கு – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குங்கும 1
குட 1
குடக்கூரில் 1
குடக 2
குடகடற்கு 1
குடகரையும் 1
குடங்கள் 2
குடம் 2
குடிவாங்க 1
குடை 9
குடையாய 1
குடையான் 1
குடையில் 2
குடையும் 1
குடையோன் 1
குண்டலமும் 1
குணகடலே 1
குணம் 1
குத்தும் 2
குதம்பை 1
குதலை 3
குதி 1
குதிக்கும் 2
குதுகலத்தால் 1
குந்தம் 1
குந்தி 1
கும்பிட்டாள் 1
கும்பிட்டு 1
குமரி 4
குமிழி 1
குமிழின் 1
குமுத 2
குமுற 1
குயத்து 1
குயில் 6
குயிற்கும் 1
குயிற்கே 1
குயிற்றி 2
குயின்ற 2
குயின்று 1
குரகதம் 1
குரல் 3
குரலினவா 1
குரவ 1
குரவர்க்கும் 1
குரவு 1
குரவும் 1
குரவை 1
குரிசில் 1
குரிசிலுடன் 1
குரு 1
குருகுகாள் 1
குருசில் 2
குரைக்கும் 1
குல 12
குலத்தில் 1
குலத்திற்கும் 1
குலத்து 6
குலத்தை 1
குலத்தோன் 1
குலம் 9
குலமகளை 1
குலமங்கை 1
குலமாம் 1
குலமும் 2
குலமைந்தன் 1
குலா 1
குலாவுதலும் 1
குலிச 1
குலைத்து 1
குலைப்ப 1
குலைய 1
குலோத்துங்கசோழற்கு 1
குலோத்துங்கசோழன் 2
குலோத்துங்கசோழனை 1
குவடு 4
குவலயங்கள் 1
குவளை 5
குவி 3
குவித்து 3
குவிப்பார் 1
குழம்பும் 1
குழல் 8
குழலார் 1
குழலாள் 1
குழலின் 1
குழலும் 1
குழவி 2
குழற்கு 1
குழறி 1
குழன்று 1
குழாங்கள் 1
குழாத்து 1
குழாத்தோர்-தம் 1
குழாம் 4
குழாம்கொண்டு 1
குழை 16
குழைத்தாய் 1
குழைத்து 1
குழைந்தும் 1
குழைய 1
குழையாதே 1
குழையார் 1
குழையாள் 1
குளத்தில் 1
குளரி 1
குளிப்ப 2
குளிர் 2
குளிர்க்கும் 1
குளிர்ந்து 1
குளிராத 1
குற்றுடைவாள் 1
குற்றேவல் 1
குறங்கணியும் 1
குறங்கினாள் 2
குறிக்கொள்ளும் 1
குறித்து 1
குறித்துக்கொண்டு 1
குறியாதே 1
குறுக 1
குறுகினாள் 2
குறுகுதலும் 1
குறுகும் 1
குறுகுவாள் 2
குறும் 2
குறும்_தொடி 1
குறும்பு 3
குறுமுறுவல் 1
குறுவியரால் 1
குறை 4
குறைவனை 1
குன்ற 1
குன்றத்து 1
குன்றம் 1
குன்றாத 1
குன்றாய் 2
குன்று 1
குன்றே 1
குனிக்கும் 1
குனித்து 1
குனியாதோ 1
குனியும் 1

குங்கும (1)

கச்சை முனியும் கன தனமும் குங்கும
சச்சை கமழும் தடம் தோளும் நிச்சம் உரு – மூவருலா:3 350/1,2

மேல்

குட (1)

ஆடி குட கூத்தும் ஆடினார் பாடியில் – மூவருலா:3 338/2

மேல்

குடக்கூரில் (1)

கோட்டாற்றில் கொங்கில் குடக்கூரில் கொப்பத்தில் – மூவருலா:3 264/1

மேல்

குடக (2)

கொள்ளும் குடக குவடு ஊடறுத்து இழிய – மூவருலா:1 12/1
கொங்கை குலைத்து குடக குவடு இடித்த – மூவருலா:1 88/1

மேல்

குடகடற்கு (1)

குடகடற்கு சார்பு குணகடலே ஆக்கும் – மூவருலா:3 14/1

மேல்

குடகரையும் (1)

கொங்கரையும் ஏனை குடகரையும் தம் கோன் – மூவருலா:1 72/2

மேல்

குடங்கள் (2)

இடம் தூர வந்தும் இணைய குடங்கள் – மூவருலா:3 341/2
எழஎழ மேன்மேல் எழுந்தும் குடங்கள்
விழவிழ மேன்மேல் விழுந்தும் பழகிய – மூவருலா:3 342/1,2

