கே – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேசம் 2
கேட்க 6
கேட்கிய 1
கேட்கின்றானே 1
கேட்கு 1
கேட்ட 3
கேட்டது 1
கேட்டலும் 5
கேட்டலோடும் 2
கேட்டவர் 1
கேட்டவாறே 1
கேட்டனன் 1
கேட்டார் 2
கேட்டாள் 3
கேட்டிடும் 1
கேட்டியேல் 1
கேட்டிரேல் 1
கேட்டின் 1
கேட்டு 17
கேட்டும் 6
கேட்டே 17
கேட்டேன் 3
கேட்ப 5
கேட்பது 1
கேட்பார் 1
கேட்பான் 3
கேட்பினும் 3
கேட்பேன் 1
கேடக 2
கேடகத்து 1
கேடகம் 6
கேடகமும் 2
கேடாம் 1
கேடு 9
கேடும் 2
கேண்-மின் 4
கேண்ம்-மின் 2
கேண்மை 2
கேண்மையை 1
கேண்மோ 8
கேணி 1
கேமசரி 1
கேமமாபுரம் 1
கேவல 3
கேழ் 14
கேழ்த்தவே 1
கேழ்த்து 1
கேழல் 1
கேழலும் 1
கேள் 8
கேள்-மதி 3
கேள்-மின் 5
கேள்-மின்கள் 1
கேள்-மினோ 1
கேள்வ 1
கேள்வர் 4
கேள்வரும் 1
கேள்வரை 1
கேள்வற்கு 1
கேள்வன் 4
கேள்வனும் 1
கேள்வனை 1
கேள்வி 13
கேள்விகள் 2
கேள்வியன் 1
கேள்வியார் 1
கேள்வியாற்கு 1
கேள்வியான் 2
கேள்வியானை 1
கேள்வியில் 1
கேள்வியினர் 1
கேளா 3
கேளாது 4
கேளாய் 2
கேளார் 2
கேளான் 1
கேளிர் 1
கேளீர் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கேசம் (2)

தம் கிடை இலா திரு கேசம் தன்னையும் – சிந்தா:13 3033/1
மணி உமிழ் திரு கேசம் வானவர் அகில் புகையும் – சிந்தா:13 3087/1

TOP


கேட்க (6)

பட்டதை எல்லாம் பல்லவர் கேட்க பகர்கு உற்றேன் – சிந்தா:1 360/4
இறை அணி கேட்க உய்த்திட்டனர் பூசல் – சிந்தா:2 427/4
நம்பி நந்தட்டன் கேட்க நங்கட்கு குரவர் உள்ளார் – சிந்தா:7 1737/1
எம் குலம் அடிகள் கேட்க என்றலும் எழுந்த ஓர் பூசல் – சிந்தா:7 1856/1
பருகு பை கழலினாருள் பதுமுகன் கேட்க என்றே – சிந்தா:8 1889/4
நம்பன் சிறிதே இடைதந்து இது கேட்க நாளும் – சிந்தா:8 1975/1

TOP


கேட்கிய (1)

உரை விளையாமை மைந்தன் கேட்கிய உவந்து நோக்கி – சிந்தா:1 397/1

TOP


கேட்கின்றானே (1)

தக்காய் குறித்தது உரை என்றான் தான் உரைப்ப கேட்கின்றானே – சிந்தா:6 1544/4

TOP


கேட்கு (1)

அகல் மனை தாய்க்கு சொன்னாள் அவளும் தன் கேட்கு சொன்னாள் – சிந்தா:4 1052/4

TOP


கேட்ட (3)

இன் அளி குரல் கேட்ட அசுணமா – சிந்தா:5 1402/2
மற்று அவள் சொல்ல கேட்ட மைந்தர்கள் – சிந்தா:7 1764/1
எல்லையில் அறவுரை இனிய கேட்ட பின் – சிந்தா:13 2849/1

TOP


கேட்டது (1)

எம் கோ மற்று என் திறம் நீர் கேட்டது என்றாற்கு எரி மணி பூண் – சிந்தா:7 1882/1

TOP


கேட்டலும் (5)

புள்ளின் வாய் உரை கேட்டலும் பொன் செய்வேல் – சிந்தா:4 1029/1
தடம் கண்ணவள் தாய் அது கேட்டலும் தக்கது என்றாள் – சிந்தா:4 1061/4
பிணி செய் நோயேன் யான் கிடப்ப பிறர்-வாய் அது கேட்டலும்
துணிக போதும் என விடுத்தாய் போந்தேன் துயர் உழப்ப நீ – சிந்தா:7 1589/2,3
ஐயற்கு என்று உரைத்த மாற்றம் கேட்டலும் அலங்கல் நாய்கன் – சிந்தா:9 2072/1
பேர் இசையான் இசை கேட்டலும் பெய்ம் முகில் – சிந்தா:10 2208/3

