ச – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கரம் 2
சக்கரமும் 1
சகடம் 1
சகடமும் 1
சங்க 2
சங்கம் 6
சங்கமும் 2
சங்கமே 1
சங்கமொடு 1
சங்கின் 2
சங்கினுள் 1
சங்கு 15
சங்கும் 7
சச்சந்தன் 5
சச்சந்தனனே 1
சச்சந்தனை 1
சட்டகம் 1
சடை 6
சடைய 1
சடையம் 1
சடையார் 1
சண்ட 1
சண்பக 6
சண்பகத்தின் 1
சண்பகத்து 2
சண்பகம் 9
சத்தி 1
சதங்கை 2
சதுக்கங்கள் 1
சதுமுகம் 1
சந்த 1
சந்தன 21
சந்தனம் 14
சந்தனமும் 2
சந்திர 1
சந்திரகாந்தம் 1
சந்திராபம் 1
சந்தின் 2
சந்தினவாய் 1
சந்து 5
சந்தும் 1
சந்தொடு 1
சமத்து-இடை 1
சமம் 3
சமழாது 1
சமிதை 2
சமிதைகள் 1
சமுத்திரம் 1
சமைந்தது 1
சயமதி 2
சயனம் 1
சயை 1
சரங்கள் 4
சரங்களின் 1
சரண் 4
சரணம் 1
சரத்தில் 1
சரம் 15
சரிதம் 2
சரிதமும் 1
சரிதை 1
சரிந்து 1
சருக்கரை 1
சரை 1
சல 3
சலஞ்சல 1
சலஞ்சலம் 4
சலாகை 4
சவட்டி 1
சவரர் 2
சவி 1
சவிய 1
சளி 1
சன 1
சனங்கள் 1
சனத்தினால் 1
சனம் 7

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சக்கரம் (2)

தாமரை சதங்கை மாலை சக்கரம் என்ன வீழ்த்தும் – சிந்தா:13 2656/2
தாங்கும் மா வண் கை சக்கரம் மிக்கு உயர் பிறரும் – சிந்தா:13 2761/3

TOP


சக்கரமும் (1)

கனை கடும் கதழ் பரி கால சக்கரமும் போல் – சிந்தா:7 1839/2

TOP


சகடம் (1)

கரும் பொன் இயல் பன்றி கத நாகம் விடு சகடம்
குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண் நூல் – சிந்தா:1 104/1,2

TOP


சகடமும் (1)

பைம்பொன் பூமி பல் கதிர் முத்து ஆர் சகடமும்
செம்பொன் தேரும் வேழமும் ஊர்ந்து நிதி சிந்தி – சிந்தா:1 363/2,3

TOP


சங்க (2)

சங்க நீள் நிதியால் தழைக்கின்றதே – சிந்தா:1 139/4
சங்க வெண் மலையின் மற்று சந்திர உதயத்தின் உச்சி – சிந்தா:4 955/3

TOP


சங்கம் (6)

அடு திரை சங்கம் ஆர்ப்ப அணி நகர் முன்னினானே – சிந்தா:3 701/4
முரசம் கறங்க முழவு விம்ம வெண் சங்கம் ஆர்ப்ப – சிந்தா:4 1063/2
தார் முயங்கி கூந்தல்மா இவர்ந்தான் சங்கம் முரன்றவே – சிந்தா:7 1888/4
சங்கம் மத்தகத்து அலமர தரணி மேல் களிறு அழியவும் – சிந்தா:10 2306/2
உண்டு உயிர் சிலர் கண் வாழ்க என்று உத்தரா சங்கம் வைத்தார் – சிந்தா:12 2457/3
முரல் வாய சூல் சங்கம் முட முள் தாழை முகை விம்மும் – சிந்தா:12 2558/1

TOP


சங்கமும் (2)

முழவும் சங்கமும் முன்றில் முழங்குவ – சிந்தா:1 138/1
காது ஆர் குழையும் கடல் சங்கமும் குங்குமமும் – சிந்தா:11 2349/1

