சொ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொரி 26
சொரிகின்ற 2
சொரிகின்றது 1
சொரிதலின் 2
சொரிதலோடும் 1
சொரிந்த 5
சொரிந்ததால் 1
சொரிந்தவே 1
சொரிந்தவை 1
சொரிந்தன 1
சொரிந்தனர் 1
சொரிந்தனவே 1
சொரிந்தனன் 2
சொரிந்தார் 1
சொரிந்தால் 1
சொரிந்தான் 1
சொரிந்திட 1
சொரிந்து 24
சொரிய 12
சொரியும் 4
சொரிவ 2
சொரிவது 3
சொரிவதே 2
சொரிவன 3
சொரிவார் 1
சொல் 69
சொல்ல 6
சொல்லலாம் 3
சொல்லள் 1
சொல்லா 1
சொல்லாய் 5
சொல்லார் 12
சொல்லால் 4
சொல்லாள் 7
சொல்லாறு 1
சொல்லான் 4
சொல்லி 13
சொல்லிய 5
சொல்லியும் 1
சொல்லிற்று 2
சொல்லின் 4
சொல்லினள் 1
சொல்லினன் 1
சொல்லினாய் 2
சொல்லினாலும் 1
சொல்லினாளே 1
சொல்லினான் 2
சொல்லினானே 2
சொல்லினோடே 1
சொல்லீர் 1
சொல்லு 3
சொல்லு-மின் 4
சொல்லு-மினும் 1
சொல்லுபு 1
சொல்லும் 11
சொல்லுவ 1
சொல்லுவான் 2
சொல்லை 1
சொல்லொடு 1
சொல 2
சொலலாமோ 1
சொலாட்கு 1
சொலாய் 3
சொலார் 6
சொலால் 2
சொலாள் 4
சொலிப்பது 1
சொலின் 4
சொலீர் 1
சொலும் 1
சொலே 2
சொற்கள் 1
சொற்களின் 1
சொற்கு 1
சொற்பால் 1
சொறியப்பெற்றாம் 1
சொன்ன 12
சொன்னவாறு 1
சொன்னவாறே 1
சொன்னவே 1
சொன்னாய் 2
சொன்னார் 10
சொன்னாள் 17
சொன்னான் 55
சொன்னீர் 1
சொன்னேன் 3
சொனார் 1
சொனான் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சொரி (26)

பொன் சொரி கதவு தாளின் திறந்து பொன் யவன பேழை – சிந்தா:1 114/1
மின் சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்து பின்னும் – சிந்தா:1 114/2
சொரி மலர் தாரும் பூணும் ஆரமும் குழையும் சோர – சிந்தா:1 389/3
தேன் சொரி முல்லை கண்ணி செம் துவர் ஆடை ஆயர் – சிந்தா:2 485/1
கான் சொரி முல்லை தாரான் கடிவினை முடிக என்றான் – சிந்தா:2 485/4
செம் புற கனி வாழையும் தேன் சொரி
கொம்பு உற பழுத்திட்டன கோ அரை – சிந்தா:4 869/1,2
நேர் மலர் பாவையை நோக்கி நெய் சொரி
கூர் அழல் போல்வது ஓர் புலவி கூர்ந்ததே – சிந்தா:4 1018/2,3
சொரி கதிர் முத்தம் மின்னும் துணை முலை தடத்தில் வீழ்ந்தான் – சிந்தா:5 1352/3
சொரி பனி முருக்க நைந்து சுடர் முகம் பெற்ற-போதே – சிந்தா:5 1404/1
சொரி மது சுரும்பு உண் கண்ணி சூழ் கழல் நந்தன் என்றான் – சிந்தா:8 1925/4
மது கலந்து ஊழ்த்து சிலம்பி வீழ்வன போல் மலர் சொரி வகுளமும் மயங்கி – சிந்தா:10 2108/2
சோலை ஆய் சொரி மும்மதத்தால் நிலம் – சிந்தா:10 2170/3
காளம் ஆகு இருளை போழ்ந்து கதிர் சொரி கடவுள் திங்கள் – சிந்தா:10 2245/1
சொரி மத களிற்றின் கும்பத்து அழுத்தலின் தோன்றல் சீறி – சிந்தா:10 2269/3
சந்தனம் சொரி தண் கதிர் திங்கள் அம் தொகை தாம் பல – சிந்தா:10 2307/1
குள நெல் முன்றில் கனி தேன் சொரி சோலை குளிர் மணி – சிந்தா:12 2491/1
தொழுவ போல் முரிய சொரி பூம் சிகை – சிந்தா:13 2670/3
ஓம்பாது ஒண் பொன் சொரி மாரி உலகம் உண்ண சிதறினான் – சிந்தா:13 2702/4
தோட்டியால் தொடக்க பட்ட சொரி மத களிற்றின் மீண்டான் – சிந்தா:13 2729/4
சுழல் ஆர் பசும்பொன்னும் வேய்ந்து சொரி கதிர் மென் பஞ்சி ஆர்ந்த – சிந்தா:13 2970/3
கலம் சொரி காவலன் கடக கை இணை – சிந்தா:13 2995/2
மின் சொரி வெண் கலம் வீசும் வண் கைகள் – சிந்தா:13 2996/3
பொன் சொரி தாமரை போது போன்றவே – சிந்தா:13 2996/4
தொத்து ஒளிர் தாமமும் சொரி பொன் தாமமும் – சிந்தா:13 3010/2
சொரி மது மாலை சாந்தம் குங்குமம் சுண்ணம் தேம் பாய் – சிந்தா:13 3118/3
செல்வ கிண்கிணி சிலம்ப தேன் சொரி
முல்லை கண்ணிகள் சிந்த மொய் நலம் – சிந்தா:13 3129/1,2

TOP


சொரிகின்ற (2)

தோய்ந்த தன் காதலன் பற்ற அற்று சொரிகின்ற மேகலை போல் வீழ்ந்த வாளை – சிந்தா:13 2860/3
வலம்புரி மணி சொரிகின்ற போன்றவே – சிந்தா:13 2995/4

TOP


சொரிகின்றது (1)

முடி குழாம் மூரி வானம் பால் சொரிகின்றது ஒக்கும் – சிந்தா:13 3050/2

TOP


சொரிதலின் (2)

நிலத்து அவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞை போய் – சிந்தா:1 92/3
சுந்தர நில மிசை சொரிதலின் மின் அணிந்து – சிந்தா:1 121/3

TOP


சொரிதலோடும் (1)

எண்திசையவரும் ஏத்த துடுப்பு நெய் சொரிதலோடும்
கொண்டு அழல் கடவுள் பொங்கி வலம் சுழன்று எழுந்தது என்ப – சிந்தா:12 2466/2,3

TOP


சொரிந்த (5)

பார் செல செல்ல சிந்தி பைம்_தொடி சொரிந்த நம்பன் – சிந்தா:2 469/3
வீக்கு வார் முலையின் நெற்றி வெண் முத்தம் சொரிந்த அன்றே – சிந்தா:5 1258/4
நடந்த வாய் எல்லாம் நறு மலர் மரையின் நாகு இலை சொரிந்த அம் தீம் பால் – சிந்தா:10 2102/2
பைம் தொடி மகளிர் பாங்கர் பரிந்து நூல் சொரிந்த காசு – சிந்தா:12 2528/1
துணி மணி முக்குடை சொரிந்த தீம் கதிர் – சிந்தா:13 3011/3

TOP


சொரிந்ததால் (1)

தீம் கதிர் திங்கள் செம் தீ சொரிந்ததால் திசைகள் எல்லாம் – சிந்தா:13 2955/3

TOP


சொரிந்தவே (1)

வான் நிரைத்து மணந்து சொரிந்தவே – சிந்தா:1 33/4

TOP


சொரிந்தவை (1)

சொரிந்தவை தொகுத்து நோக்கின் தொடு கடல் வெள்ளம் ஆற்றா – சிந்தா:5 1391/2

TOP


சொரிந்தன (1)

