உ – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்கு 1
உகந்து 1
உகு 1
உகுத்திட 1
உச்சி 1
உச்சியரை 1
உச்சியினார் 1
உஞற்றி 1
உட்பொருளை 1
உடல் 1
உடலம் 2
உடற்ற 1
உடன் 1
உடை 6
உடைத்தே 1
உடைந்து 1
உடைய 1
உடையாய் 1
உடையார் 2
உடையான் 5
உடையீர் 2
உடையே 1
உடையேனே 1
உண் 4
உண்ட 3
உண்டனை 1
உண்டாரை 1
உண்டு 8
உண்டு-கொல் 1
உண்டேல் 1
உண்ண 1
உண்ணுவீர் 1
உண்பேம் 1
உணர் 1
உணர்கிலா 1
உணர்ச்சி 1
உணர்ந்து 2
உணர்வு 2
உணரும் 1
உணவும் 1
உணாது 1
உணும் 1
உத்தம 2
உத்தமர் 1
உத்தமர்காள் 1
உத்தாள் 1
உதவ 1
உதவியை 1
உதவும் 1
உதித்த 2
உபதேசம் 1
உம்பர் 1
உம்பருக்கு 1
உமை 5
உமையாள் 3
உமையோடு 1
உய்த்து 1
உய்ப்பர் 1
உய்ய 2
உய்யும் 3
உய 1
உயர் 2
உயிர் 4
உயிர்க்கும் 1
உயிர்த்து 1
உயிரை 1
உர 1
உரத்தர் 1
உரத்து 1
உரத்தை 1
உரம் 2
உரமும் 1
உரிஞ்சு 1
உரித்த 1
உரித்து 1
உரியானை 1
உரியை 1
உரு 7
உருக்காமே 1
உருக்கிலே 1
உருக 1
உருவம் 3
உருவாம் 1
உருவாயவர் 1
உருவோடு 1
உரை 5
உரைத்தால் 1
உரைத்திடுவன் 1
உரைத்தும் 1
உரைப்பன் 1
உரைப்பாரும் 1
உரையிட 1
உரோமம் 1
உலகம் 2
உலகு 2
உலகுக்கு 1
உலகை 1
உலவு 1
உலைந்து 1
உவக்க 1
உவக்கும் 1
உவகை 1
உவணன்-தனக்கு 1
உவந்தன 1
உவந்து 1
உவப்பார் 1
உவப்புடன் 1
உழன்று 1
உழை 1
உள் 3
உள்ளம் 2
உள்ளார் 2
உள்ளியே 1
உள்ளீர் 1
உளதாய 1
உளம் 5
உளரோ 1
உளே 1
உற்பலம் 1
உற்ற 4
உற்றது 1
உற்றனை 1
உற்றாய் 2
உற்றாரும் 1
உற்றிட 1
உற்றிடும் 1
உற்று 2
உற்றும் 1
உற 2
உறவார் 1
உறவால் 1
உறவு 1
உறவே 1
உறவை 1
உறு 13
உறுப்பும் 1
உறும் 4
உறுவீர் 1
உறை 2
உறைந்து 1
உறையார் 1
உறையும் 1
உறையுமாறு 1
உறைவாய் 1
உறைவாள் 1
உறைவு 1
உன் 4
உன்ன 1
உன்னப்படுமோ 1
உன்னார் 1
உன்னிலீர் 1
உனக்கே 1
உனது 2
உனை 1

உக்கு (1)

பொருப்பு உக்கு வீழ புவிக்கு ஆடை பொங்க புரம் செற்ற செம் – கச்சிக்-:2 36/3

மேல்

உகந்து (1)

உகந்து அரு முப்பத்திரண்டு அறம் ஓம்பச்செய் உத்தமர் பாதகம் – கச்சிக்-:2 8/3

மேல்

உகு (1)

அமுது உகு பாவினை – கச்சிக்-:2 1/83

மேல்

உகுத்திட (1)

மாமையை அடைந்தாய் வானகம் உற்றாய் மழை கணீர் உகுத்திட பெற்றாய் – கச்சிக்-:2 20/1

மேல்

உச்சி (1)

வான் கொண்ட உச்சி வரை முழை உற்றும் மயர்வது எவன் – கச்சிக்-:2 75/3

மேல்

உச்சியரை (1)

ஒளிவிட்டு ஓங்கும் கச்சியரை உயர் மா மறையின் உச்சியரை
களியுற்று ஆடும் கூத்தாரை அகிலம் அனைத்தும் காத்தாரை – கச்சிக்-:2 19/2,3

மேல்

உச்சியினார் (1)

மழை கொண்ட உச்சியினார் வளம் கொண்ட கச்சியினார் – கச்சிக்-:2 81/1

மேல்

உஞற்றி (1)

கதம் மிகுந்து எழும் அத்தி நீர்த்துறை பெடை பிரிந்தில கம்புளே கவலை கூர உஞற்றி மேவுறும் நறை சொரிந்து இலகு அம்பு உளே – கச்சிக்-:2 96/2

மேல்

உட்பொருளை (1)

ஓடும் துடியும் கரத்து அமைத்தோன் ஓங்காரத்தின் உட்பொருளை
தேடும் திறத்தோர்க்கு அறிவித்தோன் தேவி உமையாள் காதலனே – கச்சிக்-:2 27/3,4

மேல்

உடல் (1)

துன்ன வரும் உடல் நீறும் கஞ்சுளியினொடு செம் கை சூலமும் செம்பொன் – கச்சிக்-:2 91/2

மேல்

உடலம் (2)

கார் ஆனை தோல் உரித்த கறுப்பினானை களித்து உடலம் நீறு அணிந்த வெண்மையானை – கச்சிக்-:2 22/1
வரத்தின் உத்தாள் ஒழித்தாள் அ மட மான் உடலம் ஒழித்தாலும் வள மா அடியீர் உமை சரணா மருவப்பெற்றாள் ஆதலினால் – கச்சிக்-:2 95/3

மேல்

உடற்ற (1)

உரம் தொலைந்து ஓய பல நோய் உடற்ற உறு பசியால் – கச்சிக்-:2 43/2

மேல்

உடன் (1)

இனிப்பு ஆரும் மொழியாளன் இது செய்தல் அழகோ என்றே உடன் கேட்பன் இனி என்ன குணமே – கச்சிக்-:2 38/4

