ஐ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 18
ஐ_இரு 1
ஐங்கணை 5
ஐங்கணையும் 1
ஐங்கூந்தல் 1
ஐஞ்ஞாறு 1
ஐஞ்ஞூற்றினை 1
ஐஞ்ஞூற்றுவர் 1
ஐஞ்நூற்று-இடை 1
ஐஞ்நூறு 1
ஐதா 1
ஐது 1
ஐதுபட்டு 1
ஐந்தரை 2
ஐந்தின் 2
ஐந்தினும் 1
ஐந்தினுள் 1
ஐந்து 10
ஐந்தும் 4
ஐந்துருவ 1
ஐந்துள் 1
ஐந்நூற்று 2
ஐந்நூறு 2
ஐப்பசி 1
ஐம் 10
ஐம்_கணை_கிழவன் 1
ஐம்பத 1
ஐம்பதங்கள் 1
ஐம்பது 2
ஐம்பால் 11
ஐம்பொறி 2
ஐம்பொறியாளன் 1
ஐம்பொறியின் 1
ஐம்பொறியும் 5
ஐய 13
ஐய-கொல் 1
ஐயம் 12
ஐயர் 2
ஐயர்க்கு 1
ஐயவி 2
ஐயவோ 2
ஐயற்கு 4
ஐயன் 17
ஐயன்மார்கள் 1
ஐயனாரை 1
ஐயனுக்கு 2
ஐயனே 2
ஐயனை 7
ஐயா 8
ஐயாவே 1
ஐயில் 1
ஐயுறான் 1
ஐயுறும் 1
ஐயென்ன 1
ஐயென 6
ஐயேய் 1
ஐவகை 1
ஐவர் 1
ஐவர்க்கு 1
ஐவரும் 1
ஐவருள் 1
ஐவன 1
ஐவனம் 2
ஐவில் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஐ (18)

பொறி எனும் பெயர ஐ வாய் பொங்கு அழல் அரவின் கண்ணே – சிந்தா:1 375/3
ஐ என வளைப்ப வீரர் ஆர்த்தனர் அவரும் ஆர்த்தார் – சிந்தா:2 448/3
அறா மலர் தெரியலான் அழன்று நோக்கி ஐ என – சிந்தா:3 703/2
ஐ என இருப்ப மற்று அன்னது ஆதலான் – சிந்தா:3 829/2
ஐ என மன்னன் ஏவ ஆள் வழக்கு அற்றது என்ப – சிந்தா:4 907/3
அங்கு நின்று அகன்ற பின் ஐ ஐம் காவதம் – சிந்தா:5 1179/1
ஐ என தோன்றுவர் தோன்றி ஆள் அழித்து – சிந்தா:5 1205/3
ஐ_இரு திங்கள் எல்லை அகப்பட காண்பிர் இப்பால் – சிந்தா:5 1411/2
ஐ விலின் அகல நின்று ஆங்கு அடி தொழுது இறைஞ்சினாற்கு – சிந்தா:7 1704/1
அம் கை அம் தலத்தினால் அப்புது ஆது ஐ என – சிந்தா:7 1834/1
மன்னும் ஐ கணை வார் சிலை மைந்தனோ – சிந்தா:8 1948/2
மண்-பால் இழிந்த மலர் ஐ கணை மைந்தன் என்றாள் – சிந்தா:8 1961/4
கைய வளை மைய குழல் ஐ அரிய வாள் கண் – சிந்தா:9 2017/1
ஐ வாய் அரவின் அவிர் ஆர் அழல் போன்று சீறி – சிந்தா:11 2345/1
ஐ நூல் திறத்தின் அகிலின் ஆவி அளைந்து கமழ ஊட்டி – சிந்தா:12 2437/3
ஐ திரண்டு கண்டம் குரைப்ப ஓர் தண்டு ஊன்றி அறிவின் தள்ளி – சிந்தா:13 2626/3
ஐ ஆண்டு எய்தி மை ஆடி அறிந்தார் கலைகள் படை நவின்றார் – சிந்தா:13 2706/1
ஐ படு பித்து நெய்த்தோர் அசும்பு சோர் அழுகல் புன் தோல் – சிந்தா:13 2938/3

