ஓ – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

ஓ – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

ஓஒ (3)

ஒள் நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு – குறள் 109:8
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண்
தாஅம் இதற்பட்டது – குறள் 118:6
யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து
ஓஒ உளரே அவர் – குறள் 121:4

TOP


ஓஒதல் (1)

ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னுமவர் – குறள் 66:3

TOP


ஓக்கினாள் (1)

ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு
தானை கொண்ட அன்னது உடைத்து – குறள் 109:2

TOP


ஓச்சி (1)

கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டுபவர் – குறள் 57:2

TOP


ஓச்சும் (2)

குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன்
அடி தழீஇ நிற்கும் உலகு – குறள் 55:4
இயல்பு உளி கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு – குறள் 55:5

TOP


ஓசை (1)

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான்-கட்டே உலகு – குறள் 3:7

TOP


ஓட்டு (1)

விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்
ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு – குறள் 78:5

TOP


ஓடா (2)

கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து – குறள் 50:6

TOP


ஓடி (1)

அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி
தீவினை செய்யான் எனின் – குறள் 21:10

TOP


ஓடும் (1)

கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து – குறள் 50:6

TOP


ஓத்து (1)

மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் – குறள் 14:4

TOP


ஓதி (1)

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா
பேதையின் பேதையார் இல் – குறள் 84:4

TOP


ஓம்பப்படும் (1)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும் – குறள் 14:1

TOP


ஓம்பல் (7)

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை – குறள் 5:3
உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா
மடமை மடவார்-கண் உண்டு – குறள் 9:9
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி – குறள் 39:10
வினை-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு – குறள் 62:2
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – குறள் 65:2
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு – குறள் 82:10
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர்
நீங்கின் அரிதால் புணர்வு – குறள் 116:5

TOP


ஓம்பா (2)

உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா
மடமை மடவார்-கண் உண்டு – குறள் 9:9
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை – குறள் 87:1

TOP


ஓம்பி (10)

இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள் 9:1
வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்து ஓம்பி
மிச்சில் மிசைவான் புலம் – குறள் 9:5
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு – குறள் 9:6
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் விருந்து ஓம்பி
வேள்வி தலைப்படாதார் – குறள் 9:8
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி
தேரினும் அஃதே துணை – குறள் 14:2
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை – குறள் 25:4
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
வடு அன்று வேந்தன் தொழில் – குறள் 55:9

TOP


ஓம்பின் (1)

ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர்
நீங்கின் அரிதால் புணர்வு – குறள் 116:5

TOP


ஓம்பு (1)

அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார்
பலர் நாண நீத்த கடை – குறள் 115:9

TOP


ஓம்புக (2)

அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர்
பற்று இலர் நாணார் பழி – குறள் 51:6
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை – குறள் 87:1

TOP


ஓம்புதல் (2)

பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை – குறள் 33:2
அற்றேம் என்று அல்லற்படுபவோ பெற்றேம் என்று
ஓம்புதல் தேற்றாதவர் – குறள் 63:6

TOP


ஓம்பும் (1)

மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழிய வந்த இடத்து – குறள் 97:8

TOP


ஓம்புவான் (2)

வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று – குறள் 9:3
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
நல் விருந்து ஓம்புவான் இல் – குறள் 9:4

TOP


ஓர் (14)

உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – குறள் 3:4
வகை அற சூழாது எழுதல் பகைவரை
பாத்தி படுப்பது ஓர் ஆறு – குறள் 47:5
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றி கொளல் – குறள் 59:8
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர்
எழுபது கோடி உறும் – குறள் 64:9
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து – குறள் 65:5
குறித்தது கூறாமை கொள்வாரொடு ஏனை
உறுப்பு ஓர் அனையரால் வேறு – குறள் 71:4
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பது ஓர் கோல் – குறள் 80:6
ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர்
போஒம் அளவும் ஓர் நோய் – குறள் 85:8
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து – குறள் 106:3
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க
பசையினள் பைய நகும் – குறள் 110:8
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவு ஓர் இடத்து உண்மையான் – குறள் 116:3
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது
நீடுவது அன்று-கொல் என்று – குறள் 131:7

TOP


ஓர்த்து (1)

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு – குறள் 36:7

TOP


ஓர்ந்து (1)

ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை – குறள் 55:1

TOP


ஓரா (1)

எண் பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன்
தண் பதத்தான் தானே கெடும் – குறள் 55:8

TOP


ஓரார் (1)

எ பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை
விட்ட-கால் கேட்க மறை – குறள் 70:5

TOP


ஓரும் (4)

செயல்-பாலது ஓரும் அறனே ஒருவற்கு
உயல்-பாலது ஓரும் பழி – குறள் 4:10
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா – குறள் 37:6

TOP


ஓவா (2)

உறு பசியும் ஓவா பிணியும் செறு பகையும்
சேராது இயல்வது நாடு – குறள் 74:4
தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் – குறள் 121:5

TOP


ஓவாது (1)

உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம்
போஒய் புறமே படும் – குறள் 94:3

TOP


ஓவாதே (1)

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாய் எல்லாம் செயல் – குறள் 4:3

TOP