தொ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்க 5
தொக்கது 3
தொக்கதுவே 1
தொக்கதே 1
தொக்கவர் 2
தொக்கார் 4
தொக்காலே 1
தொக்கு 6
தொக்கே 1
தொக்கோர் 1
தொகல் 1
தொகு 2
தொகுக 1
தொகுத்த 3
தொகுத்தது 2
தொகுத்தான் 1
தொகுத்து 1
தொகுத்தும் 1
தொகுதி 1
தொகுதியும் 1
தொகை 22
தொகைய 1
தொகையன 1
தொகையால் 1
தொங்கல் 6
தொங்கலார் 1
தொங்கலால் 1
தொங்கலான் 1
தொட்டால் 1
தொட்டான் 1
தொட்டானே 1
தொட்டிமை 3
தொட்டு 8
தொட்டேம் 1
தொட 2
தொடக்க 2
தொடக்கினேன் 1
தொடக்கும் 1
தொடக்கொடு 1
தொடங்கல் 1
தொடங்கி 1
தொடங்கின் 1
தொடங்கினவே 1
தொடங்கினாரே 1
தொடங்கினாள் 2
தொடங்கினாளே 1
தொடங்கினான் 1
தொடங்கினானே 2
தொடர் 8
தொடர்கிற்றிலிர் 1
தொடர்ந்து 11
தொடர்ப்பாட்டின் 1
தொடர்பின் 1
தொடர்பு 1
தொடர 1
தொடாத 1
தொடி 38
தொடிக்கு 2
தொடிகள் 1
தொடியர் 1
தொடின் 1
தொடினே 1
தொடு 11
தொடுத்த 9
தொடுத்தலோடும் 1
தொடுத்தவாறும் 1
தொடுத்தன 2
தொடுத்தான் 3
தொடுத்து 10
தொடுப்பவே 1
தொடுப்பாயும் 1
தொடுப்பார் 1
தொடும் 1
தொடேல் 1
தொடை 12
தொடைக்கு 1
தொடையல் 4
தொண்டக 1
தொண்டிக்கள் 1
தொண்டை 13
தொத்து 11
தொத்தும் 1
தொய் 1
தொய்யில் 3
தொய்யின் 1
தொல் 24
தொல்லை 7
தொலை 1
தொலைச்சுநர் 1
தொலைத்த 3
தொலைத்தோய் 1
தொலைந்ததே 1
தொலைந்து 4
தொலைப்பரும் 1
தொழ 15
தொழாத 1
தொழிக்கப்பட்டும் 1
தொழித்த 1
தொழித்து 3
தொழிந்து 1
தொழில் 30
தொழில்கள் 1
தொழில்பட 1
தொழில 1
தொழிலர் 1
தொழிலன் 1
தொழிலார்க்கும் 1
தொழிலின் 2
தொழிலும் 9
தொழிலே 1
தொழு 4
தொழு-மின் 1
தொழுத்தையேன் 1
தொழுத 2
தொழுதக 6
தொழுதகு 1
தொழுதல் 1
தொழுதற்கு 1
தொழுதனம் 1
தொழுதனர் 2
தொழுதனவே 1
தொழுதனன் 1
தொழுதார் 9
தொழுதாள் 2
தொழுதாளை 1
தொழுதான் 1
தொழுதானே 1
தொழுதி 7
தொழுதிட்டானே 1
தொழுதியோடு 1
தொழுது 61
தொழுதும் 5
தொழுதே 1
தொழுதேன் 3
தொழுதேனே 3
தொழும் 2
தொழுவ 1
தொழுவனர் 1
தொழுவாய் 1
தொழுவார் 3
தொழுவாரும் 1
தொழுவில் 2
தொழுவின் 1
தொழுவேங்கள் 1
தொழுனை 1
தொள்ளை 1
தொறு 5
தொறுத்தியர் 1
தொறுவின் 1
தொறுவை 1
தொன்று 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தொக்க (5)

சொல் மாண்பு அமைந்த குழுவின் சரண் சென்று தொக்க
நல் மாண்பு பெற்றேன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன் – சிந்தா:0 3/3,4
கூற்றங்கள் பலவும் தொக்க கூற்றத்தில் கூற்றம் ஒப்பான் – சிந்தா:4 1143/4
தூ திரள் சுறா இனம் தொக்க போல் மறவரும் – சிந்தா:7 1845/3
தோய்ந்து உயிர் உடம்பு இவண் ஒழிய தொக்க நாள் – சிந்தா:13 2831/3
தொக்க கடல் போல் சுதங்கள் நிறைந்தனவே – சிந்தா:13 3038/4

TOP


தொக்கது (3)

வான் சுவை அமிர்த வெள்ளம் வந்து இவண் தொக்கது என்ன – சிந்தா:1 373/1
காளை-தன் தேர் செல் வீதி கலந்து உடன் தொக்கது அன்றே – சிந்தா:2 461/4
வல்லை தொக்கது வளம் கெழு கோயிலுள் ஒருங்கே – சிந்தா:11 2360/4

TOP


தொக்கதுவே (1)

சேடனை காணிய சென்று தொக்கதுவே – சிந்தா:10 2112/4

TOP


தொக்கதே (1)

தோய் மழை உலக வெள்ளம் தொல் நகர் தொக்கதே போல் – சிந்தா:10 2178/3

TOP


தொக்கவர் (2)

தோளினால் வலியர் ஆகி தொக்கவர் தலைகள் பாற – சிந்தா:1 257/1
துன்னிய தோகை குழாம் என தொக்கவர்
மன்னிய கோலம் மலிந்தது ஒருபால் – சிந்தா:10 2117/3,4

TOP


தொக்கார் (4)

மண் இடம் மலிர எங்கும் மாந்தரும் வந்து தொக்கார்
ஒள் நிற உரோணி ஊர்ந்த ஒளி மதி ஒண் பொன் ஆட்சி – சிந்தா:3 620/1,2
தொக்கார் போல் பல் மாவும் மயிலும் தோன்றி துளங்கினவே – சிந்தா:5 1227/4
வேல் படை வீரர் ஒர் நூற்றுவர் தொக்கார் – சிந்தா:10 2209/4
இடை நிலம் இன்றி வேழம் ஈண்டின மள்ளர் தொக்கார் – சிந்தா:12 2525/4

TOP


தொக்காலே (1)

தொக்காலே போலும் தன் தேவி குழாம் சூழ – சிந்தா:13 3038/2

TOP


தொக்கு (6)

தோள் உற புல்லுவார் போல் தொக்கு எதிர்கொண்டு புக்கு – சிந்தா:1 348/2
சொல் திறல் அன்றி மன்னீர் தொக்கு நீர் காண்ம்-மின் எங்கள் – சிந்தா:3 756/1
நெருங்குபு மள்ளர் தொக்கு நெடு வரை தொடுத்த வெள்ளம் – சிந்தா:4 972/3
தோழிமார்களும் தாயரும் தொக்கு உடன் – சிந்தா:5 1293/2
தோகையும் அன்னமும் தொக்கு உடன் ஆர்ப்பது ஓர் – சிந்தா:8 1905/3
சுற்றத்தார்க்கு உரைப்ப ஈண்டி தொக்கு உடன் தழுவிக்கொள்வார் – சிந்தா:9 2096/2

TOP


தொக்கே (1)

துண்ணென களத்தின் நீங்கி தொல் நகர் புறத்து தொக்கே
எண்ணு-மின் செய்வது என்றான் பதுமுகன் எரியும் வேலான் – சிந்தா:7 1733/3,4

TOP


தொக்கோர் (1)

தோள் வயிரம் தோன்ற தொழுவார் அழுது நைவார் தொக்கோர் கோடி – சிந்தா:3 645/3

TOP


தொகல் (1)

தொகல் அரும் கரு வினை துணிக்கும் எஃகமே – சிந்தா:13 3101/4

TOP


தொகு (2)

துணி கதிர் வளை முன் கை தொகு விரல் செங்காந்தள் – சிந்தா:1 170/3
தொகு கள் தாம் கோதை வெய்ய துணை மணி முலைகள் தாமே – சிந்தா:6 1486/4

TOP


தொகுக (1)

தெண் திரை பரப்பு நாண திருநகர் தொகுக என்றான் – சிந்தா:10 2151/4

TOP


தொகுத்த (3)

சுரந்த வெண் மதியை சூன்று கதிர் கொண்டு தொகுத்த போலும் – சிந்தா:3 629/3
வைத்து வழு இல் சாதகமும் வகுத்த பின்னர் தொகுத்த நாள் – சிந்தா:13 2705/2
தொல்லை எம் பிறவியும் தொகுத்த பாவமும் – சிந்தா:13 2849/2

TOP


தொகுத்தது (2)

துளங்கு வெண் மதி உகுத்த வெண் கதிர் தொகுத்தது போல் – சிந்தா:11 2361/1
சுருள் துணித்து ஒரு வழி தொகுத்தது ஒத்ததே – சிந்தா:12 2450/2

TOP


தொகுத்தான் (1)

நால் படையும் தொகுத்தான் மக்கள் நச்சு இலை – சிந்தா:10 2209/3

TOP


தொகுத்து (1)

சொரிந்தவை தொகுத்து நோக்கின் தொடு கடல் வெள்ளம் ஆற்றா – சிந்தா:5 1391/2

TOP


தொகுத்தும் (1)

மை நூற்று அனைய மா வீழ் ஓதி வகுத்தும் தொகுத்தும் விரித்தும் – சிந்தா:12 2437/1

TOP


தொகுதி (1)

