சு – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுக்கில 1
சுகதா 1
சுகிர் 1
சுகிர்ந்த 1
சுட்டி 7
சுட்டிட 2
சுட்டிடுங்கள் 1
சுட்டிடுதல் 1
சுட்டிடும் 2
சுட்டு 4
சுட்டுதற்கு 1
சுட 10
சுடப்பட்டு 1
சுடர் 63
சுடர்கள் 1
சுடர்ந்த 1
சுடர்ந்ததே 1
சுடர்ந்தனவே 1
சுடர்ந்து 3
சுடர்விட்டு 1
சுடர 15
சுடரின் 3
சுடரும் 9
சுடரே 1
சுடரொடு 1
சுடாதும் 1
சுடு 8
சுடுகாட்டு 1
சுடுகாட்டுள் 1
சுடுகாடால் 1
சுடுகாடு 1
சுடுகின்றவே 1
சுடுதல் 1
சுடுதலின் 1
சுடுதலோடும் 1
சுடுதற்கு 1
சுடுதும் 1
சுடும் 3
சுடுமண் 1
சுடுமால் 1
சுடுவது 3
சுடுவில் 1
சுண்ண 4
சுண்ணத்தாலும் 1
சுண்ணத்தில் 1
சுண்ணத்தின் 1
சுண்ணத்தை 1
சுண்ணம் 39
சுண்ணமா 1
சுண்ணமும் 14
சுண்ணமே 1
சுண்ணமோடு 1
சுண 1
சுணங்கன் 1
சுணங்கு 6
சுணத்தால் 1
சுணம் 2
சுதங்கள் 1
சுதஞ்சணன் 4
சுதஞ்சணனும் 1
சுதஞ்சணனே 1
சுதர் 1
சுதன்மரால் 1
சுதை 2
சுந்தர 5
சுந்தரம் 2
சுந்து 1
சுநந்தை 6
சுநந்தையும் 3
சுநந்தையே 2
சுபத்திரன் 2
சும்மை 5
சும்மைத்தே 2
சும்மைய 1
சுமக்க 1
சுமக்கல் 1
சுமக்கலாத 2
சுமக்கலாது 1
சுமக்கலேன் 1
சுமதிக்கு 1
சுமந்த 9
சுமந்தன 1
சுமந்து 32
சுமப்ப 1
சுமப்பது 1
சுமாஅய் 1
சுமை 4
சுரக்கும் 4
சுரந்த 3
சுரந்தன 1
சுரந்து 4
சுரம் 7
சுரமஞ்சரி 5
சுரமை 1
சுரமைய 1
சுரரொடு 1
சுரி 3
சுரிகை 2
சுரிகையும் 1
சுரிகையை 1
சுரிந்த 2
சுருக்கி 2
சுருக்கு 1
சுருக்கும் 1
சுருங்க 1
சுருங்கார் 1
சுருங்கி 3
சுருங்கை 1
சுருட்டி 1
சுருட்டுபு 1
சுரும்பின் 2
சுரும்பு 28
சுரும்புகாள் 1
சுரும்பும் 1
சுரும்பே 1
சுரும்பொடு 2
சுருள் 2
சுரை 3
சுவர் 6
சுவர்கள்-தோறும் 1
சுவரையே 1
சுவல் 3
சுவாகதம் 1
சுவை 23
சுவைத்து 6
சுவைத்தும் 1
சுவையின் 1
சுழல் 2
சுழல்வாரே 1
சுழல 2
சுழலும் 2
சுழற்றி 1
சுழன்று 3
சுழி 3
சுழித்து 1
சுழிந்து 1
சுழியில் 1
சுழியுள் 1
சுள்ளி 1
சுள்ளியும் 1
சுளகு 1
சுளி 1
சுளித்து 1
சுளிவின் 1
சுளிவொடு 1
சுளை 2
சுளைகள் 1
சுளைகளும் 1
சுளையும் 1
சுற்றத்தார்க்கு 1
சுற்றத்தார்க்கும் 1
சுற்றத்தாரோ 1
சுற்றம் 10
சுற்றமா 1
சுற்றமே 1
சுற்றமோடு 1
சுற்றா 1
சுற்றார் 3
சுற்றி 4
சுற்றிய 1
சுற்றினார் 1
சுற்று 1
சுற்றுபு 2
சுற 2
சுறவு 6
சுறா 6
சுறாக்கள் 1
சுறாவு 1
சுனை 14
சுனைகள் 1
சுனைய 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சுக்கில (1)

இணர் எரி முழக்கம் அன்ன சுக்கில தியானம் என்னும் – சிந்தா:13 3081/3

TOP


சுகதா (1)

சொல்லுவ நீ சுகதா உரையாயே – சிந்தா:13 3096/4

TOP


சுகிர் (1)

சூழ் மணி கோட்டு வீணை சுகிர் புரி நரம்பு நம்பி – சிந்தா:3 728/2

TOP


சுகிர்ந்த (1)

பல்லினால் சுகிர்ந்த நாரில் பனி மலர் பயில பெய்த – சிந்தா:2 438/1

TOP


சுட்டி (7)

ஆழ்வித்திட்ட அம்பியை தோழர் சுட்டி காட்டினான் – சிந்தா:3 580/2
வெம் கதிர் வேலில் சுட்டி வேந்து எதிர்கொண்டு நிற்பார் – சிந்தா:3 784/2
வண் தளிர் ஈன்று சுட்டி வாள்_நுதல் பூப்ப வைத்தான் – சிந்தா:4 1081/4
வந்து வான் இட்ட சுட்டி வனப்பொடு முளைத்தது அன்றே – சிந்தா:6 1532/4
தந்து சுட்டி இட்ட சாந்தம் வேரின் வார்ந்து இடை முலை – சிந்தா:8 1956/3
காமுகன் களத்து வீழ கை விரல் நுதியின் சுட்டி
பூ முக மாலை மார்பன் பொன் அணி கவசம் மின்ன – சிந்தா:10 2270/2,3
விரோதித்து விரலின் சுட்டி வெருவர தாக்க வீரன் – சிந்தா:13 3080/2

TOP


சுட்டிட (2)

நீடிய வினை மரம் நிரைத்து சுட்டிட
வீடு எனப்படும் வினை விடுதல் பெற்றது அங்கு – சிந்தா:13 2846/2,3
புரிப்புரி கொண்டு போய் பொதிந்து சுட்டிட
இருப்பு உயிர் ஆகி வெம் எரியுள் வீழுமே – சிந்தா:13 3108/3,4

TOP


சுட்டிடுங்கள் (1)

உறு துயர் நரகர் தம்மை உருக சுட்டிடுங்கள் அன்றே – சிந்தா:13 2773/4

TOP


சுட்டிடுதல் (1)

நகை கதிர் மதியம் வெய்தா நடுங்க சுட்டிடுதல் உண்டே – சிந்தா:10 2315/3

TOP


சுட்டிடும் (2)

வெருள சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம் – சிந்தா:1 247/2
துன்னினார் தம்மை எல்லாம் சுட்டிடும் என்று செம்பொன் – சிந்தா:4 1117/3

TOP


சுட்டு (4)

நெரித்திடா கண்ணுள் தீயால் சுட்டு நீறு ஆக்கி நெய்த்தோர் – சிந்தா:3 807/3
அன்றாய் அரிதாய் அகத்தே சுட்டு உருக்கும் வெம் தீ – சிந்தா:8 1962/3
நீள் நீர் முத்தம் நிரை முறுவல் கடு சுட்டு உரிஞ்ச கதிர் உமிழ்ந்து – சிந்தா:13 2697/3
எல்லையில் துன்ப வெம் தீ சுட்டு எரித்திடுங்கள் அன்றே – சிந்தா:13 2876/4

TOP


சுட்டுதற்கு (1)

சுட்டுதற்கு அரிய முத்தின் தொத்து வாய் நாற்ற முந்நீர் – சிந்தா:12 2523/3

TOP


சுட (10)

உள்ளு காமம் உள் சுட வேந்தன் ஆங்கு உறைவது ஓர் – சிந்தா:1 146/3
தன் உடை மதி சுட தளரும் தையலுக்கு – சிந்தா:1 326/3
அடும் துயரம் உள் சுட வெந்து ஆற்றாதேன் ஆற்ற – சிந்தா:4 1041/2
உருகும் நோக்கம் உளம் கிழித்து உள் சுட
அரிவை ஆடிய காவகம் காணிய – சிந்தா:5 1321/2,3
நாளும் நாளினும் நைந்து நைந்து உள் சுட
பூளை மெல் அணை மேல் புரளும்-கொலோ – சிந்தா:7 1628/3,4
கண் உமிழ் தீயினால் சுட நிறம் கரிந்த போல் – சிந்தா:7 1832/1
ஈமத்தினோடும் உடனே சுட ஏகல் ஆற்றான் – சிந்தா:8 1966/2
தொத்து நின்று எரிந்து கண்டார் கண் சுட சுடர்ந்து நின்றார் – சிந்தா:12 2539/3
உருகி போய் இன்னும் அற்று உளை என்று உள் சுட
குருதி கண் கொள குணமாலை ஊடினாள் – சிந்தா:13 2678/2,3
வீழ் பிடிகள் சிந்தித்தும் வெம் நோய் தம் உள் சுட வெந்து – சிந்தா:13 2785/3

TOP


சுடப்பட்டு (1)

கொல்லை உழவர் சுடப்பட்டு குரங்கி வெந்தது இது களிறு – சிந்தா:3 719/2

TOP


சுடர் (63)

