தீ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 59
தீங்கு 1
தீட்டரும் 2
தீட்டலும் 1
தீட்டி 6
தீட்டினான் 1
தீட்டினானே 1
தீண்ட 4
தீண்டப்பெற்றும் 1
தீண்டப்பெற்றேன் 1
தீண்டலும் 1
தீண்டன்-மின் 1
தீண்டாது 1
தீண்டார் 2
தீண்டி 7
தீண்டிலேன்-ஆயின் 1
தீண்டிற்று 1
தீண்டினார்-தமை 1
தீண்டினும் 1
தீண்டு 1
தீண்டுவார் 1
தீத்திட்டு 1
தீதின் 1
தீதினது 1
தீது 8
தீந்தவே 1
தீந்தன 1
தீந்து 1
தீப்பட 2
தீம் 128
தீம்பூ 1
தீமகன் 1
தீமை 6
தீய 2
தீயவும் 1
தீயன 1
தீயால் 4
தீயான் 1
தீயிடைப்பட்டது 1
தீயில் 2
தீயின் 5
தீயினால் 1
தீயினுள் 1
தீயும் 1
தீயுள் 1
தீயொடு 2
தீர் 4
தீர்க்கலுற்றார் 1
தீர்க்கும் 3
தீர்க 1
தீர்த்தம் 1
தீர்த்தல் 1
தீர்த்தவாறும் 1
தீர்த்தன் 2
தீர்த்தார்க்கு 1
தீர்த்தான் 4
தீர்த்திடும் 1
தீர்த்து 4
தீர்த்தும் 1
தீர்த்தேன் 1
தீர்ந்த 2
தீர்ந்தது 1
தீர்ந்தவர் 1
தீர்ந்தவே 1
தீர்ந்தனன் 1
தீர்ந்தார் 2
தீர்ந்தான் 3
தீர்ந்து 4
தீர்ந்தேம் 1
தீர்ந்தேன் 2
தீர்ப்பது 1
தீர்ப்பர் 1
தீர்ப்பன 1
தீர்ப்பான் 3
தீர்வான் 1
தீர்வு 1
தீர 9
தீரா 2
தீவம் 1
தீவிகை 1
தீவிய 2
தீவில் 1
தீவிற்று 1
தீவின் 1
தீவினுள் 1
தீவினை 8
தீவினையே 1
தீவு 1
தீற்றி 3
தீற்றின் 1
தீற்றுதும் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தீ (59)

கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செம் தீ
கொல் புனை செய் கொள்ளி பெரும் கொக்கு எழில் செய் கூகை – சிந்தா:1 102/2,3
தீண்டினார்-தமை தீ சுடும் மன்னர் தீ – சிந்தா:1 250/1
தீண்டினார்-தமை தீ சுடும் மன்னர் தீ
ஈண்டு தம் கிளையொடும் எரித்திடும் – சிந்தா:1 250/1,2
சீர் உடை குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீ திரள் – சிந்தா:1 274/3
தாழ்ந்து தறுகண் இணைகள் தீ அழல விழியா – சிந்தா:1 289/2
செம் தீ கரும் துளைய தீம் குழல் யாழ் தேம் தேம் என்னும் மணி முழவமும் – சிந்தா:1 292/1
ஐயனை கண்ணில் காண யானை_தீ அதகம் கண்ட – சிந்தா:1 403/1
செம் கண் தீ விழியா தெழித்தான் கையுள் – சிந்தா:2 431/3
தாங்கல் கடன் ஆகும் தலை சாய்க்க வரு தீ சொல் – சிந்தா:3 498/3
திறன் அல தமர்க்கு செப்பும் தீ உமிழ்ந்து இலங்கும் வேலான் – சிந்தா:3 688/4
ஒள் நிற உருவ செம் தீ உருவுகொண்ட அனைய வேலான் – சிந்தா:3 713/4
திசை முகம் படர்க வல்லே தீ தொட்டால் சுடுவது அன்றே – சிந்தா:3 748/4
கழித்து வாள் அமலை ஆடி காட்டுவார் கண்கள் செம் தீ
விழித்து மேல் சென்ற வேழம் வேலினால் விலக்கி நிற்பார் – சிந்தா:3 783/1,2
சிகர செவ்வரை தீ நிற பொன் எயில் – சிந்தா:4 912/2
உடல் சின உரும் என ஊழி தீ என – சிந்தா:4 973/2
சீந்தா நின்ற தீ முக வேலான் மணி செப்பின் – சிந்தா:4 1055/1
மறையார் வேள்வி மந்திர செம் தீ கொடியே போல் – சிந்தா:4 1059/1
என்று அவள் உரைப்ப கேட்டே இடிபட முழங்கி செம் தீ
நின்று எரிவதனை ஒத்து நீள் முழை சிங்க ஏறு – சிந்தா:4 1084/1,2
மன்னர் தம் வெகுளி வெம் தீ மணி முகில் காணம் மின்னி – சிந்தா:4 1117/1
கால தீ நகரை மேய கடி அரண் கடிந்த அம்பின் – சிந்தா:4 1141/1
சால தீ சவரர் கோலம் செய்து நம் மறவர் ஈண்டி – சிந்தா:4 1141/2
கோல தீ வேலினானை கோயிலுள் வளைப்ப இப்பால் – சிந்தா:4 1141/3
ஆலை தீ இடங்கள்-தோறும் ஆகுலம் செய்தும் என்றான் – சிந்தா:4 1141/4
வெண்ணெய் தீ உற்ற வண்ணம் ஆடவர் மெலிகின்றாரே – சிந்தா:5 1255/4
தரிக்கிலாள் காம செம் தீ தலை கொள சாம்பினாளே – சிந்தா:5 1259/4
தெரிவு இல் தீ தொழில் சிந்தையின் மேயினார் – சிந்தா:6 1423/4
ஒள் நிற தீ விளைத்தாள் உருக்குற்றாள் – சிந்தா:6 1472/4
சூழ் இருள் தொழுதி மூழ்க தீ கதிர் சொரிந்து நல்லார் – சிந்தா:6 1541/3
பார் எலாம் அறிய நின்று படா முரசு ஆர்ப்ப தீ வேட்டு – சிந்தா:7 1687/3
ஆய் கழல் குருசில் வாடி அற்பு தீ அழலுள் நிற்ப – சிந்தா:7 1707/2
சினம் தலை பெருக்கி தீ கோள் உறுப்பினை சுருக்கி தீ போல் – சிந்தா:7 1750/1
சினம் தலை பெருக்கி தீ கோள் உறுப்பினை சுருக்கி தீ போல் – சிந்தா:7 1750/1
மது குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செம் தீ
புது கலத்து எழுந்த தீம் பால் பொங்கலின் நுரையின் பொங்கி – சிந்தா:7 1821/1,2
அரும் தீ தொழிலே புரிந்தான் மறை ஆய எல்லாம் – சிந்தா:7 1872/1
எரி மணி இமைத்தன எழுந்த தீ புகை – சிந்தா:8 1940/1
அன்றாய் அரிதாய் அகத்தே சுட்டு உருக்கும் வெம் தீ
ஒன்றே உலகத்து உறு நோய் மருந்து இல்லது என்றாள் – சிந்தா:8 1962/3,4
தஞ்சம் வழங்கி தலைக்கொண்டது காம வெம் தீ – சிந்தா:8 1964/4
இலங்கு வெள் அருவி குன்றத்து எழுந்த தண் தகர செம் தீ
நலம் கிளர் அகிலும் தேனும் கட்டியும் நன்கு கூட்டி – சிந்தா:9 2092/1,2
திருந்தி ஏழுறுப்பும் திண் நிலம் தோய்வ தீ உமிழ் தறுகணின் சிறந்த – சிந்தா:10 2154/4
செறி கழல் மன்னர் நக்கு தீய தீ விளைத்து கொண்டார் – சிந்தா:10 2201/4
ஒருங்கு உடன் உதிர எய்தான் ஊழி தீ உருமொடு ஒப்பான் – சிந்தா:10 2204/4
கழித்தனர் கனல வாள் புகைந்து கண்கள் தீ
விழித்தன தீந்தன இமைகள் கூற்று என – சிந்தா:10 2226/1,2
தீ முகத்து உமிழும் வேல் கண் சில் அரி சிலம்பினார்-தம் – சிந்தா:10 2270/1
வெய்யோன் உயிர்ப்பின் விடுத்தேன் என் வெகுளி வெம் தீ
மை ஆர் அணல மணி நாகம் கலுழன் வாய்பட்டு – சிந்தா:11 2345/2,3
தீ தும்மும் வேலான் திரு வாய் மொழி வான் முழக்கம் – சிந்தா:11 2348/1
தட வளர் முழங்கும் செம் தீ நான்மறையாளர் தங்கள் – சிந்தா:11 2373/2
சிந்தித்து மறையின் செம் தீ தண்டிலத்து அங்கண் வைத்தார் – சிந்தா:12 2465/4
வேதனை பெருகி வேல் கண் தீ உமிழ்ந்திட்ட அன்றே – சிந்தா:12 2506/4
உடற்றும் பிணி தீ உடம்பின் உயிர் பெய்திட்டு – சிந்தா:13 2620/1
செயிரில் தீ மடுப்பர் கீழால் செல் நுனை கழுவில் ஏற்றி – சிந்தா:13 2766/2
செம் தீ புகை உண்டும் சேற்றுள் நிலை நின்றும் – சிந்தா:13 2794/1
தான் சேர் பிணி என்னும் செம் தீ கொடி தங்கி – சிந்தா:13 2797/2
செறும் பெரிய தீ வினைகள் சென்று கடிது ஓடி – சிந்தா:13 2868/3
செய்த பொருள் பெய்த கலன் செம்மை சுடு செம் தீ
கை தவம் நுனித்த கவறு ஆடல் ஒழிக என்றான் – சிந்தா:13 2873/3,4
எல்லையில் துன்ப வெம் தீ சுட்டு எரித்திடுங்கள் அன்றே – சிந்தா:13 2876/4
தீம் கதிர் திங்கள் செம் தீ சொரிந்ததால் திசைகள் எல்லாம் – சிந்தா:13 2955/3
பகல் வளர் பவழ செம் தீ பருதி முன் பட்டதே போல் – சிந்தா:13 3053/1
தெளி கடல் சுடுவது ஒத்து தீ உமிழ் திங்கள் நான்கும் – சிந்தா:13 3070/3
திளைத்து எழு கொடிகள் செம் தீ திரு மணி உடம்பு நுங்க – சிந்தா:13 3116/2

