செ – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செக்கரின் 1
செஞ்சடையாய் 1
செந்தமிழ் 1
செந்தாமரை 1
செம் 7
செம்பொன் 1
செம்மலார் 2
செம்மையானை 1
செய் 2
செய்கை 1
செய்த 1
செய்தல் 1
செய்தாலும் 1
செய்து 1
செய்தேனோ 1
செய்ய 1
செய்யர் 1
செய்யுளை 1
செய்வனோ 1
செய்வாரே 1
செய்வோம் 1
செயல் 4
செயலினும் 1
செயலை 1
செருக்கிலே 1
செருக்கை 1
செல்லினை 1
செல்லே 1
செல்வ 1
செல்வம் 1
செலின் 1
செலீஇ 1
செலுத்தி 1
செலுத்தும் 1
செலும் 1
செவ்வி 3
செவ்வியனே 1
செவி 1
செவியர் 1
செழித்து 1
செற்ற 1
செற்றார் 2
சென்று 1

செக்கரின் (1)

அரவு அமர் இகந்து செக்கரின் இலகு செம் சடை – கச்சிக்-:2 4/3

மேல்

செஞ்சடையாய் (1)

பிறை பூத்த செஞ்சடையாய் பிறங்கு புயம் உற்ற பினே – கச்சிக்-:2 1/44

மேல்

செந்தமிழ் (1)

தாவாத சித்தாந்த சைவம் வாழ சந்த வரை செந்தமிழ் நூல் தழைத்து வாழ – கச்சிக்-:2 49/2

மேல்

செந்தாமரை (1)

சிரத்தின் அலை மான் வைத்தீர் நும் செந்தாமரை தாள் கீழேனும் சேரும் திறத்தை அறிவாளே சிறியாள் மதனை வென்றிடவே – கச்சிக்-:2 95/4

மேல்

செம் (7)

அரவு அமர் இகந்து செக்கரின் இலகு செம் சடை – கச்சிக்-:2 4/3
நீரானை செம் சடையின் நெற்றி உற்ற நெருப்பானை பொருப்பானை சகத்திர சீர் – கச்சிக்-:2 22/3
உள் தயங்கு உயிர் ஐந்தும் அவைக்கு இரையோ என்று ஓதிர் அ செம் மழுவாளர்க்கே – கச்சிக்-:2 32/4
பொருப்பு உக்கு வீழ புவிக்கு ஆடை பொங்க புரம் செற்ற செம்
நெருப்புக்கு வதனத்து இடம்தந்த ஒரு மா நிழல் சோதியே – கச்சிக்-:2 36/3,4
ஆற்ற செம் நா உண்டு தென் கச்சிவாணர் உண்டு அல்லல் எலாம் – கச்சிக்-:2 85/3
சிரம் மந்தாகினி செம் சடையார் தொண்டர் சிரமம் தாக்கு திரு கச்சிநாதர் தீயர் – கச்சிக்-:2 88/3
துன்ன வரும் உடல் நீறும் கஞ்சுளியினொடு செம் கை சூலமும் செம்பொன் – கச்சிக்-:2 91/2

மேல்

செம்பொன் (1)

துன்ன வரும் உடல் நீறும் கஞ்சுளியினொடு செம் கை சூலமும் செம்பொன்
அனைய திருமேனி பொலிவுமே எனை மயங்கப்புரியும் கண்டீர் – கச்சிக்-:2 91/2,3

மேல்

செம்மலார் (2)

செய் தவம் புரிந்திலாதென் உய்யும் ஆறும் உண்டு-கொல் திகழும் மாடம் மதி உரிஞ்சு கச்சி மேய செம்மலார்
கைதவம் கண் அங்கியான் மன்மதனை வென்ற காதை என் காதல் நோக்கி இன்பு அளிக்க நேர்வர் அல்லரேல் அனை – கச்சிக்-:2 76/2,3
தெரிவு ஐயம் கடி செய்யர் பரவையாம் தெரிவை அங்கு அடியர்க்கு அருள் செம்மலார்
சிரம் மந்தாகினி செம் சடையார் தொண்டர் சிரமம் தாக்கு திரு கச்சிநாதர் தீயர் – கச்சிக்-:2 88/2,3

