போ – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போஒம் 2
போஒய் 2
போக்கி 1
போக்கும் 1
போகவிடல் 1
போகா 1
போகார் 1
போகு 2
போகு_ஆறு 1
போகு_ஊழால் 1
போதாய் 1
போது 1
போம் 1
போர் 2
போர்த்த 1
போர்த்து 1
போல் 37
போல்க 1
போல்வர் 2
போல 22
போலினும் 1
போலும் 11
போலுமே 1
போழ்தில் 2
போழ்து 3
போழ 2
போற்றல் 1
போற்றலுள் 1
போற்றா-கடை 1
போற்றாதார்க்கு 1
போற்றாது 1
போற்றார்-கண் 1
போற்றி 6
போற்றின் 1
போற்றினும் 1
போற்றுபவர்க்கும் 1
போற்றுவார் 1
போன்று 6

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


போஒம் (2)

ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர்
போஒம் அளவும் ஓர் நோய் – குறள் 85:8
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர்
சொல்லாட போஒம் உயிர் – குறள் 107:10

TOP


போஒய் (2)

அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
போஒய் பெறுவது எவன் – குறள் 5:6
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம்
போஒய் புறமே படும் – குறள் 94:3

TOP


போக்கி (1)

கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா நகும் – குறள் 78:4

TOP


போக்கும் (1)

கூத்தாட்டு அவை குழாத்த அற்றே பெரும் செல்வம்
போக்கும் அது விளிந்து அற்று – குறள் 34:2

TOP


போகவிடல் (1)

பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு
ஊதியம் போகவிடல் – குறள் 84:1

TOP


போகா (1)

பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து
சொரியினும் போகா தம – குறள் 38:6

TOP


போகார் (1)

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எம் காதலவர் – குறள் 113:6

TOP


போகு (2)

ஆகு_ஊழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள்
போகு_ஊழால் தோன்றும் மடி – குறள் 38:1
ஆகு_ஆறு அளவு இட்டிது-ஆயினும் கேடு இல்லை
போகு_ஆறு அகலா-கடை – குறள் 48:8

TOP


போகு_ஆறு (1)

ஆகு_ஆறு அளவு இட்டிது-ஆயினும் கேடு இல்லை
போகு_ஆறு அகலா-கடை – குறள் 48:8

TOP


போகு_ஊழால் (1)

ஆகு_ஊழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள்
போகு_ஊழால் தோன்றும் மடி – குறள் 38:1

TOP


போதாய் (1)

கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திரு_நுதற்கு இல்லை இடம் – குறள் 113:3

TOP


போது (1)

காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி
மாலை மலரும் இ நோய் – குறள் 123:7

TOP


போம் (1)

அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும்
பின் பயக்கும் நல்-பாலவை – குறள் 66:9

TOP


போர் (2)

குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
உண்டாக செய்வான் வினை – குறள் 76:8
தார் தாங்கி செல்வது தானை தலைவந்த
போர் தாங்கும் தன்மை அறிந்து – குறள் 77:7

TOP


போர்த்த (1)

அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு – குறள் 8:10

TOP


போர்த்து (1)

வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று – குறள் 28:3

TOP


போல் (37)

புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
ஏறு போல் பீடு நடை – குறள் 6:9
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு-பால்
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள் 12:8
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
பிறவும் தம போல் செயின் – குறள் 12:10
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து – குறள் 13:6
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரை பொன் போல் பொதிந்து – குறள் 16:5
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு – குறள் 19:10
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது – குறள் 24:5
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம் – குறள் 26:3
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு – குறள் 27:7
நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள் 28:6
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றா-கடை – குறள் 32:5
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
வாளாது உணர்வார் பெறின் – குறள் 34:4
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர் – குறள் 40:5
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண் – குறள் 58:4
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் – குறள் 71:6
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்
வினைக்கு அரிய யா உள காப்பு – குறள் 79:1
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
ஒல்லை உணரப்படும் – குறள் 83:6
வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள் போல் பகைவர் தொடர்பு – குறள் 89:2
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே
உள் பகை உற்ற குடி – குறள் 89:7
இழ-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
உழ-தொறூஉம் காது அற்று உயிர் – குறள் 94:10
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்
கழி பேர் இரையான்-கண் நோய் – குறள் 95:6
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
மதி-கண் மறு போல் உயர்ந்து – குறள் 96:7
சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்ல பயன்படும் கீழ் – குறள் 108:8
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று – குறள் 109:10
உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல்
ஒல்லை உணரப்படும் – குறள் 110:6
செறாஅ சிறு சொல்லும் செற்றார் போல் நோக்கும்
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு – குறள் 110:7
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி – குறள் 112:8
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல்
அறை பறை கண்ணார் அகத்து – குறள் 118:10
விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு – குறள் 119:6
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல்
வன்கண்ணதோ நின் துணை – குறள் 123:2
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி
தும்மல் போல் தோன்றிவிடும் – குறள் 126:3
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு – குறள் 127:9
மணியுள் திகழ்தரும் நூல் போல் மடந்தை
அணியுள் திகழ்வது ஒன்று உண்டு – குறள் 128:3
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – குறள் 128:4
எழுதும்-கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
பழி காணேன் கண்ட இடத்து – குறள் 129:5
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
பொய்த்தல் அறிந்து என் புலந்து – குறள் 129:7