TOP


சங்கமே (1)

சிலம்பின இய மரம் தெழித்த சங்கமே – சிந்தா:3 779/4

TOP


சங்கமொடு (1)

ஆங்கண் மால் உலகு அளப்பான் ஆழி சங்கமொடு ஏந்தி – சிந்தா:7 1559/3

TOP


சங்கின் (2)

குழுவாய் சங்கின் குரல் ஒலியும் கொலை வல் யானை செவி புடையும் – சிந்தா:11 2355/3
விலங்கு அரம் பொருத சங்கின் வெள் வளை தெளிர்க்கும் முன்கை – சிந்தா:12 2441/1

TOP


சங்கினுள் (1)

சங்கினுள் முத்தம் ஒப்பாள் சயமதி பயந்த நம்பி – சிந்தா:13 2856/2

TOP


சங்கு (15)

முந்நீர் படு சங்கு அலற முரசு ஆர்ப்ப மூதூர் – சிந்தா:0 12/1
சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலை – சிந்தா:1 145/1
நீர் விளை சுரி சங்கு ஆர்ப்ப நிலம் நெளி பரந்த அன்றே – சிந்தா:2 433/4
சங்கு தரு நீள் நிதியம் சால உடை நாய்கன் – சிந்தா:3 493/2
திரைகள் தரும் சங்கு கலம் தாக்கி திரள் முத்தம் – சிந்தா:3 502/1
சங்கு உடைந்து அனைய வெண் தாமரை மலர் தடங்கள் போலும் – சிந்தா:3 547/1
எங்கும் மன்னர் ஈண்டினர் சங்கு விம்மு தானையார் – சிந்தா:3 575/2
சங்கு வாய் வைத்து நம்பன் தெழித்தலும் தறுகண் ஆளி – சிந்தா:3 811/2
சிறு வெண் சங்கு முரன்றன திண் முரசு – சிந்தா:10 2168/1
நிழன்றன சாமரை நிரை சங்கு ஆர்த்தவே – சிந்தா:12 2412/4
குனிந்த சாமரை குளிர் சங்கு ஆர்த்தவே – சிந்தா:12 2521/4
குரவம் பாவை கொப்புளித்து குளிர் சங்கு ஈர்ந்த துகளே போல் – சிந்தா:13 2690/1
கொல் யானை சங்கு ஒலியும் கூடாது ஒழிந்தனவே – சிந்தா:13 2978/4
தாம் ஆர்ந்த சீல கடல் ஆடி சங்கு இனத்துள் – சிந்தா:13 3040/3
குடை குழாம் இவற்றின் பாங்கர் குளித்தது குளிர் சங்கு ஆர்க்கும் – சிந்தா:13 3050/3

TOP


சங்கும் (7)

முந்நீர் பிறந்த பவழத்தொடு சங்கும் முத்தும் – சிந்தா:0 5/1
எடுத்தனர் விளியும் சங்கும் வீளையும் பறையும் கோடும் – சிந்தா:2 447/3
பறையும் சங்கும் பரந்து ஒலித்து ஆர்த்து எழ – சிந்தா:7 1776/1
காற்று எறி கடலின் சங்கும் முழவமும் முரசும் ஆர்ப்ப – சிந்தா:10 2152/2
கரும் கடல் சங்கும் கறந்த ஆன் பாலும் கனற்றிய கால் உகிர் உடைய – சிந்தா:10 2154/2
சீரின் முழங்கும் முரசும் அலறும் சிறு வெண் சங்கும்
நீரின் முழங்க முழங்கும் நீல யானை இவர்ந்தான் – சிந்தா:10 2195/3,4
திரை இடை வியாழம் தோன்ற திண் பிணி முழவும் சங்கும்
முரசொடு முழங்கி ஆர்ப்ப மொய் கொள் வேல் மன்னர் ஆர்ப்ப – சிந்தா:12 2467/2,3