சொரிந்தன கண் பனி துதித்து காதலால் – சிந்தா:13 3009/2

TOP


சொரிந்தனர் (1)

சொரிந்தனர் கணை மழை விசும்பு தூர்ந்ததே – சிந்தா:10 2224/4

TOP


சொரிந்தனவே (1)

சிந்தித்து இரங்கி அழுவன போல் பனி சேர் கண்ணீர் சொரிந்தனவே – சிந்தா:1 312/4

TOP


சொரிந்தனன் (2)

வீறு உயர் கலசம் நல் நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான் – சிந்தா:2 489/3
மின் இயல் கலசம் நல் நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான் – சிந்தா:3 834/3

TOP


சொரிந்தார் (1)

சொரிந்தார் மலர் அர மங்கையர் தொழுதார் விசும்பு அடைந்தான் – சிந்தா:10 2265/4

TOP


சொரிந்தால் (1)

முல்லை முகை சொரிந்தால் போன்று இனிய பால் அடிசில் மகளிர் ஏந்த – சிந்தா:13 2623/1

TOP


சொரிந்தான் (1)

கண்டான் சொரிந்தான் கணை மாரி கலந்தது அன்றே – சிந்தா:3 808/4

TOP


சொரிந்திட (1)

நீர் திரள் பளிக்கு தூணி சொரிந்திட நின்று வென்றான் – சிந்தா:13 3071/3

TOP


சொரிந்து (24)

பால் நிலா சொரிந்து நல்லார் அணிகலம் பகலை செய்ய – சிந்தா:1 111/3
மாரியின் கடும் கணை சொரிந்து மள்ளர் ஆர்த்த பின் – சிந்தா:1 277/1
எரி மாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும் ஏற்ப சொரிந்து அலறி எம் – சிந்தா:1 294/3
பெருமானே எம்மை ஒளித்தியோ என்னா பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார் – சிந்தா:1 294/4
தோதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து தண்ணென் – சிந்தா:2 463/3
மூழை நீர் சொரிந்து மொய் கொள் ஆய்த்தியர் ஆட்டினாரே – சிந்தா:2 487/4
தண் துளி பளிக்கு கோல் போல் தாரையாய் சொரிந்து தெய்வம் – சிந்தா:3 508/3
திருவிலே சொரிந்து மின்னும் குண்டலம் செம்பொன் ஓலை – சிந்தா:3 674/1
உவரியாய் சொரிந்து இடம் பெறாது தான் ஓர் பால் – சிந்தா:3 826/4
துன்னினர் பலாசில் செய்த துடுப்பின் நெய் சொரிந்து வேட்ப – சிந்தா:3 834/2
சொல் நீர் அவள் அற்பு அழலுள் சொரிந்து ஆற்ற – சிந்தா:4 1072/2
தெள் அறல் நீர் சொரிந்து ஆட்டினர் தேம் புகை – சிந்தா:6 1476/2
சூழ் இருள் தொழுதி மூழ்க தீ கதிர் சொரிந்து நல்லார் – சிந்தா:6 1541/3
சுண்ணமும் சூட்டும் சொரிந்து வார் குழல் – சிந்தா:10 2114/1
மாகம் நெய்த்தோர் சொரிந்து எங்கும் மண்ணும் விண்ணும் அதிர்ந்தவே – சிந்தா:10 2173/4
வில் மழை சொரிந்து கூற்றின் தெழித்தனன் தலைப்பெய்து ஆர்ப்ப – சிந்தா:10 2246/2
பொருவில் பூ மழை பொன் மழையொடு சொரிந்து ஆட்டி – சிந்தா:11 2366/3
வெண்ணெய் உருக்கி நெய் வெள்ளம் ஆக சொரிந்து ஊட்ட – சிந்தா:13 2604/3
கழை பொதிர்ப்ப தேன் சொரிந்து காய் தினைகள் ஆர்த்தும் – சிந்தா:13 2778/1
துன்புற விலங்கு கொன்று சொரிந்து சோறு ஊட்டினார்க்கும் – சிந்தா:13 2828/3
நீர் நிறை குளத்து மாரி சொரிந்து என நறு நெய் துள்ளும் – சிந்தா:13 2971/1
தூய் திரள் மணி தாமம் சொரிந்து பொன் நிலம் நக்க – சிந்தா:13 3024/1
மண் எலாம் பைம்பொன் மாரி மலர் மழை சொரிந்து வாழ்த்தி – சிந்தா:13 3085/2
வந்து பொன் மாரி சிந்தி மலர் மழை சொரிந்து சாந்தும் – சிந்தா:13 3115/3

TOP


சொரிய (12)

சல சல மு மதம் சொரிய தம் தம்முள் – சிந்தா:1 82/1
விழு கலம் சொரிய சிந்தி வீழ்ந்தவை எடுத்துக்கொள்ளா – சிந்தா:1 115/1
முடி கலம் சொரிய சென்னி இறைஞ்சலும் முரிந்து மின்னு – சிந்தா:3 562/2
தாம் பாலவரை நாடி தந்து ஊட்டு அயர்வார் சொரிய
ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்-மின் – சிந்தா:4 928/3,4
பஞ்சு சூழ் மணி மேகலை பரிந்து அவை சொரிய
வஞ்சி நுண் இடை கவின் பெற வைகினன் மாதோ – சிந்தா:12 2384/3,4
பைத்து அரவு அல்குல் பாவை கரக நீர் சொரிய பாங்கின் – சிந்தா:12 2493/3
சுடுமண் மிசை மாரி சொரிய சூழ்ந்து சுமந்து எழுந்து – சிந்தா:12 2503/1
பூ கமழ் துகிலும் தோடும் மாலையும் சொரிய போர் தோற்று – சிந்தா:13 2661/3
புழு சொரிய துன்பம் பொறுக்கலா பொன்றும் – சிந்தா:13 2783/4
வானவர் மலர் மழை சொரிய மன்னிய – சிந்தா:13 3014/1
கறை முகில் சொரிய காய் பொன் கற்பக மாலை ஏந்தி – சிந்தா:13 3084/2
தெள் நிலா திரு மதி சொரிய தே மலர் – சிந்தா:13 3112/2

TOP


சொரியும் (4)

தோழர் தன் தாள்களா சொரியும் மும்மதம் – சிந்தா:3 775/2
நிரை வீழ் அருவி நிமிர் பொன் சொரியும்
வரையே புனலே வழையே தழையே – சிந்தா:5 1376/1,2
சொரியும் தீம் கதிர் தோற்றம் ஒத்தவே – சிந்தா:12 2419/4
பால் மிசை சொரியும் திங்கள் பனி கடல் முளைத்தது ஒத்தார் – சிந்தா:13 2658/4

TOP


சொரிவ (2)

கலி வளர் களிறு கை நீர் சொரிவ போல் முத்த மாலை – சிந்தா:4 968/1
துணை மலர் காந்தள் ஊழ்த்து சொரிவ போல் தோன்றி முன்கை – சிந்தா:7 1742/3

TOP


சொரிவது (3)

மற்று அவை சொரிவது ஓர் மாரி ஒத்தவே – சிந்தா:3 780/4
மேல் பட மிக நனி சொரிவது ஒப்பவே – சிந்தா:13 2746/2
மஞ்சு உடை மதியினுள் சொரிவது ஒத்ததே – சிந்தா:13 3031/4

TOP


சொரிவதே (2)

வீழ்தர சொரிவதே போல் விளங்கு ஒளி திங்கள் புத்தேள் – சிந்தா:6 1541/2
குட திசை சேர்ந்து மாரி குளிறுபு சொரிவதே போல் – சிந்தா:10 2304/2

TOP


சொரிவன (3)

