பி – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

பி – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிச்ச 1
பிச்சம் 6
பிச்சமும் 3
பிச்சை 3
பிசைந்திடப்பட்டது 1
பிசைந்து 1
பிடர்த்தலை 1
பிடி 31
பிடி-கண் 1
பிடிக்கு 2
பிடிகள் 3
பிடித்த 2
பிடித்து 9
பிடியார் 1
பிடியின் 1
பிடியும் 2
பிடியொடு 1
பிடியொடும் 1
பிண்டம் 1
பிண்டி 27
பிண்டித்து 1
பிண்டிபாலத்தை 1
பிண்டியான் 2
பிண்டியின் 1
பிண்டியினான் 1
பிண்டியும் 2
பிண்டியே 1
பிண 2
பிணங்க 3
பிணங்கள் 1
பிணங்கு 1
பிணங்கும் 1
பிணம் 3
பிணி 24
பிணிக்கப்பட்டார் 1
பிணிக்கப்பட்டான் 2
பிணிக்கு 1
பிணிக்கும் 2
பிணித்த 2
பிணித்ததேனும் 1
பிணித்திட 1
பிணித்து 3
பிணிப்ப 1
பிணிப்புண்டு 1
பிணிப்பேன் 1
பிணியார் 1
பிணியில் 1
பிணியும் 1
பிணியுறினும் 1
பிணியை 1
பிணை 20
பிணைந்த 1
பிணைந்ததே 1
பிணைந்து 3
பிணையல் 9
பிணையலும் 3
பிணையின் 6
பிணையும் 3
பிணையோ 1
பித்தர் 1
பித்திகை 2
பித்து 2
பித்தை 2
பித்தொடு 1
பித்தோடு 1
பிதற்றி 1
பிதற்றினானே 1
பிதிர்ந்த 1
பிதிர்வின் 1
பிரசம் 2
பிரப்பும் 1
பிரமன் 1
பிரி 1
பிரிக்கல் 1
பிரித்தல் 1
பிரித்தாய் 1
பிரித்தார்கள் 1
பிரித்திட்டு 1
பிரிதல் 3
பிரிதலும் 1
பிரிந்த 3
பிரிந்த-காலை 1
பிரிந்தவற்கு 1
பிரிந்தாய் 1
பிரிந்து 1
பிரியற்பீர் 1
பிரியா 1
பிரியாத 1
பிரியும் 1
பிரிவது 1
பிரிவர் 1
பிரிவல் 1
பிரிவில் 1
பிரிவின்-கண் 1
பிரிவு 3
பிரிவு-இடை 1
பிரிவும் 2
பிரீதிமதி 1
பில்க 1
பில்கி 5
பில்கு 1
பில்கும் 1
பிலிற்ற 1
பிலிற்றி 2
பிலிற்றும் 4
பிழி 6
பிழிந்து 3
பிழிபடு 1
பிழியலும் 1
பிழைக்கவும் 1
பிழைக்கும் 1
பிழைத்த 2
பிழைத்தது 2
பிழைத்தவாறும் 1
பிழைத்து 3
பிழைத்தும்-கொல் 1
பிழைப்பது 1
பிழைப்பிலான் 1
பிழைப்பு 6
பிழைப்பும் 2
பிழையாது 1
பிள்ளை 2
பிள்ளைமை 1
பிள்ளையார் 1
பிளந்தவே 1
பிளந்திட்டு 1
பிளந்திடல் 1
பிளந்திடும் 1
பிளந்து 8
பிளப்பர் 1
பிளவு 2
பிளவோ 1
பிளிற்ற 1
பிளிற்றின் 1
பிளிறி 1
பிளிறு 3
பிளிறுவார் 1
பிற 11
பிறக்கிடுவ 1
பிறக்கும் 2
பிறக்குமோ 1
பிறகள் 1
பிறகளும் 1
பிறங்கலும் 1
பிறங்கா 1
பிறங்காது 1
பிறங்கி 1
பிறங்கிணர் 1
பிறங்கிய 1
பிறங்கின 1
பிறங்கு 6
பிறத்தல் 1
பிறத்தல்-தானும் 1
பிறத்தலும் 3
பிறந்த 22
பிறந்த-போழ்தே 3
பிறந்தது 6
பிறந்ததுவும் 1
பிறந்தநாள் 1
பிறந்தவர் 2
பிறந்தவர்கள் 1
பிறந்தவாறும் 1
பிறந்தார் 2
பிறந்தார்கள் 1
பிறந்தாள் 3
பிறந்தான் 4
பிறந்து 11
பிறந்தும் 1
பிறந்துழி 1
பிறந்தேம் 1
பிறந்தேன் 1
பிறப்ப 2
பிறப்பதோ 1
பிறப்பவே 2
பிறப்பாய் 1
பிறப்பாளன் 1
பிறப்பின் 1
பிறப்பினை 2
பிறப்பு 6
பிறப்பும் 3
பிறர் 12
பிறர்-வாய் 1
பிறர்க்கு 2
பிறர்கள் 5
பிறர்பிறராய் 1
பிறரும் 3
பிறரே 1
பிறரை 4
பிறவற்றின் 1
பிறவா 2
பிறவி 14
பிறவிக்கு 1
பிறவியும் 1
பிறவியை 1
பிறவின் 1
பிறவும் 7
பிறவேன் 1
பிறழ் 3
பிறழ்தல் 1
பிறழ்ந்தனவே 1
பிறழ்ந்திடும் 1
பிறழ்ந்து 6
பிறழ்ந்தும் 1
பிறழ்பவே 1
பிறழ்வ 1
பிறழ்வு 1
பிறழ 6
பிறழும் 3
பிறன் 4
பிறனே 1
பிறிதின் 1
பிறிது 8
பிறிதும் 1
பிறை 30
பிறை-அது 1
பிறையார் 1
பிறையும் 1
பின் 101
பின்பனி 1
பின்றி 1
பின்றை 20
பின்றையும் 1
பின்னதனால் 1
பின்னர் 3
பின்னரும் 1
பின்னரே 3
பின்னா 4
பின்னால் 1
பின்னி 6
பின்னிடின் 1
பின்னிய 2
பின்னிவிட்ட 1
பின்னிவிட்டு 1
பின்னின்று 1
பின்னும் 11
பின்னுறு 1
பின்னை 14
பினர் 1
பினே 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பிச்ச (1)

கொடி குழாம் குஞ்சி பிச்ச குழாம் நிறை கோல மாலை – சிந்தா:13 3050/1

TOP


பிச்சம் (6)

பொன் தவழ் களிறு பாய் மா புன மயில் குஞ்சி பிச்சம்
மின் தவழ் கொடியொடு இட்டு வேல் படை உடைந்த அன்றே – சிந்தா:2 437/3,4
காம்பு பொன் செய்த பிச்சம் கதிர் மணி குடையொடு ஏந்தி – சிந்தா:3 561/1
கால் அற்ற வயிர மாலை வெண்குடை கவிழ்ந்த பிச்சம்
மேல் அற்ற கவசம் வீழ்ந்த சாமரை அற்ற வில் ஞாண் – சிந்தா:3 797/1,2
மின் செய் வெண்குடை பிச்சம் மிடைந்து ஒளி – சிந்தா:4 860/2
காம்பு அழி பிச்சம் ஆக கணி எடுத்து உரைப்ப கல்லென் – சிந்தா:5 1280/3
மடல் பனை குழாத்தின் பிச்சம் நிரைத்தன மன்னர் சூழ்ந்து – சிந்தா:12 2524/1

TOP


பிச்சமும் (3)

குடையும் பிச்சமும் ஒழிய கோன் படை – சிந்தா:2 416/2
கோல குஞ்சி நிழல் குளிர் பிச்சமும்
சோலை ஆய் சொரி மும்மதத்தால் நிலம் – சிந்தா:10 2170/2,3
முரசமும் குடையும் தாரும் பிச்சமும் சுமந்து மாவும் – சிந்தா:10 2297/2

TOP


பிச்சை (3)

கொம்பின் கொள ஒசிந்து பிச்சை என கூறி நிற்பாள் கண்டு – சிந்தா:13 2624/3
பேசி பாவாய் பிச்சை என கை அகல் ஏந்தி – சிந்தா:13 2929/3
இஞ்சி மாநகர் இடும் பிச்சை ஏற்றலால் – சிந்தா:13 2941/3

TOP


பிசைந்திடப்பட்டது (1)

பேசின் ஓர் பிணையல் மாலை பிசைந்திடப்பட்டது ஒத்தாள் – சிந்தா:6 1539/3

TOP


பிசைந்து (1)

அம் கண் போது பிசைந்து அடு கூற்று அனான் – சிந்தா:2 431/4

TOP


பிடர்த்தலை (1)

பிடர்த்தலை ஒள் வாள் போல் பிறர் மனைகள் சேரின் – சிந்தா:13 2871/2

TOP


பிடி (31)

பிடி நலம் தழீஇ வரும் பெரும் கை குஞ்சரம் – சிந்தா:1 81/2
வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம்பொனால் – சிந்தா:1 146/1
பிடி கை போலும் திரள் குறங்கின் அணியும் நீக்கி பிணை அன்னாள் – சிந்தா:1 353/1
ஒரு பிடி நுசுப்பினாளை உள்ளுபு வந்துவிட்டான் – சிந்தா:3 613/4
கொடி எனும் பிடி உடை குமர வேழமும் – சிந்தா:3 776/2
கூந்தல் மாலை குமரி பிடி குழாம் – சிந்தா:4 858/4
குழவி பிடி குஞ்சரம் மாழ்கும் என – சிந்தா:5 1187/1
கோடு ஏந்து குஞ்சரங்கள் தெருட்ட கூடா பிடி நிற்கும் – சிந்தா:5 1229/3
பிடி முதிர் முலையினாள் தன் தழை துகில் பெண்ணினோடும் – சிந்தா:5 1231/2
ஊழ்படு காதலானை ஒரு பிடி நுசுப்பினாளே – சிந்தா:6 1452/4
வய பிடி கெடுத்து மாழாந்தது ஒப்ப மதி மயங்கினான் – சிந்தா:7 1590/4
பின்னிவிட்ட பிடி தட கை இரண்டு போன்று திரண்டு அழகார் – சிந்தா:7 1658/1
இலக்கண மட பிடி இயைந்து ஓர் போதகம் – சிந்தா:7 1811/3
ஒட்டி யான் நோக்கிற்று என்றான் ஒரு பிடி நுசுப்பினாட்கே – சிந்தா:9 2085/4
இரும் பிடி நின் நடை கற்ற எமக்கு – சிந்தா:10 2124/2
பிடி அலை பாவி என பூண் பிறழ்ந்து – சிந்தா:10 2125/3
செயிர் தீர் திரள் கை சிறு பிடி கேள்வன் – சிந்தா:10 2126/2
எரி மணி மாலை இளம் பிடி என்பார் – சிந்தா:10 2127/4
பின் மதம் செறித்திட்டு அஞ்சி பிடி மறந்து இரிந்து போகும் – சிந்தா:10 2313/2
ஒள் நுதல் உருவ கோலத்து ஒரு பிடி நுசுப்பின் தீம் சொல் – சிந்தா:12 2458/2
இரும் பிடி நூறு சூழ இறுவரை நின்றதே போல் – சிந்தா:12 2522/1
பெண் உரை பிடி கை கூந்தல் பொன் அரி மாலை தாழ – சிந்தா:13 2663/3
பிடி கை வென்று கடைந்தன போல் பஞ்சி ஆர்ந்த திரள் குறங்கு – சிந்தா:13 2695/1
பணி ஆர் பண்ணு பிடி ஊர்ந்து பரூஉ கால் செம் நெல் கதிர் சூடி – சிந்தா:13 2699/3
பிடி மகிழ்ந்து ஓப்ப நின்ற பெரும் களிற்று அரசு நோக்கி – சிந்தா:13 2715/3
பிடி மருள் நடையினார்-தம் பெரும் கவின் குழைய புல்லி – சிந்தா:13 2719/1
காமம் பை பய கழிய தம் கடை பிடி சுருங்கி – சிந்தா:13 2760/1
கொட்டு பிடி போலும் கூனும் குறள் ஆமை – சிந்தா:13 2798/1
இரும் பிடி தழீஇய யானை இழி மதம் கலந்து சேறாய் – சிந்தா:13 3043/1
கான மா பிடி கன்றொடு நாடகம் – சிந்தா:13 3067/3
பொனம் கொடி மயில் அனார் புல்ல மா பிடி
இனம் பயில் கடா களிற்று இன்பம் எய்தினார் – சிந்தா:13 3135/3,4

TOP


பிடி-கண் (1)

உத்தம பிடி-கண் நின்றால் உடற்றுதல் களபக்கு ஆமே – சிந்தா:3 753/2

TOP


பிடிக்கு (2)

பூண் முலை பிடிக்கு அவாய் போர் செய்குற்றவே – சிந்தா:3 774/4
மட பிடிக்கு உய்தல் உண்டோ வால் அடி குஞ்சி சூட்டும் – சிந்தா:6 1529/3

TOP


பிடிகள் (3)

தேன் ஆர் மலர் சோலை செ வரையின் மேல் சிறு பிடிகள் போல துயர் உழந்து தாம் – சிந்தா:1 296/2
கிளை இளம் பிடிகள் ஐஞ்நூற்று-இடை கேழ் அரக்கு – சிந்தா:7 1830/3
வீழ் பிடிகள் சிந்தித்தும் வெம் நோய் தம் உள் சுட வெந்து – சிந்தா:13 2785/3

TOP


பிடித்த (2)

பாலிகை இடை அற பிடித்த பாணியர் – சிந்தா:10 2217/3
சிலை இடம் பிடித்த ஞான்றே தெவ்வரை செகுத்த நம்பி – சிந்தா:12 2554/3

TOP


பிடித்து (9)

வாச வான் கழுநீர் பிடித்து ஆங்கு அரி – சிந்தா:2 429/3
காந்தள் அம் முகிழ் விரல் கையினால் பிடித்து
ஆய்ந்து அவட்கு இது சொலும் அலங்கல் வேலினான் – சிந்தா:8 1992/3,4
வண் கழல் அணிந்து மள்ளர் வாள் வலம் பிடித்து நாளை – சிந்தா:10 2151/3
உறு கணை ஒன்றும் வில்லும் உடன் பிடித்து உருவ நேமி – சிந்தா:10 2180/3
வாடினன் பிடித்து நின்றான் மணமகன் போல நின்றான் – சிந்தா:10 2185/4
செஞ்சோற்றுக்கடன் நீங்கி சினவுவாள் பிடித்து உடுத்த – சிந்தா:10 2240/2
வெம்ப பிடித்து வெகுண்டு ஆங்கு அவன் தேரின் மேலே – சிந்தா:10 2321/2
செறிந்த கழுநீர் பூ பிடித்து சேக்கை மரீஇய சிங்கம் போல் – சிந்தா:11 2358/3
நீடு அகம் வெகுண்டும் கையால் பிடித்து நீறு அட்டி இட்டேம் – சிந்தா:13 2989/3

