ஏ – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏஎர் 3
ஏக்கற்றும் 1
ஏகினான் 1
ஏங்கி 1
ஏங்குபவர்க்கு 1
ஏத்தும் 1
ஏதப்பாடு 1
ஏதம் 8
ஏதில் 1
ஏதில 2
ஏதிலர் 3
ஏதிலார் 6
ஏதிலான் 1
ஏது 1
ஏந்தல் 1
ஏந்திய 1
ஏம 3
ஏமம் 3
ஏமரா 1
ஏமாக்கல் 1
ஏமாப்பு 7
ஏமுற்றவரினும் 1
ஏயும் 1
ஏர் 5
ஏரின் 1
ஏரினும் 1
ஏவல் 2
ஏவல்-பாற்று 1
ஏவவும் 1
ஏழை 1
ஏற்றல் 1
ஏற்று 1
ஏறா 1
ஏறி 2
ஏறினார் 1
ஏறு 2
ஏறும் 3
ஏனை 4
ஏனைய 1
ஏனையவர் 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஏஎர் (3)

கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து – குறள் 106:3
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க
பசையினள் பைய நகும் – குறள் 110:8
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை
பூ அன்ன கண்ணார் அகத்து – குறள் 131:5

TOP


ஏக்கற்றும் (1)

உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர் – குறள் 40:5

TOP


ஏகினான் (1)

மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நில மிசை நீடு வாழ்வார் – குறள் 1:3

TOP


ஏங்கி (1)

பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர்
பின் செல்வாய் பேதை என் நெஞ்சு – குறள் 125:8

TOP


ஏங்குபவர்க்கு (1)

ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு – குறள் 127:9

TOP


ஏத்தும் (1)

இளி வரின் வாழாத மானம் உடையார்
ஒளி தொழுது ஏத்தும் உலகு – குறள் 97:10

TOP


ஏதப்பாடு (1)

தெளிவு இலதனை தொடங்கார் இளிவு என்னும்
ஏதப்பாடு அஞ்சுபவர் – குறள் 47:4

TOP


ஏதம் (8)

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து – குறள் 14:6
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின்
ஏதம் படு பாக்கு அறிந்து – குறள் 17:4
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று
ஏதம் பலவும் தரும் – குறள் 28:5
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு – குறள் 44:2
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு
ஊதியம் போகவிடல் – குறள் 84:1
மனம் மாணா உள் பகை தோன்றின் இனம் மாணா
ஏதம் பலவும் தரும் – குறள் 89:4
உறல் முறையான் உள் பகை தோன்றின் இறல் முறையான்
ஏதம் பலவும் தரும் – குறள் 89:5
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
ஈதல் இயல்பு இலாதான் – குறள் 101:6

TOP


ஏதில் (1)

பொருள்_பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று – குறள் 92:3

TOP


ஏதில (2)

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல் – குறள் 44:10
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதில தந்து – குறள் 109:9

TOP


ஏதிலர் (3)

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இ ஊர் – குறள் 113:9
உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர்
ஏதிலர் என்னும் இ ஊர் – குறள் 113:10
காதலர் இல் வழி மாலை கொலை_களத்து
ஏதிலர் போல வரும் – குறள் 123:4

TOP


ஏதிலார் (6)

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னை-கொல் ஏதிலார் மாட்டு – குறள் 19:8
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு – குறள் 19:10
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல் – குறள் 44:10
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை
பெரும் செல்வம் உற்ற-கடை – குறள் 84:7
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
காதலார்-கண்ணே உள – குறள் 110:9
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய
நெஞ்சம் தமர் அல்வழி – குறள் 130:10

TOP


ஏதிலான் (1)

அன்பு இலன் ஆன்ற துணை இலன் தான் துவ்வான்
என் பரியும் ஏதிலான் துப்பு – குறள் 87:2

TOP


ஏது (1)

பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏது இன்மை கோடி உறும் – குறள் 82:6

TOP


ஏந்தல் (1)

கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது – குறள் 78:2

TOP


ஏந்திய (1)

ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
வேந்தனும் வேந்து கெடும் – குறள் 90:9

TOP


ஏம (3)

சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
ஏம புணையை சுடும் – குறள் 31:6
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
மடல் அல்லது இல்லை வலி – குறள் 114:1
காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும்
ஏம புணை-மன்னும் இல் – குறள் 117:4

TOP


ஏமம் (3)

பிணி இன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து – குறள் 74:8
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு – குறள் 77:6
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று – குறள் 82:5

TOP


ஏமரா (1)

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் – குறள் 45:8

TOP


ஏமாக்கல் (1)

சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண்
கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று – குறள் 66:10

TOP


ஏமாப்பு (7)

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து – குறள் 12:2
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து – குறள் 13:6
ஒருமை-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து – குறள் 40:8
மன நலம் நன்கு உடையர்-ஆயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து – குறள் 46:8
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து – குறள் 46:9
குணம் இலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
இனன் இலன் ஆம் ஏமாப்பு உடைத்து – குறள் 87:8
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்
பார் தாக்க பக்கு விடும் – குறள் 107:8

TOP


ஏமுற்றவரினும் (1)

ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்
பல்லார் பகை கொள்பவன் – குறள் 88:3

TOP


ஏயும் (1)

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
கணம் ஏயும் காத்தல் அரிது – குறள் 3:9

TOP


ஏர் (5)

வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை – குறள் 88:2
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை – குறள் 104:1
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதில தந்து – குறள் 109:9
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு
பெண் நிறைந்த நீர்மை பெரிது – குறள் 128:2

TOP


ஏரின் (1)

ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளம் குன்றிய-கால் – குறள் 2:4

TOP


ஏரினும் (1)

ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின்
நீரினும் நன்று அதன் காப்பு – குறள் 104:8

TOP


ஏவல் (2)

பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை
பெண்ணே பெருமை உடைத்து – குறள் 91:7
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
பெண் ஏவல் செய்வார்-கண் இல் – குறள் 91:9

TOP


ஏவல்-பாற்று (1)

அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்
சிறந்தான் என்று ஏவல்-பாற்று அன்று – குறள் 52:5

TOP


ஏவவும் (1)

ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர்
போஒம் அளவும் ஓர் நோய் – குறள் 85:8

TOP


ஏழை (1)

ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்
பல்லார் பகை கொள்பவன் – குறள் 88:3

TOP


ஏற்றல் (1)

வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை – குறள் 87:1

TOP


ஏற்று (1)

ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு – குறள் 72:6

TOP


ஏறா (1)

கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
பெண்ணின் பெரும் தக்கது இல் – குறள் 114:7

TOP


ஏறி (2)

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
கணம் ஏயும் காத்தல் அரிது – குறள் 3:9
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
உண்டாக செய்வான் வினை – குறள் 76:8

TOP


ஏறினார் (1)

நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும் – குறள் 48:6

TOP


ஏறு (2)

புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
ஏறு போல் பீடு நடை – குறள் 6:9
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு – குறள் 39:1

TOP


ஏறும் (3)

நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து – குறள் 114:2
நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன்
காமுற்றார் ஏறும் மடல் – குறள் 114:3
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு – குறள் 127:4

TOP


ஏனை (4)

எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு – குறள் 40:2
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளை கல் – குறள் 51:5
குறித்தது கூறாமை கொள்வாரொடு ஏனை
உறுப்பு ஓர் அனையரால் வேறு – குறள் 71:4
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு – குறள் 76:10

TOP


ஏனைய (1)

தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும் – குறள் 27:8

TOP


ஏனையவர் (1)

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரொடு ஏனையவர் – குறள் 41:10

TOP