மொ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொக்குள் 4
மொக்குளின் 1
மொக்குளும் 1
மொட்டின் 1
மொட்டு 2
மொந்தை 1
மொய் 57
மொய்க்கும் 2
மொய்கொள் 1
மொய்கொள 1
மொய்த்த 10
மொய்த்தது 1
மொய்த்தவே 2
மொய்த்தார் 1
மொய்த்திருந்த 1
மொய்த்து 14
மொய்ப்ப 2
மொய்ப்படு 1
மொய்ம்ப 2
மொய்ம்பர்க்கு 1
மொய்ம்பவோ 1
மொய்ம்பன் 2
மொய்ம்பனை 1
மொய்ம்பினார் 1
மொய்ம்பினான் 4
மொய்ம்பொடு 2
மொய்யார் 2
மொழி 17
மொழி-கொல் 1
மொழி-மின் 1
மொழிக 3
மொழிகள் 1
மொழிகின்றாள் 1
மொழிதல் 1
மொழிந்த 2
மொழிந்தது 2
மொழிந்தனர் 1
மொழிந்தால் 1
மொழிந்தான் 3
மொழிந்து 4
மொழிப 1
மொழிய 2
மொழியல் 1
மொழியாட்கும் 1
மொழியால் 1
மொழியினாள் 1
மொழியீர் 1
மொழியும் 3
மொழியே 1
மொழியோ 1
மொழிவாம் 3
மொழிவாய் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மொக்குள் (4)

மழை மொக்குள் அன்ன வரு மென் முலை மாதர் நல்லார் – சிந்தா:4 1064/1
மன்னும் நீர் மொக்குள் ஒக்கும் மானிடர் இளமை இன்பம் – சிந்தா:6 1537/1
பொழிதரு மழை மொக்குள் போகம் விட்டு ஆசை நீக்கி – சிந்தா:13 2651/3
புயல் இனம் மொக்குள் வன்கண் குறு முயல் புலம்பி குன்றத்து – சிந்தா:13 3042/2

TOP


மொக்குளின் (1)

மாரி மொக்குளின் மாய்ந்து விண் தொழ – சிந்தா:2 409/3

TOP


மொக்குளும் (1)

மின்னும் மொக்குளும் என நனி வீயினும் வீயும் – சிந்தா:13 2754/3

TOP


மொட்டின் (1)

மொட்டின் வீங்கிய வெம் முலை மொய் குழல் – சிந்தா:12 2575/2

TOP


மொட்டு (2)

மொட்டு உலாய் முலைகள் பாய்ந்த அகலத்து சரங்கள் மூழ்க – சிந்தா:3 772/3
மொட்டு அன மெல் முலை மொய் குழலாரே – சிந்தா:4 880/4

TOP


மொந்தை (1)

தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் பிறவும் ஓசை – சிந்தா:4 965/1

TOP


மொய் (57)