TOP


கேட்டலோடும் (2)

பாட்டினை கேட்டலோடும் பழம் பகை நட்பும் ஆமே – சிந்தா:7 1741/1
ஏதத்தை கேட்டலோடும் இரு கணும் பிறந்து மாழ்கி – சிந்தா:7 1799/2

TOP


கேட்டவர் (1)

கிளைக்கு எலாம் சிறப்பு செய்து கேட்டவர் மருள ஐந்து ஊர் – சிந்தா:12 2570/2

TOP


கேட்டவாறே (1)

முந்தை தான் கேட்டவாறே முழுது எடுத்து இயம்புகின்றான் – சிந்தா:3 545/4

TOP


கேட்டனன் (1)

வண் புகழ் குபேரதத்தன் கேட்டனன் மனைவி சொன்னாள் – சிந்தா:9 2076/4

TOP


கேட்டார் (2)

இன் அமிர்தமாக இளையாரும் அது கேட்டார் – சிந்தா:9 2035/4
செம் நீர் திரள் வடம் போல் சிந்தாமணி ஓதி உணர்ந்தார் கேட்டார்
இ நீரர் ஆய் உயர்வர் ஏந்து பூம் தாமரையாள் காப்பாளாமே – சிந்தா:13 3143/3,4

TOP


கேட்டாள் (3)

வண் தாரான் செவ்வி வாய் கேட்டாள் தன் மெய் மகிழ்ந்தாள் – சிந்தா:4 1039/4
இட்டு இடை பவள செ வாய் தத்தையும் இதனை கேட்டாள் – சிந்தா:4 1145/4
பட்ட எல்லாம் பரியாது உரைத்தான் அவளும் கேட்டாள்
விட்டாள் ஆர்வம் அவன்-கண் இவன் மேல் மைந்து உறவினால் – சிந்தா:7 1601/1,2

TOP


கேட்டிடும் (1)

கையினால் சொல கண்களின் கேட்டிடும்
மொய் கொள் சிந்தையின் மூங்கையும் ஆயினேன் – சிந்தா:4 997/1,2

TOP


கேட்டியேல் (1)

கிளை பிரிவு அரும் சிறை இரண்டும் கேட்டியேல்
விளைக்கிய வித்து அனாய் இரு மற்று ஈங்கு என – சிந்தா:13 2867/1,2

TOP


கேட்டிரேல் (1)

கிழவுதான் விளைக்கும் பைம் கூழ் கேட்டிரேல் பிணி செய் பன் மா – சிந்தா:1 379/3

TOP


கேட்டின் (1)

மிக்கார் தம் கேட்டின் கண் மேன்மை இல்லா சிறியார் போல் – சிந்தா:5 1227/1

TOP


கேட்டு (17)

உறைகின்ற காலத்து அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின் – சிந்தா:0 27/3
கேட்டு அள பரிய சொல்லும் கிளர் ஒளி வனப்பும் நின்னை – சிந்தா:1 404/3
கேட்டு இது மறக்க நம்பி கேள் முதல் கேடு சூழ்ந்த – சிந்தா:2 475/1
நாவினுள் அமிர்தம் கேட்டு நாடகம் நயந்து சின்னாள் – சிந்தா:3 504/4
தன் அமர் தேவி கேட்டு தத்தைக்கே தக்கது என்றாள் – சிந்தா:3 552/4
மந்திரம் கேட்டு நான்கும் வான் எட்டி புகுவவே போல் – சிந்தா:3 793/1
யாழ் எழீஇ பாட கேட்டு ஓர் அரம்பையை சேர்ந்து இருந்தான் – சிந்தா:4 1155/4
போர் கொள்வேல் மன்னன் எல்லா கலைகளும் புகன்று கேட்டு
நீர் கொள் மா கடல் அனாற்கு நிகர் இல்லை நிலத்தில் என்றான் – சிந்தா:5 1303/3,4
பத்திமையால் பாடப்படுவான் தாள் பாட கேட்டு
ஒத்து அரம்பை அன்னாள் உவந்து இவளொடு ஒப்பான் ஓர் – சிந்தா:6 1470/2,3
வருந்தி ஈன்றாள் மறந்து ஒழிந்தாள் வளர்த்தாள் சொல் கேட்டு இல் கடிந்தாள் – சிந்தா:7 1661/1
மனத்து-இடை மகிழ்ந்து கேட்டு மைந்தன் நந்தட்டனே ஆம் – சிந்தா:7 1723/2
வந்தார் வாய் தீது இன்மை கேட்டு மறைந்திருந்து – சிந்தா:7 1806/2
மண் மல்கு தாரான் பெருமாட்டி வாய் மொழி கேட்டு
உள் மல்கு நெஞ்சினராய் ஒய்யெனவே வெய்துயிரா – சிந்தா:7 1808/2,3
மாற்றத்தை கேட்டு சென்று மத களிறு அடக்கி மேல் கொண்டு – சிந்தா:10 2146/2
கேட்டு நீர் நிறைந்து கேடு இல் விசையை கண் குளிர்ந்த அன்றே – சிந்தா:10 2325/4
வாய்த்து அங்கு கேட்டு மட மஞ்ஞை குழாத்தின் ஏகி – சிந்தா:11 2348/2
பூவையும் கிளியும் கேட்டு புழை முகம் வைத்து நோக்கி – சிந்தா:12 2510/1

