நெ – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


நெக்கு (3)

உருகிலை நெக்கு உடைந்திலை மொண்டு ஆனந்தவன தேனை ஓடியோடி – காசி:6 30/3
முருகு நாறு குழல் பொலம் கொம்பு_அனீர் முத்தர் வாழ் அவிமுத்தமும் நெக்கு உடைந்து – காசி:17 76/3
நனை கமல நெக்கு உடைதர குடை துறை சுர நதி கரையில் முட்டை-கொல் எனா – காசி:18 98/3
மேல்

நெஞ்சமே (1)

ஏது கொண்டு கொடுப்பர் கொடுப்பரேல் இருவருக்கும் மற்று என் படும் நெஞ்சமே – காசி:7 35/4
மேல்

நெஞ்சே (3)

பெருகும் முழு நீத்தத்தில் திளைத்து ஆட புணை தேடும் பேதை நெஞ்சே
உருகிலை நெக்கு உடைந்திலை மொண்டு ஆனந்தவன தேனை ஓடியோடி – காசி:6 30/2,3
கூற்று அடிக்கு அஞ்சி குலையும் நெஞ்சே அஞ்சல் கோ செழியன் – காசி:15 59/1
திரை முதிர்ந்து உடல் திரங்கினது இரங்கலை செயல் இது மட நெஞ்சே
உரை முதிர்ந்தவர் குழாத்தொடும் அடைதியால் ஒழுகு ஒளி முடி கங்கை – காசி:15 66/2,3
மேல்

நெட்டுயிர்த்தாள் (1)

தண் ஒன்றும் நறை இதழி தார் என்றாள் நெட்டுயிர்த்தாள் தரை மேல் வீழ்ந்தாள் – காசி:4 9/2
மேல்

நெடு (3)

பரு வரை நெடு வில் எடுத்து சுமந்தன – காசி:4 4/14
நெடு நிலை கம்பத்தின் வடம் மிசை நடந்து என – காசி:15 57/33
உடை திரை கங்கை நெடு நதி துறையின் – காசி:18 100/1
மேல்

நெடும் (5)

சடை மருங்கில் நெடும் திரை கை பெண் அமிர்தம் தலைசிறப்ப – காசி:2 1/4
செயலாவது ஒன்று இலை வாளா நெடும் துயில்செய்யுமுங்கள் – காசி:6 22/3
மடல் அவிழ் கோதை மதர் நெடும் கண்ணே – காசி:16 69/5
கொத்து ஆடு சடையொடும் ஆனந்தவனத்தே குறும் தாள் நெடும் பூதத்தோடு – காசி:16 71/3
கடல் வயிற்றினை நிரப்புகின்ற சுர கங்கை குண்டு அகழியா நெடும் ககனம் நீள் குடுமி மதில்கள் ஏழ் உடைய காசி மேவும் அகிலேசரே – காசி:17 96/4
மேல்

நெருப்பே (1)

விழியும் இடக்கண்ணும் வெள் நெருப்பே அவ் விழி இரண்டில் – காசி:6 27/2
மேல்

நெறி (2)

நெறி அலது ஒருவரும் அறிவு அரும் நிலைமையை – காசி:2 1/32
செம் நெறி வினவுதிராயின் இன் இசை – காசி:18 100/28
மேல்