TOP


பிடியார் (1)

நாட்டு இளம் பிடியார் நகை முகம் பருகும் நல்லவர் போல் மலர் பருகும் – சிந்தா:10 2104/3

TOP


பிடியின் (1)

பெய் தாம மாலை பிடியின் இழிந்து ஏகி மன்னர் – சிந்தா:10 2135/2

TOP


பிடியும் (2)

காமர் களிறும் பிடியும் கன்றும் கலை மானும் – சிந்தா:3 596/1
கரும் கய களிறும் மாவும் கால் இயல் பிடியும் ஈண்டி – சிந்தா:4 972/2

TOP


பிடியொடு (1)

பிடியொடு நின்ற வேழம் பெரு வளைப்புண்ட வண்ணம் – சிந்தா:4 1137/1

TOP


பிடியொடும் (1)

பிடியொடும் கந்து அணைவு இன்றி நீர் உருள் பிளந்து – சிந்தா:7 1831/3

TOP


பிண்டம் (1)

பிண்டம் உண்ணும் பெரும் களிறு பூட்டி அவண் – சிந்தா:7 1844/1

TOP


பிண்டி (27)

ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும் – சிந்தா:1 149/3
தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண் – சிந்தா:1 223/1
வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண் நூல் – சிந்தா:1 271/1
பிறந்த நீயும் பூம் பிண்டி பெருமான் அடிகள் பேர் அறமும் – சிந்தா:1 311/1
யாவையும் இன்மை ஆராய்ந்து அம் தளிர் பிண்டி நீழல் – சிந்தா:1 384/2
நலம் பொறுக்கலாத பிண்டி நான் முகன் தமர்கட்கு எல்லாம் – சிந்தா:1 402/2
நனை மலர் பிண்டி நாதன் நலம் கிளர் பாத மூலம் – சிந்தா:3 511/3
பாடல் வண்டு அரற்றும் பிண்டி பகவனது இறைமை போல – சிந்தா:4 957/2
கார் ஆர் பூம் பிண்டி கடவுள் நீ அன்றே – சிந்தா:5 1247/4
வடி மலர் காவின் அன்று வண் தளிர் பிண்டி நீழல் – சிந்தா:5 1396/1
கொய் தாமம் தாழ்ந்து ஒசிந்த குளிர் பூம் பிண்டி கோமனே – சிந்தா:6 1418/3
கொண்டு ஏந்து பூம் பிண்டி கோமான் நின்னை தொழுதேனே – சிந்தா:6 1419/4
கோதை தாழ் பூம் பிண்டி கோமன் நின்னை தொழுதேனே – சிந்தா:6 1420/4
வீங்கு ஓத வண்ணன் விரை ததும்பு பூம் பிண்டி
தேங்கு ஓதம் முக்குடை கீழ் தேவர் பெருமானை – சிந்தா:6 1467/1,2
பூத்து ஒழியா பிண்டி கீழ் பொங்கு ஓத வண்ணனை – சிந்தா:6 1469/1
மட்டு ஆர் பூம் பிண்டி வளம் கெழு முக்குடை கீழ் மாலே கண்டீர் – சிந்தா:6 1549/1
விரை வாய பூம் பிண்டி வேந்தன் கோயிற்கு எழுந்தானே – சிந்தா:12 2558/4
பண்-பால் வரி வண்டும் தேனும் பாடும் பொழில் பிண்டி
எண் பால் இகந்து உயர்ந்தாற்கு இசைந்த கோயில் இயன்றதே – சிந்தா:13 2600/3,4
கடி மலர் பிண்டி கடவுள் கமலத்து – சிந்தா:13 2739/1
வலம் கொண்டு ஆய் மலர் பிண்டி மா நிழல் – சிந்தா:13 2743/3
கொங்கு விம்மு குளிர் பிண்டி குழவி ஞாயிற்று எழில் ஏய்ப்ப – சிந்தா:13 2812/1
மோட்டு இரும் கொழு மலர் பிண்டி மூர்த்தி நூல் – சிந்தா:13 2844/3
வாடா மாலை வார் தளிர் பிண்டி வாம நின் குணம் நாளும் – சிந்தா:13 3018/2
மட்டு அலர் வன மலர் பிண்டி வாமனார் – சிந்தா:13 3041/1
அரு முடி மன்னர் சூழ அலர் அணி பிண்டி வேந்தன் – சிந்தா:13 3044/3
நனை மலர் பிண்டி நாதன் நல் அறம் கொள்ளை சாற்றி – சிந்தா:13 3051/2
கான் ஆர் பிண்டி கமழ் தாமம் கறை ஆர் முகிலின் நிறம் காட்டும் – சிந்தா:13 3090/2

TOP


பிண்டித்து (1)

பிண்டித்து பெருகிற்று என்பார் பெரு நவை அறுக்கும் விஞ்சை – சிந்தா:5 1276/3

TOP


பிண்டிபாலத்தை (1)

பெரு வலி அதனை நோனான் பிண்டிபாலத்தை ஏந்தி – சிந்தா:10 2269/1

TOP


பிண்டியான் (2)

குழை தலை பிண்டியான் குளிர் கொள் நல்லறம் – சிந்தா:13 3109/3
பில்கு பூம் பிண்டியான் அமிர்து உண்டார் பிறர் – சிந்தா:13 3110/3

TOP


பிண்டியின் (1)

பிண்டியின் கொழு நிழல் பிறவி நோய் கெட – சிந்தா:13 3013/1

TOP


பிண்டியினான் (1)

வண்ண வார் தளிர் பிண்டியினான் அடிக்கு – சிந்தா:4 910/2

TOP


பிண்டியும் (2)

ஊனை உண்டவர் உருகும் பசும் தினை பிண்டியும் ஒருங்கே – சிந்தா:7 1562/3
புது கலம் போலும் பூம் கனி ஆலும் பொன் இணர் பிண்டியும் பொருந்தி – சிந்தா:10 2108/1

TOP


பிண்டியே (1)

விழா கொள விரிந்தது வீரன் பிண்டியே – சிந்தா:13 3012/4

TOP


பிண (2)

மஞ்சு சூழ்வதனை ஒத்து பிண புகை மலிந்து பேயும் – சிந்தா:1 301/1
பிண மாலை பேய் மகட்கு பெரு விருந்து அயர்ந்தனரே – சிந்தா:10 2235/4

TOP


பிணங்க (3)

தலை படு தண் மலர் மாலை பிணங்க
அலைத்த வயிற்றினராய் அழுதிட்டார் – சிந்தா:2 424/3,4
பிரசம் கலங்கிற்று என மாந்தர் பிணங்க வேட்டான் – சிந்தா:4 1063/3
கோதையும் தாரும் பிணங்க கொடும் குழை – சிந்தா:10 2119/1

TOP


பிணங்கள் (1)

சூழ் குடர் பிணங்கள் மல்க விளைத்த பின் தொழுதி பல் பேய்க்கு – சிந்தா:3 757/2

TOP


பிணங்கு (1)

பிணங்கு அமர் மலைந்தனர் பெற்றி இன்னதே – சிந்தா:10 2225/4

TOP


பிணங்கும் (1)

பிணங்கும் நூல் மார்பினன் பெரிது ஓர் பொத்தகம் – சிந்தா:9 2009/3

TOP


பிணம் (3)

பீடு உடையவரும் உட்க பிணம் பல பிறங்கி எங்கும் – சிந்தா:1 300/2
பற்றா மன்னன் நகர் புறமால் பாயல் பிணம் சூழ் சுடுகாடால் – சிந்தா:1 310/1
பேது செய் பிணி பெரும் புலி பாய்ந்திட பிணம் ஆம் – சிந்தா:13 2759/3

TOP


பிணி (24)

கிழவுதான் விளைக்கும் பைம் கூழ் கேட்டிரேல் பிணி செய் பன் மா – சிந்தா:1 379/3
தொடர் பிணி வெளில் முதல் முருக்கி தோன்றியது – சிந்தா:4 973/3
பிணி குலத்து அக-வயின் பிறந்த நோய் கெடுத்து – சிந்தா:5 1172/1
பிணி எழுந்து அவலிக்கின்ற பேதை நீ கேள் இது என்றான் – சிந்தா:7 1582/4
பிணி செய் நோயேன் யான் கிடப்ப பிறர்-வாய் அது கேட்டலும் – சிந்தா:7 1589/2
பிணி நிற புறம் சொல் என்னும் பெரும் ஞிமிறு ஆர்ப்ப என்றான் – சிந்தா:7 1665/4
பூசுதலும் இன்றி பிணி கொண்டு புறம் தாழ – சிந்தா:7 1784/2
பித்தர் இவர் உற்ற பிணி தீர்த்தும் என எண்ணி – சிந்தா:9 2022/2
வார் பிணி முரசம் நாண வான் அதிர் முழக்கம் ஏய்ப்ப – சிந்தா:11 2372/1
தார் பிணி தாம மார்பன் தம்பியை முகத்துள் நோக்கி – சிந்தா:11 2372/2
ஊர் பிணி கோட்டம் சீப்பித்து உறாதவன் ஆண்ட நாட்டை – சிந்தா:11 2372/3
பார் பிணி கறையின் நீங்க படா முரசு அறைவி என்றான் – சிந்தா:11 2372/4
திரை இடை வியாழம் தோன்ற திண் பிணி முழவும் சங்கும் – சிந்தா:12 2467/2
பெற்ற கூழ் உண்டு நாளும் பிணி உழந்து இருத்தும் பேதாய் – சிந்தா:12 2511/1
உடற்றும் பிணி தீ உடம்பின் உயிர் பெய்திட்டு – சிந்தா:13 2620/1
அடர் பிணி அவிழும் ஆம்பல் அலை கடல் கானல் சேர்ப்பன் – சிந்தா:13 2652/3
அருவி போல் தொடர்ந்து அறாதன அரும் பிணி அழலுள் – சிந்தா:13 2752/2
பேது செய் பிணி பெரும் புலி பாய்ந்திட பிணம் ஆம் – சிந்தா:13 2759/3
துடி குரல் குரல பேழ் வாய் தொடர் பிணி உறுத்த செந்நாய் – சிந்தா:13 2767/1
தான் சேர் பிணி என்னும் செம் தீ கொடி தங்கி – சிந்தா:13 2797/2
வார் பிணி முரசின் ஆர்த்து மண் பக இடித்து வானம் – சிந்தா:13 3071/2
மறப்பு எனும் புரவி வெள்ளம் வந்து அடை பிணி செய் காலாள் – சிந்தா:13 3075/2
பிணி அவிழ்ந்த கற்பகமும் பெயர்ந்து ஓட கமழுமால் – சிந்தா:13 3087/2
பிணி உயிர் இறுதியா பேசினேன் இனி – சிந்தா:13 3111/3

TOP


பிணிக்கப்பட்டார் (1)

தொல் நலம் பருகி காம தொங்கலால் பிணிக்கப்பட்டார் – சிந்தா:13 2840/4

TOP


பிணிக்கப்பட்டான் (2)

வான் தரு மாரி வண் கை மதவலி பிணிக்கப்பட்டான் – சிந்தா:4 1091/4
வரி கச்சில் பிணிக்கப்பட்டான் மன்னனால் என்ன கேட்டே – சிந்தா:4 1133/2

TOP


பிணிக்கு (1)

இன்னா பிறவி பிணிக்கு இன் மருந்து ஆய சொல்லான் – சிந்தா:13 2890/4

TOP


பிணிக்கும் (2)

பெருந்தகை மார்பில் துஞ்சி பெண்மையால் பிணிக்கும் நீரார் – சிந்தா:5 1298/2
பிணிக்கும் பீடு இனி என் செயும் பேதை தன் – சிந்தா:5 1348/2

TOP


பிணித்த (2)

பெரும் புறத்து அலமர பிணித்த கச்சினர் – சிந்தா:10 2224/2
பிணித்த காதலால் பின்னி செல்வுழி – சிந்தா:12 2518/3

TOP


பிணித்ததேனும் (1)

அள் உற அளிந்த காமம் அகமுற பிணித்ததேனும்
உள்ளுற வெந்த செம்பொன் உற்ற நீர் புள்ளி அற்றால் – சிந்தா:5 1387/2,3

TOP


பிணித்திட (1)

பெறு நிலம் பிணித்திட பெரியர் வைகினார் – சிந்தா:1 193/4

TOP


பிணித்து (3)

பிணித்து இடைவிடாது அவன் பெற்ற இன்பமே – சிந்தா:6 1491/4
என்னை உள்ளம் பிணித்து என் நலம் கவர்ந்த ஈர்ம் தாரினான் – சிந்தா:7 1667/1
பெய் கயிறு அமைவர பிணித்து முள்ளுறீஇ – சிந்தா:10 2214/2

TOP


பிணிப்ப (1)

வீழ்தரு கண்ணள் தம்மோய் விளங்கு தோள் பிணிப்ப மற்று என் – சிந்தா:4 1138/2

TOP


பிணிப்புண்டு (1)

தாதையார் உவப்ப செய்வான் தாழ் கச்சில் பிணிப்புண்டு ஐய – சிந்தா:7 1748/1

TOP


பிணிப்பேன் (1)

தன்னை யானும் பிணிப்பேன் என தன் மணி செப்பினுள் – சிந்தா:7 1667/2

TOP


பிணியார் (1)

பிணியார் பெரும் துருத்தி அன்ன பெரும் கவுள பிறை ஏர் கோட்ட – சிந்தா:13 2968/2

TOP


பிணியில் (1)

வான் தரு வளத்தது ஆகி வையகம் பிணியில் தீர்க – சிந்தா:3 604/1

TOP


பிணியும் (1)

பிரிதலும் பிணியும் மூப்பும் சாதலும் பிறப்பும் இல்லா – சிந்தா:13 3118/1

TOP


பிணியுறினும் (1)

பெரு முழங்கு திரை வரைகள் நீந்தி பிணியுறினும்
திரு முயங்கல் இல்லை-எனில் இல்லை பொருள் ஈட்டம் – சிந்தா:12 2556/1,2

TOP


பிணியை (1)

மருந்து எறி பிணியை கொல்லும் மருத்துவன் போன்று மாதோ – சிந்தா:13 3078/3

TOP


பிணை (20)

