ஏ – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


ஏகாத (1)

நீ கொள்வாய் காலாழி நீங்காயே ஏகாத – அழகர்:1 13/2
மேல்

ஏடு (1)

ஏடு அலர் தாரான் எழுந்தருளி ஆடலுடன் – அழகர்:6 146/2
மேல்

ஏத்தி (1)

ஏத்தி இருவர் நீங்காது இருக்கையாலே கேசவாத்திரி – அழகர்:3 97/1
மேல்

ஏதத்தை (1)

தத்தை அடைந்தவர் ஏதத்தை அடையார் என்னும் – அழகர்:1 54/1
மேல்

ஏந்தி (1)

செம் கையில் ஓங்கு திரிதண்டு ஏந்தி சங்கை அற – அழகர்:12 218/2
மேல்

ஏந்தியதும் (1)

மேனியில் சிந்தியதும் மென் கையில் ஏந்தியதும்
வானில் உடுவும் மதியும் என தான் உண்டோன் – அழகர்:4 124/1,2
மேல்

ஏந்து (1)

இடந்த மருப்பினான் ஏந்து முதுகான் – அழகர்:4 128/1
மேல்

ஏர் (2)

ஏர் அணி பொன் அரங்கத்து எம்பிரான் போல் எவர்க்கும் – அழகர்:4 135/1
அன்பு ஏர் சுவாகதம் உண்டாகும் காண் முன்பு ஒருநாள் – அழகர்:13 234/2
மேல்

ஏவுவான்தானும் (1)

ஏவுவான்தானும் நான் என்று உணர்த்த கோவலர்-பால் – அழகர்:2 81/2
மேல்

ஏழில் (1)

முத்தி நகர் ஏழில் ஒன்றே முத்தமிழ் வல்லாறில் ஒன்றாய் – அழகர்:1 63/1
மேல்

ஏழும் (2)

பண்டு திரி வெய்யோன் பரி ஏழும் கண்ட – அழகர்:1 5/2
படி ஏழும் காக்கும் பரம் கருணையான் முன் – அழகர்:10 204/1
மேல்

ஏற்ற (1)

அளந்த திருத்தாளான் அன்று ஏற்ற கையான் – அழகர்:4 127/1
மேல்

ஏற்றும் (1)

ஏற்றும் திருமாலை எய்தப்போய் ஊர் எல்லாம் – அழகர்:1 66/1
மேல்

ஏறி (2)

அளிப்பிள்ளை வாய் குழறும் ஆம்பரத்தில் ஏறி
களி பிள்ளை பூம் குயிலும் கத்தும் கிளிப்பிள்ளை – அழகர்:1 46/1,2
நம்பிரான் ஏறி நடந்தருளி அம்பரத்தில் – அழகர்:6 152/2
மேல்

ஏறு (2)

ஏறு துசத்தம்பம் வல்லிசாதக்கொடி – அழகர்:3 108/1
ஏறு கற்ப தாரு என்றும் மிக்கோர்க்கு – அழகர்:3 108/2
மேல்

ஏறும் (2)

குருகு ஊர தானே சங்கு ஊர் கமுகில் ஏறும்
குருகூர் அத்தான் நேசம்கூர் – அழகர்:0/3,4
ஏறும் கதி காட்டி எய்தும் அணு தோற்றி – அழகர்:3 118/1
மேல்

ஏனும் (1)

இரவு அணையான் என்பதும் உண்டு ஏனும் பரவை – அழகர்:7 170/2
மேல்

ஏனோரை (1)

ஏனோரை நோக்கி எழுந்து அருள ஆனோன் – அழகர்:7 168/2

மேல்