வரை நிரை அருவியின் மதம் மிசை சொரிவன
புரை நிரை களிறொடு புனை மணி இயல் தேர் – சிந்தா:1 123/1,2
அகழும் இங்குலிகம் அஞ்சன வரை சொரிவன
கவழ யானையின் நுதல் தவழும் கச்சு ஒத்தவே – சிந்தா:8 1898/3,4
இரும் கனி சொரிவன போன்ற என்பவே – சிந்தா:10 2227/4

TOP


சொரிவார் (1)

சுண்ணம் மேல் சொரிவார் தொழுது தொங்கல் வீழ்ப்பார் – சிந்தா:12 2547/1

TOP


சொல் (69)

சொல் மாண்பு அமைந்த குழுவின் சரண் சென்று தொக்க – சிந்தா:0 3/3
இ நீர என் சொல் பழுது-ஆயினும் கொள்ப அன்றே – சிந்தா:0 5/3
தேன் ஊறு தீம் சொல் குணமாலையை சேர்ந்தவாறும் – சிந்தா:0 15/1
சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல் – சிந்தா:1 53/1
நாவலர் சொல் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா – சிந்தா:1 206/2
கூர் அறிவு உடைய நீரார் சொல் பொருள் கொண்டு செல்லும் – சிந்தா:1 212/2
சுளி முக களிறு அனான்-தன் சொல் நய நெறியில் போய – சிந்தா:1 298/3
மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ – சிந்தா:1 311/4
மழலை யாழ் மருட்டும் தீம் சொல் மதலையை மயில் அம் சாயல் – சிந்தா:1 368/3
சொல் பகர் புலவன் வல்லே தோன்றலை சார்ந்து புல்லி – சிந்தா:1 390/2
சொல் பழுத்தவர்க்கும் ஆண்மை சொல்லலாம் தன்மைத்து அன்றி – சிந்தா:2 435/3
இன் அமுது அனைய செ வாய் இளம் கிளி மழலை அம் சொல்
பொன் அவிர் சுணங்கு பூத்த பொங்கு இள முலையினார் தம் – சிந்தா:2 457/1,2
தாங்கல் கடன் ஆகும் தலை சாய்க்க வரு தீ சொல்
நீங்கல் மடவார்கள் கடன் என்று எழுந்து போந்தான் – சிந்தா:3 498/3,4
மந்திர மன்னன் சொல் நீர் மாரியால் வற்றி நின்ற – சிந்தா:3 545/1
தும்பு அற புத்திசேனன் சொல் இது குரவற்கு என்ன – சிந்தா:3 666/3
அம்_சில்_ஓதியார் புனைந்த செம் சொல் மாலை சூடினான் – சிந்தா:3 691/4
கரு மனம் நச்சு வெம் சொல் கட்டியங்காரன் அன்றே – சிந்தா:3 744/4
சொல் திறல் அன்றி மன்னீர் தொக்கு நீர் காண்ம்-மின் எங்கள் – சிந்தா:3 756/1
கிளை நரம்பு அனைய தீம் சொல் பவள வாய் திகழ தேன் சோர் – சிந்தா:3 841/2
சொல் இசை மேம்படு சுண்ண உறழ்ச்சியுள் – சிந்தா:4 879/3
எண்ணின் நின் சொல் இகந்து அறிவார் இலை – சிந்தா:4 890/2
நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா – சிந்தா:4 890/3
ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்ற சொல்
தோற்று வந்து என் சிலம்பு அடி கைதொழ – சிந்தா:4 899/2,3
கனிப்புறு சொல் அளைஇ பறந்து காளை தன் – சிந்தா:4 1020/3
சொல் மருந்து தந்தாய் சொல்லு நின் மனத்து – சிந்தா:4 1030/1
சொல் குன்றா புணர்கேன் சொல்லு போ என்றான் – சிந்தா:4 1031/4
கோல் அவியா வெம் சிலையான் சொல் குன்றான் ஆக எனவே – சிந்தா:4 1045/3
மணி மத களிறு வென்றான் வருத்த சொல் கூலி ஆக – சிந்தா:4 1049/1
துணிவது என் சுடு சொல் வாளால் செவி முதல் ஈரல் என்றாள் – சிந்தா:4 1049/3
காவாது அவள் கண்ணற சொல்லிய வெம் சொல்
ஏவோ அமிர்தோ எனக்கு இன்று இது சொல்லாய் – சிந்தா:4 1069/3,4
சொல் நீர் அவள் அற்பு அழலுள் சொரிந்து ஆற்ற – சிந்தா:4 1072/2
பண் அடி வீயும் தீம் சொல் பாவை நின் வனப்பிற்கு எல்லாம் – சிந்தா:4 1082/1
தோன்றலுக்கு ஆண்மை குன்றாது என்ற சொல் இமிழின் பூட்டி – சிந்தா:4 1091/2
வஞ்சம் இல் கொள்கையான் சொல் அமிர்தினால் வற்புற்றானே – சிந்தா:4 1122/4
பெற்ற அ நிமித்தத்தானும் பிறந்த சொல் வகையினானும் – சிந்தா:4 1129/1
ஒற்றன் வந்து உரைப்ப கேட்டே ஒத்ததோ என் சொல் என்னா – சிந்தா:4 1139/1
சொல் திறல் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் சுருங்க நாடி – சிந்தா:5 1222/1
பாலின் தீம் சொல் பதுமை இ நின்றவள் – சிந்தா:5 1327/3
இஃதே நின் சொல் இயல்பு என்றால் அடியேன் நின்னை தொழுதேனே – சிந்தா:6 1418/4
தீர்ந்தனன் சொல் அளைஇ தேர் கொண்டு ஏறினான் – சிந்தா:6 1465/4
சொல் வளர்த்தார் அவள் தோழியர் சோர் குழல் – சிந்தா:6 1474/3
பாணி யாழ் கனியும் வென்ற பைம் கிளி மழலை தீம் சொல்
வாணிக மகளிர் தாமே வாணிகம் வல்லர் என்னா – சிந்தா:6 1500/2,3
அன்பு நூலாக இன் சொல் அலர் தொடுத்து அமைந்த காதல் – சிந்தா:7 1596/1
துறை வளர் நாட்டொடு நகரம் சொல் என – சிந்தா:7 1618/3
வருந்தி ஈன்றாள் மறந்து ஒழிந்தாள் வளர்த்தாள் சொல் கேட்டு இல் கடிந்தாள் – சிந்தா:7 1661/1
பிணி நிற புறம் சொல் என்னும் பெரும் ஞிமிறு ஆர்ப்ப என்றான் – சிந்தா:7 1665/4
பண் முழுது உடற்றும் தீம் சொல் பாவை நின் பாலள் என்றான் – சிந்தா:7 1684/4
பால் நக்க தீம் சொல் பவளம் புரை பாவை அன்ன – சிந்தா:7 1866/2
புலவி சொல் பொறித்த ஓலை திரு முடி துளக்கி நோக்கி – சிந்தா:7 1881/2
அச்சமுறுத்து அமுது புளித்த ஆங்கு தம தீம் சொல்
வெச்சென்றிட சொல்லி விரி கோதையவர் சூழ்ந்தார் – சிந்தா:9 2015/3,4
சொல் புகர் இன்றி தோழிக்கு அறத்தினோடு அரிவை நின்றாள் – சிந்தா:9 2073/4
செம் கயல் மழை கண் செ வாய் தத்தையும் மகிழ்ந்து தீம் சொல்
எங்கையை சென்று காண்-மின் அடிகள் என்று இரந்து கூற – சிந்தா:9 2098/1,2
பொற்ற சொல் மாலை சூட்டி புலவர்கள் புகழ கல் மேல் – சிந்தா:10 2302/3
கரும்பும் தேனும் அமிழ்தும் பாலும் கலந்த தீம் சொல் மடவாட்கு – சிந்தா:12 2438/1
ஒள் நுதல் உருவ கோலத்து ஒரு பிடி நுசுப்பின் தீம் சொல்
வண்ணித்தல் ஆவது இல்லா வரு முலை மதர்வை நோக்கின் – சிந்தா:12 2458/2,3
கொள்ளும் தீம் சொல் அலங்கார பூம்_கொடியை புல்லி மணி குவட்டினை – சிந்தா:12 2591/3
சொல் சிறை அழித்து வேந்தன் துணை முலை துறத்தல் செல்லான் – சிந்தா:13 2612/2
அம் சொல் மடவார் தம் ஆர்வ களி பொங்க – சிந்தா:13 2792/1
மரீஇ அவாய் புறம் சொல் கூர் முள் மத்திகை புடையும் அன்றி – சிந்தா:13 2821/2
சொல் பொறி சோர எல்லா பொறிகளும் சோர்ந்து நம்பன் – சிந்தா:13 2886/3
நூல் விளைந்து அனைய நுண் சொல் புலவரோடு அறத்தை ஓம்பின் – சிந்தா:13 2906/3
தின்று அலால் சிறுவரை யானும் சொல் சில – சிந்தா:13 2937/2
ஏதிலம் என்ற சொல் செவி சென்று எய்தலும் – சிந்தா:13 2943/2
அழல் ஏந்து வெம் கடும் சொல் உரும் ஏறு உண்டு ஆங்கு அலர் சிந்தி – சிந்தா:13 2945/1
சிந்தியே கரந்தார் சொல் போல் மெய்யின் கண் சேர்தல் இன்றாய் – சிந்தா:13 2973/3
சொல் பொருள் போல் வேட்கப்படா சோர்ந்து ஒழிந்தனவே – சிந்தா:13 2979/4
அழுது வினைகள் அல்லாப்ப அறைந்தோய் நின் சொல் அறைந்தார்கள் – சிந்தா:13 3020/3
ஏவா இருந்த அடிகள் இவர் வாய் சொல்
கோவா மணி கொழித்து கொண்டாலே போலுமால் – சிந்தா:13 3036/1,2
கைவினை செய்த சொல் பூ கைதொழுது ஏத்தினனே – சிந்தா:13 3145/4