கனை கடல் கவர செல்லும் கண மழை தொகுதி போலும் – சிந்தா:13 3051/1

TOP


தொகுதியும் (1)

துள்ளும் மானொடு வேழ தொகுதியும்
வெள்ளை அன்னமும் தோகையும் வேய்ந்து அவண் – சிந்தா:4 870/2,3

TOP


தொகை (22)

திண் திறல் தெவ்வர் தேர் தொகை மாற்றினான் – சிந்தா:1 158/2
தொகை மலி தொறுவை ஆளும் தோன்றல் மற்று இன்ன கூறும் – சிந்தா:2 474/4
விலங்கின தேர் தொகை வேழம் காய்ந்தன – சிந்தா:3 779/3
செம்பொன் நெடும் தேர் தொகை மா கடல் சேனை வெள்ளம் – சிந்தா:3 809/2
சந்த மாலை தொகை தாழ்ந்து சாந்தம் கமழ் பூமியுள் – சிந்தா:4 1160/1
மலை தொகை யானை மன்னன் மைத்துனன் மதனன் என்பான் – சிந்தா:4 1161/1
கொலை தொகை வேலினானை கொல்லிய கொண்டு போந்தான் – சிந்தா:4 1161/2
கணிப்பு அரும் குண தொகை காளை என்றனன் – சிந்தா:5 1172/3
கலை தொகை நலம் பல கடந்த காளை-தான் – சிந்தா:6 1489/1
மலை தொகை மதம் தவழ் யானை மன்னவன் – சிந்தா:6 1489/3
தோன்று பூ இலவத்து அங்கண் தொகை அணில் அனைய பைம் காய் – சிந்தா:7 1701/2
தேர் தொகை தானை மன்னன் சீவகற்கு இளைய நம்பி – சிந்தா:7 1852/1
வார் தொகை முழவம் விம்ம மல் உறழ் தோளினானை – சிந்தா:7 1852/2
நீர் தொகை கழனி நாடு நெடு நகர் பெயரும் நுங்கள் – சிந்தா:7 1852/3
சீர் தொகை குலனும் எல்லாம் தெரிந்து எமக்கு உரைமோ என்றான் – சிந்தா:7 1852/4
தன்னை ஊர் கொண்ட தகையன தொகை சொலின் அறுநூறு – சிந்தா:10 2162/3
அடி தொடைக்கு அமைந்தன அரவ தேர் தொகை
வடிவு உடை துகில் முடி வலவர் பண்ணினார் – சிந்தா:10 2213/3,4
சந்தனம் சொரி தண் கதிர் திங்கள் அம் தொகை தாம் பல – சிந்தா:10 2307/1
தார் கோலம் மான் தேர் தொகை மாமன் தொழுது சொன்னான் – சிந்தா:11 2352/4
கவரி தொகை பல வீசும் காவலர் – சிந்தா:12 2427/3
இவர் இ தொகை என்பது இன்றி ஆயினார் – சிந்தா:12 2427/4
பொங்கும் மணி முடி மேல் பொலிந்து எண் கோதை தொகை ஆகி – சிந்தா:13 2607/1

TOP


தொகைய (1)

ஈர் ஐஞ்ஞூற்றினை இருபதின் முரணிய தொகைய
வீரர் ஏறின விளங்கு ஒளி பக்கரை அமைந்த – சிந்தா:7 1772/1,2

TOP


தொகையன (1)

பைம் கதிர் கொட்டை கவரி சூழ்ந்து அணிந்த பகரின் அ தொகையன பாய்மா – சிந்தா:10 2157/4

TOP


தொகையால் (1)

பூ மாண் தாம தொகையால் பொலிந்த குளிர் பந்தர் – சிந்தா:12 2455/3

TOP


தொங்கல் (6)

சுரும்பு எழுந்து இருந்து உணும் தொங்கல் வார் குழல் – சிந்தா:3 661/1
துணையில் தோகை என் நங்கைக்கு தொங்கல் தொடுப்பாயும் நீ – சிந்தா:7 1668/3
சுண்ணம் மேல் சொரிவார் தொழுது தொங்கல் வீழ்ப்பார் – சிந்தா:12 2547/1
துன்னி நம்பி உருவு தீட்டி தொங்கல் வேய்ந்து தொழுது ஆற்ற நீ – சிந்தா:12 2588/3
தோமரம் ஆக தொங்கல் சிதறுபு மயங்கினாரே – சிந்தா:13 2656/4
தொத்து உடை மலர் தொங்கல் கண் பொர – சிந்தா:13 2683/1

TOP


தொங்கலார் (1)

சுரும்பு நின்று அறா மலர் தொங்கலார் கவின் – சிந்தா:13 2676/1

TOP


தொங்கலால் (1)

தொல் நலம் பருகி காம தொங்கலால் பிணிக்கப்பட்டார் – சிந்தா:13 2840/4

TOP


தொங்கலான் (1)

தொங்கலான் முன்கை யாத்து சொல்லு நீ வந்தது என்ன – சிந்தா:8 1988/2

TOP


தொட்டால் (1)

திசை முகம் படர்க வல்லே தீ தொட்டால் சுடுவது அன்றே – சிந்தா:3 748/4

TOP


தொட்டான் (1)

பைம்பொன் ஆழி தொட்டான் படை காட்டினான் – சிந்தா:10 2167/2

TOP


தொட்டானே (1)

சீர் மலி பகழி ஏந்தி பதுமுகன் சிலை தொட்டானே – சிந்தா:7 1862/4

TOP


தொட்டிமை (3)

ஒள்_நுதல் கொண்ட ஆடல் தொட்டிமை உருவம் நோக்கி – சிந்தா:5 1255/3
தொட்டிமை உடைய வீணை செவி சுவை அமிர்தம் என்றான் – சிந்தா:9 2047/4
தொட்டிமை உருவம் தோன்ற சுவரையே பொருந்தி நின்றாய் – சிந்தா:9 2085/2

TOP


தொட்டு (8)

தொட்டு எழீஇ பண் எறிந்தாள் கின்னரும் மெய்ம்மறந்து சோர்ந்தார் அன்றே – சிந்தா:3 647/4
தொட்டு எடுக்கலா உலம் ஓர் தோளின் ஏந்தி ஆடினான் – சிந்தா:3 690/2
ஆம்பால் மணி நாம மோதிரம் தொட்டு ஐயென்ன – சிந்தா:4 1040/3
அந்தர அகடு தொட்டு அணவு நீள் புகழ் – சிந்தா:5 1239/1
வெறி கமழ் சோலை நண்ணி வேண்டிய அடிசில் கை தொட்டு
எறி படை எழுக என்றார் வளை எழுந்து ஆர்த்த அன்றே – சிந்தா:7 1818/3,4
தொட்டு விடுத்தேன் அவனை தூது பிற சொல்லி – சிந்தா:7 1876/2
தொட்டு மேல் பொறியை நீக்கி மன்னனை தொழுது தோன்ற – சிந்தா:10 2143/3
மின் அரி சிலம்பு தொட்டு விருப்பொடு விரைந்து போவான் – சிந்தா:12 2538/2

TOP


தொட்டேம் (1)

பொன் தொட்டேம் யாமும் நும்மை போகொட்டோம் பாடல் கேளாது – சிந்தா:9 2045/3

TOP


தொட (2)

விண் தொட நிவந்த கோயில் விண்ணவர் மகளின் சென்றாள் – சிந்தா:1 303/3
சொல்லு-மின் எமக்கும் ஆங்கு ஓர் சிலை தொட நாள் என்பாரும் – சிந்தா:10 2179/3

TOP


தொடக்க (2)

பாகர்க்கும் தொடக்க நில்லா பகடு போல் பொங்கியிட்டான் – சிந்தா:13 2610/4
தோட்டியால் தொடக்க பட்ட சொரி மத களிற்றின் மீண்டான் – சிந்தா:13 2729/4

TOP


தொடக்கினேன் (1)

அன்ப மற்று யான் நினை துன்பத்தால் தொடக்கினேன் – சிந்தா:3 579/2

TOP


தொடக்கும் (1)

தூப்பு உடையவள் நலம் தொடக்கும் பாகனாய் – சிந்தா:9 2011/2

TOP


தொடக்கொடு (1)

தூ புரி முத்த மாலை தொடக்கொடு தூக்கி எங்கும் – சிந்தா:5 1343/3

TOP


தொடங்கல் (1)

இளையவள் பாட வீரர் எழால் வகை தொடங்கல் அன்றேல் – சிந்தா:3 651/3

TOP


தொடங்கி (1)

வெம் சினம் குறைந்து நீங்க விழு தவம் தொடங்கி நோற்கும் – சிந்தா:1 396/1

TOP


தொடங்கின் (1)

வாள் கலாம் வலித்து அமர் தொடங்கின் வல்லையே – சிந்தா:7 1826/2

TOP


தொடங்கினவே (1)

கோள் ஆர்ந்த கூற்றமோ கொல்வான் தொடங்கினவே – சிந்தா:8 1972/4

TOP


தொடங்கினாரே (1)

புணை புறம் தழுவி தூ நீர் போர் தொழில் தொடங்கினாரே – சிந்தா:13 2655/4

TOP


தொடங்கினாள் (2)

கீதம் கிடை இலாள் பாட தொடங்கினாள் – சிந்தா:3 731/4
மெலிய வெம்பி நைகின்றாள் உய்யும் வகை தொடங்கினாள் – சிந்தா:7 1670/4

TOP


தொடங்கினாளே (1)