மேல்

குடம் (2)

குடம் கொண்டு நின்றது என கூற தடம்கொண்டு – மூவருலா:1 232/2
கொங்கை இணை நீர் குடம் நிரைத்து எங்கும் – மூவருலா:3 229/2

மேல்

குடிவாங்க (1)

விசும்பு குடிவாங்க வீங்க பசும் சுடர் – மூவருலா:2 322/2

மேல்

குடை (9)

கோட்டாறும் கொல்லமும் கொண்ட குடை நுளம்பன் – மூவருலா:1 87/1
தானை பிடித்து அலைக்கும் போதில் தனி குடை கீழ் – மூவருலா:1 210/1
காத்து குடை ஒன்றால் எட்டு திசை கவித்த – மூவருலா:1 330/1
கொற்ற குடை கீழ் வட மேரு குன்று அனைய – மூவருலா:2 330/1
ஏழும் செலவு அயரேன் எம் கோவே நின் குடை கீழ் – மூவருலா:2 365/1
குடை நிலவும் சக்ரகிரி கோல உடைய தன் – மூவருலா:3 63/2
பொருவும் குடை பாரீர் கூடல் – மூவருலா:3 92/2
முத்த குடை கவித்தும் முன் கவித்த மாணிக்க – மூவருலா:3 384/1
கொத்து குடை ஒக்க கூடுமே இ திறத்தால் – மூவருலா:3 384/2

மேல்

குடையாய (1)

குடையாய வெள்ளமும் கூடி அடைய – மூவருலா:2 239/2

மேல்

குடையான் (1)

ஒரு குடையான் போந்தான் உலா – மூவருலா:2 387/2

மேல்

குடையில் (2)

முடியின் மணி வெயிலும் முத்த குடையில்
வடியும் நிலவும் மலைய படி_இல் – மூவருலா:2 72/1,2
நீடும் குடையில் தரித்த பிரான் என்பர் நித்தநித்தம் – மூவருலா:2 389/2

மேல்

குடையும் (1)

முடியும் சிங்காதனமும் முத்த குடையும்
படியும் அரசும் பணித்தான் பிடியும் – மூவருலா:3 273/1,2

மேல்

குடையோன் (1)

தண் தரள கொற்ற தனி குடையோன் பண்டு அறியா – மூவருலா:3 386/2

மேல்

குண்டலமும் (1)

கோட மணி மகர குண்டலமும் ஆடிய – மூவருலா:3 322/2

மேல்

குணகடலே (1)

குடகடற்கு சார்பு குணகடலே ஆக்கும் – மூவருலா:3 14/1

மேல்

குணம் (1)

அணங்க அணங்காள் அகலாள் குணம் காவல் – மூவருலா:2 130/2

மேல்

குத்தும் (2)

மலை கோடு அனைத்தும் மடித்து இடிய குத்தும்
கொலை கோட்டு வெம் கால கோபம் அலைத்து ஓட – மூவருலா:1 56/1,2
குத்தும் கடா களிற்று போந்தான் கொடை சென்னி – மூவருலா:1 342/1

மேல்

குதம்பை (1)

கொடுக்கும் சுடிகை குதம்பை கடுக்கும் – மூவருலா:2 279/2

மேல்

குதலை (3)

குதலை குழறி குயிற்கும் கிளிக்கும் – மூவருலா:2 345/1
சொல் குதலை கோகுலங்கள் ஆர்க்கவே சோளேசன் – மூவருலா:3 165/1
திலகம் குறுவியரால் தேம்ப பல குதலை – மூவருலா:3 360/2

மேல்

குதி (1)

குல பதும ராக பதி குதி கொள்ளும் – மூவருலா:3 278/1

மேல்

குதிக்கும் (2)

குதிக்கும் மத சுவடு கோத்து மதிக்கும் – மூவருலா:3 242/2
நின்று குதிக்கும் மதத்தின் நிலம் நெகிழ்ந்து எக்குன்றும் – மூவருலா:3 251/1

மேல்

குதுகலத்தால் (1)

விதுகுலநாயகி சேய் என்பார் குதுகலத்தால் – மூவருலா:2 112/2

மேல்

குந்தம் (1)

குந்தம் ஒசித்ததுவும் கொற்ற திரு தோளால் – மூவருலா:2 370/1

மேல்

குந்தி (1)

இந்து சிலாதலத்தில் ஏறினாள் குந்தி – மூவருலா:2 271/2

மேல்

கும்பிட்டாள் (1)

கோரம் தெரியவும் கும்பிட்டாள் வீரன் – மூவருலா:3 130/2

மேல்

கும்பிட்டு (1)

