கா – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 1
காக்க 7
காக்கின் 2
காக்கும் 7
காக்கை 2
காட்சிக்கு 1
காட்சியர் 1
காட்சியவர் 5
காட்சியவர்க்கு 1
காட்ட 1
காட்டி 3
காட்டிய 1
காட்டிவிடும் 1
காட்டுதல் 1
காட்டும் 4
காட்டுவான் 1
காடிக்கும் 1
காடும் 1
காண் 2
காண்க-மன் 1
காண்கம் 1
காண்கிற்பின் 2
காண்டலின் 1
காண்பது 4
காண்பர் 2
காண்பவர் 1
காண்பான் 1
காண்பான்-ஆயினும் 1
காண்பு 1
காண 5
காணப்படும் 5
காணல் 1
காணா 2
காணா-கால் 1
காணாதவர் 1
காணாதான் 2
காணாது 2
காணார் 1
காணார்-கொல் 1
காணான் 2
காணான்-கொல் 1
காணின் 11
காணும் 3
காணும்-கால் 3
காணேன் 4
காத்த 1
காத்தல் 1
காத்தலும் 1
காத்து 4
காதல் 7
காதல 1
காதலம் 1
காதலர் 10
காதலவர் 3
காதலவராக 2
காதலன் 1
காதலார்-கண்ணே 1
காதலிக்கும் 1
காதலை 1
காதன்மை 2
காது 1
காப்ப 1
காப்பாற்றும் 1
காப்பான் 3
காப்பின் 1
காப்பு 3
காப்பே 1
காம்பு 1
காம 9
காமத்தான் 2
காமத்திற்கு 2
காமத்தின் 1
காமத்து 1
காமத்தை 1
காமம் 24
காமமும் 1
காமன் 1
காமுற்றார் 1
காமுற்று 1
காமுறுதல் 1
காமுறுவர் 2
காய் 1
காய்தி 1
காய்வார் 1
காய்வு 1
காயார் 1
காயினும் 1
காயும் 3
காயுமே 1
கார் 1
காரணத்தின் 1
காரணம் 3
காரிகை 4
கால் 6
காலத்தால் 1
காலத்தினால் 1
காலத்தொடு 1
காலம் 8
காலமும் 2
காலும் 1
காலை 5
காலைக்கு 1
காவலன் 1
காவா 1
காவா-கால் 3
காவாதான் 1
காவாது 1
காவார்-ஆயினும் 1
காவான் 1
காழ் 1
காழ்_இல் 1
காழ்த்த 1
காழ்ப்ப 1
கான 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கா (1)

ஒருதலையான் இன்னாது காமம் கா போல
இருதலையானும் இனிது – குறள் 120:6

TOP


காக்க (7)

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊங்கி இல்லை உயிர்க்கு – குறள் 13:2
யா காவார்-ஆயினும் நா காக்க காவா-கால்
சோகாப்பர் சொல் இழுக்கு பட்டு – குறள் 13:7
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி
தேரினும் அஃதே துணை – குறள் 14:2
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு – குறள் 29:1
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவா-கால்
தன்னையே கொல்லும் சினம் – குறள் 31:5
குற்றமே காக்க பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை – குறள் 44:4
உள் பகை அஞ்சி தன் காக்க உலைவு இடத்து
மண் பகையின் மாண தெறும் – குறள் 89:3

TOP


காக்கின் (2)

செல் இடத்து காப்பான் சினம் காப்பான் அல் இடத்து
காக்கின் என் காவா-கால் என் – குறள் 31:1
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவா-கால்
தன்னையே கொல்லும் சினம் – குறள் 31:5

TOP


காக்கும் (7)

சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை – குறள் 6:7
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண் – குறள் 43:1
எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய் – குறள் 43:9
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார் பேணி கொளல் – குறள் 45:2
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை
முறை காக்கும் முட்டா செயின் – குறள் 55:7

TOP


காக்கை (2)

பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது – குறள் 49:1
காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள – குறள் 53:7

TOP


காட்சிக்கு (1)

காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் – குறள் 39:6

TOP


காட்சியர் (1)

செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன் – குறள் 26:8

TOP


காட்சியவர் (5)

இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
புன்மை இல் காட்சியவர் – குறள் 18:4
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
மாசு அறு காட்சியவர் – குறள் 20:9
இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன் அறி காட்சியவர் – குறள் 22:8
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கு அற்ற காட்சியவர் – குறள் 66:4
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார்
துளக்கு அற்ற காட்சியவர் – குறள் 70:9

TOP


காட்சியவர்க்கு (1)

இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசு அறு காட்சியவர்க்கு – குறள் 36:2

TOP


காட்ட (1)

கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
தாம் காட்ட யாம் கண்டது – குறள் 118:1

TOP


காட்டி (3)

அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்
தவ்வையை காட்டி விடும் – குறள் 17:7
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
வாளாது உணர்வார் பெறின் – குறள் 34:4
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு – குறள் 46:4

TOP


காட்டிய (1)

கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை
காட்டிய சூட்டினீர் என்று – குறள் 132:3

TOP


காட்டிவிடும் (1)

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும் – குறள் 3:8

TOP


காட்டுதல் (1)

களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்
குளித்தானை தீ துரீஇ அற்று – குறள் 93:9

TOP


காட்டும் (4)

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் – குறள் 71:6
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் – குறள் 96:9

TOP


காட்டுவான் (1)

காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டான் ஆம் தான் கண்ட ஆறு – குறள் 85:9

TOP


காடிக்கும் (1)

துப்புரவு இல்லார் துவர துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று – குறள் 105:10

TOP


காடும் (1)

மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையது அரண் – குறள் 75:2

TOP


காண் (2)

எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
நினைப்ப வருவது ஒன்று இல் – குறள் 121:2
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
துனி செய்து துவ்வாய் காண் மற்று – குறள் 130:4

TOP


காண்க-மன் (1)

காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின்
நீங்கும் என் மென் தோள் பசப்பு – குறள் 127:5

TOP


காண்கம் (1)

புல்லாது இராஅ புலத்தை அவர் உறும்
அல்லல் நோய் காண்கம் சிறிது – குறள் 131:1

TOP


காண்கிற்பின் (2)

ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு – குறள் 19:10
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்
என் குற்றம் ஆகும் இறைக்கு – குறள் 44:6

TOP


காண்டலின் (1)

நனவினான் நல்காதவரை கனவினான்
காண்டலின் உண்டு என் உயிர் – குறள் 122:3

TOP


காண்பது (4)

எ பொருள் எ தன்மைத்து-ஆயினும் அ பொருள்
மெய் பொருள் காண்பது அறிவு – குறள் 36:5
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
செம் பொருள் காண்பது அறிவு – குறள் 36:8
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள்
மெய் பொருள் காண்பது அறிவு – குறள் 43:3
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய்
நுண் பொருள் காண்பது அறிவு – குறள் 43:4

TOP


காண்பர் (2)

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி
தாழாது உஞற்றுபவர் – குறள் 62:10
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர்
அலகு உடை நீழலவர் – குறள் 104:4

TOP


காண்பவர் (1)

நன்று ஆம்-கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்-கால்
அல்லற்படுவது எவன் – குறள் 38:9

TOP


காண்பான் (1)

இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன் சொல் வழங்குவது – குறள் 10:9

TOP


காண்பான்-ஆயினும் (1)

ஈன்றாள் பசி காண்பான்-ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை – குறள் 66:6

TOP


காண்பு (1)

விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது – குறள் 2:6

TOP


காண (5)

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடு காண வற்று ஆகும் கீழ் – குறள் 108:9
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின்
பலர் காண தோன்றல் மதி – குறள் 112:9
யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம் பட்ட தாம் படாவாறு – குறள் 114:10
விடாஅது சென்றாரை கண்ணினால் காண
படாஅதி வாழி மதி – குறள் 121:10
உள்ள களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு – குறள் 129:1

TOP


காணப்படும் (5)

தக்கார் தகவு இலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும் – குறள் 12:4
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
புன்மையால் காணப்படும் – குறள் 19:5
புற தூய்மை நீரான் அமையும் அக தூய்மை
வாய்மையான் காணப்படும் – குறள் 30:8
பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
நிலையாமை காணப்படும் – குறள் 35:9
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும்
கூடலின் காணப்படும் – குறள் 133:7

TOP


காணல் (1)

கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை
தின்னும் அவர் காணல் உற்று – குறள் 125:4