மேல்

உடை (6)

மாது உமை பங்கு உறு மாண்பு உடை சீரிய – கச்சிக்-:2 1/102
கலன் பணி உடை தோல் கலம் பலி ஓடு கொண்டு – கச்சிக்-:2 40/1
ஒழியா நலனுற ஒரு மா நிழல் உடை ஒளியார் சடையவர் அருள்வாரே – கச்சிக்-:2 59/4
உற்று பார்க்கில் உன் வாழ்க்கை என் ஐயமே ஊரும் வெட்டவெளி உடை தோல் உனை – கச்சிக்-:2 73/1
குதி கொள் இனபு உருவாயவர் மாது ஒரு கூறு உடை கோமானார் – கச்சிக்-:2 92/3
குருகு நெகிழும் திறம் நவில்வாய் கழி சேர் குருகே குரு கழிய கொங்கை திதலை பூப்ப உளம் குலைந்தே உடைய உடை சோர – கச்சிக்-:2 98/1

மேல்

உடைத்தே (1)

சம்பந்தன் என்பை பெண் ஆக்கியது சால்பு உடைத்தே
அம்பு ஒன்றால் புணரி நீர் சுவறச்செய் ஆற்றலினும் – கச்சிக்-:2 1/26,27

மேல்

உடைந்து (1)

சுற்றும் உடைந்து வரும் திடரே தோற்றும் மிடைந்து வருந்து இடரே – கச்சிக்-:2 65/3

மேல்

உடைய (1)

குருகு நெகிழும் திறம் நவில்வாய் கழி சேர் குருகே குரு கழிய கொங்கை திதலை பூப்ப உளம் குலைந்தே உடைய உடை சோர – கச்சிக்-:2 98/1

மேல்

உடையாய் (1)

கத்தனார் மகிழ்ந்த கச்சி வெற்பு_உடையாய் காமனும் மயங்குறு கவின் ஆர் – கச்சிக்-:2 89/1

மேல்

உடையார் (2)

பசையார் அணங்கு ஒரு பங்கு உடையார் அரி பங்கயத்தன் – கச்சிக்-:2 26/2
கல் தரு மாதின் பங்கு உடையார் கச்சியர் எனது இன்பம் குடையார் – கச்சிக்-:2 65/1

மேல்

உடையான் (5)

மா உடையான் வெள்ளிமலை உடையான் எண் திசையாம் – கச்சிக்-:2 48/1
மா உடையான் வெள்ளிமலை உடையான் எண் திசையாம் – கச்சிக்-:2 48/1
தூ உடையான் நால் வேத சொல் உடையான் தா_இல் அற – கச்சிக்-:2 48/2
தூ உடையான் நால் வேத சொல் உடையான் தா_இல் அற – கச்சிக்-:2 48/2
சே உடையான் எங்கள் குல தே – கச்சிக்-:2 48/3

மேல்

உடையீர் (2)

மறியோடு மழு விடம் ஆர் மாசுணம் துன் புடையீர் மங்கை அணிந்திடு முத்தம் மாசு உண் அம் துன்பு உடையீர்
வெறிது ஆசை கூடல் மணத்துற ஆலங்காட்டீர் விதி விழைவு கண்ட இடத்து உறவு ஆல் அம் காட்டீர் – கச்சிக்-:2 21/2,3
கணம் கொண்ட பாச தொடர் அறுத்து உய்யும் கருத்து_உடையீர் – கச்சிக்-:2 87/1

மேல்

உடையே (1)

மகிழ் ஆர மாவாரை மணம் மேவ விழைவாய் மணி ஆரம் மர வேயின் மலை பச்சை உடையே
இகழ்ஈமம் இசை பாடி நடமாடும் இடமாம் மிகவாத தொழில் ஐயம் இல் வாழ்வோர் மலையின் – கச்சிக்-:2 12/1,2

மேல்

உடையேனே (1)

கோளை போக்கற்கு உறவை மடம் வைப்பாம் அகத்தை குழைத்து என் மேல் கொள்வீர் இரத தென்காலான கொடிய பகழிக்கு உடையேனே – கச்சிக்-:2 10/4

மேல்

உண் (4)

ஈரேழ் புவனம் பரிந்து உண் ஏற்றினை – கச்சிக்-:2 1/63
மறியோடு மழு விடம் ஆர் மாசுணம் துன் புடையீர் மங்கை அணிந்திடு முத்தம் மாசு உண் அம் துன்பு உடையீர் – கச்சிக்-:2 21/2
இலம்-தொறும் இரந்து உண் இறை தரும் ஒற்ற – கச்சிக்-:2 40/2
அவி தேன் சுரர் உண் கச்சி வாழ் அன்பர்க்கு அண்ணியனே – கச்சிக்-:2 61/4

மேல்

உண்ட (3)

புயங்க பணியார் புவி உண்ட புனித விடையார் புரை_இல் மதி – கச்சிக்-:2 5/1
கண்ட அளை மேவி கலந்து உண்ட கள்வன் ஒலி – கச்சிக்-:2 16/1
நா அலர்ந்து மெய் பேசுவர் இன் நறை உண்ட நன்மையர் நல் பனை தெங்கு சேர் – கச்சிக்-:2 30/3

மேல்

உண்டனை (1)

புரையறு தசை மிகை உண்டனை
புணர்வுற அரு மறை விண்டனை – கச்சிக்-:2 1/69,70

மேல்

உண்டாரை (1)

கண்டத்து உறையுமாறு கடல் கடு உண்டாரை துதிப்பாமே – கச்சிக்-:2 41/4

மேல்

உண்டு (8)

போற்ற பல் பா உண்டு கேட்க செவி உண்டு பூ பறித்து – கச்சிக்-:2 85/1
போற்ற பல் பா உண்டு கேட்க செவி உண்டு பூ பறித்து – கச்சிக்-:2 85/1
தூற்ற கரம் உண்டு தாழ சிரம் உண்டு தோத்திரங்கள் – கச்சிக்-:2 85/2
தூற்ற கரம் உண்டு தாழ சிரம் உண்டு தோத்திரங்கள் – கச்சிக்-:2 85/2
ஆற்ற செம் நா உண்டு தென் கச்சிவாணர் உண்டு அல்லல் எலாம் – கச்சிக்-:2 85/3
ஆற்ற செம் நா உண்டு தென் கச்சிவாணர் உண்டு அல்லல் எலாம் – கச்சிக்-:2 85/3
மாற்ற அருள் உண்டு நெஞ்சே துயர் எவன் மற்று எனக்கே – கச்சிக்-:2 85/4
மதனை வென்றவர் நஞ்சம் ஆர்ந்தவர் வலியர் முண்டக முள்ளியே மகிழ்நர் வந்திலர் மாலை தந்திலர் துயர்வது உண்டு அகம் உள்ளியே – கச்சிக்-:2 96/1