TOP


தீங்கு (1)

நாவலர் சொல் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா – சிந்தா:1 206/2

TOP


தீட்டரும் (2)

தீட்டரும் படிவம் அன்னான் திறம் கிளந்து உரைத்தும் அன்றே – சிந்தா:5 1166/4
தீட்டரும் திரு நுதல் திலகமே என – சிந்தா:5 1223/3

TOP


தீட்டலும் (1)

கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும்
பத்தியில் புடைத்தலும் பை அரவின் ஆடலும் – சிந்தா:1 151/2,3

TOP


தீட்டி (6)

திரு மணி முலையின் நெற்றி சிறுபுறம் செறிய தீட்டி
புரி மணி ஆகத்து ஐதா விரல் நுதி கொண்டு பூசி – சிந்தா:3 625/2,3
கண்டவர் கடக்கல் ஆற்றா கிழி மிசை உருவு தீட்டி
வண்டு இமிர் கோதை நின்னை வழிபடும் நாளும் என்றாள் – சிந்தா:4 1047/3,4
காசு அற துடைத்த பின்றை கை விரல் உறுப்பு தீட்டி
தூசினால் அம் கை நீவி இருந்தனன் தோற்றம் மிக்கான் – சிந்தா:5 1302/3,4
ஏட்டின் மேல் தீட்டி திரு எழுத்து இட்டு ஆங்கு இறைவனும் தமர்களை பணிப்ப – சிந்தா:10 2110/2
துன்னி நம்பி உருவு தீட்டி தொங்கல் வேய்ந்து தொழுது ஆற்ற நீ – சிந்தா:12 2588/3
தங்கா விருப்பின் தம் பெருமான் பாதம் முடி தீட்டி
எங்கோ பணி என்னா அஞ்சா நடுங்கா இரு வில் கண் – சிந்தா:13 2608/2,3

TOP


தீட்டினான் (1)

தீட்டினான் கிழி மிசை திக வாள்_நுதல் – சிந்தா:4 1003/2

TOP


தீட்டினானே (1)

இல மலர் பஞ்சி பாதத்து எழில் முடி தீட்டினானே – சிந்தா:13 2641/4

TOP


தீண்ட (4)

பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்ட
சித்தம் குழையற்க என தீர்த்து அவள் சேர்ந்தவாறும் – சிந்தா:0 18/3,4
தந்து ஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்ட தாம் தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும் – சிந்தா:1 292/2
தீண்ட அரிய வெம்மையொடு திக்கயங்கள் எனவே – சிந்தா:7 1794/4
தூசு உலாம் அல்குல் தீண்ட துயில் கண்கள் விழித்த தோற்றம் – சிந்தா:8 1987/2

TOP


தீண்டப்பெற்றும் (1)

கைத்தலம் தீண்டப்பெற்றும் கனிந்தன மலர்ந்த காண்க – சிந்தா:8 1907/2

TOP


தீண்டப்பெற்றேன் (1)

களன் என கரையும் அல்குல் கையினால் தீண்டப்பெற்றேன்
இள முலை சுமந்து பெற்ற வருத்தமும் இன்று தீர்ந்தேன் – சிந்தா:3 684/2,3