தேன் நிரைத்து உயர் மொய் வரை சென்னியின் – சிந்தா:1 33/1
முழவின் நின்று அதிர் மொய் வரை சென்னியின் – சிந்தா:1 34/2
மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும் – சிந்தா:1 116/1
முத்தம் வாய் புரித்தன மொய் கதிர் பசும்பொனால் – சிந்தா:1 150/1
மொய் அறா களி யானை முழங்கி தேன் இமிர் தாரான் – சிந்தா:1 181/4
முனை திறம் உருக்கி முன்னே மொய் அமர் பலவும் வென்றான் – சிந்தா:1 205/2
மொய் கொள் பூமி முளைப்பது போலவே – சிந்தா:1 345/4
மொய் குரல் முரசம் நாணும் தழங்கு குரல் முழங்க கேட்டேன் – சிந்தா:1 403/4
முல்லை கார் என பூப்ப மொய் நிரை – சிந்தா:2 413/2
முலை படு முத்தொடு மொய் குழல் வேய்ந்த – சிந்தா:2 424/2
மொய் அமர் நாள்செய்து ஐயன் முதல் விளையாடினானே – சிந்தா:2 448/4
மூழை நீர் சொரிந்து மொய் கொள் ஆய்த்தியர் ஆட்டினாரே – சிந்தா:2 487/4
மொய் கொள் முலை பாய முகை விண்டு அலர்ந்த தாரான் – சிந்தா:3 589/4
முழங்கு திரை வேலியினின் இல்லை என மொய் கொண்டு – சிந்தா:3 597/3
முலை பொர உடைந்த தண் தார் மொய் மது துளிப்ப வந்தான் – சிந்தா:3 612/3
முகில் ஏந்து மின் மருங்குல் மொய் குழல் தாய் இது கண்டும் உளளே பாவம் – சிந்தா:3 679/4
முருகு விம்மு கோதையார் மொய் அலங்கல் வண்டு போல் – சிந்தா:3 706/1
மொய் அமர் மலைந்தனர் முருகு விம்மு தார் – சிந்தா:3 778/3
முழை உடை சிங்கம் அன்னான் மொய் அமர் ஏத்தி ஆர்த்தார் – சிந்தா:3 816/3
முரிந்த மொய் திரை போன்ற அகில் புகை – சிந்தா:4 861/2
மொட்டு அன மெல் முலை மொய் குழலாரே – சிந்தா:4 880/4
மொய் கொள பிறழ்ந்து முத்தார் மருப்பு-இடை குளித்து கால் கீழ் – சிந்தா:4 983/2
முலை தடத்து இடை மொய் எரு குப்பையா – சிந்தா:4 995/2
மொய் கொள் சிந்தையின் மூங்கையும் ஆயினேன் – சிந்தா:4 997/2
மொய் மலர் குவளை கண்ணி மொய்ம்ப நீ முழுதும் நீந்தி – சிந்தா:5 1214/2
முட்டு உடை முடுக்கரும் மொய் கொள் குன்றமும் – சிந்தா:5 1216/2
முகில் தலை விலங்கிய மொய் கொள் நீள் கொடி – சிந்தா:5 1251/2
முகை அவாவிய மொய் குழல் பாவியேன் – சிந்தா:5 1307/3
முருகு விம்மிய மொய் குழல் ஏழை-தன் – சிந்தா:5 1321/1
முத்து இலங்கு ஆகம் தோய்ந்த மொய் மலர் தாரினான் நம் – சிந்தா:5 1395/1
முருகு விம்மு குழலார் போல மொய் கொள் தும்பி – சிந்தா:6 1415/2
முருகற்கும் அநங்கற்கும் எனக்கும் மொய் சடை – சிந்தா:6 1488/3
முடி கெழு மன்னன் சொல்ல மொய் கொள் வேல் குருசில் தேற்றான் – சிந்தா:7 1685/1
மொய் வெல்லும் குருதி வேலான் மூவில் கண் இறைஞ்சி நின்றான் – சிந்தா:7 1704/4
முடி உலகு உற நிமிர்ந்து ஆர்த்த மொய் கழல் – சிந்தா:7 1847/3
மோட்டு இள முல்லை மொய் மலர் கானம் முருகு வந்து எதிர்கொள நடந்தார் – சிந்தா:10 2104/4
முடி மனர் எழுதரு பருதி மொய் களிறு – சிந்தா:10 2223/1
முலை கோட்டால் உழப்பட்ட மொய் மலர் தார் அகன் மார்பர் – சிந்தா:10 2234/2
மொய் வார் குழலார் முலை போர்க்களம் ஆய மார்பில் – சிந்தா:10 2322/1
முறிந்த கோலம் முகிழ் முலையார் பரவ மொய் ஆர் மணி செப்பில் – சிந்தா:11 2358/1
முத்து உமிழ் திரைகள் அங்கம் மொய் கொள் பாதாலம் முத்தீ – சிந்தா:12 2462/1
முரசொடு முழங்கி ஆர்ப்ப மொய் கொள் வேல் மன்னர் ஆர்ப்ப – சிந்தா:12 2467/3
மூசி வண்டு இமிரும் மொய் அலங்கல் தாழ – சிந்தா:12 2549/3
முருகு பொறை உயிர்க்கும் மொய் பூங்காவில் படை நீக்கி – சிந்தா:12 2559/3
மொட்டின் வீங்கிய வெம் முலை மொய் குழல் – சிந்தா:12 2575/2
முனியாது தான் காண மொய் கொள் மாடத்து எழுதுவித்தாள் – சிந்தா:13 2603/4
முன்னுபு கீழ் திசை நோக்கி மொய் மலர் – சிந்தா:13 2636/1
மொய் நிற மாலை வேய்ந்து முருகு உலாம் முடியினானே – சிந்தா:13 2730/4
மொய் அமர் ஞாட்பினுள் முரண் கொள் மன்னவர் – சிந்தா:13 2819/1
மோட்டு இள முகையின் மொய் கொள் கொக்கு உகிர் நிமிரல் வெண் சோறு – சிந்தா:13 2972/2
முலை உலாய் நிமிர்ந்த மொய் தார் முழவு முத்து உரிஞ்சி மின்ன – சிந்தா:13 2976/2
முழா திரள் மொய் மலர் தாமம் தாழ்ந்து மேல் – சிந்தா:13 3012/1
மொய் மலர் தூய் முனியாது வணங்குதும் – சிந்தா:13 3095/3
முளைத்து எழு பருதி மொய் கொள் முழங்கு அழல் குளித்ததே போல் – சிந்தா:13 3116/1
முல்லை கண்ணிகள் சிந்த மொய் நலம் – சிந்தா:13 3129/2
முழுது ஆரம் மின்னும் முலை குவட்டினால் மொய் மார்பில் குங்கும சேறு இழுக்கி வீழ – சிந்தா:13 3137/1
மொய் வினை இருள் கண் போழும் முக்குடை மூர்த்தி பாதம் – சிந்தா:13 3145/3

