மீ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீ 3
மீக்கூர்தலாலே 1
மீக்கூறிற்று 1
மீக்கொள் 1
மீசை 1
மீட்க 1
மீட்கலாம் 1
மீட்ட 1
மீட்டவன் 1
மீட்டனள் 1
மீட்டனன் 1
மீட்டார் 1
மீட்டான் 2
மீட்டு 4
மீட்டும் 2
மீட்பார் 1
மீண்ட 1
மீண்டன 1
மீண்டார் 1
மீண்டாள் 1
மீண்டான் 3
மீண்டு 4
மீண்டேன் 1
மீது 11
மீமிசை 2
மீள்வான் 2
மீளா 2
மீளி 3
மீளிமை 4
மீன் 32
மீன்கள் 3
மீன்களும் 1
மீனத்து-இடை 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மீ (3)

விழும் மீ நிலம் எய்தி மிளிர்ந்து உருகா – சிந்தா:5 1384/3
மேல் எழுந்த மீ நிலத்த விரல கைய ஆகுமே – சிந்தா:8 1954/4
விரவி மீ நிலம் சேர்ந்து ஒளி பூத்து உராய் – சிந்தா:12 2396/3

TOP


மீக்கூர்தலாலே (1)

காளை ஆம் பருவம் ஓராள் காதல் மீக்கூர்தலாலே
வாளை ஆம் நெடிய கண்ணாள் மகனை மார்பு ஒடுங்க புல்லி – சிந்தா:8 1912/1,2

TOP


மீக்கூறிற்று (1)

நிலை இலா உலகின் தன்மை நீர்மை மீக்கூறிற்று அன்றே – சிந்தா:13 2976/4

TOP


மீக்கொள் (1)

ஒன்றிய உதிர செச்சை ஒள் நிணம் மீக்கொள் தானை – சிந்தா:4 1080/3

TOP


மீசை (1)

மீசை நீள் விசும்பில் தலைச்சென்றது ஓர் – சிந்தா:4 911/3

TOP


மீட்க (1)

காற்றின் விரைந்து தொறு மீட்க என காவல் மன்னன் – சிந்தா:2 432/3

TOP


மீட்கலாம் (1)

மீட்கலாம் விருப்பு உடைத்து எழுக என்று தன் – சிந்தா:7 1826/3

TOP


மீட்ட (1)

மா மகள் உயிரை மீட்ட வலத்தினன் ஆதலானும் – சிந்தா:5 1339/2

TOP


மீட்டவன் (1)

உடைய ஆகத்து உறு துயர் மீட்டவன்
இடையது ஆகும் என் ஆரும் இல் ஆவியே – சிந்தா:5 1312/3,4

TOP


மீட்டனள் (1)

தன்னை எய்தி சிறை மீட்டனள் தன் மனையாள் எனின் – சிந்தா:4 1149/2

TOP


மீட்டனன் (1)

கோள் உற்ற கோவன் நிரை மீட்டனன் என்று கூற – சிந்தா:2 455/2

TOP


மீட்டார் (1)

வரு களி யானை மீட்டார் வாள் படை வாங்கி கொண்டார் – சிந்தா:3 810/4

TOP


மீட்டான் (2)

எஞ்சிய உயிரை மீட்டான் இவன் அலால் இல்லை என்பார் – சிந்தா:5 1296/2
பொன்றிய உயிரை மீட்டான் பூஞ்சிகை போது வேய்ந்தான் – சிந்தா:5 1342/1

TOP


மீட்டு (4)

தோள் வாய் சிலையின் ஒலியால் தொறு மீட்டு மீள்வான் – சிந்தா:2 454/3
வெம் சிலையின் வேடர் தொறு மீட்டு விசும்பு ஏகும் – சிந்தா:7 1796/1
மெய்ப்பட உணர்வு தோன்றி மீட்டு இது கூறினானே – சிந்தா:13 2726/4
வெம் தடி தின்ற வெம் நோய் வேகத்தால் மீட்டு மாலை – சிந்தா:13 2765/1

TOP


மீட்டும் (2)

வேட்கை நாகத்தின் மீட்டும் கொளப்பட்டாள் – சிந்தா:5 1292/4
மீட்டும் அங்கு இருந்தான் விடை ஏறு அனான் – சிந்தா:7 1634/4

TOP


மீட்பார் (1)

இறந்த நாள் யாவர் மீட்பார் இற்று என பெயர்க்கலாமோ – சிந்தா:13 2616/4

TOP


மீண்ட (1)

மேவிய பொருளொடு மீண்ட பின் அலால் – சிந்தா:4 1013/2

TOP


மீண்டன (1)

கீதத்தான் மீண்டன கேள்வி கின்னரம் – சிந்தா:3 660/2

TOP


மீண்டார் (1)

அம்பு கொண்டு அரசர் மீண்டார் ஆ கொண்டு மறவர் போனார் – சிந்தா:2 439/3

TOP


மீண்டாள் (1)

