த – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்க 6
தக்கது 8
தக்கனள் 1
தக்கார் 3
தக்கார்க்கு 2
தக்காரும் 1
தக 1
தகர் 1
தகவு 1
தகுதி 1
தகுதியான் 1
தகை 6
தகைத்து 2
தகைத்தே 1
தகைமை 2
தகைமை-கண் 2
தகைமையவர் 1
தகையவே 1
தகையால் 1
தகையான் 3
தகையும் 1
தங்கா 1
தங்கி 1
தங்கியான் 1
தங்கிற்று 1
தங்கிற்றே 1
தங்கின் 1
தங்கும் 1
தஞ்சம் 2
தடிந்து 1
தண் 3
தண்டமும் 1
தண்டா 1
தண்ணம்துறைவன் 1
தண்மை 1
தணந்தமை 2
தணிக்கும் 1
தத்தம் 1
தந்த 2
தந்தது 1
தந்தார் 1
தந்தாள் 1
தந்து 2
தந்தை 2
தந்தைக்கு 1
தப்பா 1
தம் 23
தம்-கண் 1
தம்-வயின் 1
தம்தம் 1
தம்மின் 2
தம்மை 5
தம்மொடு 1
தம 2
தமக்கு 3
தமது 1
தமர் 6
தமரா 2
தமரின் 1
தமியர் 1
தமியள் 1
தமியனாய் 1
தரலான் 1
தரற்கு 2
தரினும் 1
தருக்கி 1
தரும் 38
தருவது 3
தருவார் 1
தரூஉம் 2
தலை 23
தலைக்கூடி 1
தலைச்செல்லா 1
தலைப்பட்டவர்க்கு 1
தலைப்பட்டார் 1
தலைப்படாதார் 1
தலைப்படுவர் 1
தலைப்படுவார் 1
தலைப்பிரிதல் 1
தலைப்பிரிந்த 2
தலைப்பிரிய 1
தலைப்பிரியாதார் 1
தலைப்பெய்து 1
தலைமக்கள் 1
தலையின் 1
தலைவந்த 1
தவ்வென்னும் 1
தவ்வையை 1
தவத்தான் 1
தவத்திற்கு 1
தவத்தொடு 1
தவம் 7
தவமும் 1
தவல் 1
தவலும் 1
தவறு 6
தவா 1
தவாஅ 1
தவாஅது 1
தழீஇ 3
தழீஇயது 1
தள்ளா 1
தள்ளாது 1
தள்ளாமை 1
தள்ளினும் 1
தள்ளும் 1
தளர்ந்து 1
தளிர்த்த 1
தளிர்ப்ப 1
தற்று 1
தறுகண் 1
தன் 39
தன்-கண் 1
தன்மை 2
தன்மைத்து-ஆயினும் 1
தன்மையவர் 1
தன்மையான் 1
தன்னின் 1
தன்னினும் 1
தன்னை 11
தன்னையே 1
தனக்கு 1
தனித்து 1
தனிமை 1
தனியே 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தக்க (6)

மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை – குறள் 6:1
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
திண்மை உண்டாக பெறின் – குறள் 6:4
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க
செய்யாமையானும் கெடும் – குறள் 47:6
தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து – குறள் 57:1
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க
நோ தக்க நட்டார் செயின் – குறள் 81:5

TOP


தக்கது (8)

ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
விற்று கோள் தக்கது உடைத்து – குறள் 22:10
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
எற்றா விழுமம் தரும் – குறள் 67:3
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
தக்கது அறிவது ஆம் தூது – குறள் 69:6
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து – குறள் 78:10
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின்
அறம் நாண தக்கது உடைத்து – குறள் 102:8
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
பெண்ணின் பெரும் தக்கது இல் – குறள் 114:7
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும்
இது நக தக்கது உடைத்து – குறள் 118:3

TOP


தக்கனள் (1)

உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
புல்லாள் புல தக்கனள் – குறள் 132:6

TOP


தக்கார் (3)

தக்கார் தகவு இலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும் – குறள் 12:4
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
செற்றார் செயக்கிடந்தது இல் – குறள் 45:6
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின் – குறள் 90:7

TOP


தக்கார்க்கு (2)

தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள் 22:2
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
ஈதல் இயல்பு இலாதான் – குறள் 101:6

TOP


தக்காரும் (1)

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலா
செல்வரும் சேர்வது நாடு – குறள் 74:1