துணைவனுக்கு உற்ற துன்பம் சொல்லிய தொடங்கினாளே – சிந்தா:4 1146/4

TOP


தொடங்கினான் (1)

விளியா கொண்டு இங்கு இள வேனில் விருந்தா ஆடல் தொடங்கினான் – சிந்தா:13 2691/4

TOP


தொடங்கினானே (2)

பயிர் இலா நரம்பின் கீதம் பாடிய தொடங்கினானே – சிந்தா:9 2048/4
புரி வளை முரசம் ஆர்ப்ப போர் தொழில் தொடங்கினானே – சிந்தா:10 2296/4

TOP


தொடர் (8)

கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா – சிந்தா:1 101/4
வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள் – சிந்தா:1 102/1
தொடர் பிணி வெளில் முதல் முருக்கி தோன்றியது – சிந்தா:4 973/3
மாசு அறு கந்தின் மென் தோள் மணி தொடர் கொளுத்தி வாள் கண் – சிந்தா:7 1690/2
அச்சுறு கொழும் தொடர் யாப்பு அழித்து அடி இணை – சிந்தா:7 1836/2
குடர் தொடர் குருதி கோட்டு குஞ்சர நகரத்தார் கோன் – சிந்தா:10 2182/1
தொடர் வாங்கு கதநாய் போல் தோன்றின தொடி திண் தோள் – சிந்தா:10 2242/2
துடி குரல் குரல பேழ் வாய் தொடர் பிணி உறுத்த செந்நாய் – சிந்தா:13 2767/1

TOP


தொடர்கிற்றிலிர் (1)

தொழுவாய் விடையை தொடர்கிற்றிலிர் என்று – சிந்தா:6 1523/3

TOP


தொடர்ந்து (11)

தோள் வலி மிக்கான் தொடர்ந்து உரைக்கின்றான் – சிந்தா:3 517/4
கான் சேர் கமழ் கோதை கால் தொடர்ந்து கைவிடாது அரற்றுகின்ற – சிந்தா:3 637/3
தொடர்ந்து கைவிடா தோழிமாரொடும் – சிந்தா:4 990/2
வடிவு உடை மாலை கால் தொடர்ந்து வாய்ந்தது – சிந்தா:4 1011/2
சூழ்வினையாளர் ஆங்கண் ஒருவனை தொடர்ந்து பற்றி – சிந்தா:4 1163/2
களி செய் கோசிக நீர் விழ கடி மாலை மேல் தொடர்ந்து கீழ் – சிந்தா:7 1673/1
நிலத்து உகும் மாலை கால் தொடர்ந்து நீள் நகர் – சிந்தா:8 1945/3
கதிர் நல மங்கையர் கால் தொடர்ந்து ஓட – சிந்தா:10 2115/2
மந்தார மா மாலை மேல் தொடர்ந்து தழுவவாரா தாமம் மல்கி – சிந்தா:11 2370/1
அருவி போல் தொடர்ந்து அறாதன அரும் பிணி அழலுள் – சிந்தா:13 2752/2
தொல்லை தம் உடம்பு நீங்க தீவினை தொடர்ந்து நீங்கா – சிந்தா:13 2876/2

TOP


தொடர்ப்பாட்டின் (1)

உய்யுமேல் தொடர்ப்பாட்டின் இங்கு யாவையும் – சிந்தா:6 1426/3

TOP


தொடர்பின் (1)

கொல்லும் அரவின் மயங்கி சிறியார் கொண்ட தொடர்பின்
செல்ல செல்ல அஃகும் நெறி சேர் சிலம்பு சேர்ந்தான் – சிந்தா:6 1416/3,4

TOP


தொடர்பு (1)

திரு மலர் கோதை ஐம்பால் தேவியர் தொடர்பு கேட்ப – சிந்தா:5 1171/3

TOP


தொடர (1)

குறை அணி கொண்டவாறே கோதை கால் தொடர ஓடி – சிந்தா:12 2537/1

TOP


தொடாத (1)

பனி மலர் காடு போன்றார் படர் சிலை தொடாத வேந்தர் – சிந்தா:10 2199/3

TOP


தொடி (38)

கோல் தொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர் – சிந்தா:1 47/3
பைம் தொடி பாசிழை பரவை ஏந்து அல்குல் – சிந்தா:1 186/3
அற்றது ஓர் கோதையின் பொன்_தொடி சோர்ந்தாள் – சிந்தா:1 226/4
ஒண்_தொடி தகுவது அன்றால் ஒழிக நின் கவலை என்றான் – சிந்தா:1 271/4
பை விரி பசும்பொன் அல்குல் பைம்_தொடி விசையை என்பாள் – சிந்தா:1 385/2
பார் செல செல்ல சிந்தி பைம்_தொடி சொரிந்த நம்பன் – சிந்தா:2 469/3
பைம் தொடி பாவை ஒன்றும் பரிவு இலள் வைகினாளே – சிந்தா:3 585/4
பூம் தொடி அரிவை தன்னில் புலம் மிகுத்து உடைய நம்பிக்கு – சிந்தா:3 608/2
ஓரும் நடந்தன ஒண்_தொடி முன்னே – சிந்தா:3 631/4
கோல் தொடி மகளிர் செம்பொன் கோதையும் குழையும் மின்ன – சிந்தா:3 702/3
சேண் இகந்து உய்ய போ நின் செறி_தொடி ஒழிய என்றார் – சிந்தா:3 770/4
தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்-மின் – சிந்தா:4 932/4
கோல் தொடி பாவை-தன்னை கொண்டு உய போ-மின் என்றான் – சிந்தா:4 981/4
ஒண்_தொடி திருமுகத்து உருவ மாட்சியே – சிந்தா:4 1009/4
போல் ஆம் அல்குல் பொன் தொடி பூம் கண் குணமாலை – சிந்தா:4 1094/2
பைம் தொடி பாவை இன்னே பரிவு ஒழிந்து எழுக என்பார் – சிந்தா:5 1279/4
உடம்பு-இடை நஞ்சு நீங்கிற்று ஒண்_தொடி உருவம் ஆர்ந்து – சிந்தா:5 1290/3
பூம் தொடி மகளிர் போற்றி பொன் கலம் பரப்பினாரே – சிந்தா:5 1300/4
பயன் இழைத்த மென் பள்ளியுள் பைம் தொடி
மயன் இழைத்த அம் பாவையின் வைகினாள் – சிந்தா:5 1310/3,4
ஊன் அடைந்து இருந்த வேல் கண் ஒண் தொடி உருவ வீணை – சிந்தா:5 1355/2
பூம் தொடி அரிவை பொய்கை பூமகள் அனைய பொற்பின் – சிந்தா:5 1358/2
பைம் தொடி படா முலை குளிப்ப பாய்தலின் – சிந்தா:6 1493/2
தொடி தோள் நடப்ப தோள் தேம்ப துணை வெம் முலைகள் பசப்பு ஊர – சிந்தா:7 1659/3
கோல் தொடி புரிசையுள் கொற்றவன் நின்று ஐயன் – சிந்தா:7 1837/1
ஏற்ற கை தொடி வீழ்ந்து என ஏந்தலை – சிந்தா:8 1979/1
உளைவது பிறிதும் உண்டோ ஒண் தொடி மாதர்க்கு என்றான் – சிந்தா:9 2042/4
தொடி தோள் வளை நெகிழ தொய்யில் முலை மேல் – சிந்தா:9 2049/1
ஒண்_தொடி ஊடி நின்றாள் ஒளி மணி பூம் கொம்பு ஒப்பாள் – சிந்தா:9 2086/4
தோலா போர் மற மன்னர் தொடி தோள்கள் எடுத்து ஓச்சி – சிந்தா:10 2236/1
தொடர் வாங்கு கதநாய் போல் தோன்றின தொடி திண் தோள் – சிந்தா:10 2242/2
தொடி தோள் மகளிர் ஒருசாரார் துயர கடலுள் அவர் நீந்த – சிந்தா:11 2356/1
பொன்_தொடி தத்தையீரே பொத்தும் நும் வாயை என்றே – சிந்தா:12 2511/3
பைம் தொடி மகளிர் பாங்கர் பரிந்து நூல் சொரிந்த காசு – சிந்தா:12 2528/1
ஒண்_தொடி இவன் தன் உருவு கண்டு வாழ்வார் – சிந்தா:12 2550/3
பரப்பினாள் பாவை தத்தை பைம் தொடி மகளிர் எல்லாம் – சிந்தா:13 2657/2
பைம் தொடி மகளிர் ஆடும் பந்து என எழுந்து பொங்கி – சிந்தா:13 2765/2
தொடி கவின் அறாத மென் தோள் தேவியர் சூழ வாமன் – சிந்தா:13 2808/2
தொடி கையால் தொழுது வாழ்த்தி தூ மணி நிலத்துள் ஏற்றி – சிந்தா:13 2827/1

TOP


தொடிக்கு (2)

உற நடந்து அறிதல் இல்லான் ஒண்_தொடிக்கு உருகி பின்னும் – சிந்தா:3 688/3
பொன்_தொடிக்கு இறத்தல் இல்லை புலம்பு கொண்டு அழேற்க என்றான் – சிந்தா:5 1285/3

TOP


தொடிகள் (1)

தொடிகள் தவழ் வீங்கு திரள் தோள் இறுக யாத்து – சிந்தா:7 1798/1

TOP


தொடியர் (1)

அல்குல் விலை பகரும் ஆய் தொடியர் ஆதியார் – சிந்தா:13 2789/3

TOP


தொடின் (1)