TOP


போல்க (1)

அகலாது அணுகாது தீ காய்வார் போல்க
இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – குறள் 70:1

TOP


போல்வர் (2)

அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கள் பண்பு இல்லாதவர் – குறள் 100:7
மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன
ஒப்பாரி யாம் கண்டது இல் – குறள் 108:1

TOP


போல (22)

என்பு இலதனை வெயில் போல காயுமே
அன்பு இலதனை அறம் – குறள் 8:7
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை – குறள் 16:1
களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து
ஆவது போல கெடும் – குறள் 29:3
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
களவு அறிந்தார் நெஞ்சில் கரவு – குறள் 29:8
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போல கெடும் – குறள் 44:5
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு – குறள் 46:4
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
இல்லாகி தோன்றா கெடும் – குறள் 48:9
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
வாள் ஆண்மை போல கெடும் – குறள் 62:4
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையும்-கால்
தீ எச்சம் போல தெறும் – குறள் 68:4
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு – குறள் 79:8
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும் – குறள் 83:2
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
உள் பகை உற்ற குடி – குறள் 89:8
ஒருமை மகளிரே போல பெருமையும்
தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு – குறள் 98:4
அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை – குறள் 103:7
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன் போல நோக்கப்படும் – குறள் 105:7
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
சிறக்கணித்தான் போல நகும் – குறள் 110:5
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
காதலார்-கண்ணே உள – குறள் 110:9
அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல
மறு உண்டோ மாதர் முகத்து – குறள் 112:7
தொடின் சுடின் அல்லது காம நோய் போல
விடின் சுடல் ஆற்றுமோ தீ – குறள் 116:9
மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்று நீர் போல மிகும் – குறள் 117:1
ஒருதலையான் இன்னாது காமம் கா போல
இருதலையானும் இனிது – குறள் 120:6
காதலர் இல் வழி மாலை கொலை_களத்து
ஏதிலர் போல வரும் – குறள் 123:4

TOP


போலினும் (1)

பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது – குறள் 82:1

TOP


போலும் (11)

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு – குறள் 34:9
வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு – குறள் 56:2
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
பண்பு உடையாளர் தொடர்பு – குறள் 79:3
அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கள் பண்பு இல்லாதவர் – குறள் 100:7
இன்றும் வருவது-கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு – குறள் 105:8
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவினும் தேற்றாதார் மாட்டு – குறள் 106:4
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை – குறள் 123:8
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனி வாரும் கண் – குறள் 124:2
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்த நாள் வீங்கிய தோள் – குறள் 124:3

TOP


போலுமே (1)

வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள் – குறள் 111:5

TOP


போழ்தில் (2)

செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும் – குறள் 57:9
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணும்-கால்
உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு – குறள் 93:10

TOP


போழ்து (3)

செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் – குறள் 42:2
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – குறள் 54:9
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு
மாலை படர்தரும் போழ்து – குறள் 123:9

TOP


போழ (2)

வீழும் இருவர்க்கு இனிதே வளி-இடை
போழ படாஅ முயக்கு – குறள் 111:8
முயக்கு-இடை தண் வளி போழ பசப்பு உற்ற
பேதை பெரு மழை கண் – குறள் 124:9

TOP


போற்றல் (1)

போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின்
தேற்றுதல் யார்க்கும் அரிது – குறள் 70:3

TOP


போற்றலுள் (1)

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை – குறள் 90:1

TOP


போற்றா-கடை (1)

அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றா-கடை – குறள் 32:5

TOP


போற்றாதார்க்கு (1)

பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு – குறள் 26:2

TOP


போற்றாது (1)

நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
போற்றாது புத்தேள் உலகு – குறள் 24:4

TOP


போற்றார்-கண் (1)

ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
போற்றார்-கண் போற்றி செயின் – குறள் 50:3

TOP


போற்றி (6)

நிறை உடைமை நீங்காமை வேண்டின் பொறை உடைமை
போற்றி ஒழுகப்படும் – குறள் 16:4
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்
போற்றி வழங்கும் நெறி – குறள் 48:7
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
போற்றார்-கண் போற்றி செயின் – குறள் 50:3
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா
கருவியான் போற்றி செயின் – குறள் 54:7
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் – குறள் 54:8
மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் – குறள் 95:2

TOP


போற்றின் (1)

போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின்
தேற்றுதல் யார்க்கும் அரிது – குறள் 70:3

TOP


போற்றினும் (1)

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப்படும் – குறள் 47:8

TOP


போற்றுபவர்க்கும் (1)

ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன்
போற்றுபவர்க்கும் பொருள் – குறள் 75:1

TOP


போற்றுவார் (1)

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை – குறள் 90:1

TOP


போன்று (6)

அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை
ஒழுக்கம் இலான்-கண் உயர்வு – குறள் 14:5
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும் – குறள் 83:2
செறாஅ சிறு சொல்லும் செற்றார் போல் நோக்கும்
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு – குறள் 110:7
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர்
நீந்தல-மன்னோ என் கண் – குறள் 117:10
நினைப்பவர் போன்று நினையார்-கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும் – குறள் 121:3

TOP