உரைத்திட்டது என்றே வேல் கணாள் பரவி மீண்டாள் – சிந்தா:9 2058/4

TOP


மீண்டான் (3)

கல் மலிந்து இலங்கு திண் தோள் கலிங்கர்கோன் மெலிந்து மீண்டான் – சிந்தா:10 2187/4
கை படு பொருள் இலாதான் காமம் போல் காளை மீண்டான் – சிந்தா:10 2259/4
தோட்டியால் தொடக்க பட்ட சொரி மத களிற்றின் மீண்டான் – சிந்தா:13 2729/4

TOP


மீண்டு (4)

மீண்டு அவர் ஏகுதலும் விடை அன்னவன் – சிந்தா:4 942/1
மின் இலங்கு எஃகினானை பெறுகலான் தந்தை மீண்டு
தன் இலம் குறுகலோடும் தாய் அழுது அரற்றுகின்றாள் – சிந்தா:4 1123/1,2
மின் அவிர் கணையின் பல்-கால் பிழைப்பு எய்து மீண்டு நிற்ப – சிந்தா:7 1640/2
செறி தவ விசயை பாதம் சென்னியின் வணங்கி மீண்டு
வெறி கமழ் சோலை நண்ணி வேண்டிய அடிசில் கை தொட்டு – சிந்தா:7 1818/2,3

TOP


மீண்டேன் (1)

பெடை மயில் சாயலாள் தன் பேது கண்டு ஆங்கு மீண்டேன் – சிந்தா:7 1744/4

TOP


மீது (11)

பொங்கு திரை மீது பொரு மால் களிறு போன்றோர் – சிந்தா:3 493/3
நையா நடுநடுங்கா நனி நாணம் மீது ஊரா – சிந்தா:3 736/2
விதி கண்டவர் அல்லது மீது செலார் – சிந்தா:5 1186/3
மீது வண்டு அரற்றும் கண்ணி விடலையை தானும் கண்டான் – சிந்தா:5 1262/3
கழிந்து மீது ஆடல் காலம் பிழைப்பு என எட்டின் ஆகும் – சிந்தா:5 1286/2
பொங்கி மீது எழுந்து போய் பிறழ்ந்து பாய்தல் இன்றியே – சிந்தா:8 1953/3
வார் மீது ஆடி வடம் சூடி பொற்பு ஆர்ந்து இருந்த வன முலையார் – சிந்தா:11 2359/1
ஏர் மீது ஆடி சாந்து எழுதி இலங்கு முந்நீர் வலம்புரி போல் – சிந்தா:11 2359/2
கார் மீது ஆடி கலம் பொழியும் கடக தட கை கழலோனை – சிந்தா:11 2359/3
போர் மீது ஆடி புறம் கண்ட புலால் வேல் மன்னர் புடை சூழ்ந்தார் – சிந்தா:11 2359/4
நரம்பு மீது இறத்தல் செல்லா நல் இசை முழவும் யாழும் – சிந்தா:12 2596/1

TOP


மீமிசை (2)

வெண்ணெய் வெம் கனல் மீமிசை வைத்தது ஒத்து – சிந்தா:5 1309/3
ஆங்கு உருக்கார் அரக்கு இட்டு அதன் மீமிசை
பூம் குழையால் பொறி ஒற்றுபு நீட்ட – சிந்தா:7 1768/1,2

TOP


மீள்வான் (2)

தோள் வாய் சிலையின் ஒலியால் தொறு மீட்டு மீள்வான்
நாள் வாய் நிறைந்த நகை வெண் மதி செல்வது ஒத்தான் – சிந்தா:2 454/3,4
உணர்ந்து தன் மதலை ஏற்றி ஒருப்படுத்து ஊர்க்கு மீள்வான் – சிந்தா:3 505/4

TOP


மீளா (2)

மீளா மணிமேகலை மின்னின் மிளிர – சிந்தா:4 1074/2
மீளா துன்ப நீள் கடல் மின்னின் மிசை வீழ்ந்தாள் – சிந்தா:4 1093/4

TOP


மீளி (3)

வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோல் – சிந்தா:1 141/1
மீளி அம் களிறு அனாய் யான் மெய்ந்நெறி நிற்பல் என்றான் – சிந்தா:1 405/4
மீளி வேல் குருசிற்கு உற்றார்க்கு உற்றது விளம்பலுற்றேன் – சிந்தா:7 1694/4

TOP


மீளிமை (4)

தட கை மீளிமை தாங்கு-மின் அன்று-எனின் – சிந்தா:4 940/3
மீளிமை செய்யின் வெய்ய நண்ப நின் நினைப்பது அல்லால் – சிந்தா:4 958/2
மிக ஆயது ஒர் மீளிமை செய்தனனோ – சிந்தா:5 1382/1
மிகு கொடா முத்தம் சூட்டி மீளிமை தீர்த்து மின்னும் – சிந்தா:6 1486/1

