யா – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யா 7
யாக்க 1
யாக்கை 2
யாக்கைக்கு 1
யாங்கணும் 1
யாங்கு 1
யாண்டு 2
யாண்டும் 4
யாத்து 1
யாதனின் 2
யாதானும் 1
யாது 18
யாதும் 2
யாப்பினுள் 1
யாப்பு 1
யாம் 14
யாமத்தும் 3
யாமும் 2
யார் 13
யார்-மாட்டும் 2
யார்க்கு 1
யார்க்கும் 8
யாரினும் 3
யாரும் 1
யாரே 4
யாரையும் 1
யாழ் 2
யான் 11
யானே 1
யானை 4
யானையால் 1
யானோ 3

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


யா (7)

பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
திண்மை உண்டாக பெறின் – குறள் 6:4
யா காவார்-ஆயினும் நா காக்க காவா-கால்
சோகாப்பர் சொல் இழுக்கு பட்டு – குறள் 13:7
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும் – குறள் 38:10
மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
யா உள முன் நிற்பவை – குறள் 64:6
நா நலம் என்னும் நலன் உடைமை அ நலம்
யா நலத்து உள்ளதூஉம் அன்று – குறள் 65:1
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்
வினைக்கு அரிய யா உள காப்பு – குறள் 79:1

TOP


யாக்க (1)

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அரிந்து யாக்க நட்பு – குறள் 80:3

TOP


யாக்கை (2)

புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – குறள் 8:9
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
யாக்கை பொறுத்த நிலம் – குறள் 24:9

TOP


யாக்கைக்கு (1)

மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் – குறள் 95:2

TOP


யாங்கணும் (1)

நீங்கான் வெகுளி நிறை இலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது – குறள் 87:4

TOP


யாங்கு (1)

கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர்
சொல்லாட போஒம் உயிர் – குறள் 107:10

TOP


யாண்டு (2)

யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
வேந்து செறப்பட்டவர் – குறள் 90:5
நீங்கின் தெறூஉம் குறுகும்-கால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள் – குறள் 111:4

TOP


யாண்டும் (4)

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல – குறள் 1:4
வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை
யாண்டும் அஃது ஒப்பது இல் – குறள் 37:3
கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று – குறள் 59:5
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
வேந்து செறப்பட்டவர் – குறள் 90:5

TOP


யாத்து (1)

வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்
யானையால் யானை யாத்து அற்று – குறள் 68:8

TOP


யாதனின் (2)

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் – குறள் 35:1

TOP


யாதானும் (1)

யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு – குறள் 40:7

TOP


யாது (18)

அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப்பொருள் – குறள் 18:8
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அ ஊன் தினல் – குறள் 26:4
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
தீமை இலாத சொலல் – குறள் 30:1
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
பிற வினை எல்லாம் தரும் – குறள் 33:1
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி – குறள் 33:4
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
அரும் பொருள் யாது ஒன்றும் இல் – குறள் 47:2
குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல் – குறள் 71:3
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை – குறள் 79:9
பழமை எனப்படுவது யாது எனின் யாதும்
கிழமையை கீழ்ந்திடா நட்பு – குறள் 81:1
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு
ஊதியம் போகவிடல் – குறள் 84:1
நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும்
பேணாமை பேதை தொழில் – குறள் 84:3
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
உடையம் யாம் என்னும் செருக்கு – குறள் 85:4
சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி
துலை அல்லார்-கண்ணும் கொளல் – குறள் 99:6
இன்மையின் இன்னாதது யாது எனின் இன்மையின்
இன்மையே இன்னாதது – குறள் 105:1
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாது ஒன்றும் கண்பாடு அரிது – குறள் 105:9
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாது செய்வேன்-கொல் விருந்து – குறள் 122:1

TOP


யாதும் (2)

பழமை எனப்படுவது யாது எனின் யாதும்
கிழமையை கீழ்ந்திடா நட்பு – குறள் 81:1
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
இல்லை பெறுவான் தவம் – குறள் 85:2

TOP


யாப்பினுள் (1)

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்
யாப்பினுள் அட்டிய நீர் – குறள் 110:3

TOP


யாப்பு (1)

சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
கழல் யாப்பு காரிகை நீர்த்து – குறள் 78:7

TOP


யாம் (14)

பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கள் பேறு அல்ல பிற – குறள் 7:1
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
வாய்மையின் நல்ல பிற – குறள் 30:10
இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு – குறள் 79:10
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
உடையம் யாம் என்னும் செருக்கு – குறள் 85:4
மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன
ஒப்பாரி யாம் கண்டது இல் – குறள் 108:1
நன் நிரை வாழி அனிச்சமே நின்னினும்
மெல் நீரள் யாம் வீழ்பவள் – குறள் 112:1
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திரு_நுதற்கு இல்லை இடம் – குறள் 113:3
யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம் பட்ட தாம் படாவாறு – குறள் 114:10
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
கௌவை எடுக்கும் இ ஊர் – குறள் 115:10
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
தாம் காட்ட யாம் கண்டது – குறள் 118:1
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம்
உற்றால் உறாஅதவர் – குறள் 125:5
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து – குறள் 132:2
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப
நீடுக-மன்னோ இரா – குறள் 133:9

TOP


யாமத்தும் (3)

மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற
படல் ஒல்லா பேதைக்கு என் கண் – குறள் 114:6
காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
யாமத்தும் யானே உளேன் – குறள் 117:7
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில் – குறள் 126:2

TOP


யாமும் (2)

யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து
ஓஒ உளரே அவர் – குறள் 121:4
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும்
எழு நாளேம் மேனி பசந்து – குறள் 128:8

TOP


யார் (13)

நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு – குறள் 2:10
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – குறள் 15:9
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும்
வெஃகி வெறிய செயின் – குறள் 18:5
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் – குறள் 31:3
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள்
மெய் பொருள் காண்பது அறிவு – குறள் 43:3
இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃது ஒப்பது இல் – குறள் 54:6
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை – குறள் 55:1
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு – குறள் 100:1
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
யார் உழை சேறி என் நெஞ்சு – குறள் 125:9
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
துனி செய்து துவ்வாய் காண் மற்று – குறள் 130:4
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்
யார் உள்ளி தும்மினீர் என்று – குறள் 132:7
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்
யார் உள்ளி நோக்கினீர் என்று – குறள் 132:10

TOP


யார்-மாட்டும் (2)

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும்
இன்புறூஉம் இன் சொலவர்க்கு – குறள் 10:4
விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின் – குறள் 17:2

TOP


யார்க்கு (1)

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என்
பண்பு யார்க்கு உரைக்க பிற – குறள் 119:1

TOP


யார்க்கும் (8)

நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு – குறள் 2:10
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை – குறள் 32:7
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து
ஆள்வினை இன்மை பழி – குறள் 62:8
சொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது – குறள் 65:7
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்
சொல்லிய வண்ணம் செயல் – குறள் 67:4
போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின்
தேற்றுதல் யார்க்கும் அரிது – குறள் 70:3
நீங்கான் வெகுளி நிறை இலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது – குறள் 87:4
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு – குறள் 96:10

TOP


யாரினும் (3)

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று – குறள் 132:4

TOP


யாரும் (1)

தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலை பொருட்டால் ஊன் தருவார் இல் – குறள் 26:6

TOP


யாரே (4)

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமையவர் – குறள் 45:7
இழைத்தது இகவாமை சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற்பவர் – குறள் 78:9
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
மிகல் ஊக்கும் தன்மையவர் – குறள் 86:5
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய
நெஞ்சம் துணை அல்வழி – குறள் 130:9

TOP


யாரையும் (1)

தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின்
தேறுக தேறும் பொருள் – குறள் 51:9

TOP


யாழ் (2)

குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர் – குறள் 7:6
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல் – குறள் 28:9

TOP


யான் (11)

கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுவு ஒரீஇ அல்ல செயின் – குறள் 12:6
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – குறள் 35:6
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்கா-கால்
தான் நோக்கி மெல்ல நகும் – குறள் 110:4
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க
பசையினள் பைய நகும் – குறள் 110:8
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
ஒள் அமர் கண்ணாள் குணம் – குறள் 113:5
மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்று நீர் போல மிகும் – குறள் 117:1
உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு – குறள் 119:4
மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான்
உற்ற நாள் உள்ள உளேன் – குறள் 121:6
கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன்-மன் – குறள் 122:2
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான்
மாலைக்கு செய்த பகை – குறள் 123:5

TOP


யானே (1)

காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
யாமத்தும் யானே உளேன் – குறள் 117:7

TOP


யானை (4)

பரியது கூர் கோட்டது-ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின் – குறள் 60:9
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்
யானையால் யானை யாத்து அற்று – குறள் 68:8
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
உண்டாக செய்வான் வினை – குறள் 76:8
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது – குறள் 78:2

TOP


யானையால் (1)

வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்
யானையால் யானை யாத்து அற்று – குறள் 68:8

TOP


யானோ (3)

காமம் விடு ஒன்றோ நாண் விடு நன் நெஞ்சே
யானோ பொறேன் இ இரண்டு – குறள் 125:7
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி
தும்மல் போல் தோன்றிவிடும் – குறள் 126:3
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
மறை இறந்து மன்றுபடும் – குறள் 126:4

TOP