மலையும் 2
மழலை 1
மழித்தலும் 1
மழை 4
மற்று 41
மற்றும் 7
மற்றைய 2
மற்றையவர் 1
மற்றையவர்கள் 1
மற்றையவை 1
மற்றையார் 1
மற்றையான் 1
மறக்கல்லா 1
மறத்தல் 2
மறத்தலின் 1
மறத்திற்கும் 1
மறந்தார்-கொல் 1
மறந்தீர் 1
மறந்து 1
மறந்தும் 1
மறந்தேன் 1
மறப்பது 2
மறப்பர் 1
மறப்பின் 3
மறப்பினும் 1
மறப்பு 2
மறம் 1
மறவர் 1
மறவற்க 1
மறவி 1
மறன் 1
மறு 2
மறுகில் 1
மறுகும் 1
மறுத்தானை 1
மறுத்து 2
மறுமை 2
மறுமையும் 2
மறை 7
மறைக்கும் 1
மறைத்தலோ 1
மறைத்திரோ 1
மறைந்தவை 1
மறைந்து 3
மறைப்பான் 1
மறைப்பின் 1
மறைப்பேன்-மன் 2
மறைமொழி 1
மறையா 1
மன் 7
மன்ற 4
மன்றில் 1
மன்று 1
மன்றுபடும் 1
மன்னர் 1
மன்னர்க்கு 2
மன்னரான் 1
மன்னவன் 13
மன்னன் 4
மன்னாவாம் 1
மன்னிய 1
மன்னுதல் 1
மன்னும் 4
மன்னோ 3
மன 7
மனத்தது 1
மனத்தான் 3
மனத்தின் 1
மனத்து 1
மனத்து-கண் 1
மனத்தொடு 1
மனம் 5
மனை 6
மனையாளை 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மக்கட்கு (1)

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் – குறள் 39:8

TOP


மக்கள் (14)

மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன் கலம் நன் மக்கள் பேறு – குறள் 6:10
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கள் பேறு அல்ல பிற – குறள் 7:1
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
பண்பு உடை மக்கள் பெறின் – குறள் 7:2
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
தம்தம் வினையான் வரும் – குறள் 7:3
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ் – குறள் 7:4
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு – குறள் 7:5
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர் – குறள் 7:6
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – குறள் 7:8
பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல் – குறள் 20:6
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரொடு ஏனையவர் – குறள் 41:10
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்
மரம் மக்கள் ஆதலே வேறு – குறள் 60:10
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல் – குறள் 77:10
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு – குறள் 100:3
அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கள் பண்பு இல்லாதவர் – குறள் 100:7

TOP


மக்களே (1)

மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன
ஒப்பாரி யாம் கண்டது இல் – குறள் 108:1

TOP


மகளிர் (4)

சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை – குறள் 6:7
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும் – குறள் 83:2
பயன் தூக்கி பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர்
நயன் தூக்கி நள்ளா விடல் – குறள் 92:2
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
மாய மகளிர் முயக்கு – குறள் 92:8

TOP


மகளிரே (1)

ஒருமை மகளிரே போல பெருமையும்
தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு – குறள் 98:4

TOP


மகற்கு (2)

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்ப செயல் – குறள் 7:7
எ நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு – குறள் 11:10

TOP


மகன் (2)

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல் – குறள் 7:10
பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல் – குறள் 20:6

TOP


மகனை (1)

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய் – குறள் 7:9

TOP


மகிழ் (2)

உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று – குறள் 109:10
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது – குறள் 121:1

TOP


மகிழ்ச்சியின் (2)

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு – குறள் 54:1
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – குறள் 54:9

TOP


மகிழ்தலும் (1)

உள்ள களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு – குறள் 129:1

TOP


மகிழ்ந்து (1)

இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து – குறள் 106:7

TOP


மங்கலம் (1)

மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன் கலம் நன் மக்கள் பேறு – குறள் 6:10

TOP


மட (2)

பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதில தந்து – குறள் 109:9
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு – குறள் 130:7