TOP


கேட்டும் (6)

பிறன் நலம் அரற்ற கேட்டும் பீடினால் கனிந்த காம – சிந்தா:3 688/1
இருதலை பயனும் எய்தார் என்று யாம் கேட்டும் அன்றே – சிந்தா:6 1536/4
அழகன் சொல்லும் அணி செய் கோதை காமமும் கண்டும் கேட்டும்
முழவு தோளான் முறுவலித்து ஈங்கே இரு நீ என்று – சிந்தா:7 1593/2,3
ஆய்ந்து கேட்டும் அருளான் என்று அவிந்தன – சிந்தா:12 2482/3
அறவுரை பின்னை கேட்டும் அடிகள் மற்று எமக்கு வல்லே – சிந்தா:13 2633/1
ஏவல் செய்து இறைஞ்சி கேட்டும் அணிகம் மா பணிகள் செய்தும் – சிந்தா:13 2811/2

TOP


கேட்டே (17)

அண்ணல் தான் உரைப்ப கேட்டே அடு களிற்று எருத்தின் இட்ட – சிந்தா:1 202/1
பெரு மகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றி கேட்டே
திருமகள் தான் இனி செய்வதை எல்லாம் – சிந்தா:1 334/1,2
கோள் இயங்கு உழுவை அன்ன கொடும் சிலை உழவன் கேட்டே
தாள் இயல் தவங்கள் தாயா தந்தை நீ ஆகி என்னை – சிந்தா:1 405/1,2
என்று அவன் உரைப்ப கேட்டே இமயமும் நிகர்க்கல் ஆற்றா – சிந்தா:4 956/1
தேன் நெய் போன்று இனிய சொல்லாள் சிறுமுதுக்குறைமை கேட்டே
ஊன் நைந்து உருகி கைத்தாய் உள் நிறை உவகை பொங்க – சிந்தா:4 1051/1,2
என்று அவள் உரைப்ப கேட்டே இடிபட முழங்கி செம் தீ – சிந்தா:4 1084/1
நஞ்சு அனான் உரைப்ப கேட்டே நாய்கனும் நடுங்கி உள்ளம் – சிந்தா:4 1122/1
வரி கச்சில் பிணிக்கப்பட்டான் மன்னனால் என்ன கேட்டே
தருக்கு உடை வேழம் வாளார் ஞாட்பினுள் தகைமை சான்ற – சிந்தா:4 1133/2,3
நட்டவற்கு உற்ற கேட்டே பதுமுகன் நக்கு மற்று ஓர் – சிந்தா:4 1134/1
ஒற்றன் வந்து உரைப்ப கேட்டே ஒத்ததோ என் சொல் என்னா – சிந்தா:4 1139/1
வில் திறல் குருசிற்கு எல்லாம் வேறுவேறு உரைப்ப கேட்டே
சுற்றிய தோழிமாரை விடுத்தனன் தொழுது நின்றான் – சிந்தா:5 1222/2,3
மதிதரன் என்னும் மாசு இல் மந்திரி சொல்ல கேட்டே
உதிதர உணர்வல் யானும் ஒப்பினும் உருவினானும் – சிந்தா:5 1340/1,2
குன்று அனான் உரைப்ப கேட்டே பாகத்தார் குடும்பம் நீக்கி – சிந்தா:6 1437/1
நாணொடு மிடைந்த தேன் கொள் நடுக்குறு கிளவி கேட்டே
பூண் வடு பொறிப்ப புல்லி புனை நலம் புலம்ப வைகேன் – சிந்தா:9 2094/1,2
ஓலையுள் பொருளை கேட்டே ஒள் எயிறு இலங்கு நக்க – சிந்தா:10 2148/1
துன்னி மற்று அறத்தை கேட்டே துகில் நெருப்பு உற்றதே போல் – சிந்தா:13 2880/1
சிறுவன் வாய்மொழியை கேட்டே தேர் மன்னன்-தானும் சொன்னான் – சிந்தா:13 2883/1