TOP


காணா (2)

காணா சினத்தான் கழி பெரும் காமத்தான்
பேணாமை பேணப்படும் – குறள் 87:6
எழுதும்-கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
பழி காணேன் கண்ட இடத்து – குறள் 129:5

TOP


காணா-கால் (1)

காணும்-கால் காணேன் தவறு ஆய காணா-கால்
காணேன் தவறு அல்லவை – குறள் 129:6

TOP


காணாதவர் (1)

நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர் காணாதவர் – குறள் 122:9

TOP


காணாதான் (2)

காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டான் ஆம் தான் கண்ட ஆறு – குறள் 85:9

TOP


காணாது (2)

பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர்
காணாது அமைவு இல கண் – குறள் 118:8
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை
காணாது அமையல கண் – குறள் 129:3

TOP


காணார் (1)

மிகல் மேவல் மெய் பொருள் காணார் இகல் மேவல்
இன்னா அறிவினவர் – குறள் 86:7

TOP


காணார்-கொல் (1)

நனவினான் நம் நீத்தார் என்ப கனவினான்
காணார்-கொல் இ ஊரவர் – குறள் 122:10

TOP


காணான் (2)

காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டான் ஆம் தான் கண்ட ஆறு – குறள் 85:9
இகல் காணான் ஆக்கம் வரும்-கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு – குறள் 86:9

TOP


காணான்-கொல் (1)

பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன்
ஒருவர்-கண் நின்று ஒழுகுவான் – குறள் 120:7

TOP


காணின் (11)

செறுநரை காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை – குறள் 49:8
சீர் இடம் காணின் எறிதற்கு பட்டடை
நேரா நிறந்தவர் நட்பு – குறள் 83:1
இலம் என்று அசைஇ இருப்பாரை காணின்
நிலம் என்னும் நல்லாள் நகும் – குறள் 104:10
இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின்
அவர் பழி தம் பழி அன்று – குறள் 106:1
கரப்பு இடும்பை இல்லாரை காணின் நிரப்பு இடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும் – குறள் 106:6
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து – குறள் 106:7
அக பட்டி ஆவாரை காணின் அவரின்
மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் – குறள் 108:4
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடு காண வற்று ஆகும் கீழ் – குறள் 108:9
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
பலர் காணும் பூ ஒக்கும் என்று – குறள் 112:2
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
மாண்_இழை கண் ஒவ்வேம் என்று – குறள் 112:4

TOP


காணும் (3)

இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர்
இன் முகம் காணும் அளவு – குறள் 23:4
இகல் காணான் ஆக்கம் வரும்-கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு – குறள் 86:9
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
பலர் காணும் பூ ஒக்கும் என்று – குறள் 112:2

TOP


காணும்-கால் (3)

நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணும்-கால்
கண் அல்லது இல்லை பிற – குறள் 71:10
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணும்-கால்
உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு – குறள் 93:10
காணும்-கால் காணேன் தவறு ஆய காணா-கால்
காணேன் தவறு அல்லவை – குறள் 129:6

TOP


காணேன் (4)

காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
யாமத்தும் யானே உளேன் – குறள் 117:7
எழுதும்-கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
பழி காணேன் கண்ட இடத்து – குறள் 129:5
காணும்-கால் காணேன் தவறு ஆய காணா-கால்
காணேன் தவறு அல்லவை – குறள் 129:6

TOP


காத்த (1)

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு – குறள் 39:5

TOP


காத்தல் (1)

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
கணம் ஏயும் காத்தல் அரிது – குறள் 3:9

TOP


காத்தலும் (1)

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு – குறள் 39:5

TOP


காத்து (4)

தன் காத்து தன் கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் – குறள் 6:6
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – குறள் 13:10
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – குறள் 65:2

TOP


காதல் (7)

களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
வீயா விழுமம் தரும் – குறள் 29:4
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல் – குறள் 44:10
உட்க படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
கள் காதல் கொண்டு ஒழுகுவார் – குறள் 93:1
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
தாம் காதல் கொள்ளா-கடை – குறள் 120:5
காதல் அவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை வாழி என் நெஞ்சு – குறள் 125:2
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம்
உள்ளும் உயிர் காதல் நெஞ்சு – குறள் 130:8