சூழி யானை அன்னாய் தொடின் நஞ்சு அறும் – சிந்தா:5 1293/3

TOP


தொடினே (1)

சாவர் தொடினே கடிது கண்ட வகை வண்ணம் – சிந்தா:9 2016/2

TOP


தொடு (11)

தொல்லை நம் பிறவி எண்ணில் தொடு கடல் மணலும் ஆற்றா – சிந்தா:1 270/1
தொல் அற கிழமை பூண்ட தொடு கழல் காலினாற்கு – சிந்தா:1 382/2
வம்புற கனி மா தொடு வார் சுளை – சிந்தா:4 869/3
தொடு கழல் நரல் வீக்கி சொல்லு-மின் வந்தது என்றான் – சிந்தா:4 1086/4
தொடு மரை தோலன் வில்லன் மரவுரி உடையன் தோன்ற – சிந்தா:5 1231/3
சொரிந்தவை தொகுத்து நோக்கின் தொடு கடல் வெள்ளம் ஆற்றா – சிந்தா:5 1391/2
துன்னினன் தொடு கழல் குருசில் என்பவே – சிந்தா:6 1457/4
தொடு கழல் குருசில் நோக்கி தூ துகில் வீசினானே – சிந்தா:7 1863/4
தொய் அற பெய்த தூ நீர் தொடு கடல் பவள செப்பும் – சிந்தா:12 2474/4
துள்ளுபு செலீஇய தோற்றம் தொடு கழல் காமன் காமத்து – சிந்தா:12 2529/3
தொடு மணி குவளை பட்டம் துணையொடு நினைப்பதே போல் – சிந்தா:13 2878/2

TOP


தொடுத்த (9)

தூமம் கமழும் கோதை தொடுத்த துயரின் முலையா – சிந்தா:4 921/1
நெருங்குபு மள்ளர் தொக்கு நெடு வரை தொடுத்த வெள்ளம் – சிந்தா:4 972/3
போது உலாம் கோதை மாதர் புனைந்து அலர் தொடுத்த மாலை – சிந்தா:7 1666/2
வெம்மை மிக்கது வீரன் தொடுத்த விளங்கு மாலை – சிந்தா:7 1674/3
சாந்தின் மேல் தொடுத்த தீம் தேன் தண் மதி கோடு போழ – சிந்தா:7 1820/1
கரும்பின் மேல் தொடுத்த தேன் கலி கொள் தாமரை – சிந்தா:8 1936/1
தொடுத்த ஆங்கு அ அம்பு தொடை வாங்கி விடாத முன்னம் – சிந்தா:10 2320/1
தொடுத்த கோல் மார்பில் தங்க தூ மலர் கொம்பு அனாளை – சிந்தா:12 2597/2
சூழ் குலை பெண்ணை நெற்றி தொடுத்த தீம் கனிகள் ஊழ்த்து – சிந்தா:13 2763/2

TOP


தொடுத்தலோடும் (1)

கானவர் இரிய வில்-வாய் கடும் கணை தொடுத்தலோடும்
ஆன் நிரை பெயர்ந்த ஆயர் ஆர்த்தனர் அணி செய் திண் தோள் – சிந்தா:2 452/1,2

TOP


தொடுத்தவாறும் (1)

வண் சிலை கொண்டவாறும் வார் கணை தொடுத்தவாறும்
கண் கணை வைத்தவாறும் கல் செய் தோள் இருந்தவாறும் – சிந்தா:7 1642/1,2

TOP


தொடுத்தன (2)

தொடுத்தன மாலையும் குழையும் சாந்தமும் – சிந்தா:3 831/2
பொருள் தக தொடுத்தன புனைந்த பூஞ்சிகை – சிந்தா:12 2450/4

TOP


தொடுத்தான் (3)

கொண்டான் பகழி தொடுத்தான் சிலை கால் குனிந்தது – சிந்தா:3 808/1
என்ன அமரரும் மருள தொடுத்தான் இன மாலையே – சிந்தா:7 1652/4
கொல் யானை உந்தி குடை மேலும் ஓர் கோல் தொடுத்தான் – சிந்தா:10 2319/4

TOP


தொடுத்து (10)

மால் வரை தொடுத்து வீழ்ந்த மணி நிற மாரி-தன்னை – சிந்தா:2 451/1
தொடுத்து அலர் கோதை வீணா பதிக்கு இது சொல்லினானே – சிந்தா:3 555/4
வில் திறல் என்று வில் வாய் வெம் கணை தொடுத்து வாங்கி – சிந்தா:3 756/2
அன்பு நூலாக இன் சொல் அலர் தொடுத்து அமைந்த காதல் – சிந்தா:7 1596/1
செம்பொன் கடம்பன் செ வேலும் காமன் சிலையில் தொடுத்து அலர்ந்த – சிந்தா:7 1664/1
கோல் தொடுத்து அநங்கன் எய்ய குழைந்து தார் திவண்டது அன்றே – சிந்தா:9 2062/4
தொடுத்து அலர் மாலை சூட்டி கிம்புரி முத்தம் மென் தோள் – சிந்தா:9 2091/2
வார் மது துளிக்கும் மாலை மணி முடி தொடுத்து நால – சிந்தா:10 2183/1
மண மாலை மடந்தையர் தம் மெல் விரலால் தொடுத்து அணிந்த – சிந்தா:10 2235/1
ஏதம் இல் எயிறு அணி பவள வாய் தொடுத்து
ஆதியில் அறவுரை அருவி வீழ்ந்து என – சிந்தா:13 2848/2,3

TOP


தொடுப்பவே (1)

அனிச்சத்து அம் போது போல தொடுப்பவே குழைந்து மாழ்கி – சிந்தா:13 2939/1

TOP


தொடுப்பாயும் (1)

துணையில் தோகை என் நங்கைக்கு தொங்கல் தொடுப்பாயும் நீ – சிந்தா:7 1668/3

TOP


தொடுப்பார் (1)

அலங்கல் தான் தொடுப்பார் அலர் பூ கொய்வார் – சிந்தா:5 1319/1

TOP


தொடும் (1)

மகிழ்ந்து வீழ் மணி குழல் மாலை கால் தொடும்
முகிழ்ந்து வீங்கு இள முலை முத்தம் தைவரும் – சிந்தா:4 1004/2,3

TOP


தொடேல் (1)

தோடு ஏந்து பூம்_கோதை வேண்டேம் கூந்தல் தொடேல் எம் இல் – சிந்தா:5 1229/1

TOP


தொடை (12)

பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து – சிந்தா:1 31/2
தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின் உள் அரங்கி மூழ்க காமன் – சிந்தா:1 293/2
தீம் தொடை மகர வீணை தெளி விளி எடுப்பி தேற்றி – சிந்தா:3 608/1
தீம் தொடை நரம்பின் தீமை சிறிது அலா பொழுதும் ஓதி – சிந்தா:3 721/1
பூம் தொடை அரிவை காண புரி நெகிழ்த்து உரோமம் காட்ட – சிந்தா:3 721/2
கடும் தொடை கவர் கணை காமன் காமுற – சிந்தா:5 1218/1
தேவர் பண்ணிய தீம் தொடை இன் சுவை – சிந்தா:5 1328/1
தொடை யாழ் மழலை மொழி சோர்ந்தனளே – சிந்தா:6 1526/4
தொடை மாலை மென் முலையார் தோள் தோய்ந்த மைந்தர் – சிந்தா:7 1574/2
தொடுத்த ஆங்கு அ அம்பு தொடை வாங்கி விடாத முன்னம் – சிந்தா:10 2320/1
தொடை மலர் வெறுக்கை ஏந்தி துன்னினன் வேனில் வேந்தன் – சிந்தா:13 2708/3
தொடை மலர் கண்ணி சேர்த்தி சுரும்பு உண மலர்ந்த மாலை – சிந்தா:13 2719/2

TOP


தொடைக்கு (1)

அடி தொடைக்கு அமைந்தன அரவ தேர் தொகை – சிந்தா:10 2213/3

TOP


தொடையல் (4)

தொடையல் அம் கோதை என்று சொல்லுபு தொழுது நிற்பார் – சிந்தா:2 464/4
தொடையல் சூழ் வேலினானும் தோழரும் காண சென்றார் – சிந்தா:3 672/4
நீள் கழை கரும்பின் நெற்றி நெய்ம் முதிர் தொடையல் கீறி – சிந்தா:5 1198/2
அம் கலம் தொடையல் மாலை கிழிந்து அழகு அழிய வைகி – சிந்தா:13 2805/2

TOP


தொண்டக (1)

தொண்டக பறை துடியோடு ஆர்த்து எழ – சிந்தா:2 418/2

TOP


தொண்டிக்கள் (1)

தோழ யாம் பெரிதும் உண்டும் தொண்டிக்கள் இதனை என்றான் – சிந்தா:5 1233/4

TOP


தொண்டை (13)