வான் உலாம் சுடர் கண் மூடி மாநகர் இரவு செய்ய – சிந்தா:1 111/2
முடியொடு முடியுற மிடைதலின் விடு சுடர்
கொடி உடை மழை மினின் குலவியது ஒருபால் – சிந்தா:1 119/3,4
விளங்கு ஒளி மணிகள் வேய்ந்து விடு சுடர் இமைக்கும் பூணான் – சிந்தா:1 213/4
வெம் சுடர் தோன்றி விடிந்ததை அன்றே – சிந்தா:1 219/4
தோன்றினான் குன்றத்து உச்சி சுடர் பழி விளக்கு இட்ட அன்றே – சிந்தா:1 262/4
ஒலி கழல் மன்னர் உட்கும் உரு சுடர் வாளை நோக்கி – சிந்தா:1 266/2
சுடர் போய் மறைய துளங்கு ஒளிய குழவி மதி பெற்று அகம் குளிர்ந்த – சிந்தா:1 313/3
நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான் – சிந்தா:1 321/3
சூழ் கதிர் மதியம் அன்ன சுடர் மணி பூணினானும் – சிந்தா:1 380/1
நீள் சுடர் நெறியை நோக்கும் நிரை இதழ் நெருஞ்சி பூ போல் – சிந்தா:2 461/3
சூடகம் அணிந்த முன்கை சுடர் மணி பூணினாளை – சிந்தா:2 479/2
வெம்பு நீள் சுடர் வீழ்ந்து சுடுதலின் – சிந்தா:3 531/3
கோள் வயிர நீள் அருவி குன்று இவர்ந்த செம்_சுடர் போல் கொலை வேல் மன்னர் – சிந்தா:3 645/1
மதி-அது ஏறி வெம் சுடர் வெம்மை நீங்க மன்னிய – சிந்தா:3 705/3
எரி சுடர் பருதி முன்னர் இருள் என உடைந்து நீங்க – சிந்தா:3 773/1
இரு_சுடர் வழங்கும் வையத்து என் பெயர் கெடுக என்றான் – சிந்தா:3 773/4
ஒடிக்க சுடர் விட்டு உமிழ உழை அம் பிணை ஒன்று அணுகி – சிந்தா:4 932/2
செல் சுடர் வேல் வல சீவகசாமி சென்று – சிந்தா:4 941/3
கையொடு கண்டம் கோப்பார் கனை சுடர் உறுப்பின் வைப்பார் – சிந்தா:5 1278/1
ஒளித்தது எங்கு என ஒண் சுடர் நண்ணினாள் – சிந்தா:5 1367/4
சொரி பனி முருக்க நைந்து சுடர் முகம் பெற்ற-போதே – சிந்தா:5 1404/1
சூட்டு வைத்து அனையது அ சுடர் பொன் இஞ்சியே – சிந்தா:6 1445/4
தென் திசை முளைத்தது ஓர் கோல செம் சுடர்
ஒன்றி மற்று உத்தரம் வருவது ஒத்து அவண் – சிந்தா:6 1459/1,2
இழுது ஆர் சுடர் வேல் இளையான் அகலத்து – சிந்தா:6 1523/1
அறிந்து பாவையை கொடுப்ப தோன்றி அம் சுடர் ஏந்த – சிந்தா:7 1563/3
மன்னும் வெம் சுடர் மாக்கல் இவர்ந்ததே – சிந்தா:7 1716/4
உறை கொள் வாளினோடு ஒண் சுடர் வேல் மின – சிந்தா:7 1776/2
வேய் துணி அலமரும் புறத்தர் வெம் சுடர்
ஏந்து எழில் நவியமும் ஏந்து தோளினார் – சிந்தா:7 1848/3,4
பல் பூண் எருத்தில் பரந்த அம் சுடர் கால மன்னன் – சிந்தா:7 1868/2
அத்தம் என மிக்க சுடர் அம் கதிர் சுருக்கும் – சிந்தா:9 2022/3
ஆன்ற வெம் பாலை அழல் மிதித்து அன்ன அரும் சுரம் சுடர் மறை பொழுதின் – சிந்தா:10 2106/3
பால்கடல் பரப்பின் வெள் வாள் சுடர் ஒளி பரந்த அன்றே – சிந்தா:10 2152/4
உதையத்தின் நெற்றி சேர்ந்த ஒண் சுடர் பருதி போல – சிந்தா:10 2153/2
சுடர் நுதல் பட்டம் மின்ன சுரும்பு இமிர் கண்ணி சிந்த – சிந்தா:10 2182/2
ஒற்றை மா கதிரை நீட்டி ஒண் சுடர் இருந்தது ஒத்தான் – சிந்தா:10 2255/4
இன் நீரின திரை மேல் இரண்டு இள வெம் சுடர் இகலி – சிந்தா:10 2264/1
திரியும் சென்று அற்ற-போழ்தே திரு சுடர் தேம்பின் அல்லால் – சிந்தா:10 2316/2
ஓம்பு திங்கள் உலந்து சுடர் கண்ட – சிந்தா:11 2336/3
செம் கண் கமழ் பைம் தார் செழும் சுடர் போல் தேர் மன்னன் இருந்தான் அன்றே – சிந்தா:11 2371/4
ஈரம் கொன்ற பின் இருள் மணி சுடர்
நீர வாய் நிழல் உமிழும் குஞ்சியை – சிந்தா:12 2422/1,2
வீவு இல் வெம் சுடர் விளக்கு காட்டினார் – சிந்தா:12 2426/4
சுரும்பு ஆர் சோலை மயிலே குயிலே சுடர் வீசும் – சிந்தா:12 2453/3
தூ மாண் தூம குடம் ஆயிரம் ஆய் சுடர் பொன் தூண் – சிந்தா:12 2455/1
செம் கயல் இரட்டை திருவார் சுடர் கணாடி – சிந்தா:12 2487/1
தோற்றும் செம் சுடர் போல சுடர்ந்ததே – சிந்தா:12 2497/4
சுநந்தை தன் மகன் சுடர் பொன் சூழி தேன் – சிந்தா:12 2521/1
செரு நாடு செம் சுடர் வேல் திருகு செம்பொன் கனை கழல் கால் – சிந்தா:12 2582/1
விண்-பால் சுடர் விலக்கி மேகம் போழ்ந்து விசும்பு ஏந்தி – சிந்தா:13 2600/1
இழுது அமை எரி சுடர் விளக்கு இட்ட அன்னவள் – சிந்தா:13 2630/3
திறவிதின் தவிசு தூபம் திரு சுடர் விளக்கு இட்டாரே – சிந்தா:13 2633/4
நாண் உள் இட்டு சுடர் வீச நல் மாணிக்க நகு தாலி – சிந்தா:13 2697/1
இருள் விலங்க நின்று எரியும் நீள் சுடர்
அருளு-மின் எனக்கு அடிகள் என்றனன் – சிந்தா:13 2745/2,3
வியன் நீள் சுடர் வெண் மதி சேர்வது போல் – சிந்தா:13 2852/2
நிலத்து இருந்து இரு சுடர் நிமிர்ந்து செல்வ போல் – சிந்தா:13 2893/2
சுரந்தன சுடர் மணி பாண்டில் என்பவே – சிந்தா:13 2999/4
சூடாதார் தாள் சூடார் மாலை சுடர் மணி நெடு முடியே – சிந்தா:13 3018/4
பழுது இல் நறு நெய் கடல் சுடர் போல் பல்லாண்டு எல்லாம் பரியாரே – சிந்தா:13 3020/4
எரிந்து எழும் இளம் சுடர் இலங்கும் மார்பினான் – சிந்தா:13 3030/4
அம் சுடர் தாமரை கையினான் மணி – சிந்தா:13 3031/1
செம் சுடர் கரும் கதிர் கற்றை தேறு நீர் – சிந்தா:13 3031/3
வரிய நாக மணி சுடர் மல்கிய – சிந்தா:13 3068/1
தூர்ந்த இருள் துணிக்கும் சுடர் தொழுது அருளுக என்றார் – சிந்தா:13 3104/3
நந்தாவிளக்கு சுடர் நல் மணி நாட்ட பெற்றே – சிந்தா:13 3144/4

TOP


சுடர்கள் (1)

ஆலி சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்-மின் – சிந்தா:4 931/4

TOP


சுடர்ந்த (1)

கூடிய மும்மையும் சுடர்ந்த கொந்து அழல் – சிந்தா:13 2846/1

TOP


சுடர்ந்ததே (1)

தோற்றும் செம் சுடர் போல சுடர்ந்ததே – சிந்தா:12 2497/4

TOP


சுடர்ந்தனவே (1)

துடிக்கும் கதிர் சேர் துணை முத்தம் திருவில் உமிழ்ந்து சுடர்ந்தனவே – சிந்தா:13 2695/4

TOP


சுடர்ந்து (3)

சூழ் மணி மோதிரம் சுடர்ந்து வில் இட – சிந்தா:4 1021/3
போல் சுடர்ந்து இலங்கு ஒளி பொன் செய் கோதையை – சிந்தா:12 2413/2
தொத்து நின்று எரிந்து கண்டார் கண் சுட சுடர்ந்து நின்றார் – சிந்தா:12 2539/3

TOP


சுடர்விட்டு (1)

கோல சுடர்விட்டு உமிழ குமரி அன்னம் குறுகி – சிந்தா:4 931/2

TOP


சுடர (15)

பொருந்துபு பொற்ப ஓம்பி பொன் இழை சுடர நின்ற – சிந்தா:3 548/3
தின்று தேன் இசைகள் பாட திருநகர் சுடர அன்றே – சிந்தா:3 630/4
உருவு கொள் மதியம் அன்ன ஒளி முகம் சுடர ஆக்கி – சிந்தா:3 674/2
எரி நிற குழை ஓர் காதிற்கு இருள் அற சுடர வைத்தான் – சிந்தா:3 696/4
பெரும் தகை குருசில் கொண்டு பெரு வலம் சுடர வீக்கி – சிந்தா:3 698/3
குண்டலம் சுடர ஒல்கி கொடி நடுக்குற்றது ஒப்ப – சிந்தா:7 1570/2
திருமுகம் சுடர நோக்கி சீவகன் சென்று சேர்ந்தான் – சிந்தா:7 1724/2
மின் இழை சுடர வாங்கி விட்ட கோல் உற்று உறாதாய் – சிந்தா:10 2188/3
பொன் அவிர் குழையும் பூணும் ஆரமும் சுடர வீழ்வான் – சிந்தா:10 2251/3
எரியும் வார் குழை சுடர இந்திர – சிந்தா:12 2425/2
அவிர் இழை சுடர முல்லை அலங்கல் அம் கூந்தல் சோர – சிந்தா:12 2542/1
திளைக்கும் மா மணி குழை சுடர செப்பினான் – சிந்தா:13 2867/3
சூளாமணியாய் சுடர இருந்தானை – சிந்தா:13 3037/2
ஒளியொடு சுடர வெம்பி உருத்து எழு கனலி வட்டம் – சிந்தா:13 3070/2
பால் அனைய சிந்தை சுடர படர் செய் காதி – சிந்தா:13 3092/1

TOP


சுடரின் (3)

வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர் – சிந்தா:0 2/3
ஆழ்ந்து படு வெம் சுடரின் ஆண் தகை அவிந்தான் – சிந்தா:1 289/4
வளி முக சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி இப்பால் – சிந்தா:1 298/2

TOP


சுடரும் (9)

வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர் – சிந்தா:0 2/3
பொன் இழை சுடரும் மேனி பூம் கொடி அனைய பொற்பில் – சிந்தா:2 440/2
எரி குழாம் சுடரும் வை வேல் ஏந்தலை கண்டு கோயில் – சிந்தா:10 2131/1
மங்குல் இடை மின்னும் மதியும் சுடரும் போல – சிந்தா:10 2166/3
வாள் முடி வைர வில்லும் வார் குழை சுடரும் மார்பில் – சிந்தா:13 2802/2
பூ ததை கொம்பு போன்று பொன் இழை சுடரும் மேனி – சிந்தா:13 2804/1
மதியும் சுடரும் வழி காணல் உறா – சிந்தா:13 2854/1
வெம்பு நீள் சுடரும் சென்னி விலங்கிய மாடம் எய்தி – சிந்தா:13 2918/2
உறுப்பு எலாம் ஒளி உமிழ்ந்து உணர்வு அரிதாய் இரு சுடரும்
குறைத்து அடுக்கி குவித்தது ஓர் குன்றே போன்று இலங்குமால் – சிந்தா:13 3089/1,2

TOP


சுடரே (1)

முழங்கு கடல் நெற்றி முளைத்து எழுந்த சுடரே போல் – சிந்தா:13 3093/1

TOP


சுடரொடு (1)

சோலை மீன் அரும்பி திங்கள் சுடரொடு பூத்ததே போல் – சிந்தா:13 2835/1

TOP


சுடாதும் (1)

கொண்டுபோய் மறைய வைத்தால் கொந்து அழல் சுடாதும் ஆமே – சிந்தா:6 1434/2

TOP


சுடு (8)

எண் இல் பொன் சுடு நெருப்பு உக்க முற்றம் ஒத்தவே – சிந்தா:1 72/4
துன்னன்-மின் என்பவே போல் சுடு சரம் பரந்த அன்றே – சிந்தா:3 799/4
துணிவது என் சுடு சொல் வாளால் செவி முதல் ஈரல் என்றாள் – சிந்தா:4 1049/3
தழுவி சுடு வெவ் அழல் தாங்குவன – சிந்தா:5 1187/2
சூர்த்துடன் வீழ நோக்கி சுடு சரம் சிதற வல்லான் – சிந்தா:10 2200/3
துனி வரை மார்பன் சீறி சுடு சரம் சிதறினானே – சிந்தா:10 2273/4
சுடு துயர் என்-கண் செய்தாய் சுநந்தை நீ ஒளவை அல்லை – சிந்தா:13 2646/2
செய்த பொருள் பெய்த கலன் செம்மை சுடு செம் தீ – சிந்தா:13 2873/3

TOP


சுடுகாட்டு (1)

ஒவ்வா சுடுகாட்டு உயர் அரங்கில் நிழல் போல் நுடங்கி பேய் ஆட – சிந்தா:1 309/2

TOP


சுடுகாட்டுள் (1)

தனியே துயர் உழந்து தாழ்ந்து வீழ்ந்த சுடுகாட்டுள்
இனியாள் இடர் நீக்கி ஏமம் சேர்த்தி உயக்கொண்ட – சிந்தா:13 2603/1,2

TOP


சுடுகாடால் (1)

பற்றா மன்னன் நகர் புறமால் பாயல் பிணம் சூழ் சுடுகாடால்
உற்றார் இல்லா தமியேனால் ஒதுங்கல் ஆகா தூங்கு இருளால் – சிந்தா:1 310/1,2

TOP


சுடுகாடு (1)

செல் ஆறு இழுக்கி சுடுகாடு அவள் சேர்ந்தவாறும் – சிந்தா:0 9/4

TOP


சுடுகின்றவே (1)

புகை இல் பொங்கு அழல் போல் சுடுகின்றவே – சிந்தா:5 1314/4

TOP


சுடுதல் (1)

மாநகர் சுடுதல் ஒன்றோ மதனனை அழித்தல் ஒன்றோ – சிந்தா:4 1152/1

TOP


சுடுதலின் (1)

வெம்பு நீள் சுடர் வீழ்ந்து சுடுதலின்
பைம்பொன் கொப்புள் பரந்தன போன்றவே – சிந்தா:3 531/3,4

TOP


சுடுதலோடும் (1)

மறைத்து இங்கண் நகரை வல்லே சுடுதும் நாம் சுடுதலோடும்
இறை குற்றேல் செய்தல் இன்றி எரியின் வாய் சனங்கள் நீங்க – சிந்தா:4 1140/2,3

TOP


சுடுதற்கு (1)

இடி உரும் ஏற்றின் சீறி இரு நிலம் சுடுதற்கு ஒத்த – சிந்தா:4 1087/3

TOP


சுடுதும் (1)

மறைத்து இங்கண் நகரை வல்லே சுடுதும் நாம் சுடுதலோடும் – சிந்தா:4 1140/2

TOP


சுடும் (3)

தீண்டினார்-தமை தீ சுடும் மன்னர் தீ – சிந்தா:1 250/1
நிறை யாதும் இல்லை நெருப்பின் சுடும் காமம் உண்டேல் – சிந்தா:8 1963/1
உச்சி மா கதிர் போல் சுடும் ஒளி திகழ் அயில் வாள் – சிந்தா:10 2163/2

TOP


சுடுமண் (1)

சுடுமண் மிசை மாரி சொரிய சூழ்ந்து சுமந்து எழுந்து – சிந்தா:12 2503/1

TOP


சுடுமால் (1)

ஒலியல் ஏற்றான் இஃது ஊழ் வினையால் உள்ளம் சுடுமால் என்ன – சிந்தா:7 1670/2

TOP


சுடுவது (3)

பார் உடை பனி கடல் சுடுவது ஒத்து உலம்பினான் – சிந்தா:1 274/4
திசை முகம் படர்க வல்லே தீ தொட்டால் சுடுவது அன்றே – சிந்தா:3 748/4
தெளி கடல் சுடுவது ஒத்து தீ உமிழ் திங்கள் நான்கும் – சிந்தா:13 3070/3

TOP


சுடுவில் (1)

உடைதும் சுடுவில் தேன் உடைந்த வண்ணமே – சிந்தா:2 416/4

TOP


சுண்ண (4)

சுந்தர சுண்ண மேனி மகளிர்-தம் கண்ணுள் இட்ட – சிந்தா:3 793/3
சொல் இசை மேம்படு சுண்ண உறழ்ச்சியுள் – சிந்தா:4 879/3
சுண்ண மங்கை சுரமைய மாலைய – சிந்தா:4 894/3
நல் தோளவள் சுண்ண நலம் சொல்லுவான் – சிந்தா:4 1070/1

TOP


சுண்ணத்தாலும் (1)

தெள்ளுறு சுண்ணத்தாலும் தேன் மலர் துகளினாலும் – சிந்தா:12 2527/3

TOP


சுண்ணத்தில் (1)

தொன்று சுண்ணத்தில் தோன்றிய வேறுபாடு – சிந்தா:4 903/2

TOP


சுண்ணத்தின் (1)

கண் அற்றார் கமழ் சுண்ணத்தின் என்பவே – சிந்தா:4 878/4

TOP


சுண்ணத்தை (1)

ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்ற சொல் – சிந்தா:4 899/2

TOP


சுண்ணம் (39)

செந்நீர் கடியின் விழவாட்டினுள் தேம் கொள் சுண்ணம்
மை நீர் நெடும் கண் இரு மங்கையர் தம்முள் மாறாய் – சிந்தா:0 12/2,3
சுண்ணம் உடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி – சிந்தா:0 13/1
மெய் அணி பசும்பொன் சுண்ணம் மேதகு நான நீரின் – சிந்தா:1 117/1
இரவி தோய் கொடி கொள் மாடத்து இடு புகை தவழ சுண்ணம்
விரவி பூம் தாமம் நாற்றி விரை தெளித்து ஆரம் தாங்கி – சிந்தா:2 456/1,2
தோதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து தண்ணென் – சிந்தா:2 463/3
எரி மணி சுண்ணம் மின்னும் இரும் சிலை முத்தம் சேர்த்தி – சிந்தா:3 625/1
சுண்ணம் என்பது ஓர் பேர் கொடு சோர் குழல் – சிந்தா:4 876/1
இம்பர் என் சுண்ணம் ஏய்ப்ப உள-எனில் – சிந்தா:4 877/2
சுண்ணம் தோற்றனம் தீம் புனல் ஆடலம் – சிந்தா:4 878/1
ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர் – சிந்தா:4 881/3
சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு – சிந்தா:4 884/1
பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி – சிந்தா:4 885/3
நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது – சிந்தா:4 887/1
அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல் – சிந்தா:4 887/2
புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம்
அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே – சிந்தா:4 887/3,4
சோலை அம் சுரும்பின் சுண்ணம் தேற்றிய தோன்றல்-தன்னை – சிந்தா:4 897/1
மட்டு அவிழ் கோதை சுண்ணம் மாலையோடு இகலி தோற்றாள் – சிந்தா:4 904/2
வண்ண ஒண் சுண்ணம் பட்டும் மாலையும் சாந்தும் ஏந்தி – சிந்தா:4 969/1
பூவார் புனல் ஆட்டினுள் பூ நறும் சுண்ணம்
பாவாய் பணை தோள் சுரமஞ்சரி தோற்றாள் – சிந்தா:4 1069/1,2
தளித்த சுண்ணம் சிதைந்தன குங்குமம் – சிந்தா:5 1330/3
பூவே புகை சாந்தம் சுண்ணம் விளக்கு இவற்றால் புனைதல் நாளும் – சிந்தா:6 1547/3
சுந்தர பொடி தெளித்த செம்பொன் சுண்ணம் வாள் நுதல் – சிந்தா:8 1956/2
வாய்ந்த இ மாதர் சுண்ணம் சீவகன் பழித்த பின்றை – சிந்தா:9 2043/1
கரி விளைத்து ஆய்ந்த சுண்ணம் காட்டினன் என்று கண்டாய் – சிந்தா:9 2077/3
இடி நறும் சுண்ணம் சிதறி எச்சாரும் – சிந்தா:10 2123/1
எரி கதிர் பைம்பொன் சுண்ணம் இலங்க மெய் முழுதும் அப்பி – சிந்தா:10 2189/1
ஏனைய நறும் சுண்ணம் குங்குமம் இடும் களியா – சிந்தா:12 2432/3
தெள்ளும் மணி செய் சுண்ணம் இலங்க திரு நீர் நுதலின் அப்பி – சிந்தா:12 2439/3
பெய்த பொன் செப்பும் மாலை பெரு மணி செப்பும் சுண்ணம்
தொய் அற பெய்த தூ நீர் தொடு கடல் பவள செப்பும் – சிந்தா:12 2474/3,4
சுண்ணம் மேல் சொரிவார் தொழுது தொங்கல் வீழ்ப்பார் – சிந்தா:12 2547/1
போர் அணி மாலை சாந்தம் புனை மணி சிவிறி சுண்ணம்
வார் அணி முலையினார்க்கும் மன்னர்க்கும் வகுத்து வாவி – சிந்தா:13 2654/2,3
இணை மலர் மாலை சுண்ணம் எரி மணி சிவிறி ஏந்தி – சிந்தா:13 2655/3
ஓக்கினார் கண்ணி சுண்ணம் உடற்றினார் உருவ சாந்தின் – சிந்தா:13 2661/2
அடுத்த சாந்து அலங்கல் சுண்ணம் அரும் புனல் கவர அஞ்சி – சிந்தா:13 2666/1
ஆனா பளித நறும் சுண்ணம் உகிரின் உழுது ஆங்கு அணிந்தாரே – சிந்தா:13 2692/4
சுண்ணம் குங்குமம் தூமத்தால் புனைந்து – சிந்தா:13 2742/2
நறும் புகை நான நாவி குழம்பொடு பளித சுண்ணம்
அறிந்தவர் ஆய்ந்த மாலை அணிந்த பைம் கூந்தலாய் பொன் – சிந்தா:13 2994/1,2
பொறி வரி வண்டு பாடும் பூம் சுண்ணம் நிறைந்த பொன் செப்பு – சிந்தா:13 3047/2
சொரி மது மாலை சாந்தம் குங்குமம் சுண்ணம் தேம் பாய் – சிந்தா:13 3118/3