TOP


சச்சந்தன் (5)

வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன் – சிந்தா:0 7/3
சச்சந்தன் எனும் தாமரை செம் கணான் – சிந்தா:1 157/4
தையலாள் நெடும் தடம் கண் வலைப்பட்டு சச்சந்தன்
ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கி செல்கின்றான் – சிந்தா:1 181/2,3
வையகம் உடைய மன்னன் சச்சந்தன் அவற்கு தேவி – சிந்தா:1 385/1
தரணி காவலன் சச்சந்தன் என்பவன் – சிந்தா:7 1813/1

TOP


சச்சந்தனனே (1)

சச்சந்தனனே சுதஞ்சணனே தரணி கந்து கடன் விசயன் – சிந்தா:13 2705/3

TOP


சச்சந்தனை (1)

வேந்தர் பெருமானை சச்சந்தனை மந்திரி மா நாகமுடன் விழுங்கிற்று அன்றே – சிந்தா:1 290/4

TOP


சட்டகம் (1)

சட்டகம் பொன்னில் செய்து தண் கதிர் வெள்ளி வேய்ந்து – சிந்தா:12 2523/1

TOP


சடை (6)

பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி – சிந்தா:1 32/3
வீடு வேண்டி விழு சடை நீட்டல் மெய் – சிந்தா:6 1427/1
முருகற்கும் அநங்கற்கும் எனக்கும் மொய் சடை
ஒருவற்கும் பகைத்தியால் ஒருத்தி வண்ணமே – சிந்தா:6 1488/3,4
குழவி வெண் திங்கள் கோட்டின் மேல் பாய குளிர் புனல் சடை விரித்து ஏற்கும் – சிந்தா:10 2105/1
முடி சடை முனிவன் அன்று கேள்வியில் கொண்ட வேல் கண் – சிந்தா:10 2285/1
இளமை ஆடி இருக்கும் வனத்து ஈர்ம் சடை மா முனி – சிந்தா:12 2491/3

TOP


சடைய (1)

மாடம் அது வார் சடைய வள்ளலையும் ஒக்கும் – சிந்தா:3 598/2

TOP


சடையம் (1)

நீட்டிய சடையம் ஆகி நீர் மூழ்கி நிலத்தில் சேர்ந்து – சிந்தா:6 1431/1

TOP


சடையார் (1)

பொறியில் தளர்வார் புரிவார் சடையார்
அறி மற்றவர் தாபதர் அவ்வழியார் – சிந்தா:5 1190/2,3

TOP


சண்ட (1)

சண்ட மன்னனை தாள் தொழுது ஆயிடை – சிந்தா:2 430/2

TOP


சண்பக (6)

தான் அமர்ந்து உழையின் நீங்கா சண்பக மாலை என்னும் – சிந்தா:1 314/3
சண்பக மாலை வேய்ந்து சந்தனம் பளிதம் தீற்றி – சிந்தா:4 1081/1
பொங்கு பூம் சண்பக போது போர்த்து உராய் – சிந்தா:5 1199/2
சண்பக நறு மலர் மாலை நாறு சாந்து – சிந்தா:6 1441/1
மா சினை மயில்கள் ஆட சண்பக மலர்கள் சிந்தும் – சிந்தா:6 1497/3
மாது ஆர் மயில் அன்னவர் சண்பக சாம்பல் ஒத்தார் – சிந்தா:11 2349/4

TOP


சண்பகத்தின் (1)

வாச தாழை சண்பகத்தின் வான் மலர்கள் நக்குமே – சிந்தா:1 68/4

TOP


சண்பகத்து (2)

சண்பகத்து அணி மலர் குடைந்து தாது உக – சிந்தா:1 79/2
சண்பகத்து அணி கோதை நின்றாள் தனி – சிந்தா:5 1324/3

TOP


சண்பகம் (9)

