தி – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கய 1
திக்கு 1
திகத்தனும் 1
திகந்த 1
திகந்தம் 1
திகழ்த்தி 1
திகழ்ந்தான் 1
திகழ்வித்து 1
திகழ 4
திகிரி 9
திகிரி-தனை 1
திகிரியும் 2
திகைத்தும் 1
திங்கள் 6
திங்கள்_குழவி 1
திங்களின் 1
திசாதேவர் 1
திசை 3
திசை_வேழம் 1
திசைமுகனும் 1
திசையில் 1
திசையின் 1
திசையை 1
திமிர 1
தியாகசமுத்திரம் 1
தியாகசமுத்திரமே 1
தியாகனை 1
திரண்ட 2
திரண்டு 3
திரள் 2
திரள்வார் 1
திரளும் 1
திரித்த 1
திரித்து 1
திரிந்தாள் 1
திரிய 1
திரு 93
திருக்காம 1
திருக்காமக்கோட்டம் 1
திருக்குலத்து 1
திருக்கை 1
திருச்சுற்றுமாளிகையும் 1
திருத்தில்லை 1
திருத்திவிட 1
திருத்தொங்கல் 1
திருத்தோற்றம் 1
திருந்த 1
திருந்தா 1
திருந்திய 3
திருந்து 2
திருநடனம் 1
திருநாமம் 1
திருநீற்று 1
திருப்பவளம் 1
திருப்பவனி 2
திருப்பள்ளி 1
திருப்பாவையால் 1
திருமகள் 2
திருமகளை 1
திருமகன் 1
திருமஞ்சனம் 1
திருமரபுக்கு 1
திருமன்றம் 1
திருமார்பில் 2
திருமாலே 1
திருமாலை 2
திருமுன்பு 1
திருவாய்மலர்ந்தான் 1
திருவிற்கே 1
திருவுடனே 1
திருவே 3
திருவை 1
திரை 3
திரை-தொறும் 1
திரைத்து 1
திரையரமாதரும் 1
திரையின் 2
திரையை 1
தில்லை 2
திலக 2
திலகம் 1
திலகமும் 1
திலகன் 1
திவ்யாபரணம் 1
திவடர 1
திவலை 2
திவலையால் 1
திளைக்கும் 2
திளைத்துழி 1
திளைப்பாள் 1
திறக்க 1
திறத்தால் 1
திறத்து 2
திறந்து 1
திறப்ப 1
திறல் 1
திறன் 1
திறைகொண்டு 1
திறையளந்த 1
தின் 1
தினகரன் 1

திக்கய (1)

எதிர்க்கும் முலைக்கு இரிந்த திக்கய கோடு இட்ட – மூவருலா:2 232/1

மேல்

திக்கு (1)

தியாகனை மானதனை திக்கு ஆனை எட்டுக்கும் – மூவருலா:2 217/1

மேல்

திகத்தனும் (1)

செம் கை களிற்று திகத்தனும் அங்கத்து – மூவருலா:1 88/2

மேல்

திகந்த (1)

திகந்த களிறு எட்டும் சென்று முகந்து – மூவருலா:3 234/2

மேல்

திகந்தம் (1)

புகுந்தது இது என்று போனான் திகந்தம் – மூவருலா:2 249/2

மேல்

திகழ்த்தி (1)

திரு உடை ஆடை திகழ்த்தி ஒரு புடை – மூவருலா:2 65/2

மேல்

திகழ்ந்தான் (1)

திரு நகை மூரல் திகழ்ந்தான் அணங்கும் – மூவருலா:2 223/1

மேல்

திகழ்வித்து (1)

திருக்காமக்கோட்டம் திகழ்வித்து அருக்கர் – மூவருலா:2 56/2

மேல்

திகழ (4)

சிகரங்கள் ஆகி திகழ நிகர்_இல் – மூவருலா:2 50/2
சிகர சுடர் போல் திகழ நிகர்_இல் – மூவருலா:2 71/2
சேனாபராகம் என திகழ பூ நாறும் – மூவருலா:2 109/2
செம்பொன் திகிரி என திகழ அம் பொன் – மூவருலா:2 283/2