துப்பு உறழ் தொண்டை செ வாய் தோழியர் காம தூதின் – சிந்தா:1 107/1
தொழுதற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய் தூ முறுவல் – சிந்தா:1 165/3
தூசு உலாய் கிடந்த அல்குல் துப்பு உறழ் தொண்டை செ வாய் – சிந்தா:3 550/1
தோளினால் மிடைந்து புல்லும் தொண்டை வாய் அமிர்தம் வேட்டோர் – சிந்தா:3 749/1
தோளால் தழுவி துவர் தொண்டை அம் செ வாய் – சிந்தா:4 1074/1
தொண்டை வாய் இவள் தொய்யில் வன முலை – சிந்தா:6 1513/1
இரங்கு மேகலை அல்குல் இன் கனி தொண்டை அம் துவர் வாய் – சிந்தா:7 1557/1
தோளினால் மிடைந்து புல்லி தொண்டை வாய் அமுதம் மாந்தி – சிந்தா:7 1694/2
கண் மனம் கவற்றிய காமர் தொண்டை வாய் – சிந்தா:7 1702/2
தொண்டை அம் கனியும் முத்தும் தொழுதக அணிந்து தூங்கும் – சிந்தா:9 2076/2
இலை குலாம் பைம் பூண் இள முலை தூதின் இன் கனி தொண்டை அம் துவர் வாய் – சிந்தா:10 2107/2
துடி அடு நுண் இடை தொண்டை அம் செ வாய் – சிந்தா:10 2123/3
தோள் நீர் கடலுள் பவள வாய் தொண்டை கனிகள் தொழுதனவே – சிந்தா:13 2697/4

TOP


தொத்து (11)

பூம் தொத்து அலர்ந்த பசும் பொன் கொடி அன்ன பொற்பின் – சிந்தா:0 8/2
தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண் – சிந்தா:1 223/1
இலங்கு ஒளி மணி தொத்து ஈன்ற ஏந்து பொன் கொடியோடு ஒப்பாள் – சிந்தா:10 2132/4
சுட்டுதற்கு அரிய முத்தின் தொத்து வாய் நாற்ற முந்நீர் – சிந்தா:12 2523/3
தொத்து நின்று எரிந்து கண்டார் கண் சுட சுடர்ந்து நின்றார் – சிந்தா:12 2539/3
துறவின் பால் படர்தல் அஞ்சி தொத்து ஒளி முத்து தாமம் – சிந்தா:13 2653/1
தொத்து உடை மலர் தொங்கல் கண் பொர – சிந்தா:13 2683/1
முலை முகம் சுமந்த முத்த தொத்து ஒளிர் மாலையாரும் – சிந்தா:13 2733/1
தொத்து ஒளிர் தாமமும் சொரி பொன் தாமமும் – சிந்தா:13 3010/2
சேடு ஆர் பொன் திரு மணி வைர தொத்து அணிந்து உலகு ஓம்பும் – சிந்தா:13 3018/1
குளித்து எழு வயிர முத்த தொத்து எரி கொண்டு மின்ன – சிந்தா:13 3086/1

TOP


தொத்தும் (1)

வண்டு அலம்பு மாலையும் மணி தொத்தும் நிலம் திவள – சிந்தா:13 3022/2

TOP


தொய் (1)

தொய் அற பெய்த தூ நீர் தொடு கடல் பவள செப்பும் – சிந்தா:12 2474/4

TOP


தொய்யில் (3)

தொண்டை வாய் இவள் தொய்யில் வன முலை – சிந்தா:6 1513/1
தொய்யில் முலையவர்கள் கடை தோன்றல் நனி புக்கான் – சிந்தா:9 2013/4
தொடி தோள் வளை நெகிழ தொய்யில் முலை மேல் – சிந்தா:9 2049/1

TOP


தொய்யின் (1)

தோள் பொலி மணி வளை தொய்யின் மாதரார் – சிந்தா:8 1944/3

TOP


தொல் (24)

தொல் மாண்பு அமைந்த புனை நல்லறம் துன்னி நின்ற – சிந்தா:0 3/2
தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது புலம்பு எய்தி மைந்தர் மாழ்க – சிந்தா:1 290/1
தொல் அற கிழமை பூண்ட தொடு கழல் காலினாற்கு – சிந்தா:1 382/2
தூங்கு சிறை வாவல் உறை தொல் மரங்கள் என்ன – சிந்தா:3 498/1
தோடு அலர் கோதை தொல் சீர் தார் அணி சுரும்பு உண்கண்ணி – சிந்தா:3 537/3
துகள் மனத்து இன்றி நோற்ற தொல் வினை பயத்தின் அன்றே – சிந்தா:4 1052/1
திருவிற்கு அமைந்தான் திசை பத்தும் அறிந்த தொல் சீர் – சிந்தா:4 1062/1
தோள் ஆர் முத்தும் தொல் முலை கோட்டு துயல் முத்தும் – சிந்தா:4 1093/1
தூ நீர் மலர் மார்பன் தொல் நலம் தான் பருகி துளும்பும் தேறல் – சிந்தா:5 1354/3
மல்லல் தொல் வளத்து மத்திம நல் நாட்டு வண் தாமரை – சிந்தா:7 1591/1
தோளும் மென் முலை பாரமும் தொல் நலம் – சிந்தா:7 1628/2
துண்ணென களத்தின் நீங்கி தொல் நகர் புறத்து தொக்கே – சிந்தா:7 1733/3
துறக்கம் இதுவே எனும் தொல் நகர் மன்னன் மங்கை – சிந்தா:7 1871/1
தொல் நலம் பருகி தோன்றல் துறக்கம் புக்கவர்கள் ஒத்தான் – சிந்தா:9 2081/4
தோய் மழை உலக வெள்ளம் தொல் நகர் தொக்கதே போல் – சிந்தா:10 2178/3
துளங்கு எயிற்று உழுவை தொல் சீர் தோகையோடு இருந்தது ஒத்தான் – சிந்தா:12 2469/4
தொல் மயிர் உகுத்த நல் மயிலின் தோன்றினார் – சிந்தா:13 2638/4
நல்ல தொல் குலம் பெறுதலும் நரபதி அரிதே – சிந்தா:13 2751/4
துதை மணி கலாபம் மின்ன தொல் மலர் காமன் அம்பு – சிந்தா:13 2803/3
தூக்கி இ இரண்டும் நோக்கி தொல் வினை என்று தேறி – சிந்தா:13 2825/3
தொல் நலம் பருகி காம தொங்கலால் பிணிக்கப்பட்டார் – சிந்தா:13 2840/4
தோய் பிழி அலங்கலார்-தம் தொல் நலம் தொலைந்து வாடி – சிந்தா:13 2923/3
தூமம் சால் கோதையீரே தொல் வினை நீத்தம் நீந்தி – சிந்தா:13 2988/1
தோளா மணி குவித்தால் போன்று இலங்கு தொல் குலத்து – சிந்தா:13 3037/1

TOP


தொல்லை (7)

தொல்லை நம் பிறவி எண்ணில் தொடு கடல் மணலும் ஆற்றா – சிந்தா:1 270/1
தொல்லை நல்வினை முற்பட தோன்றிய – சிந்தா:1 343/3
தொல்லை நிறம் கருகி தும்பி பாய்ந்து துகைத்தனவே – சிந்தா:5 1228/4
தொல்லை நால் வகை தோழரும் தூ மணி நெடும் தேர் – சிந்தா:11 2360/1
தோழர்கட்கு அருளி தொல்லை உழந்தவர் தம்மை தோன்ற – சிந்தா:12 2569/3
தொல்லை எம் பிறவியும் தொகுத்த பாவமும் – சிந்தா:13 2849/2
தொல்லை தம் உடம்பு நீங்க தீவினை தொடர்ந்து நீங்கா – சிந்தா:13 2876/2

TOP


தொலை (1)

கலாய் தொலை பருகுவார் போல் கன்னியர் துவன்றினாரே – சிந்தா:8 1950/4

TOP


தொலைச்சுநர் (1)

வரகு வாளில் தொலைச்சுநர் பாடலின் – சிந்தா:5 1196/2

TOP


தொலைத்த (3)

தொழுது அடி பணிந்து சொல்லும் துன்னலர் தொலைத்த வேலோய் – சிந்தா:1 203/2
புள் அணி கொடியினானின் போர் பல தொலைத்த ஆற்றல் – சிந்தா:3 614/3
சோர் புயல் தொலைத்த வண் கை சுபத்திரன் மனைவி பெற்ற – சிந்தா:6 1450/2

TOP


தொலைத்தோய் (1)

சுறவு கொடி கடவுளொடு காலன் தொலைத்தோய் எம் – சிந்தா:13 3091/1

TOP


தொலைந்ததே (1)

பெரும் பாரமாய் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல் நங்கை நலம் தொலைந்ததே – சிந்தா:1 231/4

TOP


தொலைந்து (4)

தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண் – சிந்தா:1 223/1
நூல் பொர புகுந்த நுண் நூல் வணிகரும் தொலைந்து மாதோ – சிந்தா:3 663/3
செப்பட முன்கை யாப்ப திருமகன் தொலைந்து நின்றான் – சிந்தா:13 2665/3
தோய் பிழி அலங்கலார்-தம் தொல் நலம் தொலைந்து வாடி – சிந்தா:13 2923/3

TOP


தொலைப்பரும் (1)

தொலைப்பரும் சுற்றத்தாரோ பகைவரோ அடிகள் என்ன – சிந்தா:13 2884/3

TOP


தொழ (15)