ஆளிய மொய்ம்பர்க்கு அளித்து அணி சண்பகம்
நாள்செய் மாலை நகை முடி பெய்பவே – சிந்தா:1 132/3,4
ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும் – சிந்தா:1 149/3
சண்பகம் தமநகம் தமாலம் மல்லிகை – சிந்தா:3 827/1
பூ அலர் சண்பகம் பொருந்திற்று என்பவே – சிந்தா:4 1013/4
சந்தன காவு சூழ்ந்து சண்பகம் மலர்ந்த சோலை – சிந்தா:5 1253/1
சினைய சண்பகம் வேங்கையோடு ஏற்றுபு – சிந்தா:7 1608/3
ஓடு தேர் கால் மலர்ந்தன வகுளம் உயர் சண்பகம்
கூடு கோழி கொழு முள் அரும்பின அம் கோசிக – சிந்தா:7 1650/2,3
மரவம் நாகம் மணம் கமழ் சண்பகம்
குரவம் கோங்கம் குடம் புரை காய் வழை – சிந்தா:8 1918/1,2
வளைந்த மின் அனார் மகிழ்ந்து சண்பகம்
உளைந்து மல்லிகை ஒலியல் சூடினார் – சிந்தா:13 2682/3,4

TOP


சத்தி (1)

சத்தி நெற்றி சூட்டிய தாம நீள் மணிவணன் – சிந்தா:1 144/3

TOP


சதங்கை (2)

பூம் சதங்கை மாலை புகழ் குஞ்சி பொரு இல்லார் – சிந்தா:9 2034/1
தாமரை சதங்கை மாலை சக்கரம் என்ன வீழ்த்தும் – சிந்தா:13 2656/2

TOP


சதுக்கங்கள் (1)

மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கள் மலிந்த சும்மை – சிந்தா:1 112/2

TOP


சதுமுகம் (1)

சதுமுகம் ஆக சேனை நமர் தலை பெய்க என்றான் – சிந்தா:3 766/4

TOP


சந்த (1)

சந்த மாலை தொகை தாழ்ந்து சாந்தம் கமழ் பூமியுள் – சிந்தா:4 1160/1

TOP


சந்தன (21)

சந்தன நீரோடு கலந்து தையலார் – சிந்தா:1 86/2
தழை தவழ் சந்தன சோலையின் நோக்கி – சிந்தா:3 524/3
கண் நிறம் முலையும் தோளும் சந்தன தேய்வை கொட்டி – சிந்தா:3 624/2
தென் வரை பொதியில் தந்த சந்தன தேய்வை தேம் கொள் – சிந்தா:3 697/1
சந்தன சாந்த செப்பும் தண் மலர் மாலை பெய்த – சிந்தா:3 838/3
சந்தன காவு சூழ்ந்து சண்பகம் மலர்ந்த சோலை – சிந்தா:5 1253/1
சந்தன சேற்று-இடை தாம வார் குழல் – சிந்தா:6 1493/1
தங்கு சந்தன கோட்டு-இடை பட்டு என – சிந்தா:7 1607/2
சந்தன களியும் பூவும் தமனிய குடத்துள் நீரும் – சிந்தா:7 1719/1
சாரல் அம் திமிசு இடை சந்தன தழை-வயின் – சிந்தா:8 1901/1
தாழ் முகில் சூழ் பொழில் சந்தன காற்று அசைந்து – சிந்தா:8 1904/3
சாத்துறி பவழ கன்னல் சந்தன ஆலவட்டம் – சிந்தா:8 1906/3
கழை வளர் குன்றில் களிறு நின்று ஆடும் கடி நறும் சந்தன சாரல் – சிந்தா:10 2105/3
தண்ணென் சந்தன நீர் ஆர்ந்து தேன் துளும்பும் – சிந்தா:12 2547/2
வீக்கினான் தாரை வெய்தா சந்தன தளிர் நல் மாலை – சிந்தா:13 2661/1
தன் படை உடைய தத்தை சந்தன தாரை வீக்கி – சிந்தா:13 2664/1
தேன் உலாம் குளிர் சந்தன சேற்று-இடை – சிந்தா:13 2669/2
சந்தன சாந்தொடு ஆரம் தாம் கவின் இழந்த அன்றே – சிந்தா:13 2973/4
சந்தன செப்பும் கங்கை தரு மணல் அலகை ஆற்றா – சிந்தா:13 3048/2
ஒழுகி நின்று அசும்பும் உயர் சந்தன
தொழுதி குன்றம் துளும்ப சென்று எய்தினான் – சிந்தா:13 3063/2,3
தழை தலை சந்தன பொதும்பர் சார்ந்ததே – சிந்தா:13 3109/4