மேல்

உண்டு-கொல் (1)

செய் தவம் புரிந்திலாதென் உய்யும் ஆறும் உண்டு-கொல் திகழும் மாடம் மதி உரிஞ்சு கச்சி மேய செம்மலார் – கச்சிக்-:2 76/2

மேல்

உண்டேல் (1)

சொல்லால் ஆயிர முகமன் கூறுவை அ கச்சியர்க்கு சுகுணம் உண்டேல்
வில் ஆரும் புயம் இதழி விரும்புவை இன்றேல் இன்றே விழையப்பெற்றாள் – கச்சிக்-:2 47/2,3

மேல்

உண்ண (1)

தேவர் அன்று சிதைந்தவரே மது வாவி சீதரன் உண்ண மயங்குறின் – கச்சிக்-:2 30/2

மேல்

உண்ணுவீர் (1)

ஏடு கட்டிய பால் தயிர் உண்ணுவீர் எப்படி பெறுவீர் பொன் பதத்தையே – கச்சிக்-:2 56/4

மேல்

உண்பேம் (1)

ஆற்றை செலுத்தி அரி ஏறவைப்பேம் அமுதை ஆவலுடன் வாரி உண்பேம்
நீற்றை புனைந்தவர் திரு கச்சி போன்ற தலம் நேர்தரும் சத்தி எமதே – கச்சிக்-:2 78/3,4

மேல்

உணர் (1)

தீது_அறு நூல் உணர் தெள்ளிய சிந்தையர் மனமூடே – கச்சிக்-:2 18/1

மேல்

உணர்கிலா (1)

பின்றை எய்திடும் பெற்றி உய்த்து உணர்கிலா பேயேன் – கச்சிக்-:2 45/2

மேல்

உணர்ச்சி (1)

சனி ஆகும் ஊழ் வலியால் சகல கலை அறி உணர்ச்சி தகை பெறாதால் – கச்சிக்-:2 35/1

மேல்

உணர்ந்து (2)

உறு வகை மற்று இல்லை என உணர்ந்து எளிது காட்சிதரீஇ – கச்சிக்-:2 1/16
சூத வாழ்க்கையார் துடி பினாகம் வைத்த ஆண்மையார் சொல் மறைக்க வாயதாம்-கொல் தோற்பு உணர்ந்து இசைத்ததே – கச்சிக்-:2 25/4

மேல்

உணர்வு (2)

வழக்கும் இட புரி உணர்வு வாய்ப்ப அளித்த தீட்டினையும் – கச்சிக்-:2 1/14
ஒன்று சூழின் வேறொன்று முந்துற உணர்வு உலைந்து – கச்சிக்-:2 45/1

மேல்

உணரும் (1)

காதம் மணம் கமழ் சோலை பண் புணரும் காலம் கணவர் இளம் கோதையர்-தம் பண்பு உணரும் காலம் – கச்சிக்-:2 67/2

மேல்

உணவும் (1)

திணியவைத்தாய் மந்தரத்தே நஞ்சு உணவும் சிறப்பு ஆமோ – கச்சிக்-:2 1/46

மேல்

உணாது (1)

பூண்ட அரவம் மதியை உணாது புரந்தருளும் – கச்சிக்-:2 3/1

மேல்

உணும் (1)

உலகு உணும் ஏவினை – கச்சிக்-:2 1/88

மேல்

உத்தம (2)

உன்னப்படுமோ உத்தம நின் எழில் – கச்சிக்-:2 1/112
உறு மன் கச்சி உத்தம யான் – கச்சிக்-:2 68/1

மேல்

உத்தமர் (1)

உகந்து அரு முப்பத்திரண்டு அறம் ஓம்பச்செய் உத்தமர் பாதகம் – கச்சிக்-:2 8/3

மேல்

உத்தமர்காள் (1)

ஊன் கொண்ட துன்பை ஒழிக்க தலைப்படும் உத்தமர்காள்
வான் கொண்ட உச்சி வரை முழை உற்றும் மயர்வது எவன் – கச்சிக்-:2 75/2,3

மேல்

உத்தாள் (1)

வரத்தின் உத்தாள் ஒழித்தாள் அ மட மான் உடலம் ஒழித்தாலும் வள மா அடியீர் உமை சரணா மருவப்பெற்றாள் ஆதலினால் – கச்சிக்-:2 95/3

மேல்

உதவ (1)

கடல் அமுதை உம்பருக்கு உதவ எழில் கந்தரத்து – கச்சிக்-:2 4/11

மேல்

உதவியை (1)

தனி ஆகும் எங்கள் உதவியை பெற்று சாற்று உம்பர் அடைந்தார் பொன்னில் – கச்சிக்-:2 35/2

மேல்

உதவும் (1)

கம்பத்து இருந்து உதவும் கண்மணியை சிந்தித்து – கச்சிக்-:2 97/1

மேல்

உதித்த (2)

உறைவாள் இவள் பூ உதித்த தூயவளே – கச்சிக்-:2 24/5
கோள் அகல குறி இரண்டும் கொடுப்பை என மொழிந்தோள் குடி உதித்த குறமகள் யான் குறிக்கொள் என்றன் மொழியே – கச்சிக்-:2 90/4

மேல்

உபதேசம் (1)

கோதுடைய மன சிலையை குழைத்து அன்பின் நெகிழ்வித்தல் ஐய முன் நாள் குருகு உய்ய உபதேசம் கூறிய நீ எனக்கு உரைத்தால் குறைமட்டாமே – கச்சிக்-:2 14/4

மேல்

உம்பர் (1)

தனி ஆகும் எங்கள் உதவியை பெற்று சாற்று உம்பர் அடைந்தார் பொன்னில் – கச்சிக்-:2 35/2

மேல்

உம்பருக்கு (1)

கடல் அமுதை உம்பருக்கு உதவ எழில் கந்தரத்து – கச்சிக்-:2 4/11

மேல்

உமை (5)