TOP


தீண்டலும் (1)

தேன் நெய் மார்பகம் தீண்டலும் தீர்ந்து ஒளி சிறந்தார் – சிந்தா:12 2382/4

TOP


தீண்டன்-மின் (1)

தீவினை உடைய என்னை தீண்டன்-மின் அடிகள் வேண்டா – சிந்தா:9 2099/1

TOP


தீண்டாது (1)

செற்றால் அரிதால் சென்-மின் போ-மின் தீண்டாது
எற்றே அறியாத ஓர் ஏழையேனோ யான் – சிந்தா:4 1070/3,4

TOP


தீண்டார் (2)

பரத்தையர் தோய்ந்த மார்பம் பத்தினி மகளிர் தீண்டார்
திருத்தகைத்து அன்று தெள் நீர் ஆடி நீர் வம்-மின் என்ன – சிந்தா:13 2722/1,2
குறுகார் நரகம் ஓர் ஏழும் கீழ் முத்தேவர் குழாம் தீண்டார்
அறியாது உரைத்தேன் அது நிற்க ஆறே நரகம் ஆகாத – சிந்தா:13 2817/2,3

TOP


தீண்டி (7)

நரம்பு தேன் ஆர்த்து என தீண்டி நல்லாள் வீணை பொல்லாமை – சிந்தா:3 717/3
வண் தளிர் சந்தனமும் வழையும் மாவும் வான் தீண்டி
விண்டு ஒழுகு தீம் கனிகள் பலவும் ஆர்ந்த வியன் சோலை – சிந்தா:5 1225/1,2
தவழ் கதிர் முத்தம் பாய்த்தி தன் கையால் தீண்டி நல் நாள் – சிந்தா:5 1268/2
அங்கு உறை அரவு தீண்டி ஒளவையோ என்று போக – சிந்தா:5 1271/2
அன்றியும் மா மெய் தீண்டி அளித்தனன் அழகின் மிக்கான் – சிந்தா:5 1342/2
கலுழ தன் கையால் தீண்டி காதலின் களித்து நோக்கி – சிந்தா:8 1926/2
மா கவின் வளர தீண்டி மணி நகை நக்கு நாளும் – சிந்தா:13 2951/1

TOP


தீண்டிலேன்-ஆயின் (1)

தேறினேன் தெய்வம் என்றே தீண்டிலேன்-ஆயின் உய்யேன் – சிந்தா:9 2062/1

TOP


தீண்டிற்று (1)

பதுமையை பாம்பு தீண்டிற்று என்றலும் பையுள் எய்தி – சிந்தா:5 1273/1

TOP


தீண்டினார்-தமை (1)

தீண்டினார்-தமை தீ சுடும் மன்னர் தீ – சிந்தா:1 250/1

TOP


தீண்டினும் (1)

நண்ணி தீண்டினும் நல் உயிர் நிற்கும் என்று – சிந்தா:5 1294/2

TOP


தீண்டு (1)

தீண்டு வந்து என தேனின் மிழற்றினாள் – சிந்தா:6 1509/4

TOP


தீண்டுவார் (1)

ஐம் தலை அரவினை யாவர் தீண்டுவார்
சுந்தர சுரும்பு சூழ் மாலை இல்லையேல் – சிந்தா:13 2936/2,3

TOP


தீத்திட்டு (1)

தேன் சேர் மலர் மார்ப தீத்திட்டு இறக்குமே – சிந்தா:13 2797/4

TOP


தீதின் (1)

திருந்திய நின் மகன் தீதின் நீங்கினான் – சிந்தா:1 327/3

TOP


தீதினது (1)

தெண் திரை வேலி எங்கும் தீதினது ஆக மாதோ – சிந்தா:12 2457/4

TOP


தீது (8)

தீது இலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும் ஒத்தார் – சிந்தா:1 189/4
தீது இல ஆக என்று திரு முலை பால் மடுத்து – சிந்தா:1 318/2
திருந்திய தன் பொருள் தீது உற்றவாறும் – சிந்தா:3 518/2
தீது இல் ஆரம் நூல் பெய்வார் சிதர்ந்து போக சிந்துவார் – சிந்தா:4 1106/2
வந்தார் வாய் தீது இன்மை கேட்டு மறைந்திருந்து – சிந்தா:7 1806/2
பசையினால் துஞ்சி யான் பட்ட தீது எலாம் – சிந்தா:7 1814/2
திருந்து வேல் தெவ்வர் போல தீது அற எறிந்தும் இன்ப – சிந்தா:8 1895/3
திரிதரு நோக்கம் தீது இலார் நோக்கி நெய்தலும் கைவலத்து ஒழிந்தார் – சிந்தா:10 2103/4

TOP


தீந்தவே (1)

கறை கெழு வேலினார் கண்ணி தீந்தவே – சிந்தா:3 656/4

TOP


தீந்தன (1)

விழித்தன தீந்தன இமைகள் கூற்று என – சிந்தா:10 2226/2

TOP


தீந்து (1)

கட்டு அழல் உயிர்ப்பின் வெந்து கண்ணி தீந்து பொன் உக – சிந்தா:4 1107/3

TOP


தீப்பட (2)

திரு கிளர் மணி செய் பொன் தூண் தீப்பட புடைத்து செம் கண் – சிந்தா:7 1857/3
போக்கு அற பொருவன போன்று தீப்பட
தாக்கின அரசு உவா தம்முள் என்பவே – சிந்தா:10 2231/3,4

TOP


தீம் (128)