மேல்

திகிரி (9)

மற கலியும் சுங்கமும் மாற்றி அற திகிரி – மூவருலா:1 26/2
மேய திகிரி விரி மேகலை அல்குல் – மூவருலா:1 33/1
முட்டும் திகிரி கிரியின் முது முதுகில் – மூவருலா:1 288/1
செம்பொன் திகிரி என திகழ அம் பொன் – மூவருலா:2 283/2
உடுத்த திகிரி பதினால் உலகும் – மூவருலா:3 37/1
அடுத்த வர ராசராசன் அடல் திகிரி – மூவருலா:3 37/2
தீர்த்தத்து அபிடேகம்செய்து அருளி போர் திகிரி – மூவருலா:3 42/2
ஏறு முதலை எறி திகிரி வேள் மகர – மூவருலா:3 311/1
அடல் போர் அடு திகிரி அண்ணலை தன்-பால் – மூவருலா:3 355/1

மேல்

திகிரி-தனை (1)

சாரும் திகிரி-தனை உருட்டி ஓர் ஏழு – மூவருலா:1 329/1

மேல்

திகிரியும் (2)

வலம் கோள் திகிரியும் மான தலம் கொள் – மூவருலா:2 48/2
சங்கும் திகிரியும் சார்ங்கமும் தண்டமும் – மூவருலா:2 86/1

மேல்

திகைத்தும் (1)

தென்றல் வருவது என திகைத்தும் நின்று அயர் கால் – மூவருலா:1 255/2

மேல்

திங்கள் (6)

வந்து பிறந்து வளரும் இளம் திங்கள்
கொந்து முகிழா கொழும் கொழுந்து பைம் தழை – மூவருலா:1 113/1,2
முயலால் அழுங்கா முழு திங்கள் வானில் – மூவருலா:1 264/1
திங்கள் குலத்திற்கும் தெய்வ பொதியிற்கும் – மூவருலா:1 292/1
குளிராத திங்கள்_குழவி அளிகள் – மூவருலா:2 125/2
நடையாய வெள்ளமும் நாள் நிரம்பு திங்கள்
குடையாய வெள்ளமும் கூடி அடைய – மூவருலா:2 239/1,2
திங்கள் நுதலார் தெருமரலும் அங்கு அவரில் – மூவருலா:3 114/2

மேல்

திங்கள்_குழவி (1)

குளிராத திங்கள்_குழவி அளிகள் – மூவருலா:2 125/2

மேல்

திங்களின் (1)

திங்களின் தண் நிலவு தீராயால் பொங்கு ஒலி நீர் – மூவருலா:2 375/2

மேல்

திசாதேவர் (1)

கண் மரும் செவ்வி கடவுள் திசாதேவர்
எண்மரும் காணும் இவன் என்பார் மண்ணவர்க்கும் – மூவருலா:2 113/1,2

மேல்

திசை (3)

செம்மை தனி கோல் திசை அளப்ப தம்மை – மூவருலா:1 29/2
காத்து குடை ஒன்றால் எட்டு திசை கவித்த – மூவருலா:1 330/1
விட்டு மதம் பொழியும் வேழம் திசை_வேழம் – மூவருலா:2 93/1

மேல்

திசை_வேழம் (1)

விட்டு மதம் பொழியும் வேழம் திசை_வேழம்
எட்டும் ஒழிய புகுந்து ஈண்ட கட்டி – மூவருலா:2 93/1,2

மேல்

திசைமுகனும் (1)

ஆதி கடவுள் திசைமுகனும் ஆங்கு அவன்றன் – மூவருலா:1 2/1

மேல்

திசையில் (1)

என்று துயில் பெறுவது எக்காலம் தென் திசையில்
நீர் அதிரா வண்ணம் நெடும் சிலையை நாண் எறிந்த – மூவருலா:3 392/2,3

மேல்

திசையின் (1)