மாது உமை பங்கு உறு மாண்பு உடை சீரிய – கச்சிக்-:2 1/102
மான் அங்கு ஒன்றை வலன் வைத்து உமை மான் இடம் வைத்தார் – கச்சிக்-:2 11/2
உழை கொண்ட கர தொழிலும் உமை கொண்ட இடத்து எழிலும் – கச்சிக்-:2 81/2
என்ன தவம் செய்தேனோ உமை கம்பர் திரு கச்சி இடையே காண – கச்சிக்-:2 91/1
வரத்தின் உத்தாள் ஒழித்தாள் அ மட மான் உடலம் ஒழித்தாலும் வள மா அடியீர் உமை சரணா மருவப்பெற்றாள் ஆதலினால் – கச்சிக்-:2 95/3

மேல்

உமையாள் (3)

வார் ஆர்ந்த தனத்து உமையாள் மகிழ்ந்து உறையும் மாட்டினையும் – கச்சிக்-:2 1/4
மாது உமையாள் பனிமலையில் வளர்ந்தாள் நின் மதலையரில் கயமுகத்தோன் வர முனிவன் வேண்ட வடவரை ஏட்டில் பாரதப்போர் வரைந்தான் நீப – கச்சிக்-:2 14/1
தேடும் திறத்தோர்க்கு அறிவித்தோன் தேவி உமையாள் காதலனே – கச்சிக்-:2 27/4

மேல்

உமையோடு (1)

மா கம்பத்தொடும் இறைஞ்சி வழிபாடுசெய உமையோடு
ஏகம்பத்து ஒரு மாவின் இனிது வீற்றிருந்து அருள்வோய் – கச்சிக்-:2 1/17,18

மேல்

உய்த்து (1)

பின்றை எய்திடும் பெற்றி உய்த்து உணர்கிலா பேயேன் – கச்சிக்-:2 45/2

மேல்

உய்ப்பர் (1)

ஆறாத மும்மை மல பிணி நீங்க நல் ஆற்றின் உய்ப்பர்
மாறா வள கச்சி மா நிழலார் உவணன்-தனக்கு – கச்சிக்-:2 55/2,3

மேல்

உய்ய (2)

கோதுடைய மன சிலையை குழைத்து அன்பின் நெகிழ்வித்தல் ஐய முன் நாள் குருகு உய்ய உபதேசம் கூறிய நீ எனக்கு உரைத்தால் குறைமட்டாமே – கச்சிக்-:2 14/4
வாளா கழிப்பீர் வாழ்நாளை வசையே பெறுவீர் வல் வினையீர் வள மாந்தரு-வாய் உலகு உய்ய வந்த கருணை ஆர்கலியை – கச்சிக்-:2 99/2

மேல்

உய்யும் (3)

பிழைத்தேன் அலேன் என்று பிச்சர்க்கு இயம்பீர் பெண் பேதை உய்யும் திறம் பாங்கிமாரே – கச்சிக்-:2 66/4
செய் தவம் புரிந்திலாதென் உய்யும் ஆறும் உண்டு-கொல் திகழும் மாடம் மதி உரிஞ்சு கச்சி மேய செம்மலார் – கச்சிக்-:2 76/2
கணம் கொண்ட பாச தொடர் அறுத்து உய்யும் கருத்து_உடையீர் – கச்சிக்-:2 87/1

மேல்

உய (1)

சமரபுரி கந்தனை புலவர் உய மண்டு அமர் – கச்சிக்-:2 4/19

மேல்

உயர் (2)

உயர் பதவி தந்து இசைப்பரும் ஓகை கொண்டன – கச்சிக்-:2 4/30
ஒளிவிட்டு ஓங்கும் கச்சியரை உயர் மா மறையின் உச்சியரை – கச்சிக்-:2 19/2

மேல்

உயிர் (4)

கம்பத்தன் உயிர் மாய கடும் சமர்செய் கை வலி என் – கச்சிக்-:2 1/23
உள் தயங்கு உயிர் ஐந்தும் அவைக்கு இரையோ என்று ஓதிர் அ செம் மழுவாளர்க்கே – கச்சிக்-:2 32/4
இரந்து உயிர் ஓம்பிட ஏழை மனம் கொதித்து இன்னலுற – கச்சிக்-:2 43/1
கூடு விட்டு உயிர் போம் பொழுது ஒன்றையும் கொண்டுபோதல் இலாமையை உன்னிலீர் – கச்சிக்-:2 56/2

மேல்

உயிர்க்கும் (1)

கணம் மிகு வெண் முத்து உயிர்க்கும் நந்து அனந்தம் கயல் ஆமே கச்சி இறை தணத்தலின் வார் நம் தனம் தங்க அயலாமே – கச்சிக்-:2 39/2

மேல்

உயிர்த்து (1)

மதியின் எல் தரு முத்தமே அவர் தருவது என்று அரு முத்தமே மணி உயிர்த்து இரை சங்கமே இரவு ஒன்று பற்பல சங்கமே – கச்சிக்-:2 96/3

மேல்

உயிரை (1)

இடங்கர் வாய் பட்ட களிற்றின் உயிரை புரந்த செயல் – கச்சிக்-:2 1/19

மேல்

உர (1)

வரம் மா சடையாரும் உர மாசு அடையாரும் வய மா திரத்தாரும் புய மாதிரத்தாரும் – கச்சிக்-:2 13/2

மேல்

உரத்தர் (1)

விழ வாங்கு பூதரத்தர் வேள் எரித்த மா உரத்தர் ஆதரத்தர் – கச்சிக்-:2 33/2

மேல்

உரத்து (1)

இழை கொண்ட உரத்து அழகும் எமக்கு இனிய அமுதாமே – கச்சிக்-:2 81/4

மேல்

உரத்தை (1)

கணம் புரத்தை சாம்பர் உவந்து இழைத்தார் கன்னல்-கண் அம்பு உரத்தை சாம் பருவம் குலைப்பது உன்னார் – கச்சிக்-:2 72/3

மேல்

உரம் (2)

இரணியன் உரம் தொலைத்து எழு நரமடங்கலை – கச்சிக்-:2 4/27
உரம் தொலைந்து ஓய பல நோய் உடற்ற உறு பசியால் – கச்சிக்-:2 43/2

மேல்

உரமும் (1)

