கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 601 4377 58 37 4472 2963

விளக்கம்

 

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக,
கண்ணுதல் என்ற சொல் கண் நுதல் என்று பிரிக்கப்பட்டு நெற்றியில் கண்ணையுடைய சிவனைக் குறிக்கும் எனவே கண்ணுதல் என்பதில் கண், நுதல் என்பன தனித்தனிச் சொற்கள். ஆனால் கண்ணுதல் என்பது ஒரே சொல்லாய் சிவனைக் குறிக்கும். இது கண்_நுதல் என்று கொள்ளப்படும் இதற்குரிய பிரிசொற்கள் கண், நுதல் ஆகிய இரண்டும். எனவே கண்_நுதல் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் கண், நுதல், கண்_நுதல்
ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

கண் (8)
கல் அடித்தார் சிலை அடித்தார் கண் பறித்தார் முதல் அடியார் – கச்சிக்-:2 1/9
வாளை கயலை நிகர்த்த வெம் கண் வலைச்சியீர் நும் வனப்பு எவரான் மதிக்க அமையும் அரன் கச்சி வந்தீர் அளவா மயல் தந்தீர் – கச்சிக்-:2 10/1
கண் இணையால் காண்பு அரிய காட்சியினை மானுமே – கச்சிக்-:2 28/9
கனி ஆரும் பொழில் கச்சி கண்_நுதலார் கை சிலம்பை கனகம் ஆக்கி – கச்சிக்-:2 35/3
சீதமுறு கழை கரும்பின் கண் தழைக்கும் காலம் சிற்றிடையார் தம் தலைவர் கண்டு அழைக்கும் காலம் – கச்சிக்-:2 67/3
கச்சி உறைந்து அருள் கண்_நுதல் மறலி கண்டகனால் – கச்சிக்-:2 71/3
கைதவம் கண் அங்கியான் மன்மதனை வென்ற காதை என் காதல் நோக்கி இன்பு அளிக்க நேர்வர் அல்லரேல் அனை – கச்சிக்-:2 76/3
கன கேதம் தீர்த்து அருள் பூம் கச்சி நகர் கண்_நுதலே – கச்சிக்-:2 86/4

கண்_நுதல் (1)
கச்சி உறைந்து அருள் கண்_நுதல் மறலி கண்டகனால் – கச்சிக்-:2 71/3

நுதல் (4)
விழியால் விழி உறு பிறழ்வால் விது நிகர் நுதலால் நுதல் உறு சிலையால் மென் – கச்சிக்-:2 59/1
கச்சி உறைந்து அருள் கண்_நுதல் மறலி கண்டகனால் – கச்சிக்-:2 71/3
கட்டப்பட்ட தனம் பிறை வாள் நுதல் கடு அடங்கிய கண்ணின் மயங்குவேற்கு – கச்சிக்-:2 79/3
கழை கொண்ட மதன் அழியும் கனல் கொண்ட நுதல் விழியும் – கச்சிக்-:2 81/3

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

காண்-மின் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், காண்-மின், -மின் என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

-மின் (3)
தயங்கும் இடைச்சியீர் ஆடை நீக்காது ருசி காண்-மின் என்பீர் – கச்சிக்-:2 51/3
ஆழ் கருணை மா கடலை அடி பணி-மின் கண்டீர் – கச்சிக்-:2 94/4
வேள் ஆடலை முன் தீர்த்தானை வேழ உரியை போர்த்தானை வெள்ளம் பாய்ந்த சடையானை வேண்டி புரி-மின் தொண்டினையே – கச்சிக்-:2 99/4

காண்-மின் (1)
தயங்கும் இடைச்சியீர் ஆடை நீக்காது ருசி காண்-மின் என்பீர் – கச்சிக்-:2 51/3

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால்,
அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

அகற்றும் (3)
மடை திறந்த கடலை ஒத்த மருள் அகற்றும் அருளினார் மகிழ் சிறந்த முதல்வர் தங்கமலை குழைத்து என் விறல் மதன் – கச்சிக்-:2 60/2
தாழ்வு அகற்றும் மலர் பதத்தார் தளர்வு அகற்றும் ஐம்பதத்தார் தண் அம் திங்கள் – கச்சிக்-:2 94/2
தாழ்வு அகற்றும் மலர் பதத்தார் தளர்வு அகற்றும் ஐம்பதத்தார் தண் அம் திங்கள் – கச்சிக்-:2 94/2