TOP


சுண்ணமா (1)

சுந்து எழுந்து அரைத்தும் போக சுண்ணமா நுணுக்கி இட்டும் – சிந்தா:13 2774/3

TOP


சுண்ணமும் (14)

மெய் புனை சுண்ணமும் புகையும் மேவிய – சிந்தா:1 80/2
சிந்துர பொடிகளும் செம்பொன் சுண்ணமும்
சந்தன நீரோடு கலந்து தையலார் – சிந்தா:1 86/1,2
துறு மலர் பிணையலும் சூட்டும் சுண்ணமும்
நறு மலர் கண்ணியும் நாறு சாந்தமும் – சிந்தா:1 193/1,2
பூசு சுண்ணமும் உண்ணும் அடிசிலும் – சிந்தா:4 864/2
சோலை மஞ்ஞை சுரமை தன் சுண்ணமும்
மாலை என்னும் மட மயில் சுண்ணமும் – சிந்தா:4 893/1,2
மாலை என்னும் மட மயில் சுண்ணமும்
சால நல்லன தம்முளும் மிக்கன – சிந்தா:4 893/2,3
உரைத்த வெண்ணெயும் ஒள் நறும் சுண்ணமும்
அரைத்த சாந்தமும் நானமும் மாலையும் – சிந்தா:4 970/1,2
சாந்தும் கோதையும் தண் நறும் சுண்ணமும்
ஆய்ந்த பூம் புகையும் அவியும் சுமந்து – சிந்தா:7 1604/1,2
சுண்ணமும் சூட்டும் சொரிந்து வார் குழல் – சிந்தா:10 2114/1
துளங்கு பொன் குழைகளும் தோடும் சுண்ணமும்
கிளர்ந்து அகில் சாந்து பூ கமழ்ந்து கேழ் கிளர் – சிந்தா:12 2408/1,2
சூட்டும் சுண்ணமும் அணிந்து சுந்தரம் – சிந்தா:12 2519/1
சுண்ணமும் சாந்தும் வீழ தொழுதனர் இரந்து நிற்பார் – சிந்தா:13 2659/2
போது அவிழ் மாலையும் புகையும் சுண்ணமும்
காதலித்தார் கரும் குவளை கண்ணினார் – சிந்தா:13 2675/3,4
தொழித்த நறும் சாந்தும் சுண்ணமும் பல் மணியும் கலனும் சிந்தி – சிந்தா:13 2969/2

TOP


சுண்ணமே (1)

காமம் சூடிய கண் ஒளிர் சுண்ணமே – சிந்தா:4 875/4

TOP


சுண்ணமோடு (1)

ஆவி அம் புகை அணி கிளர் சுண்ணமோடு எழுந்த – சிந்தா:11 2367/2

TOP


சுண (1)

நல் சுண பட்டு உடை பற்ற நாணினால் – சிந்தா:1 91/2

TOP


சுணங்கன் (1)

சொல்லிய நன்மை இல்லா சுணங்கன் இ உடம்பு நீங்கி – சிந்தா:4 960/1

TOP


சுணங்கு (6)

ஆம் அணங்கு குடியிருந்து அம் சுணங்கு பரந்தனவே – சிந்தா:1 171/4
பொன் அவிர் சுணங்கு பூத்த பொங்கு இள முலையினார் தம் – சிந்தா:2 457/2
சில் சுணங்கு இள முலை செழு மலர் தடம் கணார் – சிந்தா:4 1100/4
சில் சுணங்கு இள முலை சிறுமி தந்தையும் – சிந்தா:6 1458/2
பொன் அவாம் சுணங்கு போர்த்த பொங்கு இள முலையினாள் என் – சிந்தா:7 1626/3
பொன் படு சுணங்கு போர்த்த பொங்கு இள முலையில் தூவான் – சிந்தா:13 2664/3

TOP


சுணத்தால் (1)

பொன் சுணத்தால் விளக்கு அவிப்ப பொங்கிய – சிந்தா:1 91/3

TOP


சுணம் (2)

கல் சுணம் செய்த தோள் மைந்தர் காதலால் – சிந்தா:1 91/1
பொன் சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே – சிந்தா:1 91/4

TOP


சுதங்கள் (1)

தொக்க கடல் போல் சுதங்கள் நிறைந்தனவே – சிந்தா:13 3038/4

TOP


சுதஞ்சணன் (4)

சுரும்பு உண் கண்ணி சுதஞ்சணன் என்பவே – சிந்தா:4 952/4
சூடுறு கழலினாற்கு சுதஞ்சணன் இதனை சொன்னான் – சிந்தா:4 957/1
சொல் திறல் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் சுருங்க நாடி – சிந்தா:5 1222/1
கண் முழுதும் உடம்பில் தோன்றி சுதஞ்சணன் களிப்புற்றானே – சிந்தா:13 3085/4

TOP


சுதஞ்சணனும் (1)

புக்கான் சுதஞ்சணனும் பொன் தாமரை மகளிர் – சிந்தா:13 3038/1

TOP


சுதஞ்சணனே (1)

சச்சந்தனனே சுதஞ்சணனே தரணி கந்து கடன் விசயன் – சிந்தா:13 2705/3

TOP


சுதர் (1)

பரு சுதர் பவழம் நோன் தாழ் பல் மணி கதவு சேர்ந்தான் – சிந்தா:6 1504/4

TOP


சுதன்மரால் (1)

பாவம் இல் சுதன்மரால் பாடப்பட்டதே – சிந்தா:13 3061/4

TOP


சுதை (2)

வழங்க முன் இயற்றிய சுதை செய் வாய் தலை – சிந்தா:1 40/2
சுதை ஒளி மாடத்து உச்சி வெண்குடை நீழல் தோன்றி – சிந்தா:10 2153/3

TOP


சுந்தர (5)

சுந்தர நில மிசை சொரிதலின் மின் அணிந்து – சிந்தா:1 121/3
சுந்தர சுண்ண மேனி மகளிர்-தம் கண்ணுள் இட்ட – சிந்தா:3 793/3
சுந்தர பொடி தெளித்த செம்பொன் சுண்ணம் வாள் நுதல் – சிந்தா:8 1956/2
சுந்தர துகள் பூம் துகள் பொன் துகள் – சிந்தா:12 2400/1
சுந்தர சுரும்பு சூழ் மாலை இல்லையேல் – சிந்தா:13 2936/3

TOP


சுந்தரம் (2)

சூட்டும் சுண்ணமும் அணிந்து சுந்தரம்
ஓட்டி ஒண் பொன் நூல் ஓங்கு தாரொடு – சிந்தா:12 2519/1,2
சுந்தரம் பெய்த யானை தூ மருப்பு இயன்ற வெண் செப்பு – சிந்தா:13 3048/3

TOP


சுந்து (1)

சுந்து எழுந்து அரைத்தும் போக சுண்ணமா நுணுக்கி இட்டும் – சிந்தா:13 2774/3

TOP


சுநந்தை (6)

ஆற்றலள் சுநந்தை என்பார் ஆ தகாது அறனே என்பார் – சிந்தா:4 1109/4
நையாள் வளர்த்த சுநந்தை நவையுற என் – சிந்தா:7 1802/3
சுநந்தை தன் மகன் சுடர் பொன் சூழி தேன் – சிந்தா:12 2521/1
தோடு ஆர் புனை கோதை சுநந்தை சேர்ந்து தொழுதாளை – சிந்தா:13 2605/1
என்றலும் சுநந்தை சொல்லும் இறைவி-தான் கண்டது ஐயா – சிந்தா:13 2627/1
சுடு துயர் என்-கண் செய்தாய் சுநந்தை நீ ஒளவை அல்லை – சிந்தா:13 2646/2

TOP


சுநந்தையும் (3)

இணை வேல் உண்கண் சுநந்தையும் இன்ப கொடி ஒத்தாள் – சிந்தா:1 365/4
சுரும்பு உடை அலங்கல் மாலை சுநந்தையும் துணைவன்-தானும் – சிந்தா:1 401/1
தேன் பிறங்கு அலங்கல் மாலை சுநந்தையும் துணைவன் தானும் – சிந்தா:4 1090/3

TOP


சுநந்தையே (2)

யான் அலன் ஔவை ஆவாள் சுநந்தையே ஐயற்கு என்றும் – சிந்தா:8 1915/1
சுழித்து நின்று அறாத கற்பின் சுநந்தையே ஆக என்பார் – சிந்தா:12 2551/4

TOP


சுபத்திரன் (2)

சோர் புயல் தொலைத்த வண் கை சுபத்திரன் மனைவி பெற்ற – சிந்தா:6 1450/2
தூவி பொன் மாட மூதூர் சுபத்திரன் என்னை கண்டே – சிந்தா:7 1756/3