கூத்து களி கூர கும்பிட்டு போத்தின் மேல் – மூவருலா:2 38/2

மேல்

குமரி (4)

வாரி குமரி முதல் மந்தாகினி அளவும் – மூவருலா:1 82/1
வளரும் ஒரு குமரி வல்லி கிளரும் – மூவருலா:1 145/2
இறைவன் அகளங்கன் எம் கோன் குமரி
துறைவன் நிருப குல துங்கன் முறைமையால் – மூவருலா:1 182/1,2
அம் கண் பழம் குமரி ஆற்றிற்கும் தங்கள் – மூவருலா:1 292/2

மேல்

குமிழி (1)

நஞ்சும் குமிழி எழும் நாள் என்பார் பஞ்சவனே – மூவருலா:2 118/2

மேல்

குமிழின் (1)

இடை போய் குமிழின் மலர் வந்து இறங்க – மூவருலா:2 350/1

மேல்

குமுத (2)

குமுத நறு முகைக்கே கூறோ நமது கார் – மூவருலா:2 183/2
கொள்ளை குமுத மலரும் குழை இள – மூவருலா:3 289/1

மேல்

குமுற (1)

கொடியில் மகரம் குமுற நெடிய – மூவருலா:3 154/2

மேல்

குயத்து (1)

எல்லா பருதியும் போல் எறிப்ப கொல் குயத்து – மூவருலா:2 281/2

மேல்

குயில் (6)

நீல குயில் இனங்காள் நீர் போலும் சோணாட்டு – மூவருலா:1 252/1
மயிற்கு மலை என்று மன்னும் குயில் கிளவி – மூவருலா:2 133/2
அலங்கல் அடவி குயில் குலம் ஆர்ப்ப – மூவருலா:3 156/1
வேனிற்கு அணிய குயில் போன்றும் வீழ் தாரை – மூவருலா:3 190/1
ஊழி குயில் காய்ந்து ஒரு புலரி கூவிய – மூவருலா:3 197/1
கொடும் குழை மின்ன குயில் கொழுத கோத – மூவருலா:3 201/1

மேல்

குயிற்கும் (1)

குதலை குழறி குயிற்கும் கிளிக்கும் – மூவருலா:2 345/1

மேல்

குயிற்கே (1)

குயிற்கே விதித்ததோ தேன் இமிர் – மூவருலா:2 184/2

மேல்

குயிற்றி (2)

கோலத்தால் கோயில் பணி குயிற்றி சூலத்தான் – மூவருலா:2 46/2
குயிற்றி புறம்பில் குறும்பு அனைத்தும் – மூவருலா:3 33/1

மேல்

குயின்ற (2)

கொத்து குயின்ற கொடி பவள பந்தத்தின் – மூவருலா:1 141/1
கோடும் கொலை குயின்ற சேடன் குரு மணி வேய்ந்து – மூவருலா:1 307/1

மேல்

குயின்று (1)

தாமே குயின்று தடம் கோளும் நாளும் சூழ் – மூவருலா:3 62/1

மேல்

குரகதம் (1)

குரகதம் ஏழும் முழுகி குளிப்ப – மூவருலா:2 349/1

மேல்

குரல் (3)

உலம்பு குரல் அஞ்சாது ஓட கலம் பல – மூவருலா:2 327/2
பேர் பாடும் புள் வாயில் பெய்க என்னும் ஈர் குரல் – மூவருலா:3 195/2
உய்ய ஒரு குரல் வந்து ஊதாதோ ஐயம் – மூவருலா:3 313/2

மேல்

குரலினவா (1)

அரிந்த குரலினவா அம் சீறடிக்கு – மூவருலா:1 207/1

மேல்

குரவ (1)

பயக்கும் மலர் குரவ பந்தர் படப்பை – மூவருலா:1 249/1

மேல்

குரவர்க்கும் (1)

மேலை குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும் – மூவருலா:3 43/1

மேல்

குரவு (1)

பாவைகள் பைம் குரவு ஏந்த பசும் கிளியும் – மூவருலா:1 139/1

மேல்

குரவும் (1)

குரவும் மர பாவை கொள்ள புரி குழல் – மூவருலா:3 204/2

மேல்

குரவை (1)

முடை கை எதிர் குரவை கோத்தாய் முரல் யாழ் – மூவருலா:2 252/1

மேல்

குரிசில் (1)

குரிசில் எதிர் கவர்ந்து கொண்டான் தெரிவு அரிய – மூவருலா:3 212/2

மேல்

குரிசிலுடன் (1)