தேன் ஊறு தீம் சொல் குணமாலையை சேர்ந்தவாறும் – சிந்தா:0 15/1
பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து – சிந்தா:1 31/2
செய்ய சந்தனம் தீம் பழம் ஆதியா – சிந்தா:1 37/3
முழங்கு தீம் புனல் அகம் முரிய மொய்த்தவே – சிந்தா:1 40/4
திருந்து சாறு அடுவுழி பிறந்த தீம் புகை – சிந்தா:1 60/3
ஒல்கு தீம் பண்டம் பெய்து ஒழுகும் பண்டியும் – சிந்தா:1 62/4
பட்டமும் பசும்பொன் பூணும் பரந்து ஒளி நிழற்றும் தீம் தேன் – சிந்தா:1 112/3
விழைய ஊட்டிய மேதகு தீம் புகை – சிந்தா:1 127/2
தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செய – சிந்தா:1 149/1
கூடு கோல தீம் சுவை கோல யாழ் அரவமும் – சிந்தா:1 156/3
செல்வற்கு இன்னணம் சேறலில் தீம் புனல் – சிந்தா:1 162/1
செம் தீ கரும் துளைய தீம் குழல் யாழ் தேம் தேம் என்னும் மணி முழவமும் – சிந்தா:1 292/1
அம் தீம் கிளவியார் ஐஞ்ஞூற்றுவர் அவை துறைபோய் ஆடல் அரம்பை அன்னார் – சிந்தா:1 292/3
மழலை யாழ் மருட்டும் தீம் சொல் மதலையை மயில் அம் சாயல் – சிந்தா:1 368/3
விரை விளையாடும் தாரோய் யான் என விரும்பி தீம் பால் – சிந்தா:1 397/3
பூ தின்று புகன்று சேதா புணர் முலை பொழிந்த தீம் பால் – சிந்தா:1 398/1
மழலை தீம் சொல்லார் மறுக வாய்விட்டார் – சிந்தா:2 422/4
வெண்ணெய் போன்று ஊறு இனியள் மேம் பால் போல் தீம் சொல்லள் – சிந்தா:2 480/1
சேதா நறு நெய்யும் தீம் பால் சுமை தயிரும் – சிந்தா:2 481/1
தீம் பால்கடலை திரை பொங்க கடைந்து தேவர் – சிந்தா:2 492/1
விளக்கு அழல் உறுத்த போலும் விசியுறு போர்வை தீம் தேன் – சிந்தா:3 559/1
தீம் தொடை மகர வீணை தெளி விளி எடுப்பி தேற்றி – சிந்தா:3 608/1
திரு மணி வீணை குன்றத்து இழிந்த தீம் பாலை நீத்தத்து – சிந்தா:3 619/3
தேன் உயர் மகரவீணை தீம் சுவை இவளை வெல்வான் – சிந்தா:3 664/1
தீம் பயறு இயன்ற சோறு செப்பின் ஆயிரம் மிடா – சிந்தா:3 692/1
தீம் கரும்பு எருத்தில் தூங்கி ஈ இன்றி இருந்த தீம் தேன் – சிந்தா:3 712/1
தீம் கரும்பு எருத்தில் தூங்கி ஈ இன்றி இருந்த தீம் தேன் – சிந்தா:3 712/1
திரு நலம் மின்னு பொன் ஞாண் முகில் முலை மாரி தீம் பால் – சிந்தா:3 720/2
தீம் தொடை நரம்பின் தீமை சிறிது அலா பொழுதும் ஓதி – சிந்தா:3 721/1
மணி கடை மருப்பின் வாளார் மாடக வயிர தீம் தேன் – சிந்தா:3 722/2
கலையார் தீம் சொல்லினாய் காணார்-கொல் கேள்வர் – சிந்தா:3 732/4
கரும்பார் தீம் சொல்லினாய் காணார்-கால் கேள்வர் – சிந்தா:3 734/4
கடல் விளை அமுதம் கண்ட பொழுதின் நெய் கனிந்த தீம் சோற்று – சிந்தா:3 805/1
சினை துணர் முழவு அன பலவின் தீம் கனி – சிந்தா:3 825/1
கிளை நரம்பு அனைய தீம் சொல் பவள வாய் திகழ தேன் சோர் – சிந்தா:3 841/2
சுண்ணம் தோற்றனம் தீம் புனல் ஆடலம் – சிந்தா:4 878/1
நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா – சிந்தா:4 890/3
தண் அம் தீம் புனல் ஆடிய தண் மலர் – சிந்தா:4 910/1
தீம் பால் பசியின் இருந்த செ வாய் சிறு பைங்கிளி தன் – சிந்தா:4 924/1
தீம் பால் அடிசில் அமிர்தம் செம்பொன் வண்ண புழுக்கல் – சிந்தா:4 928/1
ஊன்றி வாய் மடுப்ப ஓர் முழையுள் தீம் கதிர் – சிந்தா:4 938/3
தீம் பால் அமிர்து ஊட்டி செம்பொன் மணி கூட்டில் – சிந்தா:4 1040/1
பால் மடுத்து தீம் தேன் பருகுவாள் போல் நோக்கி – சிந்தா:4 1044/2
கழை முற்று தீம் தேன் கரும்பு ஆர் வயல் ஐந்து மூதூர் – சிந்தா:4 1064/3
பண் அடி வீயும் தீம் சொல் பாவை நின் வனப்பிற்கு எல்லாம் – சிந்தா:4 1082/1
மது மடை திறந்து தீம் தேன் வார் தரு கோதை நீ முன் – சிந்தா:4 1124/1
சிந்தை செய்யும் சிறகர் கிளி தோற்கும் அம் தீம் சொலாள் – சிந்தா:4 1160/4
நிலை மாத்தன தேம் உறும் தீம் கனியும் – சிந்தா:5 1191/2
குழல் பொதிந்த தீம் சொல்லார் குழாத்தின் நீங்கி கொண்டு ஏந்தி – சிந்தா:5 1224/3
விண்டு ஒழுகு தீம் கனிகள் பலவும் ஆர்ந்த வியன் சோலை – சிந்தா:5 1225/2
கொடி முதிர் கிழங்கு தீம் தேன் கொழும் தடி நறவொடு ஏந்தி – சிந்தா:5 1231/1
செய்ய சந்து இமய சாரல் கருப்புரக்கன்று தீம் பூ – சிந்தா:5 1267/2
திருந்து ஒளி முறுவல் செ வாய் தீம் சொலார் மயங்கினாரே – சிந்தா:5 1298/4
பாலின் தீம் சொல் பதுமை இ நின்றவள் – சிந்தா:5 1327/3
தேவர் பண்ணிய தீம் தொடை இன் சுவை – சிந்தா:5 1328/1
உழல் மாலை தீம் கிளவி ஒன்று இரண்டு தான் மிழற்றும் ஒரு நாள்-காறும் – சிந்தா:5 1353/3
செவ்வழி யாழின் ஊறும் தீம் சொலாட்கு உற்றது எல்லாம் – சிந்தா:5 1407/1
உருவ பூம் கொம்பு ஒசிய புல்லி தீம் தேன் பருகி – சிந்தா:6 1415/3
அல்ல தீம் பழம் காய் கிழங்கு ஆதியா – சிந்தா:6 1422/3
தெள்ளு தீம் கனியும் சில தந்த பின் – சிந்தா:6 1424/2
பூம் சினை நாகம் தீம் பூ மரம் கருப்பூர சோலை – சிந்தா:6 1497/2
தீம் சுனை அருவி குன்றம் சீர் பெற ஏறினானே – சிந்தா:6 1497/4
பாணி யாழ் கனியும் வென்ற பைம் கிளி மழலை தீம் சொல் – சிந்தா:6 1500/2
காழக சேற்றுள் தீம் பால் கதிர் மணி குடத்தின் ஏந்தி – சிந்தா:6 1541/1
திடனாக தீம் தேனும் தெள் மட்டும் உயிர் குழாம் ஈண்டி நிற்றற்கு – சிந்தா:6 1546/3
நிழல் நிமிர் நெடு மதி நிகர் இல் தீம் கதிர் – சிந்தா:6 1555/1