புரத்தின் வனப்பும் நூபுரமும் புரை தீர் அகத்தின் வற்பு உரமும் பொலன் தோடு அணையும் பூ அணையும் புரியும் பணியும் பொன் பணியும் – கச்சிக்-:2 95/2

மேல்

உரிஞ்சு (1)

செய் தவம் புரிந்திலாதென் உய்யும் ஆறும் உண்டு-கொல் திகழும் மாடம் மதி உரிஞ்சு கச்சி மேய செம்மலார் – கச்சிக்-:2 76/2

மேல்

உரித்த (1)

கார் ஆனை தோல் உரித்த கறுப்பினானை களித்து உடலம் நீறு அணிந்த வெண்மையானை – கச்சிக்-:2 22/1

மேல்

உரித்து (1)

சமர் பொருது வென்று உரித்து அதள் ஆடை கொண்டன – கச்சிக்-:2 4/10

மேல்

உரியானை (1)

உரியானை திரு கச்சியுடையான்-தன்னை உன்ன அரிய குண நிதியை ஒப்பு_இல் வேத – கச்சிக்-:2 53/3

மேல்

உரியை (1)

வேள் ஆடலை முன் தீர்த்தானை வேழ உரியை போர்த்தானை வெள்ளம் பாய்ந்த சடையானை வேண்டி புரி-மின் தொண்டினையே – கச்சிக்-:2 99/4

மேல்

உரு (7)

கொம்பு_அனையாள் கல் உரு விட்டு இன் உருவம் கொண்டதினும் – கச்சிக்-:2 1/25
உரையிட அரியது ஒர் அனல் உரு ஒளிதர – கச்சிக்-:2 1/35
மால் உலகம் காக்க நரமடங்கல் உரு கொள அ மாலால் – கச்சிக்-:2 1/47
சிலை கரும்பன் உரு அழிந்தான் சேண் இயங்கும் இரு கதிரும் சிதைந்து நொந்த – கச்சிக்-:2 9/2
குன்றை குனித்த கச்சி கோமானார் சித்த உரு கொண்ட நாள் யாம் – கச்சிக்-:2 34/1
அருணை பதியின் அழல் உரு கொண்டு அமைந்த கச்சி அங்கணர் முன் – கச்சிக்-:2 80/1
காள உரு காம விழி கன்னி-தனக்கு அ நாள் கருதி ஒரு குணம் குறியும் அரியவர்க்கு ஓர் குணமும் கொடுவா – கச்சிக்-:2 90/3

மேல்

உருக்காமே (1)

கொண்ட அளை உருக்காமே கொள இணங்கீர் ததி எண்ணீர் நயம் மோர் விற்றே – கச்சிக்-:2 51/4

மேல்

உருக்கிலே (1)

தருக்குறு தெரிவையர் செருக்கிலே தளையிடும் அவர் மொழி உருக்கிலே
மரு கமழ் குழல் அணி சொருக்கிலே மனம் இவர் இள முலை நெருக்கிலே – கச்சிக்-:2 64/1,2

மேல்

உருக (1)

உள்ளம் நெக்கு உருக உரோமம் சிலிர்ப்ப – கச்சிக்-:2 1/98

மேல்

உருவம் (3)

கொம்பு_அனையாள் கல் உரு விட்டு இன் உருவம் கொண்டதினும் – கச்சிக்-:2 1/25
அழல் உருவம் அன்று பெற்று ஒரு புறவ மைந்தனுக்கு – கச்சிக்-:2 4/7
சரப உருவம் தரித்து அமராடி வென்றன – கச்சிக்-:2 4/28

மேல்

உருவாம் (1)

துன்பு ஒழிய வேண்டின் அவம் துன்னற்க அன்பு உருவாம்
போதன் அருள் வேண்டும் எனில் பொய்யற்க சூது அகல – கச்சிக்-:2 69/2,3

மேல்

உருவாயவர் (1)

குதி கொள் இனபு உருவாயவர் மாது ஒரு கூறு உடை கோமானார் – கச்சிக்-:2 92/3

மேல்

உருவோடு (1)

மாமை உருவோடு வளை சக்கரம் ஏந்தி திகழும் வகையால் குல்லை – கச்சிக்-:2 82/2

மேல்

உரை (5)

தகவு அமை உரை மிகு தமனிய ஒளியினை – கச்சிக்-:2 1/40
சிற்றறிவினன் உரை செய்யுளை – கச்சிக்-:2 1/118
தகவு ஈது தெரி காதல் ஒழிவாய் என் உரை கேள் தரை மீது எ நலம் எய்தி மகிழ்வாய் மின் அரசே – கச்சிக்-:2 12/4
தனிப்பாக என்னை பசப்பி கலந்த சமயத்து உரை சத்தியம் கூறி அரவை – கச்சிக்-:2 38/3
அலை பெணை சடையில் அமைத்தது ஏன் உரை
கம்பை நதி அயல் காம நயனியாம் – கச்சிக்-:2 40/14,15

மேல்

உரைத்தால் (1)

கோதுடைய மன சிலையை குழைத்து அன்பின் நெகிழ்வித்தல் ஐய முன் நாள் குருகு உய்ய உபதேசம் கூறிய நீ எனக்கு உரைத்தால் குறைமட்டாமே – கச்சிக்-:2 14/4

மேல்

உரைத்திடுவன் (1)

வேளை அறிந்து உரைத்திடுவன் விரைந்து ஒர் படி நெல்லும் வெறும் தலைக்கு எண்ணெயும் பழைய கந்தையையும் – கச்சிக்-:2 90/2

மேல்

உரைத்தும் (1)

போக என உரைத்தும் போகாய் அந்தோ – கச்சிக்-:2 40/30

மேல்

உரைப்பன் (1)

என்ன என்று உரைப்பன் இது அலாது ஒருநாள் – கச்சிக்-:2 40/20

மேல்

உரைப்பாரும் (1)

அழைக்காமல் அணுகார் வெவ் அலர் கூர மாய்வேன் ஐயோ என் ஐயர்க்கு உரைப்பாரும் இல்லை – கச்சிக்-:2 66/1

மேல்

உரையிட (1)

உரையிட அரியது ஒர் அனல் உரு ஒளிதர – கச்சிக்-:2 1/35

மேல்

உரோமம் (1)

உள்ளம் நெக்கு உருக உரோமம் சிலிர்ப்ப – கச்சிக்-:2 1/98

மேல்

உலகம் (2)