TOP


கேட்டேன் (3)

மொய் குரல் முரசம் நாணும் தழங்கு குரல் முழங்க கேட்டேன் – சிந்தா:1 403/4
வேல் முழங்கு தானை விளையாடியதும் கேட்டேன் – சிந்தா:3 845/4
உள்ளிய பொருள் மற்று அஃதேல் ஓ பெரிது உவப்ப கேட்டேன்
வள் இதழ் கோதை மற்று நகரொடும் கடியுமேனும் – சிந்தா:4 905/2,3

TOP


கேட்ப (5)

எந்தைக்கு தந்தை சொன்னான் இன்னணம் என்று கேட்ப
முந்தை தான் கேட்டவாறே முழுது எடுத்து இயம்புகின்றான் – சிந்தா:3 545/3,4
முள் எயிறு இலங்க நக்கு முடி குழாம் மன்னர் கேட்ப
கள் அவிழ் அலங்கல் மார்பன் கார் மழை முழக்கின் சொன்னான் – சிந்தா:3 768/3,4
சீவகன் அகன்ற மார்பம் ஓலையா திசைகள் கேட்ப
காய்பவன் கள்வர் என்ன எழுதுவித்திடுவல் இன்னே – சிந்தா:4 1121/2,3
திரு மலர் கோதை ஐம்பால் தேவியர் தொடர்பு கேட்ப
எரி மணி பூணினானும் இன்னணம் இயம்பினானே – சிந்தா:5 1171/3,4
தந்து தரன் கேட்ப இது சாமி வலித்தானா – சிந்தா:7 1875/2

TOP


கேட்பது (1)

கேட்பது விரும்பி நாய்கன் கிளைக்கு எலாம் உணர்த்தி யார்க்கும் – சிந்தா:9 2078/1

TOP


கேட்பார் (1)

உண்டு என உரையில் கேட்பார் உயிர் உறு பாவம் எல்லாம் – சிந்தா:1 303/1

TOP


கேட்பான் (3)

நன்று அவன் வரவு கேட்பான் நம்பி நீ யாரை என்றான் – சிந்தா:4 954/4
ஒள் இழை அவளை கேட்பான் உறு வலி செல்லும் ஆங்கண் – சிந்தா:7 1696/2
இலை விரவு பூம் பைம் தார் வேந்தன் ஏந்தல் குலம் கேட்பான்
மலை விரவு நீள் மார்பின் மைந்தன் தோழர் முகம் நோக்கி – சிந்தா:7 1885/1,2

TOP


கேட்பினும் (3)

கண்ணின் ஆடவர் காணினும் கேட்பினும்
உண்ணலேன் இனி என்று உரையாடினாள் – சிந்தா:4 902/3,4
கண்ணின் காணினும் கட்டுரை கேட்பினும்
நண்ணி தீண்டினும் நல் உயிர் நிற்கும் என்று – சிந்தா:5 1294/1,2
நாடி மற்று அவர் பெயர் நயந்து கேட்பினும்
வீடுவல் உயிர் என வெகுளும் மற்று அவள் – சிந்தா:9 2000/2,3

TOP


கேட்பேன் (1)

மிக்கான் உரைப்பதுவும் மிக்கதே போலுமால் வினவி கேட்பேன்
தக்காய் குறித்தது உரை என்றான் தான் உரைப்ப கேட்கின்றானே – சிந்தா:6 1544/3,4

TOP


கேடக (2)

கேடக வாள் தொழில் இடமும் கேடு இலா – சிந்தா:1 84/3
மணி இலங்கு ஒண் பொன் வை வாள் கேடக மருங்கு வைத்த – சிந்தா:7 1721/2

TOP


கேடகத்து (1)

வான் மயிர் செய் கேடகத்து இடித்து வாள் வலை அரிந்து – சிந்தா:1 279/2

TOP


கேடகம் (6)

பயில் கதிர் பரு மணி பன் மயிர் செய் கேடகம்
வெயில் என திரித்து விண் வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர் – சிந்தா:1 276/2,3
கேடகம் அறுப்ப நடு அற்று அரவு சேர்ந்து ஆங்கு – சிந்தா:1 281/2
பைம்பொன் கேடகம் வாளொடு பற்றுபு – சிந்தா:3 633/3
கேடகம் வாளொடு ஏந்தி கெடுக இ நகரம் என்னா – சிந்தா:7 1751/2
போர் மயிர் கேடகம் புளக தோற்பரம் – சிந்தா:10 2218/1
பொன் நாணினர் பொருவில் உயர் புனை கேடகம் திரியா – சிந்தா:10 2264/3

TOP


கேடகமும் (2)