கோதை அம் கொம்பு அனையார் தம் குழாம் தொழ
தாது உகு தாமம் அணிந்து அகில் விம்மிய – சிந்தா:1 229/2,3
மாரி மொக்குளின் மாய்ந்து விண் தொழ
சோர்வு இல் கொள்கையான் தோற்றம் நீங்கினான் – சிந்தா:2 409/3,4
கயல் மணி கணின் நல்லவர் கை தொழ
பயன் இழைத்த மென் பள்ளியுள் பைம் தொடி – சிந்தா:5 1310/2,3
தொழ நிமிர்ந்து அமரராய் துறக்கம் ஆள்வரே – சிந்தா:6 1555/4
வண்டரும் ஓவரும் பாட மாநகர் தொழ
கொண்ட தன் தம்பியும் தானும் கோயில் புக – சிந்தா:7 1844/2,3
மான் நக்க நோக்கின் மடவார் தொழ மைந்தர் ஏத்த – சிந்தா:7 1866/3
விரி மணி விளங்கு மான் தேர் விண் தொழ ஏறினானே – சிந்தா:10 2295/4
கண் ஆடு யானை அவர் கை தொழ சென்று புக்கான் – சிந்தா:11 2327/4
சேய் பொன் கமல மகள் கை தொழ சென்று புக்கான் – சிந்தா:11 2350/4
பண் கொண்ட சொல்லார் தொழ பாம்பு அணை அண்ணல் போல – சிந்தா:11 2353/3
கை நிகர் இல் வேந்தர் தொழ போந்ததுவும் கண்டால் – சிந்தா:12 2555/3
பட்டம் எண்மரும் பார் தொழ எய்தினார் – சிந்தா:12 2575/4
உடைய தம் குணங்களோடு ஓங்கி விண் தொழ
அடைதலான் மேல் உலகு அறியப்பட்டதே – சிந்தா:13 2847/3,4
காதலின் கணம் தொழ காவல் மன்னனே – சிந்தா:13 3059/4
தேன் உடை மலர்கள் சிந்தி திசை தொழ சென்ற பின் நாள் – சிந்தா:13 3113/3

TOP


தொழாத (1)

தன் கழல் தொழாத மன்னர் தாம் சுமந்து ஏத்தி நின்ற – சிந்தா:13 2914/1

TOP


தொழிக்கப்பட்டும் (1)

தேவரே தாமும் ஆகி தேவரால் தொழிக்கப்பட்டும்
ஏவல் செய்து இறைஞ்சி கேட்டும் அணிகம் மா பணிகள் செய்தும் – சிந்தா:13 2811/1,2

TOP


தொழித்த (1)

தொழித்த நறும் சாந்தும் சுண்ணமும் பல் மணியும் கலனும் சிந்தி – சிந்தா:13 2969/2

TOP


தொழித்து (3)

தொழித்து வண்டு இமிரும் கோதை துணை முலை மூள்க பூம் பட்டு – சிந்தா:8 1986/1
சிங்கம் போல் தொழித்து ஆர்த்து அவன் சிறுவர் தேர் மிசை தோன்றினார் – சிந்தா:10 2306/4
தொழித்து மந்தி துணங்கை அயர்ந்து தேன் – சிந்தா:13 3069/3

TOP


தொழிந்து (1)

தொழிந்து மட்டு ஒழுக துதை தார் பொர – சிந்தா:13 2673/3

TOP


தொழில் (30)

கேடக வாள் தொழில் இடமும் கேடு இலா – சிந்தா:1 84/3
கோடு வெம் சிலை தொழில் இடமும் கூடின்றே – சிந்தா:1 84/4
புடை நகர் தொழில் இடம் கடந்து புக்க பின் – சிந்தா:1 85/1
பூத்தலை வாரண போர் தொழில் இளையவர் – சிந்தா:1 120/1
கூற்றுவன் கொடியன் ஆகி கொலை தொழில் கருவி சூழ்ந்து – சிந்தா:1 376/1
மேய வெம் தொழில் வேடர் ஆர்த்து உடன் – சிந்தா:2 421/2
பழுது இன்றி மூழ்கும் பகழி தொழில் வல்ல காளை – சிந்தா:2 445/2
கண்ட தொழில் கணிச்சிகளின் கயம்பட நன்கு இடித்து ஆங்கு – சிந்தா:3 592/2
சிலை தொழில் சிறு நுதல் தெய்வ பாவை போல் – சிந்தா:3 657/1
கலை தொழில் பட எழீஇ பாடினாள் கனிந்து – சிந்தா:3 657/2
வெடிபடு போர் தொழில் காண விஞ்சையர் – சிந்தா:3 776/3
அடா களியவர் தொழில் காண ஏகினான் – சிந்தா:4 916/4
மிடை மணி மேகலை நோற்ற வெம் தொழில்
புடை திரள் வன முலை பூணும் நோற்றன – சிந்தா:4 1005/2,3
கோள் இழுக்குற்ற பின்றை கோ தொழில் நடாத்துகின்றான் – சிந்தா:4 1088/2
வேந்தொடு மாறுகோடல் விளிகுற்றார் தொழில் அது ஆகும் – சிந்தா:4 1089/1
சிலை தொழில் தட கை மன்னற்கு இற்றென செப்புகின்றான் – சிந்தா:4 1161/4
தெரிவு இல் தீ தொழில் சிந்தையின் மேயினார் – சிந்தா:6 1423/4
செ வழிபாடர் ஆகி சிலை தொழில் சிறுவர் கற்ப – சிந்தா:7 1758/3
தங்கிய பயிர் தொழில் தட கையால் செய்ததே – சிந்தா:7 1834/4
கொல் சின வெம் தொழில் கோடு ஏந்து இள முலை – சிந்தா:10 2113/2
பால் நிலா பூணார் படை தொழில் கலிமா பண் உறுத்து ஏறினார் அவரே – சிந்தா:10 2158/4
வெம் கண் தொழில் கூற்றும் அரண் சேர விரிந்து அன்றே – சிந்தா:10 2166/4
புரி வளை முரசம் ஆர்ப்ப போர் தொழில் தொடங்கினானே – சிந்தா:10 2296/4
பட்ட இ பகைமை நீங்கி படை தொழில் ஒழிக என்னா – சிந்தா:10 2323/2
கச்சு விளிம்பு அணிந்த தொழில் கம்பல விதானம் – சிந்தா:12 2484/3
ஓரும் ஒண் திறல் கத்தரிகை தொழில்
நீரின் செய்து அடி ஏத்துபு நீங்கினான் – சிந்தா:12 2500/2,3
கொலை கடிந்து இவறல் இன்றி கோ தொழில் நடாத்தும் அன்றே – சிந்தா:12 2583/4
புணை புறம் தழுவி தூ நீர் போர் தொழில் தொடங்கினாரே – சிந்தா:13 2655/4
எங்கும் இல்லன எலி மயிர் தொழில்
பொங்கு பூம் புகை போர்வை மேயினார் – சிந்தா:13 2680/3,4
எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி – சிந்தா:13 2751/3

TOP


தொழில்கள் (1)

எண் இலா தொழில்கள் தோற்றி இந்திரர் மருள ஆடி – சிந்தா:13 3085/3

TOP


தொழில்பட (1)

தொழில்பட வைத்தனர் துளும்பும் மேகலை – சிந்தா:12 2472/3

TOP


தொழில (1)

நல் தொழில வாசியொடு நன் கலைகள் நீந்தி – சிந்தா:7 1795/3

TOP


தொழிலர் (1)

ஞாலம் அறி ஆண் தொழிலர் நான்கு இலக்கம் உள்ளார் – சிந்தா:10 2165/3

TOP


தொழிலன் (1)

ஐயன் அது அருளினால் யான் அந்தணர் தொழிலன் ஆனேன் – சிந்தா:1 400/4

TOP


தொழிலார்க்கும் (1)

அறை தொழிலார்க்கும் செல்லா அரு மிளை புகு-மின் என்றான் – சிந்தா:4 1142/4

TOP


தொழிலின் (2)

தாம் இனம் அமைந்து தம் தொழிலின் மிக்கவே – சிந்தா:1 43/4
பண்டை செய் தொழிலின் பாவம் பறைக்குற்றால் பறைக்கலாமே – சிந்தா:6 1434/4

TOP


தொழிலும் (9)

ஏ முதல் ஆய எல்லா படை கல தொழிலும் முற்றி – சிந்தா:1 370/2
சொல்லினன் அவற்றது தொழிலும் தோன்றவே – சிந்தா:5 1217/4
வில் தொழிலும் வாள் தொழிலும் வீணை பொரு தொழிலும் – சிந்தா:7 1795/1
வில் தொழிலும் வாள் தொழிலும் வீணை பொரு தொழிலும் – சிந்தா:7 1795/1
வில் தொழிலும் வாள் தொழிலும் வீணை பொரு தொழிலும்
மல் தொழிலும் தேர் தொழிலும் வாரணத்தின் தொழிலும் – சிந்தா:7 1795/1,2
மல் தொழிலும் தேர் தொழிலும் வாரணத்தின் தொழிலும் – சிந்தா:7 1795/2
மல் தொழிலும் தேர் தொழிலும் வாரணத்தின் தொழிலும் – சிந்தா:7 1795/2
மல் தொழிலும் தேர் தொழிலும் வாரணத்தின் தொழிலும்
நல் தொழில வாசியொடு நன் கலைகள் நீந்தி – சிந்தா:7 1795/2,3
துண்ணென் சிலை தொழிலும் காட்டி முன் இன்புற்றீர் – சிந்தா:13 2960/3

TOP


தொழிலே (1)

அரும் தீ தொழிலே புரிந்தான் மறை ஆய எல்லாம் – சிந்தா:7 1872/1

TOP


தொழு (4)

துஞ்சுவேன் துயரம் தீர தொழு தகு தெய்வம் ஆவீர் – சிந்தா:6 1531/2
தோள் அயா தீர்ந்தது என்றாள் தொழு தகு தெய்வம் அன்னாள் – சிந்தா:8 1912/4
தொழு தகு சிவிகைகள் சூழ போய பின் – சிந்தா:13 2630/2
தொழு வித்தி அறத்தை வைத்து துளங்கு இமில் ஏறு சேர்ந்த – சிந்தா:13 3114/2

