பி – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

பிச்சர்க்கு (1)

பிழைத்தேன் அலேன் என்று பிச்சர்க்கு இயம்பீர் பெண் பேதை உய்யும் திறம் பாங்கிமாரே – கச்சிக்-:2 66/4

மேல்

பிச்சியீர் (1)

அன்ன நடை கன்னல் மொழி பிச்சியீர் அணி முறுவல் அதிகம் அன்றோ – கச்சிக்-:2 91/4

மேல்

பிசி (1)

பெருக்குறு விழைவு அமர் திருக்கினேன் பிசி தரும் மறை முதல் பிறையினோடு – கச்சிக்-:2 64/3

மேல்

பிசைந்து (1)

சேற்றை பிசைந்து சில தேவரையும் ஆக்குவேம் சீதரனை மாலாக்குவேம் – கச்சிக்-:2 78/2

மேல்

பிடித்து (1)

காற்றை பிடித்து ஒர் சிறு கரகத்துள் மூடுவேம் கனலை வான் ஓங்க விடுவேம் – கச்சிக்-:2 78/1

மேல்

பிணி (1)

ஆறாத மும்மை மல பிணி நீங்க நல் ஆற்றின் உய்ப்பர் – கச்சிக்-:2 55/2

மேல்

பிணியும் (1)

பிணியும் மூப்பும் பீடு அழி பழியும் – கச்சிக்-:2 97/3

மேல்

பிணை (1)

ஊடுருவு பிணை விழியோடு இணை வாளும் ஓச்சி வரும் ஒரு மதங்கீர் – கச்சிக்-:2 50/2

மேல்

பிணையாது (1)

துன் நிமித்தம் கண்டும் அஞ்சாது ஒரு துணையும் பிணையாது துனைந்து சென்று – கச்சிக்-:2 63/1

மேல்

பிரிந்தில (1)

கதம் மிகுந்து எழும் அத்தி நீர்த்துறை பெடை பிரிந்தில கம்புளே கவலை கூர உஞற்றி மேவுறும் நறை சொரிந்து இலகு அம்பு உளே – கச்சிக்-:2 96/2

மேல்

பிரிய (1)

கோதறு சங்கு இனம் பழன பங்கம் உறும் காலம் குலவு கச்சியார் பிரிய பங்கமுறும் காலம் – கச்சிக்-:2 67/4

மேல்

பிழை (3)

பிறை சுமந்த சடையார் என் பிழை சுமந்த கலம்பகத்தை பெற செய்வாரே – கச்சிக்-:1 2/4
பிழை இழைத்த முப்புரத்தார் பீடு அழிந்த பாட்டினையும் – கச்சிக்-:2 1/6
என்ன பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கும் – கச்சிக்-:2 77/1

மேல்

பிழைத்த (1)

பெருமை புரத்தை அழி வெப்பும் பிழைத்த மதன் கொல் விழி வெப்பும் – கச்சிக்-:2 80/2

மேல்

பிழைத்தேன் (1)

பிழைத்தேன் அலேன் என்று பிச்சர்க்கு இயம்பீர் பெண் பேதை உய்யும் திறம் பாங்கிமாரே – கச்சிக்-:2 66/4

மேல்

பிழைப்ப (1)

மடிந்த கவி குலம் பிழைப்ப செய்த சஞ்சீவியோ தானே – கச்சிக்-:2 89/4

மேல்

பிழையும் (1)

எல்லா பிழையும் இயற்றும் ஏழையால் – கச்சிக்-:2 1/109

மேல்

பிறங்கு (2)

பிறை பூத்த செஞ்சடையாய் பிறங்கு புயம் உற்ற பினே – கச்சிக்-:2 1/44
பெரியானை பேரின்ப நிறை வீட்டானை பிறை மதியம் பிறங்கு சடாதரனை யார்க்கும் – கச்சிக்-:2 53/1

மேல்

பிறவாமே (1)

தொல்லை நிலம் பிறவாமே துயர் அறுத்த பீட்டினையும் – கச்சிக்-:2 1/10

மேல்

பிறவி (1)

இன்பு அடைய வேண்டின் இகலற்க வன் பிறவி
துன்பு ஒழிய வேண்டின் அவம் துன்னற்க அன்பு உருவாம் – கச்சிக்-:2 69/1,2

மேல்

பிறவியினை (1)

சூழும் தளையாய தொல்லை பிறவியினை
போழும் நவியமாம் புத்தேளிர் தாழும் நலம் – கச்சிக்-:2 70/1,2

மேல்

பிறழ்வால் (1)

விழியால் விழி உறு பிறழ்வால் விது நிகர் நுதலால் நுதல் உறு சிலையால் மென் – கச்சிக்-:2 59/1

மேல்

பிறை (4)

பிறை சுமந்த சடையார் என் பிழை சுமந்த கலம்பகத்தை பெற செய்வாரே – கச்சிக்-:1 2/4
பிறை பூத்த செஞ்சடையாய் பிறங்கு புயம் உற்ற பினே – கச்சிக்-:2 1/44
பெரியானை பேரின்ப நிறை வீட்டானை பிறை மதியம் பிறங்கு சடாதரனை யார்க்கும் – கச்சிக்-:2 53/1
கட்டப்பட்ட தனம் பிறை வாள் நுதல் கடு அடங்கிய கண்ணின் மயங்குவேற்கு – கச்சிக்-:2 79/3

மேல்

பிறையினோடு (1)

பெருக்குறு விழைவு அமர் திருக்கினேன் பிசி தரும் மறை முதல் பிறையினோடு
எருக்கு அணி கச்சியின் இறைவனார் இரங்குறு வகை எது புகல்வனே – கச்சிக்-:2 64/3,4

மேல்

பின் (2)

முலை குறியும் வளை குறியும் கொண்டதன் பின் முதலவனே – கச்சிக்-:2 1/55
இன்றைக்கு பொன் அளித்து நாளை வெள்ளி இயற்றினும் பின் சனியது ஆமே – கச்சிக்-:2 34/4

மேல்

பின்றை (1)

பின்றை எய்திடும் பெற்றி உய்த்து உணர்கிலா பேயேன் – கச்சிக்-:2 45/2

மேல்

பின்னர் (1)

தேறா மனத்தை திருப்பி தெளிவுற செய்து பின்னர்
ஆறாத மும்மை மல பிணி நீங்க நல் ஆற்றின் உய்ப்பர் – கச்சிக்-:2 55/1,2

மேல்

பின்னை (1)

பின்னை உற்றிடும் பீழை நினைத்திலன் – கச்சிக்-:2 40/32

மேல்

பினாகம் (1)

சூத வாழ்க்கையார் துடி பினாகம் வைத்த ஆண்மையார் சொல் மறைக்க வாயதாம்-கொல் தோற்பு உணர்ந்து இசைத்ததே – கச்சிக்-:2 25/4

மேல்

பினே (1)

பிறை பூத்த செஞ்சடையாய் பிறங்கு புயம் உற்ற பினே
பணி அணிந்தாய் மற்று அதை வில் பற்றி இசைத்தாய் கயிறா – கச்சிக்-:2 1/44,45

மேல்