துள்ளும் மான் ஒருத்தலும் செம்பொன் அம் பொன் மான் பிணை
உள்ளு காமம் உள் சுட வேந்தன் ஆங்கு உறைவது ஓர் – சிந்தா:1 146/2,3
நின்று நோக்கு மான் பிணை நீல யானை மன்னவன் – சிந்தா:1 148/3
பெருமகன் சேர்த்தினார் பிணை அனாளையே – சிந்தா:1 187/4
பேர் அறிவு உடையை நீயும் பிணை அனாட்கு அவலம் செய்யும் – சிந்தா:1 212/3
பிடி கை போலும் திரள் குறங்கின் அணியும் நீக்கி பிணை அன்னாள் – சிந்தா:1 353/1
மருளி மான் பிணை நோக்கின் நல்லார் முகத்து – சிந்தா:3 532/3
ஒடிக்க சுடர் விட்டு உமிழ உழை அம் பிணை ஒன்று அணுகி – சிந்தா:4 932/2
பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி – சிந்தா:4 976/3
நவ்வியம் பிணை கொள் நோக்கி நகை முக விருந்து செய்தான் – சிந்தா:4 1046/4
கலை இன் பிணை கன்றிடும் என்று கசிந்து – சிந்தா:5 1188/1
காது சேர்ந்த கடி பிணை கையது – சிந்தா:5 1323/1
பெண் அவா நிற்கும் என்றால் பிணை அனாட்கு உய்தல் உண்டோ – சிந்தா:6 1528/4
பின் செலும் பிறர் கண் உள்ளம் பிணை அனார்க்கு அடியது அன்றே – சிந்தா:7 1596/4
பிணை மலர் கோதை கீதம் பாட யான் பெரிதும் பேதுற்று – சிந்தா:7 1746/3
பிணை அனாள் அருகு சேரின் பேதுறும் நுசுப்பு என்று எண்ணி – சிந்தா:9 2083/3
நையா துயரா நடுங்கும் பிணை மான்கள் ஒத்தார் – சிந்தா:11 2342/4
பெரும் பூண் மன்னன் பாவாய் பூவாய் பிணை மானே – சிந்தா:12 2453/4
பெண் பெற்ற பொலிசை பெற்றார் பிணை அனார் பெரிய யாமும் – சிந்தா:12 2546/1
பெரும் குளத்து என்றும் தோன்றா பிறை நுதல் பிணை அனீரே – சிந்தா:13 2924/2
ஏ பெற்ற மான் பிணை போல் ஏங்குவார் இன் உயிரை – சிந்தா:13 2965/3

TOP


பிணைந்த (1)

பெண் அரும் கலத்தொடு பிணைந்த பேர் அருள் – சிந்தா:1 198/2

TOP


பிணைந்ததே (1)

பெரு நிறம் கவினி ஆர்ந்த கற்பகம் பிணைந்ததே போல் – சிந்தா:12 2517/2

TOP


பிணைந்து (3)

கள் வாய் விரிந்த கழுநீர் பிணைந்து அன்ன ஆகி – சிந்தா:2 491/1
ஊழ் பிணைந்து உருமின் சீறி உடல் சினம் கடவ சொன்னான் – சிந்தா:4 1120/4
தோளும் தாளும் பிணைந்து உரு ஒன்று எய்தி – சிந்தா:5 1347/3

TOP


பிணையல் (9)

தாது உகு பிணையல் வீசி சாந்து கொண்டு எறிந்து நிற்பார் – சிந்தா:2 463/4
பெய்தனர் பிணையல் மாலை ஓர் இலை சாந்து பூசி – சிந்தா:2 488/3
பித்திகை பிணையல் சூழ்ந்து பெண் கொடி பொலிந்த அன்றே – சிந்தா:4 971/4
பின்னிய முத்த மாலை பிணையல் தாழ் குடையின் நீழல் – சிந்தா:5 1170/2
பேசின் ஓர் பிணையல் மாலை பிசைந்திடப்பட்டது ஒத்தாள் – சிந்தா:6 1539/3
பிணையல் நீட்ட பெரும் தகை அஃது ஏலான் முகம் நோக்கலும் – சிந்தா:7 1668/2
பெருமகன் காதல் பாவை பித்திகை பிணையல் மாலை – சிந்தா:10 2177/1
பெரும் தவிசு அடுத்தனர் பிணையல் மாலையார் – சிந்தா:12 2409/4
பெரும் தகை பிணையல் மன்னர் முடி மிதித்து ஏறினானே – சிந்தா:12 2522/4

TOP


பிணையலும் (3)

துறு மலர் பிணையலும் சூட்டும் சுண்ணமும் – சிந்தா:1 193/1
பிணையலும் நறிய சேர்த்தி பெரு விலை ஆரம் தாங்கி – சிந்தா:4 1146/3
தேன் உண் போதின் பிணையலும் பந்தும் புனைந்து தேம் ஆர்ந்த – சிந்தா:7 1653/2

TOP


பிணையின் (6)

எஃகு எறி பிணையின் மாழ்கி இறுகி மெய்ம்மறந்து சோர்ந்தாள் – சிந்தா:1 299/4
கழித்த வேல் ஏறு பெற்ற கடத்து-இடை பிணையின் மாழ்கி – சிந்தா:3 715/1
கங்கையின் சுழியில் பட்ட காமரு பிணையின் மாழ்கி – சிந்தா:4 1096/1
ஏ அடு பிணையின் நோக்கி இறை வளை கழல நின்ற – சிந்தா:6 1455/3
கடு வெம் குறவன் எயப்பட்ட கன்னி பிணையின் நிலை கலங்கி – சிந்தா:7 1659/2
வேல் ஏறு பெற்ற பிணையின் நனி மாழ்கி வீழ்ந்து – சிந்தா:11 2344/2

TOP


பிணையும் (3)

மையார் கடி பிணையும் வார் குழையும் களைந்திடுவார் கையால் வயிறு அதுக்குவார் – சிந்தா:1 295/3
கோட்டு இளம் கலையும் கூடும் மென் பிணையும் கொழும் கதிர் மணி விளக்கு எறிப்ப – சிந்தா:10 2104/1
கழித்த கடி பிணையும் கை வளையும் மாலையும் களைந்து முத்தும் – சிந்தா:13 2969/1

TOP


பிணையோ (1)

பெண்ணோ அமுதோ பிணையோ என பிதற்றி – சிந்தா:13 2960/2

TOP


பித்தர் (1)

பித்தர் இவர் உற்ற பிணி தீர்த்தும் என எண்ணி – சிந்தா:9 2022/2

TOP


பித்திகை (2)

பித்திகை பிணையல் சூழ்ந்து பெண் கொடி பொலிந்த அன்றே – சிந்தா:4 971/4
பெருமகன் காதல் பாவை பித்திகை பிணையல் மாலை – சிந்தா:10 2177/1

TOP


பித்து (2)

பித்து அலர்-ஆயின் பேய்கள் என்று அலால் பேசலாமோ – சிந்தா:8 1907/4
ஐ படு பித்து நெய்த்தோர் அசும்பு சோர் அழுகல் புன் தோல் – சிந்தா:13 2938/3

TOP


பித்தை (2)

நெடு மலை அத்தம் சென்றார் என்று நெய் பொதிந்த பித்தை
வடி மலர் ஆயர் பூசல் வள நகர் பரப்பினாரே – சிந்தா:2 428/3,4
உரைத்த மென் தயிர் பித்தை கோவலர் தீம் குழல் உலவ – சிந்தா:7 1564/3

TOP


பித்தொடு (1)

கொண்டது நாகம் என்பார் குறை வளி பித்தொடு ஐயில் – சிந்தா:5 1276/2

TOP


பித்தோடு (1)

கோதை கண் படுக்கும் கூந்தல் குரை வளி பித்தோடு ஐயேய் – சிந்தா:7 1583/2

TOP


பிதற்றி (1)

பெண்ணோ அமுதோ பிணையோ என பிதற்றி
துண்ணென் சிலை தொழிலும் காட்டி முன் இன்புற்றீர் – சிந்தா:13 2960/2,3

TOP


பிதற்றினானே (1)

பெண் உடை பேதை என்று ஓர் நாள் முற்றும் பிதற்றினானே – சிந்தா:4 1082/4

TOP


பிதிர்ந்த (1)

பொடித்து பொன் பிதிர்ந்த ஆகத்து இளையவர் புகழ்ந்து சூழ – சிந்தா:13 2709/2

TOP


பிதிர்வின் (1)

அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்து – சிந்தா:0 2/2

TOP


பிரசம் (2)

பிரசம் கலங்கிற்று என மாந்தர் பிணங்க வேட்டான் – சிந்தா:4 1063/3
இளி வாய் பிரசம் யாழ் ஆக இரும் கண் தும்பி குழல் ஆக – சிந்தா:13 2691/1

TOP


பிரப்பும் (1)

பரந்து எலா பிரப்பும் வைத்து பைம்பொன் செய் தவிசின் உச்சி – சிந்தா:1 369/2

TOP


பிரமன் (1)

பெரும் பெயர் பிரமன் என்னும் பீடினால் பெரிய நீரான் – சிந்தா:1 207/1

TOP


பிரி (1)

சோர் துகில் திருத்தல் தேற்றாள் துணை பிரி மகன்றில் ஒத்தாள் – சிந்தா:1 302/4

TOP


பிரிக்கல் (1)

காமத்தால் கெழுமினார்க்கு காமனில் பிரிக்கல் ஆமே – சிந்தா:3 754/4

TOP


பிரித்தல் (1)

தூமத்தால் கெழீஇய கோதை தோள் துணை பிரித்தல் விண் மேல் – சிந்தா:3 754/1

TOP


பிரித்தாய் (1)

மன்னா பிரித்தாய் பிரிந்தாய் சிறைவைத்ததனால் – சிந்தா:13 2890/2

TOP


பிரித்தார்கள் (1)

தண் தாமரை சூழ் தடத்தின் பிரித்தார்கள் யாரே – சிந்தா:13 2864/2

TOP


பிரித்திட்டு (1)

எல்லாம் கிளை பிரித்திட்டு ஏமுறு நோய் செய்பவே – சிந்தா:13 2788/4

TOP


பிரிதல் (3)

விசையையை பிரிதல் ஆற்றேன் வேந்தன் நீ ஆகி வையம் – சிந்தா:1 201/3
புணர்ந்தவர் பிரிதல் ஆற்றா போகம் ஈன்று அளிக்கும் சாயல் – சிந்தா:3 505/1
வேட்டன பெறாமை துன்பம் விழை நரை பிரிதல் துன்பம் – சிந்தா:13 2799/1

TOP


பிரிதலும் (1)

பிரிதலும் பிணியும் மூப்பும் சாதலும் பிறப்பும் இல்லா – சிந்தா:13 3118/1

TOP


பிரிந்த (3)

பிரிந்த வண்டு இளையார் விளையாடவே – சிந்தா:5 1349/4
கொடைக்கையான் பிரிந்த பின்றை கோதையாட்கு உய்தல் உண்டோ – சிந்தா:6 1529/4
உன்னை யான் பிரிந்த நாள் ஓர் ஊழியே போன்றது என்றான் – சிந்தா:9 2100/4

TOP


பிரிந்த-காலை (1)

தந்து அவள் அமிர்தம் ஊட்ட உண்டு அவள் பிரிந்த-காலை
சந்து உடை சாரல் சேறி தரணி மேல் திலகம் அன்னாய் – சிந்தா:5 1178/3,4

TOP


பிரிந்தவற்கு (1)

பிரிந்தவற்கு இரங்கி பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள் – சிந்தா:5 1391/1

TOP


பிரிந்தாய் (1)

மன்னா பிரித்தாய் பிரிந்தாய் சிறைவைத்ததனால் – சிந்தா:13 2890/2

TOP


பிரிந்து (1)

புலந்து கண் சிவந்தன போன்று நீர் பிரிந்து
இலங்கி மின் உமிழ்ந்து உலாம் மேனி ஏந்து பொன் – சிந்தா:12 2449/2,3

TOP


பிரியற்பீர் (1)

எங்கும் பிரியற்பீர் என்று கண்கள் மலர்ந்து இருந்து – சிந்தா:13 2607/3

TOP


பிரியா (1)

குடித்து உண்ணும் கூற்றம் குடில் பிரியா முன்னே – சிந்தா:13 2620/3

TOP


பிரியாத (1)

பெண்பாலவர்கட்கு அணியாய் பிரியாத நாணும் – சிந்தா:8 1961/1

TOP


பிரியும் (1)

நங்கையை பிரியும் இ நம்பி இன்று என – சிந்தா:8 1991/2

TOP


பிரிவது (1)

கோன் அமர் மகளிர் கானில் குழாம் மயில் பிரிவது ஒத்தார் – சிந்தா:13 2714/4

TOP


பிரிவர் (1)

பிறங்கின கெடுங்கள் யாவும் புணர்ந்தவர் பிரிவர் பேசின் – சிந்தா:6 1535/1

TOP


பிரிவல் (1)

கருமம் நீ கவல வேண்டா கயல் கணாய் பிரிவல் சில் நாள் – சிந்தா:9 2093/1

TOP


பிரிவில் (1)

பிரிவில் தோன்றிய பேர் அன்பு எனப்படும் – சிந்தா:7 1627/3

TOP


பிரிவின்-கண் (1)

பிரிவின்-கண் பிறந்த துன்பம் பெரும் கடல் அனையது ஒன்றால் – சிந்தா:6 1536/2

TOP


பிரிவு (3)

இயற்கையே பிரிவு சாதல் இமைப்பு-இடை படாதது ஒன்றால் – சிந்தா:5 1393/2
மல் உறை அலங்கல் மார்பன் பிரிவு எனும் எரியுள் வீழ்ந்து – சிந்தா:6 1527/1
கிளை பிரிவு அரும் சிறை இரண்டும் கேட்டியேல் – சிந்தா:13 2867/1

TOP


பிரிவு-இடை (1)

ஆடவர் அழுந்தி வீழ்ந்தும் பிரிவு-இடை அழுங்கல் செல்லார் – சிந்தா:5 1388/3

TOP


பிரிவும் (2)

கிளைநரில் பிரிவும் நோயில் காலத்து நோயும் நோக்கி – சிந்தா:5 1394/2
உயங்குவாள் உணர்ந்து கேள்வற்கு ஊனமும் பிரிவும் அஞ்சி – சிந்தா:6 1530/2

TOP


பிரீதிமதி (1)

பின் அரிய கற்பினவள் பிரீதிமதி காதல் – சிந்தா:7 1792/3

TOP


பில்க (1)

அலங்கல் வாய் சென்னி சேர்த்தி அரி மதர் மழை கண் பில்க
நலம் கவர்ந்து உண்டு நண்ணார் நாமுற கழிக்கும் மாதோ – சிந்தா:13 2858/3,4

TOP


பில்கி (5)

ஆக்கிய இலயம் நீங்கிற்று அணங்கு அனாள் நெடும் கண் பில்கி
வீக்கு வார் முலையின் நெற்றி வெண் முத்தம் சொரிந்த அன்றே – சிந்தா:5 1258/3,4
பில்கி தேன் ஒழுகும் கோதை பிறர் மனையாள்-கண் சென்ற – சிந்தா:10 2186/1
முனி தலை கண்ணி நெற்றி சிறார் முலை முழாலின் பில்கி
புனிற்று பால் பிலிற்றி தேமா வடு இறுத்து ஆங்கு பாய – சிந்தா:12 2541/1,2
நீர் ஏந்தி நெய்ம் மிதந்து நிணம் வாய் பில்கி அழல் விம்மி – சிந்தா:13 2599/1
பில்கி தேன் ஒழுகும் பைம் தார் பெரு நில வேந்தர் வேந்தே – சிந்தா:13 2810/4