TOP


மடந்தை (2)

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன் – குறள் 112:6
மணியுள் திகழ்தரும் நூல் போல் மடந்தை
அணியுள் திகழ்வது ஒன்று உண்டு – குறள் 128:3

TOP


மடந்தையொடு (1)

உடம்பொடு உயிர்-இடை என்ன மற்று அன்ன
மடந்தையொடு எம்-இடை நட்பு – குறள் 113:2

TOP


மடமை (1)

உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா
மடமை மடவார்-கண் உண்டு – குறள் 9:9

TOP


மடல் (5)

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
மடல் அல்லது இல்லை வலி – குறள் 114:1
நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து – குறள் 114:2
நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன்
காமுற்றார் ஏறும் மடல் – குறள் 114:3
மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற
படல் ஒல்லா பேதைக்கு என் கண் – குறள் 114:6
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
பெண்ணின் பெரும் தக்கது இல் – குறள் 114:7

TOP


மடலொடு (1)

தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர் – குறள் 114:5

TOP


மடவரல் (1)

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இ மூன்றும் உடைத்து – குறள் 109:5

TOP


மடவார் (1)

இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை – குறள் 16:3

TOP


மடவார்-கண் (1)

உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா
மடமை மடவார்-கண் உண்டு – குறள் 9:9

TOP


மடி (14)

ஆகு_ஊழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள்
போகு_ஊழால் தோன்றும் மடி – குறள் 38:1
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
மாசு ஊர மாய்ந்து கெடும் – குறள் 61:1
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து – குறள் 61:3
குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இலவர்க்கு – குறள் 61:4
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காம கலன் – குறள் 61:5
படி உடையார் பற்று அமைந்த-கண்ணும் மடி உடையார்
மாண் பயன் எய்தல் அரிது – குறள் 61:6
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து
மாண்ட உஞற்று இலர் – குறள் 61:7
குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
மடி ஆண்மை மாற்ற கெடும் – குறள் 61:9
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு – குறள் 61:10
மடி உளான் மா முகடி என்ப மடி இலான்
தாள் உளான் தாமரையினாள் – குறள் 62:7
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடி தற்று தான் முந்துறும் – குறள் 103:3
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
மானம் கருத கெடும் – குறள் 103:8

TOP


மடிந்து (2)

குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இலவர்க்கு – குறள் 61:4

TOP


மடிமை (1)

மடிமை குடிமை-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும் – குறள் 61:8

TOP


மடியா (1)

மடியை மடியா ஒழுகல் குடியை
குடியாக வேண்டுபவர் – குறள் 61:2

TOP


மடியும் (1)

மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து – குறள் 61:3

TOP


மடியை (1)

மடியை மடியா ஒழுகல் குடியை
குடியாக வேண்டுபவர் – குறள் 61:2

TOP


மடுத்த (1)

மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து – குறள் 63:4

TOP


மண் (4)

நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மாண் புனை பாவை அற்று – குறள் 41:7
சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண்
கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று – குறள் 66:10
உள் பகை அஞ்சி தன் காக்க உலைவு இடத்து
மண் பகையின் மாண தெறும் – குறள் 89:3
பண்பு உடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
மண் புக்கு மாய்வது மன் – குறள் 100:6

TOP


மண்ணும் (1)

மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையது அரண் – குறள் 75:2

TOP


மண்ணோடு (1)

மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணொடு
இயைந்து கண்ணோடாதவர் – குறள் 58:6

TOP


மணந்த (1)

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்த நாள் வீங்கிய தோள் – குறள் 124:3

TOP


மணந்தார் (2)

மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ வாழி பொழுது – குறள் 123:1
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன் – குறள் 123:6

TOP


மணல் (1)

தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு
கற்று அனைத்து ஊறும் அறிவு – குறள் 40:6

TOP


மணி (1)

மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையது அரண் – குறள் 75:2

TOP


மணியுள் (1)