TOP


சும்மை (5)

தள்ளாத சும்மை மிகு தக்க நல் நாடு நண்ணி – சிந்தா:0 20/1
மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கள் மலிந்த சும்மை
பட்டமும் பசும்பொன் பூணும் பரந்து ஒளி நிழற்றும் தீம் தேன் – சிந்தா:1 112/2,3
கல்லென் சும்மை ஓர் கடலின் மிக்கதே – சிந்தா:2 413/4
மாந்தர் சும்மை மலிந்த ஒர் பால் எலாம் – சிந்தா:7 1604/4
கரும் கடல் கல் என் சும்மை கரந்ததும் ஒத்தது அன்றே – சிந்தா:13 2975/4

TOP


சும்மைத்தே (2)

ஊன் கணார்க்கு உரைப்ப அரிது ஒல் என் சும்மைத்தே – சிந்தா:1 54/4
அகழ்தல் மா கடல் அன்னது ஓர் சும்மைத்தே – சிந்தா:1 138/4

TOP


சும்மைய (1)

ஒல்லென் சும்மைய புள் ஒலித்து ஓங்கிய – சிந்தா:13 3006/2

TOP


சுமக்க (1)

சுரந்து கொள்க என சுமக்க நல்குவார் – சிந்தா:12 2401/4

TOP


சுமக்கல் (1)

சோலை சூழ் வரையின் நெற்றி சூழ் கிளி சுமக்கல் ஆற்றா – சிந்தா:5 1232/2

TOP


சுமக்கலாத (2)

நாண் சுமக்கலாத நங்கை நகை மின்னு நுசுப்பு நோவ – சிந்தா:12 2443/1
பூண் சுமக்கலாத பொன் ஞாண் வடத்தொடு புரள நோக்கி – சிந்தா:12 2443/2

TOP


சுமக்கலாது (1)

தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த – சிந்தா:1 109/1

TOP


சுமக்கலேன் (1)

தொழுதி தன்னை யான் சுமக்கலேன் எனா – சிந்தா:12 2405/2

TOP


சுமதிக்கு (1)

சுனை வளர் குவளை உண்கண் சுமதிக்கு செவிலி செப்ப – சிந்தா:9 2075/2

TOP


சுமந்த (9)

பொன் பூண் சுமந்த புணர் மெல் முலை கோடு போழ – சிந்தா:0 19/1
காதலான் பெயர் சுமந்த கதிர் மணி ஆழி சேர்த்தி – சிந்தா:1 318/3
பாடகம் சுமந்த செம்பொன் சீறடி பரவை அல்குல் – சிந்தா:2 479/1
புரி மணி சுமந்த பொன் பூண் பொறுக்கலா நுசுப்பில் பாவை – சிந்தா:3 619/2
வரு பனி சுமந்த வாள் கண் வன முலை பொழிந்த தீம் பால் – சிந்தா:8 1911/2
முலை முகம் சுமந்த முத்த தொத்து ஒளிர் மாலையாரும் – சிந்தா:13 2733/1
சிங்கம் சுமந்த மணி அணை மேல் தேவர் ஏத்தி சிறப்பு அயர – சிந்தா:13 2812/2
அழலார் சுரை எயிற்று வெம் சின ஐம் தலை சுமந்த வெகுளி நாகம் – சிந்தா:13 2970/1
மெய் பொதிந்து உயர்ந்த கோமான் விரை பலி சுமந்த அன்றே – சிந்தா:13 3049/4

TOP


சுமந்தன (1)

குரவம் கொண்ட குறும்பூழ் போல் கொழும் கால் முகை சுமந்தன
குருதி கூர் எயிறு கூத்தியர் கண் கொண்ட கொடி தளவமே – சிந்தா:7 1651/3,4

TOP


சுமந்து (32)

தான் ஆகி இருளொடு ஓர் தாமரை பூ சுமந்து அன்ன – சிந்தா:1 169/3
பூத்த கோங்கு போல் பொன் சுமந்து உளார் – சிந்தா:2 419/1
கோவினை குறிப்பில் கண்டு கொடுத்து அருள் சுமந்து செம்பொன் – சிந்தா:3 504/2
இள முலை சுமந்து பெற்ற வருத்தமும் இன்று தீர்ந்தேன் – சிந்தா:3 684/3
திடல் பிளந்து இட்ட எஃகம் சுமந்து அமர் திறத்தின் மிக்கார் – சிந்தா:3 805/4
சேல் படுத்த கண்ணீர் சுமந்து அளைஇ மெய்ம்மகிழ்ந்து – சிந்தா:4 1044/3
கான் அமர் அருவி குன்றில் காய் கதிர் சுமந்து ஓர் திங்கள் – சிந்தா:5 1168/3
வண்டு ஆர்ந்து நால் காதம் வண்ண மாலை சுமந்து ஒசிந்து – சிந்தா:6 1419/3
கழுகு உண்ண வள்ளூரமே சுமந்து புள்ளிற்கே புறம் செய்கின்றார் – சிந்தா:6 1552/4
ஆய்ந்த பூம் புகையும் அவியும் சுமந்து
ஏந்து பொன் விளக்கு ஏந்தி இடம் பெறா – சிந்தா:7 1604/2,3
அறியலென் கொழுநன் மாய்ந்தால் அணி சுமந்து இருப்பது என்றான் – சிந்தா:7 1706/4
வடம் சுமந்து எழுந்தன மா கண் வெம் முலை – சிந்தா:9 2006/2
தென் வரை சாந்து மூழ்கி திரள் வடம் சுமந்து வீங்கி – சிந்தா:9 2081/2
பொரு மத யானை புணர் மருப்பு ஏய்ப்ப பொன் சுமந்து ஏந்திய முலையார் – சிந்தா:10 2111/1
உருவ தேர் இற முருக்கி உருள் நேமி சுமந்து எழுந்து – சிந்தா:10 2237/3
முரசமும் குடையும் தாரும் பிச்சமும் சுமந்து மாவும் – சிந்தா:10 2297/2
பொன் பூண் சுமந்து பொரு கோட்டை அழித்து வெம் போர் – சிந்தா:11 2340/1
மலங்கி வாள் கண்கள் வரு பனி சுமந்து உடன் வெருவி – சிந்தா:12 2381/2
சுடுமண் மிசை மாரி சொரிய சூழ்ந்து சுமந்து எழுந்து – சிந்தா:12 2503/1
ஏர் வளர் பட்டம் ஏற்ப அணிந்து இருள் சுமந்து திங்கள் – சிந்தா:12 2536/2
கூந்தலும் முலையும் முத்தும் கோதையும் சுமந்து நைவான் – சிந்தா:12 2552/3
பெரு நாட்டு அரும் கலங்கள் சுமந்து பேரும் இடம் பெறாஅது – சிந்தா:12 2582/3
முழுதும் மெய்ந்நலம் மூழ்கலின் நீர் சுமந்து
எழுது கண் இரங்க புருவ கொடி – சிந்தா:13 2670/1,2
தீம் பால் சுமந்து முலை வீங்கி திரு முத்து ஈன்ற வலம்புரி போல் – சிந்தா:13 2702/1
துணித்து ஒரு துணி சுமந்து அனைய திண் பொறை – சிந்தா:13 2820/3
களித்து நீர் சுமந்து வாள் கண் கலாஅய் பிறழ்ந்து அலமந்து ஆட – சிந்தா:13 2898/3
தன் கழல் தொழாத மன்னர் தாம் சுமந்து ஏத்தி நின்ற – சிந்தா:13 2914/1
அரும் தவிசு ஆகி எம்மை சுமந்து அயா உயிர்த்த ஆண்மை – சிந்தா:13 2947/1
தெண் திரை நீத்தம் நீந்தி தீம் கதிர் சுமந்து திங்கள் – சிந்தா:13 2991/1
மெலிந்தனென் சுமந்து என நீக்கி மேல் நிலை – சிந்தா:13 3029/3
வண்டு சூழ் பூ பலி சுமந்து தான் வலம் – சிந்தா:13 3052/1
பகல் சுமந்து எழுதரும் பருதி அன்ன நின் – சிந்தா:13 3101/2

TOP


சுமப்ப (1)

நிலம் நெளி கடல் அம் தானை நிரந்து பூ சுமப்ப மன்னன் – சிந்தா:13 2641/2

TOP


சுமப்பது (1)

நோயே முலை சுமப்பது என்றார்க்கு அருகு இருந்தார் – சிந்தா:3 652/3

TOP


சுமாஅய் (1)

பகை கொண்டார் போல் சுமாஅய் கண்பின் பரூஉ காம்பு அனைய கணை கால் சூழ்ந்து – சிந்தா:13 2694/3

TOP


சுமை (4)

தாள் உடை தாமரை கிழிய வண் சுமை
கோள் உடை இளையவர் குழாம் கொண்டு ஏகலில் – சிந்தா:1 57/2,3
சேதா நறு நெய்யும் தீம் பால் சுமை தயிரும் – சிந்தா:2 481/1
வண்டு இனம் மிசை கொள வாச பூ சுமை
கொண்டவர் குழாம் பொலிவுற்றது ஆங்கு ஓர் பால் – சிந்தா:3 827/3,4
சுமை தயிர் வேய்ந்த சோற்றின் துய்த்து இனிது ஆக நம்மை – சிந்தா:13 2617/1

TOP


சுரக்கும் (4)

மோட்டு வளம் சுரக்கும் ஊரும் முழுது ஈந்து – சிந்தா:4 1042/2
மறவி ஒன்றானும் இன்றி மனத்ததே சுரக்கும் பால – சிந்தா:13 2877/3
நீத்த நீர் ஞாலம் எல்லாம் நிதி நின்று சுரக்கும் அன்றே – சிந்தா:13 2907/4
துன்பத்தை சுரக்கும் நான்கு கதி எனும் தொழுவில் தோன்றி – சிந்தா:13 3105/2

TOP


சுரந்த (3)

மன்றல் நாறு இலஞ்சி மேய்ந்து மா முலை சுரந்த பால் – சிந்தா:1 69/1
ஈன்று அருள் சுரந்த செல்வத்து இராசமாபுரம் அதாமே – சிந்தா:1 140/4
சுரந்த வெண் மதியை சூன்று கதிர் கொண்டு தொகுத்த போலும் – சிந்தா:3 629/3

TOP


சுரந்தன (1)