TOP


தொழு-மின் (1)

பூட்கையை முனியின் வாமன் பொன் அடி தொழு-மின் என்றான் – சிந்தா:13 3106/4

TOP


தொழுத்தையேன் (1)

தூங்கி தான் துளங்க மந்தி தொழுத்தையேன் செய்தது என்று – சிந்தா:13 2723/3

TOP


தொழுத (2)

தொழுத தம் கையினுள்ளும் துறு முடி அகத்தும் சோர – சிந்தா:8 1891/1
உருவம் ஒவ்வாது ஒசியும் நுசுப்பு ஒல்கி கோமான் அடி தொழுத பின் – சிந்தா:12 2586/2

TOP


தொழுதக (6)

தொழுதக தோன்ற செய்தார் தூ மணி பாவை அன்னார் – சிந்தா:5 1345/3
தொண்டை அம் கனியும் முத்தும் தொழுதக அணிந்து தூங்கும் – சிந்தா:9 2076/2
சோலை வேய் மருள் தோள் முத்தும் தொழுதக அணிந்தார் – சிந்தா:12 2383/4
தூ மணி முலைகள் தம்மை தொழுதக கமழும் சாந்தின் – சிந்தா:12 2442/2
துணித்து அடி விளிம்பு சேர்த்தி தொழுதக செய்த வண் கை – சிந்தா:12 2478/2
துனிவு இலர் களிற்றோடு ஆடி தொழுதக கழிப்பர் வேந்தே – சிந்தா:13 2807/4

TOP


தொழுதகு (1)

தொழுதகு பெருமாட்டி தூ மணி பாவை அன்னாள் – சிந்தா:13 2651/2

TOP


தொழுதல் (1)

செல்வனை இன்று நாடி சேவடி தொழுதல் ஒன்றோ – சிந்தா:7 1745/1

TOP


தொழுதற்கு (1)

தொழுதற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய் தூ முறுவல் – சிந்தா:1 165/3

TOP


தொழுதனம் (1)

இன்றொடு தொழுதனம் நும்மை யாம் என – சிந்தா:13 3034/3

TOP


தொழுதனர் (2)

வேல் ஐயம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி – சிந்தா:4 897/2
சுண்ணமும் சாந்தும் வீழ தொழுதனர் இரந்து நிற்பார் – சிந்தா:13 2659/2

TOP


தொழுதனவே (1)

தோள் நீர் கடலுள் பவள வாய் தொண்டை கனிகள் தொழுதனவே – சிந்தா:13 2697/4

TOP


தொழுதனன் (1)

துன்னி ஓர் ஓலை நீட்டி தொழுதனன் பெயர்ந்து நிற்ப – சிந்தா:3 842/3

TOP


தொழுதார் (9)

கையினால் தொழுதார் கமழ் கோதையார் – சிந்தா:4 886/4
இ திருவின் உருவம் தொழுதார் தமது – சிந்தா:7 1766/3
எழு முற்றும் தோளார் தொழுதார் இன்னர் என்று நோக்க – சிந்தா:7 1870/3
கையின் தொழுதார் கழிய மூப்பின் செவி கேளார் – சிந்தா:9 2013/1
சொரிந்தார் மலர் அர மங்கையர் தொழுதார் விசும்பு அடைந்தான் – சிந்தா:10 2265/4
காய்ந்து அருளல் கண்டாய் என தொழுதார் காரிகையார் – சிந்தா:13 2990/4
துறவு நெறி கடவுள் அடி தூமமொடு தொழுதார் – சிந்தா:13 3091/4
துதி அறையா தொழுதார் மலர் சிந்தா – சிந்தா:13 3097/3
துதியின் தொழுதார் துளங்கு உள்ளம் அது நீத்தார் – சிந்தா:13 3103/4

TOP


தொழுதாள் (2)

கையினால் தொழுதாள் கயல் கண்ணினாள் – சிந்தா:5 1366/4
தேம் குழலாள் தொழுதாள் திசை செல்க என – சிந்தா:7 1768/3

TOP


தொழுதாளை (1)

தோடு ஆர் புனை கோதை சுநந்தை சேர்ந்து தொழுதாளை
பீடு ஆர் பெரும் சிறுவர் பயந்தீர் வம்-மின் என புல்லி – சிந்தா:13 2605/1,2

TOP


தொழுதான் (1)

செய் பூம் கழலை தொழுதான் சென்னி சேர்த்தினானே – சிந்தா:10 2135/4

TOP


தொழுதானே (1)

இறைஞ்சி முடி துளக்கி ஏத்தி கையால் தொழுதானே – சிந்தா:12 2560/4

TOP


தொழுதி (7)

சூழ் குடர் பிணங்கள் மல்க விளைத்த பின் தொழுதி பல் பேய்க்கு – சிந்தா:3 757/2
தொழுதி சிறகில் துயர் ஆற்றுவன – சிந்தா:5 1187/4
சூழ் இருள் தொழுதி மூழ்க தீ கதிர் சொரிந்து நல்லார் – சிந்தா:6 1541/3
தொழுதி தன்னை யான் சுமக்கலேன் எனா – சிந்தா:12 2405/2
சோலை மஞ்ஞை தொழுதி போல் தோகை செம்பொன் நிலம் திவள – சிந்தா:13 2698/2
தொழுதி பன் மீன் குழாம் சூழ துளும்பாது இருந்த திங்கள் போல் – சிந்தா:13 3020/1
தொழுதி குன்றம் துளும்ப சென்று எய்தினான் – சிந்தா:13 3063/3

TOP


தொழுதிட்டானே (1)

அல்லலுற்று அரத்தம் ஆர்ந்த சீறடி தொழுதிட்டானே – சிந்தா:9 2084/4

TOP


தொழுதியோடு (1)

தூசு போல் சிறகர் அன்னம் தொழுதியோடு இரிய சேர்ந்தார் – சிந்தா:13 2712/4

TOP


தொழுது (61)