திசையின் புடை அடைய செல்ல மிசையே – மூவருலா:2 325/2

மேல்

திசையை (1)

திசையை நெருக்கும் திரு தோளில் செல்லா – மூவருலா:1 127/1

மேல்

திமிர (1)

போத திமிர பொறை நீக்கி மாதரில் – மூவருலா:2 35/2

மேல்

தியாகசமுத்திரம் (1)

செங்கோல் தியாகசமுத்திரம் நண்ணுதலும் – மூவருலா:1 216/1

மேல்

தியாகசமுத்திரமே (1)

தானை தியாகசமுத்திரமே மான போர் – மூவருலா:1 331/2

மேல்

தியாகனை (1)

தியாகனை மானதனை திக்கு ஆனை எட்டுக்கும் – மூவருலா:2 217/1

மேல்

திரண்ட (2)

சேனை திரண்ட திரள் போன்றும் கானல் அம் – மூவருலா:1 94/2
கொல்ல திரண்ட குறங்கினாள் எல்லை_இல் – மூவருலா:1 306/2

மேல்

திரண்டு (3)

வந்து திரண்டு அனைய வாயினாள் அந்தம்_இல் – மூவருலா:1 193/2
திரண்டு பலர் எதிரே சென்று புரண்ட – மூவருலா:2 104/2
சேனை திரண்டு அனைய செவ்வியாள் வானில் – மூவருலா:3 275/2

மேல்

திரள் (2)

சேனை திரண்ட திரள் போன்றும் கானல் அம் – மூவருலா:1 94/2
சேடியர் ஒப்ப வகுத்து திரள் பந்து – மூவருலா:1 199/1

மேல்

திரள்வார் (1)

சாலை-தொறும் திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார் – மூவருலா:2 101/1

மேல்

திரளும் (1)

திரை ஏழின் முத்தின் திரளும் தரை ஏழின் – மூவருலா:3 139/2

மேல்

திரித்த (1)

செண்டால் கிரி திரித்த சேவகனை தண்டாத – மூவருலா:1 155/2

மேல்

திரித்து (1)

சென்னி புலி ஏறு இருத்தி கிரி திரித்து
பொன்னி கரை கண்ட பூபதியும் இன் அருளின் – மூவருலா:1 13/1,2

மேல்

திரிந்தாள் (1)

திரிந்தாள் கலை நிலையும் செம்பொன் துகிலும் – மூவருலா:2 251/1

மேல்

திரிய (1)

முறுகு கதிரின் முகம் திரிய ஏற்று – மூவருலா:2 238/1

மேல்

திரு (93)