கோல் அருவி வெம் சிலையான் கூர் வாளொடு மணி கேடகமும் மறமும் ஆற்றி – சிந்தா:1 291/2
சிங்கத்து உரி போர்த்த செழும் கேடகமும் வாளும் – சிந்தா:10 2166/1

TOP


கேடாம் (1)

ஆணை இ உலகு கேடாம் அரசு கோல் கோடின் என்றான் – சிந்தா:1 255/4

TOP


கேடு (9)

கிளி வளர் பூ மருது அணிந்து கேடு இலா – சிந்தா:1 64/1
கிள்ளையோடு பால் உணும் கேடு இல் பூவை பாடவே – சிந்தா:1 70/4
கேடக வாள் தொழில் இடமும் கேடு இலா – சிந்தா:1 84/3
கேட்டு இது மறக்க நம்பி கேள் முதல் கேடு சூழ்ந்த – சிந்தா:2 475/1
கேடு இல் சீர் கலுழன் ஆய கலுழ வேகற்கு தேவி – சிந்தா:3 537/2
வாணிகம் ஒன்றும் தேற்றாய் முதலொடும் கேடு வந்தால் – சிந்தா:3 770/1
கேமமாபுரம் எனும் கேடு இல் நல் இசை – சிந்தா:6 1448/1
கிளையவர் சூழ வாமான் வாணிகன் ஆகி கேடு இல் – சிந்தா:9 2101/3
கேட்டு நீர் நிறைந்து கேடு இல் விசையை கண் குளிர்ந்த அன்றே – சிந்தா:10 2325/4

TOP


கேடும் (2)

ஆக்கமும் கேடும் உற்றீர் அடிகளே அல்லீர் மேலை – சிந்தா:7 1727/1
வாய்ப்படும் கேடும் இன்றாம் வரிசையின் அரிந்து நாளும் – சிந்தா:13 2907/1

TOP


கேண்-மின் (4)

கற்பகம் காமவல்லி அனைய நீர் கேண்-மின் என்று – சிந்தா:4 1129/3
கலை வல்லீர் இன்னும் கேண்-மின் இன்னது என்று உரைக்கும் ஆங்கண் – சிந்தா:4 1135/3
உலவும் மனம் வைத்து உறுதி கேண்-மின் இது என்றான் – சிந்தா:13 2922/4
இ பொருள் வேண்டுகின்றீர் இதனை நீர் கேண்-மின் என்றான் – சிந்தா:13 2984/4

TOP


கேண்ம்-மின் (2)

கேளிர் எனக்கு உற்ற கேண்ம்-மின் நீர் என – சிந்தா:3 517/3
ஏம் உற்றீர் இன்னும் கேண்ம்-மின் இரதியை புணர்தும் என்று – சிந்தா:3 754/3

TOP


கேண்மை (2)

இன்றையது அன்று கேண்மை எமர் நுமர் எழுவர்-காறும் – சிந்தா:3 544/1
பெரியவர் கேண்மை போலும் பெறற்கு அரும் வாச எண்ணெய் – சிந்தா:13 2737/2

TOP


கேண்மையை (1)

வீறு உயர் புகழை வித்தி கேண்மையை விளைத்தி இன்னே – சிந்தா:5 1284/3

TOP


கேண்மோ (8)

காவல குறிப்பு அன்றேனும் கருமம் ஈது அருளி கேண்மோ
நாவலர் சொல் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா – சிந்தா:1 206/1,2
ஏ இயல் சிலையினானை இ பொருள் கேண்மோ என்றான் – சிந்தா:1 384/4
அரும் பொனாய் கேண்மோ என்றான் அலை கடல் விருப்பில் கொண்டாள் – சிந்தா:1 388/4
மன்னவ அருளி கேண்மோ மடந்தை ஓர் கொடியை மூதூர் – சிந்தா:4 1118/1
பெண் எனப்படுவ கேண்மோ பீடு இல பிறப்பு நோக்கா – சிந்தா:7 1597/1
கூம்பாத செல்வ கொடியே இது கேண்மோ என்றான் – சிந்தா:8 1976/4
இற்று என உரைப்ப கேண்மோ இலங்கு பூண் அலங்கல் மார்பின் – சிந்தா:13 2609/3
எழுந்து வண்டு இமிரும் பைம் தார் இறைவ நீ கேண்மோ என்றான் – சிந்தா:13 2775/4

TOP


கேணி (1)

தேய் பிறை உருவ கேணி தேறு நீர் மலர்ந்த தேனார் – சிந்தா:13 2998/1

TOP


கேமசரி (1)

சீர் நலம் கடந்து கேமசரி என திசைகள் எல்லாம் – சிந்தா:6 1450/3

TOP


கேமமாபுரம் (1)