குரிசிலுடன் வந்து கூட தெருவில் – மூவருலா:3 267/2

மேல்

குரு (1)

கோடும் கொலை குயின்ற சேடன் குரு மணி வேய்ந்து – மூவருலா:1 307/1

மேல்

குருகுகாள் (1)

குருகுகாள் என்று குழைந்தும் கருகிய – மூவருலா:1 251/2

மேல்

குருசில் (2)

ஒருவர் என வேட்கை ஒத்தார் குருசில் – மூவருலா:2 331/2
குருசில் வரு தமரம் கூற பரிபுர – மூவருலா:2 347/2

மேல்

குரைக்கும் (1)

எழ குரைக்கும் பேழ் வாய் இரும் கூற்றுக்கு ஏற்ப – மூவருலா:2 6/1

மேல்

குல (12)

துறைவன் நிருப குல துங்கன் முறைமையால் – மூவருலா:1 182/2
மன்னன் குல பொன்னி வைகலும் ஆடுதிரால் – மூவருலா:1 250/1
பலரும் பணிந்து பரவ குல கிரி சூழ் – மூவருலா:1 285/2
வேத்து குல கிரியின் மேருவே போர் தொழிலால் – மூவருலா:1 330/2
அலகை இகந்த அசல குல வச்ர – மூவருலா:2 41/1
முது குல மன்னர் முடி வணங்க வந்த – மூவருலா:2 112/1
நிகழ் நிலா அன்று நிருப குல துங்கன் – மூவருலா:2 174/1
அலகு_இல் குல நீல ரத்னாபரணம் – மூவருலா:2 207/1
தவன குல திலகன் தன் பெருந்தேவி – மூவருலா:3 39/1
ஓகை விளைக்கும் உபய குல ரத்ன – மூவருலா:3 41/1
கோளின் ஒழுங்கு மழுங்க குல ரத்ன – மூவருலா:3 60/1
குல பதும ராக பதி குதி கொள்ளும் – மூவருலா:3 278/1

மேல்

குலத்தில் (1)

இந்து மரபில் இருக்கும் திரு குலத்தில்
வந்து மனு குலத்தை வாழ்வித்த பைம் தளிர் கை – மூவருலா:2 30/1,2

மேல்

குலத்திற்கும் (1)

திங்கள் குலத்திற்கும் தெய்வ பொதியிற்கும் – மூவருலா:1 292/1

மேல்

குலத்து (6)

துயிலும் கவர்ந்தது நின் தொல் குலத்து வேந்தர் – மூவருலா:1 336/1
சென்று கனை கடல் தூர்த்து திரு குலத்து
நின்ற பழி துடைப்பாய் நீ என்பார் இன்றளவும் – மூவருலா:2 117/1,2
வளவர் திரு குலத்து அந்தோ அளவிறந்த – மூவருலா:2 255/2
சேய பெரிய திரு குலத்து நாயகன் – மூவருலா:3 29/2
கோழியின் சோழ குலத்து ஒருவன் முன் கடைந்த – மூவருலா:3 72/1
புரப்பாரே ஆக்கும் புகர்மா திரு குலத்து – மூவருலா:3 256/2

மேல்

குலத்தை (1)

வந்து மனு குலத்தை வாழ்வித்த பைம் தளிர் கை – மூவருலா:2 30/2

மேல்

குலத்தோன் (1)

வந்து மறுகில் ஒரு நாள் மனு குலத்தோன்
தந்த பெரிய தனிமைக்-கண் செந்தமிழ் – மூவருலா:1 241/1,2

மேல்

குலம் (9)

வலம்புரி ஊத வளை குலம் ஆர்ப்ப – மூவருலா:1 66/1
ஆதி மனு குலம் இவ் அண்ணலால் மேம்படுகை – மூவருலா:1 111/1
கண்ணும் மனமும் கழுநீர் குலம் முழுதும் – மூவருலா:1 129/1
வார்ந்து மகர வய மீன் குலம் முழுதும் – மூவருலா:1 212/1
புரவி குலம் முழுதும் போத விரவி – மூவருலா:2 94/2
களிக்கும் மயில் குலம் கூத்தாட கண்டும் – மூவருலா:2 273/1
கிளி குலம் பாட்டு எடுப்ப கேட்டும் பளிக்கு உருவ – மூவருலா:2 273/2
கோலும் மதாணி குலம் எல்லாம் மேலோன் – மூவருலா:2 348/2
அலங்கல் அடவி குயில் குலம் ஆர்ப்ப – மூவருலா:3 156/1

மேல்

குலமகளை (1)

குலமகளை கைப்பிடித்த கோவும் உலகு அறிய – மூவருலா:1 10/2

மேல்

குலமங்கை (1)