TOP


பில்கு (1)

பில்கு பூம் பிண்டியான் அமிர்து உண்டார் பிறர் – சிந்தா:13 3110/3

TOP


பில்கும் (1)

பில்கும் மும்மத வேழம் பெயர்ந்ததே – சிந்தா:4 984/4

TOP


பிலிற்ற (1)

வீங்கு இள முலைகள் விம்மி திறந்து பால் பிலிற்ற ஆற்றாள் – சிந்தா:1 305/3

TOP


பிலிற்றி (2)

மாலை பல தாழ்ந்து மது பிலிற்றி மணம் கமழும் – சிந்தா:9 2018/1
புனிற்று பால் பிலிற்றி தேமா வடு இறுத்து ஆங்கு பாய – சிந்தா:12 2541/2

TOP


பிலிற்றும் (4)

நளி செய் தண் பூஞ்சலம் சயனம் ஆக்கி நல் நீர் பிலிற்றும் வாய் – சிந்தா:7 1673/2
கோத்து நீர் பிலிற்றும் காந்தம் குங்கும வைர பொன் கோய் – சிந்தா:8 1906/2
நறு மலர் தாமம் நான்று நான நீர் பிலிற்றும் பந்தர் – சிந்தா:13 2773/1
நிணம் பிலிற்றும் வாயர் நெருப்பு இமைக்கும் கண்ணர் – சிந்தா:13 2779/1

TOP


பிழி (6)

ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன் – சிந்தா:1 55/1
தேம் பிழி கோதைக்கு இன்று பிறந்தநாள் தெளி-மின் என்று – சிந்தா:5 1280/2
தோய் பிழி துளிக்கும் கண்ணி சுரும்பு சூழ் கொம்பு அனாளே – சிந்தா:7 1707/4
பிழி மது கோதையர் பேண இன் அமுது – சிந்தா:8 1939/2
பிழி பொலி கோதை போல் ஆம் பெண்டிரில் பெரியள் நோற்றாள் – சிந்தா:12 2551/3
தோய் பிழி அலங்கலார்-தம் தொல் நலம் தொலைந்து வாடி – சிந்தா:13 2923/3

TOP


பிழிந்து (3)

பிழிந்து உயிர் உண்டிடும் பேய்கள் ஆபவே – சிந்தா:5 1183/4
பிழிந்து உயிர் உண்ணும் தட்டம் அதட்டம் ஆம் பிளிற்றின் உம்பர் – சிந்தா:5 1286/3
பிழிந்து கொள்வு அனைய பெண்மை பெய் வளை தோளி-தன்னோடு – சிந்தா:6 1496/3

TOP


பிழிபடு (1)

பிழிபடு கோதை போல் ஆம் பெண்டிரை கெட பிறந்தாள் – சிந்தா:12 2512/4

TOP


பிழியலும் (1)

என்றலும் தேனும் ஊனும் பிழியலும் இறுக நீக்கி – சிந்தா:5 1237/1

TOP


பிழைக்கவும் (1)

பின்னை வெண்ணெயின் திரண்ட பின் பிழைக்கவும் பெறுமே – சிந்தா:13 2754/4

TOP


பிழைக்கும் (1)

பெரிய வாள் தடம் கண் செ வாய் பிறர் மனை பிழைக்கும் மாந்தர் – சிந்தா:13 2821/1

TOP


பிழைத்த (2)

வலியார் திரள் தோள் மதனன் அவனை பிழைத்த பிழைப்பும் – சிந்தா:10 2197/2
பிழைத்த ஓர் அரு மணி பெற்றது ஒக்குமால் – சிந்தா:13 3109/2

TOP


பிழைத்தது (2)

பின் ஒரு-கால் காண பிழைத்தது என் தேவிர்காள் – சிந்தா:7 1807/2
ஒலி கழல் அடிகள் நும் கீழ் பிழைத்தது என் உரை-மின் என்ன – சிந்தா:13 2946/3

TOP


பிழைத்தவாறும் (1)

புல் அற நெறி கண் நின்று பொருள்-வயின் பிழைத்தவாறும்
இல்லறத்து இயல்பும் எல்லாம் இருள் அற கூறி இட்டான் – சிந்தா:1 382/3,4

TOP


பிழைத்து (3)

நல்லவை புரியும் மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா – சிந்தா:3 815/1
பேசின் தான் பெரிதும் தோன்ற பிழைத்து உய்ய போதல் அஞ்சி – சிந்தா:4 1164/3
பெரிய யோனிகள் பிழைத்து இவண் மானிடம் பெறலே – சிந்தா:13 2749/4

TOP


பிழைத்தும்-கொல் (1)

ஏனை எம் உடம்பு வாட்டல் எவன் பிழைத்தும்-கொல் என்றான் – சிந்தா:5 1234/4

TOP


பிழைப்பது (1)

இங்கு அடி பிழைப்பது அன்றால் எம் குலம் என்று சொன்னான் – சிந்தா:3 547/4

TOP


பிழைப்பிலான் (1)

பிழைப்பிலான் புறம் தந்தானும் குரவரை பேணல் செய்யா – சிந்தா:1 252/3

TOP


பிழைப்பு (6)

வளை கய மடந்தை கொல்லும் தான் செய்த பிழைப்பு கொல்லும் – சிந்தா:1 260/3
கழிந்து மீது ஆடல் காலம் பிழைப்பு என எட்டின் ஆகும் – சிந்தா:5 1286/2
கொடியனாய் பிழைப்பு கூறேன் குழையல் என்று எடுத்து கொண்டாள் – சிந்தா:5 1396/4
மின் அவிர் கணையின் பல்-கால் பிழைப்பு எய்து மீண்டு நிற்ப – சிந்தா:7 1640/2
முல்லை அம் கோதை ஒன்றும் பிழைப்பு இலேன் முனியல் நீ என்று – சிந்தா:9 2084/3
பிளிறுவார் முரசத்தானை பெருமகன் பிழைப்பு நாடி – சிந்தா:13 2613/1

TOP


பிழைப்பும் (2)

புலி யாப்புறுத்தி கொண்டேன் போக்கி விட்ட பிழைப்பும்
வலியார் திரள் தோள் மதனன் அவனை பிழைத்த பிழைப்பும் – சிந்தா:10 2197/1,2
வலியார் திரள் தோள் மதனன் அவனை பிழைத்த பிழைப்பும்
நலியும் என்னை நலியும் என்ன களிற்றின் உச்சி – சிந்தா:10 2197/2,3

TOP


பிழையாது (1)

கருவில் காய்த்திய கட்டளை படிமையில் பிழையாது
உருவின் மிக்கது ஓர் உடம்பது பெறுதலும் அரிதே – சிந்தா:13 2752/3,4

TOP


பிள்ளை (2)

பிள்ளை உள் புகுந்து அழித்தது ஆதலால் – சிந்தா:2 420/1
பிள்ளை வெண் பிறை சிறு நுதல் பெரும் பட்டம் அணி-மின் – சிந்தா:12 2390/1

TOP


பிள்ளைமை (1)

பிள்ளைமை காதல் கூர பிறழ்ந்து பொன் தோடு வீழ – சிந்தா:12 2529/2

TOP


பிள்ளையார் (1)

விழித்து யார் நோக்குகிற்பார் பிள்ளையார் கண்ணுள் காக்கை – சிந்தா:7 1584/3

TOP


பிளந்தவே (1)

மாற்றரும் மத களிறு மத்தகம் பிளந்தவே – சிந்தா:1 278/4

TOP


பிளந்திட்டு (1)

வில் வாள் அழுவம் பிளந்திட்டு வெகுண்டு நோக்கி – சிந்தா:10 2319/3

TOP


பிளந்திடல் (1)

பேது செய்து பிளந்திடல் பெட்டதே – சிந்தா:8 1920/4

TOP


பிளந்திடும் (1)

பேர் அஞர் இடும்பை எல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும் – சிந்தா:1 377/1

TOP


பிளந்து (8)

வேல் மிடைந்த வேலியும் பிளந்து வெம் கண் வீரரை – சிந்தா:1 279/1
வணக்கரும் தானை மன்னர் மத்தகம் பிளந்து வாய்த்த – சிந்தா:3 610/1
திடல் பிளந்து இட்ட எஃகம் சுமந்து அமர் திறத்தின் மிக்கார் – சிந்தா:3 805/4
உச்சியும் மருங்கும் பற்றி பிளந்து உயிர் பருகி கோண்மா – சிந்தா:4 1153/2
போழ் பட பிளந்து வாளின் புரட்டி இட்டு அரிய கண்டே – சிந்தா:4 1163/3
பிடியொடும் கந்து அணைவு இன்றி நீர் உருள் பிளந்து
அடு களிறு அந்த போதிகை பரிந்து அழன்றதே – சிந்தா:7 1831/3,4
வேல் நிரை வாள் மதில் பிளந்து வெம் சமத்து-இடை – சிந்தா:7 1846/1
நூற்றுவர் பாகர் தம்மை பிளந்து உயிர் உண்டது என்னும் – சிந்தா:10 2146/1

TOP


பிளப்பர் (1)

பார கூர் தறிகள் நட்டு பனை என பிளப்பர் மாதோ – சிந்தா:13 2771/4

TOP


பிளவு (2)

பிளவு இயல் பயறு பெய் பண்டி உப்பு நீர் – சிந்தா:3 824/3
வடு பிளவு அனைய கண்ணாள் வல்லவன் எழுதப்பட்ட – சிந்தா:7 1573/1

TOP


பிளவோ (1)

வாள் ஆர் மதி முகத்த வாளோ வடு பிளவோ
தாள் ஆர் கழுநீரோ நீலமோ தாமரையோ – சிந்தா:8 1972/1,2

TOP


பிளிற்ற (1)

வெருவி நாகம் பிளிற்ற விரைந்து உராய் – சிந்தா:7 1606/3

TOP


பிளிற்றின் (1)

பிழிந்து உயிர் உண்ணும் தட்டம் அதட்டம் ஆம் பிளிற்றின் உம்பர் – சிந்தா:5 1286/3

TOP


பிளிறி (1)

பிளிறி வீழ் பேடி பெண் நோய் அறு வகை துவர்ப்பும் பேசின் – சிந்தா:13 3076/3

TOP


பிளிறு (3)

பிளிறு வார் முரசின் சாற்றி பெரும் சிறப்பு இயற்றி வேந்தன் – சிந்தா:1 200/3
பிளிறு வார் இடி முரசு ஆர்ப்ப பெய் கழல் – சிந்தா:7 1617/3
பிளிறு செய் கரும தெவ்வர் பெரு மதில் முற்றினானே – சிந்தா:13 3074/4

TOP


பிளிறுவார் (1)

பிளிறுவார் முரசத்தானை பெருமகன் பிழைப்பு நாடி – சிந்தா:13 2613/1

TOP


பிற (11)

பிற அறம் அல்ல பேசார் பேரறிவு உடைய நீரார் – சிந்தா:1 406/2
பொய்யில் பொருளே பொருள் மற்று அல்ல பிற பொருளே – சிந்தா:3 497/4
விழுங்கும் என பறவைகளும் பிற விலங்கும் அடையா – சிந்தா:3 597/2
கொடாம் பிற குமரி போருள் பிறர்க்கு என கொன்றது அன்றே – சிந்தா:3 806/4
பெண்கள் கொண்ட விடா பிற செற்றம் என்று – சிந்தா:4 901/2
தொட்டு விடுத்தேன் அவனை தூது பிற சொல்லி – சிந்தா:7 1876/2
அறிதிர் பிற நீவிர் என ஐயம் இலை என்றான் – சிந்தா:9 2021/4
உள்ளம் மேவினும் பிற உண பெறீர் எழு நாளும் – சிந்தா:12 2390/4
அட்டும் உயவு நோய் அல்லா பிற நோயும் – சிந்தா:13 2798/3
வாமன் அடி அல்ல பிற வந்தியன்-மின் என்றான் – சிந்தா:13 2874/4
பிறவி அறுக என்று பிற சிந்தை இலர் ஆகி – சிந்தா:13 3091/2

TOP


பிறக்கிடுவ (1)

நெய் பொதி நெஞ்சின் மன்னர் நிலம் பிறக்கிடுவ போலும் – சிந்தா:13 3049/2

TOP


பிறக்கும் (2)

விரும்ப பிறப்பாய் வினை செய்தேன் காண இஃது ஓஒ பிறக்கும் ஆ – சிந்தா:1 308/4
பேறு இலாள் அல்லள் பெற்ற உயிர் சென்று பிறக்கும் என்றேன் – சிந்தா:4 1127/4

TOP


பிறக்குமோ (1)

எல் ஒளி தேவன் ஆகி பிறக்குமோ என்ன வேண்டா – சிந்தா:4 960/2

TOP


பிறகள் (1)

பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம் புகழும் ஆம் துணைவி ஆக்கும் – சிந்தா:7 1595/3

TOP


பிறகளும் (1)

தோம் நிலை அரவின் தோற்றமே போலும் சிலைகளும் பிறகளும் துறைபோய் – சிந்தா:10 2158/2

TOP


பிறங்கலும் (1)

மென் தினை பிறங்கலும் மிளிர்ந்து வீழ் அருவியும் – சிந்தா:1 148/1

TOP


பிறங்கா (1)

பக்கத்தால் கவிழியவாய் மேல் பிறங்கா பாண்டில் ஆ – சிந்தா:1 175/1

TOP


பிறங்காது (1)

ஆடு தசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று – சிந்தா:1 176/1

TOP


பிறங்கி (1)

பீடு உடையவரும் உட்க பிணம் பல பிறங்கி எங்கும் – சிந்தா:1 300/2

TOP


பிறங்கிணர் (1)

பீழைதான் பொறுக்க என்ன பிறங்கிணர் அலங்கல் மாலை – சிந்தா:4 1120/2

TOP


பிறங்கிய (1)

பிறங்கிய உறுப்பின் மேல் பெரிய நோக்கின – சிந்தா:6 1461/2

TOP


பிறங்கின (1)

பிறங்கின கெடுங்கள் யாவும் புணர்ந்தவர் பிரிவர் பேசின் – சிந்தா:6 1535/1

TOP


பிறங்கு (6)

பின் அவன் விருந்து பேணி பேசினன் பிறங்கு தாரான் – சிந்தா:3 536/4
ஊன் பிறங்கு ஒளிறும் வேலான் ஓர்த்து தன் உவாத்தி சொல்லால் – சிந்தா:4 1090/1
தேன் பிறங்கு அலங்கல் மாலை சுநந்தையும் துணைவன் தானும் – சிந்தா:4 1090/3
பிறங்கு வெம் கதிர் மின்னொடு பின்னி வீழ்ந்து – சிந்தா:7 1605/3
நிணம் பிறங்கு அகலமும் தோளும் நெற்றியும் – சிந்தா:10 2225/1
பிறங்கு தார் மார்பன் போந்து பெரு மண கோயில் புக்கான் – சிந்தா:13 2649/4