TOP


சொல்ல (6)

வேண்டுவல் நம்பி யான் ஓர் விழுப்பொருள் என்று சொல்ல
ஆண் தகை குரவீர் கொண்ம்-மின் யாது நீர் கருதிற்று என்ன – சிந்தா:1 393/1,2
வினையமாமாலை கேள்வன் குபேரமித்திரற்கு சொல்ல
அனையதே பட்டது என்றால் ஐயனே நங்கைக்கு ஒத்தான் – சிந்தா:4 1053/1,2
மதிதரன் என்னும் மாசு இல் மந்திரி சொல்ல கேட்டே – சிந்தா:5 1340/1
முடி கெழு மன்னன் சொல்ல மொய் கொள் வேல் குருசில் தேற்றான் – சிந்தா:7 1685/1
கணை கடி கண்ணி சொல்ல காணிய யானும் சென்றேன் – சிந்தா:7 1721/1
மற்று அவள் சொல்ல கேட்ட மைந்தர்கள் – சிந்தா:7 1764/1

TOP


சொல்லலாம் (3)

சொல் பழுத்தவர்க்கும் ஆண்மை சொல்லலாம் தன்மைத்து அன்றி – சிந்தா:2 435/3
துளங்கு பொன் நகரின் தன்மை சொல்லலாம் சிறிது ஓர் தேவன் – சிந்தா:3 527/1
துணியரு வினை எறிந்தாற்கு அது நாற்றம் சொல்லலாம்
அணி திகழ் அரசுவா அதன் கடாம் சாற்றாதோ – சிந்தா:13 3087/3,4

TOP


சொல்லள் (1)

வெண்ணெய் போன்று ஊறு இனியள் மேம் பால் போல் தீம் சொல்லள்
உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள் – சிந்தா:2 480/1,2

TOP


சொல்லா (1)

சொல்லா துயர்வார் தொழுவார் அழுவார் ஆய் – சிந்தா:13 2964/3

TOP


சொல்லாய் (5)

திருந்தினாற்கு இன்று-காறும் சிறு சொல்லாய் நின்றது அன்றே – சிந்தா:1 207/4
புரி நரம்பு இரங்கும் சொல்லாய் போவதே பொருள் மற்று என்றான் – சிந்தா:1 272/3
ஏவோ அமிர்தோ எனக்கு இன்று இது சொல்லாய் – சிந்தா:4 1069/4
இன் இசை இரங்கும் நல் யாழ் இளியினும் இனிய சொல்லாய்
அன்னதால் வினையின் ஆக்கம் அழுங்குவது என்னை என்றாள் – சிந்தா:6 1537/3,4
வருத்தும் காஞ்சிரமும் வேம்பும் வாய் கொள்வார் யாவர் சொல்லாய் – சிந்தா:13 2722/4

TOP


சொல்லார் (12)

கலை இகந்து இனிய சொல்லார் கங்குலும் பகலும் எல்லாம் – சிந்தா:1 372/3
மழலை தீம் சொல்லார் மறுக வாய்விட்டார் – சிந்தா:2 422/4
பண் அகத்து உறையும் சொல்லார் நல் நலம் பருக வேண்டி – சிந்தா:2 467/3
குழல் பொதிந்த தீம் சொல்லார் குழாத்தின் நீங்கி கொண்டு ஏந்தி – சிந்தா:5 1224/3
காமனை என்றும் சொல்லார் கணவன் கைதொழுது வாழ்வார் – சிந்தா:7 1598/3
கம்பம் செய் பரிவு நீங்கி கற்பிப்பார்க்கு உவர்த்து சொல்லார்
இம்பர் இ உலகம் ஒப்பாய்க்கு என்னை யான் உரைப்பது என்றான் – சிந்தா:7 1737/3,4
கலை விரவு தீம் சொல்லார் காமன் என்றார் கமழ் தாரார் – சிந்தா:7 1885/4
ஆடவர் இரிய ஏகி அம் சொல்லார் சூழ காமன் – சிந்தா:9 2055/1
கலை ஈன்ற சொல்லார் கமழ் பூ அணை காவல் கொண்டார் – சிந்தா:11 2351/3
பண் கொண்ட சொல்லார் தொழ பாம்பு அணை அண்ணல் போல – சிந்தா:11 2353/3
பண் கொள் சொல்லார் மாமை நீங்கி பைம்பொன் போர்த்த படா முலைகளும் – சிந்தா:12 2589/2
கிளி சொலின் இனிய சொல்லார் கிண்கிணி சிலம்பொடு ஏங்க – சிந்தா:13 2898/1

TOP


சொல்லால் (4)

ஊன் பிறங்கு ஒளிறும் வேலான் ஓர்த்து தன் உவாத்தி சொல்லால்
தான் புறம் கட்டப்பட்டு தன் சினம் தணிந்து நிற்ப – சிந்தா:4 1090/1,2
வரி வளை தோளி கேள்வன் வரும் என வலித்த சொல்லால்
திரு நலம் பிறந்து சொன்னாள் தேனினும் இனிய சொல்லாள் – சிந்தா:5 1404/3,4
இடி முரசு அனைய சொல்லால் இற்றென விளம்புகின்றான் – சிந்தா:7 1685/4
செல்லுமால் தேவர் கோவாய் எனும் இருள் கழிந்த சொல்லால்
அல்லி மேல் நடந்த கோவே அச்சத்துள் நீங்கினோமே – சிந்தா:13 3099/3,4

TOP


சொல்லாள் (7)

