நு – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நுசுப்பிற்கு (1)

அனிச்ச பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை – குறள் 112:5

TOP


நுட்பம் (2)

மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
யா உள முன் நிற்பவை – குறள் 64:6

TOP


நுண் (3)

நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மாண் புனை பாவை அற்று – குறள் 41:7
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய்
நுண் பொருள் காண்பது அறிவு – குறள் 43:4
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
நுண் அவை அஞ்சுபவர்க்கு – குறள் 73:6

TOP


நுண்ணிய (1)

நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும் – குறள் 38:3

TOP


நுண்ணியம் (1)

நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணும்-கால்
கண் அல்லது இல்லை பிற – குறள் 71:10

TOP


நுண்ணியர் (1)

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எம் காதலவர் – குறள் 113:6

TOP


நுணங்கிய (1)

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது – குறள் 42:9

TOP


நுதல் (4)

கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல்
நல்லவர் நாணு பிற – குறள் 102:1
முயங்கிய கைகளை ஊக்க பசந்தது
பைம் தொடி பேதை நுதல் – குறள் 124:8
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒள்_நுதல் செய்தது கண்டு – குறள் 124:10
ஊடி பெறுகுவம்-கொல்லோ நுதல் வெயர்ப்ப
கூடலின் தோன்றிய உப்பு – குறள் 133:8

TOP


நுதலாள் (1)

நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நன் நுதலாள்
பெட்டு ஆங்கு ஒழுகுபவர் – குறள் 91:8

TOP


நுதற்கு (2)

ஒள் நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு – குறள் 109:8
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திரு_நுதற்கு இல்லை இடம் – குறள் 113:3

TOP


நுதுப்பும் (1)

நெய்யால் எரி நுதுப்பும் என்ற அற்றால் கௌவையான்
காமம் நுதுப்பேம் எனல் – குறள் 115:8

TOP


நுதுப்பேம் (1)

நெய்யால் எரி நுதுப்பும் என்ற அற்றால் கௌவையான்
காமம் நுதுப்பேம் எனல் – குறள் 115:8

TOP


நுமர் (1)

தும்மு செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று – குறள் 132:8

TOP


நுழை (1)

நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மாண் புனை பாவை அற்று – குறள் 41:7

TOP


நுழைந்து (1)

கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – குறள் 13:10

TOP


நுனி (1)

நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும் – குறள் 48:6

TOP