சீர் தந்த தாமரையாள் கேள்வன் திரு உரு – மூவருலா:1 1/1
சிந்தனை ஆவிற்கு முற்ற திரு தேரில் – மூவருலா:1 4/1
மருங்கில் திரு உடை வாள் வாய்ப்ப பொருந்திய – மூவருலா:1 49/2
இருத்தும் பிடி படியா ஏறி திரு தக்க – மூவருலா:1 64/2
கஞ்சை திரு மறையோன் கண்ணனும் வெம் சமத்து – மூவருலா:1 75/2
சேதி திரு நாடர் சேவகனும் பூதலத்து – மூவருலா:1 84/2
புரக்கும் திரு நாடு போன்றும் வர கருதா – மூவருலா:1 93/2
திரை-தொறும் தோன்றும் திரு குழாம் போன்றும் – மூவருலா:1 96/1
சீர் அளவில்லா திரு தோள் அயன் படைத்த – மூவருலா:1 107/1
நெகிழ்ந்த திரு நோக்கில் நேரா முகிழ்ந்து – மூவருலா:1 124/2
சிரிக்கும் திரு பவள சே ஒளி ஊடாடா – மூவருலா:1 125/1
விரிக்கும் திரு நிலவின் வீழா பரிக்கும் – மூவருலா:1 125/2
உலகம் பரவும் திரு புருவத்து ஓரா – மூவருலா:1 126/1
திசையை நெருக்கும் திரு தோளில் செல்லா – மூவருலா:1 127/1
இசையும் திரு மார்பத்து எய்தா வசை இலா – மூவருலா:1 127/2
திரு மாலை தா என்று செல்வேம் திரு மாலை – மூவருலா:1 131/2
திரு மாலை தா என்று செல்வேம் திரு மாலை – மூவருலா:1 131/2
திரு கொள்ளும் மார்பமும் தெவ் வேந்தர் எல்லாம் – மூவருலா:1 184/1
செவ்வி அழியா திரு முகமும் எவ்வுருவும் – மூவருலா:1 186/2
திரு இருந்து தாமரையாய் சென்றடைந்த வண்டின் – மூவருலா:1 240/1
பேணும் திரு மடனும் என்றும் பிரியாத – மூவருலா:1 257/1
பயிலும் திரு நூற்படியோ புயல் வளவ – மூவருலா:1 336/2
திரு நாடு தேரும் குறை அறுப்ப செய்தால் – மூவருலா:1 338/1
திரு நாண் மட மகளிர்-தம்மை ஒரு நாள் அவ் – மூவருலா:1 338/2
உருளும் திரு தேர் உரவோன் அருளினால் – மூவருலா:2 2/2
சீறும் செருவில் திரு மார்பில் தொண்ணூறும் – மூவருலா:2 21/1
ஆற்றும் திரு தோள் அகளங்கன் வேற்றார் – மூவருலா:2 27/2
இந்து மரபில் இருக்கும் திரு குலத்தில் – மூவருலா:2 30/1
தீட்டற்கு அரிய திருவே திரு மாலை – மூவருலா:2 32/1
சூட்ட திரு மகுடம் சூடிய பின் நாட்டு – மூவருலா:2 32/2
தில்லை திரு மன்ற முன்றில் சிறுதெய்வ – மூவருலா:2 39/1
எடுக்கும் திரு தீபம் ஏற்றி அடுக்கிய – மூவருலா:2 43/2
திரு மிக்க செந்தாமரையாய் பெரு வர்க்க – மூவருலா:2 45/2
ஆடும் திரு பெரும் பேரம்பலமும் கோபுர – மூவருலா:2 47/1
விரி பொன் திரு முற்றம் மின்ன சொரி பொன் – மூவருலா:2 51/2
திரு வீதி ஈரிரண்டும் தேவர்கோன் மூதூர் – மூவருலா:2 58/1
திரு உடை ஆடை திகழ்த்தி ஒரு புடை – மூவருலா:2 65/2
திரு உதரபந்தனம் சேர்த்தி திரு மார்பில் – மூவருலா:2 67/2
திரு உதரபந்தனம் சேர்த்தி திரு மார்பில் – மூவருலா:2 67/2
எருத்தம் திரு கவின ஏறி திரு தக்க – மூவருலா:2 82/2
எருத்தம் திரு கவின ஏறி திரு தக்க – மூவருலா:2 82/2
சென்று கனை கடல் தூர்த்து திரு குலத்து – மூவருலா:2 117/1
மன்னன் புனையும் திரு முத்த மாலையை – மூவருலா:2 131/1
மதர்க்கும் ஒரு திரு மாது முதல் தன் – மூவருலா:2 146/2
கோழி திரு நகர கொற்றவற்கு வெற்றி போர் – மூவருலா:2 149/1
சேயினும் நல்ல பெருமாள் திரு தடம் தோள் – மூவருலா:2 167/1
மந்தாகினிக்கோன் திரு புருவ வார் சிலையும் – மூவருலா:2 171/1
