தீ – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 13
தீங்கு 1
தீண்டல் 2
தீண்டலான் 1
தீண்டா 1
தீது 6
தீதே 3
தீமை 3
தீமைத்தே 1
தீமையால் 1
தீமையும் 1
தீய 7
தீயவும் 1
தீயவை 5
தீயில் 1
தீயினால் 1
தீயினும் 1
தீர் 1
தீர்க்கும் 2
தீர்த்தல் 1
தீர்ந்த 3
தீர்ந்தன்று 1
தீர்ந்தாரின் 1
தீர்ந்தாரும் 1
தீர்ப்பான் 1
தீர்வாம் 1
தீர 2
தீரா 3
தீராமை 1
தீவினை 3
தீவினையார் 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தீ (13)

ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின்
நன்று ஆகாது ஆகிவிடும் – குறள் 13:8
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும் – குறள் 14:8
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று
தீ உழி உய்த்துவிடும் – குறள் 17:8
தீ பால தான் பிறர்-கண் செய்யற்க நோய் பால
தன்னை அடல் வேண்டாதான் – குறள் 21:6
பாத்து ஊண் மரீஇயவனை பசி என்னும்
தீ பிணி தீண்டல் அரிது – குறள் 23:7
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லா தீ வாழ்க்கையவர் – குறள் 33:10
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
அல்லற்படுப்பதூஉம் இல் – குறள் 46:10
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையும்-கால்
தீ எச்சம் போல தெறும் – குறள் 68:4
அகலாது அணுகாது தீ காய்வார் போல்க
இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – குறள் 70:1
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்
குளித்தானை தீ துரீஇ அற்று – குறள் 93:9
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின்
நோய் அளவு இன்றி படும் – குறள் 95:7
நீங்கின் தெறூஉம் குறுகும்-கால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள் – குறள் 111:4
தொடின் சுடின் அல்லது காம நோய் போல
விடின் சுடல் ஆற்றுமோ தீ – குறள் 116:9

TOP


தீங்கு (1)

சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம்
தீங்கு குறித்தமையான் – குறள் 83:7

TOP


தீண்டல் (2)

மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு – குறள் 7:5
பாத்து ஊண் மரீஇயவனை பசி என்னும்
தீ பிணி தீண்டல் அரிது – குறள் 23:7

TOP


தீண்டலான் (1)

உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் – குறள் 111:6

TOP


தீண்டா (1)

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
பண்பு உடை மக்கள் பெறின் – குறள் 7:2

TOP


தீது (6)

ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு – குறள் 19:10
பயன் இல பல்லார் முன் சொல்லல் நயன் இல
நட்டார்-கண் செய்தலின் தீது – குறள் 20:2
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
இல் எனினும் ஈதலே நன்று – குறள் 23:2
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும்
இல் அதனின் தீய பிற – குறள் 31:2
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்-பால் உய்ப்பது அறிவு – குறள் 43:2
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள் – குறள் 76:4

TOP


தீதே (3)

அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன் அழீஇ பொய்த்து நகை – குறள் 19:2
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல் – குறள் 29:2
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு – குறள் 54:1

TOP


தீமை (3)

விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்
தீமை புரிந்து ஒழுகுவார் – குறள் 15:3
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
தீமை இலாத சொலல் – குறள் 30:1
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
சொல்லா நலத்தது சால்பு – குறள் 99:4

TOP


தீமைத்தே (1)

பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே
நல்லார் தொடர் கைவிடல் – குறள் 45:10

TOP


தீமையால் (1)

பண்பு இலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
கலம் தீமையால் திரிந்த அற்று – குறள் 100:10

TOP


தீமையும் (1)

நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த
தன்மையான் ஆளப்படும் – குறள் 52:1

TOP


தீய (7)

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல் – குறள் 14:9
தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப்படும் – குறள் 21:2
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல் – குறள் 21:3
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும்
இல் அதனின் தீய பிற – குறள் 31:2
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் – குறள் 31:3
நகையும் உவகையும் கொல்லும் சினத்தில் தீய
பகையும் உளவோ பிற – குறள் 31:4
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும்
நல்ல ஆம் செல்வம் செயற்கு – குறள் 38:5

TOP


தீயவும் (1)

நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும்
நல்ல ஆம் செல்வம் செயற்கு – குறள் 38:5

TOP


தீயவை (5)

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
பண்பு உடை மக்கள் பெறின் – குறள் 7:2
தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப்படும் – குறள் 21:2
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள் 21:5
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்த அற்று – குறள் 21:8

TOP


தீயில் (1)

நிணம் தீயில் இட்ட அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் – குறள் 126:10

TOP


தீயினால் (1)

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு – குறள் 13:9

TOP


தீயினும் (1)

தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப்படும் – குறள் 21:2

TOP


தீர் (1)

பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் – குறள் 1:6

TOP


தீர்க்கும் (2)

நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும்
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து – குறள் 125:1
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து – குறள் 128:5

TOP


தீர்த்தல் (1)

அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி – குறள் 23:6

TOP


தீர்ந்த (3)

பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
மாசு அறு காட்சியவர் – குறள் 20:9
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின் – குறள் 30:2

TOP


தீர்ந்தன்று (1)

வினை-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு – குறள் 62:2

TOP


தீர்ந்தாரின் (1)

வினை-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு – குறள் 62:2

TOP


தீர்ந்தாரும் (1)

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் – குறள் 17:10

TOP


தீர்ப்பான் (1)

உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
அ பால் நால் கூற்றே மருந்து – குறள் 95:10

TOP


தீர்வாம் (1)

இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல் – குறள் 107:3

TOP


தீர (2)

தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் – குறள் 35:8
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணி செயல் – குறள் 68:5

TOP


தீரா (3)

தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும் – குறள் 51:8
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் – குறள் 51:10
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது – குறள் 121:1

TOP


தீராமை (1)

பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை
தீராமை ஆர்க்கும் கயிறு – குறள் 49:2

TOP


தீவினை (3)

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு – குறள் 21:1
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும்
துன்னற்க தீவினை பால் – குறள் 21:9
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி
தீவினை செய்யான் எனின் – குறள் 21:10

TOP


தீவினையார் (1)

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு – குறள் 21:1

TOP