TOP


மொய்க்கும் (2)

தேன் இரைத்து எழுந்து திங்கள் இறால் என சென்று மொய்க்கும்
கான் அமர் அருவி குன்றில் காய் கதிர் சுமந்து ஓர் திங்கள் – சிந்தா:5 1168/2,3
மண்ணின் மேல் மாந்தர்கள் மொய்க்கும் வாவியை – சிந்தா:5 1206/2

TOP


மொய்கொள் (1)

நாள் இரண்டு சென்ற என்று நைய மொய்கொள் காவினுள் – சிந்தா:9 1995/2

TOP


மொய்கொள (1)

முத்து உடை வெண் மருப்பு ஈர்ந்து மொய்கொள
பத்தியில் குயிற்றிய மருங்கில் பல் வினை – சிந்தா:1 83/1,2

TOP


மொய்த்த (10)

வாள் மொய்த்த தானை அவன் தம்பியும் தோழன்மாரும் – சிந்தா:0 28/2
பூண் மொய்த்த பொம்மல் முலையாரும் புலம் துறப்ப – சிந்தா:0 28/3
எரி மொய்த்த வாளும் வில்லும் இலங்கு இலை வேலும் ஏந்தி – சிந்தா:1 263/3
மொய்த்த தோள் நலார் முழுதும் ஈண்டினார் – சிந்தா:2 423/4
மாண் மது நசையின் மொய்த்த மதுகர ஈட்டம் ஒத்தார் – சிந்தா:3 615/4
மொய்த்த கலை நம்பி முகிழ் முலையை இசை வெல்ல – சிந்தா:3 844/2
மோட்டு முது நீர் மலங்கு மொய்த்த இள வாளை – சிந்தா:7 1788/1
செத்த மரம் மொய்த்த மழையால் பெயரும் என்பார் – சிந்தா:9 2022/1
மொய்த்த மணி மாட மிசை அத்தக அடைந்தாள் – சிந்தா:9 2022/4
மோட்டு மீன் குழாத்தின் எங்கும் தீவிகை மொய்த்த முத்தம் – சிந்தா:10 2325/2

TOP


மொய்த்தது (1)

முழங்கின இன்னியம் மொய்த்தது ஏத்து ஒலி – சிந்தா:12 2412/1

TOP


மொய்த்தவே (2)

முழங்கு தீம் புனல் அகம் முரிய மொய்த்தவே – சிந்தா:1 40/4
முன் உருத்து ஆர்த்து எழ புரவி மொய்த்தவே – சிந்தா:10 2216/4

TOP


மொய்த்தார் (1)

கோள் புலி இனத்தின் மொய்த்தார் கொதி நுனை பகழி-தம்மால் – சிந்தா:2 436/2

TOP


மொய்த்திருந்த (1)

பூ மொய்த்திருந்த கடை மேல் புலம்புற்று இருந்தான் – சிந்தா:8 1966/4

TOP


மொய்த்து (14)