கல்லாரம் அன்று கதிரோன் திரு மருமான் – மூவருலா:2 176/1
அடுத்த திரு நோக்கு அருளா கொடுத்த – மூவருலா:2 222/2
திரு நகை மூரல் திகழ்ந்தான் அணங்கும் – மூவருலா:2 223/1
மறுகு திரு மலர வந்தான் குறுகும் – மூவருலா:2 238/2
வளவர் திரு குலத்து அந்தோ அளவிறந்த – மூவருலா:2 255/2
மயக்கும் திரு வாய் மலர்க்கும் நயக்கும் – மூவருலா:2 258/2
திரு புருவம் செய்த செயற்கும் பரப்பு அடைய – மூவருலா:2 259/2
செம் கேழ் எறித்து மறிக்கும் திரு நயன – மூவருலா:2 260/1
சேமித்த பூம் கோயில் எல்லாம் திரு என்று – மூவருலா:2 269/1
தென் சங்கம் கொண்டான் திரு சங்கம் செய்குன்றின்-தன் – மூவருலா:2 277/1
ஆர திரு தோள் அளித்திலனே நேர் ஒத்த – மூவருலா:2 295/2
இரு விலிடை நின்று இறைஞ்சி திரு உலா – மூவருலா:2 301/2
சிறந்த திரு உள்ளம் செல்ல சிறந்தவள் – மூவருலா:2 332/2
ஆக நகத்து இருந்தாளாக திரு உள்ள – மூவருலா:2 333/1
காலும் நிதம்பமும் கையும் திரு கழுத்தும் – மூவருலா:2 348/1
வாழும் திரு எனக்கு வாய்க்குமே தாழி – மூவருலா:2 365/2
குந்தம் ஒசித்ததுவும் கொற்ற திரு தோளால் – மூவருலா:2 370/1
வாங்கும் திரு கொற்ற வாள் ஒன்றின் வாய் வாய்ப்ப – மூவருலா:3 13/1
திரு மகளை கல்யாணம்செய்தோன் பர நிருபர் – மூவருலா:3 16/2
சேய பெரிய திரு குலத்து நாயகன் – மூவருலா:3 29/2
சிற்றம்பலமும் திரு பெரும் பேரம்பலமும் – மூவருலா:3 30/1
மருமகன் ஆகி மறித்தும் திரு நெடுமால் – மூவருலா:3 34/2
செந்தாமரையாள் திரு மார்பில் வீற்றிருக்க – மூவருலா:3 36/1
சீத்த வரையின் திரு கொற்ற வில் ஒன்றால் – மூவருலா:3 73/1
சாயல் அரமகளிர் தந்தம் திரு மரபில் – மூவருலா:3 79/1
விட்ட திரு கொற்ற வில் காணீர் வெட்டி – மூவருலா:3 84/2
திருந்து மதனன் திரு தாதை செவ்வி – மூவருலா:3 98/1
திரு பதுமாபதி இ திருமார்பில் – மூவருலா:3 107/1
செந்தாமரை கண் திரு நெடுமால் வந்தானை – மூவருலா:3 127/2
திரு கொள்ளும் மார்பற்கு காமவேள் செவ்வேள் – மூவருலா:3 170/1
திரு அஞ்சு கோலத்தாள் செவ்வியால் எல்லாம் – மூவருலா:3 207/1
கொடாத திரு நோக்கம் முற்றும் கொடுத்து – மூவருலா:3 215/1
புரப்பாரே ஆக்கும் புகர்மா திரு குலத்து – மூவருலா:3 256/2
செம்மை கவர்ந்த திரு கண்ணும் மெய்ம்மையே – மூவருலா:3 295/2
எடுப்ப எழுவாள் இரு திரு தோள் மாலை – மூவருலா:3 306/1
வருத்தம் திரு மனத்து வைத்தே திரு தடம் – மூவருலா:3 315/2
வருத்தம் திரு மனத்து வைத்தே திரு தடம் – மூவருலா:3 315/2
தோளும் திரு மார்பும் நீங்கா துணைவியரில் – மூவருலா:3 316/1
தேறும் திருவை திரு அவதாரங்கள்-தோறும் – மூவருலா:3 327/1
மை விடா நோக்கி திரு கை மலரணை – மூவருலா:3 329/1
பேறும் திரு அருளும் எய்தி அவர் பெயர – மூவருலா:3 349/1
அணியும் திரு தாள் அபயன் பணி வலய – மூவருலா:3 352/2
நல் போர் மடந்தை திரு தோளை நாமுடைய – மூவருலா:3 366/1
சேல் தாக்கால் மீளும் திரு நாடா நீ தரும் மால் – மூவருலா:3 373/1
தண் அம் துழாய் பண்டு சாத்தும் திரு தாமம் – மூவருலா:3 382/1
பள்ளியறை பாற்கடலே பண்டு திரு துயில்கூர் – மூவருலா:3 383/1