TOP


பிறத்தல் (1)

நோவது பெரிதும் துன்ப நோயினுள் பிறத்தல் துன்பம் – சிந்தா:13 2811/3

TOP


பிறத்தல்-தானும் (1)

சாதலும் பிறத்தல்-தானும் தம் வினை பயத்தின் ஆகும் – சிந்தா:1 269/1

TOP


பிறத்தலும் (3)

மயற்கை இ மக்கள் யோனி பிறத்தலும் பிறந்து வந்து ஈங்கு – சிந்தா:5 1393/1
காவியம் கண்ணி வந்து பிறத்தலும் கணிகள் ஈண்டி – சிந்தா:7 1686/2
மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும் – சிந்தா:13 2932/1

TOP


பிறந்த (22)

முந்நீர் பிறந்த பவழத்தொடு சங்கும் முத்தும் – சிந்தா:0 5/1
திருந்து சாறு அடுவுழி பிறந்த தீம் புகை – சிந்தா:1 60/3
பிறந்த நீயும் பூம் பிண்டி பெருமான் அடிகள் பேர் அறமும் – சிந்தா:1 311/1
பூவினுள் பிறந்த தோன்றல் புண்ணியன் அனைய நம்பி – சிந்தா:1 316/1
ஓங்கு குலம் நைய அதனுள் பிறந்த வீரர் – சிந்தா:3 498/2
ஒருங்கு அவன் பிறந்த ஞான்றே பிறந்தவர் உதயத்து உச்சி – சிந்தா:3 785/1
பெற்ற அ நிமித்தத்தானும் பிறந்த சொல் வகையினானும் – சிந்தா:4 1129/1
பிணி குலத்து அக-வயின் பிறந்த நோய் கெடுத்து – சிந்தா:5 1172/1
நெடும்தகை நின்று நோக்க நீள் கடல் பிறந்த கோல – சிந்தா:5 1290/1
மின் உளே பிறந்த ஓர் மின்னின் மேதக – சிந்தா:5 1408/1
பொன் உளே பிறந்த பொன் அனைய பொற்பினான் – சிந்தா:5 1408/4
பண் நிற கிளவியார்-தம் பசையினால் பிறந்த பாவம் – சிந்தா:6 1433/3
மாசு இலாள் பிறந்த ஞான்றே மதி வலான் விதியின் எண்ணி – சிந்தா:6 1451/1
அரம் தின பிறந்த பைம்பொன் அரும்பிய முலையினாளை – சிந்தா:6 1507/1
பிரிவின்-கண் பிறந்த துன்பம் பெரும் கடல் அனையது ஒன்றால் – சிந்தா:6 1536/2
பவ்வத்து பிறந்த வெய்ய பருதி போல் திறலினாற்கு – சிந்தா:7 1736/1
வெள்ளி மால் வரை தாழ்வதில் மேம்பட பிறந்த – சிந்தா:7 1771/4
மையலவர் போல மனம் பிறந்த வகை சொன்னார் – சிந்தா:9 2013/2
பாரசூரவம் பல்லவம் எனும் பதி பிறந்த
வீர ஆற்றல விளை கடும் தேறலின் நிறத்த – சிந்தா:10 2160/1,2
அண்ணல் பிறந்த ஆங்கு ஐந்நூற்று ஐவர்க்கு அளந்து ஆன் பால் – சிந்தா:13 2604/1
பிறந்த அ குழவிகள் பிறர்கள் யாவரும் – சிந்தா:13 2834/1
புள்-வயின் பிறந்த புள் போல் ஒன்று அலாது உரைத்தல் தேற்றார் – சிந்தா:13 2897/2

TOP


பிறந்த-போழ்தே (3)

பொரு கடல் பருதி போல பொன் அனான் பிறந்த-போழ்தே
மருள் உடை மாதர் உற்ற மம்மர் நோய் மறைந்தது அன்றே – சிந்தா:1 304/3,4
பூம் பாவை வந்து பிறந்தாள் அ பிறந்த-போழ்தே
ஆம் பால எல்லாம் அறிவார் அன்று எழுதியிட்டார் – சிந்தா:8 1976/1,2
இனி செத்தாம் பிறந்த-போழ்தே என்று நாம் இதனை எண்ணி – சிந்தா:13 2939/2

TOP


பிறந்தது (6)

கண்ணினோடு பிறந்தது காரிகை – சிந்தா:3 635/1
மேகத்து பிறந்தது ஓர் மின்னு மணி வரை வீழ்ந்ததே போல் – சிந்தா:3 738/2
திரிதர பிறந்தது ஓர் சிலம்பிற்று என்பவே – சிந்தா:5 1211/4
ஈனராய் பிறந்தது இங்ஙன் இனி இவை ஒழி-மின் என்ன – சிந்தா:5 1234/2
தன் உளே பிறந்தது ஓர் வடிவு தாங்குபு – சிந்தா:5 1408/2
உள் உயிர் அறிய பெண்ணாய் பிறந்தது ஓர் தோற்றம் ஒத்தார் – சிந்தா:12 2529/4

TOP


பிறந்ததுவும் (1)

கெடலரும்-குரைய கொற்றம் கெட பிறந்ததுவும் அன்றி – சிந்தா:8 1914/1

TOP


பிறந்தநாள் (1)

தேம் பிழி கோதைக்கு இன்று பிறந்தநாள் தெளி-மின் என்று – சிந்தா:5 1280/2

TOP


பிறந்தவர் (2)

ஒருங்கு அவன் பிறந்த ஞான்றே பிறந்தவர் உதயத்து உச்சி – சிந்தா:3 785/1
பிறந்தவர் சாவர் செத்தார் பிறப்பவே என்ன நோக்கி – சிந்தா:6 1535/3

TOP


பிறந்தவர்கள் (1)

பிறந்தவர்கள் எல்லாம் அவா பெரியர் ஆகி – சிந்தா:13 2622/1

TOP


பிறந்தவாறும் (1)

இ நகர புறம் காட்டில் இவன் பிறந்தவாறும்
தன் நிகர் இல் வாணிகன் இல் தான் வளர்ந்தவாறும் – சிந்தா:12 2555/1,2

TOP


பிறந்தார் (2)

ஊனம் ஒன்று இல்லார் உயர் குடி பிறந்தார் ஆயிரம் அடுகளம் கண்டார் – சிந்தா:10 2158/3
பெண்டிராய் பிறந்தார் பெரியர் போத என்பார் – சிந்தா:12 2550/4

TOP


பிறந்தார்கள் (1)

அரியவை செய்ப வையத்து ஆண் பிறந்தார்கள் அன்றே – சிந்தா:13 2821/4

TOP


பிறந்தாள் (3)

மண் மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் ஓர் கன்னி – சிந்தா:0 24/3
பூம் பாவை வந்து பிறந்தாள் அ பிறந்த-போழ்தே – சிந்தா:8 1976/1
பிழிபடு கோதை போல் ஆம் பெண்டிரை கெட பிறந்தாள் – சிந்தா:12 2512/4

TOP


பிறந்தான் (4)

நாள் உற்று நம்பி பிறந்தான் திசை பத்தும் நந்த – சிந்தா:0 10/1
இறைவன் சிறுவன் பிறந்தான் என்று ஏற்பார்க்கு ஊர்-தோறு உய்த்து ஈ-மின் – சிந்தா:1 306/4
ஒப்பான் ஒரு மகனே நால்வர் ஒரு வயிற்றுள் பிறந்தான் என்ன – சிந்தா:6 1544/1
பரணி நாள் பிறந்தான் பகை யாவையும் – சிந்தா:7 1813/2

TOP


பிறந்து (11)

எல்லைய அவற்றுள் எல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கி – சிந்தா:1 270/2
பேதைமை என்னும் வித்தில் பிறந்து பின் வினைகள் என்னும் – சிந்தா:5 1389/1
மயற்கை இ மக்கள் யோனி பிறத்தலும் பிறந்து வந்து ஈங்கு – சிந்தா:5 1393/1
திரு நலம் பிறந்து சொன்னாள் தேனினும் இனிய சொல்லாள் – சிந்தா:5 1404/4
குழவியாய் பிறந்து வெய்யோன் குமரனாய் முறுகி இப்பால் – சிந்தா:6 1503/1
விழு திணை பிறந்து வெய்ய வேட்கை வேர் அரிந்து மெய் நின்று – சிந்தா:6 1534/1
பவ்வ தங்கண் பிறந்து பனி பெயர்க்கும் தண் ஊற்றது ஆகி – சிந்தா:7 1672/1
ஏதத்தை கேட்டலோடும் இரு கணும் பிறந்து மாழ்கி – சிந்தா:7 1799/2
கோவிந்தன் என்னும் செம்பொன் குன்றின் மேல் பிறந்து கூர் வேல் – சிந்தா:12 2460/1
பிறந்து நாம் பெற்ற வாழ்நாள் இத்துணை என்பது ஒன்றும் – சிந்தா:13 2616/1
பொன் உயிராய் பிறந்து உயர்ந்து போகுமே – சிந்தா:13 3107/4

TOP


பிறந்தும் (1)

பெண் நீர்மை மேல் நாள் பிறந்தும் அறியுமோ – சிந்தா:8 1968/4

TOP


பிறந்துழி (1)

பிறந்துழி அறிக என பெரிய நூலவர் – சிந்தா:10 2215/3

TOP


பிறந்தேம் (1)

எங்கள் உயிர் நம்பியொடு யாங்கள் பிறந்தேம் ஆக – சிந்தா:7 1793/2

TOP


பிறந்தேன் (1)

பிறந்தேன் இனி பிறவேன் பிறவா தாயை பெற்றேன் என்று – சிந்தா:12 2560/3

TOP


பிறப்ப (2)

கொந்து அழல் பிறப்ப தாக்கி கோடுகள் மிடைந்த தீயால் – சிந்தா:10 2254/1
இற்று அவர் தேவராய் பிறப்ப ஈண்டு உடல் – சிந்தா:13 2833/1

TOP


பிறப்பதோ (1)

இவ்வாறு ஆகி பிறப்பதோ இதுவோ மன்னர்க்கு இயல் வேந்தே – சிந்தா:1 309/4

TOP


பிறப்பவே (2)

பிறந்தவர் சாவர் செத்தார் பிறப்பவே என்ன நோக்கி – சிந்தா:6 1535/3
வில் பொரு தோள் மன்னா விலங்காய் பிறப்பவே – சிந்தா:13 2789/4

TOP


பிறப்பாய் (1)

விரும்ப பிறப்பாய் வினை செய்தேன் காண இஃது ஓஒ பிறக்கும் ஆ – சிந்தா:1 308/4

TOP


பிறப்பாளன் (1)

ஏவலான் அரசன் ஒன்றோ இரு_பிறப்பாளன் அல்லார்க்கு – சிந்தா:7 1682/2

TOP


பிறப்பின் (1)

கரும் கடல் பிறப்பின் அல்லால் வலம்புரி காணும்-காலை – சிந்தா:13 2924/1

TOP


பிறப்பினை (2)

தெரி மலர் காவு சேர்ந்து பிறப்பினை தெருட்டல் உற்றான் – சிந்தா:1 383/4
கரியவன் கன்னற்கு அன்று பிறப்பினை தேற்றி ஆங்கு அ – சிந்தா:1 389/1

TOP


பிறப்பு (6)

பேர் அஞர் இடும்பை எல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும் – சிந்தா:1 377/1
குல பிறப்பு என்னும் கையால் கோல பாசம் கொளுத்தி – சிந்தா:3 711/2
பிறப்பு உணர்ந்தவர் போல் தமர் பேச்சு எலாம் – சிந்தா:4 993/3
பெண் எனப்படுவ கேண்மோ பீடு இல பிறப்பு நோக்கா – சிந்தா:7 1597/1
ஒண் பொருள் ஆவது ஐயா உடன் பிறப்பு ஆக்கல் ஆகா – சிந்தா:7 1760/3
ஏழை பெண் பிறப்பு இடிய சிந்தித்தார் – சிந்தா:13 3120/4

TOP


பிறப்பும் (3)

துளங்கு பெண் பிறப்பும் தோழி இனிது என சொல்லி நிற்பார் – சிந்தா:5 1297/4
சாதலும் பிறப்பும் இல்லா தன்மை பெற்றவர்கள் ஒத்தார் – சிந்தா:6 1494/4
பிரிதலும் பிணியும் மூப்பும் சாதலும் பிறப்பும் இல்லா – சிந்தா:13 3118/1

TOP


பிறர் (12)

உண்டு என தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம் – சிந்தா:1 172/3
நட்பு-இடை குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தை சேர்ந்தான் – சிந்தா:1 253/1
கோனார் பறிப்ப நலம் பூத்த இ கொடி இனி பூவா பிறர் பறிப்பவே – சிந்தா:1 296/4
பெற்றார் மக பெற்றார் அல்லாதார் பிறர் மக்கள் பிறரே கண்டீர் – சிந்தா:6 1545/4
பின் செலும் பிறர் கண் உள்ளம் பிணை அனார்க்கு அடியது அன்றே – சிந்தா:7 1596/4
பில்கி தேன் ஒழுகும் கோதை பிறர் மனையாள்-கண் சென்ற – சிந்தா:10 2186/1
ஏறு உண்டவர் நிகர் ஆயினும் பிறர் மிச்சில் என்று எறியான் – சிந்தா:10 2261/2
குஞ்சி அம் குமரர் தங்கள் மறம் பிறர் கவர்ந்து கொள்ள – சிந்தா:10 2300/3
பெரிய வாள் தடம் கண் செ வாய் பிறர் மனை பிழைக்கும் மாந்தர் – சிந்தா:13 2821/1
நா செறு பராவு கொள்ளார் நமர் பிறர் என்றும் உள்ளார் – சிந்தா:13 2825/4
பிடர்த்தலை ஒள் வாள் போல் பிறர் மனைகள் சேரின் – சிந்தா:13 2871/2
பில்கு பூம் பிண்டியான் அமிர்து உண்டார் பிறர்
செல்வம் கண்டு அதற்கு அவா சிந்தை செய்யுமோ – சிந்தா:13 3110/3,4

TOP


பிறர்-வாய் (1)

பிணி செய் நோயேன் யான் கிடப்ப பிறர்-வாய் அது கேட்டலும் – சிந்தா:7 1589/2

TOP


பிறர்க்கு (2)

கொடாம் பிற குமரி போருள் பிறர்க்கு என கொன்றது அன்றே – சிந்தா:3 806/4
இனி பிறர்க்கு இடம் இலை எழுவல் ஈங்கு எனா – சிந்தா:4 1020/2

TOP


பிறர்கள் (5)