கேமமாபுரம் எனும் கேடு இல் நல் இசை – சிந்தா:6 1448/1

TOP


கேவல (3)

தொழுவில் தோன்றிய தோமறு கேவல
கிழவன் மூதெயில் போல் கிளர்வுற்றதே – சிந்தா:4 856/3,4
பாட்டு அரும் கேவல பரவை மா கடல் – சிந்தா:13 3060/1
கேவல மடந்தை என்னும் கேழ் கிளர் நெடிய வாள் கண் – சிந்தா:13 3117/1

TOP


கேழ் (14)

கிடங்கு சூழ் மதில் கேழ் கிளர் பூம் கொடி – சிந்தா:3 529/1
நெருங்கிய மணி வில் காப்ப நீண்டு உலாய் பிறழ்வ செம் கேழ்
கரும் கயல் அல்ல கண்ணே என கரி போக்கினாரே – சிந்தா:3 626/3,4
செப்பு இணை அனைய செம் கேழ் வன முலை பொருது சேப்ப – சிந்தா:7 1691/2
கிளை இளம் பிடிகள் ஐஞ்நூற்று-இடை கேழ் அரக்கு – சிந்தா:7 1830/3
வடி கேழ் மலர் நெடும் கண் வார் புயலும் காலும் – சிந்தா:9 2049/2
கேழ் கிளர் எரி கண் பேழ் வாய் கிளர் பெரும் பாம்பினோடும் – சிந்தா:10 2298/1
மண் கேழ் மணியின் நுழையும் துகில் நூலின் வாய்த்த – சிந்தா:11 2346/1
நுண் கேழ் நுசுப்பின் மடவீர் நும்மை நோவ செய்யேன் – சிந்தா:11 2346/2
ஒண் கேழ் கழுநீர் ஒளி முத்தம் உமிழ்வதே போல் – சிந்தா:11 2346/3
பண் கேழ் மொழியீர் நெடும் கண் பனி வீழ்த்தல் வேண்டா – சிந்தா:11 2346/4
கிளர்ந்து அகில் சாந்து பூ கமழ்ந்து கேழ் கிளர் – சிந்தா:12 2408/2
செம் மலர் நுதலும் நாவும் திருந்து ஒளி உகிரோடு அம் கேழ்
விம்மிதப்பட்டு வீழ அலத்தகம் எழுதியிட்டாள் – சிந்தா:12 2446/2,3
தேன் உடை குவளை செம் கேழ் நாகு இளம் தேரை புல்லி – சிந்தா:13 2901/2
கேவல மடந்தை என்னும் கேழ் கிளர் நெடிய வாள் கண் – சிந்தா:13 3117/1

TOP


கேழ்த்தவே (1)

கிளை கழுநீர் கணும் சிவப்பில் கேழ்த்தவே – சிந்தா:4 1016/4

TOP


கேழ்த்து (1)

கிளை நரம்பு இசையும் கூத்தும் கேழ்த்து எழுந்து ஈன்ற காம – சிந்தா:12 2598/3

TOP


கேழல் (1)

ஏர் மத கேழல் எய்வான் ஏறலும் பொறியின் ஏறுண்டு – சிந்தா:10 2183/3

TOP


கேழலும் (1)

நெல்லும் நீர் விளை கேழலும் தோரையும் – சிந்தா:6 1422/2

TOP


கேள் (8)

பாவமும் பழியும் உற்றார் பற்பலர் கேள் இது என்றான் – சிந்தா:1 206/4
கேட்டு இது மறக்க நம்பி கேள் முதல் கேடு சூழ்ந்த – சிந்தா:2 475/1
மேலை நாள் பட்டது ஒன்று விளம்புவல் கேள் இது என்றான் – சிந்தா:3 671/4
பொன் நலம் கொடியனாய் ஓர் பொருள் உரை கேள் இது என்றான் – சிந்தா:4 1123/4
பின்றையும் நிகழ்வது உண்டு பேசுவல் கேள் இது என்றான் – சிந்தா:4 1130/4
பிணி எழுந்து அவலிக்கின்ற பேதை நீ கேள் இது என்றான் – சிந்தா:7 1582/4
வந்த வரவு என்னை என வாள் கண் மடவாய் கேள்
சிந்தை நலிகின்ற திரு நீர் குமரி ஆட – சிந்தா:9 2020/1,2
பெருமை வீட்டொடும் பேசுவல் கேள் இது பெரியோய் – சிந்தா:13 2748/4

TOP


கேள்-மதி (3)

செவ்விதின் சிறிது கூற கேள்-மதி செல்வ வேந்தே – சிந்தா:13 2762/4
போற்றினை கேள்-மதி பொரு இல் புண்ணியர்க்கு – சிந்தா:13 2829/3
மன்னவ கேள்-மதி வானில் வாழ்பவர் – சிந்தா:13 3056/1