கோது_இல் குலமங்கை கொங்கையினும் போதில் – மூவருலா:1 34/2

மேல்

குலமாம் (1)

தொல்லை திருமரபுக்கு எல்லாம் தொழு குலமாம்
தில்லை திருநடனம் சிந்தித்து வல்லவர் – மூவருலா:3 47/1,2

மேல்

குலமும் (2)

பின்னர் பெரும் சக்ரவாக பெரும் குலமும்
அன்ன குலமும் அலம்வர பின்னரும் – மூவருலா:3 283/1,2
அன்ன குலமும் அலம்வர பின்னரும் – மூவருலா:3 283/2

மேல்

குலமைந்தன் (1)

காதல் குலமைந்தன் காசிபனும் மேதக்க – மூவருலா:1 2/2

மேல்

குலா (1)

நிலா வட்டம் நின்று எறிக்க நேரோ குலா வலைஞர் – மூவருலா:3 372/2

மேல்

குலாவுதலும் (1)

கொண்டு பலர்க்கும் குலாவுதலும் வண்டு சூழ் – மூவருலா:1 321/2

மேல்

குலிச (1)

ஊரா குலிச விடை_ஊர்ந்தோன் சோரா – மூவருலா:2 3/2

மேல்

குலைத்து (1)

கொங்கை குலைத்து குடக குவடு இடித்த – மூவருலா:1 88/1

மேல்

குலைப்ப (1)

குறும் தொடி காந்தள் குலைப்ப செறிந்து – மூவருலா:2 353/2

மேல்

குலைய (1)

குலைய பொருது ஒரு நாள் கொண்ட பரணி – மூவருலா:1 69/1

மேல்

குலோத்துங்கசோழற்கு (1)

கோல தார் மௌலி குலோத்துங்கசோழற்கு
ஞாலாத்தார் எல்லார்க்கும் நாயகற்கு நீலத்தின் – மூவருலா:2 199/1,2

மேல்

குலோத்துங்கசோழன் (2)

கொற்ற குலோத்துங்கசோழன் குவலயங்கள் – மூவருலா:2 29/1
சூடும் குலோத்துங்கசோழன் என்றே எமை சொல்லுவரே – மூவருலா:2 389/4

மேல்

குலோத்துங்கசோழனை (1)

தொக்க கவிகை குலோத்துங்கசோழனை
மிக்க பராந்தகனை மீனவனை புக்கார் – மூவருலா:2 129/1,2

மேல்

குவடு (4)

கொள்ளும் குடக குவடு ஊடறுத்து இழிய – மூவருலா:1 12/1
கொங்கை குலைத்து குடக குவடு இடித்த – மூவருலா:1 88/1
குவடு பட எழுச்சிகொண்டும் திவடர – மூவருலா:1 176/2
முலையாய் வளரும் முரண் குவடு கொண்டு – மூவருலா:2 213/1

மேல்

குவலயங்கள் (1)

கொற்ற குலோத்துங்கசோழன் குவலயங்கள்
முற்ற புரக்கும் முகில் வண்ணன் பொன் துவரை – மூவருலா:2 29/1,2

மேல்

குவளை (5)

பூம் குவளை மாலை புனைக என்னும் தேம் கமலத்து – மூவருலா:2 135/2
கவள களிற்று எளிதில் கண்டு குவளை – மூவருலா:2 362/2
தவள த்ரிபுண்டரம் சாத்தி குவளை பூம் – மூவருலா:3 45/2
பொன் மாலை போதகத்தை சூட்டி பொலன் குவளை
நன் மாலை சாத்தினான் நாயகனும் தன் மார்பில் – மூவருலா:3 307/1,2
நறவு குவளை நறு மலர் தோய்த்து உண்ணும் – மூவருலா:3 357/1

மேல்

குவி (3)

கோட்டி இருக்கும் குவி முலையாள் நாட்ட – மூவருலா:1 195/2
அலரும் முகமும் குவி கையும் ஆகி – மூவருலா:2 287/1
கவிகையும் தானும் கடந்தான் குவி முலை – மூவருலா:3 274/2

மேல்

குவித்து (3)

கொழுந்து எழு கற்பக சாதி குவித்து
தொழும்-தொறும் மன்னர் சொரிய எழுந்து உள – மூவருலா:2 99/1,2
சென்றாள் திருமுன்பு செம் தளிர் கை குவித்து
நின்றாள் இனி வறிதே நிற்குமே என்றாலும் – மூவருலா:2 160/1,2
தெய்வ பெருமாளும் சேவடி முன் குவித்து
கை வைத்து நின்றவளை கண்ணுற்றான் தையல் – மூவருலா:2 358/1,2