TOP


காதல (1)

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல் – குறள் 44:10

TOP


காதலம் (1)

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று – குறள் 132:4

TOP


காதலர் (10)

தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
கௌவை எடுக்கும் இ ஊர் – குறள் 115:10
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்
மேனி பசப்பு ஊர்வது – குறள் 119:5
எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ
காதலர் செய்யும் சிறப்பு – குறள் 121:8
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாது செய்வேன்-கொல் விருந்து – குறள் 122:1
நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான்
காதலர் நீங்கலர்-மன் – குறள் 122:6
நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர் காணாதவர் – குறள் 122:9
காதலர் இல் வழி மாலை கொலை_களத்து
ஏதிலர் போல வரும் – குறள் 123:4
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
பொய் காய்வு காய்தி என் நெஞ்சு – குறள் 125:6
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும்
எழு நாளேம் மேனி பசந்து – குறள் 128:8
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்
காதலர் இல்லா வழி – குறள் 131:8

TOP


காதலவர் (3)

அளவின்-கண் நின்று ஒழுகலாற்றார் களவின்-கண்
கன்றிய காதலவர் – குறள் 29:6
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எம் காதலவர் – குறள் 113:6
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
யார் உழை சேறி என் நெஞ்சு – குறள் 125:9

TOP


காதலவராக (2)

கண் உள்ளார் காதலவராக கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து – குறள் 113:7
நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து – குறள் 113:8

TOP


காதலன் (1)

தன்னை தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும்
துன்னற்க தீவினை பால் – குறள் 21:9

TOP


காதலார்-கண்ணே (1)

ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
காதலார்-கண்ணே உள – குறள் 110:9

TOP


காதலிக்கும் (1)

இழ-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
உழ-தொறூஉம் காது அற்று உயிர் – குறள் 94:10

TOP


காதலை (1)

மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி – குறள் 112:8

TOP


காதன்மை (2)

காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும் – குறள் 51:7
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கை அல்லதன்-கண் செயல் – குறள் 84:2

TOP


காது (1)

இழ-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
உழ-தொறூஉம் காது அற்று உயிர் – குறள் 94:10

TOP


காப்ப (1)

வகை அறிந்து தன் செய்து தன் காப்ப மாயும்
பகைவர்-கண் பட்ட செருக்கு – குறள் 88:8

TOP


காப்பாற்றும் (1)

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் – குறள் 39:8

TOP


காப்பான் (3)

உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – குறள் 3:4
செல் இடத்து காப்பான் சினம் காப்பான் அல் இடத்து
காக்கின் என் காவா-கால் என் – குறள் 31:1

TOP


காப்பின் (1)

சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை
ஊக்கம் அழிப்பது அரண் – குறள் 75:4

TOP


காப்பு (3)

சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை – குறள் 6:7
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்
வினைக்கு அரிய யா உள காப்பு – குறள் 79:1
ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின்
நீரினும் நன்று அதன் காப்பு – குறள் 104:8

TOP


காப்பே (1)

சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை – குறள் 6:7

TOP


காம்பு (1)

கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு
பெண் நிறைந்த நீர்மை பெரிது – குறள் 128:2

TOP


காம (9)

நெடு நீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காம கலன் – குறள் 61:5
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு
நல் ஆண்மை என்னும் புணை – குறள் 114:4
தொடின் சுடின் அல்லது காம நோய் போல
விடின் சுடல் ஆற்றுமோ தீ – குறள் 116:9
காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும்
ஏம புணை-மன்னும் இல் – குறள் 117:4
காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
யாமத்தும் யானே உளேன் – குறள் 117:7
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா
காம நோய் செய்த என் கண் – குறள் 118:5
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
நாணு தாழ் வீழ்த்த கதவு – குறள் 126:1
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காம நோய்
உற்றார் அறிவது ஒன்று அன்று – குறள் 126:5
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான்
காம நோய் சொல்லி இரவு – குறள் 128:10

TOP


காமத்தான் (2)

காணா சினத்தான் கழி பெரும் காமத்தான்
பேணாமை பேணப்படும் – குறள் 87:6
நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான்
பேணியார் பெட்ப செயின் – குறள் 126:7

TOP


காமத்திற்கு (2)