TOP


தக (1)

கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்கு தக – குறள் 40:1

TOP


தகர் (1)

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்கு பேரும் தகைத்து – குறள் 49:6

TOP


தகவு (1)

தக்கார் தகவு இலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும் – குறள் 12:4

TOP


தகுதி (1)

தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுக பெறின் – குறள் 12:1

TOP


தகுதியான் (1)

மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம்
தகுதியான் வென்றுவிடல் – குறள் 16:8

TOP


தகை (6)

தன் காத்து தன் கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் – குறள் 6:6
கேட்டார் பிணிக்கும் தகை அவாய் கேளாரும்
வேட்ப மொழிவது ஆம் சொல் – குறள் 65:3
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின் – குறள் 90:7
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
புன் நலம் பாரிப்பார் தோள் – குறள் 92:6
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
பேதைக்கு அமர்த்தன கண் – குறள் 109:4
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை
பூ அன்ன கண்ணார் அகத்து – குறள் 131:5

TOP


தகைத்து (2)

எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து – குறள் 13:5
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்கு பேரும் தகைத்து – குறள் 49:6

TOP


தகைத்தே (1)

இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா
காலும் இரவு ஒல்லா சால்பு – குறள் 107:4

TOP


தகைமை (2)

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாட சோர்வுபடும் – குறள் 41:5
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
கெழு தகைமை கேடு தரும் – குறள் 70:10

TOP


தகைமை-கண் (2)

தாளாண்மை என்னும் தகைமை-கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு – குறள் 62:3
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன்
தகைமை-கண் தங்கிற்று உலகு – குறள் 88:4

TOP


தகைமையவர் (1)

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமையவர் – குறள் 45:7

TOP


தகையவே (1)

கேட்பினும் கேளா தகையவே கேள்வியால்
தோட்கப்படாத செவி – குறள் 42:8

TOP


தகையால் (1)

அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்
மேனி மேல் ஊரும் பசப்பு – குறள் 119:2

TOP


தகையான் (3)

அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
படை தகையான் பாடு பெறும் – குறள் 77:8
விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான்
கேளாது நட்டார் செயின் – குறள் 81:4
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
பெண் தகையான் பேர் அமர் கட்டு – குறள் 109:3

TOP


தகையும் (1)

அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
படை தகையான் பாடு பெறும் – குறள் 77:8

TOP


தங்கா (1)

தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின் – குறள் 2:9

TOP


தங்கி (1)

ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி
செல்வார்க்கு செல்லாதது இல் – குறள் 48:2

TOP


தங்கியான் (1)

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றி-கண் தங்கியான் தாழ்வு – குறள் 12:7

TOP


தங்கிற்று (1)

பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன்
தகைமை-கண் தங்கிற்று உலகு – குறள் 88:4

TOP


தங்கிற்றே (1)

தாளாண்மை என்னும் தகைமை-கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு – குறள் 62:3

TOP


தங்கின் (1)

மடிமை குடிமை-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும் – குறள் 61:8

TOP


தங்கும் (1)

செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவி கை கீழ் தங்கும் உலகு – குறள் 39:9

TOP


தஞ்சம் (2)

அஞ்சும் அறியான் அமைவு இலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு – குறள் 87:3
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய
நெஞ்சம் தமர் அல்வழி – குறள் 130:10

TOP


தடிந்து (1)

நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின் – குறள் 2:7

TOP


தண் (3)

எண் பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன்
தண் பதத்தான் தானே கெடும் – குறள் 55:8
நீங்கின் தெறூஉம் குறுகும்-கால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள் – குறள் 111:4
முயக்கு-இடை தண் வளி போழ பசப்பு உற்ற
பேதை பெரு மழை கண் – குறள் 124:9

TOP


தண்டமும் (1)

கடு மொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடு முரண் தேய்க்கும் அரம் – குறள் 57:7

TOP


தண்டா (1)

கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
தாம் காட்ட யாம் கண்டது – குறள் 118:1

TOP


தண்ணம்துறைவன் (1)

தண்ணம்துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை – குறள் 128:7

TOP


தண்மை (1)

அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்
செம் தண்மை பூண்டு ஒழுகலான் – குறள் 3:10

TOP


தணந்தமை (2)

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்த நாள் வீங்கிய தோள் – குறள் 124:3
தண்ணம்துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை – குறள் 128:7