TOP


கேள்-மின் (5)

சிவம்புரி நெறியை சேர செப்பும் இ பொருளும் கேள்-மின் – சிந்தா:3 605/4
ஆடு அமை தோளினீர் அஃது ஒட்டுமேல் கேள்-மின் என்ன – சிந்தா:9 2046/2
கேள்-மின் கேள்-மின்கள் யாவரும் இனியன கேள்-மின் – சிந்தா:12 2389/1
கேள்-மின் கேள்-மின்கள் யாவரும் இனியன கேள்-மின்
பூண்-மின் நித்தில மணி வடம் பூசு-மின் சாந்தம் – சிந்தா:12 2389/1,2
விட்டு நீர் வினவி கேள்-மின் விழுத்தகை அவர்கள் அல்லால் – சிந்தா:13 2925/1

TOP


கேள்-மின்கள் (1)

கேள்-மின் கேள்-மின்கள் யாவரும் இனியன கேள்-மின் – சிந்தா:12 2389/1

TOP


கேள்-மினோ (1)

தரும் படித்து அன்றியும் சாற்றுவல் கேள்-மினோ – சிந்தா:7 1827/4

TOP


கேள்வ (1)

வேய் உலாம் தோளினார்-தம் விழு துணை கேள்வ நின் கண்டு – சிந்தா:7 1581/2

TOP


கேள்வர் (4)

கலையார் தீம் சொல்லினாய் காணார்-கொல் கேள்வர் – சிந்தா:3 732/4
கறை வேல் உண்கண்ணினாய் காணார்-கொல் கேள்வர் – சிந்தா:3 733/4
கரும்பார் தீம் சொல்லினாய் காணார்-கால் கேள்வர் – சிந்தா:3 734/4
வருவர் நம் கேள்வர் இன்னே வாள் நுதல் பசலை தீர – சிந்தா:7 1740/1

TOP


கேள்வரும் (1)

கெண்டை வென்ற கண்ணார்களும் கேள்வரும்
உண்டு மூத்து இடையூறு இலர் சேறலால் – சிந்தா:12 2581/2,3

TOP


கேள்வரை (1)

பொருந்து கேள்வரை புல்லிய பொன் அனார் – சிந்தா:5 1195/3

TOP


கேள்வற்கு (1)

உயங்குவாள் உணர்ந்து கேள்வற்கு ஊனமும் பிரிவும் அஞ்சி – சிந்தா:6 1530/2

TOP


கேள்வன் (4)

மின் ஒழுகு சாயல் மிகு பூண் பதுமை கேள்வன்
கொன் ஒழுகு வேல் யவதத்தன் குளிர் தூங்கும் – சிந்தா:3 494/1,2
வினையமாமாலை கேள்வன் குபேரமித்திரற்கு சொல்ல – சிந்தா:4 1053/1
வரி வளை தோளி கேள்வன் வரும் என வலித்த சொல்லால் – சிந்தா:5 1404/3
செயிர் தீர் திரள் கை சிறு பிடி கேள்வன்
அயிராவணத்தொடு சூள் உறும் ஐயன் – சிந்தா:10 2126/2,3

TOP


கேள்வனும் (1)

நில மகட்கு கேள்வனும் நீள் நிரை நப்பின்னை – சிந்தா:2 482/3

TOP


கேள்வனை (1)

கேள்வனை கனவில் காணாள் கிளர் மணி பூணினாளே – சிந்தா:6 1506/4

TOP


கேள்வி (13)

பா வீற்றிருந்த கலை பார் அற சென்ற கேள்வி
கோ வீற்றிருந்த குடி நாட்டு அணி கூறல் உற்றேன் – சிந்தா:1 30/3,4
கீதத்தான் மீண்டன கேள்வி கின்னரம் – சிந்தா:3 660/2
பரந்த கேள்வி துறைபோய பைம் தார் மார்பன் பசும்பொன் யாழ் – சிந்தா:3 717/2
வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர் – சிந்தா:4 882/1
கெழீஇயினாள் கேள்வி நல் யாழ் கிளை நரம்பு அனைய சொல்லாள் – சிந்தா:5 1386/3
பல் நூல் கேள்வி உடையேன் யான் பவதத்தன் என்பேன் என்றான் – சிந்தா:7 1594/4
செவி மத கடல் அம் கேள்வி சீவகன் கழல்கள் வாழ்த்தி – சிந்தா:10 2292/3
ஆய்ந்த கேள்வி அவன் கான் முளையாய் வழி தோன்றினான் – சிந்தா:12 2492/1
தோய்ந்த கேள்வி துறைபோய் அலங்காரமும் தோற்றினான் – சிந்தா:12 2492/2
நூற்கு இடம் கொடுத்த கேள்வி நுண் செவி மண் கொள் ஞாட்பில் – சிந்தா:13 2916/1
பால்கடல் கேள்வி யாரை பழிப்பு அற நாட்டினானே – சிந்தா:13 2916/4
வெண் திரை வியக்கும் கேள்வி விசயை-கண் அபயம் வைத்தான் – சிந்தா:13 2991/4
புணரி போல் சிறு புன் கேள்வி படையொடு புகைந்து பொங்கி – சிந்தா:13 3081/1