TOP


மீன் (32)

மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பில் – சிந்தா:0 6/1
மதியம் கெடுத்த வய மீன் என தம்பி மாழாந்து – சிந்தா:0 23/1
மீன் கணின் அளவும் வெற்று இடங்கள் இன்மையால் – சிந்தா:1 54/1
இறைகொள் வானின் மீன் என அரம்பை முலையின் இருந்தவே – சிந்தா:1 74/4
வானத்தின் வழுக்கி திங்கள் கொழுந்து மீன் குழாங்கள் சூழ – சிந்தா:1 387/1
காய மீன் என கலந்து கான் நிரை – சிந்தா:2 421/1
மீன் சேர் குழாம் அனைய மேகலையும் வெம் முலையும் கூற்றம் கூற்றம் – சிந்தா:3 637/1
வானம் மீன் அரும்பி மலர்ந்து – சிந்தா:3 726/1
மீன் எறி தூண்டில் போன்ற வெம் சிலை நாண்கள் அற்ற – சிந்தா:3 800/1
கோள் மின்னும் மீன் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே – சிந்தா:4 882/4
ஊற்று நீர் கூவலுள் உறையும் மீன் அனார் – சிந்தா:5 1176/2
வெண் மதி இழந்த மீன் போல் புல் என எய்தி நின்ற – சிந்தா:5 1215/3
வான் உகுக்குகின்ற மீன் போல் மணி பரந்து இமைக்கும் மார்பில் – சிந்தா:5 1266/3
திங்கள் சூழ்ந்த பல் மீன் என செல் நெறி – சிந்தா:5 1337/1
விரி கதிர் விளங்கு பன் மீன் கதிரொடு மிடைந்து திங்கள் – சிந்தா:5 1352/1
மீன் சென்ற நெறியும் போல விழித்து இமைப்பவர்க்கு தோன்றா – சிந்தா:5 1390/2
வெண் மதி இழந்த மீன் போல் விடலைக்கு தம்பி மாழாந்து – சிந்தா:7 1695/1
தூவி மட நாரை துணை அன்னம் பயில் முது மீன்
மேவி உறை வண்டினொடு மல்கி விழைதகைய – சிந்தா:7 1781/2,3
அண்ணலை கழி மீன் கவர் புள் என – சிந்தா:8 1949/2
உலந்த நாள் அவர்க்கு தோன்றாது ஒளிக்கும் மீன் குளிக்கும் கற்பின் – சிந்தா:10 2141/1
ஏற்று மீன் இரிய பாய்ந்த எறி சுறா ஏறு போன்றான் – சிந்தா:10 2283/4
கோட்டு மீன் குழாத்தின் மள்ளர் ஈண்டினர் மன்னர் சூழ்ந்தார் – சிந்தா:10 2325/1
மோட்டு மீன் குழாத்தின் எங்கும் தீவிகை மொய்த்த முத்தம் – சிந்தா:10 2325/2
வான் முகம் புதைத்த பல் மீன் மதி என மருண்டு நோக்க – சிந்தா:12 2415/3
வாளை மீன் தடிகள் தின்றார் வருக என உருக வெந்த – சிந்தா:13 2768/1
சோலை மீன் அரும்பி திங்கள் சுடரொடு பூத்ததே போல் – சிந்தா:13 2835/1
விழித்து வியன் கோயில் பன் மீன் பரந்து இமைக்கும் பனியார் வானம் – சிந்தா:13 2969/3
தொழுதி பன் மீன் குழாம் சூழ துளும்பாது இருந்த திங்கள் போல் – சிந்தா:13 3020/1
அந்தரத்து அலர்ந்த பன் மீன் எனைத்து உள அனைத்தும் மாதோ – சிந்தா:13 3048/4
உம்பர் மீன் என தோன்றும் ஓர்பால் எலாம் – சிந்தா:13 3066/4
விண் இயங்கு அருக்கன் வீழ்ந்து மீன் நிலம் கொள்வதே போல் – சிந்தா:13 3085/1
மீன் தயங்கு திங்கள் முக நெடும் கண் மெல் இயலார் – சிந்தா:13 3102/1

TOP


மீன்கள் (3)

பருதியின் முன்னர் தோன்றா மறைந்த பல் மீன்கள் ஒத்தார் – சிந்தா:4 974/4
திங்கள் நலம் சூழ்ந்த திரு மீன்கள் என செம்பொன் – சிந்தா:9 2025/1
வலையினால் மீன்கள் வாரி வாழ் உயிர் கூற்றம் ஆன – சிந்தா:13 2770/2

TOP


மீன்களும் (1)

விண் இடை நுடங்கு மின்னும் மீன்களும் பொருவ போல – சிந்தா:4 969/3

TOP


மீனத்து-இடை (1)

மீனத்து-இடை நாள் கிழமை வெள்ளி சயை பக்கம் – சிந்தா:3 590/3

TOP