உள்ள களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு – குறள் 129:1
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
கூடி முயங்க பெறின் – குறள் 133:10

TOP


காமத்தின் (1)

கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது – குறள் 110:2

TOP


காமத்து (1)

தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
காமத்து காழ்_இல் கனி – குறள் 120:1

TOP


காமத்தை (1)

மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி
தும்மல் போல் தோன்றிவிடும் – குறள் 126:3

TOP


காமம் (24)

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெட கெடும் நோய் – குறள் 36:10
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று – குறள் 109:10
ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம்
கூடியார் பெற்ற பயன் – குறள் 111:9
அறி-தொறு அறியாமை கண்டு அற்றால் காமம்
செறி-தோறும் சே_இழை மாட்டு – குறள் 111:10
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
மடல் அல்லது இல்லை வலி – குறள் 114:1
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
பெண்ணின் பெரும் தக்கது இல் – குறள் 114:7
நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம்
மறை இறந்து மன்று படும் – குறள் 114:8
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
மறுகில் மறுகும் மருண்டு – குறள் 114:9
கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து – குறள் 115:4
களி-தொறும் கள் உண்டல் வேட்ட அற்றால் காமம்
வெளிப்படும்-தோறும் இனிது – குறள் 115:5
நெய்யால் எரி நுதுப்பும் என்ற அற்றால் கௌவையான்
காமம் நுதுப்பேம் எனல் – குறள் 115:8
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடும்-கால்
துன்பம் அதனின் பெரிது – குறள் 117:6
ஒருதலையான் இன்னாது காமம் கா போல
இருதலையானும் இனிது – குறள் 120:6
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது – குறள் 121:1
எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
நினைப்ப வருவது ஒன்று இல் – குறள் 121:2
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடி தரற்கு – குறள் 122:4
காமம் விடு ஒன்றோ நாண் விடு நன் நெஞ்சே
யானோ பொறேன் இ இரண்டு – குறள் 125:7
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில் – குறள் 126:2
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
மறை இறந்து மன்றுபடும் – குறள் 126:4
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு – குறள் 127:4
தினை துணையும் ஊடாமை வேண்டும் பனை துணையும்
காமம் நிறைய வரின் – குறள் 129:2
மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படுவார் – குறள் 129:9
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று – குறள் 131:6
உணலினும் உண்டது அறல் இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது – குறள் 133:6

TOP


காமமும் (1)

காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என்
நோனா உடம்பின் அகத்து – குறள் 117:3

TOP


காமன் (1)

பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன்
ஒருவர்-கண் நின்று ஒழுகுவான் – குறள் 120:7

TOP


காமுற்றார் (1)

நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன்
காமுற்றார் ஏறும் மடல் – குறள் 114:3

TOP


காமுற்று (1)

கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று – குறள் 41:2

TOP


காமுறுதல் (1)

கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று – குறள் 41:2

TOP


காமுறுவர் (2)

தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார் – குறள் 40:9
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசு அற்ற
சில சொல்லல் தேற்றாதவர் – குறள் 65:9

TOP


காய் (1)

இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்ப காய் கவர்ந்து அற்று – குறள் 10:10

TOP


காய்தி (1)

கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
பொய் காய்வு காய்தி என் நெஞ்சு – குறள் 125:6

TOP


காய்வார் (1)

அகலாது அணுகாது தீ காய்வார் போல்க
இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – குறள் 70:1

TOP


காய்வு (1)

கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
பொய் காய்வு காய்தி என் நெஞ்சு – குறள் 125:6

TOP


காயார் (1)

எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ
காதலர் செய்யும் சிறப்பு – குறள் 121:8

TOP


காயினும் (1)

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான் முந்துறும் – குறள் 71:7

TOP


காயும் (3)

கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை
காட்டிய சூட்டினீர் என்று – குறள் 132:3
தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
இ நீரர் ஆகுதிர் என்று – குறள் 132:9
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்
யார் உள்ளி நோக்கினீர் என்று – குறள் 132:10

TOP


காயுமே (1)

என்பு இலதனை வெயில் போல காயுமே
அன்பு இலதனை அறம் – குறள் 8:7

TOP


கார் (1)

களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்
ஆற்றல் புரிந்தார்-கண் இல் – குறள் 29:7