மால் உலகம் காக்க நரமடங்கல் உரு கொள அ மாலால் – கச்சிக்-:2 1/47
நினைத்து உலகம் தொழு கச்சி நின்மலர் மூ விழியே – கச்சிக்-:2 58/4

மேல்

உலகு (2)

உலகு உணும் ஏவினை – கச்சிக்-:2 1/88
வாளா கழிப்பீர் வாழ்நாளை வசையே பெறுவீர் வல் வினையீர் வள மாந்தரு-வாய் உலகு உய்ய வந்த கருணை ஆர்கலியை – கச்சிக்-:2 99/2

மேல்

உலகுக்கு (1)

உலகுக்கு ஆன துயர் அகற்ற வலார் வேறு உளரோ – கச்சிக்-:2 1/48

மேல்

உலகை (1)

சினத்து உலகை சிதைக்க அழல் சிறந்தது ஒரு விழியே – கச்சிக்-:2 58/3

மேல்

உலவு (1)

கோமளை வாழ் இடத்தர் கச்சி மறுகு உலவு துளவ மண கொற்றியாரே – கச்சிக்-:2 82/4

மேல்

உலைந்து (1)

ஒன்று சூழின் வேறொன்று முந்துற உணர்வு உலைந்து
பின்றை எய்திடும் பெற்றி உய்த்து உணர்கிலா பேயேன் – கச்சிக்-:2 45/1,2

மேல்

உவக்க (1)

வைத வம்பு நோக்கியேனும் மனம் உவக்க வந்திலர் மாதர் நோவ எய்து செல்வம் என் அவர்க்கு மங்கையே – கச்சிக்-:2 76/4

மேல்

உவக்கும் (1)

ஆண்டவர் அவம்புரிவார் செயலை அழித்து உவக்கும்
தாண்டவர் அவர் இணை அடி தாமரை தஞ்சம் என – கச்சிக்-:2 3/2,3

மேல்

உவகை (1)

போது அலங்கல் அணி குமரன் குன்று-தொறும் பேர் உவகை பூப்ப மேவி புனித விளையாட்டு அயர்ந்தான் கச்சி அமர் புண்ணிய நீ கயிலை மேரு – கச்சிக்-:2 14/2

மேல்

உவணன்-தனக்கு (1)

மாறா வள கச்சி மா நிழலார் உவணன்-தனக்கு
பாறாது அரவம் அணிந்தவர் பேரருள் பாடுதுமே – கச்சிக்-:2 55/3,4

மேல்

உவந்தன (1)

பகைவர் கெடு வன் படை கொடையால் உவந்தன
சமரபுரி கந்தனை புலவர் உய மண்டு அமர் – கச்சிக்-:2 4/18,19

மேல்

உவந்து (1)

கணம் புரத்தை சாம்பர் உவந்து இழைத்தார் கன்னல்-கண் அம்பு உரத்தை சாம் பருவம் குலைப்பது உன்னார் – கச்சிக்-:2 72/3

மேல்

உவப்பார் (1)

பெட்டிக்குள் தம் பணம் இட்டு உவப்பார் குணம் பெட்டு வினை – கச்சிக்-:2 15/3

மேல்

உவப்புடன் (1)

புல்லும் உவப்புடன் புனைந்து என கனிந்து – கச்சிக்-:2 1/117

மேல்

உழன்று (1)

கரு புக்கு உழன்று எய்க்கவையாது அருள்கூர்ந்து காப்பாய்-கொலோ – கச்சிக்-:2 36/2

மேல்

உழை (1)

உழை கொண்ட கர தொழிலும் உமை கொண்ட இடத்து எழிலும் – கச்சிக்-:2 81/2

மேல்

உள் (3)

மட்டு இக்கு உள் தங்கும் கணு நிகர் கஞ்ச மலரனை அதட்டி – கச்சிக்-:2 15/1
உள் தயங்கு உயிர் ஐந்தும் அவைக்கு இரையோ என்று ஓதிர் அ செம் மழுவாளர்க்கே – கச்சிக்-:2 32/4
பச்சை நிற பைம்_தொடி வலம் மேவிய பசுபதி உள்
நச்சினர் ஒன்றினும் எச்சமுறாது அருள் நனி கூர்வான் – கச்சிக்-:2 71/1,2

மேல்

உள்ளம் (2)

உள்ளம் நெக்கு உருக உரோமம் சிலிர்ப்ப – கச்சிக்-:2 1/98
உள்ளம் கலங்க ஓங்கு நீர் அழைத்து – கச்சிக்-:2 40/17

மேல்

உள்ளார் (2)

அணங்கு ஆறு தலை உள்ளார் அழகர் என் மான் அணங்கு ஆறுதலை உள்ளார் ஆனார் அந்தோ – கச்சிக்-:2 72/1
அணங்கு ஆறு தலை உள்ளார் அழகர் என் மான் அணங்கு ஆறுதலை உள்ளார் ஆனார் அந்தோ – கச்சிக்-:2 72/1

மேல்

உள்ளியே (1)

மதனை வென்றவர் நஞ்சம் ஆர்ந்தவர் வலியர் முண்டக முள்ளியே மகிழ்நர் வந்திலர் மாலை தந்திலர் துயர்வது உண்டு அகம் உள்ளியே
கதம் மிகுந்து எழும் அத்தி நீர்த்துறை பெடை பிரிந்தில கம்புளே கவலை கூர உஞற்றி மேவுறும் நறை சொரிந்து இலகு அம்பு உளே – கச்சிக்-:2 96/1,2

மேல்

உள்ளீர் (1)

சிறுகாலின் மணம் அளவும் திரு காஞ்சியுள்ளீர் சேயிழையாட்கு அகலும் இடை திரு காஞ்சி உள்ளீர்
மறியோடு மழு விடம் ஆர் மாசுணம் துன் புடையீர் மங்கை அணிந்திடு முத்தம் மாசு உண் அம் துன்பு உடையீர் – கச்சிக்-:2 21/1,2

மேல்

உளதாய (1)

குறைவு_அறு நால் தோற்றத்தின் உளதாய துயர் அகல குறிப்பன் அன்னோர் – கச்சிக்-:1 2/3

மேல்

உளம் (5)