TOP


சந்தனம் (14)

செய்ய சந்தனம் தீம் பழம் ஆதியா – சிந்தா:1 37/3
தலை தணீர் மலர் அணிந்து சந்தனம் செய் பந்தரும் – சிந்தா:1 75/2
வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம்
ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும் – சிந்தா:1 149/2,3
சந்தனம் தளிர்த்ததே போல் சீதத்தன் தளிர்த்து நோக்கி – சிந்தா:3 545/2
சண்பக மாலை வேய்ந்து சந்தனம் பளிதம் தீற்றி – சிந்தா:4 1081/1
மலை கொள் சந்தனம் வாய் மெழுக்கிட்ட தன் – சிந்தா:5 1371/3
தாங்கு சந்தனம் தரள தழுவி வீழ்வன தகைசால் – சிந்தா:7 1559/2
சந்தனம் மேய்வன தவழ் மத களிற்று இனம் – சிந்தா:8 1902/2
ஊன்றினார் பாய்மா ஒளி மதி கதிர் போல் சந்தனம் ஒருங்கு மெய் புதைத்தே – சிந்தா:10 2106/4
சந்தனம் சொரி தண் கதிர் திங்கள் அம் தொகை தாம் பல – சிந்தா:10 2307/1
ஈடு இல் சந்தனம் ஏந்து தாமரை – சிந்தா:12 2423/1
போற்றி சந்தனம் பூசுகின்றான் என – சிந்தா:12 2497/2
நெடு வரை அருவி ஆடி சந்தனம் நிவந்த சோலை – சிந்தா:13 2715/1
தென் வரை சந்தனம் திளைக்கும் மார்பினான் – சிந்தா:13 2895/2

TOP


சந்தனமும் (2)

குங்குமமும் சந்தனமும் கூட்டி இடு கொடியா – சிந்தா:3 850/1
வண் தளிர் சந்தனமும் வழையும் மாவும் வான் தீண்டி – சிந்தா:5 1225/1

TOP


சந்திர (1)

சங்க வெண் மலையின் மற்று சந்திர உதயத்தின் உச்சி – சிந்தா:4 955/3

TOP


சந்திரகாந்தம் (1)

சந்திரகாந்தம் என்னும் தண் மணி நிலத்தின் அங்கண் – சிந்தா:3 585/1

TOP


சந்திராபம் (1)

பகல் தலை விலங்கு சந்திராபம் பான்மையின் – சிந்தா:5 1251/3

TOP


சந்தின் (2)

சளி கொள் சந்தின் கொழும் சாந்தம் ஆகம் முழுதும் மெழுகினாள் – சிந்தா:7 1673/4
நறிய சந்தின் துணி நாற வெந்தனகள் கொண்டு – சிந்தா:8 1897/3

TOP


சந்தினவாய் (1)

ஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய்
நெக்கு பின் கூடாது நிகர் அமைந்த முழந்தாளும் – சிந்தா:1 175/2,3

TOP


சந்து (5)

சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண்பொனால் – சிந்தா:1 155/2
சந்து உடை சாரல் சேறி தரணி மேல் திலகம் அன்னாய் – சிந்தா:5 1178/4
செய்ய சந்து இமய சாரல் கருப்புரக்கன்று தீம் பூ – சிந்தா:5 1267/2
தழு மலர் தாமம் நான்று சந்து அகில் மணந்து விம்மும் – சிந்தா:13 2993/1
தம் புனத்து எறி மா மணி சந்து பாய்ந்து – சிந்தா:13 3066/3

TOP


சந்தும் (1)

பகை கதிர் பருதி சந்தும் ஆலியும் பயத்தல் உண்டே – சிந்தா:10 2315/4

TOP


சந்தொடு (1)

கழையின் துணி சந்தொடு கல் என ஈர்த்து – சிந்தா:5 1193/2

TOP


சமத்து-இடை (1)

வேல் நிரை வாள் மதில் பிளந்து வெம் சமத்து-இடை
தேன் நிரை களிற்றின் மேல் திண் குளம்பு அழுத்துவ – சிந்தா:7 1846/1,2

TOP


சமம் (3)

முந்து அமர் தம்முள் முழு மெயும் இரும்பு மேய்ந்திட வெம் சமம் விளைத்தார் – சிந்தா:10 2156/3
வெம் சமம் ஆக்கிடின் வீக்கு அறுத்து உன்னொடு – சிந்தா:10 2207/3
வெம் சமம் நோக்கி நின்று மிறைக்கொளி திருத்துவான் கண்டு – சிந்தா:10 2293/3

TOP


சமழாது (1)

தையலாய் சமழாது உரை என்றதே – சிந்தா:4 1000/4

TOP


சமிதை (2)

தரு மணல் தருப்பை ஆர்ந்த சமிதை இ மூன்றினானும் – சிந்தா:12 2463/1
தண்டிலத்து அகத்தில் சாண் மேல் எண் விரல் சமிதை நானான்கு – சிந்தா:12 2466/1

TOP


சமிதைகள் (1)

பொன் புரி வரையும் பொய்தீர் சமிதைகள் இரண்டும் வைத்தார் – சிந்தா:12 2464/4

TOP


சமுத்திரம் (1)

சையம் பூண்டு சமுத்திரம் நீந்துவான் – சிந்தா:6 1426/2

TOP


சமைந்தது (1)

கருமம் ஈது எனக்கும் ஊர்தி சமைந்தது கவல வேண்டாம் – சிந்தா:1 272/2

TOP


சயமதி (2)

சங்கினுள் முத்தம் ஒப்பாள் சயமதி பயந்த நம்பி – சிந்தா:13 2856/2
தாமம் ஆர் ஒலியல் ஐம்பால் சயமதி திருவும் ஆர்ந்த – சிந்தா:13 2888/2

TOP


சயனம் (1)

நளி செய் தண் பூஞ்சலம் சயனம் ஆக்கி நல் நீர் பிலிற்றும் வாய் – சிந்தா:7 1673/2

TOP


சயை (1)

மீனத்து-இடை நாள் கிழமை வெள்ளி சயை பக்கம் – சிந்தா:3 590/3

TOP


சரங்கள் (4)

மொட்டு உலாய் முலைகள் பாய்ந்த அகலத்து சரங்கள் மூழ்க – சிந்தா:3 772/3
வென்றி கொள் சரங்கள் மூழ்கி மெய் மறைத்திட்டு மின் தோய் – சிந்தா:10 2272/3
மொய்ப்படு சரங்கள் மூழ்க முனை எயிற்று ஆளி போல – சிந்தா:10 2287/1
சரங்கள் சென்று அழுத்தலின் தரணி மன்னனே – சிந்தா:13 2676/4

TOP


சரங்களின் (1)

அணங்கு அரும் சரங்களின் அழுத்தி ஐயென – சிந்தா:10 2225/2

TOP


சரண் (4)