மேல்

திருக்காம (1)

கோயில் திருக்காம கோட்டமும் அ கோயில் – மூவருலா:3 32/1

மேல்

திருக்காமக்கோட்டம் (1)

திருக்காமக்கோட்டம் திகழ்வித்து அருக்கர் – மூவருலா:2 56/2

மேல்

திருக்குலத்து (1)

செயிர் கரங்கள் வேண்டாள் திருக்குலத்து வெய்யோன் – மூவருலா:3 192/1

மேல்

திருக்கை (1)

உண்டு ஆற்றிய வேங்கை வைக்க ஒரு திருக்கை
செண்டால் கிரி திரித்த சேவகனை தண்டாத – மூவருலா:1 155/1,2

மேல்

திருச்சுற்றுமாளிகையும் (1)

வாயில் திருச்சுற்றுமாளிகையும் தூய செம்பொன்னில் – மூவருலா:3 32/2

மேல்

திருத்தில்லை (1)

பரமர் திருத்தில்லை பார்த்தோன் நரபதியர் – மூவருலா:2 22/2

மேல்

திருத்திவிட (1)

திருத்திவிட விடாய் தீர்ந்தாள் ஒருத்தி – மூவருலா:2 177/2

மேல்

திருத்தொங்கல் (1)

பள்ளி திருத்தொங்கல் சோலை பகல் விலக்க – மூவருலா:2 83/1

மேல்

திருத்தோற்றம் (1)

செறிந்து விடாத திருத்தோற்றம் முற்றும் – மூவருலா:3 119/1

மேல்

திருந்த (1)

தொல் ஆர்கலி வலையம் தோள்வலையம் முன் திருந்த
வில்லால் நடு உள்ள வெற்பு எடுத்தோன் ஒல்லை – மூவருலா:2 16/1,2

மேல்

திருந்தா (1)

இருந்த வட வரைகள் எல்லாம் திருந்தா – மூவருலா:1 290/2

மேல்

திருந்திய (3)

அருந்த தெவிட்டா அமுதம் திருந்திய – மூவருலா:1 267/2
மருங்கு வருகின்ற மாரன் திருந்திய – மூவருலா:2 242/2
பெருந்தேவியார்க்கு பெறலாம் திருந்திய – மூவருலா:2 369/2

மேல்

திருந்து (2)

தேரின் அகலும் திருந்து அல்குல் கண்டிலன் – மூவருலா:2 169/1
திருந்து மதனன் திரு தாதை செவ்வி – மூவருலா:3 98/1

மேல்

திருநடனம் (1)

தில்லை திருநடனம் சிந்தித்து வல்லவர் – மூவருலா:3 47/2

மேல்

திருநாமம் (1)

திருநாமம் நின்று சிறக்க வரும் நாளில் – மூவருலா:3 54/2

மேல்

திருநீற்று (1)

செவ்வி நுதலின் திருநீற்று புண்டரம் – மூவருலா:2 74/1

மேல்

திருப்பவளம் (1)

ஊதும் திருப்பவளம் உள் கொண்டு சீத – மூவருலா:3 340/2

மேல்

திருப்பவனி (2)

இறைவன் திருப்பவனி என்றாள் பிறை_நுதலும் – மூவருலா:3 189/2
திருப்பவனி முன் விரைந்து செல்வாள் உருப்ப – மூவருலா:3 320/2

மேல்

திருப்பள்ளி (1)

கோவை திருப்பள்ளி தொங்கல் குழாம் கிளிக்கும் – மூவருலா:2 132/1

மேல்

திருப்பாவையால் (1)