மேல்

குவிப்பார் (1)

செம் கை குவிப்பார் சிலர் செறிய அங்கு ஒருத்தி – மூவருலா:1 112/2

மேல்

குழம்பும் (1)

பொன்னி புகாரின் பொலன் குழம்பும் வல்லத்தின் – மூவருலா:2 339/1

மேல்

குழல் (8)

காமம் கலக்க கலங்கி குழல் சரிய – மூவருலா:1 160/1
புக்கு தொடை மடக்கி போயினான் மை குழல் – மூவருலா:1 162/2
துஞ்சும் துயில் இழந்த தண்டர் குழல் துளையில் – மூவருலா:2 118/1
ஆய் குழல் என்றால் அதுவும் அவன் ஊதும் – மூவருலா:2 173/1
வேய் குழல் என்று விளம்பியும் தீ கோள் – மூவருலா:2 173/2
அறிந்து பிறந்த அறிவோ நெறிந்த குழல் – மூவருலா:3 119/2
குரவும் மர பாவை கொள்ள புரி குழல் – மூவருலா:3 204/2
பாடி குழல் ஊதி பாம்பின் பட கூத்தும் – மூவருலா:3 338/1

மேல்

குழலார் (1)

பரிக்குமே கண்கள் படுமே புரி குழலார் – மூவருலா:2 261/2

மேல்

குழலாள் (1)

பெரு விருந்து பேணும் குழலாள் பொரு களிற்றின் – மூவருலா:1 240/2

மேல்

குழலின் (1)

குழலின் இசை கவர்ந்துகொண்டாள் நிழல் விரவு – மூவருலா:1 135/2

மேல்

குழலும் (1)

வீணையும் யாழும் குழலும் விசி முழவும் – மூவருலா:1 102/1

மேல்

குழவி (2)

குளிராத திங்கள்_குழவி அளிகள் – மூவருலா:2 125/2
குழவி எயிறு எழுச்சி என்றும் பழகி – மூவருலா:3 137/2

மேல்

குழற்கு (1)

வண்டலிடு நாவி வார் குழற்கு மாறுடைந்து – மூவருலா:2 229/1

மேல்

குழறி (1)

குதலை குழறி குயிற்கும் கிளிக்கும் – மூவருலா:2 345/1

மேல்

குழன்று (1)

நெறிந்து கடை குழன்று நெய்த்து இருண்டு நீண்டு – மூவருலா:1 238/1

மேல்

குழாங்கள் (1)

நிரைக்கு நிரை முரல நீல குழாங்கள்
இரைப்பின் மொகுமொகு என்ன விரை சுருள் – மூவருலா:2 106/1,2

மேல்

குழாத்து (1)

பேதை குழாத்து ஒரு பேதை சில பழம் – மூவருலா:3 115/1

மேல்

குழாத்தோர்-தம் (1)

காதல் குழாத்தோர்-தம் கையடையாள் மீது – மூவருலா:3 115/2

மேல்

குழாம் (4)

கொண்டலின் மின்னு குழாம் போன்றும் மண்டும் – மூவருலா:1 95/2
திரை-தொறும் தோன்றும் திரு குழாம் போன்றும் – மூவருலா:1 96/1
கோவை திருப்பள்ளி தொங்கல் குழாம் கிளிக்கும் – மூவருலா:2 132/1
கோயில் உரிமை குழாம் நெருங்கி வாயிலும் – மூவருலா:3 79/2

மேல்

குழாம்கொண்டு (1)

கோ நிரையும் மீள குழாம்கொண்டு மீன் நிரையின் – மூவருலா:3 339/2

மேல்

குழை (16)

தாழும் மகர குழை தயங்க வாழும் – மூவருலா:1 45/2
தாங்கு மட மகளிர் தத்தம் குழை வாங்க – மூவருலா:1 77/1
எறிக்கும் குழை காதிற்கு ஏற்றும் நெறிக்கும் – மூவருலா:1 173/2
மகர குழை காதும் மாதரார் மாமை – மூவருலா:1 185/1
குறித்து குழை அளவும் கொண்டு மறித்து – மூவருலா:1 235/2
துயில் காத்து அரமகளிர் சோர் குழை காத்து உம்பர் – மூவருலா:2 4/1
மகர குழை தோள் மேல் வந்து அசைவ மேரு – மூவருலா:2 71/1
தகரம் கமழ் கதுப்பில் தாழ் குழை தோடு ஆழ் – மூவருலா:2 108/1
புகுதில் வன தெய்வ பூம்_குழை ஆய – மூவருலா:2 188/1
பந்தாடுதும் நாம் பசும்பொன் குழை சென்று – மூவருலா:2 303/1
விடும் குழை ஆர் சென்னி மிலைச்சிய சென்னி – மூவருலா:3 69/1
கொடும் குழை மின்ன குயில் கொழுத கோத – மூவருலா:3 201/1
விடும் குழை தேமாவின் மின்ன நெடும் குழை – மூவருலா:3 201/2
விடும் குழை தேமாவின் மின்ன நெடும் குழை – மூவருலா:3 201/2
அனலும் குழை மகரம் அஞ்ச புடை போய் – மூவருலா:3 218/1
கொள்ளை குமுத மலரும் குழை இள – மூவருலா:3 289/1