TOP


ஐ_இரு (1)

ஐ_இரு திங்கள் எல்லை அகப்பட காண்பிர் இப்பால் – சிந்தா:5 1411/2

TOP


ஐங்கணை (5)

உருகும் ஐங்கணை ஒழித்து உருவின் ஐய காமனார் – சிந்தா:3 706/3
கண்ணாறு சென்ற களி ஐங்கணை காமன் அன்ன – சிந்தா:10 2134/3
மருளின் சொன்னாய் மறப்பேனோ யான் நின்னை என்ன மகிழ் ஐங்கணை
உருளும் முத்து ஆர் முகிழ் முலையினாள் உள்ளத்து உவகை தோற்றினாளே – சிந்தா:12 2593/3,4
கழிக்கும் ஐங்கணை காமற்கும் காமனே – சிந்தா:13 2671/4
ஐங்கணை காமன் அன்னான் அசோதரன் அரச சீயம் – சிந்தா:13 2856/3

TOP


ஐங்கணையும் (1)

அறியுநர் ஆவி போழும் அநங்கனை ஐங்கணையும் எய்தாள் – சிந்தா:7 1572/4

TOP


ஐங்கூந்தல் (1)

பொழி மது புயல் ஐங்கூந்தல் செவிலியை பொருந்தி சொன்னாள் – சிந்தா:9 2074/4

TOP


ஐஞ்ஞாறு (1)

கரை கடல் அழுவம் நீந்தி காற்றினும் கடுகி ஐஞ்ஞாறு
உரை உடை காதம் ஓடி யோசனை எல்லை சார்ந்தே – சிந்தா:3 506/3,4

TOP


ஐஞ்ஞூற்றினை (1)

ஈர் ஐஞ்ஞூற்றினை இருபதின் முரணிய தொகைய – சிந்தா:7 1772/1

TOP


ஐஞ்ஞூற்றுவர் (1)

அம் தீம் கிளவியார் ஐஞ்ஞூற்றுவர் அவை துறைபோய் ஆடல் அரம்பை அன்னார் – சிந்தா:1 292/3

TOP


ஐஞ்நூற்று-இடை (1)

கிளை இளம் பிடிகள் ஐஞ்நூற்று-இடை கேழ் அரக்கு – சிந்தா:7 1830/3

TOP


ஐஞ்நூறு (1)

இகழ் மதம் செறித்த இராயிரத்து ஐஞ்நூறு இளையவும் அ துணை களிறே – சிந்தா:10 2155/4

TOP


ஐதா (1)

புரி மணி ஆகத்து ஐதா விரல் நுதி கொண்டு பூசி – சிந்தா:3 625/3

TOP


ஐது (1)

ஐது ஏந்து அகல் அல்குல் ஆவித்து அழல் உயிரா – சிந்தா:9 2050/1

TOP


ஐதுபட்டு (1)

ஐதுபட்டு ஒழுகி யானை அழி மதம் கலந்து சேறாய் – சிந்தா:1 117/2

TOP


ஐந்தரை (2)

அழல் திகழ் கதத்த யானை ஐந்தரை கச்சம் ஆகும் – சிந்தா:10 2220/2
வீடு இல் ஐந்தரை கோடி விருத்தி மேல் – சிந்தா:12 2577/1

TOP


ஐந்தின் (2)

நலத்தகு விரல்கள் ஐந்தின் இம்பர் மூ விரலின் நீளம் – சிந்தா:7 1645/2
ஐவகை பொறியும் வாட்டி யாமையின் அடங்கி ஐந்தின்
மெய் வகை தெரியும் சிந்தை விளக்கு நின்று எரிய விட்டு – சிந்தா:13 2824/1,2