மணியுள் திகழ்தரும் நூல் போல் மடந்தை
அணியுள் திகழ்வது ஒன்று உண்டு – குறள் 128:3

TOP


மணை (1)

மணை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
எனை மாட்சித்து-ஆயினும் இல் – குறள் 6:2

TOP


மதலை (1)

முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை – குறள் 45:9

TOP


மதி (7)

மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
யா உள முன் நிற்பவை – குறள் 64:6
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி
பின் நீர பேதையார் நட்பு – குறள் 79:2
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
மாண்ட அறிவினவர் – குறள் 92:5
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி – குறள் 112:8
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின்
பலர் காண தோன்றல் மதி – குறள் 112:9
விடாஅது சென்றாரை கண்ணினால் காண
படாஅதி வாழி மதி – குறள் 121:10
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு
மாலை படர்தரும் போழ்து – குறள் 123:9

TOP


மதி-கண் (1)

குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
மதி-கண் மறு போல் உயர்ந்து – குறள் 96:7

TOP


மதி_நுட்பம் (1)

மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
யா உள முன் நிற்பவை – குறள் 64:6

TOP


மதிக்கு (1)

அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல
மறு உண்டோ மாதர் முகத்து – குறள் 112:7

TOP


மதிப்பின் (1)

குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்று அன்னார் மாய்வர் நிலத்து – குறள் 90:8

TOP


மதியும் (1)

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன் – குறள் 112:6

TOP


மந்திரியின் (1)

பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர்
எழுபது கோடி உறும் – குறள் 64:9

TOP


மயக்கம் (1)

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெட கெடும் நோய் – குறள் 36:10

TOP


மயங்கி (1)

தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் – குறள் 35:8

TOP


மயல் (1)

இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள் 35:4

TOP


மயிர் (2)

தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்த-கடை – குறள் 97:4
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் – குறள் 97:9

TOP


மயில்-கொல்லோ (1)

அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு – குறள் 109:1

TOP


மர (2)

நாண் அகத்து இல்லார் இயக்கம் மர_பாவை
நாணால் உயிர் மருட்டி அற்று – குறள் 102:10
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
மர_பாவை சென்று வந்த அற்று – குறள் 106:8

TOP


மர_பாவை (2)

நாண் அகத்து இல்லார் இயக்கம் மர_பாவை
நாணால் உயிர் மருட்டி அற்று – குறள் 102:10
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
மர_பாவை சென்று வந்த அற்று – குறள் 106:8

TOP


மரத்த (1)

மருந்து ஆகி தப்பா மரத்த அற்றால் செல்வம்
பெருந்தகையான்-கண் படின் – குறள் 22:7

TOP


மரத்து (1)

மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணொடு
இயைந்து கண்ணோடாதவர் – குறள் 58:6

TOP


மரபினார் (1)

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னை-கொல் ஏதிலார் மாட்டு – குறள் 19:8

TOP


மரம் (6)

அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று – குறள் 8:8
பயன் மரம் உள்ளூர் பழுத்து அற்றால் செல்வம்
நயன் உடையான்-கண் படின் – குறள் 22:6
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்
மரம் மக்கள் ஆதலே வேறு – குறள் 60:10
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து – குறள் 88:9
அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கள் பண்பு இல்லாதவர் – குறள் 100:7
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள்
நச்சு மரம் பழுத்து அற்று – குறள் 101:8

TOP


மரீஇயவனை (1)

பாத்து ஊண் மரீஇயவனை பசி என்னும்
தீ பிணி தீண்டல் அரிது – குறள் 23:7

TOP


மருங்கு (2)

அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி
தீவினை செய்யான் எனின் – குறள் 21:10
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்கு உடையார் மா நிலத்து இல் – குறள் 53:6

TOP


மருட்டி (1)

நாண் அகத்து இல்லார் இயக்கம் மர_பாவை
நாணால் உயிர் மருட்டி அற்று – குறள் 102:10

TOP


மருண்டு (3)

அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
மறுகில் மறுகும் மருண்டு – குறள் 114:9
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு
மாலை படர்தரும் போழ்து – குறள் 123:9

TOP


மருந்து (10)

விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா
மருந்து எனினும் வேண்டல்-பாற்று அன்று – குறள் 9:2
மருந்து ஆகி தப்பா மரத்த அற்றால் செல்வம்
பெருந்தகையான்-கண் படின் – குறள் 22:7
மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் – குறள் 95:2
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
அ பால் நால் கூற்றே மருந்து – குறள் 95:10
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள் 110:1
பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை
தன் நோய்க்கு தானே மருந்து – குறள் 111:2
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும்
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து – குறள் 125:1
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து – குறள் 128:5

TOP


மருந்தோ (1)

மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழிய வந்த இடத்து – குறள் 97:8

TOP


மருவுக (1)

மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பு இலார் நட்பு – குறள் 80:10

TOP


மருள் (4)

பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
மாசு அறு காட்சியவர் – குறள் 20:9
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசு அறு காட்சியவர்க்கு – குறள் 36:2
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல்
வன்கண்ணதோ நின் துணை – குறள் 123:2
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
மாயும் என் மாயா உயிர் – குறள் 123:10

TOP


மருளான் (2)

பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள் 36:1
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள் 101:2

TOP


மல்க (1)

புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து – குறள் 78:10

TOP


மல்லல் (1)

அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி – குறள் 25:5

TOP


மலர் (7)

மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நில மிசை நீடு வாழ்வார் – குறள் 1:3
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
உள்ளத்து அனையது உயர்வு – குறள் 60:5
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது
உணர விரித்து உரையாதார் – குறள் 65:10
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
பலர் காணும் பூ ஒக்கும் என்று – குறள் 112:2
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின்
பலர் காண தோன்றல் மதி – குறள் 112:9
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர் எமக்கு ஈந்தது இ ஊர் – குறள் 115:2
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி
நறு மலர் நாணின கண் – குறள் 124:1

TOP


மலர்தலும் (1)

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு – குறள் 43:5

TOP


மலரினும் (1)

மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படுவார் – குறள் 129:9

TOP


மலரும் (1)

காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி
மாலை மலரும் இ நோய் – குறள் 123:7

TOP


மலை (1)

புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல்
வன்கண்ணதோ நின் துணை – குறள் 123:2

TOP


மலைந்து (1)

பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை – குறள் 66:7

TOP


மலையினும் (1)

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாண பெரிது – குறள் 13:4

TOP


மலையும் (2)

இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு – குறள் 74:7
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையது அரண் – குறள் 75:2

TOP


மழலை (1)

குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர் – குறள் 7:6

TOP


மழித்தலும் (1)

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் – குறள் 28:10

TOP


மழை (4)

துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
துப்பு ஆயதூஉம் மழை – குறள் 2:2
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை – குறள் 2:5
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் என பெய்யும் மழை – குறள் 6:5
முயக்கு-இடை தண் வளி போழ பசப்பு உற்ற
பேதை பெரு மழை கண் – குறள் 124:9

TOP


மற்று (41)

கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை – குறள் 2:5
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது – குறள் 2:6
அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்
செம் தண்மை பூண்டு ஒழுகலான் – குறள் 3:10
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
பொன்றும்-கால் பொன்றா துணை – குறள் 4:6
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல – குறள் 4:9
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன் கலம் நன் மக்கள் பேறு – குறள் 6:10
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு – குறள் 7:5
பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்று பிற – குறள் 10:5
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்று இன்பம் வேண்டுபவர் – குறள் 18:3
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து – குறள் 23:1
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது – குறள் 25:8
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு – குறள் 27:6
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின் சார பொய்யாமை நன்று – குறள் 33:3
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி – குறள் 36:6
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து
சார்தரா சார்தரும் நோய் – குறள் 36:9
வேண்டும்-கால் வேண்டும் பிறவாமை மற்று அது
வேண்டாமை வேண்ட வரும் – குறள் 37:2
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது
வாஅய்மை வேண்ட வரும் – குறள் 37:4
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும் – குறள் 38:10
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து – குறள் 46:9
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
குத்து ஒக்க சீர்த்த இடத்து – குறள் 49:10
அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர்
பற்று இலர் நாணார் பழி – குறள் 51:6
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார்
உடையது உடையரோ மற்று – குறள் 60:1
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து – குறள் 60:6
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்று அன்ன செய்யாமை நன்று – குறள் 66:5
எ பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை
விட்ட-கால் கேட்க மறை – குறள் 70:5
பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்ற-கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு – குறள் 78:3
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன் – குறள் 81:2
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல் – குறள் 91:5
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்று
சான்றோர் முகத்து களி – குறள் 93:3
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
இகழ்வார் பின் சென்று நிலை – குறள் 97:6
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழிய வந்த இடத்து – குறள் 97:8
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுது உண்டு பின் செல்பவர் – குறள் 104:3
உடம்பொடு உயிர்-இடை என்ன மற்று அன்ன
மடந்தையொடு எம்-இடை நட்பு – குறள் 113:2
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
வல் வரவு வாழ்வார்க்கு உரை – குறள் 116:1
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர்
நீங்கின் அரிதால் புணர்வு – குறள் 116:5
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடும்-கால்
துன்பம் அதனின் பெரிது – குறள் 117:6
பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர்
காணாது அமைவு இல கண் – குறள் 118:8
மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான்
உற்ற நாள் உள்ள உளேன் – குறள் 121:6
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
துனி செய்து துவ்வாய் காண் மற்று – குறள் 130:4
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்
காதலர் இல்லா வழி – குறள் 131:8
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
புல்லாள் புல தக்கனள் – குறள் 132:6

TOP


மற்றும் (7)

இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள் 21:5
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள் 35:4
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை – குறள் 35:5
பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
நிலையாமை காணப்படும் – குறள் 35:9
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும் – குறள் 38:3
உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான்
உள்ளியது உள்ள பெறின் – குறள் 54:10
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றி கொளல் – குறள் 59:8

TOP


மற்றைய (2)

அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல
மற்றைய தேற்றாதவர் – குறள் 29:9
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம்
மற்றைய எல்லாம் பிற – குறள் 67:1

TOP


மற்றையவர் (1)

தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் – குறள் 35:8

TOP


மற்றையவர்கள் (1)

துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
மற்றையவர்கள் தவம் – குறள் 27:3

TOP


மற்றையவை (1)

கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு அல்ல மற்றையவை – குறள் 40:10

TOP


மற்றையார் (1)

அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார்
அற்று ஆக அற்றது இலர் – குறள் 37:5

TOP


மற்றையான் (1)

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் – குறள் 22:4

TOP


மறக்கல்லா (1)

நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு – குறள் 130:7

TOP


மறத்தல் (2)

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று – குறள் 16:2
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் – குறள் 31:3

TOP


மறத்தலின் (1)

அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – குறள் 4:2

TOP


மறத்திற்கும் (1)

அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை – குறள் 8:6

TOP


மறந்தார்-கொல் (1)

துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
மற்றையவர்கள் தவம் – குறள் 27:3

TOP


மறந்தீர் (1)

உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
புல்லாள் புல தக்கனள் – குறள் 132:6

TOP


மறந்து (1)

ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து
கூடல்-கண் சென்றது என் நெஞ்சு – குறள் 129:4

TOP


மறந்தும் (1)

மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – குறள் 21:4

TOP


மறந்தேன் (1)

நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு – குறள் 130:7

TOP


மறப்பது (2)

நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று – குறள் 11:8

TOP


மறப்பர் (1)

ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் – குறள் 56:10

TOP


மறப்பின் (3)

உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
ஒள் அமர் கண்ணாள் குணம் – குறள் 113:5
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும் – குறள் 121:7
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
கலம் கழியும் காரிகை நீத்து – குறள் 127:2