மேல்

செம்மையானை (1)

வார் ஆனை ஊர்ந்து இலங்கு செம்மையானை வலத்தானை இடப்பாக பச்சையானை – கச்சிக்-:2 22/2

மேல்

செய் (2)

செய் தவம் புரிந்திலாதென் உய்யும் ஆறும் உண்டு-கொல் திகழும் மாடம் மதி உரிஞ்சு கச்சி மேய செம்மலார் – கச்சிக்-:2 76/2
தாமனை ஒப்பீர் ஐந்து சரம் செய் துயர் நீக்கி அருள் தந்து காப்பீர் – கச்சிக்-:2 82/3

மேல்

செய்கை (1)

போதகத்தை ஏவி அந்த மாது அகத்தை அச்சுற புரிந்த செய்கை சாலும் நும் குலம் புலப்படுத்திட – கச்சிக்-:2 25/3

மேல்

செய்த (1)

மடிந்த கவி குலம் பிழைப்ப செய்த சஞ்சீவியோ தானே – கச்சிக்-:2 89/4

மேல்

செய்தல் (1)

இனிப்பு ஆரும் மொழியாளன் இது செய்தல் அழகோ என்றே உடன் கேட்பன் இனி என்ன குணமே – கச்சிக்-:2 38/4

மேல்

செய்தாலும் (1)

என்ன பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கும் – கச்சிக்-:2 77/1

மேல்

செய்து (1)

தேறா மனத்தை திருப்பி தெளிவுற செய்து பின்னர் – கச்சிக்-:2 55/1

மேல்

செய்தேனோ (1)

என்ன தவம் செய்தேனோ உமை கம்பர் திரு கச்சி இடையே காண – கச்சிக்-:2 91/1

மேல்

செய்ய (1)

செய்ய மலர் அடியை சிந்தித்தி நையாமே – கச்சிக்-:2 2/2

மேல்

செய்யர் (1)

தெரிவு ஐயம் கடி செய்யர் பரவையாம் தெரிவை அங்கு அடியர்க்கு அருள் செம்மலார் – கச்சிக்-:2 88/2

மேல்

செய்யுளை (1)

சிற்றறிவினன் உரை செய்யுளை
முற்றும் நயப்பாய் மூவர்க்கு ஐயனே – கச்சிக்-:2 1/118,119

மேல்

செய்வனோ (1)

கைம்மாறு என் செய்வனோ காண் – கச்சிக்-:2 77/4

மேல்

செய்வாரே (1)

பிறை சுமந்த சடையார் என் பிழை சுமந்த கலம்பகத்தை பெற செய்வாரே – கச்சிக்-:1 2/4

மேல்

செய்வோம் (1)

மின் தைக்கும் முடி வேந்தர் விரும்ப ஒரு தினத்து இரும்பு-தனை பொன் செய்வோம்
இன்றைக்கு பொன் அளித்து நாளை வெள்ளி இயற்றினும் பின் சனியது ஆமே – கச்சிக்-:2 34/3,4

மேல்

செயல் (4)

இடங்கர் வாய் பட்ட களிற்றின் உயிரை புரந்த செயல்
கடல் வீழ்த்த நாவரையன் கல் மிதத்தற்கு ஒப்பு ஆமோ – கச்சிக்-:2 1/19,20
அளியுற்று இனிது புணர்ந்திடுதற்கு அநங்கன் செயல் ஒன்று இலை மானே – கச்சிக்-:2 19/4
அறிவேனும் செயல் இட்டீர் அம்பரம் காவணமே அளிப்பீர் அம் கொன்றை மலர் அம்பரம் காவணமே – கச்சிக்-:2 21/4
அனைக்கே தெரியும் மகவு ஆயும்-கொல் அன்னை செயல்
கன கேதம் தீர்த்து அருள் பூம் கச்சி நகர் கண்_நுதலே – கச்சிக்-:2 86/3,4

மேல்

செயலினும் (1)

எழு விடையை தழுவி மணம் எய்தும் ஒரு செயலினும் சீர் – கச்சிக்-:2 1/29

மேல்

செயலை (1)