TOP


ஐந்தினும் (1)

அரும் பனை தட கை அபரகாத்திரம் வாய் வால் எயிறு ஐந்தினும் கொல்வ – சிந்தா:10 2154/1

TOP


ஐந்தினுள் (1)

அரிய கொள்கையர் ஆர் அழல் ஐந்தினுள்
மருவி வீடு வளைக்குறும் மாட்சியர் – சிந்தா:6 1423/1,2

TOP


ஐந்து (10)

அருமையால் அழகின் கணை ஐந்து உடை – சிந்தா:1 160/3
ஐந்து மூன்று அடுத்த செல்வத்து அமளி மூன்று இயற்றி பூம் பட்டு – சிந்தா:3 838/1
அலைக்கும் வெம் சரம் ஐந்து உடையான்-அரோ – சிந்தா:4 995/4
கழை முற்று தீம் தேன் கரும்பு ஆர் வயல் ஐந்து மூதூர் – சிந்தா:4 1064/3
ஐந்து மதி எல்லையினை ஆண்டு உடையன் ஆகி – சிந்தா:7 1875/3
அங்கை அம் தலத்து அகத்த ஐந்து பந்து அமர்ந்தவை – சிந்தா:8 1953/1
அம்பு ஒர் ஐந்து உடைய காமன் ஐயன் என்ன அந்தணன் – சிந்தா:9 1997/1
கிளைக்கு எலாம் சிறப்பு செய்து கேட்டவர் மருள ஐந்து ஊர் – சிந்தா:12 2570/2
ஆன் விளையாடும் ஐந்து ஊர் அதன் புறம் ஆக்கினானே – சிந்தா:12 2574/4
எல்லை மூ_ஐந்து நாள்கள் உள என இமைக்கும் கண்ணும் – சிந்தா:13 2810/1

TOP


ஐந்தும் (4)

மல் செய்து வீங்கு தோளான் மந்திரம் ஐந்தும் மாதோ – சிந்தா:4 945/3
மனத்து-இடை செறும்பு நீக்கி மறவலை ஆகி ஐந்தும்
நினைத்திடு நின்-கண் நின்ற நீல் நிற வினையின் நீங்கி – சிந்தா:4 947/1,2
சிரை ஐந்தும் விடுதும் என்பார் தீற்றுதும் சிருங்கி என்பார் – சிந்தா:5 1277/1
சென்ற திருவார் அடி ஏத்தி தெளியும் பொருள்கள் ஓர் ஐந்தும்
அன்றி ஆறும் ஒன்பானும் ஆகும் என்பார் அறவோரே – சிந்தா:13 2814/3,4

TOP


ஐந்துருவ (1)

ஐந்துருவ அம்பின் அநங்கன் என்று அயர்வார் – சிந்தா:12 2548/2

TOP


ஐந்துள் (1)

அல்லியும் புல்லும் உண்டு ஆங்கு ஆர் அழல் ஐந்துள் நின்று – சிந்தா:6 1430/1

TOP


ஐந்நூற்று (2)

முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கும் மார்பினன் ஐந்நூற்று நால்வர் – சிந்தா:4 985/3
அண்ணல் பிறந்த ஆங்கு ஐந்நூற்று ஐவர்க்கு அளந்து ஆன் பால் – சிந்தா:13 2604/1

TOP


ஐந்நூறு (2)

ஐந்நூறு நூறு தலை இட்ட ஆறாயிரவர் – சிந்தா:2 453/1
அரு மணி வயிரம் வேய்ந்த அரும் கல பேழை ஐந்நூறு
எரி மணி செம்பொன் ஆர்ந்த ஈர்_ஆயிரம் யவன பேழை – சிந்தா:3 557/1,2

TOP


ஐப்பசி (1)

அலங்கு வெண் மதி ஐப்பசி அடைய அ பகலே – சிந்தா:7 1770/1

TOP


ஐம் (10)