மோட்டு இறா பனி கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து – சிந்தா:1 95/3
வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண் நூல் – சிந்தா:1 271/1
மொய்த்து இள அன்னம் ஆர்க்கும் மோட்டு இரும் பொய்கை புக்கார் – சிந்தா:4 963/4
மாசனம் பெரிதும் மொய்த்து மழையினோடு இருளும் காற்றும் – சிந்தா:4 1164/2
எங்கும் மொய்த்து இழிவது ஓர் யாறு தோன்றுமே – சிந்தா:5 1199/4
அண்ணல் மேல் அரிவையர் கண்ணின் மொய்த்து அவண் – சிந்தா:5 1206/1
எரி மொய்த்து அனலும் இகல் வேல் எரி புண் – சிந்தா:6 1518/3
மொய்த்து எரி நித்திலம் வைத்து அன பல்லினள் – சிந்தா:7 1766/2
மொய்த்து எறி ஓடை நெற்றி மும்மத களிற்றின் மேலான் – சிந்தா:10 2266/3
எரி மொய்த்து பெருகல் உண்டோ இருவினை சென்று தேய்ந்தால் – சிந்தா:10 2316/3
மொய்த்து எரி செம்பொன் துகளின் நூல் முடிவு கண்டார் – சிந்தா:12 2485/4
என்ன நாளும் அரற்ற பொறான் விடுப்ப போகி இன மழைகள் மொய்த்து
அன்னம் துஞ்சும் அடி குடிலினுள் அன்றி யான் கொண்ட நாடகத்தினை – சிந்தா:12 2588/1,2
மூசு தேன் வண்டு மொய்த்து முருகு உண்டு துயில மஞ்ஞை – சிந்தா:13 2712/2
சென்று மொய்த்து இமிரும் யானை சீவகற்கு இளைய நம்பி – சிந்தா:13 2903/2

TOP


மொய்ப்ப (2)

கருவி ஊடு உளம் கழிந்து கணை மொய்ப்ப கதம் சிறந்து – சிந்தா:10 2237/1
போர்வை புழு மொய்ப்ப பொல்லா குடர் சூடி – சிந்தா:13 2791/2

TOP


மொய்ப்படு (1)

மொய்ப்படு சரங்கள் மூழ்க முனை எயிற்று ஆளி போல – சிந்தா:10 2287/1

TOP


மொய்ம்ப (2)

தோள் இழுக்குற்ற மொய்ம்ப பண் என சொல்லினானே – சிந்தா:4 1088/4
மொய் மலர் குவளை கண்ணி மொய்ம்ப நீ முழுதும் நீந்தி – சிந்தா:5 1214/2

TOP


மொய்ம்பர்க்கு (1)

ஆளிய மொய்ம்பர்க்கு அளித்து அணி சண்பகம் – சிந்தா:1 132/3

TOP


மொய்ம்பவோ (1)

அரி உறழ் மொய்ம்பவோ என்று ஆகுல பூசல் செய்தார் – சிந்தா:4 1095/4

TOP


மொய்ம்பன் (2)

ஆளிய மொய்ம்பன் இரும் தவ பூம் பொழில் – சிந்தா:3 517/1
முலை கொள் கண்கள் கண்ணின் எழுதி முள்கு மொய்ம்பன்
மலை கொள் கானம் முன்னி மகிழ்வோடு ஏகுகின்றான் – சிந்தா:6 1413/3,4

TOP


மொய்ம்பனை (1)

முருக்கு ஒளி மலர் அடி மூரி மொய்ம்பனை
செருக்களத்து எதிர்ப்பட சிதைவது இல்லையே – சிந்தா:7 1825/3,4

TOP


மொய்ம்பினார் (1)

மக்கள் ஈண்டினார் மடங்கல் மொய்ம்பினார் – சிந்தா:2 414/4

TOP


மொய்ம்பினான் (4)

ஆசனத்து இருந்தான் அடல் மொய்ம்பினான் – சிந்தா:2 429/4
மடங்கல் அன்ன மொய்ம்பினான் வருக என்று கொண்டு தன் – சிந்தா:3 716/3
முழை-கண் வாள் அரி ஏறு அன மொய்ம்பினான்
உழை கணாளர்க்கு உரைத்து எழுந்தான்-அரோ – சிந்தா:9 2004/3,4
மங்கையர் தம்மொடு மடங்கல் மொய்ம்பினான்
பங்கய பனி தடம் சேர பார்ப்பு அனம் – சிந்தா:13 2859/1,2