கோவையான் முக்குவட்டு குன்றாய் ஒரு திருப்பாவையால்
கொல்லி பனி வரையாய் ஓவாது – மூவருலா:3 66/1,2

மேல்

திருமகள் (2)

திருமகள் போல திளைப்பாள் இரு நிலம் – மூவருலா:3 317/2
போந்த திருமகள் போல் இருப்பாள் வேந்தர் – மூவருலா:3 351/2

மேல்

திருமகளை (1)

திளைக்கும் திருமகளை வாவியில் சேவித்து – மூவருலா:3 294/1

மேல்

திருமகன் (1)

திருமகன் சீராசராசன் கதிரோன் – மூவருலா:3 34/1

மேல்

திருமஞ்சனம் (1)

பொன்னி திருமஞ்சனம் ஆடி பூசுரர் கை – மூவருலா:1 41/1

மேல்

திருமரபுக்கு (1)

தொல்லை திருமரபுக்கு எல்லாம் தொழு குலமாம் – மூவருலா:3 47/1

மேல்

திருமன்றம் (1)

கோதிலா தேறல் குனிக்கும் திருமன்றம்
காதலால் பொன் வேய்ந்த காவலனும் தூதற்கா – மூவருலா:1 16/1,2

மேல்

திருமார்பில் (2)

செம் கோகனகை திருமார்பில் அன்றியே – மூவருலா:3 106/1
திரு பதுமாபதி இ திருமார்பில்
இருப்பது காட்டு-மின் என்பார் சிரித்து எதிரே – மூவருலா:3 107/1,2

மேல்

திருமாலே (1)

செய்ய கரிய திருமாலே வையம் – மூவருலா:1 343/2

மேல்

திருமாலை (2)

செய்ய கரிய திருமாலை தையலும் – மூவருலா:1 158/2
ஐந்து சுரர் தருவும் ஐந்து திருமாலை
தந்து தொழ எழுந்து சாத்தினாள் மைந்தனும் – மூவருலா:3 270/1,2

மேல்

திருமுன்பு (1)

சென்றாள் திருமுன்பு செம் தளிர் கை குவித்து – மூவருலா:2 160/1

மேல்

திருவாய்மலர்ந்தான் (1)

மாதங்கராசி திருவாய்மலர்ந்தான் ஓதி – மூவருலா:3 332/2

மேல்

திருவிற்கே (1)

திருவிற்கே குற்றேவல் செய்வான் பொரு வில் கை – மூவருலா:3 301/2

மேல்

திருவுடனே (1)

முயங்கும் திருவுடனே முந்நீர் கொடுத்த – மூவருலா:1 48/1

மேல்

திருவே (3)

செய்ய ஒரு திருவே ஆளும் சிறுமைத்தோ – மூவருலா:1 108/1
தீட்டற்கு அரிய திருவே திரு மாலை – மூவருலா:2 32/1
திலக நுதலில் திருவே என்று ஓதி – மூவருலா:2 313/1

மேல்

திருவை (1)

தேறும் திருவை திரு அவதாரங்கள்-தோறும் – மூவருலா:3 327/1

மேல்

திரை (3)

தள்ளும் திரை பொன்னி தந்தோனும் தெள் அருவி – மூவருலா:1 12/2
மெய் தழுவிக்கொள்ள விடுவாயோ மொய் திரை சூழ் – மூவருலா:2 367/2
திரை ஏழின் முத்தின் திரளும் தரை ஏழின் – மூவருலா:3 139/2

மேல்

திரை-தொறும் (1)

திரை-தொறும் தோன்றும் திரு குழாம் போன்றும் – மூவருலா:1 96/1

மேல்

திரைத்து (1)

காடு திரைத்து எறியும் காவிரியும் பாடுக என – மூவருலா:1 273/2

மேல்

திரையரமாதரும் (1)

திரையரமாதரும் சேவிப்பாள் மேரு – மூவருலா:3 319/1

மேல்

திரையின் (2)

சிந்த விசிறு திரையின் நுரையூடு – மூவருலா:1 204/1
முரசு ஒரு மூன்று முழங்க திரையின் – மூவருலா:3 49/2