அலர் தலை அனிச்சத்து அம் போது ஐம் முழ அகலம் ஆக – சிந்தா:3 617/2
ஐம் தலை அரவின் சீற்றத்து ஆர் அழல் குளிக்கலுற்றார் – சிந்தா:3 746/4
ஐம் கதி கலின பாய் மா சிறிது போர் களை ஈது என்பார் – சிந்தா:3 784/1
ஆசு அற நடக்கும் நாளுள் ஐம்_கணை_கிழவன் வைகி – சிந்தா:4 851/3
அங்கு நின்று அகன்ற பின் ஐ ஐம் காவதம் – சிந்தா:5 1179/1
ஊடு போக்கு இனியது அங்கு ஓர் ஐம் காதமே – சிந்தா:5 1207/4
அல்லது ஐம் கதி மான் கொழும் தார் ஒலி – சிந்தா:10 2169/2
விரும்புகின்றான் இளவேனில் வேந்தன் ஐம்
சரங்கள் சென்று அழுத்தலின் தரணி மன்னனே – சிந்தா:13 2676/3,4
ஐம் தலை அரவினை யாவர் தீண்டுவார் – சிந்தா:13 2936/2
அழலார் சுரை எயிற்று வெம் சின ஐம் தலை சுமந்த வெகுளி நாகம் – சிந்தா:13 2970/1

TOP


ஐம்_கணை_கிழவன் (1)

ஆசு அற நடக்கும் நாளுள் ஐம்_கணை_கிழவன் வைகி – சிந்தா:4 851/3

TOP


ஐம்பத (1)

இறுகல் நீ இறைவன் சொன்ன ஐம்பத அமிர்தம் உண்டால் – சிந்தா:4 946/3

TOP


ஐம்பதங்கள் (1)

கற்ற ஐம்பதங்கள் நீரா கருவினை கழுவ பட்டு – சிந்தா:4 951/1

TOP


ஐம்பது (2)

அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால் – சிந்தா:1 336/1
அறைந்தனர் ஒன்று இலா ஐம்பது ஆயிடை – சிந்தா:13 2834/3

TOP


ஐம்பால் (11)

மணி அறைந்து அன்ன வரி அறல் ஐம்பால்
பணி வரும் கற்பின் படை மலர் கண்ணாய் – சிந்தா:1 335/1,2
அசும்பு தேன் அலங்கல் ஐம்பால் அரிவையோடு ஆய்ந்து நாய்கன் – சிந்தா:3 621/3
திரு மலர் கோதை ஐம்பால் தேவியர் தொடர்பு கேட்ப – சிந்தா:5 1171/3
நெய் கனிந்து இருண்ட ஐம்பால் நெடும் கணாள் காதலானை – சிந்தா:5 1411/1
மல்லிகை கோதை ஐம்பால் மலைமகள் மனையை சேர்ந்தேன் – சிந்தா:7 1745/4
மாசொடு மிடைந்து மணி நூற்று அனைய ஐம்பால்
பூசுதலும் இன்றி பிணி கொண்டு புறம் தாழ – சிந்தா:7 1784/1,2
வரை வளை முழ விம்ம மணி கிளர் ஒலி ஐம்பால்
அரை விளை கலை நல்லார் அறுகின் நெய் அணிந்தனரே – சிந்தா:12 2430/3,4
வைத்தார் மணி நூற்றன ஐம்பால் வளைய முடித்து வான் கழுநீர் – சிந்தா:13 2693/3
தாமம் ஆர் ஒலியல் ஐம்பால் சயமதி திருவும் ஆர்ந்த – சிந்தா:13 2888/2
கலவ மயில் கால் குவித்த போலும் கமழ் ஐம்பால்
நிலவும் மணி மேகலை நிலா உமிழும் பைம் பூண் – சிந்தா:13 2922/1,2
நீல் நிறம் கொண்ட ஐம்பால் நிழல் மணி உருவம் நீங்கி – சிந்தா:13 2940/1

TOP


ஐம்பொறி (2)

