சீ – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சீர் (7)

சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு-பால்
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள் 12:8
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர் குன்றல் இலர் – குறள் 78:8
சீர் இடம் காணின் எறிதற்கு பட்டடை
நேரா நிறந்தவர் நட்பு – குறள் 83:1
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல் – குறள் 94:4
சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டுபவர் – குறள் 97:2
இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்
சீர்_அல்லவர்-கண் படின் – குறள் 98:7
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி
வறம் கூர்ந்த அனையது உடைத்து – குறள் 101:10

TOP


சீர்_அல்லவர்-கண் (1)

இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்
சீர்_அல்லவர்-கண் படின் – குறள் 98:7

TOP


சீர்த்த (1)

கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
குத்து ஒக்க சீர்த்த இடத்து – குறள் 49:10

TOP


சீர்தூக்கும் (1)

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர் – குறள் 82:3

TOP


சீர்மை (2)

செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
ஆற்றின் அடங்க பெறின் – குறள் 13:3
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல
நீர்மை உடையார் சொலின் – குறள் 20:5

TOP


சீரார் (1)

இறந்து அமைந்த சார்பு உடையர்-ஆயினும் உய்யார்
சிறந்து அமைந்த சீரார் செறின் – குறள் 90:10

TOP


சீரினும் (1)

சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டுபவர் – குறள் 97:2

TOP


சீரும் (1)

சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
உறை நிலத்தொடு ஒட்டல் அரிது – குறள் 50:9

TOP


சீரொடு (1)

சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டுபவர் – குறள் 97:2

TOP


சீறின் (2)

இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
சீறின் சிறுகும் திரு – குறள் 57:8
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
வேந்தனும் வேந்து கெடும் – குறள் 90:9

TOP