பூ – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பூ (4)

மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
பலர் காணும் பூ ஒக்கும் என்று – குறள் 112:2
அனிச்ச பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை – குறள் 112:5
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை
பூ அன்ன கண்ணார் அகத்து – குறள் 131:5
கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை
காட்டிய சூட்டினீர் என்று – குறள் 132:3

TOP


பூசல் (2)

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும் – குறள் 8:1
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
வாடூ தோள் பூசல் உரைத்து – குறள் 124:7

TOP


பூசனை (1)

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு – குறள் 2:8

TOP


பூண்டார் (1)

இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு – குறள் 3:3

TOP


பூண்டு (1)

அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்
செம் தண்மை பூண்டு ஒழுகலான் – குறள் 3:10

TOP


பூணும் (1)

பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா
பேதை வினை மேற்கொளின் – குறள் 84:6

TOP


பூதங்கள் (1)

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் – குறள் 28:1

TOP


பூப்பர் (1)

பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது – குறள் 25:8

TOP


பூரியர்கள் (1)

வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா
பூரியர்கள் ஆழும் அளறு – குறள் 92:9

TOP


பூரியார்-கண்ணும் (1)

அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம்
பூரியார்-கண்ணும் உள – குறள் 25:1

TOP