TOP


கேள்விகள் (2)

ஆழி மால் கடல் அகன் பெரும் கேள்விகள் துறைபோய் – சிந்தா:12 2386/1
கெடுதல் அவ்வழி இல் எனின் கேள்விகள் துறைபோய் – சிந்தா:13 2757/1

TOP


கேள்வியன் (1)

வீங்கு கல்வியன் மெய்ப்பொருள் கேள்வியன்
ஆங்கு நாமும் அளக்குவம் என்று தம் – சிந்தா:6 1425/2,3

TOP


கேள்வியார் (1)

மா நிரை பண்ணினார் வடித்த நூல் கேள்வியார் – சிந்தா:7 1846/4

TOP


கேள்வியாற்கு (1)

தங்கிய கேள்வியாற்கு தையலார் சேர்த்தினாரே – சிந்தா:13 2856/4

TOP


கேள்வியான் (2)

தகண் இலா கேள்வியான் கண் தங்கியது என்று பின்னும் – சிந்தா:4 1052/2
வெளிறு இலா கேள்வியான் விருப்பொடு எய்தினான் – சிந்தா:7 1617/4

TOP


கேள்வியானை (1)

வெளிறு இலா கேள்வியானை வேறு கொண்டு இருந்து சொன்னான் – சிந்தா:1 200/4

TOP


கேள்வியில் (1)

முடி சடை முனிவன் அன்று கேள்வியில் கொண்ட வேல் கண் – சிந்தா:10 2285/1

TOP


கேள்வியினர் (1)

துயிற்றிய பல் கேள்வியினர் தூற்றிக்கொளப்பட்டார் – சிந்தா:10 2164/3

TOP


கேளா (3)

பகை நரம்பு இசையும் கேளா பைம் கதிர் பசும்பொன் கோயில் – சிந்தா:10 2138/1
எழுவார் யாழும் ஏத்து ஒலியும் இறைவன் கேளா துயில் ஏற்றான் – சிந்தா:11 2355/4
அரும் பொருள் நீதி கேளா அரசனின் சுருங்கி நந்தும் – சிந்தா:12 2534/3

TOP


கேளாது (4)

உள்ளவர் ஒன்றலாத செயச்செய ஊறு கேளாது
அள் இலை பூணினாளுக்கு ஆவி உண்டு இல்லை என்ன – சிந்தா:5 1274/2,3
எண் தவ பலவும் செய்தாம் என்று கேளாது இது என்பார் – சிந்தா:5 1276/4
என் அரசே என் பூசல் கேளாது இறந்தனையே – சிந்தா:7 1803/4
பொன் தொட்டேம் யாமும் நும்மை போகொட்டோம் பாடல் கேளாது
என் பட்டுவிடினும் என்றார் இலங்கு பூம் கொம்பொடு ஒப்பார் – சிந்தா:9 2045/3,4

TOP


கேளாய் (2)

என் மனத்து எழுதப்பட்டாய்-ஆயினும் அரிவை கேளாய்
உன்னை யான் பிரிந்த நாள் ஓர் ஊழியே போன்றது என்றான் – சிந்தா:9 2100/3,4
வெம்மை மிகு துன்பம் வேந்தே சில கேளாய் – சிந்தா:13 2790/4

TOP


கேளார் (2)

பழுது எண்ணும் வன் மனத்தார் ஓட்டை மர செவியர் கேளார் பால் போன்று – சிந்தா:6 1552/2
கையின் தொழுதார் கழிய மூப்பின் செவி கேளார்
மையலவர் போல மனம் பிறந்த வகை சொன்னார் – சிந்தா:9 2013/1,2

TOP


கேளான் (1)

சொல்லாறு கேளான் நனி சூழ்ச்சியில் தோற்றவாறும் – சிந்தா:0 9/2

TOP


கேளிர் (1)

கேளிர் எனக்கு உற்ற கேண்ம்-மின் நீர் என – சிந்தா:3 517/3

TOP


கேளீர் (1)

என்னை கேளீர் என் உற்றீர் என்ன பெயரீர் என்றாற்கு – சிந்தா:7 1594/1

TOP