என் அலால் பிறர்கள் யாரே இன்னவை பொறுக்கும் நீரார் – சிந்தா:1 259/1
உன் அலால் பிறர்கள் யாரே உற்றவற்கு உறாத சூழ்வார் – சிந்தா:1 259/2
இன் நறும் கனியை துய்ப்பான் ஏந்தலே பிறர்கள் இல்லை – சிந்தா:5 1260/2
உற்றதை பிறர்கள் கூற உணர்ந்தனை-ஆயின் நானும் – சிந்தா:13 2609/2
பிறந்த அ குழவிகள் பிறர்கள் யாவரும் – சிந்தா:13 2834/1

TOP


பிறர்பிறராய் (1)

ஆம் பால் உரை மடங்கி யாரும் பிறர்பிறராய்
காம்பு ஆர் நடு இருள் கண் காடே போல் ஆயிற்றே – சிந்தா:13 2980/3,4

TOP


பிறரும் (3)

பாலவர் பிறரும் ஈண்டி பாய் புலி இனத்தின் சூழ்ந்தார் – சிந்தா:4 1144/4
பிறரும் உளரோ பெறுநர் பேணி மொழிக என்ன – சிந்தா:9 2021/2
தாங்கும் மா வண் கை சக்கரம் மிக்கு உயர் பிறரும்
யாங்கணார் அவர் ஊரொடு பேர் எமக்கு உரையாய் – சிந்தா:13 2761/3,4

TOP


பிறரே (1)

பெற்றார் மக பெற்றார் அல்லாதார் பிறர் மக்கள் பிறரே கண்டீர் – சிந்தா:6 1545/4

TOP


பிறரை (4)

எனக்கு உயிர் என்ன பட்டான் என் அலால் பிறரை இல்லான் – சிந்தா:1 205/1
பின்னை தான் பிறரை நோக்கா பெரு மட மாது-தன்னை – சிந்தா:7 1599/2
பாழியால் பிறரை வேண்டேம் பணிப்பதே பாணி என்றான் – சிந்தா:8 1929/4
பேதைமை பிறரை உள்ளி அழுபவர் சேர்தல் என்றாள் – சிந்தா:12 2506/3

TOP


பிறவற்றின் (1)

புழு பயில் தேனும் அன்றி பிறவற்றின் புண்ணும் மாந்தி – சிந்தா:13 2822/2

TOP


பிறவா (2)

பின்னா விளைவித்து பிறவா உலகு எய்தல் பேசலாமே – சிந்தா:6 1548/4
பிறந்தேன் இனி பிறவேன் பிறவா தாயை பெற்றேன் என்று – சிந்தா:12 2560/3

TOP


பிறவி (14)

தொல்லை நம் பிறவி எண்ணில் தொடு கடல் மணலும் ஆற்றா – சிந்தா:1 270/1
நாதன் என்ன படுவோய் நீ நவை செய் பிறவி கடலகத்து உன் – சிந்தா:5 1242/3
இன்னா பிறவி இகந்தோய் நீ இணை இல் இன்பம் உடையோய் நீ – சிந்தா:5 1243/1
முரிந்த நம் பிறவி மேல் நாள் முற்றிழை இன்னும் நோக்காய் – சிந்தா:5 1391/3
செயற்கை அம் பிறவி நச்சு கடல் அகத்து அழுந்துகின்றார் – சிந்தா:5 1393/4
இவர் தரு பிறவி எல்லாம் இன்னம் ஆக என்று நின்றார் – சிந்தா:12 2542/3
கலி அது பிறவி கண்டாம் காலத்தால் அடங்கி நோற்று – சிந்தா:13 2727/3
முடிக இ பிறவி வேண்டேம் முனைவ என்று இரப்ப அன்றே – சிந்தா:13 2808/4
இப்படித்து இது என்று அஞ்சி பிறவி நோய் வெருவினானே – சிந்தா:13 2881/3
காதலம் அல்லம் மேல் நாள் கழிந்த நம் பிறவி தம்முள் – சிந்தா:13 2885/1
இன்னா பிறவி பிணிக்கு இன் மருந்து ஆய சொல்லான் – சிந்தா:13 2890/4
பிண்டியின் கொழு நிழல் பிறவி நோய் கெட – சிந்தா:13 3013/1
பிறவி அறுக என்று பிற சிந்தை இலர் ஆகி – சிந்தா:13 3091/2
வேட்கையை மிகுத்து வித்தி பிறவி நோய் விளைத்து வீயா – சிந்தா:13 3106/2

TOP


பிறவிக்கு (1)

பீடு இலா பிறவிக்கு வித்து என்பவே – சிந்தா:6 1427/4

TOP


பிறவியும் (1)

தொல்லை எம் பிறவியும் தொகுத்த பாவமும் – சிந்தா:13 2849/2

TOP


பிறவியை (1)

ஊன் இவர் பிறவியை ஒழிக்கும் உத்தமன் – சிந்தா:13 3014/2

TOP


பிறவின் (1)

கோள் உடை கிழமை ஒப்பாய் குறைவு இலன் பிறவின் என்றான் – சிந்தா:4 958/4

TOP


பிறவும் (7)

நிலை படா நிறைந்தன பிறவும் என்பவே – சிந்தா:1 41/4
பெரும் கலி பண்டிகள் பிறவும் செற்றுபு – சிந்தா:1 63/3
இவை இன்னனவும் பிறவும் எரி பொன் ஆர மார்பன் – சிந்தா:4 933/1
தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் பிறவும் ஓசை – சிந்தா:4 965/1
ஏவா இவை பிறவும் பூசனை என்று ஈண்டிய நூல் கரைகண்டாரே – சிந்தா:6 1547/4
மேய் பொன் அறையும் பிறவும் விரைந்து ஆய்ந்த-பின்றை – சிந்தா:11 2350/3
நயந்தவை பிறவும் ஊர்ந்து நாதன் தாள் கோயில் கொண்டார் – சிந்தா:13 3083/4

TOP


பிறவேன் (1)

பிறந்தேன் இனி பிறவேன் பிறவா தாயை பெற்றேன் என்று – சிந்தா:12 2560/3

TOP


பிறழ் (3)

களிற்று உகிர் பிறழ் பல் பேய்கள் கைகளை உச்சி கூப்பி – சிந்தா:3 804/2
வரி வரால் பிறழ் வயல் குவளை கட்பவர் – சிந்தா:5 1249/3
பெய் ஆர் முகிலில் பிறழ் பூம் கொடி மின்னின் மின்னா – சிந்தா:11 2342/1

TOP


பிறழ்தல் (1)

பெரியவன் திருமொழி பிறழ்தல் இன்றியே – சிந்தா:5 1211/2

TOP


பிறழ்ந்தனவே (1)

நீல நீர் சுறா இனம் போல் நெய்த்தோருள் பிறழ்ந்தனவே – சிந்தா:10 2236/4

TOP


பிறழ்ந்திடும் (1)

பின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூ மகள் – சிந்தா:1 245/2

TOP


பிறழ்ந்து (6)

மொய் கொள பிறழ்ந்து முத்தார் மருப்பு-இடை குளித்து கால் கீழ் – சிந்தா:4 983/2
பொங்கி மீது எழுந்து போய் பிறழ்ந்து பாய்தல் இன்றியே – சிந்தா:8 1953/3
பிடி அலை பாவி என பூண் பிறழ்ந்து
புடை முலை விம்ம புலந்தனர் நிற்பார் – சிந்தா:10 2125/3,4
மேல் ஏறி மூழ்கி பிறழ்ந்து ஆழ்ந்த இறந்துபட்டாள் – சிந்தா:11 2344/4
பிள்ளைமை காதல் கூர பிறழ்ந்து பொன் தோடு வீழ – சிந்தா:12 2529/2
களித்து நீர் சுமந்து வாள் கண் கலாஅய் பிறழ்ந்து அலமந்து ஆட – சிந்தா:13 2898/3

TOP


பிறழ்ந்தும் (1)

நெறியின் வட்டித்து நீண்ட உண்கண் சென்றும் வந்தும் பிறழ்ந்தும் ஆட – சிந்தா:12 2594/2

TOP


பிறழ்பவே (1)

குளித்து நீர் இரண்டு கோல கொழும் கயல் பிறழ்பவே போல் – சிந்தா:13 2898/2

TOP


பிறழ்வ (1)

நெருங்கிய மணி வில் காப்ப நீண்டு உலாய் பிறழ்வ செம் கேழ் – சிந்தா:3 626/3

TOP


பிறழ்வு (1)

பெரு மகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றி கேட்டே – சிந்தா:1 334/1

TOP


பிறழ (6)

பூண் முலை பிறழ பொன் தோடு இட-வயின் நுடங்க ஒல்கி – சிந்தா:5 1257/2
ஓத மணி மாலையொடு பூண் பிறழ ஓடி – சிந்தா:9 2014/2
செப்பு இள முலையினார் கண் சென்று உலாய் பிறழ சிந்தி – சிந்தா:10 2287/3
அஞ்சி வாள் கண்கள் மதர்த்தன அலர்ந்து உடன் பிறழ
பஞ்சு சூழ் மணி மேகலை பரிந்து அவை சொரிய – சிந்தா:12 2384/2,3
ஒண் மலர் மாலை ஓச்ச ஒசிந்து கண் பிறழ ஒல்கி – சிந்தா:13 2659/3
மெள்ளவே புருவம் கோலி விலங்கி கண் பிறழ நோக்கி – சிந்தா:13 2732/1

TOP


பிறழும் (3)

நிலத்து-இடை பாய்ந்து அவை பிறழும் நீரவே – சிந்தா:1 46/4
பெயல் மழை பிறழும் கொடி மின் இடை – சிந்தா:5 1310/1
சேல் நடந்தாங்கும் ஓடி சென்று உலாய் பிறழும் வாள் கண் – சிந்தா:13 2912/1

TOP


பிறன் (4)

ஆணை தோய்வது அல்லால் பிறன் வெளவுமேல் – சிந்தா:3 640/2
பிறன் நலம் அரற்ற கேட்டும் பீடினால் கனிந்த காம – சிந்தா:3 688/1
யான் பிறன் அளியன் வாழ்வான் ஆசைப்பட்டிருக்கின்றேனே – சிந்தா:6 1487/4
அன்பு உடை அரிவை கூட்டம் பிறன் உழை கண்டது ஒத்ததே – சிந்தா:13 2725/4

TOP


பிறனே (1)

எய்தான் அதன் பயத்தை பிறனே துய்த்தல் இயல்பு என்றி – சிந்தா:6 1418/2

TOP


பிறிதின் (1)

உண்டாய அ உயிரே பிறிதின் இல்லை என உரைத்தி – சிந்தா:6 1419/2

TOP


பிறிது (8)

பீலி நல் மா மயிலும் பிறிது ஆக்கிய – சிந்தா:1 236/1
எஃகு பிறிது இல்லை இருந்தே உயிரும் உண்ணும் – சிந்தா:3 497/2
சிந்தனை பிறிது ஒன்று ஆகி செய் தவம் முயறல் ஒன்றோ – சிந்தா:4 1050/3
தண் கய நீருள் கண்ட தன் நிழல் பிறிது என்று எண்ணி – சிந்தா:7 1623/2
இஞ்சி வட்டம் இடம் பிறிது இல்லையே – சிந்தா:8 1947/4
பீர் தங்கி பெய்யா மலரின் பிறிது ஆயினாளே – சிந்தா:8 1960/4
பெரும நீ வேண்டிற்று அல்லால் வேண்டுவ பிறிது ஒன்று உண்டோ – சிந்தா:9 2093/3
மருவினார் இமைத்து நோக்கின் மனம் பிறிது ஆகி நிற்பார் – சிந்தா:13 3058/3

TOP


பிறிதும் (1)

உளைவது பிறிதும் உண்டோ ஒண் தொடி மாதர்க்கு என்றான் – சிந்தா:9 2042/4

TOP


பிறை (30)

தேய் பிறை இரும்பு தம் வலக்கை சேர்த்தினர் – சிந்தா:1 55/3
ஏமுற அடி பரந்து இளம் பிறை வடம் சூடி – சிந்தா:1 171/3
பானாள் பிறை மருப்பின் பைம் கண் வேழம் பகு வாய் ஓர் பை அணல் மா நாகம் வீழ்ப்ப – சிந்தா:1 296/1
மருப்பு இளம் பிறை நுதல் மதர்வை வெம் கதிர் – சிந்தா:1 322/2
விண்ணகம் வணங்க வெண் கோட்டு இளம் பிறை முளைத்ததே போல் – சிந்தா:3 538/1
பெரு மனை குறுகலோடும் பிறை என இலங்கி தோன்றும் – சிந்தா:3 584/1
எரி மணி நெற்றி வேய்ந்த இளம் பிறை இது-கொல் என்ன – சிந்தா:3 619/1
பிறை வெல்லும் நுதலினாள் ஓர் பெண்_கொடி வந்து கூந்தல் – சிந்தா:3 668/2
திருந்து ஏர் பிறை நுதலும் செம் பசலை மூழ்க – சிந்தா:3 734/2
முற்று அணி பிறை எயிற்று அம்பு மூழ்கலின் – சிந்தா:3 780/2
தடாம் பிறை மருப்பு திண் கை அபரகாத்திரங்கள்-தம்மால் – சிந்தா:3 806/3
இன் வளர் இளம் பிறை எழுதப்பட்டன – சிந்தா:4 1008/3
பிறை தலை அம்பில் சென்னி பெருநிலத்து இடுவல் இட்டால் – சிந்தா:4 1142/2
ஏழ் தரு பருதி-தன் மேல் இளம் பிறை கிடந்ததே போல் – சிந்தா:4 1155/2
பெய்து ஒளி மறைத்து நங்கை பிறை என வளர்க்கின்றாளே – சிந்தா:5 1267/4
விளங்கு ஒளி விசும்பில் வெண் கோட்டு இளம் பிறை சூழ்ந்த மின் போல் – சிந்தா:5 1297/1
கூன் பிறை நுதல் ஓர் கூற்றம் குவி முலை நமன் கை பாசம் – சிந்தா:6 1487/3
பனி பிறை பூணினான் தன் பாண் வலை சென்று பட்டாள் – சிந்தா:9 2040/4
பிறை எயிற்று எரி கண் பேழ் வாய் பெரு மயிர் பைம்பொன் பன்றி – சிந்தா:10 2180/1
பெய் பூம் கழலான் வேழத்து இழிந்து பிறை போல் குலாய – சிந்தா:10 2198/3
இடம்படு செ வானத்து இளம் பிறை போல் தோன்றினவே – சிந்தா:10 2244/4
கடுத்து ஆங்கு வீழ கதிர் வான் பிறை அம்பின் எய்தான் – சிந்தா:10 2320/3
பிள்ளை வெண் பிறை சிறு நுதல் பெரும் பட்டம் அணி-மின் – சிந்தா:12 2390/1
துணி நிலா வீசும் மாலை பிறை நுதல் தோழி சேர்ந்து – சிந்தா:12 2531/2
பிறை அணி கொண்ட அண்ணல் பெண் ஓர்பால் கொண்டது ஒத்தார் – சிந்தா:12 2537/4
உடுத்த சாந்தின் மிசை செக்கர் ஒளி கொள் முந்நாள் பிறை ஏய்ப்ப – சிந்தா:13 2695/3
பெரும் குளத்து என்றும் தோன்றா பிறை நுதல் பிணை அனீரே – சிந்தா:13 2924/2
பிணியார் பெரும் துருத்தி அன்ன பெரும் கவுள பிறை ஏர் கோட்ட – சிந்தா:13 2968/2
தேய் பிறை உருவ கேணி தேறு நீர் மலர்ந்த தேனார் – சிந்தா:13 2998/1
உருவ வெண் பிறை கோட்டின் ஓங்கிய – சிந்தா:13 3134/2