கொலை தலைய வேல் கணார் கூத்தும் அன்றி ஐம்பொறி
நில தலைய துப்பு எலாம் நிறை துளும்பும் ஊர்களே – சிந்தா:1 75/3,4
மையல் ஐம்பொறி மதம் வாட்டி வைகலும் – சிந்தா:13 2819/3

TOP


ஐம்பொறியாளன் (1)

ஆட்சி ஐம்பொறியாளன் உடம்பு எனும் – சிந்தா:5 1292/1

TOP


ஐம்பொறியின் (1)

குன்றாமல் தாம் கொடுத்து ஐம்பொறியின் வேலி காத்து ஓம்பின் – சிந்தா:4 962/3

TOP


ஐம்பொறியும் (5)

ஓரும் ஐம்பொறியும் ஓம்பி உள பகல் கழிந்த பின்றை – சிந்தா:1 377/3
பொய் வகை இன்றி தேறல் காட்சி ஐம்பொறியும் வாட்டி – சிந்தா:6 1436/2
அடல் வண்ண ஐம்பொறியும் அட்டு உயர்ந்தோர் கோமான் – சிந்தா:6 1468/1
உடன் ஆக ஐம்பொறியும் வென்றார்க்கு உவந்து ஈதல் தானமாகும் – சிந்தா:6 1546/2
அருளும் நக வையம் நக ஐம்பொறியும் நைய – சிந்தா:13 2872/3

TOP


ஐய (13)

ஐய பொன் அசும்பு ஆடி அளைந்து உராய் – சிந்தா:1 37/2
வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோல் – சிந்தா:1 141/1
ஆடக செம்பொன் பாவை ஏழுடன் தருவல் ஐய
வாடலில் வதுவை கூடி மணமகன் ஆக என்றான் – சிந்தா:2 479/3,4
உருகும் ஐங்கணை ஒழித்து உருவின் ஐய காமனார் – சிந்தா:3 706/3
யாது செய்கம் ஐய என்று அன்பு மிக்கு அரற்றினர் – சிந்தா:4 1102/4
யாம் தலைப்படுதும் ஐய அறியின் ஈங்கு உரைக்க என்றார் – சிந்தா:5 1410/4
யாண்டையாய் ஐய அஞ்சினென் ஆருயிர் – சிந்தா:6 1509/1
இ திசைக்கு ஐய நீ புதியை போன்ம் என – சிந்தா:7 1619/4
ஐய நீ யாரை என்றாற்கு அவன் உரை கொடாதுவிட்டான் – சிந்தா:7 1718/2
கடியிர் நீர் ஐய நீரே என கசிந்து உருகி காய் பொன் – சிந்தா:7 1744/2
தாதையார் உவப்ப செய்வான் தாழ் கச்சில் பிணிப்புண்டு ஐய
போதரா நின்ற-போழ்தில் போர் புலி குழாத்தின் சீறி – சிந்தா:7 1748/1,2
அங்காத்து இருந்தாளை தலைப்பட்டு ஐய அறிந்தோமே – சிந்தா:7 1882/4
ஐய அரிமான் மணி அணை மேல் அமர்ந்தோய் நின்னை அமராதார் – சிந்தா:13 3019/2

TOP


ஐய-கொல் (1)

ஐய-கொல் களிறு அக இதழ் அரசர் அல்லி தன் மக்களா – சிந்தா:10 2311/2

TOP


ஐயம் (12)