பரந்த தீம் புனல் மருதம் பற்று விட்டு இன மயில் அகவும் – சிந்தா:7 1557/3
தேன் நெய் வாசவல் குவவி தீம் கனி வாழையின் பழனும் – சிந்தா:7 1562/2
உரைத்த மென் தயிர் பித்தை கோவலர் தீம் குழல் உலவ – சிந்தா:7 1564/3
பண்ணின் தீம் சொலாய் படா முலை பாவாய் கொடியே பாங்கின் – சிந்தா:7 1587/3
பால் நுண் தீம் சொல்லாள் ஓர் படுவி வண்டு ஆர்ப்ப வந்து இறைஞ்சினாள் – சிந்தா:7 1653/4
பண் முழுது உடற்றும் தீம் சொல் பாவை நின் பாலள் என்றான் – சிந்தா:7 1684/4
சாந்தின் மேல் தொடுத்த தீம் தேன் தண் மதி கோடு போழ – சிந்தா:7 1820/1
புது கலத்து எழுந்த தீம் பால் பொங்கலின் நுரையின் பொங்கி – சிந்தா:7 1821/2
முருகு விண்டு இரிய தீம் தேன் முழங்கு நீர் கழனி நல் நாடு – சிந்தா:7 1854/3
பூம் துகில் கொடுத்த தீம் தேன் அகில் புகை பொன் அனார்-தம் – சிந்தா:7 1855/1
பால் நக்க தீம் சொல் பவளம் புரை பாவை அன்ன – சிந்தா:7 1866/2
கலை விரவு தீம் சொல்லார் காமன் என்றார் கமழ் தாரார் – சிந்தா:7 1885/4
வரு பனி சுமந்த வாள் கண் வன முலை பொழிந்த தீம் பால் – சிந்தா:8 1911/2
பால் நிலத்து உறையும் தீம் தேன் அனையவாய் அமிர்தம் ஊற – சிந்தா:8 1915/3
புரி நரம்பு இரங்கின புகன்ற தீம் குழல் – சிந்தா:8 1940/2
தீம் கரும்பு அனுக்கிய திருந்து தோள்களும் – சிந்தா:8 1942/1
பால் நெடும் தீம் சொலாள் ஓர் பாவை பந்து ஆடுகின்றாள் – சிந்தா:8 1951/4
மந்தார மலை மலர் வேய்ந்து மகிழ்ந்து தீம் தேன் – சிந்தா:8 1959/1
அச்சமுறுத்து அமுது புளித்த ஆங்கு தம தீம் சொல் – சிந்தா:9 2015/3
பால் நலம் கொள் தீம் கிளவி பவித்திரமும் நல்க – சிந்தா:9 2024/3
தீம் கரும்பு மென்று அனைய இன் பவள செ வாய் – சிந்தா:9 2034/3
கள் நக்க கண்ணி கமழ் பூம் குழல் கரும்பு ஏர் தீம் சொலாள் கதிர் முலைகளின் – சிந்தா:9 2066/1
செம் கயல் மழை கண் செ வாய் தத்தையும் மகிழ்ந்து தீம் சொல் – சிந்தா:9 2098/1
நடந்த வாய் எல்லாம் நறு மலர் மரையின் நாகு இலை சொரிந்த அம் தீம் பால் – சிந்தா:10 2102/2
தேம் கமழ் தெரியல் தீம் பூம் தாரவன் ஊர்ந்த வேழம் – சிந்தா:10 2253/3
தேன் வயிறு ஆர்ந்த கோதை தீம் சொலார் கண்கள் போலும் – சிந்தா:10 2290/2
குவி முலை நெற்றி தீம் தேன் கொப்புளித்து இட்ட பைம் தார் – சிந்தா:10 2292/2
சின்ன மலர் கோதை தீம் சொலார் போற்றி இசைப்ப திருமால் போந்தான் – சிந்தா:11 2369/4
இலங்கின மணி விளக்கு எழுந்த தீம் புகை – சிந்தா:12 2410/3
சொரியும் தீம் கதிர் தோற்றம் ஒத்தவே – சிந்தா:12 2419/4
தேன் இனம் இசை பாட தீம் புனல் நடந்ததே – சிந்தா:12 2432/4
கரும்பும் தேனும் அமிழ்தும் பாலும் கலந்த தீம் சொல் மடவாட்கு – சிந்தா:12 2438/1
ஒள் நுதல் உருவ கோலத்து ஒரு பிடி நுசுப்பின் தீம் சொல் – சிந்தா:12 2458/2
செம் களி விராய காயும் செம் பழு காயும் தீம் தேன் – சிந்தா:12 2473/2
கொள்ளும் தீம் சொல் அலங்கார பூம்_கொடியை புல்லி மணி குவட்டினை – சிந்தா:12 2591/3
இரங்கு தீம் குழலும் ஏங்க கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப – சிந்தா:12 2596/2
சீர் கெழு நிலத்து வித்தி சீல நீர் கொடுப்பின் தீம் தேன் – சிந்தா:13 2632/2
தேன் இறால் அன தீம் சுவை இன் அடை – சிந்தா:13 2674/1
அளிந்த தீம் பழம் இஞ்சி ஆர்ந்த நீர் – சிந்தா:13 2682/1
தீம் பால் சுமந்து முலை வீங்கி திரு முத்து ஈன்ற வலம்புரி போல் – சிந்தா:13 2702/1
தேடி தீம் தேன் திப்பிலி தேய்த்து அண்ணா உரிஞ்சி மூக்கு உயர்த்தார் – சிந்தா:13 2703/4
குய் வளம் கழுமி வெம்மை தீம் சுவை குன்றல் இன்றி – சிந்தா:13 2735/2
பால்கடல் பனி மதி பரவை தீம் கதிர் – சிந்தா:13 2746/1
மண்டு தீம் புனல் வளம் கெழு நாடு எய்தல் அரிதே – சிந்தா:13 2750/4
சூழ் குலை பெண்ணை நெற்றி தொடுத்த தீம் கனிகள் ஊழ்த்து – சிந்தா:13 2763/2
நலம் கொள் தீம் பால் குண கடலும் உடையார் நம்மை உடையாரே – சிந்தா:13 2813/4
வீட்டினது இயற்கை நாம் விளம்பின் தீம் கதிர் – சிந்தா:13 2844/1
தின் பளித மாலை திரள் தாமம் திகழ் தீம் பூ – சிந்தா:13 2919/1
முற்று உயிர் ஓம்பி தீம் தேன் ஊனொடு துறப்பின் யார்க்கும் – சிந்தா:13 2927/3
அன்னமே தோகை நல் யாழ் அமுதமே ஆய்ந்த தீம் தேன் – சிந்தா:13 2952/1
தீம் கதிர் திங்கள் செம் தீ சொரிந்ததால் திசைகள் எல்லாம் – சிந்தா:13 2955/3
யாழின் வாய் முழவம் விம்ம ஆட்டு ஒழிந்து அயர்ந்து தீம் தேன் – சிந்தா:13 2974/3
தீம் பால் கிளி மறந்து தேவர் அவி மடங்கி – சிந்தா:13 2980/1
தூம்பு ஆர் நெடும் கைம்மா தீம் கரும்பு துற்றாவாய் – சிந்தா:13 2980/2
தெண் திரை நீத்தம் நீந்தி தீம் கதிர் சுமந்து திங்கள் – சிந்தா:13 2991/1
துணி மணி முக்குடை சொரிந்த தீம் கதிர் – சிந்தா:13 3011/3
மிக்கான் குணம் பாடி ஆடி மிகு தீம் பால் – சிந்தா:13 3038/3
உற்று உயிர்க்கு தீம் பால் சுரந்து ஓம்பி உள்ளத்து – சிந்தா:13 3039/3
தீம் பால் நுரை போல் திகழ் வெண் பட்டு உடுத்து வண்டு ஆர் – சிந்தா:13 3046/1
பழுத்த தீம் பலவின் கனி வாழையின் – சிந்தா:13 3069/1
மதியம் பொழி தீம் கதிர்கள் பருகி மலர் ஆம்பல் – சிந்தா:13 3103/1
மண் கனிந்த பொன் முழவ மழையின் விம்ம மா மணி யாழ் தீம் குழல்கள் இரங்க பாண்டில் – சிந்தா:13 3138/1

