போ – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


போக (1)

முத்தமிழ்க்கு பின் போவார் முன் போக பின்போன – அழகர்:12 221/1
மேல்

போதாதோ (1)

பொன் கலை ஒன்று இருந்தால் போதாதோ அன்று புனை – அழகர்:8 174/1
மேல்

போதாமலே (1)

பூதனை தந்த பால் போதாமலே பசித்து – அழகர்:2 70/1
மேல்

போது (1)

உன்னி விமானம் உரத்து எடுக்கும் போது
அனந்தன் சென்னி மணி ஒன்று தெறித்து எழுந்தது என்னவே – அழகர்:6 151/1,2
மேல்

போம் (1)

உன்னுடைய ஊண் அன்றோ ஊத பறந்து போம்
சின்ன வடிவு அன்றோ செழும் குயிலும் என்னே – அழகர்:1 34/1,2
மேல்

போய் (3)

அல் இலங்கு மெய்யானை அன்று அழித்து வீடணன் போய்
தொல் இலங்கை கட்டு புது தோரணமோ நல் வாய் – அழகர்:1 59/1,2
போய் அழைக்க வெய்யோன் புகுந்திடலும் தூயோன் – அழகர்:6 162/2
விட்டு கறப்பதையும் விட்டீரோ கிட்ட போய் – அழகர்:8 181/2
மேல்

போர் (1)

விடுவார் ஒருவர் உண்டோ விள்ளாய் அடு போர் – அழகர்:1 9/2
மேல்

போரில் (1)

தன் பரியே உனக்கு சாரதி யார் வன் போரில் – அழகர்:1 39/2
மேல்

போல் (18)

சித்தம் களிகூர செவ் இதழில் ஆடவர் போல்
முத்தம்கொடுக்க முகம் கோணாய் நித்தம் அவர் – அழகர்:1 24/1,2
உற்ற பிணிமுகமே உன் போல் சுக ரூபம் – அழகர்:1 37/1
கூவும் பெரிய குயில் கருகி பாவம் போல் – அழகர்:1 40/2
தாய் போல் எடுத்து சஞ்சரிக்கும் சம்பத்தாய் – அழகர்:1 62/1
பொன் சிலம்பில் ஓடும் சாம்பூநதம் போல் மாணிக்க – அழகர்:3 101/1
எண்ணும் கலன் நிறத்தோடு இந்திரவில் போல் பசந்த – அழகர்:3 112/1
ஏர் அணி பொன் அரங்கத்து எம்பிரான் போல் எவர்க்கும் – அழகர்:4 135/1
வாடை துளி போல் மலர் தேன் துளி துளிக்கும் – அழகர்:6 144/1
திருத்தகு மேகம் போல் செல்லுதலால் நீர் தூம் – அழகர்:6 157/1
துருத்தி மழை போல் சொரிய கருத்துடனே – அழகர்:6 157/2
கேட்ட வரம் ஊறும் கிணறு போல் நாட்டமுடன் – அழகர்:6 158/2
வார் மண்டு கொங்கை மனம் போல் விலங்கு வண்டியூர் – அழகர்:6 161/1
அங்கி கடவுளும் வந்து அன்பருடன் ஆடுதல் போல்
திங்கள் கடவுள் சேவிப்பது போல் கங்குல் – அழகர்:6 164/1,2
திங்கள் கடவுள் சேவிப்பது போல் கங்குல் – அழகர்:6 164/2
செவ் இதழின் மேலே தெறித்த வெண்ணெய் உண்பது போல்
அவ் இதழை உண்டது அயர்த்தீரோ செவ்வி தழை – அழகர்:8 183/1,2
ஈசன் திருநாமம் எல்லாம் என் போல் உனக்கு – அழகர்:10 198/1
அறம் காக்கும் யோகிகள் போல் அல்லும் பகலும் – அழகர்:11 213/1
தண் அம் துழாய் அழகன் தங்கும் திருமலை போல்
நண்ணும் திருமலைநம்பிகளும் உள் நின்ற – அழகர்:12 225/1,2
மேல்

போல்வார் (1)

அன்பால் எடுத்தது அறியீரோ மின்_போல்வார் – அழகர்:8 182/2
மேல்

போல (9)

உன் சொல்லை கற்க வல்லார் உண்டோ காண் நின் போல – அழகர்:1 17/2
மாலினை போல மகிதலத்தோர் வாட்டம் அற – அழகர்:1 19/1
செந்தாமரை மலரில் சிந்திய தேன் போல
மந்தாகினி வழியும் வண்மையான் சந்ததமும் – அழகர்:2 88/1,2
மேய்த்த நிரை போல வெற்புகள் எல்லாம் சூழ – அழகர்:3 99/1
போல வரு நூபுர நதியான் சீலம் உறு – அழகர்:3 103/2
சக்கரமும் போல தலை சுழன்று தொக்க விசை – அழகர்:3 120/2
புயலும் உருமேறும் போல கயல் இனத்தை – அழகர்:6 155/2
அரவணையான் என்பதும் உண்டு அண்ணல் அரன் போல
இரவு அணையான் என்பதும் உண்டு ஏனும் பரவை – அழகர்:7 170/1,2
செம் கரத்தில் அன்று திருடிய வெண்ணெய் போல
சங்கு இருக்க என் சங்குதான் கொண்டீர் கொங்கை – அழகர்:8 172/1,2
மேல்

போலும் (5)

பின் அத்தை போலும் ஒரு பேறு உண்டோ அன்னம் இன்றி – அழகர்:1 47/2
புணர்க்க ஒரு கிரணம் போலும் எனையும் கொண்டு – அழகர்:2 93/1
இந்திரன் போலும் இடபாசலம் அவன் மேல் – அழகர்:3 102/1
வந்த விழி போலும் வள சுனைகள் முந்து திருமாலுடைய – அழகர்:3 102/2
ஆர் பதியான அமராபதி போலும்
சீர்பதியான திரு_பதியான் மார்பு இடத்தில் – அழகர்:3 111/1,2
மேல்

போவார் (1)

முத்தமிழ்க்கு பின் போவார் முன் போக பின்போன – அழகர்:12 221/1
மேல்

போவாரோ (1)

கொடியோரும் போவாரோ கூறாய் அடியார்கள் – அழகர்:10 204/2
மேல்

போற்றி (1)

புரந்தரற்கு நேர் இது என்று போற்றி இசைப்ப ஓர் ஆயிரம் – அழகர்:6 160/1
மேல்

போற்றிய (1)

போற்றிய வேத புரவியான் பாற்கடலில் – அழகர்:3 119/2
மேல்

போற்றும் (1)

வயமுனிக்கு கண் இரண்டும் மாற்றினோன் போற்றும்
கயமுனிக்கு கண் கொடுத்த கண்ணன் நயம் உரைக்கின் – அழகர்:4 132/1,2

மேல்