TOP


பிறை-அது (1)

பிறை-அது வளர தானும் வளர்ந்து உடன் பெருகி பின் நாள் – சிந்தா:1 254/1

TOP


பிறையார் (1)

பிறையார் திரு நுதலும் பேர் அமர் உண்கண்ணும் – சிந்தா:3 733/1

TOP


பிறையும் (1)

குழவி கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல் – சிந்தா:1 165/1

TOP


பின் (101)

புடை நகர் தொழில் இடம் கடந்து புக்க பின்
இடை நகர் புறம் பணை இயம்பும் ஓசை ஓர் – சிந்தா:1 85/1,2
ஆரி ஆக அம் சாந்தம் தளித்த பின்
வாரி நித்திலம் வைப்ப பொன் பூவொடு – சிந்தா:1 129/2,3
உயிர் செகுத்து முன் ஒன்றி பின் பேராது உரு அமைந்த – சிந்தா:1 168/2
நெக்கு பின் கூடாது நிகர் அமைந்த முழந்தாளும் – சிந்தா:1 175/3
வானவர் போல் மகிழ்வுற்ற பின் வார் நறும் – சிந்தா:1 222/2
நீதியால் நிலம் கொண்ட பின் நீதி நூல் – சிந்தா:1 240/2
பிறை-அது வளர தானும் வளர்ந்து உடன் பெருகி பின் நாள் – சிந்தா:1 254/1
வார் உடை முலை முகம் நனைப்ப மாதர் சென்ற பின்
சீர் உடை குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீ திரள் – சிந்தா:1 274/2,3
மாரியின் கடும் கணை சொரிந்து மள்ளர் ஆர்த்த பின்
வீரிய குரிசிலும் விலக்கி வெம் கணை மழை – சிந்தா:1 277/1,2
சாய்ந்த பின் தறுகண் ஆண்மை கட்டியங்காரன் வேழம் – சிந்தா:1 285/3
கரி மாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான் கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின்
எரி மாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும் ஏற்ப சொரிந்து அலறி எம் – சிந்தா:1 294/2,3
பொன் உடை வள நகர் பொலிய புக்க பின்
தன் உடை மதி சுட தளரும் தையலுக்கு – சிந்தா:1 326/2,3
அடி கிண்கிணியும் அம் சிலம்பும் விரல் மோதிரத்தோடு அகற்றிய பின்
கொடி பூத்து உதிர்ந்த தோற்றம் போல் கொள்ள தோன்றி அணங்கு அலற – சிந்தா:1 353/2,3
மாட்சியில் கதிகள் எல்லாம் அடைத்த பின் வரம்பு இல் இன்பத்து – சிந்தா:1 381/3
வீரன் தாள் நிழல் விளங்க நோற்ற பின்
மாரி மொக்குளின் மாய்ந்து விண் தொழ – சிந்தா:2 409/2,3
கரை கடலுள் கால கணை பின் ஒழிய முந்நீர் – சிந்தா:3 502/2
தான் உற்ற துன்பம் தரனுக்கு உரைத்த பின்
தேனும் அமிழ்தும் திளைத்து ஆங்கு இனியன – சிந்தா:3 519/2,3
காதம் கடந்த பின் கன்னி கொடி மதில் – சிந்தா:3 525/2
பின் அவன் விருந்து பேணி பேசினன் பிறங்கு தாரான் – சிந்தா:3 536/4
கொடைக்கு உரிப்பால எல்லாம் கொடுத்த பின் கூற்றும் உட்கும் – சிந்தா:3 555/2
திருந்த செய்து அதன் பின் நங்கை திருவிற்கு ஓர் திலகம் ஒத்தாள் – சிந்தா:3 627/4
அரும் பெறல் அவட்கு இசை அரசர் தோற்ற பின்
நரம்பு உறு தெள் விளி நவின்ற நான்மறை – சிந்தா:3 661/2,3
எஞ்சல் இன்றி நம் படை இரு முறையும் உடைந்த பின்
மஞ்சு சூழ் கணை மழை பொழிந்து மா நிரை பெயர்த்து – சிந்தா:3 691/2,3
எம்மை நீர் வெல்ல பெற்றீர் வென்ற பின் இருந்த வேந்தன் – சிந்தா:3 755/1
சூழ் குடர் பிணங்கள் மல்க விளைத்த பின் தொழுதி பல் பேய்க்கு – சிந்தா:3 757/2
உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால் – சிந்தா:4 889/1
மேவிய பொருளொடு மீண்ட பின் அலால் – சிந்தா:4 1013/2
ஆர் கலி யாணர் மூதூர் அழுது பின் செல்ல செல்வான் – சிந்தா:4 1116/3
வேற்று உலகு ஏற்றி நும் பின் விரை தர்வேன் உலகிற்கு எல்லாம் – சிந்தா:4 1143/2
கணை புரை கண்ணி ஏற்ப உடுத்த பின் செம்பொன் செப்பில் – சிந்தா:4 1146/2
நடலை நோக்கி கதிர் நாணுவது ஒப்ப மறைந்த பின்
கடலை ஏந்தி நிலத்து இட்டு என மாரி கலந்ததே – சிந்தா:4 1157/3,4
இ மலைக்கு இரண்டு காதம் இறந்த பின் இருண்டு தோன்றும் – சிந்தா:5 1177/1
அங்கு நின்று அகன்ற பின் ஐ ஐம் காவதம் – சிந்தா:5 1179/1
ஏற்றரு மணி வரை இறந்து போன பின்
மாற்றரு மண நெறி மகளிர் நெஞ்சமே – சிந்தா:5 1212/1,2
வெம் மலை தெய்வதம் விருந்து செய்த பின்
செம்மல் போய் பல்லவ தேயம் நண்ணினான் – சிந்தா:5 1248/3,4
முழுதும் குங்குமம் முத்தொடு அணிந்த பின்
தொழுது கோதையும் கண்ணியும் சூட்டினார் – சிந்தா:5 1317/2,3
அங்கு அ ஆயம் அடிப்பணி செய்த பின்
தங்கள் காதலினால் தகை பாடினார் – சிந்தா:5 1337/3,4
பேதைமை என்னும் வித்தில் பிறந்து பின் வினைகள் என்னும் – சிந்தா:5 1389/1
தெள்ளு தீம் கனியும் சில தந்த பின்
வெள்ள மாரி அனாய் விருந்து ஆர்க என – சிந்தா:6 1424/2,3
உள்ளுற உண்ட கலிங்கம் உடுத்த பின்
கள் அவிழ் கண்ணி கலத்தொடு அணிந்தார் – சிந்தா:6 1476/3,4
மங்கல வெள்ளை வழித்து முத்து ஈர்த்த பின்
கொங்கு அலர் கோதையர் கண்டு அகம் எய்தி – சிந்தா:6 1477/1,2
பலவும் பூத்தன கோங்கம் பைம் துகில் முடி அணிந்து அவர் பின்
உலவு காஞ்சுகியவர் போல் பூத்தன மரவம் அங்கு ஒருங்கே – சிந்தா:7 1558/3,4
கைப்பொருள் கொடுத்தும் கற்றல் கற்ற பின் கண்ணும் ஆகும் – சிந்தா:7 1595/1
பின் செலும் பிறர் கண் உள்ளம் பிணை அனார்க்கு அடியது அன்றே – சிந்தா:7 1596/4
வெண்ணெய் குன்று எரி உற்றால் போன்று மெலிந்து பின் நிற்கும் அன்றே – சிந்தா:7 1597/4
பொன் நகர் புக்க பின் அறிவல் போக என்றான் – சிந்தா:7 1620/3
அண்ணல் அம் சிலை வலாருள் அமோக மா ஆசானின் பின்
விண் நகு வெள்ளி வெற்பின் விஞ்சையர் உலகின் அல்லால் – சிந்தா:7 1646/1,2
நானம் தோய்த்து நனை கலவை நாறும் மதம் தெளித்த பின்
பால் நுண் தீம் சொல்லாள் ஓர் படுவி வண்டு ஆர்ப்ப வந்து இறைஞ்சினாள் – சிந்தா:7 1653/3,4
மூசு தேன் வாரி அல்குல் பட்ட பின் முலைகள் என்னும் – சிந்தா:7 1690/1
பணியின் பல் கலம் தாங்குபு சென்ற பின்
அணி செய் கோதை அம் காமினி ஓதினாள் – சிந்தா:7 1713/3,4
காமன் தம்பியின் காளை கிடந்த பின்
ஏமமாபுரத்து இட்டது ஓர் மா தெய்வம் – சிந்தா:7 1715/2,3
கண்ட பின் நின்னை காண்பேன் கரு வரை உலம்பி பல்-கால் – சிந்தா:7 1749/1
முனம் புக அடக்கி பின் போந்து இருந்து பாய்வான் அமைந்த – சிந்தா:7 1750/3
அ வழி இரண்டு திங்கள் கழிந்த பின் அவள் இல் நீங்கி – சிந்தா:7 1758/1
பின் அரிய கற்பினவள் பிரீதிமதி காதல் – சிந்தா:7 1792/3
யாண்டு நிறைந்து ஏகிய பின் நந்தன் அவற்கு இளையார் – சிந்தா:7 1794/1
பின் ஒரு-கால் காண பிழைத்தது என் தேவிர்காள் – சிந்தா:7 1807/2
பொருக்கு ஒளி இன நிரை கோடும் கொண்ட பின்
முருக்கு ஒளி மலர் அடி மூரி மொய்ம்பனை – சிந்தா:7 1825/2,3
சேண் குலாம் சிலையொடு திளைத்த பின் அவர் – சிந்தா:7 1826/1
இரும் கடல் மணி நிரை எய்தி நாம் கொண்ட பின்
அரும் கடி அணி நகர் ஐயன் அங்கு இல்லையேல் – சிந்தா:7 1827/1,2
விடு கணை சென்று தேர் மேல் பின் முனா வீழ்தலோடும் – சிந்தா:7 1863/3
தலை வைத்த காப்பு விஞ்சை கொண்ட பின் தாமம் சூழ்ந்து – சிந்தா:7 1881/3
அறுசுவை அமிர்தம் ஊட்டி அறு பகல் கழிந்த பின் நாள் – சிந்தா:8 1917/4
அளித்த பின் அமளி அம் சேக்கை எய்தினான் – சிந்தா:8 1941/4
நாள்கடன் கழித்த பின் நாமவேலினான் – சிந்தா:8 1944/1
தோள் இரண்டும் அன்ன தோழர் தோன்றலை புணர்ந்த பின்
தாள் இரண்டும் ஏத்தி நின்று தையல் நாமம் வேண்டினார் – சிந்தா:9 1995/3,4
இளையவள் மகிழ்வ கூறி இன் துயில் அமர்ந்து பின் நாள் – சிந்தா:9 2101/1
ஏற்று உரி போர்த்த வள் வார் இடி முரசு அறைந்த பின் நாள் – சிந்தா:10 2152/1
இடு மண் முழவின் இசை ஓவா ஏமாங்கத நாட்டு எய்திய பின்
நெடு வெண்ணிலவின் நெற்றி தோய் நிழலால் செம்பொன் புரிசையே – சிந்தா:10 2172/2,3
மாற்றவன் சேனை தாக்கி தளர்ந்த பின் வன்கண் மள்ளர் – சிந்தா:10 2267/1
மைந்தர் ஆர்த்து அவர் வாய் எலாம் நிறைய வெம் சரம் கான்ற பின்
நெஞ்சம் போழ்ந்து அழல் அம்பு உண நீங்கினார் உயிர் நீள் முழை – சிந்தா:10 2309/2,3
பைய உண்ட பின் கொட்டை மேல் பவித்திர தும்பி பறந்ததே – சிந்தா:10 2311/4
பின் மதம் செறித்திட்டு அஞ்சி பிடி மறந்து இரிந்து போகும் – சிந்தா:10 2313/2
முரசம் ஆர்ந்த பின் மூ இரு நாள்கள் போய் – சிந்தா:12 2393/1
ஈரம் கொன்ற பின் இருள் மணி சுடர் – சிந்தா:12 2422/1
மேவி அச்சுதம் தெளித்த பின் விரைந்து – சிந்தா:12 2426/2
பூட்டி குண்டலம் பொற்ப பெய்த பின்
மோட்டு முத்து ஒளிர் வடம் வளாயினார் – சிந்தா:12 2519/3,4
பின் நிறீஇ வைத்த போல பெதும்பையர் விதும்பி நின்றார் – சிந்தா:12 2530/4
பின் அவை அணிந்து செல்வார் இடம் பெறாது ஒழிந்து போனார் – சிந்தா:12 2538/4
உருவம் ஒவ்வாது ஒசியும் நுசுப்பு ஒல்கி கோமான் அடி தொழுத பின்
மருவு இன் சாயல் மணி மெல் விரல் கூப்பி ஓலை மரபின் நீட்ட – சிந்தா:12 2586/2,3
கொடிய வேலான் கொதித்து அரங்கின் நீக்கி கோயில் சிறை வைத்த பின்
கடி செய் பைம் தார் கமழ் மாலை வேல் கந்துகற்கு சிறுவ யான் இ – சிந்தா:12 2587/2,3
தேன் மதர்ப்ப திளைத்து ஆங்கு அவன் திருவின் சாயல் நலம் கவர்ந்த பின்
ஊன் மதர்த்த ஒளி வேல் கண்ணார் பரவ இவ்வாறு ஒழுகும் அன்றே – சிந்தா:12 2595/2,3
ஒளிறு வேல் சுற்றம் எல்லாம் உடைந்த பின் ஒருவன் ஆனான் – சிந்தா:13 2613/3
அழுது பின் அணி நகர் செல்ல ஆயிரம் – சிந்தா:13 2630/1
தொழு தகு சிவிகைகள் சூழ போய பின்
இழுது அமை எரி சுடர் விளக்கு இட்ட அன்னவள் – சிந்தா:13 2630/2,3
கடி நிரை சிவிகை ஏறி கதிர் மணி குடை பின் செல்ல – சிந்தா:13 2650/2
அம் மலர் உரோம பூம் பட்டு உடுத்த பின் அனிச்ச மாலை – சிந்தா:13 2667/3
மாலை மகளிர் அணிந்ததன் பின் பஞ்ச வாசம் கவுள் கொண்டு – சிந்தா:13 2698/1
தோழன் விண்ணோன் அவண் தோன்றி வயங்கா கூத்து வயங்கிய பின்
காழ் ஆர் வெள்ளி மலை மேலும் காவல் மன்னர் கடி நகர்க்கும் – சிந்தா:13 2704/2,3
பின்னை வெண்ணெயின் திரண்ட பின் பிழைக்கவும் பெறுமே – சிந்தா:13 2754/4
கலந்தனர் சென்ற பின் நாள் கதிர் கழன்று இருந்த வெய்யோன் – சிந்தா:13 2809/3
பின் நிலம் பெருக ஈனும் பெறல் அரும் கொடையும் பேசின் – சிந்தா:13 2823/2
திங்கள் ஒன்பதும் வயிற்றில் சேர்ந்த பின்
வங்க வான் துகில் பொதி மணி செய் பாவை போல் – சிந்தா:13 2832/1,2
எல்லையில் அறவுரை இனிய கேட்ட பின்
தொல்லை எம் பிறவியும் தொகுத்த பாவமும் – சிந்தா:13 2849/1,2
சாரணர் போய பின் சாந்தம் ஏந்திய – சிந்தா:13 2894/1
ஊற்று நீர் குறும் புழை உய்ந்து போந்த பின்
சேற்று நீர் குழியுளே அழுந்தி செல்கதிக்கு – சிந்தா:13 2934/2,3
போற்றிய மணியும் பொன்னும் பின் செலா பொன் அனீரே – சிந்தா:13 2986/2
உருப்பு உயிர் இருவினை உதைப்ப வீழ்ந்த பின்
புரிப்புரி கொண்டு போய் பொதிந்து சுட்டிட – சிந்தா:13 3108/2,3
தேன் உடை மலர்கள் சிந்தி திசை தொழ சென்ற பின் நாள் – சிந்தா:13 3113/3
விளைத்த பின் விண்ணும் மண்ணும் மங்கலம் வகையில் செய்து – சிந்தா:13 3116/3
ஓசை போய் உலகு உண்ண நோற்ற பின்
ஏசு பெண் ஒழித்து இந்திரர்களாய் – சிந்தா:13 3121/2,3