TOP


தீம்பூ (1)

நீர தீம்பூ மரம் நிரந்த தக்கோலமும் – சிந்தா:8 1901/2

TOP


தீமகன் (1)

தீமகன் உடைய எல்லாம் தேர்ந்தனன் கொடுத்து செல்வன் – சிந்தா:12 2572/3

TOP


தீமை (6)

நூல் நெறி வகையின் நோக்கி நுண்ணிதின் நுழைந்து தீமை
பால் நெறி பலவும் நீக்கி பருதி அம் கடவுள் அன்ன – சிந்தா:1 374/1,2
தீம் தொடை நரம்பின் தீமை சிறிது அலா பொழுதும் ஓதி – சிந்தா:3 721/1
இன் உயிர் கவர்ந்து தீமை இனி கொள்ளும் உடம்பினாலும் – சிந்தா:3 799/3
இல்லையே வென்றி தீமை இடம் கொண்ட மனத்தினார்க்கே – சிந்தா:3 815/4
தீமை உண்டு எனில் செப்பு என செப்பினான் – சிந்தா:6 1428/4
சிலம்பின் மேல் சென்னி சேர்த்தி சிறியவர் செய்த தீமை
புலம்பலர் பொறுப்பர் அன்றே பெரியவர் என்று கூறி – சிந்தா:9 2088/2,3

TOP


தீய (2)

தீர காய்ந்துழி நல்லவும் தீய ஆம் – சிந்தா:4 888/2
செறி கழல் மன்னர் நக்கு தீய தீ விளைத்து கொண்டார் – சிந்தா:10 2201/4

TOP


தீயவும் (1)

வாரம் பட்டுழி தீயவும் நல்ல ஆம் – சிந்தா:4 888/1

TOP


தீயன (1)

சிந்தையில் நின்று ஒளிர் தீயன நீரார் – சிந்தா:4 934/4

TOP


தீயால் (4)

கல் சேர் பூண் கொள் கதிர் முலையாய் காம தீயால் வெந்தவர் போல் – சிந்தா:3 719/1
நெரித்திடா கண்ணுள் தீயால் சுட்டு நீறு ஆக்கி நெய்த்தோர் – சிந்தா:3 807/3
கொந்து அழல் காட்டு தீயால் வளைப்புண்ட குழாத்தை நோக்கி – சிந்தா:7 1753/3
கொந்து அழல் பிறப்ப தாக்கி கோடுகள் மிடைந்த தீயால்
வெந்தன விலை இலாத சாமரை வீர மன்னன் – சிந்தா:10 2254/1,2

TOP


தீயான் (1)

காய்ந்தனள் என்று கூற காளை மற்று இவட்கு தீயான்
மாய்ந்தனன் போலும் என்ன மாதரார் ஒருங்கு வாழ்த்தி – சிந்தா:9 2043/2,3

TOP


தீயிடைப்பட்டது (1)

கொம்பு வெம் தீயிடைப்பட்டது ஒத்தாள் விரை செய் கோதையே – சிந்தா:7 1664/4

TOP


தீயில் (2)

கட்டு அழல் காம தீயில் கன்னியை கலக்கினானும் – சிந்தா:1 253/2
குஞ்சரம் முழங்கு தீயில் கொள்கையின் மெலிந்து இ மூதூர் – சிந்தா:1 396/3

TOP


தீயின் (5)

காடு கவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான் – சிந்தா:1 281/4
விரும்பினர் எதிர்கொண்டு ஓம்ப வேழ வெம் தீயின் நீங்கி – சிந்தா:1 401/2
படாம் திறந்து ஊழி தீயின் பதுமுகன் காட்டியிட்டான் – சிந்தா:3 806/2
காம்பு அடு காட்டு தீயின் கனன்று உடன் எழுக என்றேன் – சிந்தா:7 1738/4
சிலை முத்தம் கொள்ளும் திண் தோள் செம்மலும் தீயின் சேந்தான் – சிந்தா:10 2312/4

TOP


தீயினால் (1)

கண் உமிழ் தீயினால் சுட நிறம் கரிந்த போல் – சிந்தா:7 1832/1

TOP


தீயினுள் (1)

தீயினுள் அமிர்தம் பெய்த ஆங்கு என் உயிர் செகுப்பல் என்றாள் – சிந்தா:7 1581/4

TOP


தீயும் (1)

மின் அடு வாளும் வேலும் கல்லொடு தீயும் காற்றும் – சிந்தா:4 1147/3

TOP


தீயுள் (1)

நம்பனை நகரின் நீக்கி சேமத்தால் வைக்க தீயுள்
செம்பொன் போல் பெரிதும் சேந்து செகுத்திடல் உற்று நின்றான் – சிந்தா:3 670/1,2

TOP


தீயொடு (2)

ஊழி வாய் தீயொடு ஒக்கும் ஒளிறு வாள் தடக்கையானும் – சிந்தா:3 833/2
ஊழி-வாய் தீயொடு ஒப்பான் பதுமுகன் உரைக்கும் ஒன்னார் – சிந்தா:8 1929/1

TOP


தீர் (4)

படர் தீர் அந்தி அது ஒத்தாள் பணை செய் கோட்டு படா முலையாள் – சிந்தா:1 313/4
விழைவு தீர் கிழவன் ஆகி விழு கதிர் உலந்து வீழ – சிந்தா:6 1503/2
செயிர் தீர் திரள் கை சிறு பிடி கேள்வன் – சிந்தா:10 2126/2
புலமகள் புகழ பொய் தீர் பூ மகள் புணர்ந்து மாதோ – சிந்தா:12 2566/4