TOP


தணிக்கும் (1)

நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்ப செயல் – குறள் 95:8

TOP


தத்தம் (1)

பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளை கல் – குறள் 51:5

TOP


தந்த (2)

தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள் 22:2
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றி கொளல் – குறள் 59:8

TOP


தந்தது (1)

தெள் நீர் அடு புற்கை-ஆயினும் தாள் தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல் – குறள் 107:5

TOP


தந்தார் (1)

அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்
மேனி மேல் ஊரும் பசப்பு – குறள் 119:2

TOP


தந்தாள் (1)

தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர் – குறள் 114:5

TOP


தந்து (2)

பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதில தந்து – குறள் 109:9
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து – குறள் 119:3

TOP


தந்தை (2)

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்ப செயல் – குறள் 7:7
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல் – குறள் 7:10

TOP


தந்தைக்கு (1)

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல் – குறள் 7:10

TOP


தப்பா (1)

மருந்து ஆகி தப்பா மரத்த அற்றால் செல்வம்
பெருந்தகையான்-கண் படின் – குறள் 22:7

TOP


தம் (23)

தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
தம்தம் வினையான் வரும் – குறள் 7:3
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ் – குறள் 7:4
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர் – குறள் 7:6
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – குறள் 7:8
மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம்
தகுதியான் வென்றுவிடல் – குறள் 16:8
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு – குறள் 19:10
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன் – குறள் 24:7
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு – குறள் 27:6
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றா-கடை – குறள் 32:5
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடை-கண் முரிந்தார் பலர் – குறள் 48:3
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – குறள் 54:9
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று – குறள் 59:4
அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
அல்லார் முன் கோட்டி கொளல் – குறள் 72:10
மிக செய்து தம் எள்ளுவாரை நக செய்து
நட்பினுள் சா புல்லல்-பாற்று – குறள் 83:9
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
புன் நலம் பாரிப்பார் தோள் – குறள் 92:6
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறை_பதி என்னும் வழக்கு – குறள் 102:5
சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை
தாழாது உஞற்றுபவர்க்கு – குறள் 103:4
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர்
அலகு உடை நீழலவர் – குறள் 104:4
இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின்
அவர் பழி தம் பழி அன்று – குறள் 106:1
தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்
அ மா அரிவை முயக்கு – குறள் 111:7
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
காமத்து காழ்_இல் கனி – குறள் 120:1
தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் – குறள் 121:5

TOP


தம்-கண் (1)

எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
விழுமம் துடைத்தவர் நட்பு – குறள் 11:7

TOP


தம்-வயின் (1)

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
குற்றம் மறையா வழி – குறள் 85:6

TOP


தம்தம் (1)

தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
தம்தம் வினையான் வரும் – குறள் 7:3

TOP


தம்மின் (2)

தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – குறள் 7:8
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை – குறள் 45:4

TOP


தம்மை (5)

அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை – குறள் 16:1
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன் – குறள் 24:7
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது – குறள் 85:3
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை
புலந்தாரை புல்லா விடல் – குறள் 131:3
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து – குறள் 132:2

TOP


தம்மொடு (1)

எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு – குறள் 47:10

TOP


தம (2)

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
பிறவும் தம போல் செயின் – குறள் 12:10
பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து
சொரியினும் போகா தம – குறள் 38:6

TOP


தமக்கு (3)

அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
என்பும் உரியர் பிறற்கு – குறள் 8:2
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும் – குறள் 32:9
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
பெரு மிறை தானே தமக்கு – குறள் 85:7

TOP


தமது (1)

தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்
அ மா அரிவை முயக்கு – குறள் 111:7

TOP


தமர் (6)

தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
காரணம் இன்றி வரும் – குறள் 53:9
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை
பெரும் செல்வம் உற்ற-கடை – குறள் 84:7
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னா ஆம் இன்னா செயின் – குறள் 89:1
அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை – குறள் 103:7
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய
நெஞ்சம் தமர் அல்வழி – குறள் 130:10

TOP


தமரா (2)

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை
பேணி தமரா கொளல் – குறள் 45:3
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை – குறள் 45:4

TOP


தமரின் (1)

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின் தனிமை தலை – குறள் 82:4

TOP


தமியர் (1)

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் – குறள் 23:9

TOP


தமியள் (1)

அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
பெற்றாள் தமியள் மூத்து அற்று – குறள் 101:7

TOP


தமியனாய் (1)

ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்
பல்லார் பகை கொள்பவன் – குறள் 88:3

TOP


தரலான் (1)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும் – குறள் 14:1

TOP


தரற்கு (2)

இகல் காணான் ஆக்கம் வரும்-கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு – குறள் 86:9
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடி தரற்கு – குறள் 122:4

TOP


தரினும் (1)

நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல் – குறள் 12:3

TOP


தருக்கி (1)

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார் – குறள் 94:5

TOP


தரும் (38)

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும் – குறள் 8:1
சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் – குறள் 10:8
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும் – குறள் 14:8
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
குற்றமும் ஆங்கே தரும் – குறள் 18:1
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும் – குறள் 19:3
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று
ஏதம் பலவும் தரும் – குறள் 28:5
களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
வீயா விழுமம் தரும் – குறள் 29:4
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும் – குறள் 30:6
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின்
உய்யா விழுமம் தரும் – குறள் 32:3
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
பிற வினை எல்லாம் தரும் – குறள் 33:1
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே
பேரா இயற்கை தரும் – குறள் 37:10
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் – குறள் 42:6
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் – குறள் 46:7
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம்
ஆக்கம் பலவும் தரும் – குறள் 50:2
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும் – குறள் 51:7
தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும் – குறள் 51:8
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் – குறள் 51:10
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா
ஆக்கம் பலவும் தரும் – குறள் 53:2
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் – குறள் 62:1
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்த கூலி தரும் – குறள் 62:9
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும் – குறள் 66:1
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம்
முடிந்தாலும் பீழை தரும் – குறள் 66:8
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
எற்றா விழுமம் தரும் – குறள் 67:3
மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும் – குறள் 70:2
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
கெழு தகைமை கேடு தரும் – குறள் 70:10
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல
நாட வளம் தரும் நாடு – குறள் 74:9
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
நட்பு ஆம் கிழமை தரும் – குறள் 79:5
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம் தரும் – குறள் 80:2
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும் – குறள் 85:5
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா
தா இல் விளக்கம் தரும் – குறள் 86:3
மனம் மாணா உள் பகை தோன்றின் இனம் மாணா
ஏதம் பலவும் தரும் – குறள் 89:4
உறல் முறையான் உள் பகை தோன்றின் இறல் முறையான்
ஏதம் பலவும் தரும் – குறள் 89:5
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும் – குறள் 90:2
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணும் தரும் – குறள் 91:2
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணு தரும் – குறள் 91:3
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
இன் சொல் இழுக்கு தரும் – குறள் 92:1
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும் – குறள் 105:4
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணு தரும் – குறள் 117:2

TOP


தருவது (3)

வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோல் அதூஉம் கோடாது எனின் – குறள் 55:6
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல் – குறள் 84:9
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல் – குறள் 94:4

TOP


தருவார் (1)

தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலை பொருட்டால் ஊன் தருவார் இல் – குறள் 26:6

TOP


தரூஉம் (2)

குற்றமே காக்க பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை – குறள் 44:4
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும் – குறள் 66:1

TOP


தலை (23)

கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
தாளை வணங்கா தலை – குறள் 1:9
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது – குறள் 2:6
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை – குறள் 5:3
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை – குறள் 5:7
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை – குறள் 6:7
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை – குறள் 16:1
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல் – குறள் 21:3
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை – குறள் 30:5
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை – குறள் 32:7
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை – குறள் 33:2
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி
கொல்லாமை சூழ்வான் தலை – குறள் 33:5
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை – குறள் 42:1
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை – குறள் 45:4
செறுநரை காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை – குறள் 49:8
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி
பொறுத்தாற்றும் பண்பே தலை – குறள் 58:9
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை – குறள் 66:7
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை – குறள் 69:7
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா
நாடு என்ப நாட்டின் தலை – குறள் 74:6
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை – குறள் 77:1
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின் தனிமை தலை – குறள் 82:4
பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி
இன்னா செய்யாமை தலை – குறள் 86:2
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை – குறள் 90:1
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை – குறள் 104:1

TOP


தலைக்கூடி (1)

உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் – குறள் 40:4

TOP


தலைச்செல்லா (1)

தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து – குறள் 57:1

TOP


தலைப்பட்டவர்க்கு (1)

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு – குறள் 27:9

TOP


தலைப்பட்டார் (1)

தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் – குறள் 35:8

TOP


தலைப்படாதார் (1)

பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் விருந்து ஓம்பி
வேள்வி தலைப்படாதார் – குறள் 9:8

TOP


தலைப்படுவர் (1)

கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி – குறள் 36:6

TOP


தலைப்படுவார் (1)

மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படுவார் – குறள் 129:9

TOP


தலைப்பிரிதல் (1)

வழங்குவது உள் வீழ்ந்த-கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று – குறள் 96:5

TOP


தலைப்பிரிந்த (2)

செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன் – குறள் 26:8

TOP


தலைப்பிரிய (1)

நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரிய சொல் – குறள் 10:7

TOP


தலைப்பிரியாதார் (1)

விழையார் விழையப்படுப பழையார்-கண்
பண்பின் தலைப்பிரியாதார் – குறள் 81:10

TOP


தலைப்பெய்து (1)

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாட சோர்வுபடும் – குறள் 41:5

TOP


தலைமக்கள் (1)

நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல் – குறள் 77:10

TOP


தலையின் (1)

தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்த-கடை – குறள் 97:4

TOP


தலைவந்த (1)

தார் தாங்கி செல்வது தானை தலைவந்த
போர் தாங்கும் தன்மை அறிந்து – குறள் 77:7

TOP


தவ்வென்னும் (1)

கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து – குறள் 115:4

TOP


தவ்வையை (1)

அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்
தவ்வையை காட்டி விடும் – குறள் 17:7

TOP


தவத்தான் (1)

ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் – குறள் 27:4

TOP


தவத்திற்கு (1)

உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு – குறள் 27:1

TOP


தவத்தொடு (1)

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை – குறள் 30:5

TOP


தவம் (7)

தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின் – குறள் 2:9
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது – குறள் 27:2
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
மற்றையவர்கள் தவம் – குறள் 27:3
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம்
ஈண்டு முயலப்படும் – குறள் 27:5
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு – குறள் 27:6
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்த அற்று – குறள் 28:4
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
இல்லை பெறுவான் தவம் – குறள் 85:2

TOP


தவமும் (1)

தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது – குறள் 27:2

TOP


தவல் (1)

இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா
தா இல் விளக்கம் தரும் – குறள் 86:3

TOP


தவலும் (1)

இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து – குறள் 86:6

TOP


தவறு (6)

நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றா-கடை – குறள் 47:9
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேறியாக்கு உண்டோ தவறு – குறள் 116:4
காணும்-கால் காணேன் தவறு ஆய காணா-கால்
காணேன் தவறு அல்லவை – குறள் 129:6
இல்லை தவறு அவர்க்கு-ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு – குறள் 133:1
தவறு இலர்-ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து – குறள் 133:5

TOP


தவா (1)

அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான் வேண்டும் ஆற்றான் வரும் – குறள் 37:7

TOP


தவாஅ (1)

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅ பிறப்பு ஈனும் வித்து – குறள் 37:1

TOP


தவாஅது (1)

அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும் – குறள் 37:8

TOP


தழீஇ (3)

குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன்
அடி தழீஇ நிற்கும் உலகு – குறள் 55:4
பொருள்_பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று – குறள் 92:3

TOP


தழீஇயது (1)

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு – குறள் 43:5

TOP


தள்ளா (1)

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலா
செல்வரும் சேர்வது நாடு – குறள் 74:1

TOP


தள்ளாது (1)

கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
தள்ளாது புத்தேள் உலகு – குறள் 29:10

TOP


தள்ளாமை (1)

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து – குறள் 60:6

TOP


தள்ளினும் (1)

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து – குறள் 60:6

TOP


தள்ளும் (1)

கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
தள்ளாது புத்தேள் உலகு – குறள் 29:10

TOP


தளர்ந்து (1)

ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு – குறள் 72:6

TOP


தளிர்த்த (1)

அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று – குறள் 8:8

TOP


தளிர்ப்ப (1)

உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் – குறள் 111:6

TOP


தற்று (1)

குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடி தற்று தான் முந்துறும் – குறள் 103:3

TOP


தறுகண் (1)

பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்ற-கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு – குறள் 78:3

TOP


தன் (39)

நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின் – குறள் 2:7
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை – குறள் 6:1
தன் காத்து தன் கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் – குறள் 6:6
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய் – குறள் 7:9
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுவு ஒரீஇ அல்ல செயின் – குறள் 12:6
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
அறன் அல்ல செய்யாமை நன்று – குறள் 16:7
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு – குறள் 17:1
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும் – குறள் 19:6
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை – குறள் 25:4
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் – குறள் 26:1
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும் – குறள் 27:8
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
தான் அறி குற்றப்படின் – குறள் 28:2
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு – குறள் 29:1
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னை சுடும் – குறள் 30:3
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல் – குறள் 32:8
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை – குறள் 33:7
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும் – குறள் 38:3
இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
தான் கண்டனைத்து இ உலகு – குறள் 39:7
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்
என் குற்றம் ஆகும் இறைக்கு – குறள் 44:6
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கி செயல் – குறள் 48:1
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
காரணம் இன்றி வரும் – குறள் 53:9
முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை
பின் ஊறு இரங்கிவிடும் – குறள் 54:5
மடிமை குடிமை-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும் – குறள் 61:8
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் – குறள் 62:5
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்த கூலி தரும் – குறள் 62:9
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு – குறள் 63:10
ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன்
போற்றுபவர்க்கும் பொருள் – குறள் 75:1
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்
தெறு பொருளும் வேந்தன் பொருள் – குறள் 76:6
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
உண்டாக செய்வான் வினை – குறள் 76:8
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து – குறள் 78:6
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன்
கை ஒன்று உடைமை பெறின் – குறள் 84:8
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று – குறள் 88:5
வகை அறிந்து தன் செய்து தன் காப்ப மாயும்
பகைவர்-கண் பட்ட செருக்கு – குறள் 88:8
உள் பகை அஞ்சி தன் காக்க உலைவு இடத்து
மண் பகையின் மாண தெறும் – குறள் 89:3
அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய
ஒண் பொருள் கொள்வார் பிறர் – குறள் 101:9
பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை
தன் நோய்க்கு தானே மருந்து – குறள் 111:2

TOP


தன்-கண் (1)

குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – குறள் 80:4

TOP


தன்மை (2)

தார் தாங்கி செல்வது தானை தலைவந்த
போர் தாங்கும் தன்மை அறிந்து – குறள் 77:7
கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து – குறள் 115:4

TOP


தன்மைத்து-ஆயினும் (1)

எ பொருள் எ தன்மைத்து-ஆயினும் அ பொருள்
மெய் பொருள் காண்பது அறிவு – குறள் 36:5

TOP


தன்மையவர் (1)

இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
மிகல் ஊக்கும் தன்மையவர் – குறள் 86:5

TOP


தன்மையான் (1)

நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த
தன்மையான் ஆளப்படும் – குறள் 52:1

TOP


தன்னின் (1)

வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து – குறள் 25:10

TOP


தன்னினும் (1)

மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து – குறள் 61:3

TOP


தன்னை (11)

தீ பால தான் பிறர்-கண் செய்யற்க நோய் பால
தன்னை அடல் வேண்டாதான் – குறள் 21:6
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்த அற்று – குறள் 21:8
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும்
துன்னற்க தீவினை பால் – குறள் 21:9
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து – குறள் 25:10
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னை சுடும் – குறள் 30:3
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவா-கால்
தன்னையே கொல்லும் சினம் – குறள் 31:5
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை – குறள் 44:9
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும் – குறள் 48:4
ஒருமை மகளிரே போல பெருமையும்
தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு – குறள் 98:4
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து – குறள் 98:8
தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
இ நீரர் ஆகுதிர் என்று – குறள் 132:9

TOP


தன்னையே (1)

தன்னை தான் காக்கின் சினம் காக்க காவா-கால்
தன்னையே கொல்லும் சினம் – குறள் 31:5

TOP


தனக்கு (1)

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மன கவலை மாற்றல் அரிது – குறள் 1:7

TOP


தனித்து (1)

குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே
உடம்பொடு உயிர்-இடை நட்பு – குறள் 34:8

TOP


தனிமை (1)

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின் தனிமை தலை – குறள் 82:4

TOP


தனியே (1)

தனியே இருந்து நினைத்த-கால் என்னை
தினிய இருந்தது என் நெஞ்சு – குறள் 130:6

TOP