ஊற ஆடும் உளம் மகிழ் பொங்கவே – கச்சிக்-:2 23/4
மிசையார் அணங்கு ஒழித்தோர் உளம் மேவிய மெய் அருத்தி – கச்சிக்-:2 26/3
பற்று_இலார் உளம் பற்றுறு பங்கய பாதனே பட பாம்பு அணி காதனே – கச்சிக்-:2 73/4
சட்டப்பட்ட உளம் பெற்ற சால்பினோர் தங்கப்பெற்ற கச்சி பதி செல்வ வேள் – கச்சிக்-:2 79/1
குருகு நெகிழும் திறம் நவில்வாய் கழி சேர் குருகே குரு கழிய கொங்கை திதலை பூப்ப உளம் குலைந்தே உடைய உடை சோர – கச்சிக்-:2 98/1

மேல்

உளரோ (1)

உலகுக்கு ஆன துயர் அகற்ற வலார் வேறு உளரோ
மகிழிருந்தாய் மனை என்றோ மாசுணம் மேல் துயின்றானுக்கு – கச்சிக்-:2 1/48,49

மேல்

உளே (1)

கதம் மிகுந்து எழும் அத்தி நீர்த்துறை பெடை பிரிந்தில கம்புளே கவலை கூர உஞற்றி மேவுறும் நறை சொரிந்து இலகு அம்பு உளே
மதியின் எல் தரு முத்தமே அவர் தருவது என்று அரு முத்தமே மணி உயிர்த்து இரை சங்கமே இரவு ஒன்று பற்பல சங்கமே – கச்சிக்-:2 96/2,3

மேல்

உற்பலம் (1)

கெட்ட உற்பலம் அஞ்சு எரி போல் வரும் கிளி_அனீர் மடம் நாணம் அச்சம் பயிர்ப்பு – கச்சிக்-:2 32/3

மேல்

உற்ற (4)

பிறை பூத்த செஞ்சடையாய் பிறங்கு புயம் உற்ற பினே – கச்சிக்-:2 1/44
நீரானை செம் சடையின் நெற்றி உற்ற நெருப்பானை பொருப்பானை சகத்திர சீர் – கச்சிக்-:2 22/3
உனக்கே தெரியும் மகக்கு உற்ற துயரம் எலாம் – கச்சிக்-:2 86/2
கேளோடு உற்ற கிளை ஒறுப்பீர் கேதம் உறுவீர் கெடுமதியால் கிளி வாய் வரைவின்மகளிர்-பால் கிட்டி மயங்கி தியங்குவீர் – கச்சிக்-:2 99/1

மேல்

உற்றது (1)

தாளை மருவும் தகைமையிலான் உற்றது எவன் – கச்சிக்-:2 16/3

மேல்

உற்றனை (1)

ஓர் கால் செலின் அறு கால் உற்றனை என்பார் வளமை – கச்சிக்-:2 52/1

மேல்

உற்றாய் (2)

மா அடி கீழ் உற்றாய் உன் மலர் அடிக்கே மங்கல சொல் – கச்சிக்-:2 1/57
மாமையை அடைந்தாய் வானகம் உற்றாய் மழை கணீர் உகுத்திட பெற்றாய் – கச்சிக்-:2 20/1

மேல்

உற்றாரும் (1)

மா கை குருகின் தழும்பு உற்றாரும் ஆவாரே – கச்சிக்-:2 29/1

மேல்

உற்றிட (1)

கவுரியிடம் அன்பின் உற்றிட ஆசை மிஞ்சின – கச்சிக்-:2 4/26

மேல்

உற்றிடும் (1)

பின்னை உற்றிடும் பீழை நினைத்திலன் – கச்சிக்-:2 40/32

மேல்

உற்று (2)

இனிமை தரு கம்பம் உற்று அருள் அநக எந்தை நித்திய – கச்சிக்-:2 4/31
உற்று பார்க்கில் உன் வாழ்க்கை என் ஐயமே ஊரும் வெட்டவெளி உடை தோல் உனை – கச்சிக்-:2 73/1

மேல்

உற்றும் (1)

வான் கொண்ட உச்சி வரை முழை உற்றும் மயர்வது எவன் – கச்சிக்-:2 75/3

மேல்

உற (2)

தரும விடை அம்பு உற பரிவோடு இணங்கின – கச்சிக்-:2 4/24
நாளை கழியாது இறால் இதழின் நறவை பருக நச்சு உற கொள் நான் அ கருப்பம் சிலை_வேளை நாணச்செய்வேன் மலங்குறேன் – கச்சிக்-:2 10/3

மேல்

உறவார் (1)

கானத்து உறவார் கம்பத்திடையே மகிழ்வாரே – கச்சிக்-:2 11/4

மேல்

உறவால் (1)

வழியால் கணிகையர் உறவால் வலி கெட அயர்வேன் இனி மருள் மருவாமே – கச்சிக்-:2 59/3

மேல்

உறவு (1)

வெறிது ஆசை கூடல் மணத்துற ஆலங்காட்டீர் விதி விழைவு கண்ட இடத்து உறவு ஆல் அம் காட்டீர் – கச்சிக்-:2 21/3

மேல்

உறவே (1)

தொண்டர்க்கு உறவே ஆனாரை தூய மறை மா நிழலாரை – கச்சிக்-:2 41/1

மேல்

உறவை (1)

கோளை போக்கற்கு உறவை மடம் வைப்பாம் அகத்தை குழைத்து என் மேல் கொள்வீர் இரத தென்காலான கொடிய பகழிக்கு உடையேனே – கச்சிக்-:2 10/4

மேல்

உறு (13)

கழை இழைத்த வில்லானின் கண்ணின் உறு கேட்டினையும் – கச்சிக்-:2 1/5
உறு வகை மற்று இல்லை என உணர்ந்து எளிது காட்சிதரீஇ – கச்சிக்-:2 1/16
வரை_மகள் இடம் உறு வகை புரி அளியினை – கச்சிக்-:2 1/36
சடை உறு செல்லினை – கச்சிக்-:2 1/75
அனல் உறு கோவினை – கச்சிக்-:2 1/84
மாது உமை பங்கு உறு மாண்பு உடை சீரிய – கச்சிக்-:2 1/102
அல் உறு நஞ்சு அரவு அக்கு மத்தமும் – கச்சிக்-:2 1/116
உரம் தொலைந்து ஓய பல நோய் உடற்ற உறு பசியால் – கச்சிக்-:2 43/2
விழியால் விழி உறு பிறழ்வால் விது நிகர் நுதலால் நுதல் உறு சிலையால் மென் – கச்சிக்-:2 59/1
விழியால் விழி உறு பிறழ்வால் விது நிகர் நுதலால் நுதல் உறு சிலையால் மென் – கச்சிக்-:2 59/1
மொழியால் மொழி உறு சுவையால் முழு நல முலையால் முலை உறு பொலிவால் பல் – கச்சிக்-:2 59/2
மொழியால் மொழி உறு சுவையால் முழு நல முலையால் முலை உறு பொலிவால் பல் – கச்சிக்-:2 59/2
உறு மன் கச்சி உத்தம யான் – கச்சிக்-:2 68/1