சுரந்தன சுடர் மணி பாண்டில் என்பவே – சிந்தா:13 2999/4

TOP


சுரந்து (4)

சுரந்து வானம் சூல் முதிர்ந்து மெய் நொந்து ஈன்ற துளியே போல் – சிந்தா:3 717/1
தே மென் கீதம் பாலா சுரந்து திறத்தின் ஊட்டி – சிந்தா:4 921/2
சுரந்து கொள்க என சுமக்க நல்குவார் – சிந்தா:12 2401/4
உற்று உயிர்க்கு தீம் பால் சுரந்து ஓம்பி உள்ளத்து – சிந்தா:13 3039/3

TOP


சுரம் (7)

வினைக்கும் செய்பொருட்கும் வெயில் வெம் சுரம்
நினைத்து நீங்குதல் ஆண் கடன் நீங்கினால் – சிந்தா:5 1400/1,2
மரம் கொல் யானையின் மதம் நாறு அரும் சுரம் அவன் செலற்கு எழுந்தான் – சிந்தா:7 1557/4
மின்னின் நடந்து மிகு சுரம் சென்றான் – சிந்தா:7 1612/4
ஆன்ற வெம் பாலை அழல் மிதித்து அன்ன அரும் சுரம் சுடர் மறை பொழுதின் – சிந்தா:10 2106/3
உலைவு இலார் நில்லாது ஒரு பகலுள்ளே உருப்பு அவிர் வெம் சுரம் கடந்தார் – சிந்தா:10 2107/4
புலம்பு நீள் சுரம் போய் கொணர்ந்து அருளொடும் கொடுத்தார் – சிந்தா:12 2378/4
நீர்-வாய் சுரம் போந்தார் தம்மை நினையாரோ – சிந்தா:13 2791/4

TOP


சுரமஞ்சரி (5)

சுண்ணம் உடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி – சிந்தா:0 13/1
துஞ்சா மணி பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து – சிந்தா:0 25/1
மௌவல் அம் குழலாள் சுரமஞ்சரி
கொவ்வை அம் கனி வாய் குணமாலையோடு – சிந்தா:4 874/2,3
பாவாய் பணை தோள் சுரமஞ்சரி தோற்றாள் – சிந்தா:4 1069/2
சோரும் காரிகையாள் சுரமஞ்சரி
ஆரம் சூடிய அம் முலை பூம் தடம் – சிந்தா:9 2005/1,2

TOP


சுரமை (1)

சோலை மஞ்ஞை சுரமை தன் சுண்ணமும் – சிந்தா:4 893/1

TOP


சுரமைய (1)

சுண்ண மங்கை சுரமைய மாலைய – சிந்தா:4 894/3

TOP


சுரரொடு (1)

சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளும் மாவும் – சிந்தா:3 723/3

TOP


சுரி (3)

சுரி முக வலம்புரி துவைத்த தூரியம் – சிந்தா:1 329/1
நீர் விளை சுரி சங்கு ஆர்ப்ப நிலம் நெளி பரந்த அன்றே – சிந்தா:2 433/4
ஊன் உடை கோட்டு நாகு ஆன் சுரி முக ஏற்றை ஊர்ந்து – சிந்தா:13 2901/1

TOP


சுரிகை (2)

அரும் பெறல் சுரிகை அம் பூம் கச்சு-இடை கோத்து வாங்கி – சிந்தா:3 698/2
இட்டி வேல் குந்தம் கூர் வாள் எரி நுனை சுரிகை கூட – சிந்தா:13 2764/1

TOP


சுரிகையும் (1)

புது கச்சு ஆர்ந்த பொன் வாளும் சுரிகையும்
கதுப்பின் நானமும் காமர் கலங்களும் – சிந்தா:7 1712/2,3

TOP


சுரிகையை (1)

காரகல் பொரிப்பர் கண்ணுள் சுரிகையை நடுவர் நெஞ்சில் – சிந்தா:13 2771/3

TOP


சுரிந்த (2)

நீண்ட தோள் நெடிய செம் கண் நீலமாய் சுரிந்த குஞ்சி – சிந்தா:7 1722/1
சுரிந்த தன் உளை மயிர் துறப்பது ஒத்தனன் – சிந்தா:13 3030/3

TOP


சுருக்கி (2)

சினம் தலை பெருக்கி தீ கோள் உறுப்பினை சுருக்கி தீ போல் – சிந்தா:7 1750/1
திருந்தினார் சிந்தை போலும் திண் சரம் சுருக்கி மாறாய் – சிந்தா:10 2204/2

TOP


சுருக்கு (1)

சுருக்கு கொண்டிட்ட வண்ணம் தோன்றல் எய்திடுதலோடும் – சிந்தா:10 2275/3

TOP


சுருக்கும் (1)

அத்தம் என மிக்க சுடர் அம் கதிர் சுருக்கும்
மொய்த்த மணி மாட மிசை அத்தக அடைந்தாள் – சிந்தா:9 2022/3,4

TOP


சுருங்க (1)

சொல் திறல் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் சுருங்க நாடி – சிந்தா:5 1222/1

TOP


சுருங்கார் (1)

பொன்றி வாடிய மேனியர் பொன் நிறை சுருங்கார்
சென்று காதலன் திரு விரி மரை மலர் அடி மேல் – சிந்தா:12 2380/2,3

TOP


சுருங்கி (3)

சூழ் துகள் மயக்கத்தானும் புளிஞர் உள் சுருங்கி சேக்கை – சிந்தா:2 449/3
அரும் பொருள் நீதி கேளா அரசனின் சுருங்கி நந்தும் – சிந்தா:12 2534/3
காமம் பை பய கழிய தம் கடை பிடி சுருங்கி
ஊமர் போல தம் உரை அவிந்து உறுப்பினில் உரையா – சிந்தா:13 2760/1,2

TOP


சுருங்கை (1)

சேண் நிலத்து இயற்றிய சித்திர சுருங்கை சேர் – சிந்தா:1 142/2

TOP


சுருட்டி (1)

பாசிலை சுருட்டி மைந்தன் கொடுக்கிய பரந்து மின்னும் – சிந்தா:8 1987/1

TOP


சுருட்டுபு (1)

பாசிலை சுருட்டுபு கறித்து பல்லினை – சிந்தா:6 1480/1

TOP


சுரும்பின் (2)

சோலை அம் சுரும்பின் சுண்ணம் தேற்றிய தோன்றல்-தன்னை – சிந்தா:4 897/1
சுரும்பின் வாய் துளித்தலின் துவைத்த வண்டொடு – சிந்தா:8 1936/2

TOP


சுரும்பு (28)

துடி தலை கரும் குழல் சுரும்பு உண் கோதை தன் – சிந்தா:1 194/1
களி முக சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோர – சிந்தா:1 298/1
சுரும்பு உடை அலங்கல் மாலை சுநந்தையும் துணைவன்-தானும் – சிந்தா:1 401/1
தோடு அலர் கோதை தொல் சீர் தார் அணி சுரும்பு உண்கண்ணி – சிந்தா:3 537/3
பண் நிற சுரும்பு சூழும் பனி முல்லை சூட்டு வேய்ந்தார் – சிந்தா:3 624/4
சுரும்பு எழுந்து இருந்து உணும் தொங்கல் வார் குழல் – சிந்தா:3 661/1
சுரும்பு சூழ் கண்ணி சூட்டி அவர்-கொலோ கயவர் சொல்லீர் – சிந்தா:3 678/4
சுரும்பு உண் கண்ணி சுதஞ்சணன் என்பவே – சிந்தா:4 952/4
சுரும்பு சூழ் குவளை ஓர் சுனை உண்டு அ சுனை – சிந்தா:5 1213/1
சுரும்பு சூழ் இலம்பக தோற்றம் ஒத்ததே – சிந்தா:6 1442/4
தோய் பிழி துளிக்கும் கண்ணி சுரும்பு சூழ் கொம்பு அனாளே – சிந்தா:7 1707/4
தேனொடு கடி சுரும்பு அரற்றும் தே மலர் – சிந்தா:7 1849/2
சொரி மது சுரும்பு உண் கண்ணி சூழ் கழல் நந்தன் என்றான் – சிந்தா:8 1925/4
சுரும்பு இமிர் மாலை தொழுவனர் நீட்டி – சிந்தா:10 2124/1
சுடர் நுதல் பட்டம் மின்ன சுரும்பு இமிர் கண்ணி சிந்த – சிந்தா:10 2182/2
கனைக்கும் சுரும்பு ஆர் மாலை கமழ மதுவும் தேனும் – சிந்தா:10 2194/2
சூடினான்-அரோ சுரும்பு உண் கண்ணியே – சிந்தா:12 2423/4
சுரும்பு ஆர் சோலை மயிலே குயிலே சுடர் வீசும் – சிந்தா:12 2453/3
சுரும்பு சூழ் மதத்த சூளாமணி எனும் சூழி யானை – சிந்தா:12 2522/3
தூ மலர் மாலை வாளா சுரும்பு எழ புடைத்தும் தேன் சோர் – சிந்தா:13 2656/1
சுரும்பு நின்று அறா மலர் தொங்கலார் கவின் – சிந்தா:13 2676/1
தொடை மலர் கண்ணி சேர்த்தி சுரும்பு உண மலர்ந்த மாலை – சிந்தா:13 2719/2
தூமம் ஆர்ந்து அணங்கு நாறும் சுரும்பு சூழ் தாரினானும் – சிந்தா:13 2888/1
சுரும்பு உலாம் கண்ணி விண்ணோர் துறக்கமும் வீடும் வேண்டேன் – சிந்தா:13 2902/2
சுரும்பு ஒலி கோதையார் தம் மனை-வயின் தூண்-தொறு ஊட்டும் – சிந்தா:13 2926/3
சுந்தர சுரும்பு சூழ் மாலை இல்லையேல் – சிந்தா:13 2936/3
சோலை-வாய் சுரும்பு இனம் தொழுது சொன்னவே – சிந்தா:13 3032/4
எறி சுரும்பு அரற்றும் மாலை எரி மணி செப்பு வெள்ளம் – சிந்தா:13 3047/1

TOP


சுரும்புகாள் (1)

எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள்
வண்டுகாள் மகிழ் தேன் இனங்காள் மது – சிந்தா:4 892/2,3

TOP


சுரும்பும் (1)

வான் ஆர் கமழ் மதுவும் சாந்தும் ஏந்தி மது துளித்து வண்டும் சுரும்பும் மூசும் – சிந்தா:9 2065/1

TOP


சுரும்பே (1)