TOP


பின்பனி (1)

பின்பனி தலை பேண வந்ததே – சிந்தா:13 2684/4

TOP


பின்றி (1)

பெரும் படை தான் வரின் பின்றி நீங்கின் பழி – சிந்தா:7 1827/3

TOP


பின்றை (20)

தான் சுவை கொண்டது எல்லாம் தணப்பு அற கொடுத்த பின்றை
தேன் சுவைத்து அரற்றும் பைம் தார் சீவககுமரன் என்ற – சிந்தா:1 373/2,3
ஓரும் ஐம்பொறியும் ஓம்பி உள பகல் கழிந்த பின்றை
கூர் எரி கவரும்-போழ்தில் கூடுமோ குறித்த எல்லாம் – சிந்தா:1 377/3,4
அணங்கினுக்கு அணங்கு அனாரோடு அறு மதி கழிந்த பின்றை
கொணர்ந்தன பண்டம் விற்ற கொழு நிதி குப்பை எல்லாம் – சிந்தா:3 505/2,3
அறு பகல் கழிந்த பின்றை அ நகர்க்கு ஆதி நாய்கன் – சிந்தா:3 665/3
சென்றமை குறிப்பில் தேறி கூத்து எலாம் இறந்த பின்றை
நின்றது மனத்தில் செற்றம் நீங்கி தன் கோயில் புக்கான் – சிந்தா:3 685/2,3
கோள் இழுக்குற்ற பின்றை கோ தொழில் நடாத்துகின்றான் – சிந்தா:4 1088/2
பொன் அடி கழீஇய பின்றை புரிந்து வாய் நன்கு பூசி – சிந்தா:5 1301/2
காசு அற துடைத்த பின்றை கை விரல் உறுப்பு தீட்டி – சிந்தா:5 1302/3
கொடைக்கையான் பிரிந்த பின்றை கோதையாட்கு உய்தல் உண்டோ – சிந்தா:6 1529/4
வீறு உயர் மதியம் தோன்ற விரைவொடு போய பின்றை
மாறு இலா பருதிவட்டம் வரு திரை முளைத்த ஆங்கண் – சிந்தா:6 1542/2,3
விருந்து அவள் செய்த பின்றை தம்பியும் தானும் வேறா – சிந்தா:7 1732/1
புல்ல யான் புணர்ப்பல் என்று பொழுது போய் பட்ட பின்றை
எல் இருள் விஞ்சை ஓதி இ வழி இடுவித்திட்டாள் – சிந்தா:7 1747/2,3
இரு மதி கழிந்த பின்றை இடை இரா பொழுதில் போந்தேன் – சிந்தா:7 1755/4
குணத்தொடு மலிந்த பாதம் குறுக யாம் கொணர்ந்த பின்றை
பணித்ததே செய்து பற்றார் பகை முதல் அடர்த்தும் என்றார் – சிந்தா:7 1817/2,3
வாய்ந்த இ மாதர் சுண்ணம் சீவகன் பழித்த பின்றை
காய்ந்தனள் என்று கூற காளை மற்று இவட்கு தீயான் – சிந்தா:9 2043/1,2
பல் பகல் கழிந்த பின்றை பல் மணி நாகம் தன்னை – சிந்தா:10 2324/3
குழை பொலிந்து இலங்கு காதின் கொற்றவன் இருந்த பின்றை
மழை கவின்று எழுந்த வார் கொள் மணி நிற அறுகை நெய் தோய்த்து – சிந்தா:12 2416/2,3
வளம் கொள பூத்த கோல மலர் அடி கழீஇய பின்றை
இளம் கதிர் கலத்தின் ஏந்த அயினி கண்டு அமர்ந்து இருந்தான் – சிந்தா:12 2469/2,3
வண்டு அறைந்த தாரான் வண்ணம் கண்ட பின்றை
கண்டிலேன் என் மாமை கை வளையொடு என்பார் – சிந்தா:12 2550/1,2
பொடி புனை துகிலின் நீக்கி புகழ்ந்து அடி கழீஇய பின்றை
அடுத்த சாந்து அகிலின் ஆவி ஆய் மலர் அருச்சித்து ஆனார் – சிந்தா:13 2827/2,3

TOP


பின்றையும் (1)

பின்றையும் நிகழ்வது உண்டு பேசுவல் கேள் இது என்றான் – சிந்தா:4 1130/4

TOP


பின்னதனால் (1)

பின்னதனால் பயன் பேசலன் விட்டான் – சிந்தா:1 225/4

TOP


பின்னர் (3)

திரு குழல் மடந்தை செல்ல திரு நிலம் திருத்தி பின்னர்
விரை தகு நான நீரால் வெண் நிற பொடியை மாற்றி – சிந்தா:3 616/2,3
நின்று எரி பசும்பொன் மாலை போந்தது நெறியில் பின்னர்
ஒன்றிய மணி செய் நல் யாழ் போந்தன உருவம் மாலை – சிந்தா:3 630/2,3
வைத்து வழு இல் சாதகமும் வகுத்த பின்னர் தொகுத்த நாள் – சிந்தா:13 2705/2

TOP


பின்னரும் (1)

பின்னரும் மாலை ஓராள் பெரு நடுக்குற்று நின்றாள் – சிந்தா:4 1085/3

TOP


பின்னரே (3)

உடையும் பின்னரே ஒருவன் தேரினால் – சிந்தா:2 416/3
பொன் மலர் சேவடி புகழ்ந்த பின்னரே
வெம் மலை தெய்வதம் விருந்து செய்த பின் – சிந்தா:5 1248/2,3
அழி மத களிறு அனான் அயின்ற பின்னரே
கழி மலர் விழித்த கண் கமலம் பட்டவே – சிந்தா:8 1939/3,4

TOP


பின்னா (4)

குழவி நாறு எழுந்து காளை கொழும் கதிர் ஈன்று பின்னா
கிழவுதான் விளைக்கும் பைம் கூழ் கேட்டிரேல் பிணி செய் பன் மா – சிந்தா:1 379/2,3
காசு கண் பரிய வைகி கடன் தலை கழிந்த பின்னா
தூசு அணி பரவை அல்குல் துளங்கும் நுண் நுசுப்பின் பாவை – சிந்தா:3 586/2,3
பின்னா விளைவித்து பிறவா உலகு எய்தல் பேசலாமே – சிந்தா:6 1548/4
அளைவது காமம் அடு நறவு நெய் ஒழுகும் ஊனும் பின்னா
விளைவது தீவினையே கண்டீர் இவை மூன்றும் விடு-மின் என்றால் – சிந்தா:6 1551/1,2

TOP


பின்னால் (1)

பார் கெழு நிலத்துள் நாறி பல் புகழ் ஈன்று பின்னால்
தார் கெழு தேவர் இன்பம் தையலாய் விளைக்கும் என்றாள் – சிந்தா:13 2632/3,4

TOP


பின்னி (6)

பேர் இயல் பெரும் களிறு பின்னி வந்து அடைந்தவே – சிந்தா:1 277/4
உடம்பினொடு உயிரில் பின்னி ஒருவயின் நீங்கல் செல்லா – சிந்தா:3 556/1
இரும்பினால் பின்னி அன்ன எறுழ் வலி முழவு தோளார் – சிந்தா:3 785/2
என்பினை நரம்பில் பின்னி உதிரம் தோய்த்து இறைச்சி மெத்தி – சிந்தா:7 1577/1
பிறங்கு வெம் கதிர் மின்னொடு பின்னி வீழ்ந்து – சிந்தா:7 1605/3
பிணித்த காதலால் பின்னி செல்வுழி – சிந்தா:12 2518/3

TOP


பின்னிடின் (1)

யாவர்-ஆயினும் நால்வரை பின்னிடின்
தேவர் என்பது தேறும் இ வையகம் – சிந்தா:1 249/1,2

TOP


பின்னிய (2)

பின்னிய முத்த மாலை பிணையல் தாழ் குடையின் நீழல் – சிந்தா:5 1170/2
செம்பொன் பின்னிய போல் தினை காவலர் – சிந்தா:13 3066/1

TOP


பின்னிவிட்ட (1)

பின்னிவிட்ட பிடி தட கை இரண்டு போன்று திரண்டு அழகார் – சிந்தா:7 1658/1

TOP


பின்னிவிட்டு (1)

பின்னிவிட்டு அன குழல் பெரும் கண் பேதை ஊர் – சிந்தா:6 1457/3

TOP


பின்னின்று (1)

புல்லி கொண்டு உயிரை சூழ்ந்து புக்குழி புக்கு பின்னின்று
எல்லையில் துன்ப வெம் தீ சுட்டு எரித்திடுங்கள் அன்றே – சிந்தா:13 2876/3,4

TOP


பின்னும் (11)

நீங்காத காதல் உடையாய் நினைக்க என்று பின்னும்
பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்தவாறும் – சிந்தா:0 16/3,4
மின் சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்து பின்னும்
மன் பெரும் பவழ குப்பை வால் அணிகலம் செய் குப்பை – சிந்தா:1 114/2,3
இடுவதே அன்றி பின்னும் இழுக்கு உடைத்து அம்ம காமம் – சிந்தா:1 211/3
தன் பால் மனையாள் அயலான் தலை கண்டு பின்னும்
இன் பால் அடிசில் இவர்கின்ற கை பேடி போலாம் – சிந்தா:2 443/1,2
எய்திய இளமை மிக்கார் இயைந்தனர் என்று பின்னும்
கை அமை சிலையினாற்கு கந்துகன் இதுவும் கூறும் – சிந்தா:3 667/3,4
உற நடந்து அறிதல் இல்லான் ஒண்_தொடிக்கு உருகி பின்னும்
திறன் அல தமர்க்கு செப்பும் தீ உமிழ்ந்து இலங்கும் வேலான் – சிந்தா:3 688/3,4
தகண் இலா கேள்வியான் கண் தங்கியது என்று பின்னும்
மகள் மனம் குளிர்ப்ப கூறி மறுவலும் புல்லி கொண்டு ஆங்கு – சிந்தா:4 1052/2,3
பூண் மெய் கொண்டு அகன்ற மார்ப பொறு-மதி என்று பின்னும்
நீண்மை கண் நின்று வந்த நிதி எலாம் தருவல் என்றான் – சிந்தா:4 1119/3,4
செவ்வன் நூலில் சித்திரிக்கப்பட்டதனை சேர்த்தி பின்னும்
மவ்வல் நாறும் குழலாட்கு மற்றும் இவைகள் நாடினாள் – சிந்தா:7 1672/3,4
பின்னும் முன்னும் நோக்குவார் பேது சால எய்துவார் – சிந்தா:9 2036/3
வடு உடைத்து என்று பின்னும் மாபெரும்தேவி சொன்னாள் – சிந்தா:13 2618/4

TOP


பின்னுறு (1)

பின்னுறு பரிவு செய்தேன் பேதையேன் கவலல் என்றான் – சிந்தா:7 1726/4

TOP


பின்னை (14)

பின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூ மகள் – சிந்தா:1 245/2
பின்னை தன் குலம் பேர்க்குநர் இல்லையே – சிந்தா:1 245/4
பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி – சிந்தா:4 976/3
பின்னை தான் பிறரை நோக்கா பெரு மட மாது-தன்னை – சிந்தா:7 1599/2
பின்னை யான் பலவும் பேசில் தான் ஒன்று மிழற்றும் பைம் பூண் – சிந்தா:7 1626/2
பின்னை நாள் குவளை நீர் வீழ் பெற்றிய கண்ணள் ஆகி – சிந்தா:7 1743/4
பின்னை ஆகும் பெரும் பொருள் அ பொருள் – சிந்தா:8 1923/3
பின்னை இவள் போகுதிறம் பேசும் என எண்ணி – சிந்தா:9 2028/3
நொந்தார் கடந்தான் கொடுத்தான் பின்னை நூறு மூதூர் – சிந்தா:12 2564/2
வெளிறு முன் வித்தி பின்னை வச்சிரம் விளைத்தலாமோ – சிந்தா:13 2613/4
அறவுரை பின்னை கேட்டும் அடிகள் மற்று எமக்கு வல்லே – சிந்தா:13 2633/1
பின்னை வெண்ணெயின் திரண்ட பின் பிழைக்கவும் பெறுமே – சிந்தா:13 2754/4
பின்னை தன் கிளைகள் கூட்டம் பெருந்தகை வித்தினானே – சிந்தா:13 2880/4
பெறு தகு புதல்வற்கு ஈந்து பின்னை நீ துறத்தி என்றான் – சிந்தா:13 2883/4

TOP


பினர் (1)

தட்டு-இடை அம் துகில் மூடி அதன் பினர்
நெட்டு-இடை நீந்துபு சென்றனர் தாமரை – சிந்தா:4 880/2,3

TOP


பினே (1)

தான் உறக்கு-இடை நீத்தலும் தன் பினே
வேல் நிற கண் விழித்தனள் என்பவே – சிந்தா:5 1361/2,3

TOP