சொல் மாண்பு அமைந்த குழுவின் சரண் சென்று தொக்க – சிந்தா:0 3/3
ஆழ் கடல் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான் – சிந்தா:1 380/4
அறிவன் அல்லது அங்கு ஆர் சரண் ஆகுவார் – சிந்தா:7 1633/4
வேந்தனை சரண் என்று எய்த விம்முறு துயரம் நோக்கி – சிந்தா:13 2660/3

TOP


சரணம் (1)

நல் அறத்து இறைவன் ஆகி நால் வகை சரணம் எய்தி – சிந்தா:1 382/1

TOP


சரத்தில் (1)

பொற்ற திண் சரத்தில் கோத்த பொரு சரம் தாள்கள் ஆக – சிந்தா:10 2305/2

TOP


சரம் (15)

தான் ஒன்று முடங்கிற்று ஒன்று நிமிர்ந்தது சரம் பெய் மாரி – சிந்தா:2 452/3
துன்னன்-மின் என்பவே போல் சுடு சரம் பரந்த அன்றே – சிந்தா:3 799/4
அலைக்கும் வெம் சரம் ஐந்து உடையான்-அரோ – சிந்தா:4 995/4
திண் சரம் விட்டவாறும் சென்ற கோல் போந்தவாறும் – சிந்தா:7 1642/3
பொரு சரம் சலாகை வெய்ய புகன்றனர் துரக்குமாறும் – சிந்தா:7 1676/1
பல் சரம் வழங்குவாரும் பரிவு கொள்பவரும் ஆனார் – சிந்தா:10 2179/4
சூர்த்துடன் வீழ நோக்கி சுடு சரம் சிதற வல்லான் – சிந்தா:10 2200/3
திருந்தினார் சிந்தை போலும் திண் சரம் சுருக்கி மாறாய் – சிந்தா:10 2204/2
விடு சரம் விசும்பு-இடை மிடைந்து வெய்யவன் – சிந்தா:10 2232/1
அந்தரம் புதைய வில்-வாய் அரும் சரம் பெய்த மாரி – சிந்தா:10 2254/3
துனி வரை மார்பன் சீறி சுடு சரம் சிதறினானே – சிந்தா:10 2273/4
பொற்ற திண் சரத்தில் கோத்த பொரு சரம் தாள்கள் ஆக – சிந்தா:10 2305/2
வெம் கண் வில் உமிழ் வெம் சரம் மிடைந்து வெம் கதிர் மறைந்ததே – சிந்தா:10 2307/4
மைந்தர் ஆர்த்து அவர் வாய் எலாம் நிறைய வெம் சரம் கான்ற பின் – சிந்தா:10 2309/2
செய்யோன் செழும் பொன் சரம் சென்றன சென்றது ஆவி – சிந்தா:10 2322/2

TOP


சரிதம் (2)

வான் ஏற நீண்ட புகழான் சரிதம் தன்னை – சிந்தா:0 6/3
சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன் தெருண்டார் – சிந்தா:13 3144/3

TOP


சரிதமும் (1)

மாதவன் சரிதமும் துறந்த வண்ணமும் – சிந்தா:13 3059/1

TOP


சரிதை (1)

பார் இடம் பரவ நாட்டி அவனது சரிதை எல்லாம் – சிந்தா:12 2573/3

TOP


சரிந்து (1)

நல் பூண் அணிந்த முலையார் நிலை கால் சரிந்து
நெற்றி நிறுத்து வடம் வைத்த முலையினாரும் – சிந்தா:11 2340/3,4

TOP


சருக்கரை (1)

அளவு அறு சருக்கரை பண்டி ஆர்ந்தன – சிந்தா:3 824/2

TOP


சரை (1)

சரை எனும் பெயர் உடை தடம் கொள் வெம் முலை – சிந்தா:1 39/3

TOP


சல (3)

சல சல மு மதம் சொரிய தம் தம்முள் – சிந்தா:1 82/1
சல சல மு மதம் சொரிய தம் தம்முள் – சிந்தா:1 82/1
சவி மது தாம மார்பின் சல நிதி தாக்கினானே – சிந்தா:10 2292/4