ஆண்டவர் அவம்புரிவார் செயலை அழித்து உவக்கும் – கச்சிக்-:2 3/2

மேல்

செருக்கிலே (1)

தருக்குறு தெரிவையர் செருக்கிலே தளையிடும் அவர் மொழி உருக்கிலே – கச்சிக்-:2 64/1

மேல்

செருக்கை (1)

தேரார் தெளிவறு செருக்கை மாற்றினை – கச்சிக்-:2 1/66

மேல்

செல்லினை (1)

சடை உறு செல்லினை
விடை உறும் எல்லினை – கச்சிக்-:2 1/75,76

மேல்

செல்லே (1)

செல்லே சிறந்தாய் திரு கச்சிவாணர்-பால் – கச்சிக்-:2 42/3

மேல்

செல்வ (1)

சட்டப்பட்ட உளம் பெற்ற சால்பினோர் தங்கப்பெற்ற கச்சி பதி செல்வ வேள் – கச்சிக்-:2 79/1

மேல்

செல்வம் (1)

வைத வம்பு நோக்கியேனும் மனம் உவக்க வந்திலர் மாதர் நோவ எய்து செல்வம் என் அவர்க்கு மங்கையே – கச்சிக்-:2 76/4

மேல்

செலின் (1)

ஓர் கால் செலின் அறு கால் உற்றனை என்பார் வளமை – கச்சிக்-:2 52/1

மேல்

செலீஇ (1)

தாருவனம் செலீஇ தாபத பன்னியர் – கச்சிக்-:2 40/21

மேல்

செலுத்தி (1)

ஆற்றை செலுத்தி அரி ஏறவைப்பேம் அமுதை ஆவலுடன் வாரி உண்பேம் – கச்சிக்-:2 78/3

மேல்

செலுத்தும் (1)

என்-வயின் செலுத்தும் இங்கிதம் தோன்ற – கச்சிக்-:2 40/10

மேல்

செலும் (1)

இரவின் அவிர் திங்களின் செலும் ஒளி பெறும் குழை – கச்சிக்-:2 4/25

மேல்

செவ்வி (3)

நாதன் அருனாளன் நண்ணிய சீர் செவ்வி
காதில் பண் ஆரும் கவி இன்பம் மானுமே – கச்சிக்-:2 28/2,3
சேவின் மிசை திகழும் தேசன் அமை செவ்வி
நாவின் அமுது ஊறு நல் சுவையை மானுமே – கச்சிக்-:2 28/5,6
விண்ணில் பொலிந்தான் விளங்கியுறு செவ்வி
கண் இணையால் காண்பு அரிய காட்சியினை மானுமே – கச்சிக்-:2 28/8,9

மேல்

செவ்வியனே (1)

தீது அவித்து ஏற்கும் நல் செவ்வியனே புல தெவ் அடர – கச்சிக்-:2 61/2

மேல்

செவி (1)

போற்ற பல் பா உண்டு கேட்க செவி உண்டு பூ பறித்து – கச்சிக்-:2 85/1

மேல்

செவியர் (1)

குழை ஆடு செவியர் அத்தர் கச்சி எனும் ஆகரத்தர் குணக்குன்றாரே – கச்சிக்-:2 33/4

மேல்

செழித்து (1)

தேவாரம் முதலிய ஐந்து உறுப்பும் வாழ சிறந்த மறை ஆகமங்கள் செழித்து வாழ – கச்சிக்-:2 49/1

மேல்

செற்ற (1)

பொருப்பு உக்கு வீழ புவிக்கு ஆடை பொங்க புரம் செற்ற செம் – கச்சிக்-:2 36/3

மேல்

செற்றார் (2)

செற்றார் புரம் எரித்த தீயர் காண் அம்மானை – கச்சிக்-:2 6/2
செற்றார் புரம் எரித்த தீயரே ஆமாயில் – கச்சிக்-:2 6/3

மேல்

சென்று (1)

துன் நிமித்தம் கண்டும் அஞ்சாது ஒரு துணையும் பிணையாது துனைந்து சென்று
பொன் நிமித்தம் சிலை சுமந்து முறுவலித்து புரம் எரித்த புரை தீர் எந்தாய் – கச்சிக்-:2 63/1,2

மேல்