வீறொடு விளைக என தொழுது வித்துவார் – சிந்தா:1 45/2
தொழுது அடி பணிந்து சொல்லும் துன்னலர் தொலைத்த வேலோய் – சிந்தா:1 203/2
தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது புலம்பு எய்தி மைந்தர் மாழ்க – சிந்தா:1 290/1
துறவறம் புணர்க என்றே தோன்றல் தாள் தொழுது நின்றான் – சிந்தா:1 406/3
சண்ட மன்னனை தாள் தொழுது ஆயிடை – சிந்தா:2 430/2
அரும் பெறல் அவளும் ஆகென்று ஆடவர் தொழுது விட்டார் – சிந்தா:2 441/4
தொடையல் அம் கோதை என்று சொல்லுபு தொழுது நிற்பார் – சிந்தா:2 464/4
ஏர் செல செல்ல ஏத்தி தொழுது தோள் தூக்க இப்பால் – சிந்தா:2 469/2
ஆம்பல் நாறு அமுத செ வாய் அரசனை தொழுது நின்றாள் – சிந்தா:3 561/4
விண்டு அலர் கோதை விம்மும் விரை குழல் தொழுது நீவி – சிந்தா:3 618/3
ஆகத்து பூட்டி மைந்தன் அடி தொழுது இறைஞ்சி நின்றாள் – சிந்தா:3 738/3
எய்திய சேடம் கூவித்து இறைஞ்சுபு தொழுது வாழ்த்தி – சிந்தா:3 821/2
துண்ணென சிலையவர் தொழுது காண்பவே – சிந்தா:5 1206/4
சுற்றிய தோழிமாரை விடுத்தனன் தொழுது நின்றான் – சிந்தா:5 1222/3
சென்று அடி தொழுது செல்கு என் தேம் பெய் நீள் குன்றம் என்று – சிந்தா:5 1237/2
கான் உகுக்குகின்ற பைம் தார் காவலன் தொழுது சொன்னான் – சிந்தா:5 1266/4
அடிகளுக்கு இறைஞ்சி ஐயன் அடிகளை தொழுது நங்கை – சிந்தா:5 1272/1
தெய்வதம் பரவி எல்லா திசை-தொறும் தொழுது நிற்பார் – சிந்தா:5 1278/2
தொழுது கோதையும் கண்ணியும் சூட்டினார் – சிந்தா:5 1317/3
துணிவு உடை காப்பு கட்டி சுற்றுபு தொழுது காத்தார் – சிந்தா:5 1344/4
செல்-மின் நீர் என்று கூற வலம்கொண்டு தொழுது சென்றான் – சிந்தா:6 1556/3
நயப்ப எல்லாம் தருவல் என தொழுது நல் யானை தன் – சிந்தா:7 1590/3
தொழுது வேய் முதல் தூசம் கொண்டு ஏறினான் – சிந்தா:7 1602/4
இன்னணம் ஏத்தி இறைவன் அடி தொழுது
அன்னம் உறங்கும் மணி வரை மேல் நின்று – சிந்தா:7 1612/1,2
மன்னும் மாலை கொடுத்து அவனுக்கு உய்த்து ஈ என தொழுது கொண்டு – சிந்தா:7 1667/3
ஐ விலின் அகல நின்று ஆங்கு அடி தொழுது இறைஞ்சினாற்கு – சிந்தா:7 1704/1
வில் படை நிமிர்ந்த தோளான் தொழுது மெய் குளிர்ந்து நின்றான் – சிந்தா:7 1710/4
திரு மலர் தட கை கூப்பி சேவடி தொழுது வீழ்ந்தான் – சிந்தா:7 1724/4
தோசம் அற துதிகள் மனத்து ஓதி தொழுது இருந்தாள் – சிந்தா:7 1784/4
சூழ்ந்து தொழுது இறைஞ்சி சொன்னார் அவன் திறமே – சிந்தா:7 1810/4
சேவடி சேர்ந்தனம் தொழுது சென்று என – சிந்தா:7 1812/3
ஏந்தலை தோழர் எல்லாம் இணை அடி தொழுது வீழ – சிந்தா:7 1864/1
ஏர் மின்னு தாரான் அருள தொழுது ஏகினாரே – சிந்தா:7 1869/4
வெய்தா அடி தொழுது வேந்தன் கோயிற்கு எழுந்தானே – சிந்தா:7 1884/4
சொல்லினள் தேவி நிற்ப பதுமுகன் தொழுது சேர்ந்து – சிந்தா:8 1909/3
தங்கு ஒளி தட கை கூப்பி தொழுது அடி தழுவி வீழ்ந்தான் – சிந்தா:8 1910/3
திருவடி தொழுது வீழ்ந்த சிறுவனை கண்ட-போழ்தே – சிந்தா:8 1911/1
துறை அறிந்து சேர்ந்து தொழுது ஆடுநர் இல் என்றாற்கு – சிந்தா:9 2021/3
சேடியர் தொழுது நிற்ப திருமகள் பரவும் அன்றே – சிந்தா:9 2055/4
சீறடி பரவ வந்தேன் அருள் என தொழுது சேர்ந்து – சிந்தா:9 2062/2
தொட்டு மேல் பொறியை நீக்கி மன்னனை தொழுது தோன்ற – சிந்தா:10 2143/3
அம்பு கை காணாம் ஐயனை கையில் தொழுது என்பார் – சிந்தா:11 2332/4
தார் கோலம் மான் தேர் தொகை மாமன் தொழுது சொன்னான் – சிந்தா:11 2352/4
முனைவன் தொழுது முடி துளக்கி முகந்து செம்பொன் கொள வீசி – சிந்தா:11 2357/1
என்றலும் தொழுது சென்னி நிலன் உறீஇ எழுந்து போகி – சிந்தா:11 2374/1
சுண்ணம் மேல் சொரிவார் தொழுது தொங்கல் வீழ்ப்பார் – சிந்தா:12 2547/1
துன்னி நம்பி உருவு தீட்டி தொங்கல் வேய்ந்து தொழுது ஆற்ற நீ – சிந்தா:12 2588/3
மின்னும் மேகலையும் தோடும் கொடுத்து அடி தொழுது நிற்பார் – சிந்தா:13 2662/4
கொற்றவன் தொழுது சேர்ந்தார் கொம்பு அனார் வாமன் கோயில் – சிந்தா:13 2738/3
அடி கையின் தொழுது பூ தூய் அஞ்சலி செய்து வீடே – சிந்தா:13 2808/3
தொடி கையால் தொழுது வாழ்த்தி தூ மணி நிலத்துள் ஏற்றி – சிந்தா:13 2827/1
கடி விம்மு தாரான் கழல் கையின் தொழுது சேர்ந்தான் – சிந்தா:13 2865/4
நனை மலர் அலங்கல் கண்ணி நந்தனும் தொழுது சேர்ந்தான் – சிந்தா:13 2899/4
வேய் நிறை அழித்த மென் தோள் விசயையை தொழுது வாழ்த்தி – சிந்தா:13 2998/3
துளங்கு ஒளி மணிவண்ணன் தொழுது துன்னினான் – சிந்தா:13 3007/2
தோத்திரத்தால் தொழுது இறைஞ்சி துறப்பேன் என்று எழுந்திருந்தான் – சிந்தா:13 3024/4
சோலை-வாய் சுரும்பு இனம் தொழுது சொன்னவே – சிந்தா:13 3032/4
துளங்கினன் என தொழுது இறைஞ்சினான்-அரோ – சிந்தா:13 3055/4
நீத்த அருள் இந்திரனை நின்று தொழுது அமரர் – சிந்தா:13 3094/2
தூர்ந்த இருள் துணிக்கும் சுடர் தொழுது அருளுக என்றார் – சிந்தா:13 3104/3
துணி-மினம் என தொழுது இறைஞ்சி வாழ்த்தினார் – சிந்தா:13 3111/4

TOP


தொழுதும் (5)

எரி புரை மரை மலர் இணை அடி தொழுதும் – சிந்தா:12 2561/4
அலர் கெழு மரை மலர் இணை அடி தொழுதும் – சிந்தா:12 2562/4
நறை விரி மரை மலர் நகும் அடி தொழுதும் – சிந்தா:12 2563/4
கோல மலர் சேவடிகள் கொண்டு தொழுதும் யாம் – சிந்தா:13 3092/4
இழுங்கு இல் குண சேவடிகள் ஏத்தி தொழுதும் யாம் – சிந்தா:13 3093/4

TOP


தொழுதே (1)

எரி பொன் நீள் முடி கவித்தனன் பவித்திரன் தொழுதே – சிந்தா:11 2366/4

TOP


தொழுதேன் (3)

துஞ்சா கதிர் கொள் துணை முத்தம் தொழுதேன் உம்மை என துறந்து – சிந்தா:1 351/2
அன்ன பெடையே தொழுதேன் அன்னை கொடியள் கண்டாய் – சிந்தா:4 920/2
துன யான் பெறுகோ தொழுதேன் உரையீர் – சிந்தா:6 1519/4

TOP


தொழுதேனே (3)

இஃதே நின் சொல் இயல்பு என்றால் அடியேன் நின்னை தொழுதேனே – சிந்தா:6 1418/4
கொண்டு ஏந்து பூம் பிண்டி கோமான் நின்னை தொழுதேனே – சிந்தா:6 1419/4
கோதை தாழ் பூம் பிண்டி கோமன் நின்னை தொழுதேனே – சிந்தா:6 1420/4

TOP


தொழும் (2)

கனை வண்டு ஓதி கை தொழும் கடவுள் கண்ணில் கண்டவர் – சிந்தா:3 709/3
இந்திரர் தொழும் அடி இனிதின் எய்தினான் – சிந்தா:5 1239/4

TOP


தொழுவ (1)

தொழுவ போல் முரிய சொரி பூம் சிகை – சிந்தா:13 2670/3

TOP


தொழுவனர் (1)

சுரும்பு இமிர் மாலை தொழுவனர் நீட்டி – சிந்தா:10 2124/1

TOP


தொழுவாய் (1)

தொழுவாய் விடையை தொடர்கிற்றிலிர் என்று – சிந்தா:6 1523/3

TOP


தொழுவார் (3)

தோள் வயிரம் தோன்ற தொழுவார் அழுது நைவார் தொக்கோர் கோடி – சிந்தா:3 645/3
எரி மலர் செ வாய் திறந்து தேன் ஊற ஏத்துவார் பூக்கள் தூய் தொழுவார்
வரு குலை கமுகும் வாழையும் நடுவார் வரை உமிழ் ஆவி போல் மாடத்து – சிந்தா:10 2111/2,3
சொல்லா துயர்வார் தொழுவார் அழுவார் ஆய் – சிந்தா:13 2964/3

TOP


தொழுவாரும் (1)

கோடி செம்பொன் கொம்பரின் முன்முன் தொழுவாரும் – சிந்தா:11 2331/4

TOP


தொழுவில் (2)

தொழுவில் தோன்றிய தோமறு கேவல – சிந்தா:4 856/3
துன்பத்தை சுரக்கும் நான்கு கதி எனும் தொழுவில் தோன்றி – சிந்தா:13 3105/2

TOP


தொழுவின் (1)

வாளொடு வயவர் ஈண்டி வாரண தொழுவின் முற்றி – சிந்தா:4 958/1

TOP


தொழுவேங்கள் (1)

பாத கமலம் தொழுவேங்கள் பசை யாப்பு அவிழ பணியாயே – சிந்தா:5 1242/4

TOP


தொழுனை (1)

வேல் நிற தானை வேந்தே விரி புனல் தொழுனை ஆற்றுள் – சிந்தா:1 209/3

TOP


தொள்ளை (1)

தொள்ளை உணர்வு இன்னவர்கள் சொல்லின் மடிகிற்பின் – சிந்தா:3 496/3

TOP


தொறு (5)

காற்றின் விரைந்து தொறு மீட்க என காவல் மன்னன் – சிந்தா:2 432/3
தோள் வாய் சிலையின் ஒலியால் தொறு மீட்டு மீள்வான் – சிந்தா:2 454/3
கோன் தொறு காவலன் கொண்டு முன்னினான் – சிந்தா:3 823/4
வெம் சிலையின் வேடர் தொறு மீட்டு விசும்பு ஏகும் – சிந்தா:7 1796/1
தொறு கொண்ட கள்வர் இவரோ என சொல்லி நக்கு ஆங்கு – சிந்தா:7 1871/2

TOP


தொறுத்தியர் (1)

செய்தனர் சிறு புன் கோலம் தொறுத்தியர் திகைத்து நின்றார் – சிந்தா:2 488/4

TOP


தொறுவின் (1)

நல தகு தொறுவின் உள்ளேன் நாமம் கோவிந்தன் என்பேன் – சிந்தா:2 477/2

TOP


தொறுவை (1)

தொகை மலி தொறுவை ஆளும் தோன்றல் மற்று இன்ன கூறும் – சிந்தா:2 474/4

TOP


தொன்று (1)

தொன்று சுண்ணத்தில் தோன்றிய வேறுபாடு – சிந்தா:4 903/2

TOP