TOP


மொய்ம்பொடு (2)

முள்கும் ஆயரும் மொய்ம்பொடு ஏகினார் – சிந்தா:2 420/4
செற்று எழுந்தான் படையும் சின மொய்ம்பொடு
மற்று அவர் மண்டிய வாள் அமர் ஞாட்பினுள் – சிந்தா:10 2210/2,3

TOP


மொய்யார் (2)

மொய்யார் உவகையனாய் முற்று_இழைக்கு தான் கொடுப்ப – சிந்தா:7 1802/2
மொய்யார் அலங்கல் மார்பற்கு முப்பது ஆகி நிறைந்ததே – சிந்தா:13 2706/4

TOP


மொழி (17)

மாண்டது அன்று நின் வாய் மொழி தெய்வமே – சிந்தா:1 250/4
இன் உடை அருள் மொழி இனிய செப்பினான் – சிந்தா:1 326/4
பொருள் உடை வாய் மொழி போற்றினள் கூற – சிந்தா:1 338/1
திருவிலும் இவை தே மொழி மாதரை – சிந்தா:1 339/3
தப்பு இல் வாய் மொழி தானவர் வைகிய – சிந்தா:3 535/1
செம் மலர் திருவின் சாயல் தே மொழி தத்தை என்பாள் – சிந்தா:3 606/4
தன் அணங்குறு மொழி தத்தை தத்தையை – சிந்தா:4 1006/3
மாது யாழ் மழலை மொழி மாதராள் – சிந்தா:5 1316/1
தொடை யாழ் மழலை மொழி சோர்ந்தனளே – சிந்தா:6 1526/4
மொழி எதிர் விரும்பி மன்னன் மூரி வில் தடக்கையாற்கு – சிந்தா:7 1644/3
செய்த விஞ்சையை தே_மொழி மாற்றலும் – சிந்தா:7 1711/1
மண் மல்கு தாரான் பெருமாட்டி வாய் மொழி கேட்டு – சிந்தா:7 1808/2
முறைமுறை குமரர்க்கு எல்லா மொழி அமை முகமன் கூறி – சிந்தா:8 1917/3
நெடு மொழி மகளிர் கோல நிழல் மணி முலைகள் நேர்பட்டு – சிந்தா:10 2256/2
தீ தும்மும் வேலான் திரு வாய் மொழி வான் முழக்கம் – சிந்தா:11 2348/1
மங்கல அச்சுதம் தெளித்து வாய் மொழி
மங்கல கருவி முன் உறுத்தி வாழ்த்தினார் – சிந்தா:12 2411/3,4
பதர் அறு திரு மொழி பணிக்கும் என்பவே – சிந்தா:13 2850/4

TOP


மொழி-கொல் (1)

திரை உடுத்த தே_மொழி-கொல் என்று தெரிகல்லார் – சிந்தா:7 1786/4

TOP


மொழி-மின் (1)

வண்டுகாள் வருடி நங்கை வரம் தர மொழி-மின் என்றான் – சிந்தா:12 2509/4

TOP


மொழிக (3)

நம்பி நீ மொழிக என நயந்து கூறினான் – சிந்தா:3 792/4
வந்தில் அதின் ஆய பயன் என்னை மொழிக என்றாள் – சிந்தா:9 2020/3
பிறரும் உளரோ பெறுநர் பேணி மொழிக என்ன – சிந்தா:9 2021/2

TOP


மொழிகள் (1)

நாடு ஆர் புகழாளை நாண மொழிகள் பல கூறி – சிந்தா:13 2605/3

TOP


மொழிகின்றாள் (1)

கான் அமர் கோதை கனா மொழிகின்றாள் – சிந்தா:1 222/4

TOP


மொழிதல் (1)

முடிகென புரவி முள்ளால் உறுத்தினான் மொழிதல் தேற்றேன் – சிந்தா:3 794/2

TOP


மொழிந்த (2)

முந்து வரன் மொழிந்த பொருள் முற்றும் வகை நாடி – சிந்தா:3 846/2
முந்து நாம் மொழிந்த நெய்யை முனை முதிர் தருப்பை தன்னால் – சிந்தா:12 2465/2

TOP


மொழிந்தது (2)