TOP


காரணத்தின் (1)

உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்து இருந்து எண்ணி கொளல் – குறள் 53:10

TOP


காரணம் (3)

இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர் – குறள் 27:10
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
காரணம் இன்றி வரும் – குறள் 53:9
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்
குளித்தானை தீ துரீஇ அற்று – குறள் 93:9

TOP


காரிகை (4)

கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
உண்மையான் உண்டு இ உலகு – குறள் 58:1
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
கழல் யாப்பு காரிகை நீர்த்து – குறள் 78:7
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
கலம் கழியும் காரிகை நீத்து – குறள் 127:2
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு
பெண் நிறைந்த நீர்மை பெரிது – குறள் 128:2

TOP


கால் (6)

கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து – குறள் 50:6
கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
வேல் ஆள் முகத்த களிறு – குறள் 50:10
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர்
குழாஅத்து பேதை புகல் – குறள் 84:10
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் – குறள் 96:9
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி – குறள் 103:10
அனிச்ச பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை – குறள் 112:5

TOP


காலத்தால் (1)

கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
தக்கது அறிவது ஆம் தூது – குறள் 69:6

TOP


காலத்தினால் (1)

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாண பெரிது – குறள் 11:2

TOP


காலத்தொடு (1)

செய்வானை நாடி வினை நாடி காலத்தொடு
எய்த உணர்ந்து செயல் – குறள் 52:6

TOP


காலம் (8)

அரு வினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் – குறள் 49:3
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின் – குறள் 49:4
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருதுபவர் – குறள் 49:5
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
உள் வேர்ப்பர் ஒள்ளியவர் – குறள் 49:7
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணி செயல் – குறள் 68:5
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை – குறள் 69:7
குறிப்பு அறிந்து காலம் கருதி வெறுப்பு இல
வேண்டுப வேட்ப சொலல் – குறள் 70:6
பகை நட்பு ஆம் காலம் வரும்-கால் முகம் நட்டு
அகம் நட்பு ஒரீஇவிடல் – குறள் 83:10

TOP


காலமும் (2)

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு – குறள் 64:1
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
கற்றான் கருதி செயல் – குறள் 95:9

TOP


காலும் (1)

இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா
காலும் இரவு ஒல்லா சால்பு – குறள் 107:4

TOP


காலை (5)

கெடும் காலை கைவிடுவார் கேண்மை அடும் காலை
உள்ளினும் உள்ளம் சுடும் – குறள் 80:9
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்கா-கால்
தான் நோக்கி மெல்ல நகும் – குறள் 110:4
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன் – குறள் 123:6
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி
மாலை மலரும் இ நோய் – குறள் 123:7

TOP


காலைக்கு (1)

காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான்
மாலைக்கு செய்த பகை – குறள் 123:5

TOP


காவலன் (1)

ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் – குறள் 56:10

TOP


காவா (1)

காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என்
நோனா உடம்பின் அகத்து – குறள் 117:3

TOP


காவா-கால் (3)

யா காவார்-ஆயினும் நா காக்க காவா-கால்
சோகாப்பர் சொல் இழுக்கு பட்டு – குறள் 13:7
செல் இடத்து காப்பான் சினம் காப்பான் அல் இடத்து
காக்கின் என் காவா-கால் என் – குறள் 31:1
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவா-கால்
தன்னையே கொல்லும் சினம் – குறள் 31:5

TOP


காவாதான் (1)

வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போல கெடும் – குறள் 44:5

TOP


காவாது (1)

முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை
பின் ஊறு இரங்கிவிடும் – குறள் 54:5

TOP


காவார்-ஆயினும் (1)

யா காவார்-ஆயினும் நா காக்க காவா-கால்
சோகாப்பர் சொல் இழுக்கு பட்டு – குறள் 13:7

TOP


காவான் (1)

ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் – குறள் 56:10

TOP


காழ் (1)

தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
காமத்து காழ்_இல் கனி – குறள் 120:1

TOP


காழ்_இல் (1)

தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
காமத்து காழ்_இல் கனி – குறள் 120:1

TOP


காழ்த்த (1)

இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து – குறள் 88:9

TOP


காழ்ப்ப (1)

ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு – குறள் 76:10

TOP


கான (1)

கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது – குறள் 78:2

TOP