மேல்

உறுப்பும் (1)

தேவாரம் முதலிய ஐந்து உறுப்பும் வாழ சிறந்த மறை ஆகமங்கள் செழித்து வாழ – கச்சிக்-:2 49/1

மேல்

உறும் (4)

விடை உறும் எல்லினை – கச்சிக்-:2 1/76
கோதறு சங்கு இனம் பழன பங்கம் உறும் காலம் குலவு கச்சியார் பிரிய பங்கமுறும் காலம் – கச்சிக்-:2 67/4
பெற்று பார்க்குள் உறும் சுகம் இல்லையால் பேதை நின்னை என் பெற்றிட பற்றினள் – கச்சிக்-:2 73/2
ஆமை மீன் கோலம் உறும் அங்கம் மரீஇ அரவு இடை ஆல் அகடு மேவி – கச்சிக்-:2 82/1

மேல்

உறுவீர் (1)

கேளோடு உற்ற கிளை ஒறுப்பீர் கேதம் உறுவீர் கெடுமதியால் கிளி வாய் வரைவின்மகளிர்-பால் கிட்டி மயங்கி தியங்குவீர் – கச்சிக்-:2 99/1

மேல்

உறை (2)

மன்னு புகழ் கச்சி உறை வள்ளல் தான் துன்னும் மயன் – கச்சிக்-:2 77/2
நிதி தரும் தவ வங்கமே இனி அடைவதும் தவ அங்கமே நெடியனும் தொழு கம்பமே உறை நிமலர் தீர்ப்பர்-கொல் கம்பமே – கச்சிக்-:2 96/4

மேல்

உறைந்து (1)

கச்சி உறைந்து அருள் கண்_நுதல் மறலி கண்டகனால் – கச்சிக்-:2 71/3

மேல்

உறையார் (1)

தானம் குறைவார் தானத்து உறையார் தமிழ் வல்லார் – கச்சிக்-:2 11/3

மேல்

உறையும் (1)

வார் ஆர்ந்த தனத்து உமையாள் மகிழ்ந்து உறையும் மாட்டினையும் – கச்சிக்-:2 1/4

மேல்

உறையுமாறு (1)

கண்டத்து உறையுமாறு கடல் கடு உண்டாரை துதிப்பாமே – கச்சிக்-:2 41/4

மேல்

உறைவாய் (1)

சிற்றளையுள் உறைவாய் அலவா தென்வளி கா துறை வாய் அலவா – கச்சிக்-:2 65/2

மேல்

உறைவாள் (1)

உறைவாள் இவள் பூ உதித்த தூயவளே – கச்சிக்-:2 24/5

மேல்

உறைவு (1)

மறை உறைவு ஆகும் ஒரு நால்வர் பத மலரை சிரம் கொண்டு மடத்தை போக்கி – கச்சிக்-:1 2/2

மேல்

உன் (4)

விதி சாற்ற அறியேம் உன் மேனி அழகு இயம்புவதே – கச்சிக்-:2 1/54
மா அடி கீழ் உற்றாய் உன் மலர் அடிக்கே மங்கல சொல் – கச்சிக்-:2 1/57
மாதிரத்தே வதிந்தனை என் கல் அனைய மனத்தூடு உன் குடும்பத்தோடு மருவ ஒரு தடையும் இலை மலை சிலையா வளைத்த நினக்கு எளிதே என்றன் – கச்சிக்-:2 14/3
உற்று பார்க்கில் உன் வாழ்க்கை என் ஐயமே ஊரும் வெட்டவெளி உடை தோல் உனை – கச்சிக்-:2 73/1

மேல்

உன்ன (1)

உரியானை திரு கச்சியுடையான்-தன்னை உன்ன அரிய குண நிதியை ஒப்பு_இல் வேத – கச்சிக்-:2 53/3

மேல்

உன்னப்படுமோ (1)

உன்னப்படுமோ உத்தம நின் எழில் – கச்சிக்-:2 1/112

மேல்

உன்னார் (1)

கணம் புரத்தை சாம்பர் உவந்து இழைத்தார் கன்னல்-கண் அம்பு உரத்தை சாம் பருவம் குலைப்பது உன்னார்
பணம் ஒளிக்கும் பணி தரித்தார் கச்சி ஈசர் பண் அம் ஒளிக்கும் பணி பரித்தார் பான்மையுற்றே – கச்சிக்-:2 72/3,4

மேல்

உன்னிலீர் (1)

கூடு விட்டு உயிர் போம் பொழுது ஒன்றையும் கொண்டுபோதல் இலாமையை உன்னிலீர்
வீடு கட்டுவீர் வெள்ளி பொன் ஈட்டுவீர் வேண்டும் நல் மணி ஆடையும் பூணுவீர் – கச்சிக்-:2 56/2,3

மேல்

உனக்கே (1)

உனக்கே தெரியும் மகக்கு உற்ற துயரம் எலாம் – கச்சிக்-:2 86/2

மேல்

உனது (2)

கொண்ட வளை நீர் கச்சி கோமானே பண்டு உனது
தாளை மருவும் தகைமையிலான் உற்றது எவன் – கச்சிக்-:2 16/2,3
எனக்கு ஏது உனது அருளை எண்ணும் இயல் என் துயரம் – கச்சிக்-:2 86/1

மேல்

உனை (1)

உற்று பார்க்கில் உன் வாழ்க்கை என் ஐயமே ஊரும் வெட்டவெளி உடை தோல் உனை
பெற்று பார்க்குள் உறும் சுகம் இல்லையால் பேதை நின்னை என் பெற்றிட பற்றினள் – கச்சிக்-:2 73/1,2

மேல்