மேல்

குழைத்தாய் (1)

தளரும் இடை ஒதுங்க தாழும் குழைத்தாய்
வளரும் ஒரு குமரி வல்லி கிளரும் – மூவருலா:1 145/1,2

மேல்

குழைத்து (1)

கூசினார் சந்தம் பனி நீர் குழைத்து இழைத்து – மூவருலா:1 224/1

மேல்

குழைந்தும் (1)

குருகுகாள் என்று குழைந்தும் கருகிய – மூவருலா:1 251/2

மேல்

குழைய (1)

குழைய நடு ஒடுக்கும் கொங்கையும் தோளும் – மூவருலா:1 260/1

மேல்

குழையாதே (1)

நொந்து தொடாதே குழையாதே செந்தமிழ் – மூவருலா:2 162/2

மேல்

குழையார் (1)

கொடும் குழையார் வீதி குறுக நடுங்காமல் – மூவருலா:3 69/2

மேல்

குழையாள் (1)

கொடுக்கும் மகர குழையாள் அடுத்து – மூவருலா:3 185/2

மேல்

குளத்தில் (1)

கொச்சியில் கோதாவிரி குளத்தில் விச்சியில் – மூவருலா:3 262/2

மேல்

குளரி (1)

சுட்டார் குளரி தொகுத்து எடுத்தார் விட்டாரோ – மூவருலா:1 225/2

மேல்

குளிப்ப (2)

குரகதம் ஏழும் முழுகி குளிப்ப
மரகத சோதி வயங்க புருவ – மூவருலா:2 349/1,2
ஒளித்து குளிப்ப முன் சென்று அழுத்தி – மூவருலா:3 251/2

மேல்

குளிர் (2)

கொற்கை குளிர் முத்த வல்சியும் சோறு அடுகை – மூவருலா:1 119/1
கோள் மாலை கூச குளிர் கொடுப்ப நாள் மாலை – மூவருலா:2 76/2

மேல்

குளிர்க்கும் (1)

அளிக்கும் பெருமானை அஞ்சா குளிர்க்கும் – மூவருலா:2 247/2

மேல்

குளிர்ந்து (1)

கொற்ற கவிகை நிழற்ற குளிர்ந்து இரட்டை – மூவருலா:1 65/1

மேல்

குளிராத (1)

குளிராத திங்கள்_குழவி அளிகள் – மூவருலா:2 125/2

மேல்

குற்றுடைவாள் (1)

பெரும் குற்றுடைவாள் அ பேரொளி மேரு – மூவருலா:3 59/1

மேல்

குற்றேவல் (1)

திருவிற்கே குற்றேவல் செய்வான் பொரு வில் கை – மூவருலா:3 301/2

மேல்

குறங்கணியும் (1)

பட்டும் குறங்கணியும் பட்டிகையும் நூபுரமும் – மூவருலா:3 324/1

மேல்

குறங்கினாள் (2)

கொல்ல திரண்ட குறங்கினாள் எல்லை_இல் – மூவருலா:1 306/2
கோசிகம் ஆக்கும் குறங்கினாள் கூசி – மூவருலா:3 181/2

மேல்

குறிக்கொள்ளும் (1)

தீட்ட முடியாத செவ்வி குறிக்கொள்ளும்
நாட்டம் உறங்காமையும் நல்க மீட்டு – மூவருலா:1 191/1,2

மேல்

குறித்து (1)

குறித்து குழை அளவும் கொண்டு மறித்து – மூவருலா:1 235/2

மேல்

குறித்துக்கொண்டு (1)

தெறித்து ஞிமிறு ஓப்பி செவ்வி குறித்துக்கொண்டு – மூவருலா:2 343/2

மேல்

குறியாதே (1)

கொம்மை வரு முலையும் தோளும் குறியாதே
அம் மென் மருங்குல் பார்த்து அஞ்சாதே தம்முடனே – மூவருலா:2 304/1,2