ஆலயம் இது என ஐயம் செய்யுமே – சிந்தா:1 90/4
உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே – சிந்தா:1 172/4
ஐயம் இலை இன்பம் அறனோடு அவையும் ஆக்கும் – சிந்தா:3 497/3
ஆம் ஓர் ஐயம் காண்பவர்க்கு இது அகம் புறம் இது எனவே – சிந்தா:3 596/4
ஐயம் உற்று அலர் தார் மன்னர் கூறினார் – சிந்தா:3 639/4
வேல் ஐயம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி – சிந்தா:4 897/2
ஐயம் உற்று எவர்களும் அமர்ந்து நோக்கினார் – சிந்தா:5 1263/4
அறிதிர் பிற நீவிர் என ஐயம் இலை என்றான் – சிந்தா:9 2021/4
ஐயம் இலை நின்ற புகழ் வையகத்து மன்னும் – சிந்தா:13 2869/2
ஐயம் செய்து அடு பால் நிற புள் இனம் – சிந்தா:13 3005/3
ஐயம் இன்றாய் அலர் தாமரை மேல் அடி – சிந்தா:13 3095/2
ஆசை ஆர்வமோடு ஐயம் இன்றியே – சிந்தா:13 3121/1

TOP


ஐயர் (2)

ஐயர் கூறலும் அண்ணலும் கூறுவான் – சிந்தா:6 1426/1
ஐயர் உறை பள்ளி இடம் ஆண்டு அழகர் காண – சிந்தா:7 1782/1

TOP


ஐயர்க்கு (1)

என்னை கண்டு அடிசில் ஆக்க ஐயர்க்கு என்று அவலம் நீங்க – சிந்தா:7 1743/1

TOP


ஐயவி (2)

திணி நிலம் அணிந்து தேம் கொள் ஐயவி சிதறினாரே – சிந்தா:1 113/4
அற்றம் இல் தவத்திற்கு என்றும் ஐயவி அனைத்தும் ஆற்றாது – சிந்தா:13 2983/2

TOP


ஐயவோ (2)

ஐயவோ என்று எழுந்தனள் ஆய் மதி – சிந்தா:1 345/3
அழலும் மேனியும் ஆற்றலென் ஐயவோ
நிழலின் நீப்பரும் காதலும் நீத்தியோ – சிந்தா:6 1511/3,4

TOP


ஐயற்கு (4)

என் நிலை ஐயற்கு என்ன யாவதும் கவல வேண்டா – சிந்தா:4 1123/3
யாப்பு உடைத்து ஐயற்கு இன்றே நங்கையை அமைக்க என்ன – சிந்தா:5 1343/2
யான் அலன் ஔவை ஆவாள் சுநந்தையே ஐயற்கு என்றும் – சிந்தா:8 1915/1
ஐயற்கு என்று உரைத்த மாற்றம் கேட்டலும் அலங்கல் நாய்கன் – சிந்தா:9 2072/1

TOP


ஐயன் (17)

ஐயன் அது அருளினால் யான் அந்தணர் தொழிலன் ஆனேன் – சிந்தா:1 400/4
மொய் அமர் நாள்செய்து ஐயன் முதல் விளையாடினானே – சிந்தா:2 448/4
நிலம் அறிந்து அணிக ஐயன் சீவகன் நெறியின் என்ன – சிந்தா:3 673/1
ஆடினாள் முறுவல் என்னும் தோழியை ஐயன் காண – சிந்தா:3 683/2
யாவரும் புகழும் ஐயன் அழகு கெட்டு ஒழியும்-ஆயின் – சிந்தா:4 1111/3
அடிகளுக்கு இறைஞ்சி ஐயன் அடிகளை தொழுது நங்கை – சிந்தா:5 1272/1
ஐயன் சென்றுழி கூறுக என்று ஆய் மயில் – சிந்தா:5 1366/3
எய்த சென்று ஐயன் ஆர தழுவிக்கொண்டு இதனை சொன்னான் – சிந்தா:7 1641/4
கழுமிய கற்பினாய் நின் மைத்துனன் ஐயன் என்ன – சிந்தா:7 1730/2
அரும் கடி அணி நகர் ஐயன் அங்கு இல்லையேல் – சிந்தா:7 1827/2
கோல் தொடி புரிசையுள் கொற்றவன் நின்று ஐயன்
ஏற்று இயல் காண்டும் நாம் இவண் தருக என்னவே – சிந்தா:7 1837/1,2
எங்கணான் ஐயன் என்றாட்கு அடியன் யான் அடிகள் என்னா – சிந்தா:8 1910/1
எனக்கு உயிர் சிறுவன் ஆவான் நந்தனே ஐயன் அல்லை – சிந்தா:8 1916/1
அம்பு ஒர் ஐந்து உடைய காமன் ஐயன் என்ன அந்தணன் – சிந்தா:9 1997/1
ஆய்ந்தனம் ஐயன் உய்ந்தான் அறிந்தனம் அதனை என்றார் – சிந்தா:9 2043/4
பெரு வளைப்பு இட்டு காத்த கற்பு இது போலும் ஐயன்
கரி விளைத்து ஆய்ந்த சுண்ணம் காட்டினன் என்று கண்டாய் – சிந்தா:9 2077/2,3
அயிராவணத்தொடு சூள் உறும் ஐயன்
உயிர் காவலன் கொண்டு உதவ நில் என்பார் – சிந்தா:10 2126/3,4