பண்ணகத்து இனிய சொல்லாள் பாவையை பயந்த ஞான்றே – சிந்தா:3 538/2
தேன் நெய் போன்று இனிய சொல்லாள் சிறுமுதுக்குறைமை கேட்டே – சிந்தா:4 1051/1
கெழீஇயினாள் கேள்வி நல் யாழ் கிளை நரம்பு அனைய சொல்லாள்
கழி பெரும் கவலை நீங்க காரண நீர சொன்னாள் – சிந்தா:5 1386/3,4
திரு நலம் பிறந்து சொன்னாள் தேனினும் இனிய சொல்லாள் – சிந்தா:5 1404/4
பால் நுண் தீம் சொல்லாள் ஓர் படுவி வண்டு ஆர்ப்ப வந்து இறைஞ்சினாள் – சிந்தா:7 1653/4
வாய்விடாள் பருகி இட்டாள் மட கிள்ளை மருட்டும் சொல்லாள் – சிந்தா:7 1692/4
பண்ணாறு சொல்லாள் முலை பாரித்த என்று நோக்க – சிந்தா:10 2134/2

TOP


சொல்லாறு (1)

சொல்லாறு கேளான் நனி சூழ்ச்சியில் தோற்றவாறும் – சிந்தா:0 9/2

TOP


சொல்லான் (4)

சேண் நிலத்து இறைஞ்சி சொன்னான் செய்ய கோல் வெய்ய சொல்லான் – சிந்தா:1 264/4
விண் உரும் ஏறு போன்று வெடிபட முழங்கும் சொல்லான் – சிந்தா:1 265/4
முற்றுபு கனிந்த சொல்லான் முனிவரன் மொழியும் அன்றே – சிந்தா:4 1129/4
இன்னா பிறவி பிணிக்கு இன் மருந்து ஆய சொல்லான் – சிந்தா:13 2890/4

TOP


சொல்லி (13)

காள மேகங்கள் சொல்லி கருனையால் குழைக்கும் கைகள் – சிந்தா:1 257/3
சூட்டொடு கண்ணி அன்றே என் செய்வான் இவைகள் சொல்லி
நீட்டித்தல் குணமோ என்று நெஞ்சகம் குளிர்ப்ப சொன்னான் – சிந்தா:2 484/3,4
ஏற்றன சொல்லி நிற்பார் எங்கணும் ஆயினாரே – சிந்தா:3 702/4
தந்த என சொல்லி நனி சாமி கொடுத்தானே – சிந்தா:3 849/4
என் இனி சொல்லி சேறும் என் செய்தும் யாங்கள் எல்லாம் – சிந்தா:4 1162/2
துளங்கு பெண் பிறப்பும் தோழி இனிது என சொல்லி நிற்பார் – சிந்தா:5 1297/4
கரும் கணின் யாமும் கண்டாம் காமனை என்று சொல்லி
திருந்து ஒளி முறுவல் செ வாய் தீம் சொலார் மயங்கினாரே – சிந்தா:5 1298/3,4
இழைய சொல்லி இறையான் இளையானை எய்தினானே – சிந்தா:7 1593/4
துணை அமை வடிவும் சொல்லி நின் பொறி ஒற்றிக்கொண்டான் – சிந்தா:7 1721/4
தொறு கொண்ட கள்வர் இவரோ என சொல்லி நக்கு ஆங்கு – சிந்தா:7 1871/2
தொட்டு விடுத்தேன் அவனை தூது பிற சொல்லி
பட்ட பழி காத்து புகழே பரப்பின் அல்லால் – சிந்தா:7 1876/2,3
வெச்சென்றிட சொல்லி விரி கோதையவர் சூழ்ந்தார் – சிந்தா:9 2015/4
சொல்லி நீ நகவும் பெற்றாய் தோன்றல் மற்று என்னை என்றான் – சிந்தா:10 2317/4

TOP


சொல்லிய (5)

சொல்லிய நன்மை இல்லா சுணங்கன் இ உடம்பு நீங்கி – சிந்தா:4 960/1
காவாது அவள் கண்ணற சொல்லிய வெம் சொல் – சிந்தா:4 1069/3
துணைவனுக்கு உற்ற துன்பம் சொல்லிய தொடங்கினாளே – சிந்தா:4 1146/4
சொல்லிய வகையின் நோற்ப துணியும் வெம் வினைகள் என்னின் – சிந்தா:6 1430/2
சொல்லிய என்னை நோக்கி துளங்கல் நும் அடிகள் பாதம் – சிந்தா:7 1747/1

TOP


சொல்லியும் (1)

சொல்லியும் அறிவது உண்டோ என குழைந்து உருகி நைந்து – சிந்தா:5 1399/3

TOP


சொல்லிற்று (2)

நடையுளார் சொல்லிற்று எல்லாம் நம்பி சீவகன்-கண் கண்டாம் – சிந்தா:2 464/3
மெல் இயல் கங்குல் சொல்லிற்று இற்று என மிழற்றுகின்றாள் – சிந்தா:5 1399/4

TOP


சொல்லின் (4)

தொள்ளை உணர்வு இன்னவர்கள் சொல்லின் மடிகிற்பின் – சிந்தா:3 496/3
சொல்லின் வெள்ளி மலை தோடு அவிழ் தாமரை பொன் மலர் – சிந்தா:4 1150/3
நெடிய வாள் கண்கள் வாயா இமைப்பு எனும் சொல்லின் மற்று எம் – சிந்தா:7 1654/1
முற்றிமை சொல்லின் நங்கை மூன்று நாள் அடிசில் காட்டாள் – சிந்தா:12 2511/2

TOP


சொல்லினள் (1)

சொல்லினள் தேவி நிற்ப பதுமுகன் தொழுது சேர்ந்து – சிந்தா:8 1909/3

TOP


சொல்லினன் (1)

சொல்லினன் அவற்றது தொழிலும் தோன்றவே – சிந்தா:5 1217/4

TOP


சொல்லினாய் (2)

கலையார் தீம் சொல்லினாய் காணார்-கொல் கேள்வர் – சிந்தா:3 732/4
கரும்பார் தீம் சொல்லினாய் காணார்-கால் கேள்வர் – சிந்தா:3 734/4

TOP


சொல்லினாலும் (1)

வாய்ந்த இன் சொல்லினாலும் மாலை தாழ் முடியினாலும் – சிந்தா:7 1864/3

TOP


சொல்லினாளே (1)

படிமம் போன்று இருப்ப நோக்கி பம்மை தான் சொல்லினாளே – சிந்தா:13 2642/4

TOP


சொல்லினான் (2)

பொங்கு அரவ அல்குலார் என புகன்று சொல்லினான் – சிந்தா:9 1997/4
அல்லல் உற்று அழுபவர்க்கு அரசன் சொல்லினான் – சிந்தா:13 2982/4

TOP


சொல்லினானே (2)

தொடுத்து அலர் கோதை வீணா பதிக்கு இது சொல்லினானே – சிந்தா:3 555/4
தோள் இழுக்குற்ற மொய்ம்ப பண் என சொல்லினானே – சிந்தா:4 1088/4

TOP


சொல்லினோடே (1)

சீர் தோன்றவே மலரும் சென்று அவன் சொல்லினோடே
பார் தோன்ற நின்ற பகையை செறல்-பாலை என்றாள் – சிந்தா:8 1931/3,4

TOP


சொல்லீர் (1)

சுரும்பு சூழ் கண்ணி சூட்டி அவர்-கொலோ கயவர் சொல்லீர் – சிந்தா:3 678/4

TOP


சொல்லு (3)

சொல் மருந்து தந்தாய் சொல்லு நின் மனத்து – சிந்தா:4 1030/1
சொல் குன்றா புணர்கேன் சொல்லு போ என்றான் – சிந்தா:4 1031/4
தொங்கலான் முன்கை யாத்து சொல்லு நீ வந்தது என்ன – சிந்தா:8 1988/2

TOP


சொல்லு-மின் (4)

தொடு கழல் நரல் வீக்கி சொல்லு-மின் வந்தது என்றான் – சிந்தா:4 1086/4
துன்னுபு சூழ்ந்து தோன்ற சொல்லு-மின் செய்வது என்றான் – சிந்தா:4 1162/4
சொல்லு-மின் அடிகள் நீரும் போந்தவாறு எனக்கும் என்றான் – சிந்தா:7 1747/4
சொல்லு-மின் எமக்கும் ஆங்கு ஓர் சிலை தொட நாள் என்பாரும் – சிந்தா:10 2179/3

