மா – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


மா (4)

சென்றும் மறுப்படாதே வந்தாய் என்றும் மா – அழகர்:1 41/2
மா ரதி பாரதியார்க்கு உன்னை உவமானிப்பார் – அழகர்:1 55/1
நின்ற பரஞ்சோதி மா நகர – அழகர்:2 82/2
வையம் விளங்க வரும் மா தவரும் பொய் இல்லா – அழகர்:12 219/2
மேல்

மாங்கனி (1)

மாங்கனி உண்டு வளம் சேர் செழும் கொவ்வை – அழகர்:10 193/1
மேல்

மாணிக்க (1)

பொன் சிலம்பில் ஓடும் சாம்பூநதம் போல் மாணிக்க
நல் சிலம்பில் ஓடும் நதி ஆகி கல் சிலம்பில் – அழகர்:3 101/1,2
மேல்

மாதர் (1)

மிக உடை மாதர் விதனம் கெடவோ – அழகர்:1 53/1
மேல்

மாதர்க்கு (1)

உருவு அணையும் மாதர்க்கு உரைத்தேன் மரு அணையும் – அழகர்:7 171/2
மேல்

மாதரை (1)

வண்டு அலையும் தாரான் முன் மாதரை எல்லாம் தூற்றும் – அழகர்:10 203/1
மேல்

மாதும் (1)

மை பிடிக்கும் வேல் கண் மலர்_மாதும் சங்கரியும் – அழகர்:1 28/1
மேல்

மாய்த்திடலால் (1)

வெம் காத்திரம் சேர் விலங்குகளை மாய்த்திடலால்
சிங்காத்திரி என்னும் சீர் மருவி எம் கோமான் – அழகர்:3 98/1,2
மேல்

மாயன் (2)

வடிவும் வளைந்த மணி மூக்கும் மாயன்
கொடியில் இருப்பவர்-தம் கூறோ நெடிய மால் – அழகர்:1 57/1,2
எண்ணிலே மாயன் எனும் பேரினால் ஒளிப்போன் – அழகர்:2 77/1
மேல்

மாயனுக்கு (1)

மாயனுக்கு வாகனமாய் வா என்று சேடனைத்தான் – அழகர்:6 162/1
மேல்

மாயை (2)

கொன்று மல மாயை கூட்டம் குலைத்து என்னை – அழகர்:2 80/1
கங்குல் மல மாயை கன்மம் விளங்காமல் – அழகர்:12 218/1
மேல்

மார்பில் (1)

விமல திருமுகமும் மென் மார்பில் மேவும் – அழகர்:7 169/1
மேல்

மார்பின் (1)

தோளின் மணி மார்பின் முத்தாரம் – அழகர்:3 103/1
மேல்

மார்பு (1)

சீர்பதியான திரு_பதியான் மார்பு இடத்தில் – அழகர்:3 111/2
மேல்

மாரன் (1)

மலைத்திடும் மாரன் ஒற்றை வண்டிலும் இல்லாமல் – அழகர்:1 4/1
மேல்

மால் (7)

கால் பிடிப்பார் கோடி பேர் கண்டாயே மால் பிடித்தோர் – அழகர்:1 48/2
மன பேதையார் மால் வனம் சுடவோ வன்னி – அழகர்:1 50/1
கொடியில் இருப்பவர்-தம் கூறோ நெடிய மால் – அழகர்:1 57/2
ஓதும் கரி ஒன்று உடைய மால் மூதுலகை – அழகர்:2 85/2
வாய்த்த நிரையில் ஒரு மால் விடையாய் பார்த்திடலால் – அழகர்:3 99/2
பாலாடை ஆமோ பகருவீர் மால் ஆகி – அழகர்:8 176/2
கடுகு இலேசம் கோபம் காணாமல் என் மால்
வடுகிலே சொல்வாய் வகையாய் அடு கிலேசம் – அழகர்:10 208/1,2
மேல்

மாலிருஞ்சோலை (1)

மலை அருவி நீர் உமக்கு மாலிருஞ்சோலை
தலை அருவி நீர் தானோ சாற்றீர் விலை இலா – அழகர்:8 173/1,2
மேல்

மாலிருஞ்சோலையினிலிருந்து (1)

வந்தாய் என்றால் மாலிருஞ்சோலையினிலிருந்து
எந்தாய் உனை தொழ வந்தேன் என்பாய் அந்த – அழகர்:10 206/1,2
மேல்

மாலினை (1)

மாலினை போல மகிதலத்தோர் வாட்டம் அற – அழகர்:1 19/1
மேல்

மாலை (6)

மாலை மலை சோலைமலையையே நம்புதலால் – அழகர்:12 226/1
எம்முடைய மாலை இரு புயத்து மாலை கேள் – அழகர்:14 236/1
எம்முடைய மாலை இரு புயத்து மாலை கேள் – அழகர்:14 236/1
உம்முடைய மாலை உதவீரேல் அம்மை திரு – அழகர்:14 236/2
அரு மாலை நீக்கும் அழகன் புயத்து – அழகர்:14 239/1
மரு மாலை நீ வாங்கி வா – அழகர்:14 239/2
மேல்

மாலை-தனை (1)

தாதை ஆர் மாலை-தனை தம்-மின் என்பாய் நீதி – அழகர்:14 237/2
மேல்

மாலையான் (1)

வண்ணம் தரும் துளப_மாலையான் உள் நின்று – அழகர்:3 112/2
மேல்

மாவும் (1)

மாவும் நான் மன் உயிரும் நான் அவ் இருவரையும் – அழகர்:2 81/1
மேல்

மாற்றினோன் (1)

வயமுனிக்கு கண் இரண்டும் மாற்றினோன் போற்றும் – அழகர்:4 132/1
மேல்

மான் (1)

மான் பிடிக்கின்ற வகை என்ன தான் படைத்த – அழகர்:2 95/2

மேல்