தோ – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

தோடு (1)

புரத்தின் வனப்பும் நூபுரமும் புரை தீர் அகத்தின் வற்பு உரமும் பொலன் தோடு அணையும் பூ அணையும் புரியும் பணியும் பொன் பணியும் – கச்சிக்-:2 95/2

மேல்

தோத்திரங்கள் (1)

தூற்ற கரம் உண்டு தாழ சிரம் உண்டு தோத்திரங்கள்
ஆற்ற செம் நா உண்டு தென் கச்சிவாணர் உண்டு அல்லல் எலாம் – கச்சிக்-:2 85/2,3

மேல்

தோமறு (1)

மறை ஒளிர் தோமறு பொருளினை – கச்சிக்-:2 1/73

மேல்

தோல் (3)

கார் ஆனை தோல் உரித்த கறுப்பினானை களித்து உடலம் நீறு அணிந்த வெண்மையானை – கச்சிக்-:2 22/1
கலன் பணி உடை தோல் கலம் பலி ஓடு கொண்டு – கச்சிக்-:2 40/1
உற்று பார்க்கில் உன் வாழ்க்கை என் ஐயமே ஊரும் வெட்டவெளி உடை தோல் உனை – கச்சிக்-:2 73/1

மேல்

தோளா (1)

தோளா மணியை பசும்பொன்னை தூண்டா விளக்கை தொழுவார்-தம் துயர கடற்கு ஓர் பெரும் புணையை துருவ கிடையா நவநிதியை – கச்சிக்-:2 99/3

மேல்

தோளை (2)

தோளை தழுவின் சுகம் பெறலாம் ஊடல் ஒழிவீர் நீர்க்குமிழி சுழி தேம் புளினம் தோன்றிடுமால் துயரமுறுவேன் நடை கிழம் கால் – கச்சிக்-:2 10/2
தோளை மருவும் சுகம் – கச்சிக்-:2 16/4

மேல்

தோற்பு (1)

சூத வாழ்க்கையார் துடி பினாகம் வைத்த ஆண்மையார் சொல் மறைக்க வாயதாம்-கொல் தோற்பு உணர்ந்து இசைத்ததே – கச்சிக்-:2 25/4

மேல்

தோற்றத்தின் (1)

குறைவு_அறு நால் தோற்றத்தின் உளதாய துயர் அகல குறிப்பன் அன்னோர் – கச்சிக்-:1 2/3

மேல்

தோற்றும் (1)

சுற்றும் உடைந்து வரும் திடரே தோற்றும் மிடைந்து வருந்து இடரே – கச்சிக்-:2 65/3

மேல்

தோன்ற (1)

என்-வயின் செலுத்தும் இங்கிதம் தோன்ற
பாடினை இன்புற பாடல் கேட்டு ஆங்கு – கச்சிக்-:2 40/10,11

மேல்

தோன்றிடுமால் (1)

தோளை தழுவின் சுகம் பெறலாம் ஊடல் ஒழிவீர் நீர்க்குமிழி சுழி தேம் புளினம் தோன்றிடுமால் துயரமுறுவேன் நடை கிழம் கால் – கச்சிக்-:2 10/2

மேல்