TOP


சொல்லு-மினும் (1)

சொல்லு-மினும் நீவிர் கற்ற காலம் என தேன் சோர் – சிந்தா:9 2027/3

TOP


சொல்லுபு (1)

தொடையல் அம் கோதை என்று சொல்லுபு தொழுது நிற்பார் – சிந்தா:2 464/4

TOP


சொல்லும் (11)

தொழுது அடி பணிந்து சொல்லும் துன்னலர் தொலைத்த வேலோய் – சிந்தா:1 203/2
கேட்டு அள பரிய சொல்லும் கிளர் ஒளி வனப்பும் நின்னை – சிந்தா:1 404/3
புள் ஒன்றே சொல்லும் என்று இ புன் தலை வேடன் பொய்த்தான் – சிந்தா:2 450/1
சொல்லும் என்றும் ஆய்ந்து கொண்டு துகிலிகை கணக்கு நோக்கி – சிந்தா:3 669/3
செவ்வியுள் செவிலி சொல்லும் சிலை இவர் நுதலினாய் நின் – சிந்தா:4 1046/2
நிறை திங்கள் ஒளியோடு ஒப்பான் புத்திசேன் நினைந்து சொல்லும்
மறைத்து இங்கண் நகரை வல்லே சுடுதும் நாம் சுடுதலோடும் – சிந்தா:4 1140/1,2
கானில் வாழ் குறவன் சொல்லும் கள்ளொடு ஊன் தேன் கைவிட்டால் – சிந்தா:5 1234/3
அழகன் சொல்லும் அணி செய் கோதை காமமும் கண்டும் கேட்டும் – சிந்தா:7 1593/2
நாளை உரை என்று கிளியோடு நக சொல்லும்
நாளினும் இ நங்கை துயர் நாளினும் அற்று இதுவே – சிந்தா:7 1879/3,4
வான் ஒருவன் தோன்றி மழை என முழங்கி சொல்லும்
தேன் உடை அலங்கல் வெள் வேல் சீவகன் என்னும் சிங்கம் – சிந்தா:10 2206/1,2
என்றலும் சுநந்தை சொல்லும் இறைவி-தான் கண்டது ஐயா – சிந்தா:13 2627/1

TOP


சொல்லுவ (1)

சொல்லுவ நீ சுகதா உரையாயே – சிந்தா:13 3096/4

TOP


சொல்லுவான் (2)

சொல்லுவான் இவைகள் சொன்னான் சூழ் கழல் காலினானே – சிந்தா:1 268/4
நல் தோளவள் சுண்ண நலம் சொல்லுவான்
உற்றீர் மறந்தீர் மனத்துள் உறைகின்றாள் – சிந்தா:4 1070/1,2

TOP


சொல்லை (1)

புனை வளை தோளி சொல்லை கிளி என கிள்ளை போகா – சிந்தா:6 1498/2

TOP


சொல்லொடு (1)

வண்ண மா கவின் சொல்லொடு மாய்ந்ததே – சிந்தா:3 760/4

TOP


சொல (2)

கையினால் சொல கண்களின் கேட்டிடும் – சிந்தா:4 997/1
பொன் விளைத்த புணர் முலையாள் சொல
இன் அளி குரல் கேட்ட அசுணமா – சிந்தா:5 1402/1,2

TOP


சொலலாமோ (1)

பட்டார் உறு துன்பம் பன்னி சொலலாமோ – சிந்தா:13 2798/4

TOP


சொலாட்கு (1)

செவ்வழி யாழின் ஊறும் தீம் சொலாட்கு உற்றது எல்லாம் – சிந்தா:5 1407/1

TOP


சொலாய் (3)

பட்டு உலாய் கிடக்கல் உற்றாய் என் சொலாய் பாவி என்றார் – சிந்தா:3 772/4
தனியள் ஆவது தக்கதுவோ சொலாய் – சிந்தா:6 1510/4
பண்ணின் தீம் சொலாய் படா முலை பாவாய் கொடியே பாங்கின் – சிந்தா:7 1587/3

TOP


சொலார் (6)

திருந்து ஒளி முறுவல் செ வாய் தீம் சொலார் மயங்கினாரே – சிந்தா:5 1298/4
அலத்தக கொழும் களி இழுக்கி அம் சொலார்
புலத்தலின் களைந்த பூண் இடறி பொன் இதழ் – சிந்தா:8 1945/1,2
தேன் வயிறு ஆர்ந்த கோதை தீம் சொலார் கண்கள் போலும் – சிந்தா:10 2290/2
சின்ன மலர் கோதை தீம் சொலார் போற்றி இசைப்ப திருமால் போந்தான் – சிந்தா:11 2369/4
பண் விளக்கிய பைங்கிளி இன் சொலார் – சிந்தா:12 2394/4
அம்மை அம் சொலார் ஆர உண்டவர் – சிந்தா:13 3131/2

TOP


சொலால் (2)

தண்ணிய சிறிய வெய்ய தழல் சொலால் சாற்றுகின்றான் – சிந்தா:3 747/4
விளைத்தனர் வெருவர தக்க வெம் சொலால்
உளைத்தனர் பூசல் விட்டு உணர்த்த ஓடினார் – சிந்தா:7 1851/3,4

TOP


சொலாள் (4)

சிந்தை செய்யும் சிறகர் கிளி தோற்கும் அம் தீம் சொலாள் – சிந்தா:4 1160/4
அற்றம் இல் அமிர்து ஆகிய அம் சொலாள் – சிந்தா:5 1295/4
பால் நெடும் தீம் சொலாள் ஓர் பாவை பந்து ஆடுகின்றாள் – சிந்தா:8 1951/4
கள் நக்க கண்ணி கமழ் பூம் குழல் கரும்பு ஏர் தீம் சொலாள் கதிர் முலைகளின் – சிந்தா:9 2066/1

TOP


சொலிப்பது (1)

திங்கள் உகிரில் சொலிப்பது போல் திலகம் விரலில் தான் நீக்கி – சிந்தா:1 350/1

TOP


சொலின் (4)

கிளி சொலின் இனியவர் நீக்க கிண்கிணி – சிந்தா:3 655/2
வதி கொண்டது ஓர் வெவ் அழல் வாய் சொலின் வேம் – சிந்தா:5 1186/4
தன்னை ஊர் கொண்ட தகையன தொகை சொலின் அறுநூறு – சிந்தா:10 2162/3
கிளி சொலின் இனிய சொல்லார் கிண்கிணி சிலம்பொடு ஏங்க – சிந்தா:13 2898/1

TOP


சொலீர் (1)

ஆதி கண் மரங்கள் போன்ற அம் சொலீர் இதனின் உங்கள் – சிந்தா:13 2713/2

TOP


சொலும் (1)

ஆய்ந்து அவட்கு இது சொலும் அலங்கல் வேலினான் – சிந்தா:8 1992/4

TOP


சொலே (2)

நினைத்து தான் நெடிதல் செல்லாது என் சொலே தெளிந்து நொய்தா – சிந்தா:10 2147/3
மணம் புடை மாலை மார்பன் ஒரு சொலே ஏது ஆக – சிந்தா:13 2887/3

TOP


சொற்கள் (1)

நொசி தவன் சொற்கள் என்றும் நோன் புணை தழுவி நெஞ்சில் – சிந்தா:4 1132/3

TOP


சொற்களின் (1)

மழலை சொற்களின் வைது இவை கூறினான் – சிந்தா:4 939/4

TOP


சொற்கு (1)

பாத்தில் சீர் பதுமுகன் படிவ ஒற்றாளர் சொற்கு
ஓத்து என கொடுத்தனன் கொழு நிதி உவகையில் – சிந்தா:7 1845/1,2

TOP


சொற்பால் (1)

சொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியால் கழூஉவி – சிந்தா:0 4/3