மாது உலாம் மழலை செ வாய் மட கிளி மொழிந்தது அன்றே – சிந்தா:7 1666/4
என்னே மற்று என்னே நீர் மொழிந்தது என்னே என விரும்பி – சிந்தா:7 1883/1

TOP


மொழிந்தனர் (1)

முளை எயிற்று இவளை யாரும் மொழிந்தனர் இல்லை என்றோ – சிந்தா:9 2042/3

TOP


மொழிந்தால் (1)

முன்னே மொழிந்தால் போல் முறை நின்று எல்லாம் உடன் மொழிய – சிந்தா:7 1883/2

TOP


மொழிந்தான் (3)

பொழுது அன்று போதும் என புள்_மொழிந்தான் மொழிந்தான் – சிந்தா:2 445/4
பொழுது அன்று போதும் என புள்_மொழிந்தான் மொழிந்தான் – சிந்தா:2 445/4
இருந்த அவற்கு எல்லாம் எடுத்து மொழிந்தான் – சிந்தா:3 518/4

TOP


மொழிந்து (4)

நங்கையை காக்கும் வண்ணம் நகா நின்று மொழிந்து பேழ் வாய் – சிந்தா:3 765/2
உள் விரித்து இதனை எல்லாம் உரைக்க என மொழிந்து விட்டான் – சிந்தா:5 1341/1
வாய் மொழிந்து உரைக்கல் உற்றாள் வனை குழல் கற்றை வண் தார் – சிந்தா:7 1707/3
புனை கடி மாலை மாதர் திறத்து இது மொழிந்து விட்டார் – சிந்தா:9 2071/4

TOP


மொழிப (1)

இன் பதம் அருளி ஈதல் இடை என மொழிப யார்க்கும் – சிந்தா:13 2828/2

TOP


மொழிய (2)

மனக்கு இனா மொழிய வேண்டா வாழியர் ஒழிக என்றான் – சிந்தா:1 205/4
முன்னே மொழிந்தால் போல் முறை நின்று எல்லாம் உடன் மொழிய
மன் ஆரம் சிந்துவ போல் மலர்ந்த செந்தாமரை கண்ணீர் – சிந்தா:7 1883/2,3

TOP


மொழியல் (1)

மண் அகம் வளரும் தோளான் மறுத்து நீ மொழியல் என்றான் – சிந்தா:1 202/4

TOP


மொழியாட்கும் (1)

கனியார் மொழியாட்கும் மயிற்கும் காமர் பதி நல்கி – சிந்தா:13 2603/3

TOP


மொழியால் (1)

பண் கொள் தே மொழியால் பய கூறினாள் – சிந்தா:4 901/4

TOP


மொழியினாள் (1)

கனிபடு மொழியினாள் தன் காரிகை கவற்ற வந்து – சிந்தா:10 2199/1

TOP


மொழியீர் (1)

பண் கேழ் மொழியீர் நெடும் கண் பனி வீழ்த்தல் வேண்டா – சிந்தா:11 2346/4

TOP


மொழியும் (3)

வந்து தரன் கூறிய இ வாய் மொழியும் அன்றி – சிந்தா:3 846/1
பைம் சிறை தத்தை என்ன பசுங்கிளி மொழியும் அன்றே – சிந்தா:4 1024/4
முற்றுபு கனிந்த சொல்லான் முனிவரன் மொழியும் அன்றே – சிந்தா:4 1129/4

TOP


மொழியே (1)

பகையாபவர் என்றனள் பால் மொழியே – சிந்தா:6 1524/4

TOP


மொழியோ (1)

மாது உலாம் மொழியோ மட நோக்கமோ – சிந்தா:5 1308/2

TOP


மொழிவாம் (3)

திரு விழை கடி மனை திறவிதின் மொழிவாம் – சிந்தா:1 124/4
அங்கண் நகர்ப்பட்ட பொருள் ஆகியது மொழிவாம் – சிந்தா:3 850/4
நவை இல் அகல நோக்கி நயந்த வண்ணம் மொழிவாம் – சிந்தா:4 933/4

TOP


மொழிவாய் (1)

அருள் தேர் வழி நின்று அறனே மொழிவாய்
பொருள் தேர் புலன் எய்திய பூம் கழலாய் – சிந்தா:5 1381/1,2

TOP