TOP


மறப்பினும் (1)

மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் – குறள் 14:4

TOP


மறப்பு (2)

உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
ஒள் அமர் கண்ணாள் குணம் – குறள் 113:5
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும் – குறள் 121:7

TOP


மறம் (1)

மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு – குறள் 77:6

TOP


மறவர் (1)

உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர் குன்றல் இலர் – குறள் 78:8

TOP


மறவற்க (1)

மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு – குறள் 11:6

TOP


மறவி (1)

நெடு நீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காம கலன் – குறள் 61:5

TOP


மறன் (1)

அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா
மானம் உடையது அரசு – குறள் 39:4

TOP


மறு (2)

குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
மதி-கண் மறு போல் உயர்ந்து – குறள் 96:7
அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல
மறு உண்டோ மாதர் முகத்து – குறள் 112:7

TOP


மறுகில் (1)

அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
மறுகில் மறுகும் மருண்டு – குறள் 114:9

TOP


மறுகும் (1)

அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
மறுகில் மறுகும் மருண்டு – குறள் 114:9

TOP


மறுத்தானை (1)

கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் – குறள் 26:10

TOP


மறுத்து (2)

கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள் 32:2
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு – குறள் 95:5

TOP


மறுமை (2)

மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து – குறள் 46:9
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று – குறள் 91:4

TOP


மறுமையும் (2)

சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் – குறள் 10:8
இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் – குறள் 105:2

TOP


மறை (7)

சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை – குறள் 59:10
எ பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை
விட்ட-கால் கேட்க மறை – குறள் 70:5
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
பெரு மிறை தானே தமக்கு – குறள் 85:7
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – குறள் 108:6
நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம்
மறை இறந்து மன்று படும் – குறள் 114:8
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல்
அறை பறை கண்ணார் அகத்து – குறள் 118:10
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
மறை இறந்து மன்றுபடும் – குறள் 126:4

TOP


மறைக்கும் (1)

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமை-தான்
குற்றமே கூறிவிடும் – குறள் 98:10

TOP


மறைத்தலோ (1)

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
குற்றம் மறையா வழி – குறள் 85:6

TOP


மறைத்திரோ (1)

தும்மு செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று – குறள் 132:8

TOP


மறைந்தவை (1)

மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று – குறள் 59:7

TOP


மறைந்து (3)

தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்த அற்று – குறள் 28:4
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் – குறள் 28:8

TOP


மறைப்பான் (1)

இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை
குற்றம் மறைப்பான் உடம்பு – குறள் 103:9

TOP


மறைப்பின் (1)

கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
செய்யல-மன் இவள் கண் – குறள் 109:6

TOP


மறைப்பேன்-மன் (2)

மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்று நீர் போல மிகும் – குறள் 117:1
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி
தும்மல் போல் தோன்றிவிடும் – குறள் 126:3

TOP


மறைமொழி (1)

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும் – குறள் 3:8

TOP


மறையா (1)

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
குற்றம் மறையா வழி – குறள் 85:6

TOP


மன் (7)

தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – குறள் 7:8
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை – குறள் 25:4
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும் – குறள் 27:8
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல் – குறள் 32:8
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் – குறள் 46:7
பண்பு உடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
மண் புக்கு மாய்வது மன் – குறள் 100:6
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என் அல்லது இல்லை துணை – குறள் 117:8

TOP


மன்ற (4)

விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்
தீமை புரிந்து ஒழுகுவார் – குறள் 15:3
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் – குறள் 23:9
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசு அற்ற
சில சொல்லல் தேற்றாதவர் – குறள் 65:9
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலாதார் – குறள் 88:10

TOP


மன்றில் (1)

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு – குறள் 82:10

TOP


மன்று (1)

நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம்
மறை இறந்து மன்று படும் – குறள் 114:8

TOP


மன்றுபடும் (1)

நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
மறை இறந்து மன்றுபடும் – குறள் 126:4

TOP


மன்னர் (1)

மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும் – குறள் 70:2

TOP


மன்னர்க்கு (2)

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி – குறள் 56:6

TOP


மன்னரான் (1)

மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும் – குறள் 70:2

TOP


மன்னவன் (13)

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் – குறள் 39:8
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரை சூழ்ந்து கொளல் – குறள் 45:5
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி – குறள் 55:2
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் – குறள் 55:3
இயல்பு உளி கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு – குறள் 55:5
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோல் அதூஉம் கோடாது எனின் – குறள் 55:6
எண் பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன்
தண் பதத்தான் தானே கெடும் – குறள் 55:8
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்-தொறும் நாடு கெடும் – குறள் 56:3
இன்மையின் இன்னாது உடைமை முறை செய்யா
மன்னவன் கோல் கீழ் படின் – குறள் 56:8
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
ஒல்லாது வானம் பெயல் – குறள் 56:9
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
தெற்று என்க மன்னவன் கண் – குறள் 59:1
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன்
கொற்றம் கொள கிடந்தது இல் – குறள் 59:3
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு – குறள் 61:10

TOP


மன்னன் (4)

காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் – குறள் 39:6
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் – குறள் 45:8
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
கோடாமை கோடாது உலகு – குறள் 52:10
குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன்
அடி தழீஇ நிற்கும் உலகு – குறள் 55:4

TOP


மன்னாவாம் (1)

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி – குறள் 56:6

TOP


மன்னிய (1)

மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும் – குறள் 70:2

TOP


மன்னுதல் (1)

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி – குறள் 56:6

TOP


மன்னும் (4)

ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு – குறள் 19:10
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
திங்களை பாம்பு கொண்டு அற்று – குறள் 115:6
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும்
கூடலின் காணப்படும் – குறள் 133:7

TOP


மன்னோ (3)

கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு
சொல் வேறு பட்டார் தொடர்பு – குறள் 82:9
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான்
தாங்காது மன்னோ பொறை – குறள் 99:10
மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான்
உற்ற நாள் உள்ள உளேன் – குறள் 121:6

TOP


மன (7)

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மன கவலை மாற்றல் அரிது – குறள் 1:7
மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இன தூய்மை தூவா வரும் – குறள் 46:5
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் – குறள் 46:7
மன நலம் நன்கு உடையர்-ஆயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து – குறள் 46:8
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து – குறள் 46:9
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம்
மற்றைய எல்லாம் பிற – குறள் 67:1
இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப்பட்டார் தொடர்பு – குறள் 92:10

TOP


மனத்தது (1)

மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் – குறள் 28:8

TOP


மனத்தான் (3)

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் – குறள் 28:1
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை – குறள் 32:7
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் – குறள் 46:3

TOP


மனத்தின் (1)

மனத்தின் அமையாதவரை எனைத்து ஒன்றும்
சொல்லினான் தேறற்பாற்று அன்று – குறள் 83:5

TOP


மனத்து (1)

மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு – குறள் 46:4

TOP


மனத்து-கண் (1)

மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற – குறள் 4:4

TOP


மனத்தொடு (1)

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை – குறள் 30:5

TOP


மனம் (5)

படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம் – குறள் 26:3
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
இல்லை நன்று ஆகா வினை – குறள் 46:6
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும் – குறள் 83:2
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது – குறள் 83:3
மனம் மாணா உள் பகை தோன்றின் இனம் மாணா
ஏதம் பலவும் தரும் – குறள் 89:4

TOP


மனை (6)

மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை – குறள் 6:1
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன் கலம் நன் மக்கள் பேறு – குறள் 6:10
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – குறள் 15:8
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு – குறள் 82:10
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்
வேண்டா பொருளும் அது – குறள் 91:1
வினை கலந்து வென்று ஈக வேந்தன் மனை கலந்து
மாலை அயர்கம் விருந்து – குறள் 127:8

TOP


மனையாளை (1)

மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று – குறள் 91:4

TOP