TOP


ஐயன்மார்கள் (1)

ஐயன்மார்கள் துளக்கு இன்றி ஆலும் கலிமா வெகுண்டு ஊர்ந்தார் – சிந்தா:13 2706/3

TOP


ஐயனாரை (1)

வேண்டியது எமக்கு நேரின் வில் வலாய் நும் ஐயனாரை
காண்டி என்று உரைப்ப காளை எழுமையும் அடிமை நேர – சிந்தா:7 1709/1,2

TOP


ஐயனுக்கு (2)

ஐயனுக்கு அமைந்த நீரார் அறுபத்து நால்வர் அம் பொன் – சிந்தா:3 667/1
அங்கு அது கண்ட தாதி ஐயனுக்கு இன்னது என்றாள் – சிந்தா:4 1083/4

TOP


ஐயனே (2)

ஐயனே அறியும் என வந்தனம் – சிந்தா:4 886/1
அனையதே பட்டது என்றால் ஐயனே நங்கைக்கு ஒத்தான் – சிந்தா:4 1053/2

TOP


ஐயனை (7)

அன்பு எழுந்து அரசனுக்கு அவலித்து ஐயனை
நுன் பழம் பகை தவ நூறுவாய் என – சிந்தா:1 324/2,3
ஐயனை கண்ணில் காண யானை_தீ அதகம் கண்ட – சிந்தா:1 403/1
ஐயனை செவ்வி கண்டு அறிந்து வம் என – சிந்தா:4 1023/2
உடன் ஆடும் என் ஐயனை என்று உருகா – சிந்தா:6 1526/3
ஐயனை யாம் அவண் எய்துவம் ஆய்_இழை – சிந்தா:7 1767/1
அசைவின்று ஐயனை தம்-மின் என சொன்னாள் – சிந்தா:7 1814/4
அம்பு கை காணாம் ஐயனை கையில் தொழுது என்பார் – சிந்தா:11 2332/4

TOP


ஐயா (8)

ஐயா விளாம்பழமே என்கின்றீர் ஆங்கு அதற்கு பருவம் அன்று என் – சிந்தா:6 1553/2
அன்னள் நின் தோழி ஐயா அவள் என்னை கண்ட கண்ணால் – சிந்தா:7 1599/1
ஒண் பொருள் ஆவது ஐயா உடன் பிறப்பு ஆக்கல் ஆகா – சிந்தா:7 1760/3
ஐயா என் ஐயா என் ஐயா அகன்றனையே – சிந்தா:7 1802/4
ஐயா என் ஐயா என் ஐயா அகன்றனையே – சிந்தா:7 1802/4
ஐயா என் ஐயா என் ஐயா அகன்றனையே – சிந்தா:7 1802/4
தாள் ஐயா முன்பு செய்த தவத்தது விளைவு இலாதேன் – சிந்தா:8 1912/3
என்றலும் சுநந்தை சொல்லும் இறைவி-தான் கண்டது ஐயா
நன்றும் அஃது ஆக அன்றே-ஆயினும் ஆக யானும் – சிந்தா:13 2627/1,2

