சா – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சா 1
சாக்காடு 2
சாக்காடும் 1
சாகாடும் 1
சாகில் 1
சாதல் 2
சாதலின் 1
சாம் 2
சாய்தல் 1
சாய்ந்து 1
சாய்பவர் 1
சாய 1
சாயலும் 1
சார்தரா 1
சார்தரும் 1
சார்பு 5
சார்வாய் 1
சார 1
சாரா 4
சால்பிற்கு 1
சால்பின் 1
சால்பு 7
சால 4
சாலும் 3
சாவா 1
சாவார் 1
சாவாரை 1
சாற்றுவேன்-மன் 1
சான்ற 3
சான்றவர் 1
சான்றாண்மை 2
சான்றாண்மைக்கு 1
சான்றோர் 9
சான்றோர்க்கு 7
சான்றோரான் 1
சான்றோன் 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சா (1)

மிக செய்து தம் எள்ளுவாரை நக செய்து
நட்பினுள் சா புல்லல்-பாற்று – குறள் 83:9

TOP


சாக்காடு (2)

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு – குறள் 34:9
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து – குறள் 78:10

TOP


சாக்காடும் (1)

நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது – குறள் 24:5

TOP


சாகாடும் (1)

பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம்
சால மிகுத்து பெயின் – குறள் 48:5

TOP


சாகில் (1)

புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து – குறள் 78:10

TOP


சாதல் (2)

புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும் – குறள் 19:3
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – குறள் 113:4

TOP


சாதலின் (1)

சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையா-கடை – குறள் 23:10

TOP


சாம் (2)

யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு – குறள் 40:7
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம் தரும் – குறள் 80:2

TOP


சாய்தல் (1)

இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு – குறள் 86:8

TOP


சாய்ந்து (1)

இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
மிகல் ஊக்கும் தன்மையவர் – குறள் 86:5

TOP


சாய்பவர் (1)

உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள் ஒற்றி கண் சாய்பவர் – குறள் 93:7

TOP


சாய (1)

முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து
வீறு எய்தி மாண்டது அரண் – குறள் 75:9

TOP


சாயலும் (1)

சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து – குறள் 119:3

TOP


சார்தரா (1)

சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து
சார்தரா சார்தரும் நோய் – குறள் 36:9

TOP


சார்தரும் (1)

சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து
சார்தரா சார்தரும் நோய் – குறள் 36:9

TOP


சார்பு (5)

அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை – குறள் 8:6
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து
சார்தரா சார்தரும் நோய் – குறள் 36:9
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை – குறள் 45:9
இறந்து அமைந்த சார்பு உடையர்-ஆயினும் உய்யார்
சிறந்து அமைந்த சீரார் செறின் – குறள் 90:10

TOP


சார்வாய் (1)

கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை – குறள் 2:5

TOP


சார (1)

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின் சார பொய்யாமை நன்று – குறள் 33:3

TOP


சாரா (4)

நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா
பண்பு இல் சொல் பல்லார் அகத்து – குறள் 20:4
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று – குறள் 82:5
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன் போல நோக்கப்படும் – குறள் 105:7

TOP


சால்பிற்கு (1)

சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி
துலை அல்லார்-கண்ணும் கொளல் – குறள் 99:6

TOP


சால்பின் (1)

உதவி வரைத்து அன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து – குறள் 11:5

TOP


சால்பு (7)

சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பார் – குறள் 96:6
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பு ஊன்றிய தூண் – குறள் 99:3
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
சொல்லா நலத்தது சால்பு – குறள் 99:4
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யா-கால்
என்ன பயத்ததோ சால்பு – குறள் 99:7
இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும்
திண்மை உண்டாக பெறின் – குறள் 99:8
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும்
நன்மை குறித்தது சால்பு – குறள் 102:3
இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா
காலும் இரவு ஒல்லா சால்பு – குறள் 107:4

TOP


சால (4)

பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம்
சால மிகுத்து பெயின் – குறள் 48:5
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல் – குறள் 77:10
தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சால படும் – குறள் 104:7
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்த நாள் வீங்கிய தோள் – குறள் 124:3

TOP


சாலும் (3)

ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்
இந்திரனே சாலும் கரி – குறள் 3:5
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது – குறள் 17:5
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி – குறள் 106:10

TOP


சாவா (1)

விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா
மருந்து எனினும் வேண்டல்-பாற்று அன்று – குறள் 9:2

TOP


சாவார் (1)

பகையகத்து சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சாதவர் – குறள் 73:3

TOP


சாவாரை (1)

இழைத்தது இகவாமை சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற்பவர் – குறள் 78:9

TOP


சாற்றுவேன்-மன் (1)

கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன்-மன் – குறள் 122:2

TOP


சான்ற (3)

தன் காத்து தன் கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் – குறள் 6:6
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
தெற்று என்க மன்னவன் கண் – குறள் 59:1
வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல் – குறள் 101:1

TOP


சான்றவர் (1)

சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான்
தாங்காது மன்னோ பொறை – குறள் 99:10

TOP


சான்றாண்மை (2)

கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
சான்றாண்மை மேற்கொள்பவற்கு – குறள் 99:1
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான்
தாங்காது மன்னோ பொறை – குறள் 99:10

TOP


சான்றாண்மைக்கு (1)

ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார் – குறள் 99:9

TOP


சான்றோர் (9)

நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று – குறள் 20:7
ஈன்றாள் பசி காண்பான்-ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை – குறள் 66:6
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை – குறள் 66:7
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன் – குறள் 81:2
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர்
குழாஅத்து பேதை புகல் – குறள் 84:10
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்று
சான்றோர் முகத்து களி – குறள் 93:3
குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
எ நலத்து உள்ளதூஉம் அன்று – குறள் 99:2
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை – குறள் 99:5
சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்ல பயன்படும் கீழ் – குறள் 108:8

TOP


சான்றோர்க்கு (7)

கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள் 12:5
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு-பால்
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள் 12:8
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – குறள் 15:8
எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு – குறள் 30:9
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு
கொன்று ஆகும் ஆக்கம் கடை – குறள் 33:8
மன நலம் நன்கு உடையர்-ஆயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து – குறள் 46:8
அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல்
பிணி அன்றோ பீடு நடை – குறள் 102:4

TOP


சான்றோரான் (1)

உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார் – குறள் 93:2

TOP


சான்றோன் (1)

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய் – குறள் 7:9

TOP