TOP


தீர்க்கலுற்றார் (1)

பருகற்கு அமைந்த அமிர்தின் படர் தீர்க்கலுற்றார் – சிந்தா:4 1062/4

TOP


தீர்க்கும் (3)

பாசறை பரிவு தீர்க்கும் பங்குனி பருவம் செய்தான் – சிந்தா:4 851/4
ஊடிய மகளிர் போல ஒசிந்தன ஊடல் தீர்க்கும்
சேடரின் சென்று புல்லி சிறுபுறம் தழீஇய தும்பி – சிந்தா:4 852/3,4
உற்ற இ இடரை தீர்க்கும் உபாயம் நீர் உரை-மின் என்றான் – சிந்தா:4 1139/3

TOP


தீர்க (1)

வான் தரு வளத்தது ஆகி வையகம் பிணியில் தீர்க
தேன் தரு கிளவியாரும் கற்பினில் திரிதல் இன்றி – சிந்தா:3 604/1,2

TOP


தீர்த்தம் (1)

தீரா வினை தீர்த்து தீர்த்தம் தெரிந்து உய்த்து – சிந்தா:5 1247/1

TOP


தீர்த்தல் (1)

பாம்பு எழ பாம்பு கொண்டால் பகவற்கும் அரிது தீர்த்தல்
தேம் பிழி கோதைக்கு இன்று பிறந்தநாள் தெளி-மின் என்று – சிந்தா:5 1280/1,2

TOP


தீர்த்தவாறும் (1)

தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய் துயர் தீர்த்தவாறும்
கோள் உற்ற கோன் போல் அவன் கொண்டு வளர்த்தவாறும் – சிந்தா:0 10/2,3

TOP


தீர்த்தன் (2)

செய்த அ பாவம் எல்லாம் தீர்த்திடும் தீர்த்தன் பாதம் – சிந்தா:3 821/1
தீவினை கழூஉம் தீர்த்தன் வந்தியா – சிந்தா:13 3133/2

TOP


தீர்த்தார்க்கு (1)

நல்ல கொழும் பழனும் கிழங்கும் தந்து நவை தீர்த்தார்க்கு
இல்லையே கைம்மாறு என்று இன்பம் எல்லாம் அவர்க்கு ஈந்தாள் – சிந்தா:13 2602/2,3

TOP


தீர்த்தான் (4)

பண் உரையால் பரவி துயர் தீர்த்தான் – சிந்தா:1 228/4
கதிர் நகை முறுவல் மாதர் கண் உறு கவலை தீர்த்தான் – சிந்தா:3 584/4
அல்லல் அகற்றி அரும் துயர் தீர்த்தான் – சிந்தா:4 941/4
பஞ்சவர் போல நின்ற பகட்டு இன பரிவு தீர்த்தான் – சிந்தா:5 1237/4

TOP


தீர்த்திடும் (1)

செய்த அ பாவம் எல்லாம் தீர்த்திடும் தீர்த்தன் பாதம் – சிந்தா:3 821/1

TOP


தீர்த்து (4)

சித்தம் குழையற்க என தீர்த்து அவள் சேர்ந்தவாறும் – சிந்தா:0 18/4
தீரா வினை தீர்த்து தீர்த்தம் தெரிந்து உய்த்து – சிந்தா:5 1247/1
நங்கையை செற்றது ஈங்கு தீர்த்து நீர் கொள்-மின் நாடும் – சிந்தா:5 1275/2
மிகு கொடா முத்தம் சூட்டி மீளிமை தீர்த்து மின்னும் – சிந்தா:6 1486/1

TOP


தீர்த்தும் (1)

பித்தர் இவர் உற்ற பிணி தீர்த்தும் என எண்ணி – சிந்தா:9 2022/2

TOP


தீர்த்தேன் (1)

திரு விழை அவளை தீர்த்தேன் தீர்வு இலா நண்பு வேண்டி – சிந்தா:7 1755/2

TOP


தீர்ந்த (2)

ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி உத்திரட்டாதியானே – சிந்தா:1 387/4
செயிரின் தீர்ந்த செழும் தாமரை கண் இடன் ஆடலும் – சிந்தா:4 1156/2

TOP


தீர்ந்தது (1)

தோள் அயா தீர்ந்தது என்றாள் தொழு தகு தெய்வம் அன்னாள் – சிந்தா:8 1912/4

TOP


தீர்ந்தவர் (1)

திரு இல் தீர்ந்தவர் தேயமும் தேர்ந்து போய் – சிந்தா:7 1779/3

TOP


தீர்ந்தவே (1)

பட்டன வள நிழல் பரிவு தீர்ந்தவே – சிந்தா:8 1938/4

TOP


தீர்ந்தனன் (1)

தீர்ந்தனன் சொல் அளைஇ தேர் கொண்டு ஏறினான் – சிந்தா:6 1465/4

TOP


தீர்ந்தார் (2)

ஆய்ந்தவன் சிறப்பு செய்தான் அவல நோய் அவரும் தீர்ந்தார் – சிந்தா:7 1864/4
முன் பட்டது ஒழிந்து நுங்கள் முகவியர் முனிவு தீர்ந்தார்
பொன் தொட்டேம் யாமும் நும்மை போகொட்டோம் பாடல் கேளாது – சிந்தா:9 2045/2,3

TOP


தீர்ந்தான் (3)

பறவை தாது உண்ட வண்ணம் பட்டினி பரிவு தீர்ந்தான் – சிந்தா:4 1125/4
சென்றது பருதிவட்டம் செம்மலும் அசைவு தீர்ந்தான் – சிந்தா:6 1437/4
தாமரை செம் கணானும் தன் உறு பரிவு தீர்ந்தான் – சிந்தா:7 1725/4

TOP


தீர்ந்து (4)

பட்டது போன்று நாய்கன் பரிவு தீர்ந்து இனியர் சூழ – சிந்தா:3 583/2
எவ்வம் தீர்ந்து இருந்தாள் இது கூறினாள் – சிந்தா:4 874/4
அசைவு தீர்ந்து இருள் அஃகிய காலையே – சிந்தா:6 1438/1
தேன் நெய் மார்பகம் தீண்டலும் தீர்ந்து ஒளி சிறந்தார் – சிந்தா:12 2382/4

TOP


தீர்ந்தேம் (1)

பாலுற்ற பவள செ வாய் தத்தையால் பரிவு தீர்ந்தேம் – சிந்தா:9 2044/4

TOP


தீர்ந்தேன் (2)