TOP


சலஞ்சல (1)

தா மணி நான செப்பும் சலஞ்சல கலன் பெய் செப்பும் – சிந்தா:12 2475/1

TOP


சலஞ்சலம் (4)

வலம்புரி சலஞ்சலம் வளைஇயது ஒத்தனள் – சிந்தா:1 184/3
பெரும் பாரமாய் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல் நங்கை நலம் தொலைந்ததே – சிந்தா:1 231/4
நன் மணி ஈன்று முந்நீர் சலஞ்சலம் புகுவது ஒத்தாள் – சிந்தா:1 317/4
வரி வளை சூழும் வலம்புரி இனத்துள் சலஞ்சலம் மேய்வன நோக்கி – சிந்தா:10 2103/2

TOP


சலாகை (4)

அல்லியுள் கிடந்த ஓலை தாள் அது சலாகை ஆதல் – சிந்தா:3 669/2
வல்லிதின் சலாகை சுற்றி ஓலையை வாசிக்கின்றான் – சிந்தா:3 669/4
பொரு சரம் சலாகை வெய்ய புகன்றனர் துரக்குமாறும் – சிந்தா:7 1676/1
தழிய பெரிய தட மென் தோள் சலாகை மின்ன தாழ்ந்து இலங்கும் – சிந்தா:13 2696/3

TOP


சவட்டி (1)

தன்னையும் சவட்டி போகி சாமியை சார்தும் என்றான் – சிந்தா:7 1734/4

TOP


சவரர் (2)

சால தீ சவரர் கோலம் செய்து நம் மறவர் ஈண்டி – சிந்தா:4 1141/2
கண்டு வாழாதவர் வாழ்க்கை எல்லாம் சவரர் வாழ்க்கையே – சிந்தா:7 1655/4

TOP


சவி (1)

சவி மது தாம மார்பின் சல நிதி தாக்கினானே – சிந்தா:10 2292/4

TOP


சவிய (1)

இ சவிய அல்ல என எழுதியவை ஊன்றி – சிந்தா:12 2484/2

TOP


சளி (1)

சளி கொள் சந்தின் கொழும் சாந்தம் ஆகம் முழுதும் மெழுகினாள் – சிந்தா:7 1673/4

TOP


சன (1)

முரியும் பல் சன முகம் புடைத்து அகம் குழைந்து அழவே – சிந்தா:13 2758/4

TOP


சனங்கள் (1)

இறை குற்றேல் செய்தல் இன்றி எரியின் வாய் சனங்கள் நீங்க – சிந்தா:4 1140/3

TOP


சனத்தினால் (1)

சனத்தினால் தகைத்து இடம் பெறாது தான் ஓர் பால் – சிந்தா:3 825/4

TOP


சனம் (7)

மா சனம் இடம் பெறாது வண் கடை மலிந்தது அன்றே – சிந்தா:1 116/4
ஓசையால் சனம் ஒள் நிதி உண்டதே – சிந்தா:4 911/4
பல் சனம் பரிந்து நிற்ப பார்த்திப குமரன் சேர்ந்தான் – சிந்தா:7 1683/3
பெறலரும் குஞ்சரம் ஏறலின் பெரும் சனம்
அறை கடல் திரை ஒலித்து ஆங்கு என ஆர்த்ததே – சிந்தா:7 1833/3,4
வெள்ள நீர் பெரும் சனம் வியந்து கை விதிர்த்ததே – சிந்தா:7 1841/4
பொருவில் கீழ் வளி முழக்கினால் பூமி மேல் சனம் நடுங்கிற்றே – சிந்தா:10 2308/3
புகழ்ந்து உரை மகிழ்ச்சியும் பொற்பு இல் பல் சனம்
இகழ்ந்து உரைக்கு இரக்கமும் இன்றி அங்க நூல் – சிந்தா:13 2640/1,2

TOP