மூ – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மூக்கின் (1)

புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி
மூக்கின் கரியார் உடைத்து – குறள் 28:7

TOP


மூடப்பட்டார் (1)

அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
முகடியான் மூடப்பட்டார் – குறள் 94:6

TOP


மூத்த (1)

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல் – குறள் 45:1

TOP


மூத்து (1)

அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
பெற்றாள் தமியள் மூத்து அற்று – குறள் 101:7

TOP


மூவர் (1)

ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும் – குறள் 59:9

TOP


மூவர்க்கும் (1)

இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல் ஆற்றின் நின்ற துணை – குறள் 5:1

TOP


மூன்றன் (2)

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெட கெடும் நோய் – குறள் 36:10
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
செறிவு உடையான் செல்க வினைக்கு – குறள் 69:4

TOP


மூன்று (2)

அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு
இன்றியமையாத மூன்று – குறள் 69:2
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று – குறள் 95:1

TOP


மூன்றும் (4)

தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவற்கு – குறள் 39:3
தூய்மை துணைமை துணிவு உடைமை இ மூன்றும்
வாய்மை வழி உரைப்பான் பண்பு – குறள் 69:8
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
இழுக்கார் குடி பிறந்தார் – குறள் 96:2
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இ மூன்றும் உடைத்து – குறள் 109:5

TOP