நிறைந்த பூம் குருந்து உகு தேன் நீர் பெய்து ஆர்த்தன சுரும்பே – சிந்தா:7 1563/4

TOP


சுரும்பொடு (2)

சுரும்பொடு வண்டு பாட சுளிவொடு நின்றது அன்றே – சிந்தா:4 1076/4
சுரும்பொடு மணி வண்டு ஆர்க்கும் துகில் கொடி மாட வீதி – சிந்தா:13 3043/2

TOP


சுருள் (2)

சுருள் துணித்து ஒரு வழி தொகுத்தது ஒத்ததே – சிந்தா:12 2450/2
கொழு மடல் குமரி வாழை துகில் சுருள் கொண்டு தோன்ற – சிந்தா:13 2716/1

TOP


சுரை (3)

அம்மி மிதந்து ஆழ்ந்து சுரை வீழ்ந்தது அறம் சால்க என்று – சிந்தா:3 495/3
அம் சுரை பொழிந்த பால் அன்ன மென் மயிர் – சிந்தா:13 2896/1
அழலார் சுரை எயிற்று வெம் சின ஐம் தலை சுமந்த வெகுளி நாகம் – சிந்தா:13 2970/1

TOP


சுவர் (6)

கந்து மா மணி திரள் கடைந்து செம்பொன் நீள் சுவர்
சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண்பொனால் – சிந்தா:1 155/1,2
நன் செய் வெளி வேய்ந்து சுவர் தமனியத்தின் அமைத்தார் – சிந்தா:3 593/4
பாவை அவள் இருக்கும் இடம் பளிக்கு சுவர் இயற்றி – சிந்தா:3 594/1
பளிக்கு ஒளி மணி சுவர் எழினி பையவே – சிந்தா:3 655/1
மறை ஒளி மணி சுவர் இடையிட்டு இத்தலை – சிந்தா:3 656/2
சுவர் செய்து ஆங்கு எழுதப்பட்ட துகிலிகை பாவை ஒத்தார் – சிந்தா:12 2542/4

TOP


சுவர்கள்-தோறும் (1)

எங்கும் நல் சுவர்கள்-தோறும் நாடகம் எழுதி ஏற்ப – சிந்தா:1 108/3

TOP


சுவரையே (1)

தொட்டிமை உருவம் தோன்ற சுவரையே பொருந்தி நின்றாய் – சிந்தா:9 2085/2

TOP


சுவல் (3)

இட்ட உத்தரியம் மெல்லென்று இடை சுவல் வருத்த ஒல்கி – சிந்தா:2 472/1
செம் நுண் துகில் உத்தரியம் புதைந்து சுவல் வருத்த – சிந்தா:7 1783/2
கொய் சுவல் புரவி மான் தேர் குழு மணி ஓடை யானை – சிந்தா:13 3049/3

TOP


சுவாகதம் (1)

தோழியர் சுவாகதம் போதுக ஈங்கு என – சிந்தா:4 1021/2

TOP


சுவை (23)

பால் சுவை அறிந்து அவை பழன தாமரை – சிந்தா:1 47/1
கூடு கோல தீம் சுவை கோல யாழ் அரவமும் – சிந்தா:1 156/3
வசை இலாள் வரத்தின் வந்தாள் வான் சுவை அமிர்தம் அன்னாள் – சிந்தா:1 201/2
வான் சுவை அமிர்த வெள்ளம் வந்து இவண் தொக்கது என்ன – சிந்தா:1 373/1
தான் சுவை கொண்டது எல்லாம் தணப்பு அற கொடுத்த பின்றை – சிந்தா:1 373/2
அளப்ப அரும் சுவை கொள் நல் யாழ் ஆயிரம் அமைக என்றான் – சிந்தா:3 559/4
இன் சுவை யாழொடு அன்னம் இளம் கிளி மழலை மஞ்ஞை – சிந்தா:3 564/1
அட்ட சுவை வல்சியினொடு யாதும் ஒழியாமல் – சிந்தா:3 591/3
தேன் உயர் மகரவீணை தீம் சுவை இவளை வெல்வான் – சிந்தா:3 664/1
அடிசில் அம் சுவை மிக்கு ஆங்கு அண்ணல் அம் குமரன் ஒன்னார் – சிந்தா:3 805/2
வேற்று நாடு அதன் சுவை விடுத்தல் மேயினார் – சிந்தா:5 1176/3
தேவர் பண்ணிய தீம் தொடை இன் சுவை
மேவர் தென் தமிழ் மெய் பொருள் ஆதலின் – சிந்தா:5 1328/1,2
இங்கு சுவை இன் அமுதம் ஏந்த மிகு சான்றோன் – சிந்தா:9 2025/3
எங்கும் இலை இன்ன சுவை என்று உடன் அயின்றான் – சிந்தா:9 2025/4
தொட்டிமை உடைய வீணை செவி சுவை அமிர்தம் என்றான் – சிந்தா:9 2047/4
வண்ண சுவை அமுதம் வைக நாளும் கோவிந்தன் – சிந்தா:13 2604/2
தேன் இறால் அன தீம் சுவை இன் அடை – சிந்தா:13 2674/1
ஆடல் இன் சுவை அமர்ந்து நாள்-தொறும் – சிந்தா:13 2687/1
குய் வளம் கழுமி வெம்மை தீம் சுவை குன்றல் இன்றி – சிந்தா:13 2735/2
மை வரை மாலை மார்பன் வான் சுவை அமிர்தம் உண்டான் – சிந்தா:13 2735/4
அம் சுவை அடிசிலை அமர்ந்து உண்டார்கள் தாம் – சிந்தா:13 2941/2
கோள் புலி சுழல் கண் அன்ன கொழும் சுவை கருனை முல்லை – சிந்தா:13 2972/1
ஊட்டுறு கறி கொள் தேமாங்கனி சுவை தயிரொடு ஏந்தி – சிந்தா:13 2972/3

TOP


சுவைத்து (6)

தேன் சுவைத்து அரற்றும் பைம் தார் சீவககுமரன் என்ற – சிந்தா:1 373/3
ஊன் சுவைத்து ஒளிறும் வேலாற்கு உறுதி ஒன்று உரைக்கல் உற்றான் – சிந்தா:1 373/4
ஊன் சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் நன்றோ – சிந்தா:5 1235/1
தடி சுவைத்து ஒளிறும் வேலான் தன் கையால் முன் கை பற்றி – சிந்தா:7 1685/3
துன்னரும் களி கொள் காம கொழும் கனி சுவைத்து விள்ளான் – சிந்தா:8 1985/4
பாடல் மெய்ந்நிறீஇ பருகி பண் சுவைத்து
ஓடு மா மதி உரிஞ்சும் ஒண் பொனின் – சிந்தா:13 2687/2,3

TOP


சுவைத்தும் (1)

நாறியும் சுவைத்தும் நரம்பின் இசை – சிந்தா:5 1351/1

TOP


சுவையின் (1)

சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான் – சிந்தா:4 933/3

TOP


சுழல் (2)

சுழல் ஆர் பசும்பொன்னும் வேய்ந்து சொரி கதிர் மென் பஞ்சி ஆர்ந்த – சிந்தா:13 2970/3
கோள் புலி சுழல் கண் அன்ன கொழும் சுவை கருனை முல்லை – சிந்தா:13 2972/1

TOP


சுழல்வாரே (1)

நெய்யும் நுண் நூல் நாழிகையின் நிரம்பா நின்று சுழல்வாரே – சிந்தா:13 3019/4

TOP


சுழல (2)

சுழல காடு போய் கன்று தாம்பு அரிந்து – சிந்தா:2 422/2
ஒள் அழல் கொள்ளி வட்டம் போல் குலாய் சுழல பொன் ஞாண் – சிந்தா:10 2203/2

TOP


சுழலும் (2)

சுழலும் கண்ணினன் சோர்தரும் மாலையன் – சிந்தா:4 939/2
சுழலும் கண்களும் சூடு உறு பொன் என – சிந்தா:6 1511/2

TOP


சுழற்றி (1)

ஆவியும் புகை சுழற்றி ஆடியும் – சிந்தா:12 2426/3

TOP


சுழன்று (3)

சுறா நிற கொடும் குழை சுழன்று எருத்து அலைத்தர – சிந்தா:3 703/1
மின்னோடு அவை சுழன்று ஆயிடை விளையாடுகின்றன போல் – சிந்தா:10 2264/2
கொண்டு அழல் கடவுள் பொங்கி வலம் சுழன்று எழுந்தது என்ப – சிந்தா:12 2466/3

TOP


சுழி (3)

அம் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ் – சிந்தா:1 172/1
கங்கையின் சுழி அலைக்கும் கண் கொளா நுடங்கு இடையை – சிந்தா:1 172/2
நிலம் கொண்டு ஓங்கின நிரம்பின புகர் சுழி உடைய – சிந்தா:7 1770/2

TOP


சுழித்து (1)

சுழித்து நின்று அறாத கற்பின் சுநந்தையே ஆக என்பார் – சிந்தா:12 2551/4

TOP


சுழிந்து (1)

வலம் சுழிந்து அமைவர குழிந்த வாய்ப்பொடு – சிந்தா:6 1463/3

TOP


சுழியில் (1)

கங்கையின் சுழியில் பட்ட காமரு பிணையின் மாழ்கி – சிந்தா:4 1096/1

TOP


சுழியுள் (1)

எழுது ஆர் மணி குவளை கண் வலையுள் பட்டு இமையார்கள் காமம் அறு சுழியுள் ஆழ்ந்து – சிந்தா:13 3137/3

TOP


சுள்ளி (1)

சுள்ளி வேலியின் நீங்கி துறக்கம் புக்கிடும் என சூழ்ந்து – சிந்தா:7 1565/2

TOP


சுள்ளியும் (1)

சுனைய நீலமும் சுள்ளியும் சூழ் மலர் – சிந்தா:7 1608/1

TOP


சுளகு (1)

சுளகு வார் செவி தூங்குகை குஞ்சரம் – சிந்தா:7 1778/3

TOP


சுளி (1)

சுளி முக களிறு அனான்-தன் சொல் நய நெறியில் போய – சிந்தா:1 298/3

TOP


சுளித்து (1)

விண்டவர் உடலம் கீறி சுளித்து நின்று அழலும் வேழம் – சிந்தா:10 2151/1

TOP


சுளிவின் (1)

பூண் உடை முலையின் பாரம் பொறுக்கலா சுளிவின் மேலும் – சிந்தா:12 2461/2

TOP


சுளிவொடு (1)