TOP


சொறியப்பெற்றாம் (1)

உமைத்துழி சொறியப்பெற்றாம் ஊதியம் பெரிதும் பெற்றாம் – சிந்தா:13 2617/4

TOP


சொன்ன (12)

சொன்ன வாயுளே ஒருவன் புள் குரல் – சிந்தா:2 415/3
நூல் படு புலவன் சொன்ன நுண்பொருள் நுழைந்து யானும் – சிந்தா:3 554/1
இறுகல் நீ இறைவன் சொன்ன ஐம்பத அமிர்தம் உண்டால் – சிந்தா:4 946/3
மட்டு வாய் அவிழ்ந்த தண் தார் தாமரை நாமன் சொன்ன
கட்டமை நீதி தன் மேல் காப்பு அமைந்து இவர்கள் நிற்ப – சிந்தா:4 1145/1,2
முயங்கினான் சொன்ன வண்டாய் முகிழ் முலை தெய்வம் சேர – சிந்தா:6 1530/1
வஞ்ச வாய் காமன் சொன்ன மணி நிற வண்டுகாள் நீர் – சிந்தா:6 1531/1
மற்று ஆங்கு சொன்ன மனைவியர் இ நால்வரவர் வயிற்றுள் தோன்றி – சிந்தா:6 1545/2
சொன்ன நல் மலரும் அல்லனவும் வீழ் பலவின் சூழ் சுளைகளும் – சிந்தா:7 1652/1
பன்னி சொன்ன பதினைந்தும் படுத்தார் பாவைமார்களே – சிந்தா:12 2470/4
பணிவு இலர் பறித்தனர் பரமன் சொன்ன நூல் – சிந்தா:13 2637/3
செறிய சொன்ன பொருள் தெளிந்தார் சேரார் விலங்கில் பெண் ஆகார் – சிந்தா:13 2817/1
சொன்ன ஆறு அல்லது எப்பொருளும் தோன்றுமே – சிந்தா:13 3056/4

TOP


சொன்னவாறு (1)

ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள் – சிந்தா:4 891/3

TOP


சொன்னவாறே (1)

தெவ்வரை கிழங்கினோடும் தின்று நீ சொன்னவாறே
எவ்வத்தை தணித்தும் என்றான் சீதத்தன் என்னலோடும் – சிந்தா:7 1736/2,3

TOP


சொன்னவே (1)

சோலை-வாய் சுரும்பு இனம் தொழுது சொன்னவே – சிந்தா:13 3032/4

TOP


சொன்னாய் (2)

உறுதி நீ உணர்ந்து சொன்னாய் உயர் கதி சேறி ஏடா – சிந்தா:5 1236/1
மருளின் சொன்னாய் மறப்பேனோ யான் நின்னை என்ன மகிழ் ஐங்கணை – சிந்தா:12 2593/3

TOP


சொன்னார் (10)

சேர்ந்தேன் இன்றே வீடு என நாய்கற்கு அவர் சொன்னார் – சிந்தா:4 1055/4
யாம் மகள் நேர்ந்தேம் இன்று என நாய்கற்கு அவர் சொன்னார் – சிந்தா:4 1056/4
படர் சூழ் நெஞ்சின் பாவை-தன் பண்பும் அவர் சொன்னார் – சிந்தா:4 1058/4
பொன்னினால் உடையும் கற்பு என்று உரைத்தவர் பொய்யை சொன்னார்
இன் இசை இவற்கு அலால் என் நெஞ்சு இடம் இல்லை என்றாள் – சிந்தா:5 1260/3,4
வேந்தனால் விடுக்கப்பட்டார் விடலையை கண்டு சொன்னார்
ஏந்தலே பெரிதும் ஒக்கும் இளமையும் வடிவும் இஃதே – சிந்தா:5 1410/1,2
எ துயரும் கெடும் என்று இன சொன்னார் – சிந்தா:7 1766/4
சூழ்ந்து தொழுது இறைஞ்சி சொன்னார் அவன் திறமே – சிந்தா:7 1810/4
மையலவர் போல மனம் பிறந்த வகை சொன்னார்
பைய நடக்க என்று பசிக்கு இரங்கி அவர் விடுத்தார் – சிந்தா:9 2013/2,3
ஏவல் வகை கண்டு அறிதும் என்று சிலர் சொன்னார் – சிந்தா:9 2016/4
நந்தட்டன் தன்னை நோக்கி நங்கையார் அடிகள் சொன்னார்
நொந்திட்டு முனிய வேண்டா துறந்திலம் நும்மை என்ன – சிந்தா:13 2648/2,3

TOP


சொன்னாள் (17)

பண்டு இயல் மணங்கள் எல்லாம் பரிவு அற பணிந்து சொன்னாள் – சிந்தா:3 618/4
தத்தை அம் கிளவி கையால் செவி முதல் அடைச்சி சொன்னாள் – சிந்தா:4 1048/4
அகல் மனை தாய்க்கு சொன்னாள் அவளும் தன் கேட்கு சொன்னாள் – சிந்தா:4 1052/4
அகல் மனை தாய்க்கு சொன்னாள் அவளும் தன் கேட்கு சொன்னாள் – சிந்தா:4 1052/4
கழி பெரும் கவலை நீங்க காரண நீர சொன்னாள் – சிந்தா:5 1386/4
மனை கண் வைகுதல் மாண்பொடு என சொன்னாள் – சிந்தா:5 1400/4
இன்னதால் அவன் கூறிற்று என சொன்னாள்
மன்னன் ஆருயிர் மா பெரும் தேவியே – சிந்தா:5 1403/3,4
திரு நலம் பிறந்து சொன்னாள் தேனினும் இனிய சொல்லாள் – சிந்தா:5 1404/4
திரு விரி கோதை நற்றாய் நிப்புதி சேர்ந்து சொன்னாள் – சிந்தா:6 1533/4
மந்திர மடந்தை அன்னாள் வசுந்தரி வந்து சொன்னாள் – சிந்தா:7 1719/4
அசைவின்று ஐயனை தம்-மின் என சொன்னாள் – சிந்தா:7 1814/4
மான் நலம் கொண்ட நோக்கி மகன் மனம் மகிழ சொன்னாள் – சிந்தா:8 1915/4
பொழி மது புயல் ஐங்கூந்தல் செவிலியை பொருந்தி சொன்னாள் – சிந்தா:9 2074/4
வண் புகழ் குபேரதத்தன் கேட்டனன் மனைவி சொன்னாள் – சிந்தா:9 2076/4
யாது எனக்கு அடிகள் முன்னே அருளியது என்ன சொன்னாள் – சிந்தா:13 2615/4
வடு உடைத்து என்று பின்னும் மாபெரும்தேவி சொன்னாள் – சிந்தா:13 2618/4
மா நிற தளிர் நல் மேனி மல்லிகை மாலை சொன்னாள் – சிந்தா:13 2707/4

TOP


சொன்னான் (55)