TOP


ஐயாவே (1)

ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது என்பார் கோல் வளையினார் – சிந்தா:1 295/4

TOP


ஐயில் (1)

கொண்டது நாகம் என்பார் குறை வளி பித்தொடு ஐயில்
பிண்டித்து பெருகிற்று என்பார் பெரு நவை அறுக்கும் விஞ்சை – சிந்தா:5 1276/2,3

TOP


ஐயுறான் (1)

ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கி செல்கின்றான் – சிந்தா:1 181/3

TOP


ஐயுறும் (1)

அந்தரத்தார் மயனே என ஐயுறும்
தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன் – சிந்தா:1 234/1,2

TOP


ஐயென்ன (1)

ஆம்பால் மணி நாம மோதிரம் தொட்டு ஐயென்ன
தேம்பா எழுத்து ஓலை செவ்வனே நோக்கினாள் – சிந்தா:4 1040/3,4

TOP


ஐயென (6)

ஆடு கூத்தரின் ஐயென தோன்றினான் – சிந்தா:4 948/4
ஐயென அடங்கி வல்லான் ஆடிய மணி வட்டு ஏய்ப்ப – சிந்தா:4 983/3
ஆவியா அழல் என உயிர்க்கும் ஐயென
மேவி பூ நிலம் மிசை இருக்கும் மெல்லவே – சிந்தா:4 1025/3,4
அணங்கு அரும் சரங்களின் அழுத்தி ஐயென
மணம் கமழ் வரு புனல் மறலும் மாந்தரின் – சிந்தா:10 2225/2,3
அழல் நிற தேறல் உள் மதி கண்டு ஐயென
நிழல் முக பகை கெட பருகி நீள் விசும்பு – சிந்தா:13 2677/2,3
கலந்த கள்ளினை கை செய்து ஐயென
மலர்ந்து வாய் வைத்தார் மணி கொள் வள்ளத்தே – சிந்தா:13 3130/2,3

TOP


ஐயேய் (1)

கோதை கண் படுக்கும் கூந்தல் குரை வளி பித்தோடு ஐயேய்
ஏதம் செய் மலங்கள் நெய்த்தோர் இறைச்சி என்பு ஈருள் மூளை – சிந்தா:7 1583/2,3

TOP


ஐவகை (1)

ஐவகை பொறியும் வாட்டி யாமையின் அடங்கி ஐந்தின் – சிந்தா:13 2824/1

TOP


ஐவர் (1)

அம் பொன் கொம்பின் ஆய்_இழை ஐவர் நலன் ஓம்ப – சிந்தா:1 363/1

TOP


ஐவர்க்கு (1)

அண்ணல் பிறந்த ஆங்கு ஐந்நூற்று ஐவர்க்கு அளந்து ஆன் பால் – சிந்தா:13 2604/1

TOP


ஐவரும் (1)

அருவி குன்றின் மேல் முடித்திட்டு ஐவரும்
திருவின் தோற்றம் போல் தேவர் ஆயினார் – சிந்தா:13 3134/3,4

TOP


ஐவருள் (1)

ஐவருள் ஒருவன் அன்ன அடிசில் நூல் மடையன் ஏந்த – சிந்தா:13 2735/3

TOP


ஐவன (1)

அருவி குன்றமும் ஐவன சாரலும் – சிந்தா:7 1779/1

TOP


ஐவனம் (2)

அருவி ஐவனம் கரும்பும் அடக்கரும் கவை கதிர் வரகும் – சிந்தா:7 1561/3
யானை வெண் மருப்பு உலக்கை அறை உரல் ஐவனம் இடித்த – சிந்தா:7 1562/1

TOP


ஐவில் (1)

உருக்கு அமைந்து எரியும் செம்பொன் ஓர் ஐவில் அகலம் ஆக – சிந்தா:3 616/1

TOP