சுரும்பொடு வண்டு பாட சுளிவொடு நின்றது அன்றே – சிந்தா:4 1076/4

TOP


சுளை (2)

மார்பு கொண்டு ஆர்ந்து அது நரல வண் சுளை
ஆர்புறு பலா பழம் அழிந்த நீள் களம் – சிந்தா:1 58/2,3
வம்புற கனி மா தொடு வார் சுளை
பைம் புற பலவிற்று ஒருபால் எல்லாம் – சிந்தா:4 869/3,4

TOP


சுளைகள் (1)

பண் உறு சுளைகள் கையால் பகுத்து உண கொடுத்தது அன்றே – சிந்தா:13 2724/4

TOP


சுளைகளும் (1)

சொன்ன நல் மலரும் அல்லனவும் வீழ் பலவின் சூழ் சுளைகளும்
நன்மை நூலின் நயம் தோன்ற நன் பொன் விரல் நுதியினால் – சிந்தா:7 1652/1,2

TOP


சுளையும் (1)

அள் இலை பலவின் அளிந்து வீழ் சுளையும் கனிந்து வீழ் வாழையின் பழனும் – சிந்தா:10 2109/1

TOP


சுற்றத்தார்க்கு (1)

சுற்றத்தார்க்கு உரைப்ப ஈண்டி தொக்கு உடன் தழுவிக்கொள்வார் – சிந்தா:9 2096/2

TOP


சுற்றத்தார்க்கும் (1)

செல்வ நாமற்கும் சித்திரமாமாலைக்கும் சுற்றத்தார்க்கும்
அல்லல் செய்தேன் அவண் சென்றால் என் உரைக்கேன் என் செய்கேனோ – சிந்தா:7 1591/3,4

TOP


சுற்றத்தாரோ (1)

தொலைப்பரும் சுற்றத்தாரோ பகைவரோ அடிகள் என்ன – சிந்தா:13 2884/3

TOP


சுற்றம் (10)

மதுர மா மக்கள் சுற்றம் வினவி மற்று இதுவும் சொன்னான் – சிந்தா:3 543/4
திரு மலி ஈகை போகம் திண் புகழ் நண்பு சுற்றம்
ஒருவர் இ உலகில் யாரே சீவகன் ஒக்கும் நீரார் – சிந்தா:4 1165/2,3
எழுமையும் பெறுக இன்ன இளம் கிளை சுற்றம் என்றாள் – சிந்தா:7 1730/3
காதல் நம் சுற்றம் எல்லாம் கை இலங்கு எஃகம் ஏந்தி – சிந்தா:7 1748/3
சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் சூது-அரோ – சிந்தா:8 1921/3
எம் சுற்றம் என்று இரங்காது ஆகம் எல்லாம் கவர்ந்து இருந்து – சிந்தா:12 2502/1
தம் சுற்றம் வேண்டாத முலை கீழ் வாழ்வு தளர்கின்ற – சிந்தா:12 2502/2
நல்கூர்ந்தார்க்கு இல்லை சுற்றம் என்று நுண் நுசுப்பு நைய – சிந்தா:12 2535/3
ஒளிறு வேல் சுற்றம் எல்லாம் உடைந்த பின் ஒருவன் ஆனான் – சிந்தா:13 2613/3
ஆதலால் சுற்றம் இல்லை அது பட்டவாறு என்று அம் பூம் – சிந்தா:13 2885/3

TOP


சுற்றமா (1)

ஆழ் கடல் சுற்றமா அழன்று சீவக – சிந்தா:3 775/3

TOP


சுற்றமே (1)

இல்லினுள் இரண்டு நாளை சுற்றமே இரங்கல் வேண்டா – சிந்தா:1 270/4

TOP


சுற்றமோடு (1)

அற்றம் இல் பெரும் படை சுற்றமோடு இயங்கினாள் – சிந்தா:3 565/2

TOP


சுற்றா (1)

எண்ணினன் எண்ணி நொய்தா இன மலர் மாலை சுற்றா
வண்ண பொன் கடகம் ஏற்றா வார் கச்சில் தானை வீக்கா – சிந்தா:4 978/2,3

TOP


சுற்றார் (3)

சுற்றார் வல் வில் சூடுறு செம்பொன் கழல் நாய்கன் – சிந்தா:4 1054/3
சுற்றார் வல் வில் சூடுறு செம்பொன் கழலாற்கு – சிந்தா:4 1057/1
இட்டி வேல் குந்தம் கூர்வாள் இரும் சிலை இருப்பு சுற்றார்
நெட்டிலை சூலம் வெய்ய முளைத்தண்டு நெருங்க ஏந்தி – சிந்தா:4 1136/1,2

TOP


சுற்றி (4)

வல்லிதின் சலாகை சுற்றி ஓலையை வாசிக்கின்றான் – சிந்தா:3 669/4
அரு வரை நாகம் சுற்றி ஆழியான் கடைய அன்று – சிந்தா:3 812/1
இத்தலை இவர்கள் ஏக இமயம் நட்டு அரவு சுற்றி
அத்தலை அலற முந்நீர் கடைந்தவர் அரவம் ஒப்ப – சிந்தா:4 963/1,2
சுற்றி வள்ளலை சோர்வு இன்றி யாத்திட்டாள் – சிந்தா:5 1295/3

TOP


சுற்றிய (1)

சுற்றிய தோழிமாரை விடுத்தனன் தொழுது நின்றான் – சிந்தா:5 1222/3

TOP


சுற்றினார் (1)

சுற்றினார் முகத்தை நோக்கி சூழி மால் யானை அன்னான் – சிந்தா:4 1139/2

TOP


சுற்று (1)

சுற்று அணி கொடும் சிலை மேகம் தூவிய – சிந்தா:3 780/1

TOP


சுற்றுபு (2)

துணிவு உடை காப்பு கட்டி சுற்றுபு தொழுது காத்தார் – சிந்தா:5 1344/4
சுற்றுபு மாலை போல தோன்றல் தன் நுதலில் சூடி – சிந்தா:10 2247/2

TOP


சுற (2)

கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுற தடம் கிடங்கு – சிந்தா:1 142/3
சுற கடல் அனைய தானை துளங்க போர் செய்தது அன்றே – சிந்தா:13 3075/4

TOP


சுறவு (6)

இருந்தனன் ஏம முந்நீர் எறி சுறவு உயர்த்த தோன்றல் – சிந்தா:1 401/3
சுறவு அணி சூழ் கிடங்கு ஆர் எயில் மூதூர் – சிந்தா:2 427/3
கடல் சுறவு உயரிய காளை அன்னவன் – சிந்தா:5 1173/1
இரும் சுறவு உயர்த்த தோன்றல் ஏத்த அரும் குருசில்-தான்-கொல் – சிந்தா:5 1261/2
நாகம் மருப்பின் இயன்ற தோடும் நலம் கொள் சுறவு குழையும் – சிந்தா:12 2440/1
சுறவு கொடி கடவுளொடு காலன் தொலைத்தோய் எம் – சிந்தா:13 3091/1

TOP


சுறா (6)

கோள் சுறா இனத்தொடு முதலை குப்பைகள் – சிந்தா:1 95/1
சுறா நிற கொடும் குழை சுழன்று எருத்து அலைத்தர – சிந்தா:3 703/1
தூ திரள் சுறா இனம் தொக்க போல் மறவரும் – சிந்தா:7 1845/3
அடு திறல் எறி சுறா ஆக காய்ந்தன – சிந்தா:10 2223/3
நீல நீர் சுறா இனம் போல் நெய்த்தோருள் பிறழ்ந்தனவே – சிந்தா:10 2236/4
ஏற்று மீன் இரிய பாய்ந்த எறி சுறா ஏறு போன்றான் – சிந்தா:10 2283/4

TOP


சுறாக்கள் (1)

ஏற்று இளம் சுறாக்கள் எங்கும் கிடந்தவை போல ஒத்தார் – சிந்தா:10 2267/4

TOP


சுறாவு (1)

எறி சுறாவு இளையவர் ஏந்து பூம் கொடி – சிந்தா:6 1446/1

TOP


சுனை (14)

விலக்கு இல் சாலை யாவர்க்கும் வெப்பின் மு பழ சுனை
தலை தணீர் மலர் அணிந்து சந்தனம் செய் பந்தரும் – சிந்தா:1 75/1,2
குன்று அயல் மணி சுனை குவளை கண் விழிப்பவும் – சிந்தா:1 148/2
உக்க தேனினோடு ஊறி வார் சுனை
ஒக்க வாய் நிறைந்து ஒழுகு குன்றின் மேல் – சிந்தா:2 414/2,3
மணி இயல் பாலிகை அனைய மா சுனை
அணி மணி நீள் மலர் அணிந்தது ஆயிடை – சிந்தா:5 1209/1,2
சுரும்பு சூழ் குவளை ஓர் சுனை உண்டு அ சுனை – சிந்தா:5 1213/1
சுரும்பு சூழ் குவளை ஓர் சுனை உண்டு அ சுனை
மருங்கில் ஓர் மணி சிலா வட்டம் உண்டு அவண் – சிந்தா:5 1213/1,2
சிலம்பு சென்று எதிர் கூவுநர் செய் சுனை
கலங்க பாய்ந்து உடன் ஆடுநர் காதலின் – சிந்தா:5 1319/2,3
பரல் தலை முரம்பின் சில் நீர் வறும் சுனை பற்று விட்ட – சிந்தா:5 1385/3
சுனை மலர் குவளை குற்று சூழ் மலர் கண்ணி சூட்டி – சிந்தா:6 1495/3
தீம் சுனை அருவி குன்றம் சீர் பெற ஏறினானே – சிந்தா:6 1497/4
வண்ண மா சுனை மா நீர் மணி தெளித்து அனையது ததும்பி – சிந்தா:7 1566/2
சுனை வளர் குவளை உண்கண் சுமதிக்கு செவிலி செப்ப – சிந்தா:9 2075/2
தேன் நெய் வார் சுனை உண்டு திளைத்து உடன் – சிந்தா:13 3067/2
அழிக்கும் அம் சுனை ஆடும் ஓர்பால் எலாம் – சிந்தா:13 3069/4

TOP


சுனைகள் (1)

சுனைகள் கண்கள் ஆக சூழ்ந்த குவளை விழியா – சிந்தா:6 1417/1

TOP


சுனைய (1)

சுனைய நீலமும் சுள்ளியும் சூழ் மலர் – சிந்தா:7 1608/1

TOP