வா – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வாஅய்மை 1
வாடிய 3
வாடினும் 1
வாடூ 1
வாணிகம் 2
வாய் 14
வாய்சோரார் 1
வாய்ந்த 1
வாய்ப்ப 1
வாய்ப்பன 1
வாய்மை 5
வாய்மையான் 1
வாய்மையின் 1
வாய்மையும் 1
வாய்மையொடு 1
வாயால் 1
வாயில் 1
வாயின் 1
வாயினர் 1
வாரா 2
வாரா-கால் 1
வாரி 2
வாரும் 1
வால் 2
வால்_அறிவன் 1
வாழ் 1
வாழ்க்கை 11
வாழ்க்கை_துணை 1
வாழ்க்கையவர் 1
வாழ்க்கையும் 1
வாழ்க 1
வாழ்தல் 4
வாழ்தலின் 2
வாழ்தும் 2
வாழ்நாள் 1
வாழ்பவன் 2
வாழ்வது 2
வாழ்வதோர் 1
வாழ்வாங்கு 1
வாழ்வார் 6
வாழ்வார்க்கு 2
வாழ்வாரின் 2
வாழ்வாரே 3
வாழ்வான் 1
வாழ்வானை 1
வாழா 1
வாழாத 1
வாழாதவர் 1
வாழாதார் 1
வாழாதான் 1
வாழி 6
வாழிய 1
வாழினும் 2
வாழுநம் 1
வாழும் 5
வாள் 4
வாளாது 1
வாளொடு 1
வான் 8
வானகமும் 1
வானத்தவர்க்கு 1
வானம் 5
வானோர்க்கு 1
வானோர்க்கும் 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வாஅய்மை (1)

தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது
வாஅய்மை வேண்ட வரும் – குறள் 37:4

TOP


வாடிய (3)

பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:4
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:5
ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந்து அற்று – குறள் 131:4

TOP


வாடினும் (1)

ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி
வாடினும் பாடு பெறும் – குறள் 133:2

TOP


வாடூ (1)

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
வாடூ தோள் பூசல் உரைத்து – குறள் 124:7

TOP


வாணிகம் (2)

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
பிறவும் தம போல் செயின் – குறள் 12:10

TOP


வாய் (14)

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாய் எல்லாம் செயல் – குறள் 4:3
இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
செம் பொருள் கண்டார் வாய் சொல் – குறள் 10:1
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
இன்னா சொல் நோற்கிற்பவர் – குறள் 16:9
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய் சொல் – குறள் 42:5
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என் – குறள் 42:10
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள்
மெய் பொருள் காண்பது அறிவு – குறள் 43:3
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து – குறள் 63:4
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லா-கால்
செல்லும் வாய் நோக்கி செயல் – குறள் 68:3
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
வாய் சோரா வன்கணவன் – குறள் 69:9
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை – குறள் 79:9
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்ப செயல் – குறள் 95:8
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் – குறள் 96:9
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
என்ன பயனும் இல – குறள் 110:10

TOP


வாய்சோரார் (1)

வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 73:1

TOP


வாய்ந்த (1)

இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு – குறள் 74:7

TOP


வாய்ப்ப (1)

நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்ப செயல் – குறள் 95:8

TOP


வாய்ப்பன (1)

வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
பண்பு இலன் பற்றார்க்கு இனிது – குறள் 87:5

TOP


வாய்மை (5)

வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
தீமை இலாத சொலல் – குறள் 30:1
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின் – குறள் 30:2
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை – குறள் 30:5
தூய்மை துணைமை துணிவு உடைமை இ மூன்றும்
வாய்மை வழி உரைப்பான் பண்பு – குறள் 69:8
நகை ஈகை இன் சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மை குடிக்கு – குறள் 96:3

TOP


வாய்மையான் (1)

புற தூய்மை நீரான் அமையும் அக தூய்மை
வாய்மையான் காணப்படும் – குறள் 30:8

TOP


வாய்மையின் (1)

யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
வாய்மையின் நல்ல பிற – குறள் 30:10

TOP


வாய்மையும் (1)

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
இழுக்கார் குடி பிறந்தார் – குறள் 96:2

TOP


வாய்மையொடு (1)

அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பு ஊன்றிய தூண் – குறள் 99:3

TOP


வாயால் (1)

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல் – குறள் 14:9

TOP


வாயில் (1)

பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் – குறள் 1:6

TOP


வாயின் (1)

இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃது ஒப்பது இல் – குறள் 54:6

TOP


வாயினர் (1)

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது – குறள் 42:9

TOP


வாரா (2)

கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி – குறள் 36:6
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம்
புல்லார் புரள விடல் – குறள் 76:5

TOP


வாரா-கால் (1)

வாரா-கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண் – குறள் 118:9

TOP


வாரி (2)

ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளம் குன்றிய-கால் – குறள் 2:4
வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை – குறள் 52:2

TOP


வாரும் (1)

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனி வாரும் கண் – குறள் 124:2

TOP


வால் (2)

கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின் – குறள் 1:2
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
வால் எயிறு ஊறிய நீர் – குறள் 113:1

TOP


வால்_அறிவன் (1)

கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின் – குறள் 1:2

TOP


வாழ் (1)

வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
வாழ் நாள் வழி அடைக்கும் கல் – குறள் 4:8

TOP


வாழ்க்கை (11)

பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் – குறள் 5:4
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை – குறள் 6:1
மணை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
எனை மாட்சித்து-ஆயினும் இல் – குறள் 6:2
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று – குறள் 8:8
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று – குறள் 9:3
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போல கெடும் – குறள் 44:5
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
இல்லாகி தோன்றா கெடும் – குறள் 48:9
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று – குறள் 53:3
இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து – குறள் 86:6
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்பொடு உடன் உறைந்த அற்று – குறள் 89:10
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழிய வந்த இடத்து – குறள் 97:8

TOP


வாழ்க்கை_துணை (1)

மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை – குறள் 6:1

TOP


வாழ்க்கையவர் (1)

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லா தீ வாழ்க்கையவர் – குறள் 33:10

TOP


வாழ்க்கையும் (1)

வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின் – குறள் 90:7

TOP


வாழ்க (1)

ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து – குறள் 132:2

TOP


வாழ்தல் (4)

ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு – குறள் 24:1
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான் – குறள் 107:2
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – குறள் 113:4
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார் பிரிவு – குறள் 116:8

TOP


வாழ்தலின் (2)

புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும் – குறள் 19:3
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று – குறள் 97:7

TOP


வாழ்தும் (2)

சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பார் – குறள் 96:6
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
அஃது இறந்து வாழ்தும் எனல் – குறள் 98:1

TOP


வாழ்நாள் (1)

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிர் உண்ணும் கூற்று – குறள் 33:6

TOP


வாழ்பவன் (2)

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை – குறள் 5:7
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 5:10

TOP


வாழ்வது (2)

இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள் 9:1
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல – குறள் 34:7

TOP


வாழ்வதோர் (1)

ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – குறள் 94:2

TOP


வாழ்வாங்கு (1)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 5:10

TOP


வாழ்வார் (6)

மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நில மிசை நீடு வாழ்வார் – குறள் 1:3
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் – குறள் 1:6
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர் – குறள் 24:10
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர் – குறள் 53:8
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுது உண்டு பின் செல்பவர் – குறள் 104:3
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி
பின் இருந்து வாழ்வார் பலர் – குறள் 116:10

TOP


வாழ்வார்க்கு (2)

செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
வல் வரவு வாழ்வார்க்கு உரை – குறள் 116:1
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி – குறள் 120:2

TOP


வாழ்வாரின் (2)

நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள் 28:6
வீழ்வாரின் இன் சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள் 120:8

TOP


வாழ்வாரே (3)

வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர் – குறள் 24:10
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுது உண்டு பின் செல்பவர் – குறள் 104:3

TOP


வாழ்வான் (1)

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் – குறள் 22:4

TOP


வாழ்வானை (1)

குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை
சுற்றமா சுற்றும் உலகு – குறள் 103:5

TOP


வாழா (1)

மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் – குறள் 97:9

TOP


வாழாத (1)

இளி வரின் வாழாத மானம் உடையார்
ஒளி தொழுது ஏத்தும் உலகு – குறள் 97:10

TOP


வாழாதவர் (1)

வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர் – குறள் 24:10

TOP


வாழாதார் (1)

புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன் – குறள் 24:7

TOP


வாழாதான் (1)

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
இல்லாகி தோன்றா கெடும் – குறள் 48:9

TOP


வாழி (6)

நன் நிரை வாழி அனிச்சமே நின்னினும்
மெல் நீரள் யாம் வீழ்பவள் – குறள் 112:1
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி – குறள் 112:8
விடாஅது சென்றாரை கண்ணினால் காண
படாஅதி வாழி மதி – குறள் 121:10
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ வாழி பொழுது – குறள் 123:1
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல்
வன்கண்ணதோ நின் துணை – குறள் 123:2
காதல் அவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை வாழி என் நெஞ்சு – குறள் 125:2

TOP


வாழிய (1)

உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை
செறாஅய் வாழிய நெஞ்சு – குறள் 120:10

TOP


வாழினும் (2)

செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என் – குறள் 42:10
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
அமை ஆர் தோள் அஞ்சுபவர் – குறள் 91:6

TOP


வாழுநம் (1)

வீழுநர் வீழப்படுவர்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு – குறள் 120:3

TOP


வாழும் (5)

பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு – குறள் 6:8
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு – குறள் 40:2
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி – குறள் 55:2
துளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
அளி இன்மை வாழும் உயிர்க்கு – குறள் 56:7

TOP


வாள் (4)

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
வாள் ஆண்மை போல கெடும் – குறள் 62:4
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல் – குறள் 73:7
வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள் போல் பகைவர் தொடர்பு – குறள் 89:2
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
நாள் ஒற்றி தேய்த்த விரல் – குறள் 127:1

TOP


வாளாது (1)

நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
வாளாது உணர்வார் பெறின் – குறள் 34:4

TOP


வாளொடு (1)

வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
நுண் அவை அஞ்சுபவர்க்கு – குறள் 73:6

TOP


வான் (8)

வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று – குறள் 2:1
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு – குறள் 2:10
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – குறள் 3:4
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 5:10
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
தான் அறி குற்றப்படின் – குறள் 28:2
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி – குறள் 55:2
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
வான் சுதை வண்ணம் கொளல் – குறள் 72:4
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின் – குறள் 90:7

TOP


வானகமும் (1)

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது – குறள் 11:1

TOP


வானத்தவர்க்கு (1)

செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு – குறள் 9:6

TOP


வானம் (5)

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு – குறள் 2:8
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின் – குறள் 2:9
ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து – குறள் 36:3
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
ஒல்லாது வானம் பெயல் – குறள் 56:9
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி – குறள் 120:2

TOP


வானோர்க்கு (1)

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – குறள் 35:6

TOP


வானோர்க்கும் (1)

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு – குறள் 2:8

TOP