மேல்

குறுக (1)

கொடும் குழையார் வீதி குறுக நடுங்காமல் – மூவருலா:3 69/2

மேல்

குறுகினாள் (2)

கோமைந்தன் வேழம் குறுகினாள் கோமகனும் – மூவருலா:3 167/2
கொய் பொழில் சென்று குறுகினாள் செய்ய – மூவருலா:3 200/2

மேல்

குறுகுதலும் (1)

வீதி குறுகுதலும் மேல் ஒரு நாள் மா தவத்தோன் – மூவருலா:1 91/2

மேல்

குறுகும் (1)

மறுகு திரு மலர வந்தான் குறுகும் – மூவருலா:2 238/2

மேல்

குறுகுவாள் (2)

கோல மறுகு குறுகுவாள் ஞாலம் – மூவருலா:2 278/2
கொண்டனை என்று குறுகுவாள் கண்டு – மூவருலா:3 359/2

மேல்

குறும் (2)

கூறுமவை இவை என்று குறும்_தொடி – மூவருலா:2 154/1
குறும் தொடி காந்தள் குலைப்ப செறிந்து – மூவருலா:2 353/2

மேல்

குறும்_தொடி (1)

கூறுமவை இவை என்று குறும்_தொடி
வேறு தனி வினவும் வேலைக்-கண் சீறும் – மூவருலா:2 154/1,2

மேல்

குறும்பு (3)

ஏனை முனி குறும்பு கொல்ல இகல் மாரன் – மூவருலா:1 94/1
தொல்லை குறும்பு தொலைத்து எடுத்து மல்லல் – மூவருலா:2 39/2
குயிற்றி புறம்பில் குறும்பு அனைத்தும் – மூவருலா:3 33/1

மேல்

குறுமுறுவல் (1)

கொண்டு அருளுக என்ன முகிழ்த்த குறுமுறுவல்
தண் தரள கொற்ற தனி குடையோன் பண்டு அறியா – மூவருலா:3 386/1,2

மேல்

குறுவியரால் (1)

திலகம் குறுவியரால் தேம்ப பல குதலை – மூவருலா:3 360/2

மேல்

குறை (4)

திரு நாடு தேரும் குறை அறுப்ப செய்தால் – மூவருலா:1 338/1
கோவிய மாதர்க்கே உள்ளம் குறை கிடந்த – மூவருலா:2 371/1
மீட்டும் குறை அவுணர் போர் கருதி விண்ணவர்கோன் – மூவருலா:3 51/1
கொங்கை புதுவரவும் தோளும் குறை நிரம்ப – மூவருலா:3 169/1

மேல்

குறைவனை (1)

குறைவனை என்று எழுதும் கோலத்து ஞாலத்து – மூவருலா:3 122/1

மேல்

குன்ற (1)

வந்து தொடும் குன்ற வாடைக்கு இளம் கொன்றை – மூவருலா:2 162/1

மேல்

குன்றத்து (1)

கண்டல் மணல் குன்றத்து அன்ன கணம் போன்றும் – மூவருலா:1 95/1

மேல்

குன்றம் (1)

பிறக்கும் இமய பெரும் கடவுள் குன்றம்
மறக்கும்படி செல்வம் மல்க சிறக்கும் – மூவருலா:2 55/1,2

மேல்

குன்றாத (1)

குன்றாத நித்தில கோவையும் பொன் நிறத்த – மூவருலா:1 221/1

மேல்

குன்றாய் (2)

கோவையான் முக்குவட்டு குன்றாய் ஒரு திருப்பாவையால் – மூவருலா:3 66/1
கோரம் உடன் போத நேமி பொலன் குன்றாய்
வார் கவரியால் இமய மால் வரையாய் வேரி – மூவருலா:3 68/1,2

மேல்

குன்று (1)

கொற்ற குடை கீழ் வட மேரு குன்று அனைய – மூவருலா:2 330/1

மேல்

குன்றே (1)

குன்றே என தகும் நின் கோபுரத்தில் தூங்கும் மணி – மூவருலா:1 340/1

மேல்

குனிக்கும் (1)

கோதிலா தேறல் குனிக்கும் திருமன்றம் – மூவருலா:1 16/1

மேல்

குனித்து (1)

கொடும் கால் சிலையை குனித்து நடுங்கா – மூவருலா:2 248/2

மேல்

குனியாதோ (1)

கொற்ற தனி வில் குனியாதோ நல் தடத்துள் – மூவருலா:3 310/2

மேல்

குனியும் (1)

குனியும் சிலை சோழகோனும் சனபதி-தன் – மூவருலா:1 73/2

மேல்