மேல்

திரையை (1)

சிலையால் வழிபடு தெள் திரையை பண்டு – மூவருலா:3 12/1

மேல்

தில்லை (2)

தில்லை திரு மன்ற முன்றில் சிறுதெய்வ – மூவருலா:2 39/1
தில்லை திருநடனம் சிந்தித்து வல்லவர் – மூவருலா:3 47/2

மேல்

திலக (2)

திலக முகாம்புயத்து சேரா பலவும் – மூவருலா:1 126/2
திலக நுதலில் திருவே என்று ஓதி – மூவருலா:2 313/1

மேல்

திலகம் (1)

திலகம் குறுவியரால் தேம்ப பல குதலை – மூவருலா:3 360/2

மேல்

திலகமும் (1)

திலகமும் மான்மதமும் செஞ்சாந்தும் எல்லா – மூவருலா:3 325/1

மேல்

திலகன் (1)

தவன குல திலகன் தன் பெருந்தேவி – மூவருலா:3 39/1

மேல்

திவ்யாபரணம் (1)

அடுத்தடுத்து ஏந்திய திவ்யாபரணம்
எடுத்தெடுத்து ஒப்பித்து எழுந்து சுடர் கதிரோன் – மூவருலா:2 267/1,2

மேல்

திவடர (1)

குவடு பட எழுச்சிகொண்டும் திவடர – மூவருலா:1 176/2

மேல்

திவலை (2)

கூசும் பனி திவலை கொண்டுபோம் என் உயிர் நீ – மூவருலா:1 297/1
வீசும் திவலை விசும்பு கூர் மங்குலால் – மூவருலா:2 89/1

மேல்

திவலையால் (1)

வீசும் மத திவலையால் மீட்டேன் மூசிய – மூவருலா:1 297/2

மேல்

திளைக்கும் (2)

வளைக்கும் இளநிலா மான திளைக்கும் – மூவருலா:2 64/2
திளைக்கும் திருமகளை வாவியில் சேவித்து – மூவருலா:3 294/1

மேல்

திளைத்துழி (1)

இளைக்கும் கொடி இடையார் ஏத்தி திளைத்துழி – மூவருலா:3 294/2

மேல்

திளைப்பாள் (1)

திருமகள் போல திளைப்பாள் இரு நிலம் – மூவருலா:3 317/2

மேல்

திறக்க (1)

நெருங்க மகளிர் நிறம் திறக்க எய்து – மூவருலா:2 242/1

மேல்

திறத்தால் (1)

கொத்து குடை ஒக்க கூடுமே இ திறத்தால் – மூவருலா:3 384/2

மேல்

திறத்து (2)

பொரு திறத்து சேடியர்-தம் போர் தொலைய தானே – மூவருலா:1 202/1
இரு திறத்து கந்துகமும் ஏந்தி பெரிதும் – மூவருலா:1 202/2

மேல்

திறந்து (1)

பருத்த கடாம் திறந்து பாய பெருக்கத்து – மூவருலா:1 60/2

மேல்

திறப்ப (1)

காமித்து இதழின் கடை திறப்ப நேமி – மூவருலா:2 269/2

மேல்

திறல் (1)

வெம் திறல் மாரனும் தன் வில்லின் நாண் முந்த – மூவருலா:1 275/2

மேல்

திறன் (1)

திறன் மதனும் அம்பு தெரிந்தான் விறலியொடும் – மூவருலா:1 276/2

மேல்

திறைகொண்டு (1)

வேழம் திறைகொண்டு மீண்ட கோன் சூழி – மூவருலா:3 20/2

மேல்

திறையளந்த (1)

தென்னர் திறையளந்த முத்தில் சில பூண்டு – மூவருலா:1 36/1

மேல்

தின் (1)

செம் கை கரும்பு ஒழிய தின் கைக்கு அனங்கனார் – மூவருலா:1 303/1

மேல்

தினகரன் (1)

அனகன் அதுலன் அமலன் தினகரன் – மூவருலா:2 157/2

மேல்