இள முலை சுமந்து பெற்ற வருத்தமும் இன்று தீர்ந்தேன்
உள மெலி மகளிர் எய்தும் இன்பமும் இன்று பெற்றேன் – சிந்தா:3 684/3,4
விடுந்த சிறு கிளியால் விம்மல் நோய் தீர்ந்தேன்
நெடும் கணாள் தானும் நினைவு அகல்வாள் ஆக – சிந்தா:4 1041/3,4

TOP


தீர்ப்பது (1)

ஒருங்கு நோய் தீர்ப்பது ஒன்று அமிர்தம் அல்லது ஒன்று – சிந்தா:5 1204/3

TOP


தீர்ப்பர் (1)

தே மலர் திருவோடு ஒப்பார் சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பர் – சிந்தா:7 1598/4

TOP


தீர்ப்பன (1)

அன்றி தீர்ப்பன யாவையும் இல்லையே – சிந்தா:5 1332/3

TOP


தீர்ப்பான் (3)

இங்கு நம் இடரை தீர்ப்பான் இளையவன் உளன் மற்று என்றான் – சிந்தா:5 1281/4
மெய்ப்படு முது புண் தீர்ப்பான் மேவிய முயற்சி போல – சிந்தா:13 2881/1
நாணினால் வருத்தம் தீர்ப்பான் நல் முலை கண்கள் தம்மை – சிந்தா:13 2953/2

TOP


தீர்வான் (1)

தான் அடைந்து இருந்த காவில் பாடினாள் தனிமை தீர்வான்
கூன் அடைந்திருந்த திங்கள் குளிர் முத்த முலையினாளே – சிந்தா:5 1355/3,4

TOP


தீர்வு (1)

திரு விழை அவளை தீர்த்தேன் தீர்வு இலா நண்பு வேண்டி – சிந்தா:7 1755/2

TOP


தீர (9)

தோள் முதல் பசலை தீர தோன்றலை பருகுவார் போல் – சிந்தா:2 470/2
பல பட பரப்பி பாவை மெல் அடி பரிவு தீர
நில வரை தன் அனாரை நிதியினால் வறுமை செய்தான் – சிந்தா:3 617/3,4
தீர காய்ந்துழி நல்லவும் தீய ஆம் – சிந்தா:4 888/2
இடை நெறி அசைவு தீர இருந்து அவண் ஏகல் உற்றால் – சிந்தா:5 1185/3
துனிவு தீர நோக்கி தோன்றல் செல்லும் முன்னால் – சிந்தா:6 1414/3
துஞ்சுவேன் துயரம் தீர தொழு தகு தெய்வம் ஆவீர் – சிந்தா:6 1531/2
வருவர் நம் கேள்வர் இன்னே வாள் நுதல் பசலை தீர
உருகி நைந்து உடன்று முன் கை வளை உக மெலிய வேண்டா – சிந்தா:7 1740/1,2
மேவி நோய் தீர வினா தருவார் இல்லையே – சிந்தா:8 1967/4
படர் தீர கொண்டு எழுந்த பறவைகள் பட நாகம் – சிந்தா:10 2242/3

TOP


தீரா (2)

தீரா வினை தீர்த்து தீர்த்தம் தெரிந்து உய்த்து – சிந்தா:5 1247/1
சிலை கொள் நாணின் தீரா திருந்து கற்பின்னவர்-தம் – சிந்தா:6 1413/1

TOP


தீவம் (1)

நன்மை உடை நல் பொன் விளை தீவம் அடைந்தது அஃதே – சிந்தா:3 503/4

TOP


தீவிகை (1)

மோட்டு மீன் குழாத்தின் எங்கும் தீவிகை மொய்த்த முத்தம் – சிந்தா:10 2325/2

TOP


தீவிய (2)

செப்பொடு சிலதியர் ஏந்த தீவிய
துப்பு உமிழ்ந்து அலமரும் காமவல்லியும் – சிந்தா:1 197/2,3
தேன் நெய் தோய்ந்தன தீவிய திரு மணி அனைய – சிந்தா:13 2747/1

TOP


தீவில் (1)

பைம்பொன் விளை தீவில் நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி – சிந்தா:1 106/2

TOP


தீவிற்று (1)

வெண் தலை புணரி வீசி கிடந்த பொன் தீவிற்று ஆகி – சிந்தா:5 1184/2

TOP


தீவின் (1)

வரை கிடந்து கீண்டது என கீறி வளர் தீவின்
நிரை இடறி பாய்ந்து இரிய ஏகியது மாதோ – சிந்தா:3 502/3,4

TOP


தீவினுள் (1)

தீவினுள் இழிந்து தேன் தார் செம்மலும் திரு முத்தாரம் – சிந்தா:3 504/1

TOP


தீவினை (8)

நிரைத்த தீவினை நீங்க நெடும் கணார் – சிந்தா:7 1603/1
மற வெம் காமத்து வந்துற்ற தீவினை
பறவை தேர் நரகத்து பதைக்குங்கால் – சிந்தா:7 1633/2,3
தீவினை உடைய என்னை தீண்டன்-மின் அடிகள் வேண்டா – சிந்தா:9 2099/1
தெருளலேன் செய்த தீவினை எனும் – சிந்தா:13 2745/1
செல்ப அ நரகம்-தன்னுள் தீவினை தேர்கள் ஊர்ந்தே – சிந்தா:13 2776/4
தொல்லை தம் உடம்பு நீங்க தீவினை தொடர்ந்து நீங்கா – சிந்தா:13 2876/2
தீவினை குழவி செற்றம் எனும் பெயர் செவிலி கையுள் – சிந்தா:13 3098/1
தீவினை கழூஉம் தீர்த்தன் வந்தியா – சிந்தா:13 3133/2

TOP


தீவினையே (1)

விளைவது தீவினையே கண்டீர் இவை மூன்றும் விடு-மின் என்றால் – சிந்தா:6 1551/2

TOP


தீவு (1)

தடம் கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி – சிந்தா:13 2842/2

TOP


தீற்றி (3)

காயத்தின் குழம்பு தீற்றி கார் இரும்பு எறிய மேகம் – சிந்தா:3 788/1
சண்பக மாலை வேய்ந்து சந்தனம் பளிதம் தீற்றி
விண் புக நாறு சாந்தின் விழு முலை காமவல்லி – சிந்தா:4 1081/1,2
இன்பம் மற்று என்னும் பேர் ஆன் எழுந்த புல் கற்றை தீற்றி
துன்பத்தை சுரக்கும் நான்கு கதி எனும் தொழுவில் தோன்றி – சிந்தா:13 3105/1,2

TOP


தீற்றின் (1)

காய்த்த நெல் கவளம் தீற்றின் களிறு தான் கழனி மேயின் – சிந்தா:13 2907/2

TOP


தீற்றுதும் (1)

சிரை ஐந்தும் விடுதும் என்பார் தீற்றுதும் சிருங்கி என்பார் – சிந்தா:5 1277/1

TOP