வெளிறு இலா கேள்வியானை வேறு கொண்டு இருந்து சொன்னான் – சிந்தா:1 200/4
நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான் – சிந்தா:1 204/4
ஆம் புடை தெரிந்து வேந்தற்கு அறிவு எனும் அமைச்சன் சொன்னான் – சிந்தா:1 232/4
நீர் கடல் மகர பேழ் வாய் மதனன் மற்று இதனை சொன்னான் – சிந்தா:1 256/4
வெண் நகை வெகுண்டு நக்கு கட்டியங்காரன் சொன்னான் – சிந்தா:1 258/4
சேண் நிலத்து இறைஞ்சி சொன்னான் செய்ய கோல் வெய்ய சொல்லான் – சிந்தா:1 264/4
சொல்லுவான் இவைகள் சொன்னான் சூழ் கழல் காலினானே – சிந்தா:1 268/4
வேண்டுவல் என்று சொன்னான் வில்_வலான் அதனை நேர்ந்தான் – சிந்தா:1 393/4
நீட்டித்தல் குணமோ என்று நெஞ்சகம் குளிர்ப்ப சொன்னான் – சிந்தா:2 484/4
மதுர மா மக்கள் சுற்றம் வினவி மற்று இதுவும் சொன்னான் – சிந்தா:3 543/4
எந்தைக்கு தந்தை சொன்னான் இன்னணம் என்று கேட்ப – சிந்தா:3 545/3
இங்கு அடி பிழைப்பது அன்றால் எம் குலம் என்று சொன்னான் – சிந்தா:3 547/4
திரு மணி கொடியை ஓரான் தெருமர மன்னன் சொன்னான் – சிந்தா:3 549/4
பனி இரு விசும்பில் தேவர் பான்மையிற்று என்று சொன்னான் – சிந்தா:3 553/4
அடுத்தனன் புல்லி வேந்தன் ஆற்றுகிலாது சொன்னான் – சிந்தா:3 562/4
ஆசு அறு வரவும் தந்தை வலித்ததும் அறிய சொன்னான் – சிந்தா:3 586/4
கால் பொரு கழலினானும் காவலன் கண்டு சொன்னான்
வேல் பொரு தானையானும் வேண்டுவ விதியின் நேர்ந்தான் – சிந்தா:3 588/3,4
கந்துகற்கு அவனும் சொன்னான் அவன் இது விளம்பினானே – சிந்தா:3 666/4
இம்பர் இன்று எனக்கு சொன்னான் இது பட்டது அடிகள் என்றான் – சிந்தா:3 670/4
இருந்த முலையாள் நின்றாளை நோக்கி இசையின் இது சொன்னான் – சிந்தா:3 717/4
வார் பொலி முலையினாட்கு வாய் திறந்து இதனை சொன்னான் – சிந்தா:3 758/4
கள் அவிழ் அலங்கல் மார்பன் கார் மழை முழக்கின் சொன்னான் – சிந்தா:3 768/4
கோலம் ஆக கொண்டு உண்-மின் என சொன்னான் – சிந்தா:4 893/4
உய்த்து உரை-மின் இவ்வண்ணம் என சொன்னான் – சிந்தா:4 895/4
அங்கு யான் உறைவல் எந்தை அறிக மற்று என்று சொன்னான் – சிந்தா:4 955/4
சூடுறு கழலினாற்கு சுதஞ்சணன் இதனை சொன்னான்
பாடல் வண்டு அரற்றும் பிண்டி பகவனது இறைமை போல – சிந்தா:4 957/1,2
கடி மதில் மூன்றும் எய்த கடவுளின் கனன்று சொன்னான் – சிந்தா:4 1087/4
பொங்கு இள முலையினார்க்கு புரவலன் இதனை சொன்னான் – சிந்தா:4 1096/4
பன்னிரு கோடி உய்த்து கந்துகன் பணிந்து சொன்னான் – சிந்தா:4 1117/4
ஊழ் பிணைந்து உருமின் சீறி உடல் சினம் கடவ சொன்னான் – சிந்தா:4 1120/4
சில பகல் கழிந்து காண்டி சிந்தி ஈது என்று சொன்னான் – சிந்தா:4 1131/4
கான் உகுக்குகின்ற பைம் தார் காவலன் தொழுது சொன்னான் – சிந்தா:5 1266/4
மன்னவன் சிறுவன் வண் கை புடைத்து மாழாந்து சொன்னான்
இன்னும் ஒன்று உண்டு சூழ்ச்சி என்னோடு அங்கு இருந்த நம்பி – சிந்தா:5 1282/2,3
நாறு பூம் கொம்பு அனாளை நோக்கு என நம்பி சொன்னான் – சிந்தா:5 1284/4
ஒழிந்து எயிறு ஊனம் செய்யும் கோள் என மற்றும் சொன்னான் – சிந்தா:5 1286/4
மங்கையோடு இருந்த போழ்து ஓர் மணி வண்டு கண்டு சொன்னான்
கங்குல் தான் நீங்கலுற்று கமழ் மலர் அணிந்த தாரான் – சிந்தா:6 1501/3,4
அ நாட்டு அ ஊர் அ பெயர் அல்லா பெயர் சொன்னான்
பொய்ம் நாட்டேனும் பொய் அல ஆற்றால் புகழ் வெய்யோன் – சிந்தா:7 1637/3,4
எய்த சென்று ஐயன் ஆர தழுவிக்கொண்டு இதனை சொன்னான் – சிந்தா:7 1641/4
அழி கவுள் யானை வேந்தற்கு அவன் திறம் அறிய சொன்னான்
மொழி எதிர் விரும்பி மன்னன் மூரி வில் தடக்கையாற்கு – சிந்தா:7 1644/2,3
புண்ணகத்து உறையும் வேலான் என புகழ்ந்து அரசன் சொன்னான் – சிந்தா:7 1646/4
வில் வலான் கொண்டு வேந்தன் வேறு இருந்து இதனை சொன்னான் – சிந்தா:7 1683/4
மையல் அம் களிறு போலும் மைத்துனற்கு இதனை சொன்னான் – சிந்தா:7 1718/4
மவ்வல் அம் மணந்த தண் தார் பதுமுகன் இதனை சொன்னான் – சிந்தா:7 1736/4
ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் ஒற்றி மற்று இதனை சொன்னான் – சிந்தா:7 1759/4
உருத்து எரி தவழ நோக்கி உடல் சினம் கடவ சொன்னான் – சிந்தா:7 1857/4
தேன் நிறம் கொண்ட கண்ணி சீவககுமரன் சொன்னான் – சிந்தா:7 1860/4
எரி அழல் முன்னர் நேர்ந்தேன் என் மகட்கு என்று சொன்னான் – சிந்தா:9 2079/4
விலங்கு அரசு அனைய காளை வெள்_வளைக்கு இதனை சொன்னான் – சிந்தா:9 2092/4
ஏற்று உரி முரசம் நாண எறி திரை முழக்கின் சொன்னான் – சிந்தா:10 2142/4
வெம் சிலை கொண்டு வெய்ய உரும் என முழங்கி சொன்னான் – சிந்தா:10 2318/4
தார் கோலம் மான் தேர் தொகை மாமன் தொழுது சொன்னான் – சிந்தா:11 2352/4
உரை விளைத்து உரைப்ப காளை உள்ளகம் குளிர்ந்து சொன்னான் – சிந்தா:13 2645/4
சிறுவன் வாய்மொழியை கேட்டே தேர் மன்னன்-தானும் சொன்னான்
உறு களிற்று உழவ மற்று உன் ஒளி முடி தாயம் எய்தி – சிந்தா:13 2883/1,2
விழு மணி பூணினான் வீற்று இரீஇ விதியின் சொன்னான் – சிந்தா:13 2905/4
கூர்ந்து அமிழ்த மாரி என கொற்றவனும் சொன்னான் – சிந்தா:13 3104/4

TOP


சொன்னீர் (1)

ஒட்டலன் இறைவன் சொன்னீர் நா நும அல்ல என்ன – சிந்தா:10 2150/3

TOP


சொன்னேன் (3)

இசைவது ஒன்று அன்று கண்டீர் இதனை யான் இரந்து சொன்னேன்
வசை உடைத்து அரசர்க்கு எல்லாம் வழிமுறை வந்தவாறே – சிந்தா:3 748/2,3
இணை மலர் கண்ணிக்கு ஒவ்வா இளி வரு கிளவி சொன்னேன் – சிந்தா:7 1746/4
அம் தில் அகன்றான் தமரொடு ஆங்கண் என சொன்னேன் – சிந்தா:7 1875/4

TOP


சொனார் (1)

கண்டனம் கண்ணினே என்று கண்டவர் சொனார் – சிந்தா:7 1844/4

TOP


சொனான் (1)

வாய்த்த அ நிரை வள்ளுவன் சொனான் – சிந்தா:2 419/4

TOP