கெ – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கெட்ட (1)

கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா
நாடு என்ப நாட்டின் தலை – குறள் 74:6

TOP


கெட்டார்க்கு (2)

கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை – குறள் 2:5
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
பெட்டு ஆங்கு அவர் பின் செலல் – குறள் 130:3

TOP


கெட்டாரை (1)

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – குறள் 54:9

TOP


கெட்டான் (1)

ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று – குறள் 97:7

TOP


கெட (3)

சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து
சார்தரா சார்தரும் நோய் – குறள் 36:9
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெட கெடும் நோய் – குறள் 36:10
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன்
பைதல் நோய் எல்லாம் கெட – குறள் 127:6

TOP


கெடல் (2)

வினை-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு – குறள் 62:2
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்
ஆற்றுபவர்-கண் இழுக்கு – குறள் 90:3

TOP


கெடலும் (1)

இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து – குறள் 86:6

TOP


கெடாஅர் (1)

கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு – குறள் 81:9

TOP


கெடின் (2)

இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் – குறள் 37:9
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் – குறள் 86:4

TOP


கெடுக்கும் (3)

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமையவர் – குறள் 45:7
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்து-காலை புகின் – குறள் 94:7
தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை – குறள் 105:3

TOP


கெடுக (1)

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான் – குறள் 107:2

TOP


கெடுத்து (2)

பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது – குறள் 94:8

TOP


கெடுதல் (1)

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்த அற்று – குறள் 21:8

TOP


கெடுப்பதூஉம் (1)

கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை – குறள் 2:5

TOP


கெடுப்பார் (1)

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் – குறள் 45:8

TOP


கெடும் (32)

கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்றும் நன்று உள்ள கெடும் – குறள் 11:9
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் – குறள் 14:4
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றி கெடும் – குறள் 17:6
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி
பொல்லாத சூழ கெடும் – குறள் 18:6
களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து
ஆவது போல கெடும் – குறள் 29:3
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெட கெடும் நோய் – குறள் 36:10
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போல கெடும் – குறள் 44:5
செயல்-பால செய்யாது இவறியான் செல்வம்
உயல்-பாலது அன்றி கெடும் – குறள் 44:7
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் – குறள் 45:8
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க
செய்யாமையானும் கெடும் – குறள் 47:6
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும் – குறள் 48:4
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
இல்லாகி தோன்றா கெடும் – குறள் 48:9
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வள வரை வல்லை கெடும் – குறள் 48:10
எண் பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன்
தண் பதத்தான் தானே கெடும் – குறள் 55:8
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்-தொறும் நாடு கெடும் – குறள் 56:3
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லை கெடும் – குறள் 57:3
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லை கெடும் – குறள் 57:4
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் – குறள் 57:6
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும் – குறள் 57:9
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
மாசு ஊர மாய்ந்து கெடும் – குறள் 61:1
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காம கலன் – குறள் 61:5
குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
மடி ஆண்மை மாற்ற கெடும் – குறள் 61:9
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
வாள் ஆண்மை போல கெடும் – குறள் 62:4
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ள கெடும் – குறள் 63:2
ஒலித்த-கால் என் ஆம் உவரி எலி பகை
நாகம் உயிர்ப்ப கெடும் – குறள் 77:3
கெடும் காலை கைவிடுவார் கேண்மை அடும் காலை
உள்ளினும் உள்ளம் சுடும் – குறள் 80:9
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
வேந்தனும் வேந்து கெடும் – குறள் 90:9
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
மானம் கருத கெடும் – குறள் 103:8
கரப்பு இடும்பை இல்லாரை காணின் நிரப்பு இடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும் – குறள் 106:6
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
உள்ளதூஉம் இன்றி கெடும் – குறள் 107:9
நினைப்பவர் போன்று நினையார்-கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும் – குறள் 121:3

TOP


கெடுவல் (1)

கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுவு ஒரீஇ அல்ல செயின் – குறள் 12:6

TOP


கெடுவாக (1)

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றி-கண் தங்கியான் தாழ்வு – குறள் 12:7

TOP


கெழீஇ (2)

பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏது இன்மை கோடி உறும் – குறள் 82:6
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு – குறள் 82:10

TOP


கெழீஇயிலர் (1)

வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்
வீழப்படாஅர் எனின் – குறள் 120:4

TOP


கெழு (1)

பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
கெழு தகைமை கேடு தரும் – குறள் 70:10

TOP


கெழுதகைமை (3)

நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன் – குறள் 81:2
பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை
செய்த ஆங்கு அமையா-கடை – குறள் 81:3
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு
நாள் இழுக்கம் நட்டார் செயின் – குறள் 81:8

TOP


கெழுதகையான் (1)

விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான்
கேளாது நட்டார் செயின் – குறள் 81:4

TOP