ஓ – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

ஓகை (1)

உயர் பதவி தந்து இசைப்பரும் ஓகை கொண்டன – கச்சிக்-:2 4/30

மேல்

ஓங்க (1)

காற்றை பிடித்து ஒர் சிறு கரகத்துள் மூடுவேம் கனலை வான் ஓங்க விடுவேம் – கச்சிக்-:2 78/1

மேல்

ஓங்காரத்தின் (1)

ஓடும் துடியும் கரத்து அமைத்தோன் ஓங்காரத்தின் உட்பொருளை – கச்சிக்-:2 27/3

மேல்

ஓங்கு (1)

உள்ளம் கலங்க ஓங்கு நீர் அழைத்து – கச்சிக்-:2 40/17

மேல்

ஓங்கும் (1)

ஒளிவிட்டு ஓங்கும் கச்சியரை உயர் மா மறையின் உச்சியரை – கச்சிக்-:2 19/2

மேல்

ஓச்சி (1)

ஊடுருவு பிணை விழியோடு இணை வாளும் ஓச்சி வரும் ஒரு மதங்கீர் – கச்சிக்-:2 50/2

மேல்

ஓட (1)

அல் ஓட கண்ட விடம் மாயும் வகை அறிவள் என அறைதி மாதே – கச்சிக்-:2 47/4

மேல்

ஓடவைத்தான் (1)

அ மானை கை அமைத்தான் அ காளை ஓடவைத்தான்
சும்மா இருந்தும் மதன் சுட்டெரித்தான் பெம்மான் – கச்சிக்-:2 7/1,2

மேல்

ஓடு (2)

சதுமுகன் மறம் கெட தலை ஓடு அணிந்தன – கச்சிக்-:2 4/22
கலன் பணி உடை தோல் கலம் பலி ஓடு கொண்டு – கச்சிக்-:2 40/1

மேல்

ஓடும் (1)

ஓடும் துடியும் கரத்து அமைத்தோன் ஓங்காரத்தின் உட்பொருளை – கச்சிக்-:2 27/3

மேல்

ஓதிர் (1)

உள் தயங்கு உயிர் ஐந்தும் அவைக்கு இரையோ என்று ஓதிர் அ செம் மழுவாளர்க்கே – கச்சிக்-:2 32/4

மேல்

ஓம்பச்செய் (1)

உகந்து அரு முப்பத்திரண்டு அறம் ஓம்பச்செய் உத்தமர் பாதகம் – கச்சிக்-:2 8/3

மேல்

ஓம்பிட (1)

இரந்து உயிர் ஓம்பிட ஏழை மனம் கொதித்து இன்னலுற – கச்சிக்-:2 43/1

மேல்

ஓய (1)

உரம் தொலைந்து ஓய பல நோய் உடற்ற உறு பசியால் – கச்சிக்-:2 43/2

மேல்

ஓர் (3)

ஓர் கால் செலின் அறு கால் உற்றனை என்பார் வளமை – கச்சிக்-:2 52/1
காள உரு காம விழி கன்னி-தனக்கு அ நாள் கருதி ஒரு குணம் குறியும் அரியவர்க்கு ஓர் குணமும் கொடுவா – கச்சிக்-:2 90/3
தோளா மணியை பசும்பொன்னை தூண்டா விளக்கை தொழுவார்-தம் துயர கடற்கு ஓர் பெரும் புணையை துருவ கிடையா நவநிதியை – கச்சிக்-:2 99/3

மேல்

ஓர்ந்தேன் (1)

பழைய கள்வன் பண்பினை ஓர்ந்தேன்
பாணனே நின்னை பண் இசை கூட்டி – கச்சிக்-:2 40/6,7

மேல்

ஓரார் (2)

கழை காமன் எய்யும் சரம் தைக்க நொந்தேன் கண்ணாளர் இந்த பனிக்காலம் ஓரார்
குழைத்து ஆர் பொழில் கச்சி வாழ் அண்ணலாரை கும்பிட்டு அழைப்பீர் குழைப்பீர் மனத்தை – கச்சிக்-:2 66/2,3
வணம் கூடுதல் அனலை பற்றுற்று மின்னாள் வணங்கு ஊடுதல் அனலை பற்று அறுத்தல் ஓரார்
கணம் புரத்தை சாம்பர் உவந்து இழைத்தார் கன்னல்-கண் அம்பு உரத்தை சாம் பருவம் குலைப்பது உன்னார் – கச்சிக்-:2 72/2,3

மேல்